Jump to content

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள வசம்பு அண்ணா அவர்களின் மரணத்துக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். வசம்பு அண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

வசம்பு அண்ணருக்கு கண்ணீர் வணக்கங்கள்.

அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ் கருத்துக்களம் ஊடாக கருத்தாடிய உறவு ஒருவரை இழந்துவிட்டோம்.

கருத்துக்களில் முரண்பட்ட போதும் - நேர்மையாகவும் பண்பாகவும் கருத்தாடியவர்.

பலமுறை எனது கருத்துக்களுடன் ஒத்து வராமல் கோபித்தும் எழுதி இருந்தார்.

முகம் தெரியாத நண்பரை படம் பார்த்தவுடன் கவலையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வேலைக்கு வந்த பொது பார்த்தேன். உண்மையிலே என்னால் தாங்க முடியவில்லை :blink::wub::lol: . இந்த செய்தி பொய்யாய் இருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. நான் பார்த்த சிறந்த ஒரு கருத்தாளர் வசம்பு அண்ணா. தான் சொல்ல நினைத்த விடயத்தை ஆணித்தரமாக விவாதிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். சிறந்த தமிழ் அறிவு கொண்டவர் என நினைக்கிறன். யாழில் நான் ரசித்து வாசிக்கும் கருத்தாளர்களில் இவரும் ஒருவர். நக்கலும் நளினமும் கலந்து குசும்பாக இவர் எழுதும் எத்தனையோ கருத்துக்களை வாசித்து மனம் விட்டுச் சிரித்திருக்கிறேன். அவ்வகையான பதிவு ஒன்றை கீழே இணைகிறேன்.

வசம்பண்ணாவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் அத்துடன் அவரை இழந்து தவிக்கும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

post-4574-060739400 1287707057_thumb.jpg

post-4574-090543000 1287707070_thumb.jpg

post-4574-075406100 1287707086_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணனா?

மிகவும் துக்கமான செய்தி

வசம்பு அண்ணாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

வசம்பு என்ற பெயரில் என்று யாழ் இணையத்தில் கருத்தாடிய கிருபானந்தன் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி இன்று யாழ் இணையத்தில் பார்த்த பொழுது அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் .வசம்பு என்ற பெயரில் முகம் தெரியாத அவருடன் இணையத்தில் பல காலமாக பல முறை கருத்தாடி இருக்கிறேன் .அப்படி கருத்தாடி இருந்தாலும் அவன் எனக்கு முகம் தெரிந்த ஒரு எனது வகுப்பு தோழன் என்று அறிந்தது ஓர் இரு வருடங்களுக்குள் தான். ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் லண்டனில் ஒழுங்கு செய்த விழா நிகழ்ச்சி வீடியோவை ஒரு முறை எனது பதிவில் போட்டிருந்தேன் அதை யாழ் இணையத்திலும் இணைத்திருந்தேன்.அதை பார்த்த அவன் எனக்கு தனி மடல் போட்டிருந்தான்.தன்னோடு படித்த லண்டனில் இப்ப வசிக்கும் நண்பன் ஒருவன் எங்கை இருக்கிறான் என்று உதவ முடியமா என்று .....அதில் தொடங்கிய இ-மெயில் பரிமாற்றம் மூலம் என்னுடன் 10ம் வரை படித்த ஒரு வகுப்பு தோழன் என அறிந்து கொண்டேன்...ஏனோ தெரியாது அதன் பிறகு அந்த பள்ளியில் படிக்கவில்லை .அதனால் அதன் பிறகு தொடர்பு இருக்கவில்லை.

அவன் அச்சுவேலி பகுதி சேரந்தவன் ..அந்த காலத்தில் அந்த பகுதியிலுள்ள கடை கட்டிட தொகுதிக்கு சொந்தக்காரன் என்றது ஞாபகம் கூடவே ஒரு போட்டோ ஸ்ரூடியோவுக்கு உரிமையாளர்கள் என்றதும் ஞாபகம் ....எங்கள் இருவருக்கும் இடையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று படிக்கும் காலங்களில் நடந்தது ...அதை ஞாபகபடுத்தினேன் அவன் ஞாபகம் வைத்திருந்தது மட்டுமன்றி அதன் பாதிப்பு அவனில் இப்ப இருந்தை அவதானித்தேன் ..

