Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?

Featured Replies

ஒருவரை அமெரிக்க எதிர்க்கிறது என்பதை பார்த்தலே, நாம் பல சந்தேகம் கொள்ள வேண்டும்.

70 முதல் 90 வரையான ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தான் இந்த கடாபி. இதற்காக அன்றையிலிருந்தே இவரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது அமெரிக்கா. தனது நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாதவராய் இதுவரை இருந்ததாலே, அமெரிக்காவின் சதி திட்டம் தவிடு பொடியானது.

கடாபி பி.எல்.ஓ.வுக்கு மிக நெருக்கமாய் இருந்து வந்தவர். உலக நாடுகளில் இருந்து வந்த சரியான போராளிகளுக்கு நெருக்கமானவராய் இருந்து வந்துள்ளார். இதனாலேயே, இவர் மீது பல பயங்கரவாத குற்றச்சாட்டுகளை அமெரிக்க வைத்து வந்துள்ளது.

இவரை கட்டுக்குள் வைக்க எண்ணிய அமெரிக்க, அய்.நா. வின் உதவியுடன் 90களில்லேயே பொருளாதார தடைகளை விதித்தது. இதையெல்லாம் தகர்தெரிந்தவர் தான் இந்த கடாபி.

கடாபிக்கும் தமிழர்களுக்கும் சில வகைகளில் இரகசியமாய் நெருங்கிய தொடர்பிருந்து வந்துள்ளது.

ஈழ மிதவாதி என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எதற்காக என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கீழே சொல்லப்பட்ட செய்தி ஒரு காரணம் என எடுத்துக் கொள்ளலாம்.

அப்போது, புலிகளுக்கும் அமிர்தலிங்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பிருந்தது. சுருக்கமாய் சொன்னால், புலிகள் அப்போது சென்னையில் முகாமிட்டிருந்தனர். அமிர்தலிங்கம் சென்னை வந்தால், தமிழகத்தில் கால் பட்டது முதல், திரும்பி செல்லும் வரை அவருக்கு புலிகள் பாதுகாப்பு அளித்து, அனைததையும் கவனித்து வந்தனர். அவ்வளவு நெருக்கம், நம்பிக்கை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் அமிர்தலிங்கம் ஒரு முறை ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்தார். கடாபி அமிர்லிங்கத்தை இரகசியமாய் தன்னை பார்க்க வர சொல்லியிருக்கிறார். இந்த இரகசிய சந்திப்பின் போது, கடாபி, விடுதலைப்புலிகளின் போராட்டம் பற்றி கேள்வியுற்று, அவர்களுக்கு உதவ எண்ணியிருந்தார். தான் ஆயுதப் பயிற்சியளித்து, பண உதவியும் செய்ய உள்ளதாய் கூறினார். இதற்காக புலிகளை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். இரகசிய சந்திப்பு ஆகையால், கடாபி கேட்டுக் கொண்டது யாருக்கும் தெரியாது என எண்ணிய அமிர்தலிங்கம், தன்னுடைய மகனையும் சில இளைஞர்களையும் புலிகள் என்ற போர்வையில், பயிற்சிக்காக அனுப்பினார். பெருந்தொகையும் பெற்றுக் கொண்டார் என செய்திகள் சொல்லுகின்றன. இந்த நிகழ்ச்சி புலிகளின் தலைவருக்கு எப்படியோ தெரிகிறது. அதை நேரிடையாக சென்னை வந்த அமிர்தலிங்கத்திடமே, கேட்கப்பட்டது. முதலில் மறுத்த அமிர்தலிங்கம், பின்னர், பயிற்சி எடுக்கும் தனது மகன் மற்றும் பிறருடைய புகைப்படங்களை காட்டப்பட்டதும் மறுப்பேதும் தெரிவிக்காமல், புலிகளின் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு நடந்தது உலகுக்கு தெரியும்.

