Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாம்! – கம்பவாரிதி இ.ஜெயராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாம்! – கம்பவாரிதி இ.ஜெயராஜ்

சனி, 26 மார்ச் 2011 03:22

தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும், சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என்பதுடன் இனம் பற்றிய உண்மையான அக்கறை கொண்டவராகவும், அன்பு கொண்டவராகவும் இருந்துவருகின்றார் என்பதை நாங்கள் உணர்வுபூர்வமாக அறிவோம்.

தமிழர்களுக்கான சுயகௌரவம், பண்பாடு, வாழ்வியல் உள்ளிட்ட சகல உரிமைகளையும் அரசுடன் பேசிப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய பொறுப்பும், தமிழ் மக்கள் சுயமிழந்து வாழாமல் இருப்பதற்கு மட்டுமல்லாமல் கௌரவமான வாழ்வை வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சர் அவர்களால் மட்டுமே முடியும்.

அத்துடன் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அங்கு உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எந்தவொரு விடயத்தையும் தனித்துவமாகவும், தனித்தன்மையுடனும் ஆராய்ந்து தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடியவர் என்பதுடன் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த போது இந்து சமயத்திற்கு அளப்பரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

உள்ளத்தின் கிடக்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யக் கூடிய பண்புகள் நிறைந்த அரசியல் தலைமை இவரிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிறைவில் கொழும்பில் அமையப்பெறவுள்ள ஐஸ்வர்யலக்ஸ்சுமி கோயில் புதிய கட்டடத் திருப்பணிக்காக ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ஜெயவாத்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரசாந்தன் உள்ளிட்ட கம்பன் கழகத்தை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு என்றாலும் ஜால்ரா அடிக்காம நம்மால கம்பனை வளர்க்க முடியல்ல..! மக்களே மன்னிச்சுக்குங்க..! :lol::D

யாருக்கு என்றாலும் ஜால்ரா அடிக்காம நம்மால கம்பனை வளர்க்க முடியல்ல..! மக்களே மன்னிச்சுக்குங்க..! :lol::D

:lol: :lol:

நாங்கள் யாழ் இந்துவில் படிக்கும் போது இவரை பற்றி நிறைய கசமுசா வரும். இவர் இன்னும் திருந்த இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும், சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளத்தின் கிடக்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யக் கூடிய பண்புகள் நிறைந்த அரசியல் தலைமை இவரிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

:D:D:D

post-7731-0-12723700-1301138629_thumb.jp

இப்படத்தை பேஸ்புக்கில் போட்டுவிட்டு நண்பர் ஒருவர் எழுதிய கருத்து இது

'கூழைக் கும்பிடு போடுதல்' என்றால் என்ன?? ”

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேவலங்களைப்பத்தி என்னத்தச் சொல்லுறது. கடந்தகாலங்களில் நல்லூர், கோவில்வீதியில் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான காணித்துண்டு ஒண்டு இருந்தது, அதாவது நல்லூர் வடக்குவீதிக்கு அண்மையாக. அங்கு நிரந்தரமான மலசலகூடத்தொகுதியொன்றும் கட்டப்பட்டிருந்தது திருவிழாக் காலத்தில்தான் அதை கோவிலுக்கு வருவோரது அவசரபாவனைக்கு அனுமதிப்பார்கள். ஏனைய நாட்களில் அது பூட்டியே இருக்கும். தொண்ணூறுகளில் அப்போது மாநகரசபையில் விசேட ஆணையாளராகவிருந்த பாலசிங்கம் என்பவருக்குக் குழையடித்து (பாலசிங்கம் தற்போதைய மாநகர முதல்வர் திருமதி பற்குணத்துக்கு உறவு எனக்கேள்விப்பட்டேன் உண்மையொ பொய்யோ தெரியாது) கம்பன் கழகத்துக்குப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். அப்போதே நானும் எனது நட்புவட்டமும் கதைக்கும் விடையம் என்னவெனில், இந்தக்காணி கம்பன்கழகத்துக்கொடுத்ததைவிட முனிசிபல் கக்கூசாகவே இருந்திருக்கலாமென. எனது கருத்துக்கு கம்பன் கழக ஜெயராசா வலுச்சேர்க்கிறார். என்னதான் கருவாட்டுக்கூடையை நன்றாகக் கழுவி அதுக்குள்ள வாசனைப்பொடியைத்தூவி பாவனைக்கு வைத்தாலும் கருவாட்டு நாத்தம் விலகிப்போய்விடாது அதுக்குள்ள எந்தப்பொருளைப் போடுகிறோமோ அப்பொருளிலும் அது தொத்திக்கொள்ளும். கம்பன் கழகம் கக்கூசு இருந்த இடத்திலதானே கட்டப்பட்டிருக்கு அதனால அதுக்குத் தொடர்புடையவர்களது வாயிலிருந்து வரும் கருத்துக்களும் கக்கூஸ்தனமாகவே இருக்கும். இந்தக்கேவலம்தான் மகரயாழ் கொடுத்துக்கொண்டு திரிஞ்சது.

"பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்.

காசைக் கண்டால் இலக்கியவாதி கம்பவாரிதி ஜெயராஜ் அம்மணமாகவும் நிற்பார்"

என்கிறார்கள் ஒருசில கம்பன்கழக தூண்கள்.

இதில் கூழைக் கும்பிடு போடுபவர் கம்பன்கழக நிரந்தர பொருளாளர் பாலேந்திரனாம். கம்பன் கழக காசுக் கறப்புகளை கொள்ளையடித்து ஜெயராஜ் குடும்பத்தினருக்கு வழங்குவதில் கில்லாடியாம். அதனால் அவர் நிரந்தர பொருளாளர்.

சுயகௌரவம், பண்பாடு, வாழ்வியல் தமிழனின் உரிமையை மதிக்கும் குணம், உண்மை, நேர்மை முதலிய நற்குணங்கள் அனைத்தையும் துறந்தவர் தான் குடும்பி கட்டியிருக்கும் கம்பன்கழக ஜெயராஜ்.

இப்படிப்பட்டவர் இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் டக்லஸ் குழுவின் கடத்தல், கப்பம், கொள்ளை, கொலை அரங்க நாயகன் டக்ளசை புகழ்ந்து பேசுவது ஆச்சரியம் தராது.

கம்பன்கழக கம்பவாரிதி ஜெயராஜும் இந்திய அரச, ரோ பயங்கரவாதிகளின் கைக்கூலி என்ற கதை பரவலாக உள்ளது.

கம்பன்கழக கம்பவாரிதி ஜெயராஜும் காசு, புகழுக்காக எதையும் செய்யக்கூடிய "விபச்சாரி" ரகத்தை சேர்ந்த இலக்கியவாதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
viththidouglas.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர்

அது சரி ...கம்பர் இனத்தைப் பற்றி அக்கறை கொணடவர்......தமிழ் இனத்தைப்பற்றியல்ல....

...அண்மையில் கொழும்பு சென்றிருந்த ஒரு நண்பர் உந்த கம்பவரிதியை சந்திந்தார். உந்த கம்பவாருதி புத்தம் புதிய காரில் வந்திறங்கினாராம்!!! ... உந்த கம்பவாருதிக்கு மட்டுமல்ல இன்னும் சில பிராமணர்களுக்கு உந்த புதிய சிறிய கார்கள் அத்தியடி குத்தியினால் வழங்கப்பட்டிருக்கிறதாம்!!!! ... ஏன்???????????

.... குத்தி, ... யாழில் ஆலயங்களுக்கு, நிகழ்வுகளுக்கு போகும் போது உந்த பிராமண கூட்டமும் போக வேண்டுமாம்!!! ... அதனை விட சிங்கள ராஜபக்ஷ உட்பட அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் யாழுக்கு செல்கையில் இவர்கள் தானாம் மாலை போட வேண்டும் என்ற உத்தரவுக்கமைய வழக்கப்பட்டதாம்!!!!

உந்த கம்பவாருதிகள், கொலையாளி குத்திக்கு ... இந்துமத தர்மங்களின் அடிப்படையில் வழங்கும் இச்சான்றிதல் ... குத்தியின் மூலம் அனுபவிக்கும் போகங்களுக்காகவே!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கம்பவாருதிக்கு மட்டுமல்ல இன்னும் சில பிராமணர்களுக்கு உந்த புதிய சிறிய கார்கள் அத்தியடி குத்தியினால் வழங்கப்பட்டிருக்கிறதாம்!!!! ... ஏன்???????????