எங்கள் இருவரையும் ராஜராஜசோழனாக்காக சிறை சென்று மீண்டவர்கள் என்று சக மாணவர்கள் கேலியாக கூறுவார்கள் ..ராஜராஜசோழன் என்ற திரைபடம் தான் முதன் முறையாக தமிழ் சினிமாஸ்கோப் திரைபடமாக வெளி வந்தது ..உமாபதி என்ற பிரபல தயாரிப்பாளர் அந்த காலம் பிரமாண்டமாக எடுத்து இருந்தார்.அவருக்கு சொந்தமான ஆனந்த் என்ற பிரபல தியேட்டரும் அந்த காலம் சென்னையில் இருந்தது ..இப்ப அந்த தியேட்டர் இருக்கோ தெரியாது.நானும் அவனும் கொஞ்சம் சினிமா பைத்தியம் அதோடை கொஞ்சம் சிவாஜி பைத்தியமும் கூட ..அதிலை என்னை விட என்னும் கொஞ்சம் கூட அவனுக்கு...அந்த படத்தை யார் முதலில் பார்க்கிறது என்ற போட்டியும் இருந்தது ..வழமையாக பத்தரைக்கு தொடங்கிற படம் விடிய கூட்ட நெரிசல் காரணமாக விடிய ஜந்தரைக்கு மணிக்கு தொடங்கியது ..ஒருவர் ஒருவர்க்கு தெரியாமால் அந்த படத்தை பார்த்தோம் ..மறுநாள் பள்ளியில் படத்தை பற்றி விமர்சனம் விவாதம் தொடர்ந்தது.(அந்த படத்தில் விவாதம் விமர்சனம் செய்ய என்ன இருக்கு என்றது வேற கதை)

எமது பாடசாலை அருகாமையில் ஒரு பிரபல நீதி மன்றம் .அங்கு வழக்கு நடக்கும் கட்டிடத்துக்கு அருகாமையிலுள்ள பாதையினால் எங்கள் மதிய இடைவேளையின் போது செல்வது வழக்கம் ..அங்கு பாலியல் வல்லுறுவு ,கொலை ,கொள்ளை போன்ற வழக்குகள் நடைபெறும் .அந்த வழக்கு நடைபெறும் கட்டிடத்தில் இருமருங்கிலும் சிறை கம்பி கூடுகள் அதில் வழக்குக்காக வரும் சந்தேக குற்றவாளிகளை அடைத்திருப்பார்கள் அதையும் சில வேளை வேடிக்கை பார்த்து விட்டு தாண்டி செல்லுவோம்.நாங்கள் திரும்பிவரும் பொழுது அநேகமாக கோர்ட் முடிந்து இருப்பது வழமை ....ஆனால் அன்று நானும் அவனும் ராஜராஜசோழன் பற்றிய கவனத்தில் கோர்ட் நடப்பதை கவனியாமால் ,,உரத்த குரலில் பேசி வந்திருக்கிறோம்....அதன் காரணமாக பொலிசாரும் கோர்ட் காவலரும் கோர்ட்டுக்குள் இழுத்து சென்றனர் ..நீதிபதி அந்த இருமருங்கிலும் உள்ள கூட்டில் எங்களை இருக்கும் படி பணித்தார்

மிரண்டு வேடிக்கை பார்த்த பயங்கரமான சந்தேக குற்றவாளிகளுடன் நாங்கள் ..அவர்களும் தங்களின் அந்த நேர படபடப்பையும் மறந்து எங்களை வேடிக்கையாக பார்த்து சிரித்தார்கள்.

எங்கள் பள்ளி கொஞ்சம் கட்டுப்பாடு கூட பள்ளியில் அறிந்தால் என்ன நடக்குமோ படபடத்தோம் ...யாரோ எங்கட பள்ளியில் இருந்து கோர்டை வேடிக்கை பார்க்க வந்த ஒன்று ஏற்கனவே இப்படியாம் என்று பள்ளியில் தண்டோரா அடித்து விட்டது .பள்ளியில்.முதல் மணி அடித்து கேட்டது ... நீதிபதி அதன் காரணமாக மற்ற வழக்குகளுக்கு கொடுக்காத முன்னுரிமை கொடுத்து எங்களை கூப்பிட்டார் ..கோர்ட் முதலி குற்றவாளி கூட்டில் ஏறுமாறு கூறினார். நீதிபதி இடை மறித்து மாணவர்கள் என்று சுட்டி காட்டி கீழேயே வைத்து குற்றவாளியா சுற்றவாளியா என்று கேட்டார்...குற்றவாளி என்றால் என்ன..சுற்றவாளி என்றால் என்ன என்று இருவரும் தெரியாமால் தவிக்க பக்கத்தில் இருந்த சட்டத்தரணி சுற்றவாளி என்று சொல்லுங்கோ என்று கூறினார் ..நாங்களும் அதை ஒப்புவித்தோம் ...எங்களை பின் எச்சரிக்கை செய்து விடுவித்தார்...

