Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ரமேஷ் ராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10,000 க்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகளும் 40,000 மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடையக் கேட்டவர்கள் எல்லோரும் மெளனமாக இருக்கின்றனர். சொல்கைம் எங்கோ ஓடி மறைந்துவிட்டார்.. வாயே திறப்பதில்லை.

நம்பி மோசம்போனதே தவிர வேறொன்றும் இங்கில்லை?

arjun

Posted Yesterday, 02:24 PM

இவர்களை கொன்றது சிங்களம் அல்ல நாமேதான்

arjun உங்களுக்கும்...............

நம்பி மோசம்போனதே தவிர வேறொன்றும் இங்கில்லை?

Edited by குமாரசாமி

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரிவின் பின்னர் வாகரை ஊடான படையெடுப்புக்கு தலைமை தாங்கிய ஒரு தளபதியை இந்நிலையில் பார்க்க வேதனையாக இருக்கின்றது.

எனக்கு மட்டுமல்ல பலருக்கும் எழும் கேள்வி இதுதான். பல களமுனைகள் கண்ட தளபதி ஏன் இவ்வாறு சரணடைந்தார்?

அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், போராளிகள் சரணடைந்தது வேறு. இவர் ஒரு இராணுவத் தளபதி மட்டுமல்லாது உயர்மட்டத்தில் இருக்கக்கூடியவரும் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதியும் கூட. கருணா பிரிவின் பின்னர் பல களையெடுப்புக்களை மட்டக்களப்பில் மேற்கொண்டவரும் கூட.

எனக்கு என்னவோ போகிற போக்கைப் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டதாக பலர் தரப்பில் வெளிவந்த தகவலும் இவ்வாறான காணொளி (வீடியோ) ஊடாக வெளிவந்தால் புலத் தமிழர்கள் அப்போது அதனை வீடியோ கிராபிக்ஸ் என்று கூறாமல் இருந்தால் சரி. (இங்கே கே.பி. தனது தலைவர் சரணடைந்து சாகவில்லை என்று உறுதிபட பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)

Edited by nirmalan

கேணல் ரமேஷ் ராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழ்நெட்டில் குறிப்பிட்ட காணொளிச் செய்தியில் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படவில்லையே. கொல்லப்பட்டார் என்பது உங்கள் ஊகமா அல்லது ஆதாரம் ஏதும் உள்ளதா?

எனக்கு என்னவோ போகிற போக்கைப் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டதாக பலர் தரப்பில் வெளிவந்த தகவலும் இவ்வாறான காணொளி (வீடியோ) ஊடாக வெளிவந்தால் புலத் தமிழர்கள் அப்போது அதனை வீடியோ கிராபிக்ஸ் என்று கூறாமல் இருந்தால் சரி. (இங்கே கே.பி. தனது தலைவர் சரணடைந்து சாகவில்லை என்று உறுதிபட பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)

நம்மவர்களிடம் உணர்வும், ஊகங்களும் தாராளமாக உள்ளன. ஆனால், சிறீ லங்கா அரச தரப்பிடம் நம்மவரிடம் சிக்காத பலப்பல ஆதாரங்கள் உள்ளன. அதாவது, துரும்புச் சீட்டு சிறீ லங்கா அரசிடம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டில் குறிப்பிட்ட காணொளிச் செய்தியில் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படவில்லையே. கொல்லப்பட்டார் என்பது உங்கள் ஊகமா அல்லது ஆதாரம் ஏதும் உள்ளதா?

போரிலே நடேசன், புலித்தேவன், ரமேஸ் கொல்லப்பட்டார்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால் மேலே உள்ள காணொளியில் ரமேசினை இராணுவம் விசாரிப்பதைக் காணலாம். இதை வைத்துத் தான் ரமேஸ் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார்

கந்தப்ஸ், தமிழ்நெட்டில் இவ்வாறு உள்ளது:

Earlier, there have been reports confusing Tamil Eelam Police Chief Ramesh, who went together with LTTE Political Head B. Nadesan and the Deputy Director of LTTE Peace Secretariat S. Puleedevan with LTTE military commander Ramesh.

