Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கடிதம் எழுதலாமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b10269.jpg

வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது.

ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டாலும். கரண்டுபில்.வாடைகை துண்டு.அடையாள அட்டை.வீட்டு வாடைகை .தொலைபேசி பில் இப்பிடி ஒரு கட்டு கடுதாசி கொண்டு போகவேணும். அது பத்தாதெண்டு போற இடத்திலைவேறை பல கடுதாசியளிலை கையெழுத்து வாங்கி அவங்கள் வேறை கொஞ்ச கடுதாசியளை தலையிலை கட்டிவிடுவாங்கள். இப்பிடி இந்த கடுதாசியளை வைக்கிறதுக்கெண்டே தனி அலுமாரி ஒண்டு வேணும்.அதுமட்டுமில்லை கடிதப்பெட்டியை நான் கடிதப்பெட்டியெண்டு சொல்லுறதில்லை பில் பெட்டி எண்டுதான் சொல்லுறனான் ஏணென்டால் இப்ப வளந்த தொழிநுட்பத்தாலை யாரும் எனக்கு கடிதம் போடுறதும் இல்லை நானும் யாருக்கும் கடிதம் எழுதிறதும் இல்லை. மின்னஞ்சலும் ஸ்கைப்பும்தான். அதனாலை தபால் பெட்டிக்குள்ளை தனிய காசு கட்டவேண்டிய பில்லுகளும் விளம்பரமும் மட்டும்தான் கிடக்கும் .சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாய் கடுதாசி விழம்பரங்களை குறைக்கசொல்லி பிரான்ஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ஆனாலும் கடுதாசி குறைந்தபாடில்லை.பீசா கடை. தனியார் வங்கிகள். கிளியோசியம் நாடியோசியம் எண்டு ஏதாவது ஒரு கடுதாசி கட்டாயம் பெட்டிக்குள்ளை கிடக்கும் அதுகளை தனியா பிரித்தெடுத்து எறியிறதெண்டுறதே பெரியவேலை. சிலநேரம் அதுகளோடை சேத்து முக்கியமான கடுதாசிகளையும் சேத்து எறிஞ்சுபோட்டு பிறகு அவதிப்பட்டும் இருக்கிறன்.கடிதம் எண்டதும் தான் ஞாபகத்திற்கு வருகிது .முன்பு ஊரில் இருந்த காலங்களில் தபால் காரனை கண்டாலே யார் முதலிலை ஓடிப்போய் கடிதத்தை வாங்கிறதெண்டு என்னுடைய சகோதரங்களோடை ஒரு ஓட்டப் போட்டியே நடக்கும்..

