Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

கோமகன் அவர்களே!

வெந்தபுண்ணில் வேல் பாச்ச விரும்பவில்லை,இருந்தாலும் எம்மை பெற்ற தாய் ஒரு மனித தெய்வம்,ஒரு தாய் வாழ்த்தினாலே எந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியாது.அப்படியான தாயை நீங்கள் சந்திக்க முடியவில்லையே என்பது கவலைதான்.உமது நிலையில் தான் நான் இருக்கிறேன்.என் அம்மா தற்போது கொழும்பில் தான் இருக்கிறார்.எல்லா வசதியும் இருக்கிறது கொழும்புக்கு..........

எனது ஆசை அம்மாவின் கையால் ஒரு வெந்தயகுழம்புடனாவது ஒரு சோறு.......

இவவை விட அங்கு யாழிலோ வன்னியிலோ இருக்கும் உறவுகளின் சரியான விபரமில்லை.மனச்சாந்திக்காக வன்னி ஒன்றியம் மூலம் ஏதோ பொதுவாக என்னால் முடிந்ததை செய்கிறேன்

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

..........

எனது ஆசை அம்மாவின் கையால் ஒரு வெந்தயகுழம்புடனாவது ஒரு சோறு.......

Blue Bird, எங்கள் அம்மாவும் இந்த வெந்தயக் குழம்பு வைப்பா, ஆனால் இது பலருக்கு தெரியா, ஊரில் இருக்கும் போது தனி வெந்தய குழம்பு & வெந்தய றெட்டி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறன், உடம்புக்கு நல்லது,

வெந்தயம் - 2 மேசைக்கரண்டி

புளி - 20 கிராம்

தேங்காய் துருவல் - 40 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 5

மல்லி - ஒரு மேசைக்கரண்டி

நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 8 பற்கள்

கடுகு - அரை தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு நெட்டு

வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

செத்தல் மிளகாய், நற்சீரகம், மல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை அரைத்து எடுக்கவும்.

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் விழுதை போட்டு பிரட்டி விடவும்.

அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டவும்.

புளியுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து பிரட்டி வைத்திருக்கும் மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.

சுவையான வெந்தயக் குழம்பு ரெடி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு பொரியல் வகையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இலங்கை தமிழரான திருமதி. அதிரா அவர்கள் திருமதி. மாலதி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த வெந்தயக் குழம்பு இது.

நன்றி (படங்கள் பார்க்க) - http://www.arusuvai.com/tamil/node/12754

http://www.arusuvai.com/tamil/node/12754

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்,

உங்கள் பயண அனுபவம் முழுதும் வாசிச்ச பிறகு கருத்திடுவோம் என இதுவரை கருத்திடவில்லை.

நீங்களும் இனி முழுமையும் வெளியிட முடிவு செய்திட்டீங்கள் நல்லம் முடிவை எதிர்பார்க்கிறேன்.

ஒரு பயணக்கட்டுரையென்று இதனை எடுக்க முடியாது எங்கள் தேசம்பிரிந்த ஊர் பிரிந்த துயரங்களை அதன் வலிகளை அணுவணுவாய் அனுபவித்துச் செல்கிறது பதிவு இது.

எங்கள் தேசத்தின் துயரத்தை அதன் தாக்கங்களை இத்தகைய பதிவுகளே நாங்கள் இல்லாது போனாலும் எங்களை அடையாளம் சொல்லப்போகிறது.

பாராட்டென்று சொல்லி இப்பதிவை ஒரு பதிவாய் விட்டுவிடாமல் பாதுகாப்போம் இத்தகைய பதிவுகளை.

Blue Bird, எங்கள் அம்மாவும் இந்த வெந்தயக் குழம்பு வைப்பா, ஆனால் இது பலருக்கு தெரியா,

உடையாத உடையார் இந்த வெந்தயக்குழம்பு நானும் இடையிடை தயாரிப்பேன். இறால் , முருங்கைக்காய் கறிகளுக்கும் வெந்தயம் விசேடம். வெந்தயக்குழம்பு வைக்கிற நேரம் வீட்டில பிள்ளைகைளைத் தவிர்த்து நாங்கள் பழசுகள் ரெண்டுபேரும் ஊரைச் சொல்லிச் சொல்லிச் சாப்பிடுவோம்.

நன்றி வெந்தயக்குழப்புச் சமையலை ஞாபகப்படுத்தியமைக்கு.

கோமகன் ........

உங்க பதிவுக்கு....... ஒரு தலைப்பு எடுத்தீங்க பாருங்க............. நெருடிய நெருஞ்சி!!

