Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா !

இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்புகொள்ளும் அளவில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன . சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் முன்னோர்கள் நிருபர்களாக இருந்திருக்கின்றனர் .

அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கின்றன . மத குருமார்களோ வானியல் வல்லுனர்களாக , ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகக் கோலோச்சி இருந்தார்கள் . அவர்களின் கணிப்புன் அப்படியே பலித்தது .

கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்து பல அற்புத உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலும் , நமது மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல குறிப்புகள் உள்ளன .

மாவீரன் அலெக்ஸ்சான்டரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்ஸ்சான்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்து இருக்கிறார்கள் . இதனால் பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கு அலெக்ஸ்சாண்டார் போவதை தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் நகருக்கு சென்ற போது , இந்திய ஜோதிடர்கள் கணித்த படி , எதிரிகளால் உணவில் , விஷம் வைத்து கொல்லப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .

இயேசு கிறிஸ்து பிறந்த போது , ஏரோது மன்னனின் அரண்மனையில் இருந்த ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில் ஒரு குழந்தை பிறப்பதாகவும் , அந்த குழந்தை யூத மக்களின் தலைவனாக மாறுவான் , ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் .

இதனால் கலக்க மடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதிற்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்தார் . யூதர்களை காக்கும் கடவுளாகவே மதிக்கப்பட்டார் . ஜோதிடம் பலித்தது .

கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதுவேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் , தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து பிறந்த குழந்தைகளைக் கொன்றான் . ஆனாலும் கிருஷ்ணன் தப்பிக்கக் கடைசியில் கம்சனை வதம் செய்தார் . ஜோதிடம் பலித்தது .

ஜூலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . தனது நண்பர்களாலேயே ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை முன் கூட்டியே எச்சரித்திரிந்தார் . அப்படியே நடந்தது . ஜோதிடம் பலித்தது .

நெப்போலியன் காலத்தில் லினோர் மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படையெடுத்துச் சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்தார் . ஆனால் அதை நெப்போலியன் பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை நடத்திச் சென்று தோல்வியைத் தழுவினார் . ஜோதிடம் பலித்தது .

இவ்வாறு பண்டைகாலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிடக் கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .

குழந்தைகள் பிறந்த மாதம் , நேரம் அடிப்படையில் ஜாதகம் கணிக்கும் வழக்கும் ஏற்பட்டு , புதிய பாபிலோனின் காலம் கி . மு . 600 முதல் 300 வரை உள்ள காலக் கட்டத்தில் கணிக்கப்பட்ட 16 ஜாதகங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

இப்படி உயர்ந்த கலையாக , விஞ்ஞானமாகக் போற்றப்பட்ட ஜோதிடம் இன்று வெறும் ஏமாற்று வேலை , உண்மையில்லை என்று இதன் வரலாறு , சூட்சமங்கள் அறியாமையில் பிதற்றுகிறார்கள் .

ஜோதிடக் கலையை இவர்கள் மறுப்பதற்கு அடிப்படை காரணம் ஒன்று தான் . கிரகங்கள் , சூரிய , சந்திரர்கள் , மனிதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை உண்மை என்று ஒத்துக்கொண்டாலும் , இந்த தாக்கங்கள் பூமியில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி ஜாதகம் , குணநலன் தானே அமையும் . எப்படி மாறுதல் , வித்தியாசம் ஏற்படும் என்பது தான் . இதனால் ஜோதிடம் உண்மையில்லை என்று கூறுகிறார்கள் .

நாம் அவர்களுக்கு வைக்கப்படும் கேள்விகள் சில :

* ஒரு மனிதனின் செயல்பாடும் , உருவ அமைப்பும் , எண்ணங்களும் , மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் , ஒரே பெற்றோருக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியாக இல்லையே ? உருவ அமைப்பிலும் , செயல்பாடுகளிலும் , எண்ணங்களிலும் , ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளதே ஏன் ?