நாங்கள் பள்ளி செல்லும் பொழுது silent period .நடந்து கொண்டிருந்தது ...அந்த அமைதியை கிழித்து கொண்டு நாங்கள் எங்கள் வகுப்பு செல்லும் வரை இந்த ராஜராஜசோழனுக்காக சிறை மீண்ட எங்கள் இருவரையும் எழுந்து நின்று வேடிக்கை பார்த்து வரவேற்றார்கள்.....

இந்த சம்பவம் எங்கள் இருவருக்குமே மறக்க முடியாமால் இருந்ததை எங்கள் ஈ-மெயில் பரிமாற்றம் மூலம் அறிய கூடியதாயிருந்தது...அவன் என்னுடன் டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு மேலும் தொடர்பு கொள்ள ஆவலாக இருந்தான் ..தொலைபேசி நம்பர் கூட தந்திருந்தான் ...ஏனோ எனக்கே உரித்தான அலட்சியமாக இருக்கும் போக்கினால் தொடர்பு கொள்ளமால் இருந்து விட்டேன் ..அதை நினைத்து உண்மையில் இப்ப மிகவும் வேதனை படுகிறேன்

முகம் தெரியமால் பழகிய எனக்கு முகம் தெரிந்தவன் அவன் அவனுக்கு..எனது கண்ணீர் அஞ்சலிகள்

http://sinnakuddy1.blogspot.com/2010/10/blog-post.html

முந்தி எதோ ஒரு கதையில தானும் எங்கட கல்லூரி தான் என கூறினவர். அதை நினைவு படுத்திய சினக்குட்டிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன்.

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி)

மறைவு : 18 ஒக்ரோபர் 2010

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

பாலகுமார்(கனடா), சுமித்திரா(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கதிர், கார்த்திகா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

வைஷ்னவி(இலங்கை), நிருபன், நிதர்சனா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

http://www.lankasrinotice.com/ta/obituary.php?20101018201371

கருத்தாளர் வசம்புவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

நான் யாழில் இணைந்த ஆரம்பகாலத்தில் அதிக நேரம் யாழில் செலவளிக்கும் வசம்பு சமீபகாலமாக யாழில் வராதிருந்த போழுது ஏன், ஏன்ன காரணம் என்று மனதுக்குள் கேட்டுக்கோண்டு, வேறு பெயரில் இப்பவும் யாழில் கருத்தாடலில் பங்குபற்றிக்கொண்டிருப்பார் என்ற யோசனையில் இருந்த எனக்கு அவரின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.....

தான் பங்குபெறும் எந்தக் கருத்தாடலிலும் துணிவுடன் தனது கருத்தைக் கூறி கருத்தாடல் எவ்வளவு நீண்டுசென்றாலும் அதுமுடியும் வரை தயக்கமின்றி பங்குபற்றிகொண்டே இருப்பார்.....

எமது ஆக்கங்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளை தனிமடலில் மிகவும் பண்பாகச் சுட்டிக்காட்டுவார். இப்படிப் பல வகையாக மிகவும் நட்பாகப் பழகும் குணமுடையவர்.

அவரின் பிரிவுக்காக மிகவும் மனம் வருந்துவதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்....

Link to comment
Share on other sites

அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.... :(

Link to comment
Share on other sites

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அவர்களின் துயரமான இயற்கையெய்திய தகவல் கேட்டு திகைப்புடனான வேதனைப்பட்டவர்களில் நாமும் இருந்தோம். எங்கோ பிறந்து பூவுலகின் பல் வேறு பரப்புகளில் சிதறிவாழும் நிலை பெற்றிருந்தாலும், இணைய வழியில் ஏற்பட்ட தொடர்பாடலால் முகமறியாத நேசப்பரிவுடனேயே நம்மில் பலரது எறவாடல் தொடர்கிறது. இப்படியாக ஏம்முடன் தொடர்பாடலில் இருந்த ஒருவரின் இழப்பு வேதனையுடன் நாமும் இணைகிறோம்.