பழுப்பு நிற உறையெண்டால் எண்டால் உள்ளுர் கடிதம் கரையிலை சிவப்பு நீல கோடு போட்ட உறையெண்டால் வெளிநாட்டு கடிதம். இந்த வெளிநாட்டு கடிதத்திற்காகத்தான் நாங்கள் அடிபடுறது காரணம் கடிதம் படிக்கிறதற்காக இல்லை அதிலை உள்ள முத்திரைக்காக . அதை கிழிச்செடுத்து சேகரித்து வைக்கத்தான். கையிலை பேனை பிடிச்சு கடிதம் எழுதி எத்தினை வருசமாகிறது??என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சுமார் பதினைந்து இருபது வருசங்களிற்கு முன்னர்அம்மாவிற்கு உறவுகளிற்கு நண்பர்களிற்கு என்று யாரிற்காவது கடிதம் எழுதுவது என்றாலே ஒரு தனி சுகமான அனுபவம்.அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன். உண்மையை சொல்லத்தானே வேணும்..அதே நேரம் கடிதம் எழுதும் அந்தந்த இடங்களிற்கு ஏற்றால் போல் சின்னதாய் ஒரு கவிதை ..பொன்மொழிகள். அடுக்கு மொழி..எதுகை மோனை என்று போட்டு கடிதத்தை அழகு படுத்தி நாலு ஜந்து பக்கத்தில் எழுதியவற்றை எல்லாம் சரியாக எழுதியிருக்கிறோமா என் ஒன்றிற்கு பல தடைவை சரிபார்த்;து என்பலப்பில் போட்டு ஒட்டி அனுப்பி விட்டு அதற்கான பதில் வருகிறதா என கடிதக்காரனையும் தபால் பெட்டியையும் பார்த்;து ஏங்கிய காலங்கள்.எத்தனை....அது மட்டுமில்லை வாழ்த்து மட்டைகள் அனுப்புவதற்காக ஒவ்வொருவருக்கும் எப்படியான வடிவங்கள் அல்லது படங்கள் பிடிக்குமென தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் அவர்களிற்கான வாழ்த்து மட்டைடைகளை பல கடைகளில் ஏறி இறங்கி தெரிவுசெய்து அவரவருக்கு ஏற்றால் வசனங்களை எழுதி அனுப்புவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இந்த வருடம் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ்சிலும் ..தொ.பேசியிலும். மின்னஞ்சலிலும் வருடப்பிறந்த சில நிமிடங்களிலேயே முடிந்து போய்விட்டது. நான் பல வருடங்களாய் நாடு நாடாய் அலைந்து திரிந்த காலங்களிலும் சில கடிதங்களை தவற விடாமல் பொக்கிசமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் அவற்றில் முதல் காதலியின் கடைசிக்கடிதம்... தற்சயம் உயிரோடு இல்லாது போய்விட்ட சில நண்பர்களினது கடிதங்கள்...அம்மாவினது சில கடிதங்கள். என்பன முக்கியமானது. பேனை பிடித்து எழுதாததாலை என்ரை கையெழுத்து என்ன வடிவத்திலை இருக்குமெண்டதே மறந்து போச்சு. இப்ப பேனையை தொடுறதே எங்காவது அலுவலகங்களில் கையெழுத்து போடவும்.(முக்கியமாய் வங்கியில் கடன் பத்திரங்கள் )வீட்டு வாடைகை கட்டுவதற்கு காசோலையை நிரப்பி கையெழுத்து போட மட்டும்தான். மற்றும்படி இந்த கதையை எழுதியதைப்போலை கணணிக்கு முன்னாலை இருந்து டொக் .... டொக் ..... டொக்...தான்.. விரைவில் இதுவும் மாறி ஸ்கிறீன்டச் திரை தொடுகை எழுத்து கணணி வாங்கிட்டால் டொக் ..டொக் சத்தமும் வராது. காலப்போக்கிலை நாங்கள் மனசிலை நினைக்கிறதே கணணி திரையிலை எழுத்துக்களாய் விழுகிற காலம் வந்தாலும் வரலாம்..அப்பிடி நேர செலவு மிச்சம் எண்டு சந்தோசப்பட்டாலும்.. மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட எனது அனுபவமும் இப்படித்தான்..

எனக்கு வந்த கடிதங்களைத் தேதிவாரியாக அடுக்கி வைத்திருக்கின்றேன். ஆனால் இப்போது யாரும் யாருக்கும் எழுதுவதில்லை!

சிலவேளைகளில் நேரடியாக கதைக்கமுடியாத விடயங்களை கடிதங்களில் இலகுவாக எழுதிவிடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கதை சாத்திரியார்.

முன்பு ஊரில் இருந்து கடிதம் வரும். தபால்காரன் எப்ப வருவான் என்று ஆவலாக பார்க்கும் காலம் ஒன்றிருந்தது. letter.gif

இப்போ..... பில்லுகள் கட்டுற அலுவலக கடிதங்கள் வருவதால்.... தபால் காரன் ஏன் வாறான்? என்று அலுக்கும் காலமாக போய்விட்டது.1306309.gif

  • தொடங்கியவர்

கிருபன் உங்கள் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தானென்றால் எப்படி காதலிகளிற்கு கடிதங்கள் எழுதியதா??..(அய் மாட்டிவிட்டிட்டன்) மற்றது நீங்கள் சொன்னது போலை நேரடியாக கதைக்க முடியாத பல விடயங்களை எழுத்தில் வடிக்கலாம்..அது நிச்சயம் படிப்பவர் மதை தொடும். இங்கும் அது காதலர்களிற்கே அது பெரிதும் உதவும். :) :)

உண்மையான கதை சாத்திரியார்.

