Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

...... "பிரபாகரனை தேடுகிறேன்" .......

Featured Replies

pirabaharan.png

... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? ....

... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அனேகருக்கு அவரின் குடும்பத்துக்கு நேர்ந்த அவலங்கள் தெரிந்திருந்தது... அவர், யாழில் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் ஒரே ஒரு சகோதரியின் குடும்பமும் வன்னியில் வர்த்தகம்/விவசாயம் என வசதியாக இருந்தார்கள். அவர்களுக்கு மூன்று மகன்கள்! மூத்தவனும் புலிகளில் விரும்பி இணைந்து மண்ணுக்குள் மண்ணாகி சென்று விட்டான்! அடுத்த இருவரும் இறுதிக்கால கட்டாய இராணுவ சேவைக்கு இணைக்கப்பட்டு காணாமல் போய் விட்டனரோ அல்லது அவர்களும் மண்ணுக்குள் மண்ணாகி விட்டனரோ தெரியாத நிலை இன்றுவரை!! சகோதரியின் கணவரோ இறுதிக்காலங்களில் தொண்டு அமைப்புகளில் பணியாற்றியவர், அவரும், அவருடைய மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டு இனம் புரியாத இடத்தில்??? ... வசதியான குடும்பம் சின்னா பின்னமாகி அழித்து விட்டது!!! ... அச்சகோதரரின் கோபத்தில் குறைகாண முடியாத நிலையில் அன்று, அங்கிருந்தோர் ....

(இப்படி பல பல கதைகள் எம்மில் பலரைக் குழப்பியது!!! அதற்கு மேல் ஓர் குருவியொன்று சிறுகச்சிறுக கூட்டொன்றை கட்டிய பின் அக்கூடு சில வினாடிகளில் பிரித்தெறிந்த வேதனை எல்லாம் விரக்தி, கோபங்களின் உச்சமாக புலிகள் மேல் அக்காலங்களில் பாய்ந்தன)

அடுத்தடுத்த நாட்களில்.... அருகில் பி.ரி.எப் ஒரு கலந்துரையாடலை செய்தார்கள், எனக்கு அன்று காலை ... முன்னால் போராளியும், இடைநாள் புலனாய்வுத்துறை உறுப்பினரும், தற்போதைய கேபி ஒட்டுக்குழுவின் லண்டன் செயலாளர் .. இடமிருந்து தொலைபேசி அழைப்பு, ... இவங்கள் மீண்டும் காசுக்கு வெளிக்கிடுகிறாங்களடப்பா!!?? விடக்கூடாது!!! வாரும் அங்கு போய் நாலு கேள்வி கேட்டு வருவம்!! ... அக்கூட்டத்துக்கும் சென்று விட்டோம், மூலையில் என் தந்தையும் உட்காந்திருந்ததை பார்த்தேன். கலந்துரையாடலில் கேள்வி நேரம் வர ... கேபியின் செயலாளர், தன்னை முன்னால் புலியென அறிமுகப்படுத்திக் கொண்டு ... கேள்வி மேல் கேள்விகளை தொடுத்தபடி ... இறுதியாக நீங்கள் ராஜபக்ஸவின் கால்களில் போய் விழுங்கோ!! அவன் செய்வான்!! பட்டது போது!! இனியும் வேண்டாம்!! .... எறிந்து கொண்டிருந்தார். எனக்கும் சில கேபியின் தற்போதைய செயலாளரின் வசனங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், கோபம்/விரக்தியில் இவைகள் வெளிப்படுகின்றன என நினைத்தேன். நானும் என் பங்கிற்கு சில கேள்விகள் ... இடை நடுவில் வெளியேறியும் விட்டோம்!!

... என் தந்தையாரை அன்று மாலை போய் பார்த்தபோது ... என்னத்தை கதைத்தீர்கள் அங்கு, முட்டாள்களே? யாரவன் உன்னுடன் வந்தவன்? சரி புலி பிழை பிழை விட்டு விட்டது, அதற்காக சிங்களவனின் காலில் விழுந்தால் அவன் தரவா போகிறான்? ...??? ... என் தந்தையின் ஆத்திரங்கள் வெளிப்பட்டன, நானோ ஏதோ இரண்டு வரிகளில் புலிகள் விட்ட தவறுகளை கூறி விட்டு முடித்தேன்.