யாழ் களத்தில் நாடாத்தப்பட்ட அவரது தீவிர கருத்துரையாடல்களைத் தொகுத்து மின் சிறு நூல் தொகுப்பாக்குவது அவருடன் என்றென்றும் நாம் இருப்பதான நிலையைத் தோற்றுவிக்கலாம்.

நேசம்மிக்கவராக வாழ்ந்த வசம்பு அவர்களின் இழப்பின் துயரால் பரிதவிக்கும் அனைவருடன் நாமும் கலந்து கலங்கியிருக்கிறோம்.

*எமது இறுதி வணக்கத்தைப் பதிவு செய்கிறோம்.

- சுழியன் குடும்பம்

Link to comment
Share on other sites

உணர்வுகளின் பரிமாற்றம் - நம்

உள்ளத்தில் கனக்கின்றது.

இறந்த பின்னே முகம் தெரிந்ததனால்

இன்னும் இதயம் தவிக்கின்றது.

மரணம் எனும் வீட்டிற்கு சென்றுவிட்டாய்

இனி கள வாசகர் கூடத்திற்கு வரமாட்டாய்

இறையருள் கிடைத்தாலும் இறப்பென்பது நிஜம்

மறைந்தாலும் உன் பெயர் களத்தில் வாழ்வதும் நிஜம்

உங்கள் பிரிவால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் என் ஆறுதல்கள்

நன்றி உமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் மறைவையிட்டுப் பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைகிறேன். நம்பவே முடியவில்லை. குற்றம் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டத் தவறாத நேர்மையும், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்போது மன்னிக்கும் பெருந்தன்மையும், காத்திரமான கருத்துக்களை முன்வைக்கும் புத்திஜீவித்தனமும் கொண்ட வசம்பு போன்ற இலைமறைகாய்கள் இவ்வாறு இடைநடுவில் உதிர்ந்து விடுவது மிகவும் வேதனையளிக்கிறது.

ஈழத்தமிழர்களில் இநத்தகைய இழப்புக்களே தொடர்கதையாகி வருகிறது. இறைவனை நோவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.

அவரது ஆன்மா சாந்திபெற இறைவனைவேண்டி, அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

வசம்பு (வம்பு அண்ணா) என்று பாசத்துடன் அழைக்கும் அண்ணா இறந்த செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும் பெரும் துக்கத்தையும் அளித்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். அண்ணாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

வம்பார்(வசம்பை இங்கு யாழில் விளிக்கும் போது இவ்வார்த்தையைதான் ஒவ்வொரு முறையும் நான் அழைப்பேன்)!!!!!!

... நம்ப முடியவில்லை, உன் பிரிவை!

யாழில் இணைந்த ஆரம்ப காலங்களில் ஏறக்குறைய எழுதும் ஒவ்வொரு கருத்துக்கும் எனக்கும், வசம்பாருக்கும் மோதல் தொடங்கி விடும்! இம்மோதல் வசம்பார் என்பவர் வை.சிதான் என தேடிக்கண்டு பிடித்து இங்கெழுதுமளவிற்கு வந்தது.

சில நாட்களுக்கு முன்னும் முன் கூட யாழில் அப்போது மிக சிறந்த கருத்தாடல்களை மேற்கொண்டவர்களை நினைக்கும் போது வசம்பார் நினைவில் வந்தார்.

சிறந்த கருத்தாளன், அதுவும் மாற்றுக்கருத்து எனும் பெயரில் புலிகளின்/புலத்தில் இருக்கும் பூசாரிகளின் பல தவறுகளை துணிவுடன் சுட்டிக்காட்டியவன். மாற்றுக்கருத்து/கருத்துச்சுதந்திரம் என்று யாழில் வந்து இவனால் கொட்டுப்பட்டவைகள், பின்னாளில் புலிகளின் அழிவின் பின் தமிழ் மக்களின் அவலங்கள், தமிழ் மக்களுக்கு ஓர் நீதியான அரசியல் தீர்வு, சிங்கள அரசின் யுத்த நிறுத்த/மனித உரிமைகள் மீறல், ... போன்றவற்றில் எல்லாம், இவன் எழுத்துக்கள் மவுனித்து விட்டது!!!

