Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிர உடற்பயிற்சியில் குதித்துள்ள புலம் பெயர் தமிழ்ப் பெண்கள்..

Featured Replies

வருடம் 6000 குறோணர் கட்டி ஆலோசகரின் உதவியோடு பயிற்சிகள்..

புலம் பெயர் நாடுகளில் தமிழ் பெண்களிடையே ஏற்படும் புதிய மாற்றங்கள்..

தற்போது நோர்வே ஒஸ்லோ நகரில் வாழும் 30 – 45 வயதுடைய தமிழ் பெண்கள் கடுமையான தேகப்பயிற்சியில் தீவிர நாட்டம் கொண்டுள்ளார்கள். தலைநகரின் நடுவில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையங்களில் நோர்வேஜிய பெண்களுக்கு இணையாக இப்போது தமிழ் பெண்களையும் காண முடிகிறது. கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஆரம்பித்து, இப்போது நன்கு சூடு பிடித்து, பெரும்பாலான பெண்களை உடற்பயிற்சி நிலையங்கள் நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் விபரத்தை அறிய பல தேகப்பயிற்சி நிலையங்களுக்கு போனோம்… அங்குள்ள பல பெண்களிடம் பெற்ற தகவல்கள் இவை..

கேள்வி : நீங்கள் உடற்பயிற்சி நிலையத்திற்கு செலுத்தும் கட்டணம் எவ்வளவு ?

பதில் : வருடம் 6000 குறோணர்களை செலுத்துகிறோம். அத்தோடு எமக்காக பிரத்தியேகமான ஆலோசகரையும் தந்துள்ளார்கள். உடலின் எப்பகுதியை குறைக்க வேண்டும், அதற்காக செய்ய வேண்டிய பயிற்சிகள் யாவை.. உண்ண வேண்டிய உணவுவகைகள் யாவற்றையும் அவர்களே அறிவுறுத்துகிறார்கள். அத்தோடு இதற்கான கையேடுகளும் தருகிறார்கள் கூடவே இணையத்தள முகவரிகளும் பல தந்துள்ளார்கள்.

கேள்வி : சரி.. ஒரு வருடமாக பயிற்சி எடுக்கிறீர்கள் இதனால் நீங்கள் சாதித்ததுதான் என்ன ?

பதில் : எனக்கு மூன்று பிள்ளைகள் உண்டு, கடந்த 2009 ம் ஆண்டுப் பகுதியில் எப்போது பார்த்தாலும் ஒருவித சோர்வு, தலைவலி என்பன இருந்தன. டாக்டரிடம் கொண்டு சென்று காட்டியபோது சல வருத்தம் 7.2 அளவில் சுகர் இருந்தது, இரத்த அழுத்தமும் அதிகமாகவே இருந்தது. ஓரிரு மாதங்களில் மீண்டும் சோதிக்க வேண்டும் சலரோக மாத்திரைகளும் பாவிக்க வேண்டி வரும் என்று கூறினார்கள். அப்போதுதான் இந்த உடற்பயிற்சி நிலையத்தைக் கண்டேன். முதல் மாதம் இலவசம் என்றார்கள், வந்து சேர்ந்தேன் பிடித்துப் போய்விட்டது தொடர்கிறேன். தற்போது சுகர் அளவு 5.4 ஆக உள்ளது. தலையிடி, சோர்வு எல்லாம் விட்டுப் போய்விட்டது.

கேள்வி : எவ்வளவு நேரம் தேகப்பயிற்சி செய்கிறீர்கள்..?

பதில் : வாரத்தில் மூன்று நாட்கள் இங்கே வருகிறேன். முதல் 20 நிமிடங்கள் மிதிவண்டி ஓட்டம், சுமார் 12 கி.மீ தூரம் பெல்டில் ஓட்டம், மீண்டும் 20 நிமிடங்கள் முழு உடம்பும் இயங்குவதற்கான ஒரு இயந்திரத்தை பாவிப்போம். மற்றும் சிறிய இரக இயந்திரங்களுடன் சேர்த்து மொத்தம் 2 மணி நேரங்கள் இந்தப் பயிற்சி நடைபெறும்.