* ஒரே நேரத்தில் பத்துப்பேர் சேர்ந்து ஒரே வகை உணவை உண்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . அதில் ஒருவருக்கு மட்டும் ஏன் வாந்தி , பேதி போன்றவை ஏற்படுகிறது . இது உணவில் உள்ள கிருமிகளால் ஏற்பட்டிருக்கும் என பதில் கூறுவார்களானால் மற்ற ஒன்பது பேரும் அதே உணவை தானே உட்கொண்டார்கள் ? அவர்களை ஏன் அந்த நோய்க்கிருமிகள் தாக்கவில்லை ?

*ஒரு வகுப்பில் இருக்கும் 40 மாணவர்களுக்கும் பொதுவாகத்தான் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . ஆனால் ஒரு மாணவன் 100 மார்க்கும் , வேறு ஒருவன் ' 0 ' மார்க்கும் வாங்குகிறான் . ஏன் இந்த வேறுபாடு ?

இது போன்று ஆயிரம் கேள்விகளை நாம் அவர்களிடம் கேட்கலாம் . அவர்களும் பல பதில்கள் கூறுவார்கள் . இந்த கேள்வி பதில் அனைத்தையும் அலசிப் பார்த்தால் அடிப்படைக் கருத்து ஒன்று இருப்பதை உணர முடியும் .

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை , ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை . ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய தனித்தன்மைகள் உள்ளன .

ஒரு மனிதனின் கைரேகையைப்போல் இன்னொரு மனிதனின் கைரேகை இருப்பதில்லை . இதன் அடிப்படையிலேயே குற்றங்களைக் கண்டுபிடிக்க தடைய இயல் வல்லுனர்கள் கை ரேகையில் துணையை நாடுகின்றனர் . இது ஏன் ?

மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் , தாவரங்களுக்கும் கூட இது பொருந்தும் , ஒரே வகை மரத்தில் கூட ஒவ்வொரு மரமும் , ஒவ்வொரு வகை கிளைகள் , இலைகள் வளரும் , இது ஏன் ?

வண்ணத்துப் பூச்சிகளில் பல வகைகள் உண்டு . ஆனால் ஒரே வகை வண்ணத்துப்பூச்சியில் கூட வெவ்வேறு வகை, வண்ணக் கலவைகளுடன் காணப்படுகிறது . ஒரு வண்ணத்துப் பூச்சியை போல் மற்றொரு வண்ணத்துப் பூச்சி இருப்பதில்லை . இது ஏன் ?

இயற்கையின் படைப்பில் எந்த ஒரு பொருளும் அச்சு அசலாக ஒன்று போல் இருப்பதில்லை . ஒவ்வொன்றும் அதனதன் இயல்பின் தனித்தன்மை உடையதாகவே உள்ளது . இது ஏன் ?

ஏதேதோ காரணங்களால் தனித்தன்மை உருவாகிறது என்றால் , ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகமும் , குணம் , பழக்க வழக்கம் , நல்லது , கெட்டது மனிதனுக்கு மனிதன் வெவ்வேறாக ஏன் அமையக்கூடாது .

உலகில் இந்திய ஜோதிடம் என்பது காலத்தால் சோதிக்கப்பட்ட மிகப் பழமையான ஜோதிட முறையாகும் . ஜோதிஷ என்னும் சமஸ்கிரித வார்த்தை ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள்படுகிறது . இந்து (அ) இந்து ஜோதிடத்தை மேலை நாட்டினர்கள் வேதாங்க ஜோதிடம் என்று அழைக்கிறார்கள் . வேத காலத்திலிருந்து ஜோதிட சாஸ்திரத்தின் சுவடுகள் தெரிகின்றன . நமது வேதங்களில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது .

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை விதி என்ன ?

ஒரு கரு உருவாகும் நேரத்தைப் பொறுத்து எதிர்காலம் அமைகிறது . ஆண் , பெண் உடல் உறவால் , கருத்தரித்தல் அனைத்து மனிதர்களுக்கும் , ஒரே நேரத்தில் நடைபெறுவது இல்லை . இதனால் மாறுபட்ட ஜாதகம் அமையலாம் .

* கரு வளரும் காலத்தில் நிலவும் கோள்களின் கதிர் வீச்சு அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது கருவின் வளர்ச்சி தாய்க்கு தாய் அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து வேறுபடும் . இதன் காரணமாக ஒரே மாதிரி ஜாதகம் அமையாது போகலாம் .

