Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே - துக்ளக்கில் சோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:(இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே - துக்ளக்கில் சோ

அதிமுக தலைவி ஜெயாவின் நெருங்கிய சகாவும் அவரின் அரசிய சாணக்கியருமான சோ தனது சஞ்சிகையான துக்ளக்கில் நேயர் ஒருவரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்.

கேள்வி : :இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அங்கு போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று கூறியிருக்கிறதே" என்று கேட்டதற்கு,

பதில் :"இலங்கையில் நடைபெற்றது போரே அல்ல. அப்படியிருக்கும்போது போர்க்குற்றம் என்று சொல்வது எப்படி? அங்கு நடைபெற்றது தீவிரவாதத்தை அடக்கும் ஒரு அரசின் நடவடிக்கைதான். ஐ.நா பொதுமன்றத்துக்கு போருக்கும், தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?" என்றும் கேட்டிருக்கிறார்.

கருநாநிதி என்கிற பதவி மோகமும் பணத்தாசையும் பிடித்த ஒருவனிடமிருந்து பதவியைப் பறித்து தமிழர்களை எதிர்ப்பதையே குறிக்கொளாகக் கொண்டியங்கும் ஒரு கயவனினால் வழிநடத்தப்படு அகம்பாவம் பிடித்த பெண்மணியிடம் கொடுத்திருக்கிறோம். அதற்கான பலனை அனுபவிக்க நாம் அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.

தேர்தலுக்கு முன்னதான ஈழ ஆதரவுச் சுருதி மாறி இப்போது பழைய "ராஜீவ் கொலையை நினைவுகூறல்", "தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்தல்", " திமுகவுக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பிருக்கிறது" என்று அம்மா அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் நன்மைக்கே

இனி தி.மு.க என்றும்

தேமதிமு என்றும்

அதிமுக என்றும்

மதிமுக என்றும்

பாமக என்றும் சிறுத்தைகள் என்றும்.....................???????????? பிரிந்து கிடக்கும் ஈழத்தமிழருக்கு சார்பான தமிழக கட்சிகள் ஒரே கொடியின்கீழ் ஒன்றுபட்டு உழைக்க இது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் சேர்பிய படைகள் போஸ்னியாவில் செய்ததும் தீவிரவாதத்துக்கு எதிரான போர்..! மிலோசவிச் ஒரு தியாகி..!! :wub:

இந்தப் பத்திரிகையை எல்லாம் வாசிச்சுத் தொலைக்கவேண்டியது தமிழகத்தின் தலையெழுத்து..!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது சரிதான் இசை

ஆனால் கேள்வியை யாரிடம் கேட்கின்றோம் என்பதைப்பொறுத்துத்தானே பதிலும் வரும்.

முன்பொருதரம் இந்திய பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டார் ...

.... நமக்கு தெரிந்த சோ ... ஓர் நடிகன், ஓர் பத்திரிகையாளன், அதற்கு மேல் அரசியல் குழப்பவாதி !!!!!, ..

.... தெரியாத சோ ... ஓர் மூத்த *றோ* அதிகாரி!!! ..

... இந்த விலங்கு தமிழகத்தில் ஆழப்போகிறவர்களை தீர்மானிக்கும் ஓர் சக்தி!! தமிழகத்தில் காலாகாலமாக நடந்த தேர்தல்களை அவதானித்தால் புரியும்! ... இந்திய இறையாண்மை, பிரிவினை, ஈழப்பிரட்சனை போன்ற விடயங்களை காலாகாலமாக ஊடகங்களை கொண்டும், அரசியல் கட்சிகளை கொண்டும் திசை திருப்புவதே இவரது முக்கிய வேலை!

... இன்று மீண்டும் ... இந்த விலங்கு ... எம் பிரட்சனையில் கருத்து தெரிவித்தது ... இந்த விலங்கு செய்யப்போகும் சகுணி வேலைக்கான அறிகுறியே!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

இவன் எல்லாம் இன்னும் உயிரோடவா இருக்கிறாங்க. இவர் ஈழத்தில் இந்தியப் படைகள் காலத்திலும் இவ்வாறான பிரச்சாரங்களைச் செய்தவர். அதுமட்டுமன்றி தனது பத்திரிகையான துக்களக்கை விற்கப் பட்டபாடு. பள்ளிகளில் கொண்டு வந்து கூலிக்குழுக்கள் இலவசமா தந்தும் எவரும் அதைப் படிக்கிறதில்ல.

ஆனால் இவர் இன்னும் அம்மணி ஜெயலலிதாவின் ஆஸ்தான ஆலோசகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அம்மணியும் இந்த அறிவிப்பை பின்பற்றி ஒரு அறிக்கை விட்டாலும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனெனில் அடுத்த தமிழக தேர்தலுக்கு இன்னும் 5 வருசம் இருக்கெல்லோ..!

