Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல்

18 November 10 05:28 am (BST)

சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன..

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன.

நீண்ட காலமாகவே தூரப்பார்வையற்ற தமிழர் கூட்டணியினர், பிந்தய கூட்டமைப்பினர் போன்ற மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் போராடி வரும் இவர் சிறுப்பிட்டியை சேர்ந்தவர் என்று ஆரம்ப உரையில் டென்மார்க்கின் அரசியல் சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் தர்மா தர்மகுலசிங்கம் தெரிவித்தார். நிகழ்ச்சிகளை குறித்த நேரத்திற்கு அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்தும் வைத்தார். அத்தோடு எம்.சி.லோகநாதனின் உரையும் கூட்டத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சி. கா. செந்திவேல் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பின் இரவு 21.00 மணியளவில் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

கூட்டத்தில் கேட்ட கருத்துக்களில் முக்கியமானவை.

01. நடந்துவிட்ட எல்லாத் தவறுகளையும் பிரபாகரனின் தலையில் போட்டுவிட்டு நாம் ஏதுமறிய பேதைகள் போல வேடமணியக்கூடாது. முழுத் தமிழினமும் அந்தத் தவறுகளுக்கான பங்காளிகளே. ஒரு தலைவன் வருவான் எம்மைக் காப்பாற்றுவான் என்று எண்ணும் தமிழினத்தின் மனமே ஆயுதமேந்திய புலிகளும், அதே பாணியிலான மற்றய இயக்கங்களுமாகும்.

02. இன்று இலங்கையின் அரசியலை முன்னெடுக்க வந்துள்ள கூட்டமைப்பு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ், பிள்ளையான் உட்பட அனைவருடைய கரங்களும் இரத்தத்தால் தோய்ந்த கரங்களே. இவர்கள் எப்படி மீண்டுமொரு சரியான அரசியலை தமது இரத்தம் காய்ந்த கரங்களால் சரியாக முன்னெடுக்க முடியும் ?

03. சிறீலங்கா இனவாத அரசு ஒரு ஜனநாயக நாடோ அல்லது சோசலிச நாடோ கிடையாது. அது மற்றவர்கள் உற்பத்தி செய்ததை விற்பனை செய்யும் மோசமான சந்தைப் பொருளாதார நாடு. அரசியல் அதிகாரப் பகிர்வோ, பரவலாக்கலோ எதற்குமே தயாரில்லாத ஓர் ஆட்சியே மகிந்த ராஜபக்ஷ நடாத்தும் ஆட்சியாகும். 80.000 சிங்கள இளைஞர்களையே கொன்று வீசிய சிங்கள இனவாதம், தமிழர்களை என்ன செய்யும் என்பதை நாம் தூரப்பார்வையுடன் உணர்ந்திருக்க வேண்டும்.

04. கிளிநொச்சி வீழ்ந்த கையோடு ஆயுதங்களை மௌனிக்க வைக்கிறோம் என்று புலிகள் அறிவித்து, மக்களையும் விடுவித்திருந்தால் சுமார் 40.000 அப்பாவி மக்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். புலிகளின் மோசமான பிடிவாதமான, தூரப்பார்வையற்ற செயலால் இத்தனைபேர் வீண் மரணத்தை சந்தித்தார்கள்.

05. இத்தனை அவலங்கள் நடந்த பின்னரும், அதற்குக் காரணமான இந்தியா மறைந்திருந்து என்ன செய்தது என்பது தெரிந்த பின்னரும் இந்தியாவை தம் தொப்புள்கொடி உறவென்று சொல்லும் தமிழனை என்ன செய்வது..

06. சிங்கள இனவாத அரசுடன் உறவு கொள்ள புலிகளின் ஒரு பிரிவினர் இன்று கொழும்புக்கு ஓடுகிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள். இது என்ன அரசியல்.. இதைவிட கேடுகெட்ட அரசியல் என்று ஓர் அரசியல் இருக்க முடியுமா ?

07. நாடுகடந்த அரசு என்று வெளிநாடுகளில் அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படியொரு அரசு இருக்கிறது என்பதைக் காட்டி இலங்கையிலும் ஓர் தமிழ் அரசு அமைய வழி செய்யலாம் என்று கனடாவில் கூறினார்கள். இதை யாரிடம் மகிந்த ராஜபக்ஷவிடமா காட்டியா ஈழம் அமைக்கப் போகிறீர்கள் என்று அங்கிருந்த பெண்மணி மறுபடியும் அவரிடம் கேட்டார். புலிகள் என்ற பெரிய இயக்கம் போராடியே சிங்கள இனவாத அரசு எதையுமே கொடுக்க முன் வரவில்லை நாடுகடந்த அரசைக்காட்டியா உரிமை பெற முடியும் ?