ஆரம்ப காலம் முதல் மாற்றுக்கருத்தாளர்களின் எழுத்துக்களும், கொள்கைகளும் தமிழின வாழ்வுக்கானதோ, அவர்களின் சுபீட்சமான எதிர்காலம் நோக்கியதாகவோ இருக்கவில்லை. மாறாக புலி இயக்க விரோத அரசியல் எனும் பெயரில் சிங்களத்தின் இனவழிப்பு கொள்கைக்கு பலமே சேர்ப்பதாக அமைந்திருந்தது. இந்த சகதியில் வசம்புவும் தெரிந்தோ தெரியாமலோ வீழ்ந்து விட்டார்.

சென்றுவா! உன் ஆத்மா சாந்தியடையட்டும்! உன் குடும்பத்தை ஆண்டவன் காப்பாறுவானாக!! ஆனால் இன்னொரு பிறவி உனக்கு இருந்து, அதுவும் எம்மினத்தில் நீ மீண்டும் பிறக்க நேர்ந்தால் ... தயவுசெய்து தமிழனாக பிற ....

என் இதய அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

சின்னக்குட்டி உங்கள் பதிவுக்கு நன்றி.

+++

வசம்பு அண்ணாவின் எழுத்தில் ஓர் பாணி உள்ளது. அவர் யாழில் கருத்து எழுதும்போது ஒவ்வொரு கருத்திலும் எப்போதும் சரிந்த எழுத்துக்களை - Italics எழுத்துக்களையே பயன்படுத்துவார். யாழில் இப்படி Italics முறையை மட்டும் பயன்படுத்தும் எவராது உள்ளதாக தெரியவில்லை. ஏன் குறிப்பிட்ட பாணியை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. சிலவேளைகளில் கைகளால் எழுதப்படும்போதுள்ள தோற்றத்தை Italics முறையில் ஓரளவு யதார்த்தமாக காண்பிக்கும் என்பதால் தேர்வு செய்தாரோ தெரியாது.

அவர் தனது தனிப்பட்ட புகைப்படமாக - Personal Photo உபயோகித்தது:

photo-652.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனத்த மனத்துடன்! கண்ணீர் அஞ்சலிகள்!.

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணாவின் மறைவு ஆழ்ந்த துயரினை தருகிறது..அவர் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

யாழில் இந்த செய்தி தேவையா என்ற வெறுப்பை கொடுக்குமளவிற்கு ஒரு உணர்வு!

வசம்பு ஒரு பண்பானவர் என்பதிற்கு அவரினால் பதியப்பட்ட ஒவ்வொரு கருத்துக்களும் சான்றாக அமைகின்றன.

மற்றவர்கள் தனது கருத்தை ஏற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் கருத்துக்களை முன்வைப்பவரல்ல வசம்பு, தனக்கு எது சரியென்று படுதோ அதைமட்டும் கூறுவார்,....

நான் இதை முக்கியமாக சொல்ல வேண்டும் யாழ்களத்தில் வசம்பு அண்ணா எது எழுதினாலும் அதை எதிர்ப்பதை தவிர வேற எதுவுமே நான் செய்வது இல்லை அதுவும் சில வேளைகளில் அவர் எழுதியைதை வாசிக்காது கூட எதிர்கருத்து எழுதி இருக்கேன்( அதை கருத்து என்று சொல்ல முடியாது) அவரின் பலமே நான் எவளவு தான் மரியாதை இல்லாது எழுதினாலும் அவர் அப்படி தானும் கீழ் இறங்கி தரக் குறைவாக பேசுவது இல்லை அப்படி ஒரு சிறந்த கருத்தாளர். ...

முகம் தெரியாத நண்பரை படம் பார்த்தவுடன் கவலையாகிவிட்டது.
:D :D

யாழ் வரலாற்றில் இறந்தபின் போட்டோ பார்த்த களநண்பர் இவராகத்தான் இருக்கும்.... பார்த்த 4 அல்லது 5 நண்பர்களில்... :)

வசம்புவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். :lol::(

Link to comment
Share on other sites

யாழின் வரலாற்றில் கருத்துக்கள நண்பனுக்காக போட்டோவுடன் அஞ்சலி வந்ததும் இதுவே முதல் முறையாக இருக்கும் என எண்ணுகிறேன் :( நன்றி

Link to comment
Share on other sites

சின்னக்குட்டி உங்கள் பதிவுக்கு நன்றி.