... இதே சமயம் ... மாற்றுக்கருத்து மாணிக்கங்கள், கூட்டமைப்பு என்பன சுவிஸில் கூடுகிறார்கள் .... பலத்த எதிர்பார்ப்பு!!! இனியாவது இவர்கள் கடந்த காலங்களைப் போல அன்றி சரியான அரசியல் நடத்தப் போகிறார்கள்!!!!! ... இதுவரை காலமும் புலிகளின் பயத்தினால்தான் சிங்களத்துடன் சேர்ந்திருந்தார்கள்!!!!! எம்ம்மக்களின் அவலங்களை பார்க்க முடியாமல், கடந்த காலங்கள் போலல்லாது இனி ஒற்றுமையாக செயற்படப் போகிறார்கள்!!!!!! அங்குள்ள மக்களுக்கு ஒரு பாதுக்காப்புடன் நிம்மதியாக வாழவதற்கு, ஓர் அரசியல் தீர்வு அவசியம், அதற்காக செயற்படப்போகிறார்கள்!!!!! .... பல பல நம்பிக்கைகள் பலருக்கு புலத்தில், என்னையும் சேர்த்து ... ஏதோ குருட்டு நம்பிக்கை என்பதோ, அது!!

... வந்தார்கள், ஆனால் கூடுவதற்கு முன்னமே ... அங்கு சிங்களத்தின் சிம்மாசனத்தில் அமைச்சராக இருப்பவர், தனக்கு இட்ட கட்டளையை செம்மையாக செய்து, இச்சந்திப்பை செல்லாக்காசாக்கி விட்டு சென்றார்!!! ... அங்கு வந்த மற்றவர்களும் ஏதும் விபரீதமாக கேட்டு/கதைத்தால் மீண்டும் சிறிலங்கா செல்ல முடியாது என்பதால் ... அவர்களும் தங்கள் பங்கிற்கு சிங்கள விசுவாச செயற்பாட்டை செய்து முடித்துச் சென்றார்கள்!!

... சென்றவர்களோ ... அங்கு மீண்டும் தமிழ் அரங்கமாம்!!!??? ... என்ன இந்த தமிழ் அரங்கத்தில் "தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள்" என்ற நாடகம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு புறத்தில் தமிழரங்க முக்கிய நடிகர் அமைச்சர்வாழ், சிங்கள பாராளுமன்றில், தமிழர்களுக்கு இருக்கும் எச்ச சொச்ச உரிமை ... மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை ... பிடுங்கும் சிங்கள சட்டமூலத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வாக்களிப்பு!! இன்னொரு புறம் வடகிழக்கில் திட்டமிட்டு சிங்களத்தினால் நடாத்தப்ப்படும் சிங்கள குடியேற்றத்துக்கு முண்டி அடித்து ஆதரவு கொடுப்பது மட்டுமன்றி அச்சிங்களக்குடியேற்றங்களை முன்னின்று/இணைந்து செயற்படுத்துகின்றனர்!! கேட்டால் ... இதில் அரசியல் பேசாதீர்களாம்!! நாம் சிங்கள தேசத்தில் இருக்கவில்லியா? வீடுகள் கட்டவில்லையா?? கோயில்/குளங்கள் கட்டவில்லையா??? என்கிறார்களாம்!!!!! ... ம்ம்ம்ம்... குடியேற்றத்துக்கும்(திட்டமிட்ட அரச ஆதரவு), குடியேறுவதற்கும்(சொந்தப்பணத்தில்) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா???? இவர்கள்!!! ... அரங்கமாம் ... அது தமிழ் மக்களின் 60 வருட காலமாக இழந்த அரசியல் உரிமைகளுக்காகவாம்!!!!!!!!??????????

இன்னொருபுறம் இந்தியாவும் சர்வதேசமும்!!! ... சிங்களத்துடன் இணைந்து 40000 மக்களை கேட்டுக்கேள்வி இல்லாமல், தடயங்களற்று அழித்தனர்!!! ... சரி பயங்கரவாதம் இன்றைய சர்வதேசப்பிரட்சனைதான்!!! புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அழித்து விட்டீர்கள்!! ஆனால் ஈழத்தமிழர்களது வாழ்வுரிமைப்போராட்டம் கடந்த 60 வருடங்களுக்கு மேலானது!! அதில் புலிகளோ மற்றைய ஆயுதம் தாங்கியோரோ 30 வருடங்களுக்கு உட்டபட்டவரே!!! தமிழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டம் சர்வதேச பாஷையில் பயங்கரவாதத்துக்கு முற்பட்டது!!! சரி பயங்கரவாதிகளை அழித்ததும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்க்கூடிய தீர்வை வழங்க சிங்களத்துடன் இணைந்து செயற்படுவீர்கள்!! தீர்வை அவர்கள் வழங்குவார்கள்!! பல எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து விட்டன!!!!!!!.............