08. ஆனால் நாடுகடந்த அரசென்பது சிங்கள இனவாதம், இந்திய வல்லாதிக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ளத்தில் பெரு மகிழ்ச்சியையே கொடுக்கும். புலிகளின் தனிநாட்டு கோரிக்கை இன்னமும் முடியவில்லை என்பதற்கு இவர்களையே உதாரணமும் காட்டும். அவசரகால சட்ட நீடிப்பு, கைதுகள், கொலைகள் போன்ற நித்திய கருமங்களை மாற்றமில்லாமல் சிங்கள அரசு செய்ய நாடுகடந்த அரசையே உதாரணம் காட்டும். நாட்டில் உள்ள அப்பாவிகள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கவே இவர்களுடைய செயல் காரணமாக அமையும். புலிகள் மீதான தடையை நீடித்து தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்க இந்தியாவுக்கும் ஒரு பிடிமானமாக இவர்களுடைய முயற்சி அமையும்.

09. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது புலிகள் செய்த மிகப்பெரும் தவறாகும். இன்று அகதிகளாக வாழும் முஸ்லீம்களின் அடுத்த தலைமுறை சுமார் 20 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே வாழ்கிறது. அவர்கள் புலம் பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறைபோல் யாழ்ப்பாணத்திற்கு பார்வையாளராகவே வருவார்கள். முஸ்லீம்கள் மறுபடியும் குடியேறுவதற்குக் கூட சிங்கள அரசு எதையுமே செய்யவில்லை.

10. சீனா – இந்தியா – ரஸ்யா – பாகிஸ்தான் – அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இந்தப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தன. இவர்களுடைய நோக்கங்களுக்காக ஈழத் தமிழர்கள் அநியாயமாக பலியானார்கள். புலிகள் அமெரிக்க சார்புடையவர்கள் என்பதால் அவர்கள் இலங்கையில் இருக்கக் கூடாது என்று இந்தியா கணக்குப் போட்டது. 2001 ற்குப் பிறகு ஆயுதமேந்திய அமைப்புக்கள் இருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியது. இரு சக்திகளும் புலிகளுக்கு எதிரானபோது முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென்று வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப நடாத்தப்பட்ட போர் கடைசியில் மீண்டும் தொடங்க முடியாது ஒரு கட்டத்தில் நின்றும்போனது.

11. ஆனால் ஒடுக்கு முறைக்குள்ளான மக்கள் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ அல்லது இருபத்தைந்தாண்டுகளோ கழித்து மறுபடியும் எழலாம் ஆனால் அது புலிகள் போல தப்பான திசையில் எழுகிறதா அல்லது மக்கள் சக்தியாக எழுகிறதா என்பதைப் பொறுத்தே அதன் அழிவும் ஆக்கமும் தீர்மானமாகும்.

12. தமிழ் மக்கள் ஏறத்தாழ மந்தை நிலைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்று கேட்காமல் ஒன்றன் பின் மற்றயது கூட்டமாகப் போகும் குணம் கொண்டவை செம்மறிகள். வெள்ளாடுகள் தனித்தனியாக மேயும் அவற்றை மேய்ப்பது கடினம். ஆனால் செம்மறிகளை மேய்க்க ஒருவன் போதும். அதுதான் ஒரு தலைவன் வருவான் என்று பாடித்திரிகிறார்கள். ஆண்ட பரம்பரை மறுபடி ஆள நினைப்பதில் தவறென்ன என்ற காசியானந்தனின் வரிகளை பாருங்கள் எந்தக்காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மேட்டுக்குடிகளை தவிர தமிழரை ஆண்டவன் எவன்.. ? இவனா மறுபடியும் ஆளப்போகிறான் இப்படியான பிற்போக்குத் தனமான எண்ணங்களில் பின்னால் மந்தை நிலைப்பட்டது தவறு.