சிறீ லங்கா அரசு கொல்லப்பட்டவர் தளபதி ரமேஷ் என்று குறிப்பிட்டு கூறியதா அல்லது காவல்துறை ரமேஷ் அவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்ஸ், தமிழ்நெட்டில் இவ்வாறு உள்ளது:

சிறீ லங்கா அரசு கொல்லப்பட்டவர் தளபதி ரமேஷ் என்று குறிப்பிட்டு கூறியதா அல்லது காவல்துறை ரமேஷ் அவர்களா?

தமிழ் நெற்றைப் பார்த்தபின்பு எனக்கு இப்ப குழப்பமாக இருக்கிறது.

தமிழ்நெட் செய்தி காவல்துறை ரமேஷ் என்று கூறுகிறது.

நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட பின்னர் அவர்களது உடலை செய்தியில் காட்டினார்கள். தளபதி ரமேசினுடைய உடலை காட்டியது சரியாக ஞாபகமில்லை. இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.

அவரது உடலை காட்டியிருந்தால் சரணடைந்த பின் விசாரித்துவிட்டு குறுகிய நேரத்தில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனை போட்டிருக்கும் உடை, வளர்ந்திருக்கும் தாடியின் அளவை வைத்தே கண்ண்டுபிடிக்கலாமே. இந்த வீடியோ போர்க்குற்ற விசாரணைக்கு உதவக் கூடியதாக இருக்கும்.

Edited by thappili

இவ்வளவுக்கும் காரணம் கரூநாநிதியும் ,வட இந்தியனும்.

கருநாநிதியை விடக்கூடாது,

காட்டி கொடுத்த கயவன்.

இல்லையேல் இப்படி ஒரு அவலம் வந்திராது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தமிழ்நெட் யாரையும் எதையும் குழப்பவில்லை, சரியாக வாசித்துப் பாருங்கள். கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ் அண்ணா சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கிறார் என்றுதான் எழுதியிருக்கிறது. ஆனால் முன்னர் வெளிவந்த செய்திகளில் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சென்று சரணடைந்தவர்களின் இருந்த தமிழீழக் காவல்த்துறைப் பொறுப்பாளாரான ரமேஷ் அவர்களையும் ராணுவத்தளபதி ரமேஷ் அண்ணாவையும் ஒரே ஆட்கள் என்று கருதியதால் சரணடைந்தவர்கள் கொல்லப்பட ராணுவத்தளபதி ரமேஷும் கொல்லப்பட்டார் என்று தவறான செய்தியை வெளியிட்டன.

உண்மையில் இறந்தவர் காவல்த்துறைப் பொறுப்பாளர் ரமேஷ் தான். மேலே உள்ள ஒளி நாடாவிலிருப்பவர் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ். ஆனால் இப்போது இவரும் இருக்கிறாரா அல்லது கொல்லப்பட்டு விட்டாரா என்பது யாருக்கும் தெரியாது.

கேணல் ரமேஸ் அண்ணா அவர்கள் சரணடைந்ததுதான் உண்மை அவர் நடேசண்ணா ஆட்களுக்கு முன்பு சரண்டைந்தார். இந்தியா, இலண்டன், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளோரிடம் உறுதிபடுத்திவிட்டு இவர்கள் சரண்டைந்தார்கள். அதாவது நீங்கள் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தால் நீங்கள் மட்டுமல்ல போராளிகளும் காப்பாற்றப்படுவார்கள் என அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன்படி முதலாவதாக ரமேஸ் அண்ணரை போகுமாறு நடேசண்ணார் கூறி இருக்கின்றார். இதனை நடேசண்ணரே உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

அதன் பின்பு இராணுவத்தினர் ரமேஸ் வந்தது மாதிரி நீங்களும் வாருங்கள் என கூறவே பின்னர் நடேசண்ணர் புலித்தேவன் ஆகியோர் சென்றனர். புலித்தேவன் பசில் இராஜபக்‌ஷவோடு தொடர்பில் இருந்ததை ( சரண்டைவது தொடர்பான பேச்சுவார்த்தையில்) 16 ஆம் திகதி காலை ஐரோப்பாவில் இருக்கும் ஒருவருக்கு கூறியுள்ளார்.