,,, ஓரிரு வாரங்களுக்கு முன், என் பெற்றோரின் வீட்டில் தந்தையாருடன் இருந்து தொலைக்காட்சி ஒன்றின் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன், செய்தியில் ........ திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள், மக்கள் அடிப்படை வசதிகளற்று வன்னியில், மக்களை குடியேற சிங்கள இராணுவம் அனுமதி மறுப்பு, குடியேறிய மக்கள் அடித்து விரட்டப்பட்டனர், மீண்டும் காணமல் போகின்றனர், பெண்கள் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்படுகின்றனர், ... தொடர்ந்தது செய்தி ... என் தந்தையார் திரும்பி என்னை பார்த்து ... ஏதோ புலி பிழை! முடிந்துது!! இனி நாம் ஒற்றுமையாக வாழலாம்!!! சிங்களவன் எமக்கு எல்லாம் தருவான்!!! அங்கு நடந்து முடிந்தவைகளை கதைத்து என்ன பலன்!!!! முடிந்ததுகளை கிண்டாதீர்கள், முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைகளே!!!!! எல்லாவாற்றுக்கும் மேலாக தமிழ்த்தேசியம் என்பது பெரிய படிப்பினைக்காக விட்ட சிறிய பிழை!!!!! ...என்று எல்லாம் உன் நண்பன் அன்று கதைத்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டான்!!!!!! இரு வருடங்களுக்கு மேலாகி விட்டது!!!!!!!!!!! என்ன நடந்தது/நடக்கிறது?????? ஏதாவதாவது?????? ... கேட்ட கேள்விக்கு பதில் என்னால் கூற முடியவில்லை, வார்த்தைகள் வரவில்லை!!!!!!!!!!

... ஓரிரு நாட்களில் வந்த வார இறுதி சனியில் .... அதே தமிழ்ப்பாடசலையில், சில பெற்றோர்கள் மீண்டும் நாட்டு நடப்புகளை ... குடியேற்றங்கள் முதல் மக்களின் அவலங்கள் ஈறாக காணாமல் போவதுகள் தொடர்வது வரை .. பேசிக்கொண்டிருக்க, அங்கு அப்போது, அதே பாடசாலையின் தலைவர் அவர்களுடன் நின்று கொண்டிருந்தார்! ... அவலங்கள், அழித்தொழிப்புகள் திட்டமிட்டு சிங்களத்தினால் நடாத்தப்படுகின்றன. கேட்பார் இல்லை! தடுப்பார் இல்லை!! சிங்களவனும் நிறுத்துவதாக இல்லை!!! தொடர்கதையாக அவலங்கள் 60 வருடங்களைக் கடந்து ... என்ன செய்வது, என்ன செய்யலாம் ... விடையற்று நீண்ட நிசப்பதம் ... பதிலில்லாமல்!! .... அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அப்பாடசாலையின் தலைவரின் வாய்களிலிருந்து, நீண்டகாலமாக வார்த்தைகளே பேசாத அவர் ... இதனால்தான் மீண்டும், நானும் பிரபாகரனை தேடுகிறேன் ......... அவனற்ற வெற்றிடத்தால், எம் அடையாளத்தை கூட இழக்கின்றோம்/பறித்தெடுக்கின்றான்!... இன்று நாம் அதனை மீண்டும் உணர்கின்றோம் ... அவன் வரவேண்டும், தோன்ற வேண்டும் .... என்று முடித்தார்!!!

... ஆச்சரியத்துக்கு மேல் இதுதான் இன்று தமிழ் மக்கள் தேட முற்பட்டிருப்பது என்று புரிந்தது!!! ... ஓட்டி அற்ற ஓடமாக தத்தளிக்கின்றோம் ... இதுதான் இன்று ஈழத்தமிழினத்தின் யதார்த்த நிலைமை!!! ... எம்மினத்துக்காக மீண்டும் பிரபாகரன் வர வேண்டும்! இல்லையேல் எம்மத்தியில் இருந்து இன்னொரு பிரபாகரனாக தோன்ற வேண்டும்!!!

