Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்கள ஆண்களே நீதி கூறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

மேலும்..... 18 வயதுக்குட்பவர்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் விட்டதற்கு, பெற்றோரும் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

ஏன் சிறி

தங்களது அப்பாவை

அல்லது

அப்பப்பாவை நம்பி தங்களது பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு ஒரு இடமும் போகமாட்டீர்களா....?

Edited by விசுகு

  • Replies 57
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி

தங்களது அப்பாவை

அல்லது

அப்பப்பாவை நம்பி தங்களது பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு ஒரு இடமும் போகமாட்டீர்களா....?

விசுகு, இதில் சம்பந்தப் பட்டவர்கள் குடும்பத்தில் மிக நெருங்கிய உறவினர்கள்.

அந்தக் கிழவன் ஒரு நாளில் திடீரென்று காமம் தலைக்கேறி இதனை செய்திருக்க முடியாது....

இதனை அவதானிக்கத் தவறியவர்கள் அந்தச் சிறுமியின் பெற்றோரே.....

கலியாணம் கட்டி குழந்தை பெற்றால் மட்டும் போதாது..... அதனை எந்த மிருகத்திடம் இருந்தும் காப்பாற்றவும் தெரிந்தவர்களே வல்லமையான பெற்றோர்கள். others-137.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை சிறி

எந்த ஒரு காரியமும் சமுதாயத்தில் உள்ள அனைவரினதும் கூட்டுப்பொறுப்பு. எனவே இதை ஒருத்தர் அதுவும் அப்பா மீறுகின்றார் என்றால் அது பிள்ளையின் நம்பிக்கையின் தப்பல்ல. ஒரு மனிதசமுதாயத்தில் மாறிப்பறந்தவனின் தப்பு. இதற்கெல்லாம் சந்தேகப்பட்டு எல்லாவற்றையும்விட்டுவிட்டு வீட்டில் இருந்துவிடுவது எமது உணர்வுகளை, நம்பிக்கைகளை, தலைவணங்கும் பழக்கவழக்கங்களை சாகடித்துவிடும்.

எனது கவலையெல்லாம்

அந்த பிறக்கப்போகும் பிள்ளை பற்றித்தான். இந்த உலகத்தில் அதற்கு அவமானங்களே மிஞ்சும். எனவே எந்தவழியிலாவது அதை அழித்துவிடுவதே நாம் அதற்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கமுடியும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி சீர்கேடுகளை கவனிக்கும்போது யாரையும் நம்ப முடியாத நிலையே தோன்றுகிறது. தன் கையில் தவழ்ந்த குழந்தையை, பேத்தியை, மகளை கெடுக்கும் கயமைகளை கேள்வியுறும்போது இவைகள தற்செயலாக் நடந்தவைபோல் தோன்றவில்லை. பிறழ்புத்தி தன்னகத்தே மறைவாக கொண்ட மிருகங்கங்கள். இவர்களை இனம் காண்பதென்பது கடினமென்றாலும் சந்தர்ப்பங்களை உருவாக்ககூடியவற்றை பெற்றோர்கள் தவிர்த்திருக்கலாம்.

சமீபத்தில் தமிழகத்தில் 13 வயது பள்ளிச் சிறுமியொருத்தி பள்ளிக் கழிப்பிடத்தில் குழந்தையை ஈன்று எறிந்துவிட்ட வந்த கோலமும் பெற்றோரின் அஜாக்கிரைதையையே காட்டுகிறது.

ஆனால் ஒன்று, இம்மாதிரி இழிச்செயல்களுக்கு இசுலாமிய சட்டங்கள்தான் சரி.. இன்னொரு பாவத்தை, பாரத்தை இக்காமுகர்கள் இங்கே ஏற்றுவதைவிட, அவர்களை இறக்குவதால் இப்பூமியில் பாரம் குறையும்.

தற்போது ஊர்ப்புதினத்தில் ஓர் செய்தி பார்த்தேன், பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாக சிறீ லங்கா புலனாய்வுத்துறை இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதாக. பின்னர் கூகிழில் தேடல் செய்தேன் குறிப்பிட்ட செய்தி குப்பையாக பல்வேறு தளங்களில் சொற்பதங்களில்கூட எதுவித மாற்றமும் செய்யப்படாது பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரசுரம் செய்த தளங்களில் நக்கீரனும் அடக்கம். எனவே, இந்தச்செய்தியை ஆரம்பத்தில் மேற்கண்டவாறு வெளியிட்டது நக்கீரனாக அமையலாம் என்று ஊகித்தேன். அவர் சொன்னார்.. இவர் சொன்னார் என்று செய்தியை கூறுகின்றார்கள். பின்னர் உணர்வுகளைக்கொட்டி இழுபடுகின்றார்கள். ரதியின் தரவினையும் கண், மூக்கு, வாய் வைக்கப்பட்டதொரு கதையாகவே நான் நோக்குகின்றேன். கேள்விப்படுவது வேறு, நேரில் நடக்கும் சம்பவம் வேறு. ஓர் பிரச்சனை வரும்போது உணர்வுகளை மாத்திரம் கொட்டி பயன் இல்லை, அதை சரியான அணுகுமுறைகளுடன் கையாண்டு சிக்கல்கள் தீர்க்கப்படவேண்டும். கனதியான இவ்வாறான விடயங்களை நீங்கள் கேள்விப்பட்ட கதை என்று கூறி விவாதிப்பது.. பிள்ளையார் பால் குடிக்கின்றார்.. வகையிலேயே வைத்து பார்க்கமுடிகின்றது. பாலியல் இச்சைகளிற்கு வயது தடங்கலாக அமையவேண்டும் என்று இல்லை.. ஆனால்.. சரியான தரவுகள் இல்லாமல் கேள்விப்பட்ட விடயங்களை வைத்து ஊகத்தின் அடிப்படையில் வாதம் செய்வது பொருத்தமானதாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிப்படை ஆதாரமற்ற.. லண்டனில் வாழும் வேலை வெட்டி இல்லாத பெண்களின் விடுப்புக் கதை போல இருக்குது. அது ரதி அக்காவின் காதுகளை எட்டியதும் யாழை அடைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