நடேசண்ணா.. போனபின்பு சற்று நேரம் கழித்து துப்பாக்கி சத்தங்கள் கேட்கவே எனைய போராளிகள் பின் நோக்கி ஓடிவந்துள்ளனர். அதன் பின்னர் ...எல்லோருக்கும் தெரியும்.

கேணல் ரமேஸ் அண்ணரின் குடும்பம் வெளி நாடொன்றில் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களிடம் ஐ. நா அதிகாரிகள் தொடர்பு கொண்டும் உள்ளனர். ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

கேணல் ரமேஸ் அண்ணர், நடேசண்ணர் உட்பட அரசியல் துறை மற்றும் நிர்வாகங்களில் இருந்தவர்கள் ஒன்றாக சரண்டைவதற்கு தயாராகவே இருந்தனர் ... படையணிகளில் உள்ள சில திருமாணவர்களை விரும்பியவர்களை போகுமாறு தலைவர் கூறியதாக முக்கிய போராளி ஒருவர் கூறினார். இதனை நான் பல இடங்களில் உறுதிப்படுத்தியுள்ளேன்.

ஆனால் ..

தலைவர் மட்டும் நான் ஒருவரின் சொல்லையும் நம்பமாட்டேன் இறுதிவரை சண்டை பிடிப்பேன் சனங்களை எப்படியாவது யாராவது வெளி நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் இறுதிவரை காத்திருந்தார்.

இறுதியில் பொட்டம்மான், சூசை அண்ணர், தலைவர் ஆகியோர் மட்டுமே இறுதிவரை போராடி முடிந்தால் உடைப்போம் இல்லையேல் மடிவோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கவில்லை.

தலைவர் தனித்து தனது படையணியான இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு மற்றும் மெய்ப்பாதுகாவலர் அணியுடன் நின்றார். மூன்று பிரிவாக இறுதியில் சண்டையிட்டனர்.

அதில் ஒருபகுதிக்கு ......... மாஸ்ரரும் அடுத்த பகுதிக்கு............. ஜி அண்ணரும் மூன்றாவது அணிக்கு கரும்புலிகளுடன், தலைவரும் சண்டையினை வழி நடாத்தினார்கள் இந்த சண்டைதான் இறுதி சமர் இது 17 ஆம் திகதி விடியப்புறத்தில் இருந்து 19 ஆம் திகதி அதிகாலைவரை உள்ளும் புறமும் தொடர்ந்தது.

இந்த சண்டைக்கு முன்பாக 16 ஆம் திகதி ஓர் உடைப்பு நடந்தது. அதற்கு புத்துகுடியிருப்பில் இருந்து முள்ளியவளைக்கு போகும் கேப்பா பிலவு ரோட்டில் ஓர் பொக்ஸ் அடிக்கப்பட்டது இது லக்ஸ்மன் அண்ணர் தலைமையில் இடம்பெற்றது. பின்னால் இம்ரான் படையணி ஊடறுப்பினை செய்தது ஆனால் .... பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. சிலர் தப்பிபோயுள்ளனர்.

ஆகவே இறுதி சமர் நடந்ததும் உண்மை அதில் இராணுவத்தின் இரண்டு கொம்பனிகளுக்கு முற்றாக உயிர் சேதம் ஏற்பட்டதும் உண்மை.