* குழந்தை பிறக்கும் தருணத்தில் நிலவும் கோள்களின் கதிர்வீச்சு அமைப்பும் , அந்த நேரத்தில் இருந்த பிரபஞ்ச சக்தியுமே அந்த குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது .

* இந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று உள்ளது . அது பூர்வஜென்ம - பாவ புண்ணியங்களும் , முன்னோர்களது பாவ - புண்ணியங்களும் பிறக்கும் குழந்தைகளை வந்து சேர்கிறது. கர்மா ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதாகும் .இதை நமது வேதாங்க ஜோதிடம் உறுதியாக ஏற்றுக்கொள்கிறது .

* அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை , தீவினைகளின் தன்மையை பார்த்து , உணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் , தீவினை செய்தோர் , தீமைகளையும் அடையும் படி பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாட்டின் படி அமைவதுதான் ஜாதகம் .

இந்த காரணத்தால் ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகம் , குணம் , நல்லது (அ) கெட்டது அனைத்தும் மனிதனுக்கு மனிதன் கண்டிப்பாக மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை . இதை அனுபவ பூர்வமாக நம் வாழ்க்கையில் அனுபவித்து வருவதே உறுதியான ஆதாரமாகும் .

சூரிய ஒளிக்கதிர்களும் , குருவின் ஒளிக்கதிர்களும் இணைந்து பூமியில் உள்ள ஜீவராசிகள் கருத்தரிக்கும் படிச் செய்கின்றன . மேலும் கர்ப்பத்தில் கருவளர்ச்சியில் மூன்றாம் மாதத்தில் இருந்து குறு கிரகமே காரணமாக கை , கால் , போன்றவை வழர வழி செய்கிறது , என்பதை வேத காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள் தெரிவித்த கருத்து , வேதாங்க ஜோதிடம் மூலம் தெரிய வருகிறது .

* தாய் கருவுற்றிருக்கும் போது சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணவில்லை எனில் கருவளர்ச்சி பாதிக்கப்படுவதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .

* கருவுற்றிக்கும் காலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் முக்கியமாக வைரஸ் தொற்றுதல் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .

* தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கூட கருவை பாதித்து பிறவி நோய் (அ) ஊனம் ஏற்படுத்தலாம் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .

* பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி செலுத்தப்படுகிற கதிரிகளிலுள்ள எக்ஸ் கதிர்கள் , காமா கதிர்கள் , ஆல்பா கதிர்கள் , நமது உடம்பில் உள்ள செல்களை பாதித்து மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .

அப்படியானால் ஒரு கரு உருவாகும் , வளரும் மற்றும் ஜனன கால கட்டங்களில் பாதகமான கோள்களின் நிலையால் பிரபஞ்சக் கதிர்கள் , மனித கரு (அ) உடலில் ஊடுருவும் போது மாறுதல்களை ஏற்படுத்தி அக்குழந்தையின் ஜாதகத்தை மாற்றிவிடும் என ஜோதிடக்கலை கூறினால் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது .

பதவியில் இருக்கும் போது ஜனாதிபதி உயிரிழப்பு என்பது எல்லா நாடுகளிலும் நடப்பது இயல்பு . ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஏழு பேர் மட்டுமே பதவியில் இருக்கும் போது உயிர் இழந்துள்ளனர் . இந்த ஜனாதிபதிகள் அனைவருமே 20 வருடங்களுக்கு ஒரு முறை வரும் வியாழன் , சனி கிரகங்கள் சேர்க்கையின் போது பதவி ஏற்றவர்கள் .