யாருக்கு வரும்?

நீங்க எழுதபோறத தெளிவாவே ஹெட்லைன் சொல்லுது....... இந்த உங்க பதிவு முடிஞ்சாலும்.....

எல்லார்மனசையும் ...யாழ்ல கீறிகிட்டே இருக்கும் உங்க ஆக்கம்..!

  • தொடங்கியவர்

கோமகன் ........

உங்க பதிவுக்கு....... ஒரு தலைப்பு எடுத்தீங்க பாருங்க............. நெருடிய நெருஞ்சி!!

யாருக்கு வரும்?

நீங்க எழுதபோறத தெளிவாவே ஹெட்லைன் சொல்லுது....... இந்த உங்க பதிவு முடிஞ்சாலும்.....

எல்லார்மனசையும் ...யாழ்ல கீறிகிட்டே இருக்கும் உங்க ஆக்கம்..!

அறிவு......................... என்ன அடக்கம் !!!!!! என்ன அடக்கம்!!!!!!!! எல்லாரோடையும் கதைக்கிற மாதிரி என்னோடையும் கதையுங்கோவன் :lol: :lol: :lol: .

தொடருங்கள் கோமகன். வாசிக்கும் போது எமது தனிமனித அனுபவங்களும் மீட்டப்படுகின்றன. சாந்தி சொன்னது போல் இப்படியான பதிவுகள் பாதுகாக்கப்படவேண்டும். Blogspot ஒன்றை ஆரம்பியுங்களேன்?

Edited by Eas

  • தொடங்கியவர்

தொடருங்கள் கோமகன். வாசிக்கும் போது எமது தனிமனித அனுபவங்களும் மீட்டப்படுகின்றன. சாந்தி சொன்னது போல் இப்படியான பதிவுகள் பாதுகாக்கப்படவேண்டும். Blogspot ஒன்றை ஆரம்பியுங்களேன்?

நன்றிகள் எஸ் எனது BLOG முகவரி blogspot.koomagan.com உங்களிடம் blog இருந்தால் flower ஆகச்சேருங்கள் :) :)

நன்றி கோமகன். என்னிடம் blogspot இல்லை. ஆனாலும் உங்களை தொடர்ந்து வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

15697548314678782851452.jpg

பாமினிக்கு உதவியது மனதிற்குச் சந்தோசமாக இருந்தாலும் , அவள் சொன்ன கதைகளின் தாக்கம் என்ன விட்டு , விட்டுச் சாட்டையால் அடித்தது . அவள் இந்தச் சிறுவயதில் எத்தனை கொடுமைகளை அனுபவித்து விட்டாள் . சிறுவயதில் எப்படியெல்லாம் கவலைகள் இல்லாது துள்ளலுடன் இருந்தோம் . இப்போது காயடிக்கப்பட்ட மாடுகள் மாதிரியல்லவா போய்விட்டோம் . என் மனது கனமாகிக் கண்கள் செம்மை படர்ந்தன . வீட்டை அடைந்தபொழுது தங்கைச்சியும் , மனைவியும் முன் விறாந்தையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் . எனது சிவந்த கண்களைப் பார்த தங்கைச்சி பதறியபடியே ,

" என்ன செய்தனி ? என்ன நடந்தது "?

" அதொண்டுமில்லையடி , தரவைக்கை போனன் புழுதி அடிச்சுது , கண்ணைக் கசக்கிப் போட்டன் ".

என்றவாறே நான் நேராக கிணத்தடிக்குப் போனேன் . உடம்பு வியர்வையால் கசகசத்தது . தொட்டியில் நிறைந்திருந்த தண்ணியை அள்ளி உடம்பில் ஊற்ரினேன் . என் மனதைப் போலவே தண்ணீரும் இளஞ்சூடாக இருந்தது . ஆசை தீர அள்ளி அள்ளி தண்ணீரை ஊற்ரினேன் . நான் அதிகம் குளித்தால் கொதித்த மனமும் உடலும் குளிர்ந்தன . உடலைத் துவட்டி உடுப்பை மாற்ரி வெளியே வர , தங்கைச்சி பிளேன் ரீயும் அச்சு முறுக்குடன் நின்றிருந்தாள் . நான் முறுக்கைத் தவிர்த்து பிளேன் ரீயை எடுத்துக் கொண்டேன் .

" முறுக்கையும் எடன்ரா ".

" நான் முந்தின மாதிரி இப்ப சாப்பிடுறேல ".

