Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பி.பி.சி இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்ட பரமேஸ்வரனின் வழக்கு ஆவணப்படக் காணொளி !

Featured Replies

2009ம் ஆண்டு பரமேஸ்வரன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என அவர் மீது குற்றஞ்சுமத்தியது பிரித்தானியாவில் உள்ள 2 பிரபல நாழிதழ்கள்(Sun, Daily Mail). அதனை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதனை பி.பி.சி தொலைக்காட்சி ஆவணப்படமாக நேற்று இரவு 10.30 க்கு தெலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதே நேரத்தில்இணையத்தளத்திலும் பகிரப்பட்டிருந்தது. எனினும் அவை 24 மணி நேரத்தினுள் அகற்றப்பட்டு விட்டன. ( வழமையாக 24 மணி நேரத்தின் பின்னரே நிகழ்ச்சிகள் அகற்றப்படும்) அகற்றப்பட்ட அக் காணொளிகளின் தொகுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் தர்மராஜ்.

இது ஏன் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அகற்றப் பட்டது என்பதற்கு அம்சா தான் பதிலளிக்க வேண்டும்!

Edited by Punkayooran

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றிகள் தர்மராஜ்.

இது ஏன் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அகற்றப் பட்டது என்பதற்கு அம்சா தான் பதிலளிக்க வேண்டும்!

எது எப்படியோ B.B.C தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டதே பெரிய சாதனைதான் இல்லையா... :blink:

Edited by darmaraj

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ B.B.C தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டதே பெரிய சாதனைதான் இல்லையா... :blink:

உண்மை தான் தர்மராஜ். மீண்டும் நன்றிகள்!

பிபிசி ஒளிபரப்பியதே ஒரு பெரிய விடையம். அதுவும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்கு முன்பு பிரித்தானியாவில் வாழும் அனைவரும் பார்க்கும் விதமாக அதனை ஒளிபரப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்பு பலர் வீதியில் இறங்கி தமது ஆதரவைத் தரத்தவறி இருந்தார்கள் என்பதும் உண்மை. இந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது பரமேஸ்வரனில் ஏற்படுத்தப்பட்ட களங்கம் நீங்கி, பிரித்தானியாவில் உள்ள மக்கள் தமது நாட்டு விடுத்தலைக்காக ஒன்று சேர வேண்டும் என்று கூட இருக்கலாம்...

(இந்த வழக்கு முடிந்ததோடு மட்டும் விட்டு இருக்கலாம், அப்படி ஆவணப் பதிவு செய்து இருந்தாலும் கூட இந்த நேரத்தில் ஒளிபரப்ப வேண்டிய முக்கியத்துவம் என்ன?)

எமக்குரியதை நாம் தான் பாதுகாத்து வைக்க வேண்டும், அந்த அடிப்படையில் பல உறவுகள் விவேகத்துடன் செயல் படுவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.

நானும் டிவிடியில் அடித்து வைத்திருக்கிறேன்.

அது போக எமக்குப் பிடித்தகாட்சி ஒன்று (பலமுறை தெளிவாக காட்டப்பட்டது) அவர்களுக்கு பிடிக்காமல் போகும் என எதிர்பார்த்தேன். சிங்களவன் அதைப்பார்த்து விட்டு சும்மா இருந்திருப்பானா?.

அது என்ன?

பிறப்பிலிருந்து ஒட்டிஉறவாடுதே...

தொப்புள்க்கொடி, அரைஞான்கொடி, வாலாக்கொடி, தாலிக்கொடி...

இந்த வரிசையில்...

தமிழர் வாழ்வுதனில் உயிரோடு உயிராய், உதிரமாய்...

இது எங்கள் அதி உன்னத தேசியக்கொடி.

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தினைக் கொச்சைப்படுத்தி யாழிலும் முன்பு சில யாழ்களக் கருத்தாளர்கள் கருத்து எழுதி இருந்தார்கள். இந்தக் காணொளியைப் இந்த யாழ்களக் கருத்தாளர்கள் பகிரங்கமாக யாழில் மன்னிப்புக் கேட்பீர்களா?

அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா???????????????

எல்லா தலைப்பின் கீழும் புலிவாந்தியை எடுத்துவிட வேண்டும் அதை திறம்பட செய்கிறார்கள்................ இதில் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதிதை கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்ததால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நற் பலனிலும் பார்க்க பரமேஸ்வரனுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்த நன்மையே அதிகம் என்பது என் கருத்து அதே நேரத்தில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த்தால் தான் மக்கள் அவ்விடத்தில் கூடினார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.