அமெரிக்க ஜனாதிபதிகள் பதவி ஏற்ற வருடம் இறந்த காரணம்

வில்லியம் ஹாரிசன் 1840 நிமோனியா

ஆபிரகாம் லிங்கன் 1860 சுடப்பட்டார்

ஜேம்ஸ் ஹார்பீல்ட் 1880 சுடப்பட்டார்

வில்லியம் மெக்கின்லி 1900 சுடப்பட்டார்

வாரன் ஹார்டிங் 1920 மாரடைப்பு

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 1940 மூளையில் இரத்தக்கசிவு

ஜான் ஆர் . கென்னடி 1960 சுடப்பட்டார்

ரெனால்டு ரீகன் 1980 சுடப்பட்டார் (பிழைத்துக்கொண்டார் )

இதில் ரெனால்டு ரீகன் மட்டும் பிழைத்துக் கொண்டதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் மிக நல்ல நிலையில் இருந்ததே என்பது பிரபல ஜோதிடர்களை கருத்து .

அபாயம் விளையும் 13 , 26 ம் தேதிகள் !

26 - 01 - 2001 நாட்டை உலுக்கிய குஜராத் பூகம்பம்

26 - 12 - 2004 சுனாமியால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

26 - 07 - 2005 மும்பையில் வரலாறு காணாத மழையின் பாதிப்பு

26 - 09 - 2008 ஆமதாபாத்தில் பெரிய குண்டு வெடிப்பு

26 - 11 - 2008 மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்

13 - 12 - 2001 பயங்கரவாதிகள் பார்லிமென்ட் மீது தாக்குதல்

13 - 05 - 2008 ஜெயப்பூரில் குண்டு வெடிப்பு

13 - 09 - 2008 டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு

- ஆதாரம் தினமலர் 01 - 12 - 2008

இந்தியா சுதந்திரம் அடைந்து தற்பொழுது 62 ம் ஆண்டு ( 6 + 2 = 8 ) மற்றும் மேற்படியுள்ள சம்பவங்கள் ( 1 + 3 = 4 ), ( 2 + 6 = 8 ) ஆகியவற்றில் வரும் எண் . 4 ம் 8 ம் நல்ல எண் அல்ல என்று நமது மனித சமுதாயத்திலும் 8 ம் எண் ஜோதிடத்திலும் நம்பப்படுகிறது . ஏன்? ஜோதிட ஆராய்ச்சிக்கு உட்பட்டது .

ஜோரா இருக்குமா பங்கு சந்தை ? ஜோதிடர் கணித்துச் சொல்வார் .

இதற்க்கு முன்னணி நிறுவனங்கள் , ஜோதிட நிபுணர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர் . இவர்களுக்கு அதிகபட்சம் மாத ஊதியம் 1 . 5 லட்சம் சம்பளம் . ஒரு பல்கலைக் கழகத்தில் வேதம் பயின்ற ஜோதிட மாணவர்கள் 10 பேர்கள் உள்பட 20 பேருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது .

- ஆதாரம் தினகரன் 23 - 11 - 2008

இது ஜோதிடத்தின் மூலம் அறியப்படும் பலன்கள் துல்லியமாக வரும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும் .

மேலே குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும் போது ஜோதிடம் ஏமாற்று வேலை அல்ல , மெய்யே ! மெய்யே ! மெய்யே ! என்பதை ஆணித்தரமாக கூறலாம் .

ஆனால் இதை உதட்டளவில் , உண்மை இல்லை என்று கூறுபவர்களும் , அவர் நம் குடும்பத்தினரும் திரை மறைவில் ஜோதிடம் பார்க்கத் தவறுவதில்லை என்பதை நாம் கண்கூடாகக் பார்க்கின்றோம் . ஒரு நிர்பந்தத்தின் காரணமாக உள்ளத்தினால் அல்லாமல் , உதட்டளவில் மட்டுமே பிதற்றுகிறார்கள் .

ஆகவே நமக்கு ஜோதிடக்கலையை அருளிய விஞ்ஞானிகள் , மகரிஷிகளிடம் , அவர்களுக்கும் நல்லாசிகள் வழங்க பிரார்த்தனைகள் செய்வோம் .

வாழ்க ஜோதிடக்கலை !

ஓம் . எம் . பெருமாள்

B.Pharm.,P.G.D.C.A.,D.V.P.,

D.A. (Astrology).,

M.A (Astrology)., MICAS

( P.S.ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மைய உறுப்பினர் )

http://yourastrology.co.in/astro-true-false

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா

புதிதாக தாங்கள் ஆரம்பிக்க போவதாக சொன்ன தொழில் இதுதானா...?