இன்னொரு முறை, எனது தமிழக நண்பர் ஒருவர், 15 வருடங்களுக்கு முன்பு டிரிப்போலியில் வேளை செய்து வந்தார். அன்று அவருக்கு சம்பளம் மிக குறைவே. அப்போது, ஒரு நாள் திடீரென உடல் நல குறைவும் ஏற்பட்டு அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு படுக்கை வசதி செய்தி கொடுக்கப்படவில்லை. நம்மவூரில் தபால் கார்டு போலுள்ள, ஒரு கார்டில் மருத்துவமனையில் உள்ள குறைபாட்டை அதிபரான கடாபிக்கு தெரியப்படுத்தினார். என்ன ஆச்சிரியம், தபால் கிடைத்த அன்றே, நேரிடையாக மருத்துவமனைக்கு கடாபி வந்து, குறைகளை நிவர்த்தி செய்ய கட்டளையிட்டுச் சென்றார்.

கடாபி ஏன் 50 ஆண்டுகளுக்கு மேல் பிரச்சனையில்லாமல், ஆட்சி செய்தார் என்பதற்கு தன் மக்களிடம் இருந்த செல்வாக்கே காரணம் என்பது தெளிவு.

தற்போது எகிப்து, தெற்கு சூடான் என ஆப்ரிக்காவில், அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது. ஆகார பசி கொண்டுள்ள அமெரிக்கா, முதலில் ரஷ்யாவை உடைத்தது. வைரம் கொண்டுள்ள ஆப்கானிஸ்தானை தன் வசமாக்கியது. எண்ணை வளம் மிக்க ஈராக்கின் எண்ணை கிணறுகளை தனதாக்கியது. பின்னர், எகிப்தை உடைத்து தன்னுடைய ஆட்களை அமர்த்தியுள்ளது. இப்போது, லிபியாவின் கடாபியை பலியெடுக்க நினைக்கிறது. இதற்காக முதலில் அய்.நா. உதவியுடன் தடைகளை ஏற்படுத்தி விட்டது.

தற்போதைய செய்திப்படி, லிபியாவில் அல் கைதா இயக்கத்தினர், லிபிய இராணுவ உடை தரித்து, பொது மக்களை கொன்றுள்ளதாய் செய்திகள் வருகிறதை கவனிக்கப் பட வேண்டியுள்ளது.

இன்றுள்ள நிலையில், கடாபி இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் உதவியை நாடுகிறார். எண்ணை வளமிக்க ஒரு நாடு உதவி கோருகிறது. இதற்காக பல நாடுகள் அவருக்கு மறைமுகமாய் உதவி செய்ய வருகிறது. அதில் ஒன்று இலங்கை.

கடாபி தமிழர்களுக்கு நல்லவரா என்பதை இனி நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கடாபியை காப்பாற்றினால், தமிழர்களுக்கு நல்லது செய்வாறா என்பதை நாம் நிதானமாய் யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் தமிழன் இருக்கிறான் என்பது மட்டும் உண்மை.--நி.பிரசாந்தன் --

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி தமிழர்களுக்கு நல்லவரா என்பதை இனி நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கடாபியை காப்பாற்றினால், தமிழர்களுக்கு நல்லது செய்வாறா என்பதை நாம் நிதானமாய் யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் தமிழன் இருக்கிறான் என்பது மட்டும் உண்மை.

கடாபியை காப்பாற்ற தமிழரின் B2 பொம்மரால் அமெரிக்கா மீது குண்டு மழை பொழியவேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியை காப்பாற்ற தமிழரின் B2 பொம்மரால் அமெரிக்கா மீது குண்டு மழை பொழியவேண்டும். :lol:

:lol: :lol: :lol:

எங்கதான் இப்படியெல்லாம் எழுத கற்றுக்கொன்டாங்களோ தெரியா, வேனுமென்டால் தமிழன் ஒண்டே ஒண்டு செய்யலாம், நம்ம காக்க வன்னியர் ச்ச்சா வன்னிமைந்தனை அமெரிக்காவுக்கு அனுப்பி அல்லது ஸ்கைப்பில ஒசமாவோட பேசவைச்சு ஒபாமாவை வெருட்டி பார்க்கலாம். :lol:

கடாபி போர்க்குணம் மிக்க ஒரு மனிதர் தான் சந்தேகமில்லை.....

இவர் தமிழர்க்கு ஆதரவானவர் என்றால்....முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இந்த கடாபி எங்கே போயிருந்தார்....?