கேள்வி : அது சரி… உங்களுக்கு மூன்று பிள்ளைகள் என்கிறீர்கள், பிள்ளைகள் ஒரு பக்கம் ஒஸ்லோவின் இயந்திர வாழ்வு மறு பக்கம் இரண்டுக்கும் இடையே எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?

பதில் : இதற்காக முக்கியமாக நன்றி கூறவேண்டியது எனது கணவனுக்கே, உடற்பயிற்சிக் போவதற்காகவே வீட்டின் சகல பொறுப்புக்களையும் அவரே ஏற்றுக்கொண்டு எனக்கு உதவி செய்கிறார்.

அதன் பிறகு அங்கிருந்த உடற்பயிற்சி ஆலோசகரை சந்திக்க நேரம் எடுத்து மறுநாள் சந்தித்தோம். மிகவும் பரபரப்பாக இருந்த அவர் வேகமாக ஓடும் அந்த நேரத்திலும் நமது கேள்விகளுக்கு பதில் தந்தார்.

கேள்வி : கடுமையான உடற்பயிற்சி செய்து ( வெயிட் லிப்ட் போன்றன ) மசில்ஸ் வந்த பின்னர் திடீரென்று நிறுத்திவிட்டால் உடல் தொய்ந்து முன்னைய காலத்தைவிட மோசமாக வந்துவிட நேரும் என்கிறார்களே உண்மையா ?

பதில் : நிச்சயமாக உண்மை இல்லை, அதிகமான பாரங்களைத் தூக்கி உடலை நன்றாக இறுக்கும்போது அதிகமான புரதச் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதன் மூலம்தான் மசில்ஸ் நிறைந்த கட்டான உடல் வருகிறது. திடீரென நிறுத்தும் போது அதேயளவு பசியும் ஏற்படுகிறது. அதேயளவு புரதச்சத்தையும் சாப்பிட நேருகிறது. இதனாலேயே உடல் பெருத்து தொய்வும் ஏற்படுகிறது. இங்கு இப்படியான உடற்பயிற்சிகளை செய்பவரில் பலர் பத்து வருடங்களாக செய்கிறார்கள். யாரும் இடையில் நிறுத்துவதில்லை. அப்படி இடை நிறுத்தினால் நாம் தரும் ஆலோசனைகளை உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் அதே உடலை தொய்யாமல் பாதுகாக்க முடியும்.

கேள்வி : பொதுவாக 40 முதல் 50 வயதுக்கு மேல் உடலின் தசை நார்கள் தொய்வடைந்து போகின்றனவே.. இப்படியிருக்க.. இந்த வயதுக்கு மேல் பாரம் தூக்கி கட்டான உடலமைப்பைப் பெற முடியுமா ?

பதில் : உடற்பயிற்சிக்கும் கட்டான உடலைப் பெறுவதற்கும் வயது ஒரு தடையே கிடையாது. எந்த வயதிலும் எமது ஆலோசனையுடன் நீங்கள் கட்டான உடலமைப்பைப் பெறலாம். இங்கு எமது நிலையத்திற்கு வருவோரில் அதிகமானோர் 50 வயதைத் தாண்டியவர்கள், கணினிகளுக்கு முன்னால் இருந்து தொழில் புரிபவர்கள்தான். பொதுவாக 60 வயதுக்கு மேல்தான் தசை நார்களில் தொய்வு வருகிறது. அப்போதும்கூட கவலைப்பட வேண்டியதில்லை உங்கள் சுய முயற்சியால் நீங்கள் வெல்லாம். அவுஸ்திரேலிய மெல்போண் நகரில் 84 வயது நபர் ஒருவர் தேசிய சாம்பியன் பட்டத்திற்காக மோதி வெற்றிபெற்ற ஒளிப்படத்தை நமக்குக் காண்பிக்கிறார்.

கேள்வி : சாருக்கான், சல்மான்கான் போல உடலமைப்பைப் பெற பலருக்கு ஆசை உண்டு, இதற்கு ஏதாவது வழிமுறை இருக்கிறதா ?