ரதி எதை வைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எதை வைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?

சும்மா ஒரு குத்துமதிப்பாத்தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்ததால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நற் பலனிலும் பார்க்க பரமேஸ்வரனுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்த நன்மையே அதிகம் என்பது என் கருத்து அதே நேரத்தில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த்தால் தான் மக்கள் அவ்விடத்தில் கூடினார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.

அவர் பறை தட்டாமல் சில காரியங்களைச் செய்யலாம் அல்லவா? :blink:

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தினைக் கொச்சைப்படுத்தி யாழிலும் முன்பு சில யாழ்களக் கருத்தாளர்கள் கருத்து எழுதி இருந்தார்கள். இந்தக் காணொளியைப் இந்த யாழ்களக் கருத்தாளர்கள் பகிரங்கமாக யாழில் மன்னிப்புக் கேட்பீர்களா?

அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா???????????????

எல்லா தலைப்பின் கீழும் புலிவாந்தியை எடுத்துவிட வேண்டும் அதை திறம்பட செய்கிறார்கள்................ இதில் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதிதை கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்??

எனக்கு நல்ல ஞாபகம் உள்ளது. குறிப்பிட்ட திரி இங்கு உள்ளது. யார், யார் என்ன எழுதினார்கள் என்று நீங்களே வாசித்து புரிந்துகொள்ளுங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833&view=findpost&p=545553

இங்கு பலராலும் கீழ்த்தரமாக கடிந்து கொள்ளப்படும் அர்ஜுன் அவர்கள் இவ்வாறு எழுதினார்:

பி.பி. சி. தமிழ் செய்தியில் பரமேஸ்வரன் நல்ல விளக்கமாக குற்றசாட்டை மறுத்து நடந்ததை சொன்னார்.இது பத்திரிகைகாரர்கள் அடிக்கடி செய்யும்

ஒரு வித சின்னத்தனமான வேலை. சம்பந்தபட்டவரிடம் இருந்து விளக்கம் ஏதும் வர முன்னர் யாழில் அந்தமாதிரி மேளமடி

நடந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

அவ்வாறே, நீங்கள் (மருதங்கேணி) கீழ்த்தரமாக விமர்சிக்கும் சாந்தி அவர்கள் இவ்வாறு எழுதினார்:

பரமேஸ்வரன் தன்னையுருக்கியதை உள்ளுக்குள் இருந்தவர்களே மோசமாக ஆளாளுக்கு கதை சொன்னதே அந்த இளைஞனின் முயற்சியை கேவலப்படுத்துவதாக இருந்தது.பரமேஸ்வரனை தீலீபனுக்கு நிகராக மக்கள் ஆதரவு குடுத்தது பொறுக்காமல் பரமேஸ்வரனை குழப்பி லண்டன் புலிப்பிரமுகர் தனக்கு பிடித்த ஒருவரை இருத்த முயன்றது. இப்படி பல மாயங்கள் நடந்து. இதைப்பற்றியெல்லாம் கதைத்து அந்த இளைஞன் செய்ய தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்வீட்டுக்குள் நடந்த பித்தலாட்டங்கள் நிறைய. இந்த உள்வீட்டு அரசியல் சாணக்கியர்களே இத்தகையதொரு புரளியைக் கிழப்பக் காரணமாகவும் இருக்கலாம்.

நான் இவ்வாறு எழுதினேன்:

பரமேஸ்வரன் மக்லொனால்டு சாப்பிட்டு இருக்காவிட்டால் என்ன இருந்தால் என்ன தான் அப்படி செய்யவில்லை சாப்பிட இல்லை எண்டு தான் சொல்லுவார்.

சரி.. காவல்துறை இது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும்.. வெளிப்படையாக தனது கருத்து சொல்வது கடினமானது.

வன்னியில நிரூபிக்கப்படவேண்டிய எத்தனையோ பல ஆயிரம் கொடூர சம்பவங்களின் காணொளிகள் இருக்கிது.

எண்டாலும் எங்கள் எல்லாருக்கும் பொய்யாக இருந்தாலும் பரமேசுவரன் மக்டொனால்டு சாப்பிடுற கானொளியை காவல்துறை பிரசுரம் செய்யாதா என்று ஏக்கமாய் இருக்கிது.

