Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார்

Featured Replies

ஒசாமா பின் லாடன் உயிருடன் இல்லை - ஒபாமா

- கொல்லப்பட்டார்

- இவரின் இறந்த உடல் அமெரிக்காவிடம் உள்ளது

Osama bin Laden has been killed, a United States official said Sunday night. President Obama is expected to make an announcement on Sunday night, almost 10 years after the September 11 attacks on the World Trade Center and the Pentagon.

http://www.nytimes.com/2011/05/02/world/asia/osama-bin-laden-is-killed.html

  • Replies 91
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய நாடுகளில் பயங்கர கொந்தளிப்பு ஏற்படப் போகின்றதே..........

இதனை எப்படி மேற்குலகம் சமாளிக்கப் போகின்றது, என்பது வருகின்ற நாட்களில் பெரிய சவாலாக இருக்கப் போகின்றது.

  • தொடங்கியவர்

- பாகிஸ்த்தானின் தலைநகாரான இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் கொல்லப்பட்டார்

- ஒரு மாளிகையில் குடும்பத்துடன் இருந்துள்ளார்

- முன்னர் கூறியதுபோல் அப்கானிஸ்தானில் இருக்கவில்லை

- பாகிஸ்தான் - அமெரிக்கா உறவுகளை மேலும் பாதிக்கும் இல்லை உயர்த்தப்படலாம் இதில் பாகிஸ்தான் இவரை பாதுகாத்ததா இல்லை காட்டிக்கொடுத்தா என்பதை பொறுத்து

Edited by akootha

  • தொடங்கியவர்

இஸ்லாமிய நாடுகளில் பயங்கர கொந்தளிப்பு ஏற்படப் போகின்றதே..........

இதனை எப்படி மேற்குலகம் சமாளிக்கப் போகின்றது, என்பது வருகின்ற நாட்களில் பெரிய சவாலாக இருக்கப் போகின்றது.

- உலகம் முழுக்க 'பயங்கரவாத பயத்தின்' அளவுகோல் (security threat level ) உயர்த்தப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

- இஸ்லாமிய நாடுகளில் இந்த செய்தி பொய் என கூறப்படுகின்றது

- அமெரிக்கர்கள் 'அமெரிக்கா' . 'அமெரிக்கா' என கோசம் போடுகிறார்கள்

  • தொடங்கியவர்

- கடந்தவாரம் ஒசாமா பின்லேடனை கொல்ல அனுமதி கொடுத்தேன் - ஒபாமா

- நேரடி சண்டை மூலம் கொல்லப்பட்டார்

- பாகிஸ்தானிய அதிபருடன் இதைப்பற்றி கதைத்தேன்

அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்; பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது குண்டுக்கு பலி

அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாபா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒபாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்க இரட்டை ஙகோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று ஒசாமா அமெரிக்க படையின் ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை அல்குவøதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை ஒசாமா பலி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷச்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

அல்குவைதா எச்சரிக்கை : சமீபத்தில் அல்குவைதா வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒபாமா கொல்லப்பட்டிருக்கிறான்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=234662

பின்லாடன் கொல்லப்பட்டது உண்மையானால் இச்செய்தி முதன்மை பெற்று

இலங்கைபற்றிய ஐ நா வின் அறிக்கையின் முக்கியத்துவம் பின் தள்ளப்பட்டுவிடும்

இனி அனைத்துப் பத்திரிகை கணணிகளில்பின்லாடன் பற்றிய செய்தி முன்னிறுத்தப்பட்டு

இலங்கைபற்றிய போர் குற்ற அறிக்கை மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடுமோ தெரியவில்லை

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடன் கொல்லப்பட்டது உண்மையானால் இச்செய்தி முதன்மை பெற்று

இலங்கைபற்றிய ஐ நா வின் அறிக்கையின் முக்கியத்துவம் பின் தள்ளப்பட்டுவிடும்

இனி அனைத்துப் பத்திரிகை கணணிகளில்பின்லாடன் பற்றிய செய்தி முன்னிறுத்தப்பட்டு

இலங்கைபற்றிய போர் குற்ற அறிக்கை மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடுமோ தெரியவில்லை

காரணிகன், எல்லாம் நன்மைக்கே! இந்தச் செய்தியில் சிங்களத்தின் மக்கள் பலத்தைக் காட்ட மகிந்தவால் நடத்தப் படும், மேதின ஊர்வலம் தான் முக்கியத்துவம் இல்லாமல் போகும்!