பதில் : நீங்கள் யாரைப்போல வர விரும்புகிறீர்களோ அவரைப்போல உங்கள் அமைப்பிற்குள் வரலாம். தற்போதய அரசியல்வாதியும், நடிகருமான ஆனஸ் ஸ்வாஸ்நேக்கர் போல வரவேண்டுமானால் அதிகமான நிறைகள் தூக்குவதோடு அதற்காக அதிக நேரம் செலவிட வேண்டும். இதற்கான சரியான விடை உங்களால் முடிந்த உங்களுக்கு ஏற்ற நிறைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்வதுடன் கூடவே இங்குள்ள சைக்கிள் மற்றும் பெல்டில் ஓடி பயிற்சிகளையும் செய்தீர்களானால் ஆறு மாதங்களில் நீங்கள் திருப்தி அடையக்கூடிய ஒரு நிலையினை அடைவீர்கள்.

அவருக்கு நன்றி கூறிப் புறப்பட்டு சாதாரண குடும்பத்தில் உள்ள சில தேகப்பயிற்சியாளரை சந்தித்தோம். முதலில் உடற்பயிற்சி நிலையம் போக முடியாமல் வீட்டிலேயே தேகப்பயிற்சி செய்யும் கணவனையும், மனைவியையும் சந்தித்தோம்.

கேள்வி : நீங்கள் வீட்டில் இருந்து தேகப்பயிற்சி செய்யக் காரணம் என்ன ?

பதில் : நாமும் முன்னர் 6000 குறோணர் கட்டி பயிற்சி செய்யப் போனோம், வாரத்தில் நான்கு நாட்கள். நம்மிடமுள்ள சிறிய பிள்ளைகளுடன் நம்மால் முடியவில்லை அதனால் ஓடும் மெஷீனை வீட்டிலேயே வாங்கிப் போட்டுவிட்டோம். 10.000 குறோணர் செலவழித்து வீட்டிலேயே இருவரும் ஐந்து தினங்கள் பயிற்சி எடுக்கிறோம். நாளுக்கு 500 கலோரி வீதம் வாரத்திற்கு 2500 கலோரிகளை தேகப்பயிற்சியால் எரித்துவிடுகிறோம்.

அழகான உடைகளை அணிய வேண்டும், அதற்கு 4 – 6 கிலோவரை குறைய வேண்டும். இப்போது எந்த விழாவுக்குப் போனாலும் ஒரே கலோரி எரிப்புக்கதைகள்தான். நகைகள், புடவைகள் பற்றி இப்போது பேச்சே இல்லை. வாங்கிய வீடு, கார் இவைகளை அனுபவிக்க வேண்டும், பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் புலம் பெயர் நாடுகளில் பெருமெடுப்பில் பரவி வருவதை எம்மால் உணர முடிகிறது. புலம் பெயர் சமுதாயம் ஆரோக்கிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

http://www.alaikal.com/news/?p=57540#more-57540

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கொஞ்சம் கராட்டியையும் சொல்லிக் கொடுத்தா எப்படி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க புலம் பெயர் தமிழ்ப் பெண்கள்.

அப்படியே கொஞ்சம் கராட்டியையும் சொல்லிக் கொடுத்தா எப்படி இருக்கும்.

அப்படி இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருடம் 6000 குறோணர் கட்டி ஆலோசகரின் உதவியோடு பயிற்சிகள்..

புலம் பெயர் நாடுகளில் தமிழ் பெண்களிடையே ஏற்படும் புதிய மாற்றங்கள்..

.பிள்ளைகள் ஒரு பக்கம் ஒஸ்லோவின் இயந்திர வாழ்வு மறு பக்கம் இரண்டுக்கும் இடையே எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?

பதில் : இதற்காக முக்கியமாக நன்றி கூறவேண்டியது எனது கணவனுக்கே, உடற்பயிற்சிக் போவதற்காகவே வீட்டின் சகல பொறுப்புக்களையும் அவரே ஏற்றுக்கொண்டு எனக்கு உதவி செய்கிறார்.

?http://www.alaikal.com/news/?p=57540#more-57540

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?...ஜிம்முக்குப் போகக் கூடாதா?...நோய்,நொடி இல்லாமல் இருக்க கூடாதா?..நல்ல கதையாய் கிடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?...ஜிம்முக்குப் போகக் கூடாதா?...நோய்,நொடி இல்லாமல் இருக்க கூடாதா?..நல்ல கதையாய் கிடக்குது.