என்ன செய்கிறது... நாங்கள் அப்படிப்பட்டவர்கள். எங்களிண்ட சீலை மற்றவன் தூக்கிக் காட்டினால் என்ன நாங்கள் தூக்கிக்காட்டினால் என்ன எல்லாம் எங்களுக்கு உடன்பாடே...

இதில நான் சரி நீ சரி எண்டு பிடிபட என்ன இருக்கிது?

உறிஞ்சாங்குண்டித் தமிழர் எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே உறிஞ்சாங்குண்டியோடதான் நிக்கிறம் எண்டுறதை யாராவது அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிது.

நேற்று விறுவிறுப்பாய் ஆரம்பிச்ச செய்தி... கடைசியில உப்புச்சப்பு இல்லாமல் போயிட்டிது. கொடுமை சார். கடைசி பரமேசுவரன் உண்ணாவிரதம் இருக்கேக்க தேத்தண்ணி குடிச்ச காணொளியையாவது ஸ்கொட்லாண்ட் யார்ட் வெளியிடமாட்டாங்களோ. ஒருத்தனிண்ட சீலையை உறியுறது எவ்வளவு கஸ்டம் எண்டு இப்பத்தான் விளங்கிது

இங்கு சென்று http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833&view=findpost&p=545553 கருத்துக்களை முழுமையாக பார்வையிடுங்கள். வாந்தி பற்றி அதன்பின்னர் தீர்மானியுங்கள்.

நல்ல வேளை நான் அதை நம்பாமல் உருப்படியாக எழுதி இருகின்றன்...:D

நன்றி கலைஞன் இணைப்பிற்கு...சில விடயங்கள் இவர்களுடன் விடாமல் விவாதிக்கின்றேன் ஒழிய கோவப்படவில்லை.

எனக்குள் எல்லோர் பற்றியும் ஓர் அளவீடு உள்ளது.சிலர் தெரியாமல்,சிலர் தெரிந்து எழுதுகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு முதல் இவர்கள் எழுதியதை வைத்து இவர்களை எடைபோடலாம்.

நம்பி இருந்து ஏமாந்ததன் விளைவுதான் எல்லாம்.ஆய்வாளர்களாக இருந்த பலரே கண்டால் மற்றக்கதவால் மாறும் போது இவர்களை நொந்து ஏதுமில்லை.

எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.அரசியலும் ஒருவித சூதாட்டமே,விட்டதை பிடிக்க நினைத்து இருப்பதையும் தொலைக்க நிற்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

அவர் பறை தட்டாமல் சில காரியங்களைச் செய்யலாம் அல்லவா? :blink:

என்ன சொல்லவாறியள் ?

இந்த நிகழ்ச்சியை அவருடைய பறைதட்டலாக எடுத்துக்கொள்ளவியலாது தானே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனிடம் நல்ல தலைமைத்துவ பண்புகள் உள்ளது , அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாகவுள்ளது, யாராவது அவரை பற்றி யாழில் எழுதினால் உபயோகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லவாறியள் ?

இந்த நிகழ்ச்சியை அவருடைய பறைதட்டலாக எடுத்துக்கொள்ளவியலாது தானே :unsure:

ரதி பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் அதிக நன்மைகளைக் கொடுத்திருக்கும் என்பதற்கான பதில்.

அவர் பறை தட்டாமல் சில காரியங்களைத் தமிழ்மக்களுக்காகச் செய்திருக்கலாம் அல்லவா?
என்று வந்திருக்கவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அன்றைய சூழ்நிலையில் அவரிற்கான இலண்டனில்நிரந்தர வாழ் வதிவிட உரிமை இருந்திரக்கவில்லை அனால் அவரது உண்ணாவிரதம் என்பது உண்மையானது ஆனால் அன்றைய காலகட்டத்தில் உண்ணாவிரத இடத்திலிருந்து பரமேஸ்வரனை அகற்றிவிட்டு அவரின் இடத்திற்கு இன்னொருத்தரை இருத்துவதற்கு புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகம் மிகவும் பிராயத்தனப்பட்டது. பரமேஸ்வரனை அகற்றகூடாது என அதனை நேரில் எதிர்த்தவர்களில் நானும் ஒருவன்.அவரை அகற்ற முயன்ற இலண்டன் பொறுப்பாளர் தனத்துடன் நேரடியாகவே அதுபற்றி கதைத்திருந்தேன்.அதற்கு தனம் சென்னது இவன் விசாவிற்காக உண்ணாவிரதம் இருக்கிறான் எண்டார்.அதே நேரம் சாந்தி அவர்களும் இலண்டனில் நின்றிருந்தார் நேரடியாக அனைத்துலக செயலக்தினை சேர்ந்த பலருடனும் வாதாடியிருந்தார். இதனை அனைத்துலக செயலக்தினை சேர்ந்தவர்கள் யாராவது மறுத்தால் மிகுதி ஆதாரங்களை என்னால் இணைக்கமுடியும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக கலைஞனிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் உலகிலேயே ஞாபகமறதி கூடிய ஒரேயொரு விலங்கு தமிழர்தான் அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டாம். :lol: :lol:

இன்றும் பல வகை போராட்டங்கள் பல்வேறு வழிகளிலும் முன்னேடுக்கப்படுகின்றன. அண்மையில் ஆயிரம் கிலோமீட்டர் ஓடி தமது கோரிக்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிரதிநிதியிடம் ( இவரை சந்திப்பது என்பதே ஒரு பாரிய வெற்றி) கொடுத்தமை ஒரு பாராட்டப்பட வேண்டிய விடயம்.

இன்று பல நாடுகளிலும் இளையோர் வீதிகளில், ஐ.நா. கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு பல்லின மக்களிடம் கையெழுத்து வாங்குகின்றனர். அடுத்த ஊக்குவிக்கப்பட வேண்டிய விடயம்.

நான் இதை நீண்ட நாட்களாக எழுத....

... இந்த பரமேஸ்வரனின் மக்டொனாட் பேகர் தொடர்பான செய்தி சண்ணிலோ, மிரரிலோ வரும் ஓரிரு நாட்களுக்கு முன்னமே என் இனிய கேபியின் செயலாளர் நாய்கம் இது தொடர்பாக செய்தி வரப்போவதாக எனக்கு தெரிவித்தார். ... அது அப்படியே வந்தது!!!!! நாங்களும் ... அவசர குடுக்கனுக்கு புத்தி மத்திமம் ... புரட்டி எடுத்தோம், யாழில்!!!!

இப்போது தான் புரிகிறது ... சிங்களம், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்க ... எனவெவெல்லாம், எவ்வளவு காசை ... இதுக்கெல்லாம் கொட்டியது என்று!!!!

:) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நான் அதை நம்பாமல் உருப்படியாக எழுதி இருகின்றன்...:D

உண்மையாவோ நிழலி ? :D

நான் இதை நீண்ட நாட்களாக எழுத....

... இந்த பரமேஸ்வரனின் மக்டொனாட் பேகர் தொடர்பான செய்தி சண்ணிலோ, மிரரிலோ வரும் ஓரிரு நாட்களுக்கு முன்னமே என் இனிய கேபியின் செயலாளர் நாய்கம் இது தொடர்பாக செய்தி வரப்போவதாக எனக்கு தெரிவித்தார். ... அது அப்படியே வந்தது!!!!! நாங்களும் ... அவசர குடுக்கனுக்கு புத்தி மத்திமம் ... புரட்டி எடுத்தோம், யாழில்!!!!

ஏன் நீங்கள் சுயமாய் யோசிக்கமாட்டியளோ ? (இதைக்கேட்டதுக்காக இப்ப என்னையும் புரட்டியெடுக்க வந்திடாதையுங்கோ) :lol: பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு கருத்தெழுதிவிடுவீர்கள் அதுதான் வேறெந்த நோக்கமும் இல்லை. கோவிக்காதையுங்கோ.

Nellaiyan

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 3,640

Joined: 18-August 04

Gender:Male

Location:London

Posted 09 October 2009 - 01:55 PM

பொண்டர், இது உமக்கு தேவையா??? இன்று உமக்கு இங்கு நல்ல சமா விளப்போகுது!! .... அரோகரா!!!! :lol:

அதுதானே, பார்த்தேன் 150 நாளாக ஒரு சாகும்வரை உண்ணாவிரதம் (புதிய விளையாட்டு) ஏன் இன்னும் இருக்கவில்லை என்று!! ............ இப்படியான போராட்டத்தின் மூலம் யாருக்கு அவமரியாதை???? ........... துரோகி என்பார்கள், பரமேஸ்வரனை அல்ல .... இப்படி கேட்பவர்களை!!!

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

நெற்றிக்கண்ணைத் திறக்காட்டாலும் குற்றம் குற்றமே :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.