இப்படி நிறையக் கதைகள். தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்குச் சென்ற மாணவி பலாத்காரம்.. பொலிஸ் கைது.. இப்படி நிறைய உங்க உலாவுது. இப்படி விடுப்பு கதைக்க ஏதும் இருந்தா தானே சில பெண்களுக்கு பொழுது போகும். அதுவும் இப்படியான விசயங்கள் என்றால் அவைக்கு அல்வா சாப்பிடுறது போல. :D :D :D

Edited by nedukkalapoovan

75 வயதிலும் அதற்கு மேலும் ஆண்களுக்கு இனப்பெருக்கம் செய்ய முடியும். பெரும்பாலானோர் செய்வதில்லை என்பதேயொழிய இனப் பெருக்க இயலுமை இல்லாமல் போவதில்லை.

மூன்று மாதக் கருவிலிருந்து டி.என்.ஏ என்றால் குழந்தையிலிருந்து டி.என்.ஏ என்று அர்த்தம் இல்லை. குழந்தையைச் சுற்றி இருக்கும் அம்னியோரிக் திரவத்திலிருந்து குழந்தையின் சில கலங்களை எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய இயலும். இதேமுறை மூலம் தான் குழந்தைக்கு பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது உள்ளனவா என்றும் சோதனை செய்வார்கள். தாத்தாவின் டி.என்.ஏ எப்படிப் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அவர் மீது சந்தேகம் கொண்டதால் அவரது உள்ளாடைகளை டி,என்.ஏ மூலங்களாகப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மூன்று மாத கற்பம் கவனிக்காமல் விடப் பட வாய்ப்புகள் அதிகம். பன்னிரண்டே வாரங்கள், சிலருக்கு வாந்தி மயக்கம் எதுவும் வருவதில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது பருவமடைந்த புதிதில் பொதுவாக காணப்படக் கூடிய ஒன்று தான்.

ஆம் 3 மாதத்திற்குள் Genetic defects இருந்தால் சோதிக்கலாம் என்று எமக்குச் சொல்லியிருந்தது ஞாபகம் உள்ளது.

75 வயதில் இனப்பெருக்க வல்லமை குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

விந்தெண்ணிக்கை, விந்துக‌ளின் நீந்தும் ஆற்ற‌ல், காம‌த்தை தூண்டும் ஹோர்மோன்க‌ள் அளவு போன்ற‌ன‌ இந்த‌ வ‌ய‌தில் பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும்.

பேத்தி என்ற‌ உற‌வுமுறை வேறு. இதையெல்லாம் தாண்டி தாத்தா காரிய‌த்தில் இற‌ங்கியிருப்பார் என்ப‌து ந‌ம்புவ‌த‌ற்குச் ச‌ற்றுக் க‌ஸ்ட‌ம்.

யாரோ கிள‌ப்பிய‌ வ‌த‌ந்தியாக‌ இருந்தால் ச‌ந்தோச‌ம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலையெல்லாம்

அந்த பிறக்கப்போகும் பிள்ளை பற்றித்தான். இந்த உலகத்தில் அதற்கு அவமானங்களே மிஞ்சும். எனவே எந்தவழியிலாவது அதை அழித்துவிடுவதே நாம் அதற்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கமுடியும்.

அடப்பாவிகளா.. நீங்களா சமுதாயம் மண்ணாங்கட்டி என்று ஒன்றை உருவாக்கி வைச்சிட்டு.. அவமானம் என்ற ஒன்றையும் சித்தரிச்சு வைச்சிட்டு.. அந்தக் குழந்தையை அழிக்கலாம் (முதலில் இந்தக் கதை உண்மையோ தெரியாது. ஒரு கருத்துக்கு இதை உண்மை என்று வைச்சுக் கொண்டால் கூட) என்று கூறவும் அழிக்கவும் கட்டளை போடுறிங்க.. அது தான் அந்தக் குழந்தைக்கு நல்லமாமும் எல்ல..!