இடியப்பம் புழியுறத்தும் ஒரு உடற்பயிற்சிதான் :lol:

தினமும் சோத்தையும், டிவி சீரியலையும் குறைச்சாலே பாதி எடை குறைஞ்சது மாதிரி... :D

இடியப்பம் புழியுறத்தும் ஒரு உடற்பயிற்சிதான் :lol:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?...ஜிம்முக்குப் போகக் கூடாதா?...

நோய்,நொடி இல்லாமல் இருக்க கூடாதா?..நல்ல கதையாய் கிடக்குது.

ரதி

பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதின்(30-45) பின் இவ்வாறு செய்து உடம்பை பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வது அவர்களது உடலுக்கு மட்டமல்ல இல்லறத்துக்கும் நல்லது.

ஆனால் இதை நான் வரவேற்பது என்றால்...

எமது மக்கள் பசியாலும் பட்டினியாலும் மெலிந்து கிடக்க........

எமது மக்கள் நோய்க்கு மருந்து இன்றி தவித்து மடிய.......

நாம் பாதுகாப்பான நாடுகளில் சாப்பிட்ட சாப்பாடு செமிபாடடையவும் அது உடம்பில் அதிகம் தங்காது இருக்கவும் 6000 குரோணர்களை செலவு செய்யும் அதே நேரம் அதில் ஒரு குடும்பத்தை இதே தொகைக்கு நாம் பராமரித்தபடி எமது உடலையும் பாதுக்காப்போமாயின்அது இந்த மானிடப்பிறவியின் அனுகூலமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?...ஜிம்முக்குப் போகக் கூடாதா?...நோய்,நொடி இல்லாமல் இருக்க கூடாதா?..நல்ல கதையாய் கிடக்குது.

கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.மேற்குலக வாழ்க்கை முறை அப்படி உள்ளது.பயிற்சி செய்தால் இப்படியும் உடம்பை வைத்திருக்கலாம்.

beatupp.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பம் புழியுறத்தும் ஒரு உடற்பயிற்சிதான் :lol:

உண்மைதான். இது மட்டும் என்னால்முடியாது. என்ன ரெக்னிக் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.மேற்குலக வாழ்க்கை முறை அப்படி உள்ளது.பயிற்சி செய்தால் இப்படியும் உடம்பை வைத்திருக்கலாம்.

beatupp.jpg

கட்டுமஸ்தான உடம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதின்(30-45) பின் இவ்வாறு செய்து உடம்பை பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வது அவர்களது உடலுக்கு மட்டமல்ல இல்லறத்துக்கும் நல்லது.

ஆனால் இதை நான் வரவேற்பது என்றால்...

எமது மக்கள் பசியாலும் பட்டினியாலும் மெலிந்து கிடக்க........

எமது மக்கள் நோய்க்கு மருந்து இன்றி தவித்து மடிய.......

நாம் பாதுகாப்பான நாடுகளில் சாப்பிட்ட சாப்பாடு செமிபாடடையவும் அது உடம்பில் அதிகம் தங்காது இருக்கவும் 6000 குரோணர்களை செலவு செய்யும் அதே நேரம் அதில் ஒரு குடும்பத்தை இதே தொகைக்கு நாம் பராமரித்தபடி எமது உடலையும் பாதுக்காப்போமாயின்அது இந்த மானிடப்பிறவியின் அனுகூலமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஊரில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ட எண்ணம் இங்கிருக்கும் ஒவ்வொருவர் மனதில் தோன்ற வேண்டும்..."மனமுன்டால் இடமுன்டு"...அதற்காக பெண்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல்,ஜிம்முக்குப் போகாமல் அந்த காசை ஊருக்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை...இந்த நாட்டில் உடற்பயிற்சி மிகவும் அவசியம்...குடும்பத்தலைவனோ,தலைவியோ நோய் நொடி இல்லாமல் இருந்தால் தான் அவர்கள் குழந்தைகளை கவனிக்க முடியும்...ஊரில் இருக்கும் போது அரிசி இடிக்கிறதில் இருந்து பல வேலைகளை பெண்கள் செய்வார்கள் அத்தோடு அங்குள்ள காலநிலையும் நல்லது ஆனால் தற்போது அங்கிருப்பவர்களே உடற்பயிற்சி,யோகா என்டு செல்கிறார்கள்...அது அப்படி இருக்க இங்கிருப்பவர்களை உடற்பயிற்சி செய்யப் வேண்டாம் அந்தக் காசை ஊரில் இருப்பவர்களுக்கு அனுப்ப சொல்லி எப்படி கேட்பீர்கள்?...இங்கு இருப்பவர்கள் அங்கு இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ட மனம் கொண்டு இருந்தால் எத்தகைய விதமான ஆடம்பர செலவுகளை குறைக்கலாம் ...உணவகங்களில் போய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்[முக்கியமாக மக்டோனால்,கேஎப்சி போன்றன],மற்றவர்கள் விலை கூடிய பொருட்கள் வாங்கி உபயோகிக்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை [கைத்தொலைபேசி,ஜபொட்],சுற்றுலாக்கள்,விடுமுறை போவதை தவிர்க்கலாம்...அதை விட எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பர விழாக்கள்,கொண்டாட்டங்கள் செய்வதை தவிர்க்கலாம்...இவை தான் ஆடம்பர செலவுகள்.இவைகளை தவிர்த்து அந்த காசினை ஊருக்கு அனுப்பலாம்.