13. இவற்றையெல்லாம் அறிந்து காலத்தையும் சூழலையும் உணர்ந்து தமிழ் மக்கள் சரியான சக்தியாக மலர வேண்டும். தோல்வியடைந்த புலிகளை குத்திக்காட்டி பேசுவதில் யாதொரு பயனும் கிடையாது. இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே பெரும் அரசியல் வெற்றிடமும் விரக்தியுமே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 80 வீதமான மக்கள் வாக்களிக்கவே போகவில்லை. வெறும் ஒன்பதாயிரம் வாக்குகளை வைத்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கிறது கூட்டமைப்பு. மறுபடியும் சேர் பொன் இராமநாதன் காலத்துக்குள் போய் குளிர்காய ஆசைப்படுகிறார் சம்மந்தர்.

14. கூட்டமைப்பை மன்மோகன் சிங் பாராட்டியதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். அந்த வெட்டங்கெட்ட செயலை புரியாது கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் இந்திய செய்ததையே மறந்த தமிழனுக்கு பழைய வரலாறா தெரியப்போகிறது.. என்றார்.

15. அதேவேளை இனப்பிரச்சனை என்ற விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அதைத் தீர்க்காமல் வேறு நியாயங்களை பேசுவது அர்த்தமற்றது என்றார். இது குறித்து தமது கட்சி முன் வைத்துள்ள நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அதன் உப பிரிவுகளையும் எடுத்துரைத்தார்.

இதேவேளை செந்தில்வேலிடமும் பல கேள்விகள் கேட்டப்பட்டன.

01. ஏன் சண்முகதாசனும் நீங்களும் பிரிந்தீர்கள் ? நீங்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட்டீர்கள் ?

முதற்கேள்விக்கு உட்கட்சிப் பிரச்சனை என்று கூறிய அவர் இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

02. சீனா, ரஸ்யா என்பன கம்யூனிச நாடுகள் என்கின்றன இவை எதற்காக ஆயுதங்களை வழங்கி தமிழரை அழிக்க துணை போயின.. இத்தகைய கம்யூனிசம் தேவையா ?

இன்றைய சீனா – ரஸ்யா ஆகிய நாடுகளை நாம் கம்யூனிச நாடுகளாக கருதவில்லை. நாம் இலங்கைக் கம்யுனிஸ்டுக்கள் அவ்வளவுதான்.

03. கம்யூனிசநாடான கியூபா எதற்காக ஐ.நா வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது ?

சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாட்டை யுத்த குற்றவாளியாக நிறுத்தினால் அதை முன்னுதாரணம் காட்டி அமெரிக்கா மற்றய மூன்றாம் உலக நாடுகளையும் நிறுத்தும் என்ற அச்சமே காரணம்.

புலிகளிடமும், கூட்டமைப்பினரிடமும், நாடுகடந்த அரசிடமும் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். ஆனால் அதே தவறுகளே கம்யூனிஸ்டுக்களிடமும் வேறொரு வடிவமாக இருப்பதை கேள்வி பதில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பதில்களால் உணர முடிந்தது. எழுபதுகளில் கம்யூனிஸ்டுக்கள் பேசிய அதே இடத்திலேயே 2010 லும் நிற்கிறார்கள் என்ற உணர்வையும் கூட்டம் ஏற்படுத்தியது. எழுபதுகளில் சமுதாயம் இருந்தது போலவே இன்றும் மாற்றமில்லாமல் இருப்பதால் அதையே பேசுகிறார்களா இல்லை அவர்கள் தம்மை சித்தாந்தங்களுக்கு வெளியால் நவீனமயப்படுத்த முடியாமல் இருக்கிறார்களா என்ற இரு பெரும் ஆய்வுக்கான அவசியத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியதே இதன் மீதான இன்னொரு பார்வையாகும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது.. அதை நிரப்ப கம்யூனிஸ்டுக்கள் உட்பட யாரையுமே அடையாளம் காட்டமுடியாமல் அந்த வெற்றிடம் நகர்வதாகவே நிகழ்வின் முடிவில் மனதில் உணர்வுகள் ஓடின…

இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=32574&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அவலங்கள் நடந்த பின்னரும்இ அதற்குக் காரணமான இந்தியா மறைந்திருந்து என்ன செய்தது என்பது தெரிந்த பின்னரும் இந்தியாவை தம் தொப்புள்கொடி உறவென்று சொல்லும் தமிழனை என்ன செய்வது..