நடக்கட்டும் நடக்கட்டும்

குறைந்த முதலீட்டில் அதிக பணம் சேரும் தொழில்

நல்லா வாங்கோ

முதலில் உங்களுடைய குறிப்பையும் இதில் எழுதியதற்காக என்னுடைய குறிப்பையும் பாருங்கோ :lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா

புதிதாக தாங்கள் ஆரம்பிக்க போவதாக சொன்ன தொழில் இதுதானா...?

நடக்கட்டும் நடக்கட்டும்

குறைந்த முதலீட்டில் அதிக பணம் சேரும் தொழில்

நல்லா வாங்கோ

முதலில் உங்களுடைய குறிப்பையும் இதில் எழுதியதற்காக என்னுடைய குறிப்பையும் பாருங்கோ :lol::D:D

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

13 அல்லது 26 வரும் திகதிகளில் நல்ல காரியம் எதுகும் செய்ய மாட்டேன்.

மற்றும்.... 4 வரும் திகதியோ..கூட்டுத்தொகையோ வரும் நாட்களில் எதிர்பாராத அலைச்சலான விடயங்கள் நடப்பதை அவதானித்துள்ளேன்.

நானாவது, எண்சாத்திரத்துடன் நின்றுவிடுவேன்... வீட்டில் அட்டமி, நவமி, கரிநாள் என்று கனக்க பார்ப்பார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சாத்திரமணிகளும் கூட்டா...?

சரி சரி

பிரான்ஸ் பக்கம் கிளை ஏதும் ஆரம்பித்தால் என்னை மறந்து விடாதீர்கள் சூரர்களே.............. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சாத்திரமணிகளும் கூட்டா...?

சரி சரி

பிரான்ஸ் பக்கம் கிளை ஏதும் ஆரம்பித்தால் என்னை மறந்து விடாதீர்கள் சூரர்களே.............. :lol::D

விசுகு, லாசப்பலில் இடம் எடுத்தால் நல்ல வருமானம் வருமா?

அல்லது, எங்கையாலும்.... கோவில்களுக்கு பக்கத்தில் இடம் எடுத்தால் நல்ல வருமானம் வருமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, லாசப்பலில் இடம் எடுத்தால் நல்ல வருமானம் வருமா?

அல்லது, எங்கையாலும்.... கோவில்களுக்கு பக்கத்தில் இடம் எடுத்தால் நல்ல வருமானம் வருமா? :D

கோவில் பக்கத்தை விட ஏமாளிகள் இருக்கும் இடமாப் பார்த்தால் நல்லம் போல இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லா சப்பலில் இருக்கிற இடமெல்லாம் தங்கள் ஆட்கள்தான் ஏற்கனவே கடை பரப்பியுள்ளனர்.

வாங்கோ

இதுக்கு பெரிசாக இடம் தேவையில்லைத்தானே சாலையோரம் போதும்........ :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பெரிய ஜோதிடராயிருந்தாலும் ஓரளவுக்கு மேல் சொல்ல முடியாது...ஒரு,இரு விசயம் தெரிந்தவர்கள் அதை பத்தாக்கி சொல்வார்கள்...அது சரி எனக்கு ஒரு ஜோதியம் சொல்லுங்கோ உள்ளங்கை கடித்தால் காசு வரும் என சொல்கிறார்களே அது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

13 அல்லது 26 வரும் திகதிகளில் நல்ல காரியம் எதுகும் செய்ய மாட்டேன்.

மற்றும்.... 4 வரும் திகதியோ..கூட்டுத்தொகையோ வரும் நாட்களில் எதிர்பாராத அலைச்சலான விடயங்கள் நடப்பதை அவதானித்துள்ளேன்.