உடற்பயிற்சி என்பது இந்த நாட்டின் வாழ்க்கை அமைப்பிற்கு இன்றியமையாது அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இன்றியமையாது அதை எப்படி செய்ய வேண்டாம் என சொல்வீர்கள் எனக்கு விளங்கவில்லை.

நான் குட்டியிடம் இருந்தும்,கறுப்பியிடம் இருந்தும் இப்படி ஒரு பதிவுகளை எதிர் பார்க்கவில்லை...குட்டி நீங்கள் வேறோரு திரியில் ஜிம்முக்குப் போவதாக எழுதி இருந்தீர்கள் அத்தோடு நீங்கள் இருந்தும் வேலை செய்வதில்லை என்டும் எழுதி இருந்தீர்கள்...உங்களுக்கே உடற்பயிற்சி தேவையாயிருக்கும் போது ஏன் பெண்களுக்கு தேவையில்லை என்ட மாதிரி எழுதி இருக்கிறீர்கள்...இந்தக் காலத்துப் பெண்கள் லண்டனை பொறுத்த வரை அநேகமாக எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள் அப்படிப் போகாதவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே நேரம் செலவிடுகிறார்கள் இரவில் கொஞ்ச நேரம் தான் சீரியல் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.அதை பார்ப்பதை விட்டால் மட்டும் அவர்களுக்கு உடம்பு ஆரோக்கியமாய் இருக்கும் என்டு எப்படி நினைக்கிறீர்கள்?...ஏன் நீங்கள் வேலையால் வீட்டுக்குப் போய் கணணியில் நேரத்தை செலவிடுவதில்லையா அதே மாதிரித் தான் பெண்கள் சீரியல் பார்ப்பதும்...இந்த பெண்கள் தங்களுக்கு வயது போய் விட்டது வீட்டிலே 24 மணி நேரமும் தொலைகாட்சி பார்த்துக் கொண்டு இருக்காமல் உடற்பயிற்சி செய்யப் போனது தான் இங்கே பல பேர் கண்களை குத்துகிறது...குட்டி,கறுப்பி போன்றவர்களின் கருத்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்டே நான் கருதுகிறேன்[மன்னிக்கவும் இருவரும்.]

  • கருத்துக்கள உறவுகள்

beatupp.jpg

என்னையா இது..! கொடி இடை கேள்விப்பட்டிருக்கிறன்..! :unsure: இதென்ன கொடும் இடையா இருக்கே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஆண்களுக்கெல்லாம் எரிச்சல் கூடிப்போய்விட்டது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி ஆண்களுக்கெல்லாம் எரிச்சல் கூடிப்போய்விட்டது. :D

பெண்களிடம் எதைபார்த்து ஆண்களுக்கு எரிச்சல்? :lol:

பெண்களிடம் எதைபார்த்து ஆண்களுக்கு எரிச்சல்? :lol:

மடை வாழை தொடை இருக்க அதில் மச்சம் ஒன்றிருக்க

படைத்தவனின் பெருமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்றோ...........