... நிச்சயமாக ஈழத்தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் எம்முன் தோன்றுவான்! இல்லை எம்மத்தியில் இருந்து தோன்றுவான்!!! ... இந்தப்பிரபாகரனை நாம் விரும்பியோ அன்றி விரும்பாமலோ, ஓயாத சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனவழிப்பும், அடக்குமுறைகளும் தோற்றுவித்தே தீரும்!!! ... அது வரலாறு!!! ... சர்வதேச ஓட்டங்களுக்கும், நெழிவு சுழிவுகளுக்கும் ஏற்ப .. அவன் கற்ற பாடங்களிலிருந்து முன்னோக்கி செல்வான்!! ... கடந்த காலங்களைப் போல் .... எம்மினத்து சூரியனின் ... கைகளை இறுக்க, எம் புலம்பெயர் சமூகம் ... உறுதியுடன் .... பற்றிக்கொள்ளும்.

Edited by Nellaiyan

ஆக்கத்திற்கு நன்றி நெல்லையன். அவர் நிச்சயம் திரும்ப வருவார்.

ஆக்கத்திற்கும், இன்றைய யதார்த்தத்தை, உண்மையான மனிதர்களை வைத்து தத்ரூபமாக எழுதியதிற்கும் நன்றிகள்.

அவர் வரும்வரை நாம் போராளிகளாக இல்லாவிடினும் ஒரு நாட்டுப்பற்றாளனாக, தேசியத்தை வலுப்படுத்தி, அதற்கு உரமாக

வாழ்வோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான தலைவன் ஆயிரம் யானைகள் பலத்துடன் எம்மிலிருந்து மீண்டெழுந்து வருவான். தமிழர் பெருவெள்ளமே அவன் பார்வைபடியும் எட்டுத்திக்கும் நிலையெடுக்கும். ஒவ்வொரு தமிழனின் குருதி அணுக்களும் அவன் கட்டளைக்குக்கீழ்ப்படியும். ஏகடியம் பேசுவோர் ஏமாந்துபோவார். எம்தலைவன் வருவான் வருவான்.

இதுதான் எனது நீண்ட நாள் தேடலும் கூட ... பிரபாகரன்களால் மட்டுமே எதுவும் முடியும் எனும் நிலைதான் எங்களுடையது...

நண்றி நெல்லையன்...

  • கருத்துக்கள உறவுகள்

----------

... நிச்சயமாக ஈழத்தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் எம்முன் தோன்றுவான்! இல்லை எம்மத்தியில் இருந்து தோன்றுவான்!!! ... இந்தப்பிரபாகரனை நாம் விரும்பியோ அன்றி விரும்பாமலோ, ஓயாத சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனவழிப்பும், அடக்குமுறைகளும் தோற்றுவித்தே தீரும்!!! ... அது வரலாறு!!! ... சர்வதேச ஓட்டங்களுக்கும், நெழிவு சுழிவுகளுக்கும் ஏற்ப .. அவன் கற்ற பாடங்களிலிருந்து முன்னோக்கி செல்வான்!! ... கடந்த காலங்களைப் போல் .... எம்மினத்து சூரியனின் ... கைகளை இறுக்க, எம் புலம்பெயர் சமூகம் ... உறுதியுடன் .... பற்றிக்கொள்ளும்.

ஆறுதல் தரும் வரிகள். உங்களின் கட்டுரைக்கு நன்றி நெல்லையன்.

  • கருத்துக்கள உறவுகள்

... ஆச்சரியத்துக்கு மேல் இதுதான் இன்று தமிழ் மக்கள் தேட முற்பட்டிருப்பது என்று புரிந்தது!!! ... ஓட்டி அற்ற ஓடமாக தத்தளிக்கின்றோம் ... இதுதான் இன்று ஈழத்தமிழினத்தின் யதார்த்த நிலைமை!!! ... எம்மினத்துக்காக மீண்டும் பிரபாகரன் வர வேண்டும்! இல்லையேல் எம்மத்தியில் இருந்து இன்னொரு பிரபாகரனாக தோன்ற வேண்டும்!!!