17 ஆம் திகதி உடைத்த அணிகளினுள் கரும்புலிகள் முற்றாக பங்குபற்றினர். இந்த சண்டையில் எல்லோரும் பச்சை மற்றும் கறுப்பு நிற சீருடைகள் அணிந்து இருந்தனர். எவரும் வரி போட்டிருக்கவில்லை தலைவர் உட்பட. அத்துடன் முக்கியமானவர்கள் வெடிமருந்து ஜாக்கட் கட்டி இருந்தனர்.

இறுதிசமர் வரலாறு காணாத சமர் அதில் கூடுதலானோர் வீரச்சாவடைந்தனர். சிலர் தப்பியும் சென்றுள்ளனர். ஆனால் யார் யார் எப்படி என்ன ஆனது என்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் அப்பால்..

அவர்கள் வரும்வரை நாங்கள் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா பிரிவின் பின்னர் வாகரை ஊடான படையெடுப்புக்கு தலைமை தாங்கிய ஒரு தளபதியை இந்நிலையில் பார்க்க வேதனையாக இருக்கின்றது.

எனக்கு மட்டுமல்ல பலருக்கும் எழும் கேள்வி இதுதான். பல களமுனைகள் கண்ட தளபதி ஏன் இவ்வாறு சரணடைந்தார்?

அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், போராளிகள் சரணடைந்தது வேறு. இவர் ஒரு இராணுவத் தளபதி மட்டுமல்லாது உயர்மட்டத்தில் இருக்கக்கூடியவரும் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதியும் கூட. கருணா பிரிவின் பின்னர் பல களையெடுப்புக்களை மட்டக்களப்பில் மேற்கொண்டவரும் கூட.

எனக்கு என்னவோ போகிற போக்கைப் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டதாக பலர் தரப்பில் வெளிவந்த தகவலும் இவ்வாறான காணொளி (வீடியோ) ஊடாக வெளிவந்தால் புலத் தமிழர்கள் அப்போது அதனை வீடியோ கிராபிக்ஸ் என்று கூறாமல் இருந்தால் சரி. (இங்கே கே.பி. தனது தலைவர் சரணடைந்து சாகவில்லை என்று உறுதிபட பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)

இழவு வீட்டில் வந்து பழைய வஞ்சினத்தைச் சொல்லி ஆறுபவன், மனிதன் என்ற தகுதியைக் கூட இழந்து விடுகின்றான் பின்பு மாற்றுக் கருத்து என்று எந்தக் கதவாலும் தப்பித்துக் கொள்ளவும் முடியாது!

எதிரியிடம் போராளிகள் சிக்கும் நிலை வரும்போது, சயனைட் உட்கொளுவதன் முதன்மைக் காரணம் தன் அமைப்பு ரீதியான தகவல்கள் எதிரியின் கைகளில் சேரக்கூடாது என்பதற்காகவே. இறுதிச் சமரில் இந்ததேவையே இல்லாது போனது, அடுத்து பலநாடுகளின் வாக்குறுதிகள் நம்பப்பட்டதால் இந்த நிலை அவர்கள் எதிர் பார்க்காததாக இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் எழுதி செய்தியின் வீரியத்தைக் குறைக்க முயலாதீர்கள். கேணல் ரமேஸ் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரச ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனவே அச் செய்தி அடிப்படையில் அவர் கொல்லப்பட்டதாகத் தான் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் போர்குற்றமாகவும் நோக்க வேண்டும். தெரியாமல் கண்டமேனிக்கு எழுதுவது சிறிலங்கா அரசின் போர்க்குற்றத்தை மறைக்கத் துணை போகின்ற செயலாகும்.

அப்படி உங்களின் கருத்துப்படி ரமேஸ் உயிரோடு இருந்தால், இந்த சந்தர்ப்பத்தில் அதை வெளிக்காட்ட வைக்கும் சந்தர்ப்பமாக இப்படியான செய்கை மூலம் வெளிப்படுதம்தலாம். ஆனாலும் துர் அதிஸ்டமாக அவரின் கொல்லப்பட்ட உடலை ஏதோ ஒரு காணோளியில் பார்த்ததாகவே எனக்கு நினைவில் உண்டு.