என M.G.R ஆர் பாட அதை ரசித்த எங்களுக்கு உந்த தெக்குதொடையை காட்டினால் எரிச்சல் வராமல் என்ன வருமாம்? :D:D

ஊரில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ட எண்ணம் இங்கிருக்கும் ஒவ்வொருவர் மனதில் தோன்ற வேண்டும்..."மனமுன்டால் இடமுன்டு"...அதற்காக பெண்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல்,ஜிம்முக்குப் போகாமல் அந்த காசை ஊருக்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை...இந்த நாட்டில் உடற்பயிற்சி மிகவும் அவசியம்...குடும்பத்தலைவனோ,தலைவியோ நோய் நொடி இல்லாமல் இருந்தால் தான் அவர்கள் குழந்தைகளை கவனிக்க முடியும்...ஊரில் இருக்கும் போது அரிசி இடிக்கிறதில் இருந்து பல வேலைகளை பெண்கள் செய்வார்கள் அத்தோடு அங்குள்ள காலநிலையும் நல்லது ஆனால் தற்போது அங்கிருப்பவர்களே உடற்பயிற்சி,யோகா என்டு செல்கிறார்கள்...அது அப்படி இருக்க இங்கிருப்பவர்களை உடற்பயிற்சி செய்யப் வேண்டாம் அந்தக் காசை ஊரில் இருப்பவர்களுக்கு அனுப்ப சொல்லி எப்படி கேட்பீர்கள்?...இங்கு இருப்பவர்கள் அங்கு இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ட மனம் கொண்டு இருந்தால் எத்தகைய விதமான ஆடம்பர செலவுகளை குறைக்கலாம் ...உணவகங்களில் போய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்[முக்கியமாக மக்டோனால்,கேஎப்சி போன்றன],மற்றவர்கள் விலை கூடிய பொருட்கள் வாங்கி உபயோகிக்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை [கைத்தொலைபேசி,ஜபொட்],சுற்றுலாக்கள்,விடுமுறை போவதை தவிர்க்கலாம்...அதை விட எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பர விழாக்கள்,கொண்டாட்டங்கள் செய்வதை தவிர்க்கலாம்...இவை தான் ஆடம்பர செலவுகள்.இவைகளை தவிர்த்து அந்த காசினை ஊருக்கு அனுப்பலாம்.

உடற்பயிற்சி என்பது இந்த நாட்டின் வாழ்க்கை அமைப்பிற்கு இன்றியமையாது அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இன்றியமையாது அதை எப்படி செய்ய வேண்டாம் என சொல்வீர்கள் எனக்கு விளங்கவில்லை.

நான் குட்டியிடம் இருந்தும்,கறுப்பியிடம் இருந்தும் இப்படி ஒரு பதிவுகளை எதிர் பார்க்கவில்லை...குட்டி நீங்கள் வேறோரு திரியில் ஜிம்முக்குப் போவதாக எழுதி இருந்தீர்கள் அத்தோடு நீங்கள் இருந்தும் வேலை செய்வதில்லை என்டும் எழுதி இருந்தீர்கள்...உங்களுக்கே உடற்பயிற்சி தேவையாயிருக்கும் போது ஏன் பெண்களுக்கு தேவையில்லை என்ட மாதிரி எழுதி இருக்கிறீர்கள்...இந்தக் காலத்துப் பெண்கள் லண்டனை பொறுத்த வரை அநேகமாக எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள் அப்படிப் போகாதவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே நேரம் செலவிடுகிறார்கள் இரவில் கொஞ்ச நேரம் தான் சீரியல் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.அதை பார்ப்பதை விட்டால் மட்டும் அவர்களுக்கு உடம்பு ஆரோக்கியமாய் இருக்கும் என்டு எப்படி நினைக்கிறீர்கள்?...ஏன் நீங்கள் வேலையால் வீட்டுக்குப் போய் கணணியில் நேரத்தை செலவிடுவதில்லையா அதே மாதிரித் தான் பெண்கள் சீரியல் பார்ப்பதும்...இந்த பெண்கள் தங்களுக்கு வயது போய் விட்டது வீட்டிலே 24 மணி நேரமும் தொலைகாட்சி பார்த்துக் கொண்டு இருக்காமல் உடற்பயிற்சி செய்யப் போனது தான் இங்கே பல பேர் கண்களை குத்துகிறது...குட்டி,கறுப்பி போன்றவர்களின் கருத்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்டே நான் கருதுகிறேன்[மன்னிக்கவும் இருவரும்.]