இந்த கட்டுரையின் ஆதங்கம் தமிழர்கள் ( ஒரு அரசினை கொண்டிருக்காதவர்கள்) கடாபிக்கு ஆதரவு தரல் வேண்டும் எனப்படுகின்றது. அதாவது ஒருவித உளரீதியான ஆதரவு (moral support).

தமிழினத்திற்கு அதன் விடிவுக்கு எது இலாபம் என ஆராய்வதே பொருத்தமாகும்:

1. கடாபிக்கு ஆதரவு தருதல்

2. போராட்ட மக்களுக்கு ஆதரவு தருதல்

3. மேற்குலத்துடன் இணைதல்

4. இப்போதைக்கு நிலைமையை அவதானித்தவண்ணம் இருத்தல்

இன்று இருக்கும் யதார்த்தத்தில், முதலாவது தெரிவு மற்றைய மூன்று தெரிவுகளைவிட பலவீனமானது, எம்மை மேலும் அந்நியப்படுத்தக்கூடியது

கடாபியை எப்படி ஆதரிக்கிறது?

கூப்பிட்டு எங்களுடன் அகதியாக வைத்திருக்கிறதா???

தமிழ்மக்கள் அழியும் போது மகிந்தவுடன் சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக மகிந்தவுடன் கைகோர்ப்பதாக கூறியவர்தான் இந்த கடாபி !

தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஞாபக மறதியா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட பொழுது யாருமே எமக்கு ஆதரவு தரவில்லை.இன்று கடாபியை சர்வதேசமும் எதிர்க்கின்றது.அவர் மீது போர்க்குற்ற விசாரணையைக் கோருகிறது.2 கிழமை வன்மறையில் 2000 மக்கள் கொலை செய்யப்பட்டது போர்க்குற்றம் என்றால் 60 வருட வன்முறையில் 2இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொலை செய்ததும் போர்க்குற்றமே ஆகவே சிறிலங்கா அரசும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற எமது நீதியான கோரிக்கையை ஆதரிக்குமாறு சர்வதேசத்துக்க அழுத்தம் கொடுக்கலாம்.மேலும் மகிந்த கடாபி ஈரான் போன்ற நாடுகளுடன் நட்பைப் பலப்படுத்துவதால் சர்வதேசத்துக்கு சிறிலங்கா மேல் தார்மீகக் கோபம் இருக்கும் இதை நாங்கள் பயன்படுத்த வேணடும்.கடாபியால் எமக்கு எந்தப் பலனும் இல்லை. ஆகவே சர்வதேசத்தின் பக்கம் நிற்போம்.நாடு இல்லாத நமக்கு நாடு: கிடைக்கும் வரை சுயநல அரசியலே நல்லது. நாடு கிடைத்தபின் பக்கச் சார்பு நிலையை எடுக்கலாம்.எல்லா நாடுகளும் லிபியாவை எதிர்க்க இந்தியா மௌனமாக மண்டுவது எதற்குத் தெரியமா?தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றத்தில் தனக்குள்ள பங்கு எந்த நிலையிலும் வெளிவரலாம் என்பதினாலேயே.கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்த வேண்டும்.நாடு கடந்த அரசு செயற்பட வேண்டிய நேரமிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட எங்கடையள் இவ்வளவுத்துக்கு ...கேட்பாரில்லாமல் அழிஞ்சு சாம்பலாகினதுக்குப்பிறகும்?????

இப்பிடி ஒரு கட்டுரை எழுதுறதுக்கு தனி மூளை வேணும்.

கடாபியை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?

சிறிலிங்கம் இது உங்களுடைய சொந்த சரக்கா?

இல்லையேல் மூலத்தை தெரியப்படுத்துங்கள்

akootha

Posted Today, 09:31 AM

இந்த கட்டுரையின் ஆதங்கம் தமிழர்கள் ( ஒரு அரசினை கொண்டிருக்காதவர்கள்) கடாபிக்கு ஆதரவு தரல் வேண்டும் எனப்படுகின்றது. அதாவது ஒருவித உளரீதியான ஆதரவு (moral support).