எனவே தலைப்பினைத் திசை மாற்றாமல் சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலை, மற்றும், மனிதத்தன்மையற்ற செயல்களில் இதன் தொடர்ச்சியாகவே அடையாளப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இழவு வீட்டில் வந்து பழைய வஞ்சினத்தைச் சொல்லி ஆறுபவன், மனிதன் என்ற தகுதியைக் கூட இழந்து விடுகின்றான் பின்பு மாற்றுக் கருத்து என்று எந்தக் கதவாலும் தப்பித்துக் கொள்ளவும் முடியாது!

நிர்மலன்

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக வசைபாடத்தொடங்கி

தலைவரை வசைபாடும் வரை வந்துவிட்டார்

வாழ்க அவரது பிழைப்பு

எனக்கு என்னவோ போகிற போக்கைப் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைந்து கொல்லப்பட்டதாக பலர் தரப்பில் வெளிவந்த தகவலும் இவ்வாறான காணொளி (வீடியோ) ஊடாக வெளிவந்தால் புலத் தமிழர்கள் அப்போது அதனை வீடியோ கிராபிக்ஸ் என்று கூறாமல் இருந்தால் சரி. (இங்கே கே.பி. தனது தலைவர் சரணடைந்து சாகவில்லை என்று உறுதிபட பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)

உங்களின் நிறத்தை சரியாக அடையாளம் காட்டும் கருத்து

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

:lol: நிர்மலன் என்பவர் யார் என்பதை எலோருக்கும் சொல்லும் ஒரு கருத்தை எழுதி உள்ளார்.அவர் யாழ்க்களத்திற்க்கு எதற்க்கு வருகிறார், அவர் இணைக்கும் இணைப்புக்களின் உள் நோக்கம் என்ன என்பதை அறிவு இருப்பவர்கள் சுயமாகச் சிந்திது விளங்கிக் கொள்ளுங்கள்.அறிவிலிகளும் ,உளவியற் பாதிப்பு அடைந்தோரும் அவர் இடும் தூண்டிலைக் கவ்விக் கொண்டு இழுபடுங்கள்.உண்மையும் நேர்மையும் தியாகமும் மனித நேயமுமே இறுதியில் வெல்லும்.

நயவஞ்சகமும், சுய நலமும் தோற்றுக் கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்று நீங்கள் தூக்கிப்பிடிக்கும் சனல் - 4 தொலைக்காட்சியினை நாளை உங்களுக்கு எதிராக ஒரு விடயத்தினை வெளிக்கொணர்ந்தால் அவர்களுக்கு துரோக ஊடகம் எனக் கூறாமல் இருந்தால் சரி. சரியாகக் கூறுவதனால் அரசுக்கு சனல் -4 தொலைக்காட்சியும் விலை போய்விட்டது என்று இதில் எழுதாமல் விட்டால் சரி.

நிச்சயமாக தமிழ்மக்களின் விடுதலைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோருக்கும் எதிராகப் போராடுவோம், ஆதரவு தருவோரை அரவணைப்போம்.உங்களைப் போல் கேடு கெட்ட தொழில் செய்ய மாட்டோம்.

சனல் -4 தொலைக்காட்சி விலை போய்விட்டது - சிங்கள அரசு :lol:

பிரித்தானிய அரசு துரோகம் செய்துவிட்டது - சிங்கள அரசு :wub:

நாடு திரும்பிய ஜனாதிபதி விமான நிலையத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார் - :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டலில் இருந்து தப்பி, சிறிலங்காவில் மதவழி பாடுகளில் ஈடு படுவதில் தப்பில்லை.