... நிச்சயமாக ஈழத்தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் எம்முன் தோன்றுவான்! இல்லை எம்மத்தியில் இருந்து தோன்றுவான்!!! ... இந்தப்பிரபாகரனை நாம் விரும்பியோ அன்றி விரும்பாமலோ, ஓயாத சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனவழிப்பும், அடக்குமுறைகளும் தோற்றுவித்தே தீரும்!!! ... அது வரலாறு!!! ... சர்வதேச ஓட்டங்களுக்கும், நெழிவு சுழிவுகளுக்கும் ஏற்ப .. அவன் கற்ற பாடங்களிலிருந்து முன்னோக்கி செல்வான்!! ... கடந்த காலங்களைப் போல் .... எம்மினத்து சூரியனின் ... கைகளை இறுக்க, எம் புலம்பெயர் சமூகம் ... உறுதியுடன் .... பற்றிக்கொள்ளும்.

எதிர்பார்த்து வரவேற்கும் அதே வேளையில், அத்தருணத்திலாவது விலைபோகாமல், காட்டிகொடுக்கும் கயமையை விட்டொழித்து, சரியான நண்பர்களை இனங்கண்டு, விழிப்புடனும், ஒற்றுமையுடனும் கரம்பற்றி இலக்கை அடைய வேண்டுமென்பதே அனைவரும் எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா

பட்டறிவே மனிதனுக்கு பாதையை காட்டுகிறது.

நாம் 30 வருடங்களுக்கு முன்பே உணர்ந்தோம். காரணம் பிரபாகரனல்ல. சிங்களம். அது இன்றும் அதுவாகவே இருக்கிறது. எந்த மாற்றங்களையும் அது ஏற்காது விரும்பாது விரும்பவில்லை. எனவே பிரபாகரனின் வருகை தவிர்க்கமுடியாதது.

நானும் ஒன்றைச்சொல்லவேண்டும். எனது சகோதரன் கிளியில் இருக்கிறார். மிகுந்த தேசியவாதி. இயக்க வேறு பாடு எல்லாம் கிடையாது. சிங்களவனுடன் வாழமுடியாது என்பதை 83 அடியுடன் உணர்ந்தவர். முல்லைத்தாக்குதலின் பின் அந்த இடத்தை துப்பரவு செய்வதில் பெரும் பங்காற்றியவர். மூத்தவன் உயர்தரம் படிக்கும்போது வகுப்போடு முழுவதுமாக ஐக்கியமாகி மாவீரன். அடுத்ததையும் பிடித்துக்கொண்டு போய் தனது கண்ணிலேயே காட்டாது மறைத்துவிட்டார்கள் என்பதால் எதிரியானார்

நான் நாட்டுக்கு போனபோது அவருடன் மிகவும் இறுக்கமான நிலை வந்தது. நானே அவரை எனது முக்கிய எதிரி என எண்ணும் அளவுக்கு அவரது செயல்கள் இருந்தன. அதேநேரம் தனக்கு அவர்களால் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அவர்களுடனான எனது செல்வாக்கைக்கூட அவர் பாவித்துக்கொண்டார்

முள்ளிவாய்க்கால்வரை சென்று அகதி முகாம் வந்து இன்று வெளியில் வந்திருக்கும்

அவர் இன்று பிரபாகரனைத்தேடுகிறார். அவர் வருவார் என்று நம்பிக்கையாக சொல்கிறார். அவர் வந்ததும் அவருடன் சேரும் முதல் ஆள் தான்தான் என்கிறார்

இந்த மாற்றத்துக்கு காரணம் பிரபாகரனல்ல. சிங்களம். தேவை இருக்குமேயானால் பிரபாகரன் வருவார்.

இண்டைக்கு எங்களின் தேடல்களை கூட நாங்கள் வெளிப்படையாக சொல்லாததினால் தான் எங்களை போலவே எங்களுடன் இருக்கும் எதிரி தேசியம் பேசிக்கொண்டு எங்களுக்கு எதிராக வேலை செய்கிறான்...

தலைவர் சாவடைந்தாரா எண்று உறுதியாக தெரியாத போது அவர் இல்லை எண்டு எங்களை நம்பும் படி கட்டாயப்படுத்துகிறான்... தமிழர்களுக்கு நன்மை தருவது அடுத்த தலைவர் KP வளி எண்று எங்களுக்கு போதனையும் தருகிறான்...

Edited by தயா

யதார்த்தமான ஒரு பதிவு. காலத்தே பயிர் செய்ய தவறி விட்டோம்.