நானாவது, எண்சாத்திரத்துடன் நின்றுவிடுவேன்... வீட்டில் அட்டமி, நவமி, கரிநாள் என்று கனக்க பார்ப்பார்கள். :D

4 ,13 ,22 ,31 ம் திகதிகளில் பிறந்தவர்கள்

2011ல் புத்தாண்டு கூட்டுத்தொகை எண் 4 வருவதால் இவ்வாண்டு இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கப்போகிறது. 12 வருடங்களுக்கு பிறகு வரக்கூடிய அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கிறது. 4-4-2011, 31-4-2011 திகதி, மாதம், வருடம் எல்லாமே கூட்டு எண் 4 வருவதை அறியலாம். இது போன்று வரக்கூடிய காலத்தில் இருந்து அடுத்து வரக்கூடிய நான்கு ஆண்டுகள் வரை வாழ்க்கையில் திருப்பு முனைகள், அதிர்ஷ்டங்கள் இருக்கும். அவரவர் ஜாதகப்படி நல்ல தசாபுக்தி நடப்பவர்களுக்கு பெருமளவில் முன்னேற்றங்கள் பெருகும் செல்வங்கள் வந்து சேரும்.

தசாபுத்தி சரியில்லாமல், பிறப்பு ஜாதகம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு சிறுசிறு வாழ்க்கை மாற்றங்கள், சொற்ப அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் மட்டும் இருக்கும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5ம் இடத்தில் குரு அல்லது சூரியன் இருப்பவர்களுக்கு ராஜயோக காலமாக இருக்கும். ஏதென்ஸ் கோமேதகக்கல், பட்டின கோமேதகக்கல் ராகு அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தக்கூடும். துpருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் அருகில் உள்ள ஆலயத்தில் ராகு வேளையில் துர்க்கையை வழிபட்டு வருவது நல்லது. ரோம்ப நாளைய வாழ்க்கை கஷ்டம் இப்போது ஒரு வழியாய் முடிவு பெற்று நல்ல காலம் பிறக்கிறது. ஓளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்கிற பாடல் வரிகள் உண்மையாகப் போகிறது. :D

http://www.eelampress.com/2011/01/10251/

வாத்தியார்

**********

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ...........காசு வராது ........செலவு வரும் என்று சொல்வார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் .............ஒன்பது நம்பருக்கு எங்கே வாசிப்பது. இணைப்பு தரவும்.

நான் எண் ஜாதகம் சிலது நம்புவேன் சில சரிவரும்.

குறிப்பு அச்சொட்டாக இருந்தால் பலனும் சரியாக் அமையும். வியாபாரம் தவிந்த ஏனைய யவர்கள் கூறுவது

( முறைப்படி படித்தறிவாளிகள் ) சரியாகலாம்." எல்லாம் அவன் செயல். " என்று இருக்க ணும்.

தன்னம்பிக்கை உள்ளவருக்கு சோதிடம் பொய்:

தன்னம்பிக்கைஇல்லாதவருக்கு சோதிடம் மெய்:

பொய்யென்றால் அது பொய், மெய்யென்றால் அது மெய், அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.

எந்த பெரிய ஜோதிடராயிருந்தாலும் ஓரளவுக்கு மேல் சொல்ல முடியாது...ஒரு,இரு விசயம் தெரிந்தவர்கள் அதை பத்தாக்கி சொல்வார்கள்...அது சரி எனக்கு ஒரு ஜோதியம் சொல்லுங்கோ உள்ளங்கை கடித்தால் காசு வரும் என சொல்கிறார்களே அது உண்மையா?

உள்ளங்கை கடித்தால் மருத்துவரிடம் செல்வதே நல்லது.

.

ஹிரோஷிமா அணுகுண்டு, சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் பல்லாயிரம் பேர் ஒரே கணத்தில் உயிரிழந்து போனார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே ராசிக்காரர்களா ?

இடிக்குதே ... ?

  • கருத்துக்கள உறவுகள்

.

ஹிரோஷிமா அணுகுண்டு, சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் பல்லாயிரம் பேர் ஒரே கணத்தில் உயிரிழந்து போனார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே ராசிக்காரர்களா ?

இடிக்குதே ... ?