இயற்கையில் உருவான எதுவும் இயற்கையின் விதிப்படி வாழ உரித்துடையது. மனிதர்கள் தமக்கு தாம் உருவாக்கும் சமூகம்.. சட்டதிட்டம்.. பண்பாடு.. கலாசாரத்தின் பெயரால் உயிர்களை வாழ விடாமல் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை..!

உங்களின் வெட்டி கருத்துக்கும் வசைக்கும் ஒரு குழந்தையை பலியிடச் சொல்லுறீங்களே.. இதே உங்களின் குழந்தை ஒன்றுக்கு நிகழ்ந்திருந்தால்..???! சிந்தியுங்கோ..! :D :D

ரதி கேள்விப்பட்டது உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறன், உண்மையாக இருப்பின்....

இந்த விடையத்தில் பெற்றோரின் தவறே அதிகம்!

பெற்றோர் ஒரு பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது, காலத்திற்கு ஏற்றது போல் அப்பிள்ளையில் அக்கறை எடுத்து பராமரிக்க வேண்டும். பிள்ளை வளர்ந்து வரும்போது பெற்றோருக்கும்-பிள்ளைக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை வீட்டில் ஏற்படுத்தவேண்டும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பயம் விட்டு பிள்ளைகள் பெற்றோருடன் கலந்துரையாட வேண்டிய ஒரு சூழ்நிலை குடும்பத்தில் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறன். வீட்டில் இருக்கும் பெற்றோருக்கும் சரி, வேலைக்குப் போய்வரும் பெற்றோருக்கும் சரி, தமது பிள்ளைகள் எவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை சற்று தாமதமாகவே உணர்ந்து கொள்ளுகிறார்கள். பல நேரங்களில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உண்மையான நிலை எல்லை மீறிய பின்பு தான் தெரிய வருகிறது.

பல பெற்றோர் எப்ப பார்த்ததாலும், பணம், பதவி என்று ஓடித்திரிகிரார்கள். சிலர் வெளி உலகமே அறியாது வாழ்கிறார்கள். ஊரில் இருந்த நிலை வேறு, இங்கே இருக்கும் நிலை வேறு என்பதனை பெற்றோர் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒரு பிள்ளை மூன்று வயது வரை பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் அனைத்தையும் கேட்டு நடந்தாலும், நாலு வயதில் பள்ளி செல்லும் போது அங்கே பலரின் நடத்தைகளை (நல்லதோ கெட்டதோ) பார்த்து தானும் பழகிக் கொள்ளவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிறது. சொல்லப் போனால் அந்த வயதில் இருந்தே பெற்றோர் தாம் பிள்ளையுடன் இல்லாத நேரத்தை அறிய ஆர்வம் காட்ட வேண்டும்.

ஒருவேளை அப்படி இந்தப் பிள்ளையின் பெற்றோரும் கேட்டு ஆர்வம் காட்டி இருந்தால் நடந்த சிலவற்றை தடுத்திருக்ககூடும் அல்லது ஆரம்பத்திலையே பேரனின் நடத்தையை அறிந்திருக்கக் கூடும்.

இங்கு பாடசாலையில் ஏழு வயதிலிருந்தே ஆண்-பெண்ணுக்குரிய உடல் வேற்றுமைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். ஐந்தாம் ஆறாம் வகுப்புப் பிள்ளைக்கு (11 வயதில்) நிச்சயம் உடலுறவு என்றால் என்ன என்பது பற்றி பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கும். இவற்றை எல்லாம் பெற்றோர் அறிந்திருக்கவேண்டும்.

கிழவனுக்கு இனி எந்தத் தண்டனையை குடுத்தாலும் அந்தப் பிள்ளையின் மனநிலையை மாற்றுவது சுலபமான காரியம் இல்லை. தமது மகளுக்கு புதிய சூழ்நிலையை உருவாக்கி ( தமிழர்கள் இல்லாத பகுதிக்கு), அவரது மனநிலையை இன்னும் பாதிக்காத வகையில் பராமரிப்பது பெற்றோரின் தலையாய கடமை. தமது பிள்ளையின் உடலுக்கு, உயிருக்கு பாதுகாப்பாயின் மூன்று மாதங்கள் ஆனாலும் அப்பிள்ளையின் எதிர்காலம், மனநிலை கருதி பிள்ளைக்கு கவுன்சிலிங் மூலம் நன்கு புரிய வைத்து, கருவை இல்லாமல் செய்வதும் வரவேற்கத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.இது உண்மையாக நடந்த சம்பவம்.ஆதாரமற்ற கருத்துகளை வைத்து கதைக்க நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை.அச் சிறுமியின் பூப் புனித நீராட்டு விழாவுக்குப் போன சிறுமியின் சொந்தக்காரர்கள் அச் சிறுமி மயங்கி விழுகையில் அருகில் நின்று இருக்கிறார்கள்...வைத்தியசாலைக்கும் கூட சென்று இருக்கிறார்கள்[இது மண்டபத்தில் நடந்தது]...அந்த தாத்தா தான் கர்ப்பத்திற்கு காரணம் என காவல்துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது...இந்த சம்பவத்தை ஒருவர் மட்டும் அல்ல பல பேர் எனக்கு சொன்னார்கள்...நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அச் சிறுமியின் படத்தையும்,காவல் துறை அறிக்கையும் வெளியிட வேண்டுமா என்ன?...அப்படி அச் சிறுமியின் படத்தைப் போட்டு விளம்பரப் படுத்தினால் தான் நம்புவீர்களோ?