சிங்கள இனவாதத்தின் நடவடிக்கை 30 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பல பிரபாகரன்களின் தேவையை உணர்த்தி நிற்கின்றது. சிங்களம் தனது நோக்கத்தை மிக சாதூரியமாகவும் துரிதமாகவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இனி ஒரு ஆயுத போராட்டத்தை சந்திக்க தாயக மக்கள் தயாராக இல்லை. அதற்குரிய திராணியும் அவர்களுக்கு இல்லை.

தமிழ் இனத்தின் விடுதலை நோக்கி கிட்டத்தட்ட 27 இயக்கங்கள் சமாந்தரமாக, செங்குத்தாக, 30 பாகை நோக்கி, ................... பயனித்ததன் பலனை இன்று அனுபக்கிறோம். புலம்பெயர்ந்த நாங்களோ எம்மினம் இன்றுள்ள இழி நிலையிலும் கூட ஒற்றுமைப்பட மறுக்கிறோம். மீண்டும் ஒரு பிரபாகரன் தோன்றினாலும், அவனுக்கும் உள்குத்து கொடுத்து நோகப்பண்ணும் மனநிலையில்தான் உள்ளோம். விட்ட தவறுகளை உணர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோமானால் நன்மைகள் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நெல்லையன் அண்ணா,

இப்படியான ஆக்கபூர்வமான எழுத்துக்கள் தான் கொஞ்சம் தன்னும் நிம்மதியைத்தருகிறது.

அந்த பிரபாகரனின் இருப்பின் சந்தேகத்தின் மத்தியில் எம்மிலிருந்து ஒன்றல்ல ஓராயிரம் பிரபாகரன்கள் வரவேண்டும். அந்த நாளுக்காய் காத்திருப்போம் அவர் தம் விடுதலை வேட்கையைச் சுமந்தவாறே.

(உங்களுக்கு ஒரு பச்சை)

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் 30 வருடங்களாக போராடிய போது நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்று தேடுகிறோம். இன்னுமொரு பிரபாகரனின் தோற்றம் தவிர்க்க முடியாதது.இம்முறையாவது நாம் பேதங்களை மறந்து ஒன்றாக செயற்படுவோம்.நன்றி நெல்லையன். goodpost.gif

  • தொடங்கியவர்

... மீண்டும்? புலத்தில் இருந்து கொண்டு? குடும்பமும் பாதுகாப்பாக? கற்பனையில்? உங்கள் கனவுகளுக்கு பலிக்கடாக்களா? உங்கள் மானப்பிரட்சனைக்காக அழிக்கப்போகிறார்கள்? பட்டது போதாதா? நடைமுறை சாத்தியம்? .... ஆயிரம் கேள்விகள் வரும்! ... ஆச்சரியப்படுவதற்கில்லை! நானும் மே 18 இலிருந்து உதே கேள்விகள், கொக்கரிப்புகள், சந்தங்கள் போட்டு போட்டு ... தேடலில் ... இன்று மீண்டும் "பிரபாகரனை தேடுகிறேன்"!!!!!!

மே 18 இலிருந்து .. புலிகளின் இடத்தை யாராவது நிரபுவார்களா? அது டக்லசாக இருக்கலாம் இல்லை வரதராஜபெருமாள் ஆக இருக்கட்டும் ... மக்களுக்காக முன் வந்து செயற்பட வந்திருந்தால் ... பின்னே வந்திருப்போம்!!!! ... நடந்ததா??????

அதற்கு மேல் கடந்த காலங்களில் புலி எதிர்ப்பு செய்த புலத்து மாற்றுக்கருத்து திலகங்களாவது வெளிவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு!!! ... பலர், நான் உட்பட ... எமக்கு தெரிந்த/அறிந்த புலத்து மாற்றுக்கருத்து மாமணிகளை அணுகி ... முன் வாருங்கள் ... என்ற கோரிக்கை விட்டோம்!!!!! ... அவர்களோ புலி அழிப்புடன் தம் கடமை முடிந்ததென்ற நிம்மதியில்!!!!!!!!!!!!!!!! ... இன்று சிலர்(படங்களும் பார்த்தேன்), முள்ளிவாய்க்கால் வரை சிங்கள பாதுகாப்புடன் சென்று படமெடுத்து, தமிழின அழிப்புகளை கொண்டாடுகிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

... பிரபாகரனின் வரவு/தோற்றம் .... ஒரு வரலாற்றுத்தேவை!!!!!!!!