தமிழினத்திற்கு அதன் விடிவுக்கு எது இலாபம் என ஆராய்வதே பொருத்தமாகும்:

1. கடாபிக்கு ஆதரவு தருதல்

2. போராட்ட மக்களுக்கு ஆதரவு தருதல்

3. மேற்குலத்துடன் இணைதல்

4. இப்போதைக்கு நிலைமையை அவதானித்தவண்ணம் இருத்தல்

இன்று இருக்கும் யதார்த்தத்தில், முதலாவது தெரிவு மற்றைய மூன்று தெரிவுகளைவிட பலவீனமானது, எம்மை மேலும் அந்நியப்படுத்தக்கூடியது

தற்போதைய நிலையில் நடப்பதை அவதானித்துக்கொண்டிருப்பதே நல்லது

கடாபி நல்லவரா? கெட்டவரா ? தெரியல்லியேப்பா.

கடாபிக்கு ஆதரவா இப்போ அறிக்கை விட்டால் எல்லாருடைய பாடும் அம்போ தான்.

கடாபி தன் சொந்த மக்கள் மேல் போர் தொடுத்ததை ஏற்க முடியாது.

மாற்றம் வரும் போது ஏற்க வேண்டும்,

42 வருடம் கட்டி போட்ட மக்கள் இப்போ தான் விளித்துள்ளார்கள்.

கடாபி எல்லாம் ஒரு புரட்சி வாதி இல்லை .ஒரு இஸ்லாமியவாதி. மதத்தை சொல்லி மக்களை ஏமாற்றியது தான் கூட

பொருளாதார வளம் கொண்ட நாட்டை இலகுவாக கட்டி ஆண்டார்.

அவ்வளவுதான்.

கடாபியை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?

கடாபி தமிழர்களுக்கு நல்லவரா என்பதை இனி நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கடாபியை காப்பாற்றினால், தமிழர்களுக்கு நல்லது செய்வாறா என்பதை நாம் நிதானமாய் யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் தமிழன் இருக்கிறான் என்பது மட்டும் உண்மை.

இந்த மாதிரிச் சிந்தனைகளை பிற்போக்குச் சிந்தனை என்று கொள்ளலாமா?

அரசியல், ராணுவ, பொருளாதார பலம் கொண்ட ஒருவர் (ஒரு நாடு) இப்படி சிந்தித்தால் அதில் அர்த்தம் உள்ளது.

சர்வதேசத்தை வேடிக்கை பார்க்கவைத்து இனப் படுகொலை செய்தவர்களை குற்றவாளியாக்க வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, கடாபிக்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்று அலசுவதுதான் தமிழனின் பிரச்சினை என்ற வகையில் சிந்திக்கும் சிலரை என்னவென்று சொல்வது.

தேவையில்லாத பிரச்சினைகளில் தம்மை மாட்டி, சிக்கல்களை அதிகரிக்கும் பிற்போக்கு சிந்தனைகள் அகலும் போது தமிழரின் பலம் மேலும் அதிகரிக்கும்.

கடாபியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது இருக்கட்டும் முதலில் யார் எங்களை கணக்கில் எடுத்தார்?

வீரமணியின் அறிக்கை போல் தான் இதுவும்.கனடாவில் தேர்த்தல் வரும் போது சிலர் வந்து எங்கட பலத்தை இப்பயாவது காட்டவேண்டும் ஏதோ நாங்கள் தான் அடுத்த கனேடிய பிரதமர் யார் என்று தீர்மானிப்பது போல் கதையளப்பார்கள்.

எங்கே போய்முட்டுவதென தெரியவில்லை?

இந்திய பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களின் சிந்தனைகளும், கடாபியை ஆதரிக்கவேண்டுமா என்று கேட்கும் சிந்தனைக்கும் வேறுபாடுகள் இல்லை.

மூஞ்யுறு (எலி) போக வழியிள்ளயாம் அது விளக்குமாத்தயும் தூக்கிக்கொன்டு போச்சுதாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்யுறு (எலி) போக வழியிள்ளயாம் அது விளக்குமாத்தயும் தூக்கிக்கொன்டு போச்சுதாம். :rolleyes:

உண்மை.