தம்பி உங்கட இனத்தில எல்லா ஆண்களும் ரொம்ப நல்லவர்கள் பெண்கள் தான் ரொம்ப கெட்டவர்கள்...முதலில் கிணற்றுத் தவளையாய் வீட்டுக்குள்ள இருக்காமல் வெளியால வந்து உலகத்தை பாருங்கோ அப்போது தான் ஊர் உலகத்தில் என்ன நடக்குது என்று தெரியும்...நான் இதே மாதிரி வேற பல கதைகள் கேள்விப்பட்டு உள்ளேன் அப்ப எல்லாம் நான் வந்து எழுதவில்லை ஏனென்டால் உண்மை தெரியாமல் எழுதக் கூடாது என்பதற்காக...நான் எப்பவாவது வதந்தியை ஆதாரமாய் வைத்து இப்படிப் பட்ட சம்பவங்கள் எழுதி உள்ளேனா?...இது உண்மையாய் நடந்தது என அப்பட்டமாய் தெரிய வந்ததால் தான் எழுதினேன்...ஒரு பச்சை மண்ணை அந்த கிழவன் பாழாக்கி இருக்கிறான் அவனுக்கு ஆதரவாய் கதைக்க உங்களுக்கு வெட்கமாயில்லை...உங்களைப் போன்ற ஆண்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதரமாய் கதையுங்கோ சமுதாயம் விளங்க்கும்...இதைப் போன்ற சம்பவங்கள் உங்கள் குடும்பத்தில் நடந்தால் தான் அதன் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும்...ஏன் தாயகத்திலேயே இப்படி எவ்வளவு சம்பவங்கள் நடந்து உள்ளது[நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள் ஏனென்டால் நீங்கள் சின்னப் பிள்ளை]புலிகள் இருந்த படியால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த படியால் குற்றங்கள் குறைந்திருந்தது.

ஈசன் அப்படி ஒருசம்பவம் இனி மேல் நடக்க கூடாது என வேண்டுமானால் கடவுளைப் பிரார்த்திக்கலாம் ஆனால் இது நடந்த சம்பவம்.அச் சிறுமியின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்ட அடிப்படையிலே நான் இத் திரியைத் தொடங்கினேன் ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர் அது பற்றி எழுதவில்லை...இதிலிருந்து தெரிகிறது ஆண்கள் என்ன மாதிரி என்டு அதுவும் யாழில் நியாயமாய் கருத்தெழுதும் நியாயவாதிகள் கூட அக் கிழவனுக்கு வக்காலத்து வாங்குவது எனக்குப் புரியவில்லை...இதே யாராவது ஒரு பெண் தெரியாமல் தப்பு செய்து இருந்தால் கிழி,கிழி என கிழித்திருப்பார்கள்.

மன்னிக்கவும், ஊகங்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் என்னால் வாதம் செய்யமுடியாது. சட்டவிரோதமான செய்கைகளை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க காவல்துறை உள்ளது. இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

...

ஆதாரமற்ற கருத்துகளை வைத்து கதைக்க நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை.அச் சிறுமியின் பூப் புனித நீராட்டு விழாவுக்குப் போன சிறுமியின் சொந்தக்காரர்கள் அச் சிறுமி மயங்கி விழுகையில் அருகில் நின்று இருக்கிறார்கள்...வைத்தியசாலைக்கும் கூட சென்று இருக்கிறார்கள்[இது மண்டபத்தில் நடந்தது]...அந்த தாத்தா தான் கர்ப்பத்திற்கு காரணம் என காவல்துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது...இந்த சம்பவத்தை ஒருவர் மட்டும் அல்ல பல பேர் எனக்கு சொன்னார்கள்...

...

ரதி சொல்லப் போனால் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு சிறுமியின் வாழ்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை இங்கே எழுதி அம்பலப் படுத்துறீர்களே... நீங்கள் குறை நினைக்காவிடில், இது எந்த வகையில் அந்தப் பிள்ளையின் எதிர்காலத்திற்கு சிறந்தது என்று நான் அறிந்து கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி உங்கட இனத்தில எல்லா ஆண்களும் ரொம்ப நல்லவர்கள் பெண்கள் தான் ரொம்ப கெட்டவர்கள்...முதலில் கிணற்றுத் தவளையாய் வீட்டுக்குள்ள இருக்காமல் வெளியால வந்து உலகத்தை பாருங்கோ அப்போது தான் ஊர் உலகத்தில் என்ன நடக்குது என்று தெரியும்...நான் இதே மாதிரி வேற பல கதைகள் கேள்விப்பட்டு உள்ளேன் அப்ப எல்லாம் நான் வந்து எழுதவில்லை ஏனென்டால் உண்மை தெரியாமல் எழுதக் கூடாது என்பதற்காக...நான் எப்பவாவது வதந்தியை ஆதாரமாய் வைத்து இப்படிப் பட்ட சம்பவங்கள் எழுதி உள்ளேனா?...இது உண்மையாய் நடந்தது என அப்பட்டமாய் தெரிய வந்ததால் தான் எழுதினேன்...ஒரு பச்சை மண்ணை அந்த கிழவன் பாழாக்கி இருக்கிறான் அவனுக்கு ஆதரவாய் கதைக்க உங்களுக்கு வெட்கமாயில்லை...உங்களைப் போன்ற ஆண்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதரமாய் கதையுங்கோ சமுதாயம் விளங்க்கும்...இதைப் போன்ற சம்பவங்கள் உங்கள் குடும்பத்தில் நடந்தால் தான் அதன் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும்...ஏன் தாயகத்திலேயே இப்படி எவ்வளவு சம்பவங்கள் நடந்து உள்ளது[நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள் ஏனென்டால் நீங்கள் சின்னப் பிள்ளை]புலிகள் இருந்த படியால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த படியால் குற்றங்கள் குறைந்திருந்தது.