முன்பு ஊரில் இருந்து கடிதம் வரும். தபால்காரன் எப்ப வருவான் என்று ஆவலாக பார்க்கும் காலம் ஒன்றிருந்தது. letter.gif

இப்போ..... பில்லுகள் கட்டுற அலுவலக கடிதங்கள் வருவதால்.... தபால் காரன் ஏன் வாறான்? என்று அலுக்கும் காலமாக போய்விட்டது.1306309.gif

வருசக்கடைசி எல்லா வரிகளும் கட்டி நொந்து போய்தான் இந்தக் கதையையே எழுதினேன் :D:(

வீட்டுக்கு வீடு வாசல்படி போல. நானும் தபால்களை பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. இப்பத்தான் நத்தார் விடுமுறையில் வந்த எல்லா கடிதங்களையும் பிரித்துப் பார்த்து இடிந்து போயிருந்தேன். ஏதோ சொந்த அனுபவம் வாசித்த ஒரு உணர்வு.

அந்த பழைய கடிதங்களை கவனமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். அவற்றை வாசிக்கையில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படும். :)

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தானென்றால் எப்படி காதலிகளிற்கு கடிதங்கள் எழுதியதா??..(அய் மாட்டிவிட்டிட்டன்) மற்றது நீங்கள் சொன்னது போலை நேரடியாக கதைக்க முடியாத பல விடயங்களை எழுத்தில் வடிக்கலாம்..அது நிச்சயம் படிப்பவர் மதை தொடும். இங்கும் அது காதலர்களிற்கே அது பெரிதும் உதவும். :D:(

காதலிகளுக்குக் கடிதங்கள் எழுதினது உண்மைதான். ஆனால் பதில் கடிதங்கள் உங்களுக்கு வந்தமாதிரி எனக்கு வரவில்லை :)

இந்த வருடம் கொழும்பு போனபோது நான் முன்னர் எழுதிய கடிதங்களை நானே வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது (வீட்டாரும் எங்களைப்போலவே எல்லாக் கடிதங்களையும் பொக்கிஷமாகப் போகும் இடங்கள் எல்லாம் காவிக்கொண்டிருக்கின்றனர்). என்னுடைய சிந்தனைகள் மாறவில்லை என்றுதான் கனகாலம் நினைத்திருந்தேன், ஆனால் எழுதிய கடிதங்களை வாசித்தபோது சில விடயங்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தன! :)

இன்னுமொன்று: ஆரம்ப காலக் கடிதங்கள் எல்லாம் ஆங்கிலம் கலவாத சுத்தத் தமிழில் இருந்தன. பின்னர் எழுதிய கடிதங்களில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருந்தது. சுத்தத் தமிழனாக இருந்து எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் பண்ணும் (உ+ம்: open/close பண்ணுவது) "பண்ணி"த் தமிழனாக மாறிவிட்டது கவலையைத் தந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளிற்கேற்ப நல்ல இணைப்பு சாத்திரி! நான் இன்றும் எனது சகோதரி ஒருவருக்கும், சில கோவில் அலுவல்களிற்கும் கடிதம் எழுதுவதுண்டு! அதுபோல் அவவும் இங்கு கடிதம் போடுவா. போனில் கதைத்தாலும் ஓய்வான நேரத்தில் கடிதம் எழுதுவது தனி சுகம்தான்! :):)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அண்மையில் இது பற்றி நினைத்தேன்.முந்தி அம்மாவாவது எனக்கு அடிக்கடி கடிதம் போடுவா.இப்ப எதற்கெடுத்தாலும் தொலைபேசி :)