இதுதான் ஜனநாயகம். தேர்தலுக்கு முன்னர் ஒன்று.. சொல்வது. தேர்தலுக்கு பின்னர் இன்னொன்று செய்வது. இவர்கள் மக்கள் தலைவர்கள். அவர்களுக்கு மக்கள் போடுவது வாக்கு...! ம்ம்ம்..! கொடுமை சரவணா.

இந்த ஜனநாயகக் கேலிக்கூத்துகளால் தான் ஜனநாயகம் அழியப் போகுது..! அதோடு அமெரிக்கா என்ற வல்லரசின் இருப்பும் காணாமல் போகும்..! இதை இட்டு அமெரிக்கா சிந்திக்க வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:( நெல்லை,

அண்மையில் அதிமுகவின் வெற்றி விழா மாநாடு நடைபெற்றது. அதில் முன்வரிசையில் இருவர் வெகு ஆடம்பரமாகவும் வெற்றிக்களிப்பிலும் இருப்பதைப் படத்தில் பார்த்தேன். அதில் ஒருவர் சோ மற்றையவர் சசிகலா. அம்மையாரின் ஆட்சி எப்படியிருக்கப்போகிறது என்பதற்கு இது சரியான அறிகுறிதான்.

அம்மையார் மீண்டும் ராஜீவ் கொலையைக் கைய்யில் எடுத்திருப்பதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்?? நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணிக்கு இப்போதே பிள்ளையார் சுழி போடுவதாகவே நான் நினைக்கிறேன். அவர் பதவியேற்றதும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்ததும், அந்தச் சிலையின் முன்னால் நின்று தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று அம்மாவும் அடிவருடிகளும் சத்தியப்பிரமாணம் எடுத்ததும் நல்ல சகுனங்களாகத் தெரியவில்லை. எதிர்கட்சியில் அமரப்போகும் விஜயகாந் ஈழப்பிரச்சினையை தூக்கிக் குப்பையில் போட்டுப் பல வருடங்களாகி விட்டது. ஆகவே அவரும் வாய் திறக்கப்போவதில்லை. எமக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கோ ஒரு பலமுமில்லை. ஆகவே நாங்கள் பழையபடி அதே இடத்தில் வந்து நிற்கிறோம் என்றுதான் படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியச் செய்தி நிறுவனமான ஐ.பி.என் இற்கு வழங்கிய செவ்வியில் அரசின் கைக்கூலியான கே.பீ, திமுக வின் பார்ப்பண எதிர்ப்பு கோட்பாட்டினால் கவரப்பட்டே பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் கூறியிருக்கிறான். ஆகவே சோனியாவின் காங்கிரஸ் அரசு திமுகவுக்கு புதைகுழி தோண்ட முடிவெடுத்து விட்டதைத்தான் இது காட்டுகிறது. ஜெயாவைக் கூட்டணிக்குள் இழுப்பதன் மூலம் கருணாநிதியையும், திமுகவையும் முற்றாகத் தமிழ்நாட்டிலிருந்தே அழித்துவிடும் எண்ணமும் இருப்பதுபோலத் தெரிகிறது.

ஆனால், தமிழக மக்கள் இந்த ராஜீவ் பூச்சாண்டியைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்த ஊடகத்தின் கே.ப்பியின் செவ்வியின் பின்னர் நேயர்களின் கருத்தைப் படித்தால் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

http://ibnlive.in.com/news/influenced-by-dmks-ideology-ltte-killed-rajiv/153768-3.html

ஜெயலலிதாவின் செயற்பாடுகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று.. தான் பிரதமராக வாய்ப்பிருக்கா என்பது நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. இது இன்று நேற்றல்ல.. ஜெயலலிதா ஆட்சிப் பீடத்திற்கு வந்த காலம் தொடக்கம்.

ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு தலைவராக செயற்பட்டதில்லை. அந்த வகையில் அவரிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதை அண்ணன் சீமான் போன்றவர்கள் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளனர். எதற்கும் அம்மையாருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் அளிக்கிறார்கள். பின்னர் அம்மையார் சொல்லக் கூடும் தனக்கு செயற்பட சந்தர்ப்பம் அளிக்காமல் குற்றம் சுமத்துகிறார்கள் என்று. அந்த வகையின் அண்ணன் சீமானின் நகர்வுகள் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் தலையிடியாகவே இருக்கும்.

அம்மையார் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக என்றுமே நடந்து தான் வந்திருக்கிறார். அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலை.. ரோ ஆட்கள் விடும் அறிக்கைகளுக்கு எல்லாம் பதிலும் சொல்லிக் கொள்வார். திமுக வையும் ராஜீவ் கொலையோடு இழுத்து விடுவார். இருந்தும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.. அம்மையாரின் பழைய அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வி..! இன்றும் அதையே பின்பற்றுவாராக இருந்தால் அது அண்ணன் சீமான் போன்றவர்களுக்கு நல்ல முதலீடு.