.... மேலெழுதியவைகளை மிக விரிவாக எழுத வேண்டும் என்று சில நாட்களாக!! ... நேரமும் வரவில்லை, என்னால் முடியுமா என்ற கேள்வியும்??? இறுதியாக நேற்று 2 மணியளவில் ... ஏதோ கிறுக்கி முடித்தேன்!!! ... அவனது நினைவாக!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் இரண்டில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் ஒரே நேரத்தில் காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்து முடித்து விட்டு பலநாளாய் பார்க்கவென வாங்கியிருந்த "300" திரைப்படத்தையும் பார்த்து முடித்தேன்..

300 திரைப்படத்தில் இருந்து...

-------------------------------------------

King Leonidas: Spartans! Prepare for glory!

Daxos: Glory? Have you gone mad? There is no glory to be had now! Only retreat, or surrender or death!

King Leonidas: Well, that's an easy choice for us, Arcadian! Spartans never retreat! Spartans never surrender! Go spread the word. Let every Greek assembled know the truth of this. Let each among them search his own soul. And while you're at it, search your own.

------------------------------------------

Dilios: "Remember us." As simple an order as a king can give. "Remember why we died." For he did not wish tribute, nor song, nor monuments nor poems of war and valor. His wish was simple. "Remember us," he said to me. That was his hope, should any free soul come across that place, in all the countless centuries yet to be. May all our voices whisper to you from the ageless stones, "Go tell the Spartans, passerby, that here by Spartan law, we lie."

-----------------------------------------

Edited by கிருபன்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

நன்றி அர்ச்சுன்.வரவேற்கக்கூடிய கருத்து.கையோடு ஒரு பச்சையும்.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்ததுடன் தந்த நெல்லையனின் பதிவு நன்று.

நாமும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் தலைவர் வருகைக்காய்.

  • தொடங்கியவர்

நன்றிகள் அர்ஜுன், ... நிச்சய்யமாக காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும், அதில் எவ்வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை, இல்லையேல் எம்மை புதைகுழியில் தற்போதே புதைக்க நாமே வித்திடுகிறோம்!!

... ஆனால் .... எம் தேடல் ...

.... ஆயுதக்கனவோ அல்லது இரத்தவெறி தீர்க்கும் கனவோ அல்ல .... மாறாக ... நட்டாற்றில் தத்தளிக்கும் ஓடத்துக்கு ஓர் ஓட்டி ... சிதைத்து போயிருக்கும் எம்மினத்துக்கு ஓர் தலைவன்!!! எமை திசை வழி கொண்டு செல்ல ஓர் உன்னத தலைவன்!!! ..... தேடுகிறோம்!!!!!!!!!! ... நிச்சயம் ஓர் நாள் கிடைக்கும்!!! ... அது இன்னொரு நெருப்பாற்றில் நீந்தக்கூடிய பிரபாகரனாக இருக்கட்டும்!!! ... கடந்து வந்த பாதைகள், அவனால், எம்மை மறுகரை ஏற்ற வைக்கும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் வந்து எமக்கு மீட்சிதருவார் என்ற நம்பிக்கையில் தான் இன்றும் எம் இனம்.

மீண்டும் நீங்கள் இங்கிருந்து காசை கொடுக்க அங்கிருந்து உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்க யாரையோ தேடுகின்றோம்.

மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு அத்திவாரம் இடுகின்றது உங்கள் சிந்தனை.

சிங்களவன் ஒன்றும் தர மாட்டான் அதற்கு பழி வாங்கவே தமிழன் விரும்புகின்றானே ஒழிய தீர்வு ஒன்றை தேட அவன் விரும்பவில்லை.

தமிழீழம் தான் தீர்வு என்றாலும் அதை அடைய நாங்கள் தான் போராட வேண்டும்.இன்று நாடு இருக்கும் நிலையில் யாரும் இப்போது ஒன்றும் செய்யமுடியாது.போராட்டம் மீண்டும் உருவாகும் அதற்கான நேரமும் காலமும் உருவாகும் போது.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும் முடிந்த கதை .சிங்களத்திற்கு இவர்களெல்லாம் பல்லு புடிங்கிய பாம்புகள்.இவர்கள் தமிழினத்திற்கு ஏதும் செய்வார்களென நினைப்பதே உங்கள் அறியாமை.அவர்கள் தாங்கள் தப்பவே வழிதெரியாமல் நிற்கின்றார்கள்.