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா போங்கப்பா கடிதம் என்ன

யாழில் எழுதவே பெரிய பாடாய்க்கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு காலம் கடிததத்தை எதிர்பாக்கிறது.ஒவ்வொரு முறை கடிதம் வரும் போதும் இதிலாவது கலியானத்தைப்பற்றி ஏதாவது வரும் என்று நினைச்சுக்கொன்டு திறக்கிறது.ஆனால் கலியானத்துக்கு பதிலா காசைப்பற்றிதான் இருக்கும். :unsure: இப்ப கட்டியபின் :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள காதலிக்கு உன் கண் என்னைக் கவர்ந்தது மேலும் தொடர்வது உனது விருப்பம். இது நான் முதல் முதலில் விரும்பிய ஒருபெண்ணிற்காக எழுதிய கடித வரிகள். ஆனால் அதைப் பார்க்காமலேயே அவள் அத்தருணங்களை நிராகரித்துவிட்டாள். கடிதம் எழுதுதல் என வரும்போது இதுவும் நினைவுவரும். எந்தையின் கடிதங்கள் மிக அன்பாகவும் அழகான சொற்றொடராகவுமிருக்கும் அவர் எனக்கு இறுதியாக எழுதிய கடிதம் பதின்மூன்றுவருடங்களாகப் பொக்கிசமாகச் சேமித்துவைத்திருக்கிறேன். நன்றி சாத்திரி எனது நினைவுகளை மீட்டதற்கு (கண்ணீருடன்)

கலியாணம் என்ற கோட்டைக்குள் உள்ளே இருப்பவன் வெளியே போக ஆசைப்படுகிறான்.

வெளிளே இருப்பவன் உள்ளே வர ஆசைப்படுகிறான்.

உள்ளுக்கு வந்திட்டால் ஆயுள் தண்டனை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளிற்கேற்ப நல்ல இணைப்பு சாத்திரி! நான் இன்றும் எனது சகோதரி ஒருவருக்கும், சில கோவில் அலுவல்களிற்கும் கடிதம் எழுதுவதுண்டு! அதுபோல் அவவும் இங்கு கடிதம் போடுவா. போனில் கதைத்தாலும் ஓய்வான நேரத்தில் கடிதம் எழுதுவது தனி சுகம்தான்! :unsure::lol:

சுவியண்ணா எனக்கும் கடிதம் எழுத ஆசையாதான் இருக்கு ஆனால் முதல் பிரச்சனை யாருக்கு எழுதியது எண்டது அடுத்தது ஒரு வரி எழுதினதும் விரல் வலிக்கிது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கதை சாத்திரியார்.

முன்பு ஊரில் இருந்து கடிதம் வரும். தபால்காரன் எப்ப வருவான் என்று ஆவலாக பார்க்கும் காலம் ஒன்றிருந்தது. letter.gif

இப்போ..... பில்லுகள் கட்டுற அலுவலக கடிதங்கள் வருவதால்.... தபால் காரன் ஏன் வாறான்? என்று அலுக்கும் காலமாக போய்விட்டது.1306309.gif

உண்மைதான் தபால்காரன் இப்ப வில்லனாய் தெரிகிறான். தபால் பெட்டியை திறக்கும்போதே கடவுளே காசு கட்டசொல்லி ஒண்டும் வரக்கூடாது எண்டு வேண்டுதலோடைதான் திறக்கவேண்டியிருக்கு :D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் என்னும் போது தான் முன்பு எனது சகோதரிகள்,அம்மா,அப்பா,அம்மம்மா என எல்லோரும் ஒவ்வொரு தனிக்கடிதம் எழுதி ஒரு என்வலொப்பில் வைத்து என்வலொப்பின் முன் பக்கம் நிறைய முத்திரைகள் குற்றி சுமாரான நிறையில் தான் கடிதம் வரும்.வேலையால் வந்து ஒரு மணித்தியாலம் வரை வாசிப்பதுண்டு. அதற்குள் சகோதரிகளின் குண்டும் வேறென்ன காசு தான் :D .அதற்கு வேணும் இதற்கு வேணும் என்று கணக்கு போட்டு அனுப்புவார்கள்.எல்லோரும் திருமணமாகியதும் கடித போக்குவரத்து நிறுத்தப்பட்டு தொலைபேசி , மின்னஞ்சல் மட்டும் தான். வருடப்பிறப்பு, எனது பிறந்தநாள் இரண்டுக்கும் காட் மட்டும் போடுவார்கள்.