உண்மையில் கே பி ரோவின் கையாள் தான். இன்று அதன் பாதுகாப்புடனேயே அவர் பத்திரமாக உள்ளார். அவரின் இருப்பிடம் மட்டும் சிறீலங்கா. ரோவின் தேவைக்கு ஏற்பவே அவரும் அறிக்கைகளை விடுகிறார். ரோவின் நிகழ்ச்சி நிரலின் படிதான் புலி அழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்ட அழிப்பும் நிகழ்ந்தது. ரோவின் செல்வாக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு என்று சொல்லி இந்திய நலன் பேணும் நிகழ்வுகள் நிறைய நடக்கும். காரணம்.. ரோவும் ராஜபக்சவும் ஒரே நேர்கோட்டி ஒத்த திசையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் போல.. இந்தியாவின் மீது சீன நெருக்கடியும்.. தீவிர வாத நெருக்கடியும் ஏற்படும் போது தான்.. நிலைமையை எமக்கு சாதகமாக எனி மாறும். அந்த வகையில் எமது இராஜதந்திர நகர்வுகள்.. பல திசை நோக்கியதாக இருக்க வேண்டும்.

அண்ணன் சீமானை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதே இன்றைய காலத்தின் தேவை...!

Edited by nedukkalapoovan

ஆனால் இவர் இன்னும் அம்மணி ஜெயலலிதாவின் ஆஸ்தான ஆலோசகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

... எல்லா தேர்தல்களிலும் ஜெயலலிதாவிற்கு பின் நின்றவர் இல்லை சோ! ... சோ, கருணாநிதிக்கும் பின் நின்றவர்!

இந்தியச் செய்தி நிறுவனமான ஐ.பி.என் இற்கு வழங்கிய செவ்வியில் அரசின் கைக்கூலியான கே.பீ, திமுக வின் பார்ப்பண எதிர்ப்பு கோட்பாட்டினால் கவரப்பட்டே பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் கூறியிருக்கிறான். ஆகவே சோனியாவின் காங்கிரஸ் அரசு திமுகவுக்கு புதைகுழி தோண்ட முடிவெடுத்து விட்டதைத்தான் இது காட்டுகிறது. ஜெயாவைக் கூட்டணிக்குள் இழுப்பதன் மூலம் கருணாநிதியையும், திமுகவையும் முற்றாகத் தமிழ்நாட்டிலிருந்தே அழித்துவிடும் எண்ணமும் இருப்பதுபோலத் தெரிகிறது.

ஆனால், தமிழக மக்கள் இந்த ராஜீவ் பூச்சாண்டியைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்த ஊடகத்தின் கே.ப்பியின் செவ்வியின் பின்னர் நேயர்களின் கருத்தைப் படித்தால் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

http://ibnlive.in.com/news/influenced-by-dmks-ideology-ltte-killed-rajiv/153768-3.html

இந்த பச்சோந்தி கூலியை தக்க தருணத்தில் சிங்களம் களமிறக்கியிருக்கிறது ... வெற்றியும் பெற்று விட்டது போலிருக்கிறது!! ... இக்கூலியின் பிரச்சாரங்களை முறியடிக்க ... எம்மவர் இன்னும் முயற்சிகள் கூட தொடங்கவில்லை ... மாறாக இக்கூலியின் புலத்துக் கூலிகள் மீண்டும் சந்திக்கு வந்துள்ளனர்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அத தாnனே நான் அப்பவே சொல்லிட்டனே சோ இருக்கும் வரைக்கும் ஜெ எங்களுக்கு சார்பா நடக்க மாட்டா இனி 5 வருஷ்துக்கு அவாவ அசைக்க முடியாதுன்னும் தெரியும் என்ன செய்யிறது நம்மட விதி............

அத தாnனே நான் அப்பவே சொல்லிட்டனே சோ இருக்கும் வரைக்கும் ஜெ எங்களுக்கு சார்பா நடக்க மாட்டா இனி 5 வருஷ்துக்கு அவாவ அசைக்க முடியாதுன்னும் தெரியும் என்ன செய்யிறது நம்மட விதி............

தெரியும் ஜெயலலிதா ஒன்ன்றும் செய்ய மாட்டார். ஆனால் துரோகி தூக்கி எறியப்பட்டு வீட்டில் இருக்கிறார் என்பதில் மகிழச்சியோடு இருக்கிறேன்.

அது போல் புலத்தமிழர் இல்லை.

முள்ளிவாய்க்கால் ஓலம் முடிய முன் செம்மொழி மாநாடு கூட்டிய கருநாநிதிக்கு இங்க புலத்தில் புலிகள் காலத்தில் மக்களுக்கு புலிகளை விட அரசியல் விபச்சாரம் செய்த பற்றிமாகரன், தன்து மனைவியுடன் சென்று சாமரம் வீசி போட்டு வந்தவர்.

ஆனால் தமிழகம் கருநாநிதிக்கு நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டது . நீ செய்தது எல்லாம் துரோகம் வீட்டுக்கு போய் வா என்று.

ஆனால் இங்க இலண்டனில பற்றிமாகரனை இன்னும் தூக்கி பிடிச்சு உயிரோடை தமிழ் வானொலி , மீண்டும் அரசியல் விற்க இடம் கொடுத்து அவரை பெரியாளாக்க முற்படுவது அவமானம். தான் சொல்ல முன் தன் முதுகை பார்க்கனும்.