" நான் நீ வாறாய் எண்டு அக்கா சொல்லேக்கை , உனக்கெண்டு அவதிஅவதியா செய்தது ".

என்று முகம் மாறியபடியே சொன்னாள் .

" சரி மூண்டு முறுக்கு எடுக்கிறன் ".

என்றேன் , அவளின் முகம் மலர்ந்தது .

" இண்டைக்கு உனக்கு வெள்ளை அப்பமும் , சம்பலும் செய்யப்போறன் ".

" சரி உன்ர விருப்பப்படி செய் ".

63409483149852828514522.jpg

என்றவாறே , முன் கேற்ரடிக்கு ரீ கோப்பையுடன் நகர்ந்தேன் . இரவு மணி ஏழாகி இருட்டி இருந்தது . என்னுடன் வந்த வானரப்படைகள் நன்றாகக் களைத்துப்போய் , அச்சு முறுக்கை ஆய்ந்து கொண்டிருந்தார்கள் . பிளேன் ரீக்கு முறுக்கின் உறைப்பு நல்ல கூட்டாக இருந்தது . எங்கள் வீட்டு நாய் றொனியனின் ஞாபகம் திடீரென இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்டேன் . வந்தவளிடம் எடுத்த எடுப்பிலேயே ,

" றொனியன் எங்கை "?

" உனக்குத் தெரியாதே ? அம்மா போனகையோட அவன் வடிவாய் சாப்பிடுறேல . அங்கை கக்கூசுக்குப் பக்கத்திலை ஆள் படுத்திருக்கும் , நீ பாக்கேலையே "?

" சும்மா நேரம் எண்டால் இப்ப நீ இங்கை உள்ளடேலாது" .

" ஏன் சுகமில்லையே " ?

" நீ போய்ப் பார் ".

நான் அண்ணையின் மகனுடன் றொனியனைப் பார்க்கப் போனேன் . அங்கே எலும்பும் தோலுமாகப் றொனியன் படுத்திருந்தான் . நான் அருகே போய் அவனுடைய தலையைத் தடவினேன் . அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான் , அவனுடைய வாய் திறந்து இருந்து . அதனால் துர்நாற்ரத்துடன் வீணீர் வடிந்து கொண்டிருந்தது . அவனது நிலமையை என்னால் துல்லியமாக உணர முடிந்தது . அண்ணையின் மகன் தான் இவனைக் குட்டியாகக் கொண்டு வந்தான் . நான் அவனிடம் ,

" ஏன்ராப்பா இவனை டொக்ரரிட்டைக் காட்டேல "?

" நான் குட்டி மாமீட்டைச் சொன்னான் சித்தப்பா , அவாக்கு நேரமில்லையாம் ".

அவனுடைய முகம் சோகத்தில் மூழ்கியது . எனக்குத் தங்கைச்சியில் கோபம் கோபமாக வந்தது . என்ன மனிதர்கள் இவர்கள் ? உயிர்கள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகப்போய்விட்டதோ ?

" சரி நீ ஒண்டுக்கும் யோசிக்காதை . நாளைக்கு இவனை டொக்ரரிட்டைக் கூட்டிக் கொண்டு போவம் . நீயும் என்னோடை வா ".

"சரி சித்தப்பா " .

அவனின் முகத்தில் மகிழச்சியின் ரேகை ஓடியது.

28496121021584595585100.jpg

இந்த நிலையில் இவனை தூக்கிக் கொண்டு டொக்ரரிடம் போகமுடியாது , அவரைத்தான் இங்கு வரப்பண்ணவேணும் என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுளைந்தேன். தங்கைச்சியின் மகள் மாமா என்றவாறே ஓடியந்து காலைக் கட்டிக்கொண்டாள். அவளைத் தூக்கிக் கொண்டேன் . நேரம் 8 மணியைக் கடந்திருந்தது . நான் முற்ரத்தில் மாமரத்துக்குக் கீழ் கதிரையைப் போட்டு இருந்தேன் . அண்ணை அண்ணி பிள்ளைகள் என்னைச் சுற்ரிவர இருந்தார்கள் . அண்ணை பழைய கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார் . நானோ சுவாரசியமில்லாமல் " உம் " கொட்டிக்கொண்டிருந்தேன் . எனது மனமோ பாமனியையும் , றொனியனையுமே சுற்ரிவட்டமிட்டது . எனது குற்ர உணர்வைப் பாமினியால் தீர்த்துக்கொண்டாலும் , பரந்தன் சந்தியில் சந்தித்த அக்காவிற்கு என்ன செய்தேன் ? ஒரு வேளை உணவு அவாவிற்கும் பிள்ளைக்கும் போதுமா ? என்னால் வடைப் பார்சல் தானே அவாவிற்குக் குடுக்க முடிந்தது ? மனதைப் புளியம் விளார் கொண்டு அடித்தது போல் வலி ஏற்ப்பட்டது . இங்கு வந்ததே பிளையான வேலையோ ? என் நினைவுகள் தவ்வித் தவ்வி அலைபாய்ந்தது . இடையில் அண்ணையை மறித்து ,