:lol: நிர்மலன் என்பவர் யார் என்பதை எலோருக்கும் சொல்லும் ஒரு கருத்தை எழுதி உள்ளார். அவர் யாழ்க்களத்திற்க்கு எதற்கு வருகிறார், அவர் இணைக்கும் இணைப்புக்களின் உள் நோக்கம் என்ன என்பதை அறிவு இருப்பவர்கள் சுயமாகச் சிந்திது விளங்கிக் கொள்ளுங்கள்.

நிர்மலன் என்பவர் யார் என்பதை ஆராய்வதாயின் நீங்கள் யார் என்பதை முதலில் கூறுங்கள். ஊர்ப்புதினத்தில் வீரவணக்கம் என்று கொட்டை எழுத்தில் எழுதி, வாடா போடா நாயே என்று சிறீ லங்கா அரசு தரப்பை அல்லது அதற்கு ஆதரவானவர்களை திட்டினால் ஒருவரை நம்பலாம்? அவ்வாறாயின் அவர் தமிழ்த் தேசியவாதி? இங்கு கருத்துக்களத்தில் கருத்துக்கள், சிந்தனைகள் பகிரப்படுகின்றன. உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால், நீதி, நேர்மை இருந்தால் மற்றவன் கூறிய கருத்தை பாராமல் மற்றவனை தனிப்பட தாக்கவேண்டியதன் அவசியம் என்ன? கருத்தை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டவரை தாக்குவது.. இது உங்கள் இயலாமை தவிர வேறு ஒன்றும் இல்லை? :lol:

:lol: நிர்மலன் என்பவர் யார் என்பதை எலோருக்கும் சொல்லும் ஒரு கருத்தை எழுதி உள்ளார்.அவர் யாழ்க்களத்திற்க்கு எதற்க்கு வருகிறார், அவர் இணைக்கும் இணைப்புக்களின் உள் நோக்கம் என்ன என்பதை அறிவு இருப்பவர்கள் சுயமாகச் சிந்திது விளங்கிக் கொள்ளுங்கள்.அறிவிலிகளும் ,உளவியற் பாதிப்பு அடைந்தோரும் அவர் இடும் தூண்டிலைக் கவ்விக் கொண்டு இழுபடுங்கள்.உண்மையும் நேர்மையும் தியாகமும் மனித நேயமுமே இறுதியில் வெல்லும்.

நயவஞ்சகமும், சுய நலமும் தோற்றுக் கொண்டே இருக்கும்.

ஓய் நாரதர், நிர்மலனை ஏசாதீர்! அவர் பாவம்!! அவர் போன்றோர் இன்று கேபியின் அன்புத்தம்பிகள்! கொடுக்கப்பட்டதை/வாங்கப்பட்டதற்காக இங்கும்...!!! ... அதற்கு மேலாக இவர்கள் ... கேபியின் அன்புத்தம்பிகளாக இன்று புலத்தில் திரிபவர்கள் ... சிலர் முன்னால் போராளிகளும் என்கிறார்கள் ... ஆனால் உண்மையில் கடந்த சில வருடகளுக்கு முன்/அதாவது யுத்த நிறுத்த காலத்தில், இவர்கள் தந்திரமாக புலிவேஷம் போட்டவர்கள்! ... மற்றும்படி தமிழர்கள் மீதோ/சரணடைந்த போராளிகள் மீதோ/அங்கு அல்லலுறும் மக்கள் மீதோ எவ்வித அக்கறையும் அற்றவர்கள் ... உதில் புவியோ, வாசுவோ, சாள்ஸோ, இல்லை உந்த நிர்மலனோ ... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!!! ... உண்மையில் ஓரிரு முன்னால் புலிகளில் இருந்தவர்களை முன்னிலைப்படுத்தி ... சிங்கள புலனாய்வுத்துறையும், ஒட்டுக்குழுக்களினாலேயும் தான் .. இந்த கேபிக்கள் இயக்கப்படுகிறார்கள்!! ... இதனை திரும்பத்திருமப சனத்துக்கு சொல்லத்தேவையில்லை ... அவர்கள் ஓர் உறுதியான நிலைக்கு வந்து விட்டார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