எங்கள் அறிக்கை விடயம், கவனத்தில் எடுக்கப் படும் போது, பின் லாடன் விஷயம் கிட்டத் தட்ட முடிந்து விடும் என்று நம்புவோம்!

பின்லாடன் கொல்லப்பட்டது உண்மையானால் இச்செய்தி முதன்மை பெற்று

இலங்கைபற்றிய ஐ நா வின் அறிக்கையின் முக்கியத்துவம் பின் தள்ளப்பட்டுவிடும்

இனி அனைத்துப் பத்திரிகை கணணிகளில்பின்லாடன் பற்றிய செய்தி முன்னிறுத்தப்பட்டு

இலங்கைபற்றிய போர் குற்ற அறிக்கை மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடுமோ தெரியவில்லை

மூவாயிரம் அமெரிக்கர்களை கொன்ற ஒசாமாவுக்கு தண்டனை கொடுத்தாயிற்று 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற மகிந்தவுக்கு எப்போது தண்டனை என்று கருத்துப்படங்கள் வாசகங்கள் கருத்துக்களை முன்வைப்போம். இங்கை அரசு ஒபாமாவுக்கு தங்களைப்போல் நீங்களும் பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாக வாழ்த்து தெரிவிப்பார்கள். சில ஒப்பீடுகள் செய்ய முற்படுவார்கள்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

பின்லேடன் உயிரிழந்தார்! (இரண்டாம் இணைப்பு)

Posted by admin On May 2nd, 2011 at 8:58 am /

அல்கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல் அமெரிக்காவின் வசம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒசாமாவின் மரணம் குறித்து இன்று அதிகாரபூர்வமாக நாட்டுமக்களுக்கு அறிவிப்பார் என்றும் அமெரிக்க அரச நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்ரம்பர் 11 தாக்குதல் மூலம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தை நிலைகுலையச் செய்த சம்பவத்திற்குப் பொறுப்பானவரான பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வெள்ளைமாளிகையில் இருந்து அறிவித்தல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

பாகிஸ்தான் ஸ்லாமாபாத்தில் உள்ள பின்லேடனுடைய மாளிகையில் வைத்து பின்லேடனும் அவருடைய குடும்பத்தினரும் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அதிகார பூர்வ அறிவித்தலுக்கு முன்னோடியாக பின்லேடனின் மரணம் குறித்து அதிகாரிகள் தகவல் கசியவிட்டிருக்கின்றார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவருக்கு முந்திய அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஸ்சும் பின்லேடனை உயிருடன் கைதுசெய்வது தேசிய முக்கியத்துவம் மிக்க முன்னுரிமைப்படுத்தப்பட்ட விடயம் எனக்குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் பயங்கரவாதத்தின் அதி உச்ச பிரதேசமாக நிலவிய பகுதியிலேயே அல்கைதா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் மறைந்திருந்ததாகக் கருதப்பட்டது.