தனித்து நின்று போராடிய தமிழனைக் காக்கத்தவறிய இந்தக் கையாலாகாத கம்யூனிஷ்ட்களை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இறைவன் கன காலத்துக்கு பின்..............?

"இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது."

"இலவசமாக நிகழ்ச்சி" "பணமே வேண்டாது" - கமுநிசியத்தின் இரு கண்கள்

"முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது.. அதை நிரப்ப கம்யூனிஸ்டுக்கள் உட்பட யாரையுமே அடையாளம் காட்டமுடியாமல் அந்த வெற்றிடம் நகர்வதாகவே நிகழ்வின் முடிவில்

மனதில் உணர்வுகள் ஓடின…"

மக்களுக்கு முன்னால் இதுவரை யாரும் உண்மையாக செயல்படவில்லை இல்லை செயல்படவிடவில்லை. இதுவே வெற்றிடத்துக்கு காரணம். இதற்குரிய முழுப்பொறுப்பையும் சர்வதேசமே ஏற்கவேண்டும். அவர்கள் தான் மக்களை விடசொன்னர்கள் விடுதலைப்புலிகளை அவர்கள் தான் சொன்னார்கள் சிங்களம் ஒரு மனித பண்புகளை கொண்ட நாடு என்று.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தி கெட்ட ஒன்று :D

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது."

"இலவசமாக நிகழ்ச்சி" "பணமே வேண்டாது" - கமுநிசியத்தின் இரு கண்கள்

எல்லோரும் தியாகம் செய்தார்களோ

நல்ல எடுத்துக்காட்டாக கொள்ள முடியவில்லை

08. ஆனால் நாடுகடந்த அரசென்பது சிங்கள இனவாதம், இந்திய வல்லாதிக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ளத்தில் பெரு மகிழ்ச்சியையே கொடுக்கும். புலிகளின் தனிநாட்டு கோரிக்கை இன்னமும் முடியவில்லை என்பதற்கு இவர்களையே உதாரணமும் காட்டும். அவசரகால சட்ட நீடிப்பு, கைதுகள், கொலைகள் போன்ற நித்திய கருமங்களை மாற்றமில்லாமல் சிங்கள அரசு செய்ய நாடுகடந்த அரசையே உதாரணம் காட்டும். நாட்டில் உள்ள அப்பாவிகள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கவே இவர்களுடைய செயல் காரணமாக அமையும். புலிகள் மீதான தடையை நீடித்து தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்க இந்தியாவுக்கும் ஒரு பிடிமானமாக இவர்களுடைய முயற்சி அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவில் நடத்த அனுமதிக்க முடியாது-மத்திய அரசு

புதன்கிழமை, நவம்பர் 17, 2010, 12:43[iST]

டெல்லி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியா [^] வில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை [^] எடுக்கப்படும் என, மத்திய அரசு [^] எச்சரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு, உலகம் முழுக்க பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடுகடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடர்பாளரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "இவ்வாறான தேர்தல் எதையும் இந்தியாவ்ல் நடத்த முடியாது. அதனை இந்திய அரசு அனுமதிக்காது. மீறி நடந்தால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 1992ம் ஆண்டு தடை செய்தது. இந்தத் தடை இன்று வரை தொடர்கிறது.

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் யுத்தம் நிறைவடைந்த போதும், இந்தத் தடை விலக்கப்படவில்லை. இன்னும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77728

நாடுகடந்த அரசு முயற்ச்சியை புலம்பெயர் மக்கள் முனைப்பது தனியே புலம்பெயர் தமிழ்மக்களின் முடிவல்ல மாறாக இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனையும் இந்திய மேற்குலகு போன்ற நாடுகளின் மறைமுக உந்துதலும் இதற்குப் பின்னணியில் இருக்கவே அதிகமான சந்தர்ப்பம் இருக்கின்றது. எவ்வாறு தமிழர்களின் தனிநாட்டுக்கு கோரிக்கைக்கும் அது சார்ந்த ஆயுதப்போராட்டத்திற்கும் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கி வளர்த்த இந்தியா மேற்குலகு போன்ற நாடுகள் பின்னர் அதை கட்டுப்படுத்துவது போல் இலங்கை அரசுடன் உறவாடியதோ அதே பாணியிலான நாடுகடந்த அரசும் அதை இலங்கைக்காக தாடுப்பதற்குமாக தொடர்ச்சியான இலங்கைக்குள் மூக்கு நுழைக்கும் நடவடிக்கையே.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70151