அக்கா.. இந்தச் சம்பவம் உண்மையோ பொய்யோ அது நீங்கள் சொல்லித் தான் தெரியுது. அந்த வகையில் தான் இது ஆதார அடிப்படைகளற்ற செய்தி என்ற கருத்தை பதிவு செய்துள்ளேன். இங்கு 11 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவருக்கு வக்காளத்து வாங்குவது என்பது சமூக விரோதச் செயல். அதை நான் அல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் செய்ய மாட்டான்.

ஆனால் இப்படியான செயல்களில் ஈடுபடும் எவரையும் வாய் மொழிமூல ஆதாரத்தை வைச்சுக் கொண்டு மட்டும் குற்றவாளியாக்கி விட முடியாது. காவல்துறை இதில் தடையிட்டிருந்தால் அது பற்றி உள்ளூர் ஊடகங்களில் செய்தி வந்திருக்கும். எதுஎப்படியோ உங்களின் எழுத்துத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு ஆதாரங்கள் இல்லை. அந்த வகையில் இது ஒரு பலவீனமான கருத்தாகவே இருக்கிறது.

மேலும்.. அண்மையில் ஒரு பள்ளி மாணவனை ஆசிரியை.. தவறாக பயன்படுத்தியதை பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அந்த ஆசிரியைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆக ஆண்கள் மட்டுமல்ல சமூக விரோதிகள்.. பெண்கள் மத்தியிலும் உள்ளனர். சமூக விரோதிகளுக்கு வக்காளத்து வாங்கும் நோக்கம் தேவை நமக்குக் கிடையாது அக்கா. அதன் மூலம் மனித உரிமைகளை இந்த உலகில் நிலைநாட்டவும் முடியாது. விழிப்புணர்வை உண்டு பண்ணவும் முடியாது. ஆகவே சமூக விரோதிகளுக்கு ஆதரவாக கருத்தை நாம் முன் வைக்கிறோம் என்பது சரியான கருத்தல்ல..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்லப் போனால் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு சிறுமியின் வாழ்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை இங்கே எழுதி அம்பலப் படுத்துறீர்களே... நீங்கள் குறை நினைக்காவிடில், இது எந்த வகையில் அந்தப் பிள்ளையின் எதிர்காலத்திற்கு சிறந்தது என்று நான் அறிந்து கொள்ளலாமா?

குட்டி அச் சிறுமியின் வாழ்க்கையை நாசமாக்க கூடாது என்பதற்காகத் தான் அச் சிறுமியின் பெயர்,விபரங்களை எழுதவில்லை...அச் சிறுமியின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்ட ஆதங்கத்தில் இப் பதிவை போட்டு விட்டேன் தப்பு என்டால் மன்னிக்கவும்.

இத் திரியில் பதிவு இடாதற்கு காரணம் இப்படியான நிகழ்வுகளுக்கு நாம் வசிக்கும் நாகரிகம் அடைந்த நாடுகளில் அதற்கான சட்டதிட்டங்கள் ஆயிரமிருக்கு.இப்பவும் கொல்லையிலுக்க தான் போவம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

குட்டி அச் சிறுமியின் வாழ்க்கையை நாசமாக்க கூடாது என்பதற்காகத் தான் அச் சிறுமியின் பெயர்,விபரங்களை எழுதவில்லை...அச் சிறுமியின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்ட ஆதங்கத்தில் இப் பதிவை போட்டு விட்டேன் தப்பு என்டால் மன்னிக்கவும்.

1) ஒரு சமூக இணையதளத்தில் அனைவராலும் பார்வையிடக் கூடிய ஒரு பகுதியில் பதிவிட்டு இருக்கிறீர்கள்.

2) எம்மிடத்தில் பெரும்பாலானோர் (தமிழ் சமுதாயத்தில்) இப்படியான செயல்கள் அடுத்தவரின் குடும்பத்தில் நடந்தால் கண், மூக்கு, காது ஏன் காதில் தோடும் போட்டு கதைப்பார்கள் என்பது நாம் அறியாதது இல்லை.