அதுதான் ஈழமக்களின் புரட்சிகர சிந்தனை போல

சிட்னியிலும் சில குடும்பி வைச்ச கம்பர் ரசிகர் திலக்கதினர் இருக்கினம்,அவர்கள் டக்கிளசை அழைத்து விழா எடுத்தாலும் எடுப்பினம் போல கிடக்குது......

தமிழ் மக்களை கடத்தி, கொலை செய்து டக்லஸ் பெற்ற கப்பப் பணத்தை அனுபவிக்கும் கம்பவாரிதி ஜெயராஜுக்கு இன்று முதல் கப்பவாரிதி என்ற பட்டத்தையும் வழங்கி மகிழலாம்.

எட்டாம் வகுப்பில் அரைக்காற்சட்டையுடன் சூட்கேசுடன் வந்து எனது வகுப்பில் கடைசிவாங்கில் இருந்தவர்தான் இந்த ஜெயராஜ்.

அதே போல் தான் தமிழ்காங்கிரஸ் நல்லையா குமரகுருபரனும்.இவரும் அரைக்காற்சட்டை+ சூட்கேஸ்.

மலரும் நினைவுகள்.நாங்கள் முன் வாங்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டாம் வகுப்பில் அரைக்காற்சட்டையுடன் சூட்கேசுடன் வந்து எனது வகுப்பில் கடைசிவாங்கில் இருந்தவர்தான் இந்த ஜெயராஜ்.

அதே போல் தான் தமிழ்காங்கிரஸ் நல்லையா குமரகுருபரனும்.இவரும் அரைக்காற்சட்டை+ சூட்கேஸ்.

மலரும் நினைவுகள்.நாங்கள் முன் வாங்கு.

ஒமோம் விளங்குது விளங்குது......கடைசி வாங்கிலை இருந்தவரே சூட்கேசும் அரைக்காச்சட்டையுமெண்டால் ??????

முன் வாங்கு சொல்லி வேலையில்லை....... :lol:

ஒமோம் விளங்குது விளங்குது......கடைசி வாங்கிலை இருந்தவரே சூட்கேசும் அரைக்காச்சட்டையுமெண்டால் ??????

முன் வாங்கு சொல்லி வேலையில்லை....... :lol:

:lol: :lol: :lol:

ஒமோம் விளங்குது விளங்குது......கடைசி வாங்கிலை இருந்தவரே சூட்கேசும் அரைக்காச்சட்டையுமெண்டால் ??????

முன் வாங்கு சொல்லி வேலையில்லை....... :lol:

:D:D:D

என்ன இனம் ஆடு மாடு நாய் பன்டி இதுகளப்பற்றிய அக்கறையா? :D :D

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இவன் தமிழ்நாட்டு ஜெயில் சிறைதண்டனை பெற்று .களி தின்று.ஜாமீனில் வெளிவந்து.. காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு.. டீ கடையில் டீ ஆத்த வெண்டிய பயல்.. :(

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?? எல்லாம் ஒன்றுதான் !
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கவிஞர்கள், பேச்சாளர்கள், பலரும் அடிப்படையில் "புகழ் விரும்பிகள்" அல்லது சமுகம் அப்படித்தான் அவர்களை பார்க்கிறது..ஈழத்துக்காக குரல் கொடுக்கும்/ ? கொடுக்கிற வைரமுத்து கலைஞரின் ஆஸ்தான கவிஞன்..இன்று இவர். ஆனால் இவர் யாழில் இருந்த போது கம்பன் விழா நடத்தி மகர யாழ் கொடுத்தவர்...அப்படிக் கொடுத்தவர்களில், நான் நினைக்கிறன் துரைராஜா, சிவகுர்மாரன்..திலீபனின் இறப்பை உறுதி செய்தவர், ஜெயகுல ராஜ- மருத்துவ பிரிவுக்கு பொறுப்பு என்று நினைக்கிறன்..இப்படி பாடிப்பாடியே காலம் ஓட்டினவர்கள்...இன்று இப்படி சொல்லுவது சரியோ பிழையோ அல்ல..ஒன்று அவருக்கு தெரியும் எப்படி டக்ளிஸ் இடம் 5 லட்சம் காசோலை எப்படி பெறுவது என்று..அவர் பெற்றும் விட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.