என்ன இருந்தாலும் எனது பெறாமகளும்,மகனும் வீட்டுக்கு வந்து விட்டு போகும் போது தரும் முத்தங்கள் விலை மதிக்க முடியாதவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் உங்கடை கடிதக்கதை உண்மையளை சொல்லுது.

இருந்தாலும்.......

அந்தப்படம் இன்னும் தூக்கலாய் இருக்கு....சும்மா சொல்லக்கூடாது பயங்கர ரசனைக்கரான் தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள காதலிக்கு உன் கண் என்னைக் கவர்ந்தது மேலும் தொடர்வது உனது விருப்பம். இது நான் முதல் முதலில் விரும்பிய ஒருபெண்ணிற்காக எழுதிய கடித வரிகள். ஆனால் அதைப் பார்க்காமலேயே அவள் அத்தருணங்களை நிராகரித்துவிட்டாள். கடிதம் எழுதுதல் என வரும்போது இதுவும் நினைவுவரும். எந்தையின் கடிதங்கள் மிக அன்பாகவும் அழகான சொற்றொடராகவுமிருக்கும் அவர் எனக்கு இறுதியாக எழுதிய கடிதம் பதின்மூன்றுவருடங்களாகப் பொக்கிசமாகச் சேமித்துவைத்திருக்கிறேன். நன்றி சாத்திரி எனது நினைவுகளை மீட்டதற்கு (கண்ணீருடன்)

உங்கள் கடிதத்தினை பிரித்து படித்திருந்தால் சிலநேரம் உங்களையும் கவர்ந்திருப்பாரோ என்னவோ?? :D சரி அவர் கொடுத்து வைக்கவில்லை போலை. எனக்கு தந்தையின் எழுத்தினை சேகரிக்கும் பாக்கியம் கூட கிடைத்திருக்கவில்லை அந்த விதத்தில் நீங்கள் அதிஸ்ரசாலிதான் :)

அது ஒரு காலம் கடிததத்தை எதிர்பாக்கிறது.ஒவ்வொரு முறை கடிதம் வரும் போதும் இதிலாவது கலியானத்தைப்பற்றி ஏதாவது வரும் என்று நினைச்சுக்கொன்டு திறக்கிறது.ஆனால் கலியானத்துக்கு பதிலா காசைப்பற்றிதான் இருக்கும். :unsure: இப்ப கட்டியபின் :D:lol::lol:

இப்ப நிம்மதி எண்டுறீங்கள் வாழ்க வளர்க :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் என்னும் போது தான் முன்பு எனது சகோதரிகள்,அம்மா,அப்பா,அம்மம்மா என எல்லோரும் ஒவ்வொரு தனிக்கடிதம் எழுதி ஒரு என்வலொப்பில் வைத்து என்வலொப்பின் முன் பக்கம் நிறைய முத்திரைகள் குற்றி சுமாரான நிறையில் தான் கடிதம் வரும்.வேலையால் வந்து ஒரு மணித்தியாலம் வரை வாசிப்பதுண்டு. அதற்குள் சகோதரிகளின் குண்டும் வேறென்ன காசு தான் :D .அதற்கு வேணும் இதற்கு வேணும் என்று கணக்கு போட்டு அனுப்புவார்கள்.எல்லோரும் திருமணமாகியதும் கடித போக்குவரத்து நிறுத்தப்பட்டு தொலைபேசி , மின்னஞ்சல் மட்டும் தான். வருடப்பிறப்பு, எனது பிறந்தநாள் இரண்டுக்கும் காட் மட்டும் போடுவார்கள்.