சுடுகுது மடியை பிடியென்றால் காரியம் ஆகாது.மீண்டும் ஒரு சந்தர்பம் வரும் அது எப்படியும் உருவாகலாம்.அக புற காரணிகளே அதை தீர்மானிக்கின்றன.இனி வரும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்தவேண்டும்.

அதற்கு தான் நாம் இப்போதே ஒரு சிறந்த கட்டமைப்பை புலம்,புலம் பெயர் சமூகத்தில் உருவாக்க அடித்தளம் இடவேண்டும்.

அது இப்போது இருக்கும் எந்த அமைப்பும் சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஏனெனில் இப்போதுஇருக்கும் ஒரு அமைப்பும் தூய்மையானதாகவோ,நேர்மையானவையாகவோ இல்லைஇருந்த பேரை வைத்து கொஞ்சக்காலம் தாமும் ஏதும் செய்யலாம் என பகீரத பிராயத்தனம் எடுக்கின்றன.

மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்றவர்களாக இருந்தால் தேவை வரும் வரை காத்திருப்பது தான் நல்லது.

அர்ஜுன், பொறுமையாக உங்கள் நல்ல கருத்தை தெரிவித்ததற்கு பாரட்டுக்களுடன், ஒரு பச்சையும் குத்தியுள்ளேன். :lol:

"பிரபாகரனை தேடுதல்" என்பது ஒரு தனித்தலைவனை குறிப்பிடுவது அல்ல.

தனது சமூகத்துக்கு நீதியையும் நியாயத்தையும் மனித உரிமைகளையும் பெற்றுத்தரக்கூடிய, வழிநடத்தக்கூடிய ஆற்றல் தன்மையையே குறியிடுவதாக தெரிகின்றது.

"இன்னொரு பிரபாகரன் வருதல்" என்பது ஒரு ஆயுத போராட்டத்தையோ அல்லது அழிவையோ தமிழ் சமூகம் விரும்புவதாக அமையாது. அகிம்சை வழி மூலம் ஒரு காந்தியே வந்து தமிழருக்கு உரிமை எடுத்துதந்தால் அவரும் ஒரு பிரபாகரனே.

நாமும் சிலகேக்கியா மாதிரி செக் நாட்டிலிருந்தோ இல்லை சிங்கப்பூர் போல மலேசியாவில் இருந்தோ பிரிந்து போகலாம் அதற்கு சிங்களம் தான் இடம்கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

-------

நாமும் சிலகேக்கியா மாதிரி செக் நாட்டிலிருந்தோ இல்லை சிங்கப்பூர் போல மலேசியாவில் இருந்தோ பிரிந்து போகலாம் அதற்கு சிங்களம் தான் இடம்கொடுக்கவில்லை.

தானும் கெட்டு, மற்றவனையும் கெட வைப்பது தான் சிங்களவன்.

ஆனால், சிங்களவனிடம் ஒற்றுமை உள்ளது.

எம்மிடம் காலம் காலமாக ஒட்டுக் குழுக்கள் உள்ளது.

இந்த, நாதாரியளாலை தான் இவ்வளவு பிரச்சினையும்.

டக்கிளசும்,வரதரும்,சித்தாத்தரும்,சம்பந்தரும், சங்கரியாரும் சனநாயகம் என்ற கருவியை அதன் பின்னால் உள்ள பலத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள். இவர்கள் "பல்லு புடிங்கிய பாம்புகள்" அல்ல, பல்லிருந்தும் அதை பயன்படுத்த தெரியாத பாம்புகள்.

சிங்களவன் தான் ஒரு "மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி" என்ற அதிகாரத்துடன் தான் உலகத்தில் பார்க்கப்படுகின்றான். அதே மக்கள் பிரதிநிதிகளான தமிழர்கள் தமது மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தமது மக்களுக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை பொருளாதார உரிமையை; ஐக்கிய நாடுகளின் வரையறைகளுக்கு இணங்க, சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய அதே உலகிற்கு சரியான முறையில் இராசதந்திர ரீதியில் முன்னெடுக்க தெரியாதவர்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

.

தானும்.... படுக்காது, தள்ளியும் படுக்காத, வைக்கல் பட்டடை நாய்கள் தான்.... இதுகள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.