saritham

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்,

தமிழர்கள் எவரையும் ஒசாமா கொல்லவில்லை என்று நினைக்கிறேன். அவரால் கொல்லப்பட்டவர்கள் 3000 அமெரிக்கர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களும், ஈராக்கியர்களும் முன்னால் சோவியத் ஒன்றிய மக்களும்தான். ஆனால் அமெரிக்கா மீதான தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதில் இன்னும் பெரும் வாதங்களும் பிரதிவாதங்களும் இருப்பதை மறுக்க முடியாது. சிலவேளை அமெரிக்கர்கள் என்பதற்குப் பதிலாக தவறுதலாக தமிழர்கள் என்ப்று எழுதியிருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நாம் ஒசாமாதான் அமெரிக்கக் கொலைகளுக்குக் காரணம் என்றே செயற்பட வேண்டியிருக்கிறது. அமெரிக்கர்களுக்கு நீதிகேட்டு ஒசாமவைக் குறிவைத்ததுபோல் மகிந்தவின் போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு

திங்கள்கிழமை, மே 2, 2011, 9:36[iST]A A A

Free Newsletter Sign up

Ads by Google

SEDB - Singapore Sessions www.SEDB.com/Singapore-Sessions

Insights on Urban Thoroughfare from Top Experts at Singapore Sessions!

வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read: In English

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

thanks-thatstamil.com

நாம் இந்த செய்திக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும்.நா.க.அரசு அது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் அறிக்கை விட வேண்டும்.

கொல்லப்பட்டார் ??????

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அமெரிக்க மக்களுக்கும் மேற்குலக மக்களுக்கும் இதை வெற்றியாக இனங்காட்டலாம். ஒரு ஒசாமாவை அழிப்பதன் மூலம் பல்லாயிரம் ஒசாமாக்களை நிச்சயம் இவர்களின் வெற்றிக் கொண்டாட்டங்கள் உருவாக்கும். அமெரிக்கர்கள் வெளிப்படுத்தும் குதூகலிப்பே அவர்களுக்கும் உலகம் முழுதும் ஆபத்தை கொண்டு வரலாம்.

தலைவர்களை அழிப்பதன் மூலம்.. மதத்தீவிரவாதம் அழிக்கப்படும் என்றால் அது எப்பவோ அழித்திருக்க வேண்டும். இன்று ஓசாமா நாளை இன்னொருவன்..! அமெரிக்காவும் அவனையும் தேடி குண்டு கொட்டிக் கொண்டே இருக்கும். மனித இனமும் அழிவை சந்தித்துக் கொண்டே இருக்கும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு ஆயுதமோ.. கொலையோ நிரந்தரத் தீர்வை தரா. கொலைகள் அது யார் செய்தாலும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாக அமைவது மற்றைய மக்களை பழிவாங்கத் தூண்டுவதாகவே அமையும். அமெரிக்கர்கள் சிந்திக்க வேண்டும். செப் 11 தாக்குதலில் கொல்லப்பட்டதை விட அதற்கு பதிலடியான தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம்..! இவை இந்த உலகில் மதப் பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒரு போதும் உதவப் போவதில்லை. மாறாக ஒசாமாவை விட மோசமான தலைமைகளை உருவாக்கவே வழி செய்யும்..!

அப்படி ஒருவர் உருவானால்.. அதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே முழுப் பொறுப்பு.. என்பதையும் உலகம் உணர வேண்டும்.

இது ஒசாமாவுக்கு ஆதரவான பதிவல்ல. ஒசாமாவையோ சில தலைவர்களையோ கொல்வதன் மூலம்.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியாது. அது ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இருந்தும் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்..!

Edited by nedukkalapoovan

http://www.reuters.com/article/2011/05/02/us-binladen-iv-idUSTRE7410IO20110502

இது உண்மையாக இருந்தால்...

பின் லாடனை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கு நாடுகளில் அணுகுண்டுகள் பாவிக்கப்படும் என்று விக்கி லீக்ஸ் கசிவின் மூலம் வெளிவந்த்திருந்ததாக போனவாரம் படித்த ஞாபகம்.

http://www.nowpublic.com/world/al-qaeda-threatens-bomb-west-if-laden-harmed

என்றைக்காவது ஒரு நாள் சாவு அவனைத்தேடி வரும் என்று நினைத்து அடுத்த தலைவர்களை ஆயத்தப் படுத்தாமலா இவ்வளவு காலமும் இருந்திருப்பாங்கள்?