இவர்களை எல்லாம் அடையாளம் கன்டு ஒதுக்கி விடவேண்டும்.

இவரும் மனுசியும் மாநாட்டில பிதற்றினது எல்லம் படத்தோட பத்திரிகைகளில் வந்தது.

எல்லாம் சுய நலம்,கள்ளர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை பொறுத்த வரை யாராக இருந்தாலும் ஆட்சிக்கு முன் ஒரு கருத்து பின் ஒரு கருத்தாவே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சியமயமான பார்வைகளுக்கப்பால் அறிவுசார்ந்த தேடல்கள் தமிழரிடம் வெகுவாக அருகி வருகின்றதோ என்ற ஐயப்பாடே எழுகின்றது. "துக்ளக்" சோ போன்ற அரசியல் சகுனிகளின் விளையாட்டு அவ்வப்போ அரங்கேறித் தமிழரைக் கொல்வதற்குத் துணைபோவதென்பது தொடர்கதையாகவே உள்ளது. ஆனால் இவர்போன்ற சகுனிகளின் பதில்களைக் கண்டு எமது ரத்தக் கொதிப்பை அதிகமாக்கி நாமே நோயாளராகலாமா? அடிப்படையில் "ஜெ" மற்றும் "சோ" போன்றவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கச் சிந்தனை, கிந்திய தேசியவாதச் சிந்தனை கொண்டவர்கள். இவர்களிடம் திராவிடம் என்பது கூட ஒரு அருவருப்பான, ஆனால் அரசியலுக்கான அங்கியாகவே (கோவணமாகவே) பார்க்கின்றனர். பற்றென்பதெல்லாம் வெளிவேசம். அப்படியானவர்கள் தமிழகத்தை ஆள வேண்டுமென்பதோடு, ஒரு ராஜபோக வாழ்வை மேற்கோள்ளப் பதவிகளில் அமர்பவர்களே இவர்கள். "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிப்போம்" என்ற பாரதியின் நாட்டில் தனியொருத்தியான அம்மாவிற்கு இருக்கும் பல சொகுசு மாளிகைகளே சாட்சி. அம்மாவின் அரசியல் இலக்கு ஒருமுறையாவது பிரதமாராக வேண்டுமென்பதே. அதற்கு அவர் தீவிரவாதம், அதனைச் சுற்றிப் பழைய புதிய கதைகளைத் தேடுவார். அறிக்கை விடுவார் என்பதெல்லாம் எதிர்பார்க்க வேண்டியன. அவ என்றாவது தமிழருக்காக் குரல்கொடுப்பேன் என்று கூறினாரா? சரி எமக்கு என்ன சிந்தனை. எமது தலைவன் தமிழகத்தின் தார்மீக உதவியை மட்டுமே கோரினான். ஆனால் என்ன நடந்தது. புலம்பெயர் உறவுகள் எமது இளைய சந்ததியைச் சில சக்திகள் குறிவைத்து நகர்த்துமுன் சரியான முறையில் அவர்களை அரசியல் ரீதியாகத் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளாக வளர்த்தேடுப்பதனூடாக மட்டுமே எமது விடுதலையை விரைவுபடுத்தலாம். அவர்களது அளவிடமுடியாத ஆற்றல்களை ஆரோக்கியமான செயல்செறி நோக்கித் திருப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகும். அதேவேளை நெடுக்காலபோவானவர்கள் கூறியதுபோல் தமிழகத்தில் உள்ள சீமான் போன்ற வீச்சுக் கொண்ட சக்திகளை வளரத்தெடுப்பதோடு இந்தியவிலுள்ள மனித உரிமைவாதிகளோடும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

அம்மாவின் ஆலோசகராகச் சோ என்ற தமிழினவிரோதி இருக்கும்போது எதை நாம் எதிர்பார்க்க முடியும். யாராவது உதவமாட்டார்களா என்பது மனித இயல்பு. ஆனால் யார் உதவுவார்கள் என்பதை தெரிவு செய்வதிலேதான் வெற்றி தங்கியுள்ளது. நாம் முதலில் மேற்கை வென்றெடுக்க வேண்டும். எமது போராட்டமானது உரிமைக்கானது என்பதை ஏற்க வைப்பதோடு, எமது தாயகம் பற்றி உரியமுறையிலே ஆவணப்படுத்தப்பட வரலாற்று ஆதாரங்களையும், இனஅழிப்பின் ஆதாரங்களையும் தொகுத்து ஒரு சிறிய கையடக்க நூலாக வெளிக் கொணர வேண்டும். அவை ஆங்கிலம், கிந்தி, பிரெஞ், யேர்மன், ருஸ்யன் மொழிகளில் வெளியிடப்படல் வேண்டும்.அதோடு நில்லாது. சீனா, ரஸ்யா போன்ற நாடுகளையும் அணுக வேண்டும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

chanakya.gif

பார்பனியத்தை அடக்க பல டிப்ஸ்கள் உள்ளன..