என்ன இருந்தாலும் எனது பெறாமகளும்,மகனும் வீட்டுக்கு வந்து விட்டு போகும் போது தரும் முத்தங்கள் விலை மதிக்க முடியாதவை.

வாழ்த்து மட்டையாவது வருகிறதே அதை நினைத்து சந்தேசப் படுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...

ஏன் பயப்பட வேணும் ,மற்றவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதும் தெரியவரும் ஆகவே எல்லாம் சில வேளை சுபமாக முடியும் :D:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்கடை கடிதக்கதை உண்மையளை சொல்லுது.

இருந்தாலும்.......

அந்தப்படம் இன்னும் தூக்கலாய் இருக்கு....சும்மா சொல்லக்கூடாது பயங்கர ரசனைக்கரான் தான் :D

குமாரசாமியார் எனக்கு பிடிச்சதே இதுதாய்யா :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் என்ற கோட்டைக்குள் உள்ளே இருப்பவன் வெளியே போக ஆசைப்படுகிறான்.

வெளிளே இருப்பவன் உள்ளே வர ஆசைப்படுகிறான்.

உள்ளுக்கு வந்திட்டால் ஆயுள் தண்டனை தான்.

ஈழப்பிரியன்,

ஆயுள்தண்டனையைத் தானே எல்லோரும் விரும்பிச் சுமக்கிறீங்கள். ஆனால் கனபேர் கலியாணம் கட்டினாப்பிறகு இப்பிடித்தான் பு(அ)லம்புகினம். :D

சாத்திரி கடிதம் எழுதலாமா ? கேள்வி கேட்டு கடிதம் பற்றி சொல்லீட்டியள். ஆனால் அந்தக் கடிதத்தில என்ன எழுதியிருந்ததெண்டதை கடைசிவரை சொல்லவேயில்லை :lol:

அதுசரி அந்தக் கடிதத்தில எழுதின விடயம்தான் என்ன? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை மீட்ட வைத்ததற்கு நன்றி சாத்ரிரி ..... இப்ப எல்லாம் எங்கே கடிதம் வருது...சாத்திரி சொன்னது போல பில் தான் வருது... ஆனல் என்ன பில் ... எப்ப ... எந்த ... அமௌன்ட் ல வரும் எண்டு தெரியிறதால நீங்கள் சொல்லுற மாதிரியான அதிர்ச்சி ஒண்டும் இருக்கிற இல்லை. அதோட எனக்கு வட்டி கட்ட பிடிக்காததால, மாத கடைசில எல்லா பில்லும் கட்டி போடுவேன். ஓர் பைலிங் காபெநெட் இலே எல்லாம் ஓர்டர் ஆக ஒழுங்கு படுத்தி வைப்பது பழக்கம்....ஆனல் போன வருடம் ஒரு விறுத்தம் இல்லாத ஆண்டாக அமைந்ததால் எல்லாம் ஒரே குப்பையாக இருந்து... நடு ரூம் இல கொட்டி வருட பிறப்பு அண்டு தான் ஒழுங்கு பண்ண முயற்சித்து என்னும் முடிய இல்லை.:(

நுனாவிலான் சொன்னது போல வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதி ஒரு என்வெலப் இல வைச்சு அனுப்பிட்டு பதிலுக்கு காத்து இருக்கிறதிலே ஒரு சுகமே இருக்கு.... :wub:

கிருபன் சொனனது போல சில விடயங்கள கடிதத்தில் எழுதுவது சுலபம் ஆனால் சில வேளைகளில் தவறான புரிந்துணர்வையும் தந்து/கொடுத்து விடும். :rolleyes:

நானும் சில பழைய கடிதங்களை (வீட்டிற்கு எழுதினது தான் <_< ) பாதுகாப்பாக வைத்து இப்பவும் படிப்பதுண்டு.