அந்தா வெளிநாட்டில் வசதியாக வாழ்பவர்கள் அக்கபோர் தாங்க வில்லை .. போதாக்குறைக்கு ஒபாமாவின் உறவினர் போன்றே சிலருக்கு நினைப்பு.. நடு நிலமை பேசுகின்றனர் ...மாற்று கருத்து சொல்கின்றனர்.....ஆன எவனும் ...எந்த நாடும்.... மாற்றுகருத்து சொல்ல முன் வரவில்லை கண்டியளோ.. ஆனா இவர்கள் தொடர்ந்து பேசுவார்களாம்.. இவர்களுக்கு ஏதோ அகில உலக மனித உரிமை மாற்றுகருத்து மண்ணாங்கட்டிகள் போல நினைப்பு...எல்லாம் ஏதோ பொழுது பொக்கு போல எழுதி திரிகிறான்.. அந்த இணைய தள வீரர்கள் தட்ஸ்தமிழு சொறி சந்திரனை கட்டுபடுத்த முயற்சிக்கலாமே?? அல்லது தினமலர் ரமேசை கட்டு படுத்த முயற்சிக்கலாமெ? ஆக தேடி வந்து இங்கு கும்மியடிக்கிறார்கள்??

Dharmapuri_bus_burning_case.jpg

நிர்வாணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது.. அட அட்ட கத்தி கோஸ்டிகளா... குந்த கோவணத்திற்கு முதலில் ரெடி பண்ணுங்கள் ....பிறகு மாற்று கருத்து... மண்ணாங்கட்டி ... இந்த இணையதள் அக்கபோர்களை வைத்து கொள்ளுங்கள்.. துப்பாக்கியை தூக்கியது யாரோ... இங்கு அக்கபோர் நடக்கிறது.. இதென்ன.. கிரிக்கெட்டு மேட்சா நடக்க்குது??.. இது தமிழ்நாட்டு வாய்பேச்சு வாள்களுக்கும் சேர்த்துத்தான் ஈழம் ஈழம் மேடைகளில் தொண்டைதண்ணி வத்த முழங்கினால் சரிபட்டு வருமா.. நாலு பஸ்களின் மீது கல்லிட்டு எறிந்தால்தான் சரிவரும்.. இந்த டேட்கிஸை நான் பலமுறை தோழர்களிடம் சொல்லி வருகிறேன் ...அதே போல புலம் பெயர்ந்து வாழும் ஈழ தோழர்களும் அங்குள்ள நாடுகளில் செய்யவேண்டும் .. அப்பத்தான் உரைக்கும்... ரைட்டு.. :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனே, ஒருவன் எழுதிய கருத்தினை எதிர்கொள்ள வக்கில்லாத நீங்கள் எல்லாம் என்ன மனிதர்கள்?

முன்னர் நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் படித்துப் பாருங்கள்.

"விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு பரப்புரைப் பலவீனமே காரணம்" என பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறியதற்கு எழுதிய கருத்துக்களைப் படித்துப் பாருங்கள். அதன்பின்னரும் எழுதிய கருத்துக்களை படித்துப் பாருங்கள்.

அன்றும் இன்றும் எப்போதும் விடுதலைப் புலிகளின் தவறுகளைத்தான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ('எப்போது தனதும் தன்சார்ந்த தவறுகளை ஒருவன் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்கின்றானோ அவனே முழுமையான மனிதன்' என்பதனையும் மறந்துவிடாதீர்கள்.)

விடுதலைப் புலிகளின் தவறுகளை அப்போது பலர் இதே யாழ். களத்தில் சுட்டிக்காட்டியபோது தற்போது யாழ். களம் கடைப்பிடிக்கும் ஊடக சுதந்திரத்தினை முன்னர் விட்டிருந்தால் புலிகளின் தளபதிகள், போராளிகள் இவற்றை படித்து தமது தவறுகளை திருத்தியிருப்பார்கள்.