அமரிக்கா பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு இனி நிம்மதி இருக்குமா என்பது சந்தேகமே... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சின் கருத்தில் முதிர்வு தெரிகின்றது. ஆயினும் இஸ்லாமியப் பயங்கரவாதம், நாகரீகமென நாங்கள் கருதும் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் எதிராகப் போகின்றது.அத்துடன் இவர்களது மதம் கூறும், சகோதரத்துவமும் இஸ்லாமியர்களுக்கு இடையே தான். மற்றவர்களை இவர்கள் 'வழி தவறியவர்கள்' (Infidels ) என்று தான் கருதுகின்றார்கள்.இவர்களது மதக் கொள்கைகள், தனி மனிதனின் படுக்கை அறை வரையும் நீள்கின்றன.அமெரிக்கா செய்தது சரியென்று நான் வாதிடவில்லை.ஆனாலும் ஒசாமா அழிக்கப் பட வேண்டியவர் என்பதில் எனக்கு உடன்பாடு தான்!!!

இவர்கள் பெண்களைப் படுத்தும் பாடு, நவீன உலகில் ஏற்றுக்கொள்ளப் படக் கூடியதல்ல!!!

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

:( நெடுக்கு,

பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு எம்மால் இன்னும் சரிவரப் புரிந்துகொள்ளப்படவில்லை.

சகட்டுமேனிக்கு மேற்குலகிற்கெதிராகத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், தமது நாடுகளில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக நடக்கும் விடுதலைப் போராட்டங்களுக்குமிடையே பாரிய வித்தியாசமிருக்கிறது. ஆனாலும் சிலவேளைகளில் சிவிலியன் மீதான தாக்குதல்களால் இவை ரெண்டுமே ஒன்றாகக் கணிக்கப்படுவதும் நடக்கிறது. சில உண்மையான விடுதலைப் போராட்டங்கள்கூட இதே ரீதியான பொதுமக்கள் மீதான தாக்குதல்களினால் உலகில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டதும் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பின்னடைவுக்கு இவனும் ஒரு முக்கிய காரனம்.

  • கருத்துக்கள உறவுகள்

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

திங்கள்கிழமை, மே 2, 2011, 14:40[iST]

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.

பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.

அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.

Read: In English

இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் கையாளப்பட்டதாகவும், உடல் அடக்கம் நடந்ததாகவும். அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கம் தரவில்லை.

உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடலாம் என்பதால் அதைத் தவிர்க்கவே கடலில் உடலை வீசியதாக தெரிகிறது. கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இதனால் உடல் உண்மையிலேயே கடலில் தான் வீசப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

thatstamil

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறியுள்ளது அமெரிக்கா: முஷாரப்

இஸ்லாமாபாத் அருகே அப்போட்டாபாதில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தானின் இறையாண்மை மீறல் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்தார். அமெரிக்கா நமது பிரதேசத்துக்கு வந்து நடவடிக்கை எடுத்துள்ளது நமது இறையாண்மையை மீறியுள்ளதாகும். அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைகள் சரியானதல்ல என்று முஷாரப் தெரிவித்தார். அந்நிய நாட்டின் படைகள் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் வந்துள்ளன. அதை பாகிஸ்தான் மக்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்கப் படைகள் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் வந்திருக்கக்கூடாது என அவர் கூறினார்.

பாகிஸ்தான் அரசும் பயங்கரவாதிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரசும் இணைந்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முயற்சி செய்யும் அனைத்து படைகளும் ஒன்றையொன்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் குறைபாடு ஏற்பட்டால் அது தவறானது. ஒரே எதிரியை எதிர்த்துப் போரிடுகிறோம். அதனால் இரண்டு அமைப்புகளும் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என முஷாரப் குறிப்பிட்டார்.

பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுவது உண்மையா எனக் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அப்போட்டாபாதில் பின்லேடன் தங்கியிருந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகள் சிலர் அவருக்கு உதவிசெய்ததாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

உள்ளூர் நிர்வாகத்தினர் உதவசெய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உள்ளூர்வாசிகள் சிலர் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும். அது பாகிஸ்தான் புலனாய்வுத் துறையின் தோல்வி. பின்லேடன் அந்த இடத்தில் தங்கி இருந்தாரா அல்லது வந்துசென்றுகொண்டிருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. எனினும் ராணுவ கட்டடத்துக்கு நெருக்கமான ஒரு வீட்டில் பின்லேடன் குடியிருந்தது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் புலனாய்வு துறைக்கு ஏற்பட்ட தோல்வி என முஷாரப் குறிப்பிட்டார்.

பின்லேடன் கொல்லப்பட்டது பாகிஸ்தானிலும், உலகத்திலும் அமைதியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE:+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D&artid=412936&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • கருத்துக்கள உறவுகள்

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

:rolleyes::rolleyes: :rolleyes:

கடலில் புதைக்கப் பட்டதாக அதற்குள் விக்கிப்பீடியாவில் போட்டு இருக்கிறார்கள்

http://en.wikipedia.org/wiki/Osama_bin_Laden

http://www.wwl.com/AP--Osama-bin-Laden-buried-at-sea/9743600

பின் லாடனின் இரண்டு மனைவிமார்களும், ஆறு பிள்ளைகளும் பாகிஸ்தான் படைகளால் கைதாகியுள்ளதாக சீனாவின் Xinhua என்ற தொலைகாட்சி செய்தி வெளியீடு உள்ளதாகக் கூறப் படுகிறது

http://www.upi.com/Top_News/World-News/2011/05/02/Report-Bin-Laden-children-wives-arrested/UPI-55701304321668/

தலையில் சூடு விழுந்தே பின்லேடன் மரணம்.. புகைப்படம் எரியும் வீடு !

படுகொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலம் தற்போது அமெரிக்காவிடம் உள்ளது. தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்தே இவர் மரணமடைந்துள்ளார். இந்த உடலம் பின்லேடனின் பல்வேறு காலகட்ட புகைப்படங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது. இவருடைய பற்கள், தாடை அமைப்பு போன்றன முந்தய புகைப்படங்களுடன் நேரடியாக பொருந்துகின்றன. ஆனால் தலைமுடி மட்டும் இளைஞனுக்கு இருப்பதைப்போல கருமையாக இருக்கிறது. மேலும் தாடியும் கருமையாகவே உள்ளது. இவருடைய உடல: டி.என்.ஏ பரிசோதனைக்கு பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இடதுபுற கண் வழியாக குண்டு பாய்ந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=67684

பின்லேடன் பலி எதிரொலி-அல்கொய்தா அணு குண்டு வீசுமா?

May 2, 2011

அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது உயிருடன் பிடிபட்டாலோ ஐரோப்பிய நாடுகள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று அல் கொய்தா ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சொன்னபடி அவர்கள் செய்வார்களா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒரு விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அமெரிக்க தூதரக கடிதப் பரிமாற்றத்தில் தெரிய வந்தது.

அதில் அந்த அல் கொய்தா தலைவர் கூறுகையில், பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியாது. ஒரு வேளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம். இதற்காக ஒரு அணுகுண்டை ஐரோபப்ிய நாடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

தற்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால், அல் கொய்தா அடுத்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை குறி வைத்து அது தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஏற்கனவே எச்சரித்தபடி அது அணுகுண்டு வீச்சில் இறங்குமா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுகுண்டு என்பது ஏதோ பொறி உருண்டை போல சாதாரணமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாத ஒன்று என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அல் கொய்தா ஆதரவு நாடு ஏதாவது அவர்களுக்கு இதுதொடர்பாக உதவினால் நிலைமை விபரீதமாகக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

http://www.alaikal.com/news/?p=67669

பின்லேடனின் புகைப்படம் போலியானது!