உடற்பயிற்சியே தேவை இல்லை என்று நான் எழுதவில்லையே ரதி...

மற்றது நான் ஜிம்முக்குப் போவதில்லை. வேலை இடத்திலும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதில்லை. வேலை இடத்திலும் சரி, வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பல படிகள் ஏறி இறங்குவேன். மனநிலையைப் பொறுத்து நேரம் இருக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் ஓடப் போவேன். உடற்பயிற்சி செய்வதற்கு கண்டிப்பாக பணம் செலவழித்துத் தான் செய்யவேணும் என்று இல்லை! இதுக்கெல்லாம் நான் பணம் செலவழிப்பதும் இல்லை!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77355

பெண்களை உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்றும் நான் குறிப்பிடவில்லை!

பொதுவாக நாம் உண்ணும் உணவிலிருந்து ஆரம்பித்தால் எமது உடலை நாமே ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். (ஒரு சில பரம்பரை வருத்தங்களைத் தாவிர) மதிய அல்லது இரவு சோறு சாப்பிட்ட்டுக் கொண்டு டிவி சீரியலைப் பார்த்துவிட்டு தூங்குவதால் உடலில் எடை குறைய வழி ஏது? வீட்டில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் அவர்களைக் கூடிக் கொண்டு பார்க்கில் போய் ஒரு மணிநேரமாவது அவர்களுடன் தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை தன்னும் விளையாடுவது, அல்லது அவர்களோடு சேர்ந்து சைக்கிள் ஓடுவது போன்றவற்றை செய்யலாம். தினமும் காலையும் சரி, மாலையும் சரி நாம் வெளியில் போகும் போது மற்றைய இனத்துப் பெண்கள் jogging cycling செய்வதைக் கவனித்து இருப்போம். ஆனால் மிகவும் குறைந்த அளவுத் தமிழ் பெண்களே இப்படி செய்கிறார்கள்.

பணம் செலவழித்துத் தான் தினமும் உடற்பயிற்சி செய்யவேணும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை இது தான் எனது கருத்தே தவிர, இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இல்லை ரதி!! தமிழ் பெண்கள் உடற்பயிற்சி செய்வது ஒரு செய்தியாக வந்து இருகிறதே அது தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையா இது..! கொடி இடை கேள்விப்பட்டிருக்கிறன்..! :unsure: இதென்ன கொடும் இடையா இருக்கே..! :D

நீங்கள் பார்க்கிற இடம் பிழை கண்டியளோ..அது இப்பவும் (இடை) கொடியாய்தான் இருக்கு..

நான் ஜிம்முக்குப் போவதில்லை. வேலை இடத்திலும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதில்லை. வேலை இடத்திலும் சரி, வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பல படிகள் ஏறி இறங்குவேன்.

படியில எறியிரன்குகிறதும் ஜிம் உம் ஒன்றல்ல..படியில ஏறி இறங்குவது உடலுக்கு வேண்டிய உடட்பயிற்சியை தராது. படியில், அல்லது உடல் உழைப்பு செய்வதின் பொது நாங்கள் தேவையான அளவு உடற்பயிற்சியை பெறமாட்டோம். முந்தி 11 வகுப்பு தமிழ் புத்தகத்தில் படித்திருப்பீர்கள்.."மனத்தின் விந்தை" என்று- கொல்லனின் புயத்தை விட, உடற்பயிற்சியாலர்ன் புயம் உருண்டு திரண்டிருப்பது...அவர் அதற்காவே/ அதை வேண்டியே பயிற்சி செய்வதால் ஆகும்.

இதயத்தை பொறுத்தவரையில் படி ஏறுவதால், தேவையான உயர்ந்தளவு இதய துடிப்பு வராது...

முடிவாக ஜிம் க்கு படி ஏறுவது சமல்ல, ஆனால் அதனாலும் பலன் உண்டு

...

எதுவும் அளவாக இருப்பதால் மனம் நிதானமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை போதுமான அளவு இருக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.மேற்குலக வாழ்க்கை முறை அப்படி உள்ளது.பயிற்சி செய்தால் இப்படியும் உடம்பை வைத்திருக்கலாம்.

beatupp.jpg

இந்த படத்தை பார்க்க சகிக்கவில்லை. வாந்தி வருது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை பார்க்க சகிக்கவில்லை. வாந்தி வருது.