'துரோகி' என்கின்ற சொற்பதத்தினை எப்போது நீங்கள் கைவிடுகின்றீர்களோ அப்போதுதான் தமிழனுக்கு விமோசனம் கிடைக்கும்.

மற்றவர்களை சந்தேகக்கண் கொண்டு ஆராய்ந்து அவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுத்து ஒதுக்கி வைத்ததால்தான் தமிழினத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து விட்டிருக்கின்றார் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அல்பிரட் துரையப்பா தொடங்கி இன்றுவரை தொடர்வது தமிழனின் சாபக்கேடே தவிர வேறு எதுவும் இல்லை. நாளை பிரபாகரனைக் கூட நீங்கள் துரோகி என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.

ஏனெனில் அவர் பேரால் சம்பாதித்த பணத்தினை தாம் வைத்துக் கொள்வதற்காக எமது தமிழ்ச்சாதி எதுவும் செய்யத் தயங்காது. அந்தளவு கேடு கெட்ட சாதி தமிழ்ச்சாதி என்றால், புலத்தில் உள்ள தமிழர்கள் அதனைவிட மோசமானவர்கள்.

இன்று புலத்தில் பல பிரிவுகளாக சிதைந்து இருப்பதற்குக் காரணமே விடுதலைப் புலிகளின் தலைவர் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அனைத்துலக ஊடகங்களில் இருந்து நாமே மெய்ச்சிய ஒரு கட்டுக்கோப்பான விடுதலை அமைப்பு இவ்வாறு சிதைவடைந்திருக்கின்றதே அதற்கு என்ன காரணம் என யாராவது ஆராய்ந்து பார்த்தீர்களா?

தனிமனிதன் தன் கையில் வைத்திருந்த அதிகாரம்தானே காரணம். இவற்றினை மீள, மீள எழுதுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏனெனில் நீங்கள் தனிநபர் வழிபாட்டு முறையினை பின்பற்றி வந்தவர்கள். (தமிழ்நாட்டு அரசியலையும் சினிமாவையும் நையாண்டி செய்யும் நீங்கள் அதனை நவீனமாக பின்பற்றுவதனை முற்போக்குத்தனம் என்கிறீர்கள்)

ஏனெனில் நீங்கள் ஒரு கம்பியில் நடந்து கொண்டிருக்கின்றீர்கள். அந்தக் கம்பியை விட்டு விலகி நடந்தால் பல உண்மைகளை நீங்கள் அறிய முற்படலாம். ஆனால், இங்கே யாரும் அதனை அறிய முற்படவோ, சீர்தூக்கிப் பார்க்கவோ விரும்பவில்லை.

இந்தப் போர்க் குற்றங்களை நாம் சரியான முறையில் முன்னெடுத்து சிறிலங்கா அரசை கூண்டில் ஏற்ற வேண்டுமாயின் இன்று யார், யார் மகிந்த அரசுக்கு எதிராக உள்ளனரே அவர்களோடு நாம் கைகோர்க்க வேண்டும். (அது ஜே.வி.பி.யாக இருந்தால் என்ன சரத் பொன்சேகா இருந்தால் என்ன)

இவர்களை நாம் அணைக்க வேண்டுமாயின் புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு செயலாற்றினால்தான் அனைத்துத்தரப்பும் எம்மோடு கைகோர்க்கும் என்பதனை மீண்டும் இதில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

முன்னர் இந்தியா இராணுவத்தினை வெளியேற்ற பரம எதிரியான சிங்கள அரசின் அப்போதைய அரச தலைவர் பிரேமதாசவுடன் விடுதலைப் புலிகள் கைகோர்க்கவில்லையா?

1. கருத்து/விமர்சனம்

1.கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

2.சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.

3.ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

4.கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.

5.வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)

6.சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.

7.தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.