3) பெயர் விபரங்கள் எழுதாவிட்டாலும், சம்பந்தப் பட்டவர்களோ அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களோ ஏன் அவர்களுக்கு வேண்டப் படாதவர்களின் பார்வையில் இத்திரி பட்டால் அந்தப் பிள்ளை யார் என்பதும், அவரின் எதிர்கலாத்தையும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அச் சிறுமியின் வாழ்க்கையை நாசமாக்க கூடாது என்பதற்காகத் தான் அச் சிறுமியின் பெயர்,விபரங்களை எழுதவில்லை...அச் சிறுமியின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்ட ஆதங்கத்தில் இப் பதிவை போட்டு விட்டேன் தப்பு என்டால் மன்னிக்கவும்.

இந்தப்பதிவு பலரின் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும்.

சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மூன்று முனைகள் நோக்கப்படக்கூடியன.

1. குற்றவியல், குற்றத் தடுப்பு, பழிவாங்கல்

2. 11வயதுச் சிறுமி பிறக்க இருக்கும் குழந்தை

3. இச்செய்தி அதனைக் கேட்டவர்களில் ஏற்படுத்திய தாக்கம்.

எவரிற்கு எப்படியெல்லாம் பழிவாங்கும் ஆசை அல்லது அவசியம் பிறக்கிறது என்பதற்கப்பால் முதலாவது காவல்துறையின்வேலை.

இவ்வாறான பிரச்சினைகள் மனிதர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது என்றபோதும் மேற்கில் இவ்வாறான பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டதால் உளவியல் சிகிச்சைகள் அதிஸ்ரவசமாக முன்னேற்றமடைந்துள்ளன. 11 வயதுச் சிறுமியின் பெற்றோர் இச்சிகிச்சைகளின் அவசியத்தை ஏற்று, வருடக்கணக்கில் கூட இச்சிகிச்சைகள் நீடிக்கும் என்பதைப் புரிந்து, இதை ஒளித்து வைப்பதைக் காட்டிலும் பிள்ளை நலன்பெறவேண்டியது அவசியம் என்று ஏற்றுக் கொண்டு அச்சிறுமிக்கு ஆதரவாக இருத்தல் வேண்டும். அச்சிறுமி தன்னைத் தான் வெறுப்பவளாக, தனது தவறு காரணமாகத் தான் இது நடந்ததாக என்றெல்லாம் எதையோ எல்லாம் இப்போது நினைத்து உழன்று கொண்டிருப்பாள். இத்தருணத்தில், இது அவளிற்கு மட்டும் நடந்ததொன்றல்ல, அவள் போல் பாதிக்கப்பட்டவர்கள் அனேகர் உலகில உள்ளனர் என்று அறிவதும் அவ்வாறானவர்களைச் சந்திப்பதும் பலன் பயக்கும். தனது பெற்றோரும் அன்பிற்குரியவர்களும் தொடர்ந்தும் தன்னை நேசிக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதும், பேசாப்பொருள் என்ற நிலை நீங்கி தனக்கு நடந்ததைப் பற்றியும் அந்நிகழ்வின் உள்ளார்ந்த தாக்கங்கள் பற்றியும் அவள் வெளிப்படையாகப் பேச முயல்வதும் பலன் பயக்கும். நாயோ பாம்போ கடித்தால் எவ்வாறு அது எந்தப் பேசாப்பொருள் மனவமைப்பிற்குள்ளும் சிக்கிச்சிதலமாகாமால் சிகிச்சை பற்றி மட்டும் சமூகமும் நோயாளியும் கவனம் செலுத்துகிறார்களோ இதுவும் கூட அவ்வாறு அணுகப்படுவது அச்சிறுமிக்குப் பலன் பயக்கும். அவள் ஏற்கனவே உத்தரிக்கும் உழைச்சல்களிற்கு அப்பால் பேசாப்பொருள் மனவமைப்பின் நீண்ட முகங்கள் நோவினை அதிகரிக்கும். மேலும் ஓப்ரா போன்ற பிரபலங்களும் இன்னும் எண்ணற்றவர்களும் எவ்வாறு இந்நிலையில் இருந்து எழுந்தார்கள் என்பத போன்றவற்றைப் படித்தலும் கேட்டலும் அவளிற்குப் பலன் தரும்.

பிறக்க இருக்கும் குழந்தை சார்ந்து அதைச் சுமக்கின்ற முற்றாக வளர்ந்துவிடாத சிறுமித் தாய் சார்ந்த மருத்துப் பிரச்சினைகள் வைதியர்களிடம் விட்டுவிட்டு, இக்குழந்தை சார்ந்த மன உழைச்சல்களையும், அக்குழந்தையின் எதிர்காலம் முதலியவற்றையும் கையாள்வதில் பெற்றோர், உற்றார் உறவினரினதும் இயலுமாயின் சமூகத்தினதும் பங்கு அவசியம்.