சற்று முன்னர் அரபிக் தொலைக்காட்சிகள் பின்லாடன் படுகொலை குறித்து வெளியான புகைப்படம் போலியானது என்று தெரிவித்துள்ளன. நெற்றி, அதில் வழியும் இரத்தம், கண் என்பன தவறானவை என்று சுட்டிக்காட்டியுள்ளன. அதேபோல அசோசியஸ் பிரஸ் தாபனம் இந்தப் புகைப்படம் ஊர்ஜிதம் செய்யப்பட முடியாதது என்று திருப்பி எடுத்துள்ளது. பின்லாடன் போல ஒரு பொம்மையே காண்பிக்கப்பட்டது என்ற வாதங்கள் அடுத்த கட்டமாக வெளிவரலாம்.

இது இவ்வதமிருக்க அமெரிக்க அதிரடிப்படைகளால் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் இறுதிக்கிரியைகளை எப்படி நடாத்துவது என்ற சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவருக்கான இறுதி கிரியைகளை உலகத்தின் எங்காவது ஒரு பகுதியில் செய்தால் அந்த இடம் அவருடைய நினைவிடமாகிவிடும். ஆகவே கடலில் செய்வதே பொருத்தமானது என்று கருத்து முதல் கட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பின்லேடன் தீவிர இஸ்லாமிய கொள்கைகள் சார்ந்த ஒருவராக இருப்பதால் அவருடைய மதம் சார்ந்த கிரியைகளை நடாத்த வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் கூறும்போது இறந்த ஒருவரை அவமதிப்பது முறையான செயல் அல்ல என்று தெரிவித்துள்ளனர். மூன்று விதமான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இது இவ்விதமிருக்க பொருளாதார காரணங்களால் செல்வாக்கு சரிந்து சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு திடீரென பாரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பரிசாக அடுத்த தடவையும் அதிபர் பதவியில் இருக்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு பிரகாசமாகியுள்ளது. மேலும் பின்லேடனைப் பிடிப்பதற்கான போரில் ஈடுபட்ட படையினருக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=67701

ஒசாமா செத்த விடயத்தில் பல முரண்பாடுகல் இருப்பாதால் இனி ஒசாமாவுக்கு நினைவஞ்சலி செலுத்த ஒரு கூட்டமும் "இல்லை அவர் இன்னும் இருக்கின்றார்" என்று சாதிக்க இன்னொரு கூட்டமும் அலையும்...அப்பாடி, எமக்கு மட்டும்தான் இந்த குழப்பம் என்றால் இப்ப ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகுக்கும் ஏற்பட்டு விட்டது... இனி நாங்கள் கொஞ்சம் கூத்து பார்ப்பம் :D

அல் கைடா ஆயுதப்போராட்டத்தை "மௌனித்திருக்கா" அல்லது தொடர்ந்து தாக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல் கைடா ஆயுதப்போராட்டத்தை "மௌனித்திருக்கா" அல்லது தொடர்ந்து தாக்குமா?

இந்த லொள்தானே வேண்டாம் என்று சொல்லுறது...

5/6 ஈழப்போருக்கு சமாந்தரமான வகையில் உலகமெங்க்கும் அணுக்குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று அறியவில்லையோ ...

ஒசாமா செத்த விடயத்தில் பல முரண்பாடுகல் இருப்பாதால் இனி ஒசாமாவுக்கு நினைவஞ்சலி செலுத்த ஒரு கூட்டமும் "இல்லை அவர் இன்னும் இருக்கின்றார்" என்று சாதிக்க இன்னொரு கூட்டமும் அலையும்...அப்பாடி, எமக்கு மட்டும்தான் இந்த குழப்பம் என்றால் இப்ப ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகுக்கும் ஏற்பட்டு விட்டது... இனி நாங்கள் கொஞ்சம் கூத்து பார்ப்பம் :D

:D :D :D

கோவணம் போனாலும்ம் நக்க்க்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.