1) அடிதடி.. இது பல நேரம் செட்டாகும்.. ஆனால் கால போக்கில் இடிக்கும்.. ஒரளவுக்கு அனுபவத்தில் பார்பானும் பாம்பு(நல்லபாம்பு) கொண்டது விடா.. எப்படியாகினும் பகையை நெஞ்சுக்குள் வைத்திருந்து வஞ்சம் தீர்க்க கூடியவர்கள். ஆள் தெரியாத அளவுக்கு ஆனால் செய்த தவறை சுட்டி காட்டி அடிப்பதும் சிறந்தது என்றாலும் சூழ்நிலைகளை (குவாட்டருக்கு ஆசைப்பட்டு சாட்சிகள் அந்தர்பல்டி அடிக்கபடாது) கவனித்தில் கொள்ளவேண்டும். கோர்ட்டு கேசு கச்சேரிக்கும் ஆயுத்தமாக இருக்கவேணும்.

டிஸ்கி:

சந்திரலேக முகத்தில் ஆசிட் ஊற்றியது..

2)ஆட்சியாளருக்கு தேவையான அளவுக்கு நேரெதிர் சோப்பு போடுதல். இங்கு எவன் ஆட்சியாளரோ அவனுக்கு தேவை படும் அளவுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு சொம்படித்து சோப்பு போடுவதில் வல்லவர்கள். இதை உடைக்க.. வெண்டுமானால் நேர் திசையில் நின்று.. எதிர் நிலையில் நின்று இவர்களை சிக்கலில் மாட்டி விடவேணும்.

ஆதாகபட்டது.. உறவாடி கெடுக்கவேணும்..

3)ஸ்கூலு பிள்ளைகள் ஆக்குதல்..டம்மி பீசு ஆக்குதல்

போக ஒரு பள்ளி குழந்தை பக்கத்தில் உள்ள மாணவனை கிள்ளி விட்டது என்று எடுத்து கொள்ளுங்களேண்.ஆசிரியரிடம் முறையீடு செய்யபடுகிறது.. .. முதல் முறைக்கு இருக்கும் மரியாதை இரண்டாம் முறைக்கு இருக்காது அல்லவா லாஜிக் ஈசி.. நித்தியானந்தா கேசு முதல் முறை பரபரப்பாக இருந்தது. அடுத்தடுத்து குற்றசாட்டுக்கள் வந்தவிடத்து எவனும் இவனை கண்டு கொள்ளவில்லை. போக இப்போது அரிச்சந்திரனும் நானும் அண்ணன் தம்பி என புளுகிதிரிகிறான் ஆனா கேட்பதற்கு ஆளில்லை..

டிஸ்கி:

நம்ம ஊரில் இருந்து திருப்பதிக்கு சேவை செய்ய போனவன் எல்லாம் .. திருப்பதியில் நின்று என்னை வரவேற்கிறான்.. என்ன காரணம்.... உள்ளூரிலே இவர்களுக்கு கணக்கு இந்த தோழரால் செட்டில் செய்யப்டுள்ளது.. :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் உலக ஓட்டத்திற்கு ஏற்ப இந்த மாதிரி பல பல அரிய சேவைகளை நான் மேற்கூறியவாரு ஆற்ற முன்வருதல் வேண்டும்.....

டிஸ்கி:

அவனும் 1990000000 ஆண்டு முதற்கொண்டு வீசி கொண்டுதான் இருக்கிறான். எவனும் அவனுடைய பார்பான கோஸ்டிகள் நேருக்கு நேர் போரிட்டு மாண்டதில்லை.. அது அவா சம்பிரதாயம்.. ஆனா அடுத்தவாளை உசுப்பி சொறிஞ்சி சோப்பு போட்டு பலரை சாகடித்து இருக்கிறார்கள்..சோ மூளை உள்ளவன் அடுத்தவனை உசிப்பி விட்டு நோகாமல் நொங்கு திங்கலாம் என்பது உறுதியாகிறது.. எனவே இந்த பார்பான பன்னடை மூளையை விஞ்சி சர்வதேச களத்தினை ஈழம் சார்ந்து திறந்து விட வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் ஈழ தோழர்கள் க்டமை ஆகிறது.. இஞ்சி பை இஞ்சி அவனவன் சவுத்து பிளாக்கில் ரூம் போட்டு யோசிக்கவேணும்..

டிஸ்கிக்கு டிஸ்கி:

இவனுங்க எல்லாம் பிட்ட அடிச்சு பாஸ்பண்ண கோஸ்டிக.. ஐ.எப்.எஸ்(IFS) எவனும் நேர்மையா தேர்ந்தடுக்கபடுவது இல்லை.. சிண்டை பிடித்து கொண்டு அலைய வேணும்.. செக் பாண்ட் ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்க வேணும் .. ஒட்டகூத்தர் பாட்டு போல...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழ்நாட்டிலேயே இவனுக்குப் பதிலடி கிடைக்க வேண்டும் இந்த சோப்பிளாங்கிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனியத்தின் கடைசி மூச்சு தான் இந்த சோ. ஜெயலலிதாவும் ஒரு பிராமணப் பெண்ணே.