இறுதியாக மேற்படி செய்திகளை அதுவும் எமது சமூகத்திற்குள் நடந்ததாய் கேள்விப் படுகையில், உறவு முறைகள் சார்ந்தும் இன்னும் பல அடிப்படைகளிலும் பலரிற்கு அதிர்ச்சி எதிர்பாhக்கப்படக்கூடியது. ரதிக்கும், இது பற்றி எமது சமூகத்திற்குள் கதைத்து ஆறவேண்டிய அவசியம் இருந்திருக்கக்கூடும். இது முற்றிலும் ஆரோக்கியமானதே. இந்நிலையில் இச்சம்பவம் யாழ் களத்தில் பகிரப்பட்டலாமா என்ற ஒரு விவாதமும் உள்ளதால் இம்முனையில் எனது கருத்துக்கள் வருமாறு.

1. மேலே கூறியதைப் போன்று இச்சிறுமிக்கு நடந்த அனர்த்தம் மூடிவைத்துச் சரிப்படுத்தக்கூடியதல்ல. உளவியல் சார்ந்து அது மூடி வைக்கப்படக்கூடாததும். ஆவமானங்கள் தான் மூடிவைக்கப்படுபன என்பதாக, தான் தவறானவள் என அந்தச் சிறுமி நினைத்து அவளது உளநலத் தேறலிற்குக் குந்தகமாகவே அத்தகைய மூடிவைத்தல் அமையும்.

2. யாழ்களத்தில் தமது சிறுமியின் அவலம் பேசப்படுகிறதே என்று பெற்றோர் முதலியோர் வருந்துவரே என்ற ஆதங்கம் மதிப்பிற்குரியது தான். எனெனினும் இச்சிறுமியின் நலன் சார்ந்து அவளது உளநலத் தேறலிற்கு இவ்விடயம் பேசாப்பொருள் என்ற நிலையில் இருந்து சமூத்தின் மனஅமைப்பில் நீக்கப்படவேண்டியதன் அவசியத்தைப் பெற்றோரும் புரிவது அவர்களிற்கும் பலன் தரும்.

3. மண்டபத்தில நடந்த நிகழ்வென்பதால் காதோடு காதாச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம்.

4. இ;ச்செய்தி கேட்பவரையும் அதிச்சிக்குள்ளாக்கும், தாம் சாhந்து நிற்கும் உறவமைப்புக்கள் எல்லாம் சிதறுகிறதோ என்று பயப்படத்தோன்றும் என்ற வகையில் செய்தியின் அதிர்ச்சியினை பேசித்தீர்பபபதும் ஆரோக்கியமானதே.

5. நூய்கடித்தது என்பதைக் காட்டிலும் நாய்கடித்தவர்கள் விலக்கிவைக்கப்படவேண்டும் என்பதாகவோ அவமானச் சின்னமாகவே இன்னாரைத் தான் நாய் கடிக்கும் என்பதாகவோ ஒரு சி;ந்தனை இருப்பின் அச்சிந்தனை பாதிக்கப்பட்டவரை மூலச்செயலைக் காட்டிலும் அதிகமாகப் பாதிகும். எனவே பேசுவது பேசாப்பொருள் மனவமைப்பின் ஆதிக்கத்தைக் குறைக்க உதவும்.

6. எனினும் இது சார்;து மூன்றாந்தரப்பாகக் கருத்துக் கூறுவதும் இப்பிரச்சினைக்குள்ளால் சென்று கொண்டிருப்பதும் ஒன்றல்ல என்பது உண்மை தான்.

ரதி, இத்திரியின் தலைப்பு யாழ் கள ஆண்களைப் பாண்டிய மன்னர் றேன்ச்சிற்குச் சித்தரித்துக் கண்ணகி சிலம்போடு நீதி கேட்பது போல் இருக்கிறதோ :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சே! அந்தக் கிழவன் ஒருபோதும் இப்படிச் செய்திருக்கவே கூடாது! சிலசமயம் அந்தப் பிள்ளை கூட தாத்தாவை உசுப்பேத்தியிருக்கலாம். 11 வயதுப் பிள்ளைக்கு இதுபற்றி தெரியாது என்று சொன்னால் அது சொல்பவர்களின் அறிவீனம். ஆனால் கட்டாயமாக அந்தக் கிழவன் அந்தப் பெட்டியின் தலையில இரண்டு குட்டுக் குட்டி "போடி அங்கால, போய் புத்தகத்தை எடுத்துப் படி என்று சொல்லி நல்ல தாத்தாவாக இருந்திருக்கலாம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத் திரியில் பதிவு இடாதற்கு காரணம் இப்படியான நிகழ்வுகளுக்கு நாம் வசிக்கும் நாகரிகம் அடைந்த நாடுகளில் அதற்கான சட்டதிட்டங்கள் ஆயிரமிருக்கு.இப்பவும் கொல்லையிலுக்க தான் போவம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

அதெண்டால் உண்மைதான் அண்ணை.வெள்ளைக்கார நாடுகள்ளை அருமையான ஆயிரம் சட்டங்கள் இருக்குதுதான்.இருந்தாலும் ????

பெத்த குழந்தைக்கு சாப்பாடுதண்ணி குடுக்காமல் சாகடிச்ச தாயும்..

பெத்த தாயின்ரை கள்ளப்புருசன் பிள்ளையை சுவரிலை அடிச்சு சாகடிச்சவனும்

பள்ளிக்கு போன பிள்ளையளை கற்பழிச்சு சாகடிச்சவங்களும்....