இப்போது வாழ்த்துக்கள் எல்லாம் தொலை பேசி, முக நூல், மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்கிறதால, கடிதம் என்ற கதைக்கே இடம் இல்லை. ஆனாலும் அப்பா அம்மா தங்களின் சகோதரங்களுக்கு இப்பவும் கடிதம் எழுதுவார்கள்... பதில் கடிதம் வாசிக்க சுவாரசியமாக இருக்கும். காசை பற்றி எழுதி இருந்தால் தெரியாத மாதிரி திரும்ப குடுத்திட்டு போய்டுவேன். :lol:

எனக்கு இப்ப தொலை பேசியும் அவ்வளவாக பிடிக்க இல்லை... அனேகமாக மின் அஞ்சல் மற்றும் முக நூல். அதுவும் வாழ்த்து சொல்லுறதுக்கு, எல்லோரின் மின் அஞ்சல் முகவரியையும் Bcc இலே போட்டு, பொதுவான ஒரு வாழ்த்தை எழுதி அனுப்பிறது.

இது நல்ல ஐடியா வ படவில்லை...இனிமேலாவது தொலைபேசியில் கொஞ்சம் கதைக்கனும் எண்டு நினைத்தேன்.... ஆனாலும் புதுவருட வாழ்த்து எல்லா உறவினர் நண்பர்களுக்கும் ஒரே மின் அஞ்சல் தான். :D

வர வர சோம்போரியா வாறோம் போல இருக்கு :(

Edited by Sabesh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர வர சோம்போரியா வாறோம் போல இருக்கு :(

சபேஸ் சோம்பேறியா வாறம் போலை இல்லை சேம்பேறியாகியாச்சு..ஆனால் மனிதனின் தேவைகள் அதிகரிக்க எழுதுவதற்கானநேரங்களும் குறைந்து கொண்டுதானே போகின்றது :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நிகழ்வோடு எழுதிய கதை அழகு சாத்திரி.

இப்போ எல்லாமே தொலைபேசியும் எஸ்.எம்.எஸ். தான்.

போட்டிருக்கும் படம் அசத்தல். ஆனால் நாக்கால் எச்சில் போட்டு ஒட்டுவதை நினைத்தால் தான் என்னமோ பண்ணுது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,

ஆயுள்தண்டனையைத் தானே எல்லோரும் விரும்பிச் சுமக்கிறீங்கள். ஆனால் கனபேர் கலியாணம் கட்டினாப்பிறகு இப்பிடித்தான் பு(அ)லம்புகினம். :D

சாத்திரி கடிதம் எழுதலாமா ? கேள்வி கேட்டு கடிதம் பற்றி சொல்லீட்டியள். ஆனால் அந்தக் கடிதத்தில என்ன எழுதியிருந்ததெண்டதை கடைசிவரை சொல்லவேயில்லை :lol:

அதுசரி அந்தக் கடிதத்தில எழுதின விடயம்தான் என்ன? :lol:

அந்தக் கடிதத்திலை என்ன இருந்ததென்று அறிய அவ்வளவு ஆசையா??? முதல் காதலியின் கடைசிக் கடிதம் எண்டால் எப்பிடி இருக்கும்..உருப்படாதவனே உன்னை நம்பி பிரயோசனம் இல்லை ஏழு வருசமாய் காத்திருந்தாச்சு இனி எத்தினை வருசம் காத்திருந்தாலும் நீ திருந்தப் போறதும் இல்லை ஊருக்கு திரும்பவந்து என்னை கலியாணம் கட்டப்போறதும் இல்லை நீ ஒரு வீணாய் போன வெறும்பயல்..என்பதை கொஞ்சம் நாகரீகமாய் எழுதியிருந்தாள்.. இப்ப சந்தேசமா?? :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.