பார்ப்பனியம் என்றுமே நேராக எதிரியுடன் மோதுவதில்லை! அதனால் இவர்களை எதிரி என்று அடையாளம் காண்பதே கடினம்!

ஆனால் தங்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஒரு நிலை வரும்போது எதிரியுடன் சேர்ந்து விடுவார்கள்!

இந்த நிலையைக் கொண்டு வர, சீமானின் கரங்களைப் பலப் படுத்துவதே ஒரே வழியாகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் இதழ்(01.06.2011ல்) வெற்றிக்கு பின்னே இலட்சிய மனிதர் சோ என்ற தலைப்பில் வந்த ஆக்கத்தில் ஜெயலலிதா -விஜயகாந்த் கூட்டணி அமைய முக்கிய காரணம் சோ என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

வெற்றிக்கு பின்னே இலட்சிய மனிதர் சோ

சென்னைப் பல்கலைக் கழக நூற் றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு வைபவம் முடிந்த கையோடு மேடையிலிருந்து சடசடவென்று இறங்கி வந்த முதல்வர் ஜெயலலிதா, வரிசையாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே தே.மு.தி.க.தலைவர் விஜய காந்த் பக்கம் திரும்பினார். இருவர் முகங்களிலும் அப்படியொரு உற்சாகம்.. சந்தோஷம். சட்டென்று தன் கையிலிருந்த தகதக சால்வையை எடுத்து ஜெ.க்கு போர்த்தினார் கேப்டன். ஒட்டு மொத்த அரங்கத்தின் அத்தனை கண்களும், கேமரா கண்களும் அந்தப் பக்கம் திரும்பின. அந்த மின்னல் மழையில் விஜயகாந்தும், ‘அம்மா’வும் காதோடு காதாக ஏதோ பேசிக் கொள்ள, இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சற்று விலகியிருந்து பார்த்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோவிற்கு அது மிகவும் உணர்வுபூர்வமான நேரம்! வழக்கமாக தன் எமோஷனை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளாத அவரது இமைகள் படபடத்தன! விழிகளில் ஈரம்.. ஏறத்தாழ அதே மனநிலையோடு அருகிலிருந்த சசிகலாவின் கண்களும் கலங்கின!

விழாக்களில் சாதாரணமாக அரங்கேறும் காட்சி அல்ல அது. இப்படியொரு பொன்னான நேரம் வருவதற்கு,தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டதற்கு பின்னணியில் எந்த அளவிற்கு சோ என்ற தனிமனிதரின் உழைப்பு இருக்கிறது என்பதை வெகு சிலரால் மட்டுமே அறிய முடியும்! அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்தால் வெற்றிக் கூட்டணி என்பது எல்லோருக்கும் புரிந்ததே தவிர,அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது - இரு தரப்பிலுள்ள முக்கியமானவர்களுக்கே! காரணம், அவர்கள் ஜெ, கேப்டன் ஆகிய இரு தலைவர்களது தனித்துவத்தையும், குணங்களையும் அறிந்தவர்கள். ஆனால் சோ மட்டும் கடந்த நவம்பரிலிருந்தே இந்தக் கூட்டணியை தன்னால் கொண்டு வந்து விட முடியும் என்று நம்பினார்! ஆனால் அதற்கு அவர் தந்த விலை அதிகம். அது ஒரு வைராக்கியப் போராட்டம்!

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் விஜயகாந்த் தனித்து நின்று பெற்ற வாக்குகள், வன்னியர் மற்றும் தலித் சமூகம் அதிகமுள்ள தொகுதிகளில் கூட அவருக்குள்ள ஏறத்தாழ 12 சதவிகித வாக்கு வங்கி, அவரது பிரசார பலம்,க்ளீன் இமேஜ் அத்தனையையும் ஜெயலலிதாவை சந்தித்தபோதெல்லாம் மிகத் தெளிவாகச் சொன்னதாக தகவல். என்னதான் ஸ்பெக்ட்ரம், குடும்ப அரசியல் என்று பல அஸ்திரங்கள் தி.மு.க.வை வீழ்த்த உதவும் என்றாலும் அவர்களது பலமான கூட்டணியுடன் மோதுவதற்கு தே.மு.தி.க.வுடன் இணைவதே ஒரே வழி என்று அ.தி.மு.க. தலைமையிடம் வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. சோவின் இந்த முயற்சியில் அ.தி.மு.க. தரப்பில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ‘அம்மா’வின் மனதில் இடம் பிடித்துள்ள ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும்!