இது மாறிவரும் உலக சூழலை தமிழினம் தனது நெடிய போராட்டப் பாதையில், அதாவது 62 ஆண்டுகால இருவழிப் போராட்டத்திலும் பட்டறியவில்லையென்பதைக் காட்டுவதாக உள்ளது. எமது விடுதலைக்காக, எம்மையே ஆதரிக்காதவர்கள் என்கின்ற ஒரு வெட்கக் கேடான நிலையொன்றும் உள்ளது. முதலில் இது தொடர்பாகத் தமிழினம் சிந்தித்துத் தன்னை தகவமைத்துக் கொண்டு, அதன் யாரோடு கூட்டுச் சேரலாம்! யாரை ஆதரிக்கலாம் என்று சிந்திப்பது சாலச் சிறந்தது.

Edited by nochchi

தமிழன் என்றால் யாரென்றே கடாபிக்குத் தெரியாது. இதில் ஆதரிப்பு என்ன செய்யும். எதிர்ப்பு என்ன செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

sl-president-back-in-sl.jpg?w=198&h=300Airport%202.img_assist_custom.jpg

முள்ளிவாய்க்கால் போர் உச்சத்தில் நடந்து கொண்டிந்த போதும், அது முடிவுக்கு வந்த போதும்...

லிபியாவில் கடாபியுடன் நின்ற, மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு பறந்து வந்து விமான நிலையத்தில் இறங்கி மண்ணிற்கு முத்தமிட்ட படத்தை இவ்வளவு கெதியில் கட்டுரையாளர் மறந்து விட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன். இந்த கட்டுரையின் நோக்கம் கடாபியின் பிரச்சினையில் தமிழர் எந்தப்பக்கம் என்பதாக இருக்குமென்று. அப்படி பார்த்தால் கடாபி கவிழ்க்கப்படப்போவது உறுதியான நிலையில் அங்கு அடுத்து ஆட்சி அமைக்க இருப்பவர்களுக்கு கடாபியினதும் மகிந்தவினதும் கூட்டுக்கள் தெரிந்திருக்கும் நிலையில் எமது நாடுகடந்த அரசு போன்ற அமைப்புக்கள் லிபியாவின் புதிய ஆட்சியாளர்களோடு மகிந்த மற்றும் கடாபியின் ஆட்டங்களை ஞாபகப்படுத்தியபடியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதன்படியும் இணைந்து கொள்ளவேண்டும். இதேபோல் துனிசி மற்றும் எகிப்திலும் கரங்களை இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும்.

மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு பறந்து வந்து விமான நிலையத்தில் இறங்கி மண்ணிற்கு முத்தமிட்ட படத்தை இவ்வளவு கெதியில் கட்டுரையாளர் மறந்து விட்டாரா?[

இந்நாள் சிறிலங்காவின் பொன்நாள்.

இதன் திகதியை கக்கூஸ்காரர், மன்னிக்கவும் கட்டுரையாளர் மறந்திருக்க மாட்டார்.

Edited by thappili

இந்நாள் சிறிலங்காவின் பொன்நாள்.

இதன் திகதியை கக்கூஸ்காரர், மன்னிக்கவும் கட்டுரையாளர் மறந்திருக்க மாட்டார்.

:lol::D :D

  • தொடங்கியவர்

நான் நினைக்கின்றேன். இந்த கட்டுரையின் நோக்கம் கடாபியின் பிரச்சினையில் தமிழர் எந்தப்பக்கம் என்பதாக இருக்குமென்று. அப்படி பார்த்தால் கடாபி கவிழ்க்கப்படப்போவது உறுதியான நிலையில் அங்கு அடுத்து ஆட்சி அமைக்க இருப்பவர்களுக்கு கடாபியினதும் மகிந்தவினதும் கூட்டுக்கள் தெரிந்திருக்கும் நிலையில் எமது நாடுகடந்த அரசு போன்ற அமைப்புக்கள் லிபியாவின் புதிய ஆட்சியாளர்களோடு மகிந்த மற்றும் கடாபியின் ஆட்டங்களை ஞாபகப்படுத்தியபடியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதன்படியும் இணைந்து கொள்ளவேண்டும். இதேபோல் துனிசி மற்றும் எகிப்திலும் கரங்களை இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும்.

இப்படியான ஒரு உருப்படியான கருத்தை எடுக்கத்தான்...இந்த கட்டுரையை இணைத்தேன்....விசுக்கு....நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.