சொந்த பிள்ளையுடன் உறவாடி பிள்ளை குடுத்தவனும்......

4,5 வருசமோ உள்ளுக்கு இருந்துட்டு வந்து இப்ப

ஜாலியாய் ரோட்டிலை திரியுறாங்கள்.ஒருசிலதுகள் செய்த குற்றத்தையே திருப்பியும் செய்து போட்டு உள்ளுக்கை போயும் ஜாலியாத்தான் இருக்குதுகள்.

என்னடா கோட்டாலை தண்டனை தீர்த்து 5வருசத்தாலை வெளியிலை வந்துட்டான் எண்டு விசாரிச்சால்.....டாக்குதர் அவருக்கு கொஞ்சம் மண்டைப்பளுது எண்டு சேட்டிக்கர் குடுத்தவையாமெல்லே.

அண்ணையாணை இன்னுமொரு விசயத்தை காதோடைகாதாய் சொல்லுறன்.இப்ப எங்கடை சனமும் உந்த சேட்டிக்கர் எடுத்து வைச்சிருக்கினம்.கன விசயத்துக்கு பிரயோசனப்படுமாம்.உப்பிடி சேட்டிக்கர் எடுக்க மினைகட்டவைக்கு டாக்குத்தர்மார் கண்டகண்ட ஊசியைப்போட்டு உண்மையாய் மண்டை லூசாய்ப்போனவையும் இருக்கினமாம்.

சே! அந்தக் கிழவன் ஒருபோதும் இப்படிச் செய்திருக்கவே கூடாது! சிலசமயம் அந்தப் பிள்ளை கூட தாத்தாவை உசுப்பேத்தியிருக்கலாம். 11 வயதுப் பிள்ளைக்கு இதுபற்றி தெரியாது என்று சொன்னால் அது சொல்பவர்களின் அறிவீனம். ஆனால் கட்டாயமாக அந்தக் கிழவன் அந்தப் பெட்டியின் தலையில இரண்டு குட்டுக் குட்டி "போடி அங்கால, போய் புத்தகத்தை எடுத்துப் படி என்று சொல்லி நல்ல தாத்தாவாக இருந்திருக்கலாம். :)

11 வயது பேரப்பிள்ளை தாத்தாவை உசுப்பேத்தி இருக்குமா? :)

ஆனால் இந்த விடையம் ஜேர்மனியில் இருந்து வந்த ஒருவர் கூறினார் ஒரு பார்ட்டியில்.

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர் குடித்தவன் போக

கோம்பை சூப்பினலன் அகப்பட்ட மாதிரி இருக்கு.

இதற்காக ஆண்களே நீதி கூறுங்கள் என்று எப்படி கேட்கலாம்.

அறுபதுகளின் கடைசியில் இலங்கையையே கலக்கிய

கோகிலாம்பாளைத் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. நீங்களா சமுதாயம் மண்ணாங்கட்டி என்று ஒன்றை உருவாக்கி வைச்சிட்டு.. அவமானம் என்ற ஒன்றையும் சித்தரிச்சு வைச்சிட்டு.. அந்தக் குழந்தையை அழிக்கலாம் (முதலில் இந்தக் கதை உண்மையோ தெரியாது. ஒரு கருத்துக்கு இதை உண்மை என்று வைச்சுக் கொண்டால் கூட) என்று கூறவும் அழிக்கவும் கட்டளை போடுறிங்க.. அது தான் அந்தக் குழந்தைக்கு நல்லமாமும் எல்ல..!

இயற்கையில் உருவான எதுவும் இயற்கையின் விதிப்படி வாழ உரித்துடையது. மனிதர்கள் தமக்கு தாம் உருவாக்கும் சமூகம்.. சட்டதிட்டம்.. பண்பாடு.. கலாசாரத்தின் பெயரால் உயிர்களை வாழ விடாமல் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை..!உங்களின் வெட்டி கருத்துக்கும் வசைக்கும் ஒரு குழந்தையை பலியிடச் சொல்லுறீங்களே.. இதே உங்களின் குழந்தை ஒன்றுக்கு நிகழ்ந்திருந்தால்..???! சிந்தியுங்கோ..! :) :)

அந்த பிள்ளை வளர்ந்தபின் உன் தகப்பன் யார் என்ற கேள்விக்கு எனது பாட்டனார் என்று சொல்வதை எந்த சமூகம் ஏற்கும் என்றும் சொல்லுங்கள். சும்மா அது இது என்று எழுதாதீர்கள் இந்த சமூதாயத்தில் தான் அந்த பிள்ளை வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி அக்கா எங்கை இருந்து தான் இப்படியான தலைப்புகளை(விசயங்களை) பிடிக்கிறிங்களோ????

:)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளை வளர்ந்தபின் உன் தகப்பன் யார் என்ற கேள்விக்கு ..

இப்படியான கேள்விகளைத் தற்போதே யாரும் கேட்பதில்லை. நையாண்டி இல்லாத பொறுப்பான சமூகத்தில் பிள்ளை நன்றாக வாழ இடமுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.