இப்படி ஒரு பக்கம் சோ அ.தி.மு.க.தலைமையிடம் மன்றாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில்,தானே வலுக்கட்டாயமாக சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்தின் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். குறிப்பாக தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில் நான்கு ஐந்து முறை விஜயகாந்தை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணியின் சாதகங்களைப் பற்றி பேசியிருக்கிறார். தன் பிடிவாதத்தைத் தளர்த்தி கணிசமான ‘சீட்கள் கிடைக்குமா’ என்று கேப்டன் கேள்வி எழுப்பியபோது,கௌரவமான இடங்களை வாங்கித் தர முயல்வதாகவும் சொன்னார் சோ. இங்கே அவருக்கு ஆரம்பத்திலிருந்து கை கொடுத்தவர்கள் பண்ருட்டியார் மற்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்!

இப்படி ஒவ்வொரு கட்டத்திலும்,அ.தி.மு.க.கூட்டணியை ஆரம்பத்திலிருந்து தாங்கிப்பிடித்து, தனிப்பட்ட நபர் களின் ஈகோ, கூட்டணியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து வழிநடத்தியவர் சோ!

லட்சிய மனிதர்கள் எந்த வயதிலும், எந்தக் கட்டத்திலும் சோர்வதில்லை என்று ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ படித்தது தான் நினைவிற்கு வருகிறது!.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சியமயமான பார்வைகளுக்கப்பால் அறிவுசார்ந்த தேடல்கள் தமிழரிடம் வெகுவாக அருகி வருகின்றதோ என்ற ஐயப்பாடே எழுகின்றது. "துக்ளக்" சோ போன்ற அரசியல் சகுனிகளின் விளையாட்டு அவ்வப்போ அரங்கேறித் தமிழரைக் கொல்வதற்குத் துணைபோவதென்பது தொடர்கதையாகவே உள்ளது. ஆனால் இவர்போன்ற சகுனிகளின் பதில்களைக் கண்டு எமது ரத்தக் கொதிப்பை அதிகமாக்கி நாமே நோயாளராகலாமா? அடிப்படையில் "ஜெ" மற்றும் "சோ" போன்றவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கச் சிந்தனை, கிந்திய தேசியவாதச் சிந்தனை கொண்டவர்கள். இவர்களிடம் திராவிடம் என்பது கூட ஒரு அருவருப்பான, ஆனால் அரசியலுக்கான அங்கியாகவே (கோவணமாகவே) பார்க்கின்றனர். பற்றென்பதெல்லாம் வெளிவேசம். அப்படியானவர்கள் தமிழகத்தை ஆள வேண்டுமென்பதோடு, ஒரு ராஜபோக வாழ்வை மேற்கோள்ளப் பதவிகளில் அமர்பவர்களே இவர்கள். "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிப்போம்" என்ற பாரதியின் நாட்டில் தனியொருத்தியான அம்மாவிற்கு இருக்கும் பல சொகுசு மாளிகைகளே சாட்சி. அம்மாவின் அரசியல் இலக்கு ஒருமுறையாவது பிரதமாராக வேண்டுமென்பதே. அதற்கு அவர் தீவிரவாதம், அதனைச் சுற்றிப் பழைய புதிய கதைகளைத் தேடுவார். அறிக்கை விடுவார் என்பதெல்லாம் எதிர்பார்க்க வேண்டியன. அவ என்றாவது தமிழருக்காக் குரல்கொடுப்பேன் என்று கூறினாரா? சரி எமக்கு என்ன சிந்தனை. எமது தலைவன் தமிழகத்தின் தார்மீக உதவியை மட்டுமே கோரினான். ஆனால் என்ன நடந்தது. புலம்பெயர் உறவுகள் எமது இளைய சந்ததியைச் சில சக்திகள் குறிவைத்து நகர்த்துமுன் சரியான முறையில் அவர்களை அரசியல் ரீதியாகத் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளாக வளர்த்தேடுப்பதனூடாக மட்டுமே எமது விடுதலையை விரைவுபடுத்தலாம். அவர்களது அளவிடமுடியாத ஆற்றல்களை ஆரோக்கியமான செயல்செறி நோக்கித் திருப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகும். அதேவேளை நெடுக்காலபோவானவர்கள் கூறியதுபோல் தமிழகத்தில் உள்ள சீமான் போன்ற வீச்சுக் கொண்ட சக்திகளை வளரத்தெடுப்பதோடு இந்தியவிலுள்ள மனித உரிமைவாதிகளோடும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

அம்மாவின் ஆலோசகராகச் சோ என்ற தமிழினவிரோதி இருக்கும்போது எதை நாம் எதிர்பார்க்க முடியும். யாராவது உதவமாட்டார்களா என்பது மனித இயல்பு. ஆனால் யார் உதவுவார்கள் என்பதை தெரிவு செய்வதிலேதான் வெற்றி தங்கியுள்ளது. நாம் முதலில் மேற்கை வென்றெடுக்க வேண்டும். எமது போராட்டமானது உரிமைக்கானது என்பதை ஏற்க வைப்பதோடு, எமது தாயகம் பற்றி உரியமுறையிலே ஆவணப்படுத்தப்பட வரலாற்று ஆதாரங்களையும், இனஅழிப்பின் ஆதாரங்களையும் தொகுத்து ஒரு சிறிய கையடக்க நூலாக வெளிக் கொணர வேண்டும். அவை ஆங்கிலம், கிந்தி, பிரெஞ், யேர்மன், ருஸ்யன் மொழிகளில் வெளியிடப்படல் வேண்டும்.அதோடு நில்லாது. சீனா, ரஸ்யா போன்ற நாடுகளையும் அணுக வேண்டும்.