இந்த படம் எடுத்த முறைதான் அப்படி எண்ணத்தோணுது போல.

வேறுபக்கமாய் எடுத்திருந்தால் வேறுமாதிரி சொல்ல மாட்டிர்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.மேற்குலக வாழ்க்கை முறை அப்படி உள்ளது.பயிற்சி செய்தால் இப்படியும் உடம்பை வைத்திருக்கலாம்.

beatupp.jpg

நீங்கள் சொல்வதுபோல் உடலை இப்படி வைத்திருக்கலாம்.................

இவர்களை யார் வைத்திருப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இதில பெண்கள் கன்டபடி கோவிக்கிறதில அர்தமில்லை.எப்பவும் ஆண்களை வேலை வாங்காமல் பெண்களும் இடைக்கிட ஒத்தாசை செய்தால் ஏன் இந்த ஜிம் :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சியே தேவை இல்லை என்று நான் எழுதவில்லையே ரதி...

மற்றது நான் ஜிம்முக்குப் போவதில்லை. வேலை இடத்திலும் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதில்லை. வேலை இடத்திலும் சரி, வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பல படிகள் ஏறி இறங்குவேன். மனநிலையைப் பொறுத்து நேரம் இருக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் ஓடப் போவேன். உடற்பயிற்சி செய்வதற்கு கண்டிப்பாக பணம் செலவழித்துத் தான் செய்யவேணும் என்று இல்லை! இதுக்கெல்லாம் நான் பணம் செலவழிப்பதும் இல்லை!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77355

பெண்களை உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்றும் நான் குறிப்பிடவில்லை!

பொதுவாக நாம் உண்ணும் உணவிலிருந்து ஆரம்பித்தால் எமது உடலை நாமே ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். (ஒரு சில பரம்பரை வருத்தங்களைத் தாவிர) மதிய அல்லது இரவு சோறு சாப்பிட்ட்டுக் கொண்டு டிவி சீரியலைப் பார்த்துவிட்டு தூங்குவதால் உடலில் எடை குறைய வழி ஏது? வீட்டில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் அவர்களைக் கூடிக் கொண்டு பார்க்கில் போய் ஒரு மணிநேரமாவது அவர்களுடன் தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை தன்னும் விளையாடுவது, அல்லது அவர்களோடு சேர்ந்து சைக்கிள் ஓடுவது போன்றவற்றை செய்யலாம். தினமும் காலையும் சரி, மாலையும் சரி நாம் வெளியில் போகும் போது மற்றைய இனத்துப் பெண்கள் jogging cycling செய்வதைக் கவனித்து இருப்போம். ஆனால் மிகவும் குறைந்த அளவுத் தமிழ் பெண்களே இப்படி செய்கிறார்கள்.

பணம் செலவழித்துத் தான் தினமும் உடற்பயிற்சி செய்யவேணும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை இது தான் எனது கருத்தே தவிர, இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இல்லை ரதி!! தமிழ் பெண்கள் உடற்பயிற்சி செய்வது ஒரு செய்தியாக வந்து இருகிறதே அது தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. :rolleyes:

இது பெண்கள் உட‌ற்பயிற்சி செய்வது தொட‌ர்பான பதிவு என்பதால் அதில் நீங்களும் வந்து எதிராக கருத்து எழுதினபடியால் நான் நீங்களும் பெண்களுக்கு எதிராகத் கருத்து எழுதுகிறீர்கள் என தப்பாக நினைத்து விட்டேன்...மன்னித்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.மேற்குலக வாழ்க்கை முறை அப்படி உள்ளது.பயிற்சி செய்தால் இப்படியும் உடம்பை வைத்திருக்கலாம்.

beatupp.jpg

இந்தப்படத்தைப் போட்டு, தமிழ்ப்பெண்கள் உடற்பயிற்சி செய்ய வெளிக்கிட்டால் இப்படித்தான் வந்துசேர்வார்கள் என்று அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டி வீட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சி. பெண்கள் மென்மையாக இருக்கவேண்டும், ஆண்கள் கம்பீரமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நம்மிடையே அதிகம்தானே. அதனால்தான் பெண்கள் ஜிம்முக்குப் போகின்றார்கள் என்றதும் சற்றுப் பயம் வருகின்றதுபோலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.