... எனது உறவினர்கள் பலர் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி(சண்முகதாஸன் பிரிவு) ஆதரவாளர்கள். என் நினைவு அறிய, சிறுவயதில் என் வீதிகளில், இந்த செந்தில்வேலை காணாத நாட்கள் இல்லை!!! அனேகமாக என் ஊரில் தான் இவரின் நீண்ட காலம் கழிந்திருக்குமென நம்புகிறேன்!! அக்காலங்களில் தாஸீஸியஸுடன் இணைந்து சில நாடகங்களையும் அரங்கேற்றியவர்கள்!! நல்ல பேச்சாளர் ... பேச்சு மட்டும் தான் ... பேச்சை விட இவர்கள் கண்டது ஒன்றுமல்ல!!!

பின் நாளில் இவர்களில் சிலர்(இந்த மாக்ஸ்ஸீயவாதிகள்) ... தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ... புலம்பெயர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கினார்கள்

செந்திலின் நெருங்கிய தோழர் சிவராஜா(இறந்து விட்டார்), நானும் அவரின் கதைகளில் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு, அவரிடமிருந்து சில மாக்ஸீய புத்தகங்களை வாங்கி வீடு கொண்டு வந்து வாசிப்பதுண்டு(இவர்களில் சிலர் பேரவை, புளொட் அபிமானிகள்) !! ஒரு நாள் நான் வாங்கி வாசிக்க கொண்டு வந்த புத்தகங்களை, என் தந்தையார் பார்த்து விட்டார் .... கூறினார் ... "வாசி, நல்லாக வாசி! ... முப்பது வயதுக்கு கீழே இதை வாசிக்காதவனும் பேயன்(மாக்ஸீய கொள்கைகளை பிடிக்காதவன்), முப்பதுக்கு மேலே இதை வாசிப்பவனும் பேயன்(மாக்ஸீயம் கதைத்துக் கொண்டு திரிபவன்) ..." .... முப்பதுக்கு முன் நான் கண்ட செந்தில் ... முப்பது தாண்டியும் ....

... ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது ....

Edited by Nellaiyan

"இலவசமாக நிகழ்ச்சி" "பணமே வேண்டாது" - கமுநிசியத்தின் இரு கண்கள்

- நான் இவ்வாறு சொன்னதற்கு காரணம் உலகில் இந்த பொதுவுடமை ஒரு தத்துவரீதியனது.

- உலகில் இன்று ஒரு நாடுகளுமே கால் மார்க்சின் இல்லை லெனின் தத்துவப்படி இல்லை.

- அப்படியும் வாழ முடியாது என்பது வரலாறு கண்ட உண்மை

சக உறுப்பினர் ஒருவர் சொன்ன மாதிரி - " எட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது ...."

04. கிளிநொச்சி வீழ்ந்த கையோடு ஆயுதங்களை மௌனிக்க வைக்கிறோம் என்று புலிகள் அறிவித்து, மக்களையும் விடுவித்திருந்தால் சுமார் 40.000 அப்பாவி மக்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். புலிகளின் மோசமான பிடிவாதமான, தூரப்பார்வையற்ற செயலால் இத்தனைபேர் வீண் மரணத்தை சந்தித்தார்கள்.

போர் முடிந்த பின்னர் இதே அளவான மக்கள் காணாமல் போனதும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் அண்ணைக்கு தெரியாதோ....??

சாவு மட்டும் தமிழனை சீரளிக்க இல்லை... இப்ப நடப்பது தான், அது எல்லாத்துக்கும் மேலான சீரளிவு.... இதை குடுக்கிறதுக்கும், அனுபவிக்க வைக்கிறதுக்கும் பதிலா ஒரே குண்டை போட்டு எல்லாரையும் கொலை செய்து இருக்கலாம்...

Edited by தயா

12. தமிழ் மக்கள் ஏறத்தாழ மந்தை நிலைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்று கேட்காமல் ஒன்றன் பின் மற்றயது கூட்டமாகப் போகும் குணம் கொண்டவை செம்மறிகள். வெள்ளாடுகள் தனித்தனியாக மேயும் அவற்றை மேய்ப்பது கடினம். ஆனால் செம்மறிகளை மேய்க்க ஒருவன் போதும். அதுதான் ஒரு தலைவன் வருவான் என்று பாடித்திரிகிறார்கள். ஆண்ட பரம்பரை மறுபடி ஆள நினைப்பதில் தவறென்ன என்ற காசியானந்தனின் வரிகளை பாருங்கள் எந்தக்காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மேட்டுக்குடிகளை தவிர தமிழரை ஆண்டவன் எவன்.. ? இவனா மறுபடியும் ஆளப்போகிறான் இப்படியான பிற்போக்குத் தனமான எண்ணங்களில் பின்னால் மந்தை நிலைப்பட்டது தவறு.