அந்த நேரத்தில

அந்த பகுதி முழுவதும் சனியின் கட்டுப்பாட்டில் இருந்ததாம்......... :lol::(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை உள்ளவருக்கு சோதிடம் பொய்:

தன்னம்பிக்கைஇல்லாதவருக்கு சோதிடம் மெய்:

பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தால் தன்னம்பிக்கை தோற்றுப் போய் விடும்.அப்போது மனம் பிரச்சனைகளிலில் இருந்து தப்பிக்க ஜோசியத்தையே நாடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மெய்யோ பொய்யோ எனக்கு ஒரு சாத்திரி சொன்னார் நடுக்கடலுக்கு போனாலும் நக்குத்தண்ணி தான் என்று.அது மட்டும் தப்பாமல் நடக்குது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

4 ,13 ,22 ,31 ம் திகதிகளில் பிறந்தவர்கள்

2011ல் புத்தாண்டு கூட்டுத்தொகை எண் 4 வருவதால் இவ்வாண்டு இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கப்போகிறது. 12 வருடங்களுக்கு பிறகு வரக்கூடிய அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கிறது.

ஆகா.. நாய் அலைச்சலுக்குப் பின்னால ஒரு நல்ல ஆண்டு வருதா? :rolleyes::unsure:

4-4-2011, 31-4-2011 திகதி, மாதம், வருடம் எல்லாமே கூட்டு எண் 4 வருவதை அறியலாம். இது போன்று வரக்கூடிய காலத்தில் இருந்து அடுத்து வரக்கூடிய நான்கு ஆண்டுகள் வரை வாழ்க்கையில் திருப்பு முனைகள், அதிர்ஷ்டங்கள் இருக்கும்.

உந்த நேரத்தில அநேகமா லண்டனிலதான்..! ஆகா.. நினைக்கவே என்னவோ செய்யுதே..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. நாய் அலைச்சலுக்குப் பின்னால ஒரு நல்ல ஆண்டு வருதா? :rolleyes::unsure:

உந்த நேரத்தில அநேகமா லண்டனிலதான்..! ஆகா.. நினைக்கவே என்னவோ செய்யுதே..! :rolleyes::lol:

பார்த்திட்டு அலறி அடித்து ஓடணும்

அதை நான் பார்க்கணும் :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடம் என்பது மிக மிக நுணுக்கமான ஒரு கணிதம் என்பதுடன் சுவாரசியமான ஒரு விளையாட்டு என்றும் சொல்லலாம்! :D

வாத்தியார் .............ஒன்பது நம்பருக்கு எங்கே வாசிப்பது. இணைப்பு தரவும்.

நான் எண் ஜாதகம் சிலது நம்புவேன் சில சரிவரும்.

குறிப்பு அச்சொட்டாக இருந்தால் பலனும் சரியாக் அமையும். வியாபாரம் தவிந்த ஏனைய யவர்கள் கூறுவது

( முறைப்படி படித்தறிவாளிகள் ) சரியாகலாம்." எல்லாம் அவன் செயல். " என்று இருக்க ணும்.

ஒன்பது சாத்திரம் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாதே. நம்பிக்கையுள்ள மனிதர்,உங்களைப்பார்த்து பொறாண்மைப்படுபவர்கள்தான் அதிகம்.மற்றும் 9பதை எந்த எண்ணுடன் பெருக்கினாலும் உ.ம். 2 3 4 5 6 7 8 9 9பதே வரும் அப்படியொரு சிறப்பான எண்.பண்டிட் சேதுராமன் மற்றும் இலங்கை வைலற் சரோஜா அவர்களின் புத்தகம் கிடைத்தால் வாசிக்கவும். மற்றும் மேலும் தகவல் வேண்டின் தொடர்பு கொள்ளவும்( இலவசம்தான்).

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திட்டு அலறி அடித்து ஓடணும்

அதை நான் பார்க்கணும் :lol::D:D

அதிர்ஷ்டம் எண்டல்லோ போட்டிருக்கு..! :D அப்ப நான் ஏன் ஓடப் போறன்..! <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ஷ்டம் எண்டல்லோ போட்டிருக்கு..! :D அப்ப நான் ஏன் ஓடப் போறன்..! <_<:lol:

பார்த்தபின்

தப்புவது அதிர்ஸ்டமாக மாறும் இசை... :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.