+++

வசம்பு அண்ணாவின் எழுத்தில் ஓர் பாணி உள்ளது. அவர் யாழில் கருத்து எழுதும்போது ஒவ்வொரு கருத்திலும் எப்போதும் சரிந்த எழுத்துக்களை - Italics எழுத்துக்களையே பயன்படுத்துவார். யாழில் இப்படி Italics முறையை மட்டும் பயன்படுத்தும் எவராது உள்ளதாக தெரியவில்லை. ஏன் குறிப்பிட்ட பாணியை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. சிலவேளைகளில் கைகளால் எழுதப்படும்போதுள்ள தோற்றத்தை Italics முறையில் ஓரளவு யதார்த்தமாக காண்பிக்கும் என்பதால் தேர்வு செய்தாரோ தெரியாது.

சின்னக்குட்டி, உங்கள் பதிவை இன்று பார்த்தேன், நானும் உங்கள் காலப்பகுதியில் அதே பாடசாலை வாழ்க்கை வாழ்ந்தவன்.... அதே கோட் அனுபவங்கள்(கமலம் கொலை வழக்கு, வல்லை/கம்பர்மலை கொலைகளின் வழக்குகள் போன்றவற்றில் அதே நீதிமன்றில் நானும் பாடசாலை முடிய சில நிமிடங்களாவது ஆயர்)! எனக்கு இப்போ சிறியவனான வை.சியை ஓரளவு ஜாபகம் வருகிறது!! ... பஸ் பயணங்கள் ... நன்றிகள் பதிவிற்கு!

கரும்பு, கடந்த சில காலமாக நான் இவ்வெழுத்துக்களை அனேகமாக இங்கு யாழில் சொருகுகிறேன், அதனை ஆரம்பத்தில் தொடங்கும் போது கூட, வசம்புவினதை காப்பி அடிக்கிறேன் என்று மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் இவ்வெழுத்துக்கலை பாவிக்கும் போது வசம்பு நினைவில் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்புவின் வாழ்வில் விதி விளையாடி விட்டது. களத்தில் தினமும் வலம் வந்து கொண்டிருந்த காலத்தில் பல முறை தனி மடலில் உரையாடி இருக்கின்றோம். மிகவும் பண்பானவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை அறியத்தந்த கள உறவு ரமாவுக்கும் எனது நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் முகம் தெரியாத/ காட்டாத யாழில், மறைந்த பின்பு முகத்தை காட்டிச்சென்ற வசம்புவின் பிரிவு ஒருவிதமான மன அழுத்தத்தையும் கவலையையும் தருகிறது...இது யாழில் கருத்தெழுதுபவர்களும் மனிதர்களே (வெறுமனே கருத்துகளத்தில் வரும் கருத்துக்கள் என்பதற்கு அப்பால்) என்கிற உணர்வை உணர்த்துகிறது. வெறுமனே வாத-பிரதிவதங்களுக்கு அப்பால் ஒரு பிணைப்பு உண்டென எனக்கு புரியவைத்துள்ளது.

வசம்பு..மற்றவர்களுக்கு செய்ததது போல், என்னையும், எனது கருத்துக்களையும் வாசித்து கருத்தெழுதும் கருத்தாளர். எனக்கு அவருடைய அடிக்கோட்டு வாக்கியம் பிடிக்கும், "புதிதாக நண்பர்களை சேர்ப்பதை விட இருப்பவனை பகைக்காதே" ஒரு சந்தர்பத்தில் அதை நான் மேற்கோள் காட்டி எழுதியும் உள்ளேன்.

எனக்கு இந்த செய்தி வந்தவுடன் பதில்/ பதிவு போட விரும்பியிருந்தேன், ஆனால் நேரம் இருக்கவில்லை...யாழ் பார்பதுண்டு பதில் போட நேரமும் இல்லை மனமும் இல்லை...சிறிய இடைவெளி பின்பான எனது முதலாவது பதிவாக வசம்புவிர்ற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.