இலங்கை கம்னியுஸ்டுக்களும் மந்தைகள் தான் அதுதான் மக்கள் சக்தி என்று யாரோ சொன்னதை அப்படியே திருப்பி சொல்லி கொண்டு திரியினம்....அது சரி அவைகளும் தமிழர்கள் தானே

தொடங்கிட்டாங்கள் மக்கள் சக்தி......மண்ணான்கட்டி சக்தி என்று....

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த பின்னர் இதே அளவான மக்கள் காணாமல் போனதும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் அண்ணைக்கு தெரியாதோ....??

சாவு மட்டும் தமிழனை சீரளிக்க இல்லை... இப்ப நடப்பது தான், அது எல்லாத்துக்கும் மேலான சீரளிவு.... இதை குடுக்கிறதுக்கும், அனுபவிக்க வைக்கிறதுக்கும் பதிலா ஒரே குண்டை போட்டு எல்லாரையும் கொலை செய்து இருக்கலாம்...

நீங்க வேற...

புலிகள் இல்லையென்றால் சிங்களவன் தமிழனை பல்லக்கில் தாங்குவான் என்று சொல்லும் பலர் இங்கும் இருக்கும் போது.........

நீங்க வேற...

புலிகள் இல்லையென்றால் சிங்களவன் தமிழனை பல்லக்கில் தாங்குவான் என்று சொல்லும் பலர் இங்கும் இருக்கும் போது.........

சில வேளைகளில் நான் நினைத்து பார்ப்பேன்... நான் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் எமது மக்கள் இருக்கும் சூழலில் அடுத்த நிலை என்ன எண்று தெரியாத சூழலில், உழைப்பு ஊதியம் எண்று ஒண்றும் இல்லாத ஒரு சூழலில் , உணவில் இருந்து எல்லாவற்றிக்கும் மற்றவரின் கையேந்தும் நிலை எனக்கு வந்தால் அப்படி காலம் எவ்வளவு போகும் எண்று தெரியாமல் வாழும் நிலை வந்தால் ...

என்னை அறியாமல் போய் என் பிள்ளையில் ஒண்றை இறுக்கி கட்டிபிடிச்சிடுறனான்...

நினைச்சு பார்க்கவே சுமையாக இருக்கு... வாழ்வது... ??

இங்கை சிலர் மனிதனுக்கு உயிர் மட்டும் இருந்தால் போதும் எனும் தொனியில் தான் பேசுகிறவர்கள்... அவர்களுக்கு எங்கை புரிய போகிறது, மானத்தின் அருமையும், இழி நிலையில் வலியும்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் போராடாமல் விட்டு சிங்களத்தோடு இணக்க அரசியல் நடத்தி இருந்தால்.. புலம்பெயர் பிரஜா உரிமைகள் உட்பட இவ்வாறான கட்டுரைகளுக்கும் இடமிருந்திருக்காது. :unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானத்தின் அருமையும், இழி நிலையில் வலியும்...??

அம்மணமாக நிற்பவர்களிடம் மானம் பற்றி?