காலத்திற்கு தேவையானவை...............

இனியும் அவன் இவன் செய்வான் என்று குந்தியிருக்க நேரம் இல்லை.............

நாங்களே தெருவில் இறங்கி நடக்க தொடங்க வேண்டியதுதான்.

நான் வாழும் நாட்டில் உள்ள எல்லா செனட்டர்களுக்கும் உள்ளுர் அரசியல் காரர்களுக்கும் எல்லா விடயங்களையும் ஈமெயிலில் அனுப்பிகொண்டே இருக்கிறேன் என்றோ ஒருநாள் இவர்கள் யாராவது வெள்ளைமாளிகை போகலாம் என்ற எதிர்பார்ப்பு. அப்படி போய் இவர்களை சிங்களவன் தனது பொய்களுடன் சந்தித்தால்??? இவர்களுக்கு எற்கனவெ தெரிய வாய்ப்பிருக்கிறது தாம் யாருடன் பேசுகிறோம் என்பது.

தமிழ்நாட்டில் களை எடுக்கிற கூட்டம் ஒன்று வராமல் தமிழகமும் திருந்த போவதில்லை,தமிழனும் திருந்த மாட்டான்.

காலத்தின் தேவையும் கூட

  • கருத்துக்கள உறவுகள்

சோ சுப்பிரமணியசுவாமி போன்றோர் ஆரம்பத்திலிருந்தே தமிழின விரோதிகள்.இப்போதுள்ள தமிழக வாக்காளர்களில் பெருமபாலானோர்க்கு அண்ணாவையோ ராஜீவையோ ஏன் எம்ஜியாரைக் கூட வடிவாகத் தெரியாது.ஆக கட்சிக்கு என்று அடிப்படை வாக்குகள் இருந்த காலம் மலையேறிவிட்டது.பொதுக் கூட்டங்களுக்குப் போய் அழகு தமிழைக் கேட்டு மெய் சிலிர்த்து உணர்ச்சி வயப்பட்டு தலைவனுக்காக உயிர்கொடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.இப்பொழுது பத்திரிகை மூலமாகவும் இணையத்தளங்கள் மூலமாகவும் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் இளைஞர்களே அதிகம். அதன் மூலமாகமாக தமிழ்த்தேசியம் ஏன் வேண்டும் என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமான பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும்.வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடிய பாமர இளைஞர்களை சுண்டி இழுக்கும் பேச்சால் சீமான் தன் வசப்படுத்தட்டும்.ஆக மொத்தம் இளைஞர் சக்தியை தமிழ்த்தேசியத்தின் பால் திருப்பினால் மலையையும் புரட்டலாம்.தமிழகத்தில் சாதி அரசியல் இனி எடுபடாது என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு சாட்சி.தமிழின உணர்வாளர்கள் சேர்ந்து ஒரு வலிமை மிக்க 3வது அணியை அமைக்க வேண்டும்.சரியான தேர்வு இல்லாதால்தான் தவறிழைக்கும் ஆட்சியாளர்களைத் தண்டிக்க எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'சோ' வுக்கு ஆளுங்கட்சி எப்போதும் சரிவராது. அவர் சீக்கிரம் எதிர்கட்சி அரசியல் செய்வார்.

தமிழ்நாட்டில் களை எடுக்கிற கூட்டம் ஒன்று வராமல் தமிழகமும் திருந்த போவதில்லை,தமிழனும் திருந்த மாட்டான்.

காலத்தின் தேவையும் கூட

... உந்த களை எடுப்பை செய்து நாம் ஏதும் சாதித்து விட்டோமா??? களைகள் பற்றையாகி, பயிரை அழித்ததுதான் கண்ட மிச்சம்!

நான் என்ரை கருத்தை சொல்லுகின்றேன் அவன் தன்ரை கருத்தை சொல்லட்டும் என்ற மனப்பான்மை வராமல் எமக்கு விடிவு இல்லை.சரியானதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றநிலைக்கு வரமுடியாமல் மாற்றுக்கருத்தாளனை கொல்லவேண்டும் என்று திணித்துவிட்டு போய்விட்டார்கள்.

தமிழ்நாட்டு எலக்சனில் இருந்து நாம் பல பாடங்கள் படிக்கவேண்டும்.

கரூணாநிதியை கொல்வதிலும் பார்க்க மக்கள் இப்போ குடுத்த தண்டனைதான் மிக கொடியது.

30 வருடங்களாக எமது நாட்டில் இருந்த சட்டத்தை எடுப்பது கொஞ்சம் கஸ்டம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.