Edited by thenmozi

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் சீனா கான செந்தில்வேல் அவர்கட்கு, நான் புலம்பெயர்தேசம்வந்து (அப்படியொனறும் ஆகக்குறைந்தது, பிற்காலத்தில் தெருவில் போற பெண்டுகளிட்டை சங்கிலி தாலிக்கொடியெண்டு அறுத்து அதகளப் படுத்தினார்களே அப்படியான இசக்கங்களிலிலகூட எடுபிடியாகக்கூட இருந்ததில்லை) ஏதோ இண்டைக்கு நல்லாயிருக்கிறன் அங்க செத்தீச்சினமே அவர்களது பெயர்களைச் சொல்லி அசைலம் அடிச்சு, அதுகளெல்லாம் உமக்குத் தரமுடியாது, சும்மா ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு மூலையில இருந்திட்டுப் போ எண்டு மனிதாபிமானத்தில இங்கை என்னை இருக்க விட்டிருக்கினம். அப்படியிருந்தும் நான் நாலுபேருக்கு அதுவும் பிறத்தியாருக்கு இல்லாட்டிலும் சாதிசனம், சொந்தபந்தம் என கனக்கப்பேருக்க இல்லாட்டிலும் "பொரிகடலையோட திருவாரூர்" எண்டகணக்கா ஏதோ ஆருக்காவது உதவி ஒத்தாசையாக இருந்ததுமில்லாமல், ஒரு பெண்ணுக்கு வாழ்கை கொடுத்து, அதன்மூலம் தமிழ் சந்ததியைப் பெருக்கி (இதில ஒரு வசதி என்னவெண்டா பிள்ளையளைச்சாட்டி ஒரு தொகை வரும் அதுக்காகவேனும் சந்ததியைப் பெருக்கவேணும்) ஏதோ பூமிக்குப் பாரமா இருக்கிறன். அதுசரி இந்தக் கம்யூனிசியம், மாக்சிஸம் எண்டு பேசி உம்மால் யாருக்காவது உமது வாழநாளில உருப்படியாக ஏதாவது சாதித்தனீரே? சரி விடுங்கோ உமக்கும் ஒரு குடும்பம் இருக்குதுதானே அப்ப உம்மட பொண்டாட்டியாவது நீர் சொல்லுற இந்த சித்தாந்தங்களைக் காதில வாங்கிறவவே ஆகமொத்தம் உமது சுற்றவட்டாரத்திலேயோ எந்தவித மாற்றங்களையும் உமது சித்தாந்தங்களால கொண்டுவர முடியாமல் இருக்கேக்க எதுக்கையா எங்கட தலையில கொண்டுவந்து உங்கட சித்தாந்தங்களை கொட்டுறியள்? அண்ணர் உங்கட கொப்பரானச் சொல்லுறன் உனக்கு இன்னமும் நாலைஞ்சு ஆம்பிளைப்பிள்ளை பிறக்கும் எங்கள நிம்மதியா விடுங்கோப்பா

சில வேளைகளில் நான் நினைத்து பார்ப்பேன்... நான் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் எமது மக்கள் இருக்கும் சூழலில் அடுத்த நிலை என்ன எண்று தெரியாத சூழலில், உழைப்பு ஊதியம் எண்று ஒண்றும் இல்லாத ஒரு சூழலில் , உணவில் இருந்து எல்லாவற்றிக்கும் மற்றவரின் கையேந்தும் நிலை எனக்கு வந்தால் அப்படி காலம் எவ்வளவு போகும் எண்று தெரியாமல் வாழும் நிலை வந்தால் ...

என்னை அறியாமல் போய் என் பிள்ளையில் ஒண்றை இறுக்கி கட்டிபிடிச்சிடுறனான்...

நினைச்சு பார்க்கவே சுமையாக இருக்கு... வாழ்வது... ??

இங்கை சிலர் மனிதனுக்கு உயிர் மட்டும் இருந்தால் போதும் எனும் தொனியில் தான் பேசுகிறவர்கள்... அவர்களுக்கு எங்கை புரிய போகிறது, மானத்தின் அருமையும், இழி நிலையில் வலியும்...??

:unsure::blink::lol:

வாசிக்கும் போது மனசு என்னவோ செய்யுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வயதுக்கு கீழே இதை வாசிக்காதவனும் பேயன் (மாக்ஸீய கொள்கைகளை பிடிக்காதவன்), முப்பதுக்கு மேலே இதை வாசிப்பவனும் பேயன் (மாக்ஸீயம் கதைத்துக் கொண்டு திரிபவன்) ..."

உண்மை. எனக்கு 28 வயதிற்குப் பிறகு வாசிக்கக் கூடாது என்ற அறிவுரை 30 வயதைத் தாண்டிய மார்க்கசியவாதியால் சொல்லப்பட்டது! அப்போதே சித்தாந்தங்களை வாசிப்பதை விட்டுவிட்டேன் :lol:

கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல்

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் இனப்படுகொலையை நியாப்படுத்தும் மானம், ரோஷம், சூடு, சொரணை கெட்ட கூட்டத்தினரிடம் இருந்து வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் சீனா கான செந்தில்வேல் அவர்கட்கு, நான் புலம்பெயர்தேசம்வந்து (அப்படியொனறும் ஆகக்குறைந்தது, பிற்காலத்தில் தெருவில் போற பெண்டுகளிட்டை சங்கிலி தாலிக்கொடியெண்டு அறுத்து அதகளப் படுத்தினார்களே அப்படியான இசக்கங்களிலிலகூட எடுபிடியாகக்கூட இருந்ததில்லை) ஏதோ இண்டைக்கு நல்லாயிருக்கிறன் அங்க செத்தீச்சினமே அவர்களது பெயர்களைச் சொல்லி அசைலம் அடிச்சு, அதுகளெல்லாம் உமக்குத் தரமுடியாது, சும்மா ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு மூலையில இருந்திட்டுப் போ எண்டு மனிதாபிமானத்தில இங்கை என்னை இருக்க விட்டிருக்கினம். அப்படியிருந்தும் நான் நாலுபேருக்கு அதுவும் பிறத்தியாருக்கு இல்லாட்டிலும் சாதிசனம், சொந்தபந்தம் என கனக்கப்பேருக்க இல்லாட்டிலும் "பொரிகடலையோட திருவாரூர்" எண்டகணக்கா ஏதோ ஆருக்காவது உதவி ஒத்தாசையாக இருந்ததுமில்லாமல், ஒரு பெண்ணுக்கு வாழ்கை கொடுத்து, அதன்மூலம் தமிழ் சந்ததியைப் பெருக்கி (இதில ஒரு வசதி என்னவெண்டா பிள்ளையளைச்சாட்டி ஒரு தொகை வரும் அதுக்காகவேனும் சந்ததியைப் பெருக்கவேணும்) ஏதோ பூமிக்குப் பாரமா இருக்கிறன். அதுசரி இந்தக் கம்யூனிசியம், மாக்சிஸம் எண்டு பேசி உம்மால் யாருக்காவது உமது வாழநாளில உருப்படியாக ஏதாவது சாதித்தனீரே? சரி விடுங்கோ உமக்கும் ஒரு குடும்பம் இருக்குதுதானே அப்ப உம்மட பொண்டாட்டியாவது நீர் சொல்லுற இந்த சித்தாந்தங்களைக் காதில வாங்கிறவவே ஆகமொத்தம் உமது சுற்றவட்டாரத்திலேயோ எந்தவித மாற்றங்களையும் உமது சித்தாந்தங்களால கொண்டுவர முடியாமல் இருக்கேக்க எதுக்கையா எங்கட தலையில கொண்டுவந்து உங்கட சித்தாந்தங்களை கொட்டுறியள்? அண்ணர் உங்கட கொப்பரானச் சொல்லுறன் உனக்கு இன்னமும் நாலைஞ்சு ஆம்பிளைப்பிள்ளை பிறக்கும் எங்கள நிம்மதியா விடுங்கோப்பா

சத்தியமா சிரிச்சு வயிறு வலிக்குது ரகு அண்ணா.

:wub::unsure::wub:

வாசிக்கும் போது மனசு என்னவோ செய்யுது :)

எனது நண்பர் ஒருவர்... யாழ் பல்கலைக்களகத்தில் பட்டம் பெற்ற ஒருவன் ஒரு பிள்ளையின் தந்தை... வன்னியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவன்... மே 19 இடம் பெயர்ந்து வந்து இருந்த முகாமில் வசித்து வந்தாலும் அங்கு இருக்கும் பிள்ளைகளை எல்லாம் அழைத்து அங்கு வைத்து கல்வி ஊட்டி வந்தவன்... வந்து சில நாட்களில் தனது குடிசைக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் ஒரு இரவு சுருக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்...

அவன் இருந்த இடத்தில் என்னை வைத்து பார்க்கிறேன்...

Edited by தயா

குதர்க்கம், குசும்பு, கும்மாளம்.....இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே..

உந்த ஆளையும் அப்பவே போட்டிருக்க வேண்டும்.மிஸ் பண்ணிவிட்டம்.

உந்த ஆளையும் அப்பவே போட்டிருக்க வேண்டும்.மிஸ் பண்ணிவிட்டம்.

அர்ஜுன், எங்கே, எதை, எப்படி நீங்கள் எழுதினாலும் ... போடுகிறது ... உந்த சொல் உங்களோடு கூட வந்து விடுகிறது!!!!!!!!!! ... பழக்க தோஷமோ??????? :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.