" எங்கடை பாலசந்திரன் மச்சான் இப்பவும் இருபாலையிலை கிளினிக் வச்சிருக்கிறாரோ " ?

" ஓம் வச்சிருக்கிறார் . அவர் இப்ப இளைப்பாறிவிட்டார் . சனம் இப்ப அவருட்டை போறது குறைவு .

" ஏன் கேட்டனி "?

" இல்லை , இவன் றொனியனை ஒருக்கால் காட்டவேணும் . ஏன் அண்ணை இதுகளை நீ எல்லாம் பாக்கிறேலையே ? நீ ஒரு பெரிய எழுத்தாளன் , இயற்கை ஆர்வலன் , உனுக்குமே எல்லாம் செத்துப்போச்சுது ? "

என்று சாட்டை அடியாக வார்த்தையைத் துப்பினேன் . அண்ணை என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் .

" உனக்கு இங்கதையான் நிலமை விளங்குதில்லை . என்ரை வேலை அப்பிடி , விதானையார் எண்டால் சும்மாவே ? எனக்கு ஒண்டில்லை 3 அதிகாரங்களிட்டை வேலை செய்ய வேண்டிக்கிடக்கு . எனக்கு 24 மணித்தியாலமும் காணுதில்லை ".

" அப்ப அண்ணை , நானும் என்ர மனிசியும் பிரான்ஸ்சில என்ன களவுக்கே போறம் " .

18567118927834767661156.jpg

நானும் பதிலுக்கு எகிறினேன் . சாப்பாட்டை முடித்து விட்டு வந்த தங்கைச்சி முகத்தில் கலவரத்துடன் , என்ன உங்கை ரெண்டுபேரும் புடுங்குப்பாடு ? , சாப்பிட வாங்கோ என்று வாய்க்கால் வெட்டினாள் . நான் சிரித்தபடி வா அண்ணை சாப்பிடுவம் என்றபடியே , பிள்ளைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனேன் . அங்கு மேசையில் தங்கைச்சியும் மனைவியும் வெள்ளை அப்பத்தையும் பச்சைமிழகாய் சம்பலையும் வைத்திருந்தார்கள் . மனைவி எனக்கு 4 அப்பத்தை எடுத்து வைத்து , சம்பலையும் போட்டா . அண்ணை எனக்கு நேர் எதிரே இருந்தார் . பக்கத்தில் பிள்ளைகள் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள் .நான் அப்பத்தை விண்டு வாயில் வைத்தேன் . அம்மா ஓரளவு தங்கைச்சியை முன்னேற்ரியிருந்தா . ஆனாலும் மனைவி அப்பம் சுடுவது போல இல்லை . சாப்பிடும்பொழுது நான் ஒன்றும் பேசவில்லை . முன்பு என்றால் அப்பாவுடன் நாங்கள் ஆறு பேரும் சாப்பிடும் பொழுது , சாப்பாட்டு மேசை எவ்வளவு கலகலப்பாக இருக்கும் ? ஆனால் இப்பொழுது சிரிப்பைக் கடன் கேட்கின்றோம் . பாழாய்ப்போன யுத்தமும் ஒவ்வொருவர் தனி வாழ்கை முறைகளை புரட்டியடித்ததைக் கண்கூடாகவே கண்டேன் . வீடியோ பிளேயரில் உள்ளது போல் றீப்பிளே பட்டன் இருந்தால் ஒருவேளை வாழ்க்கை நல்ல சுவாரசியியமாக இருந்திருக்குமோ ? நான் விரைவாக சாப்பாடை முடித்து விட்டு , சிகரட்டுடன் தனிமையை நாடினேன் . அந்த இருட்டில் சிகரட்டின் முனையே வெளிச்சமாக இருந்தது . இருட்டில் வௌவ்வால்கள் கூடிக் கும்மாளமிட்டன . கோப்பாயும் பாழடைந்து விட்டதோ ? நாங்கள் எல்லோருமே படுத்து விட்டோம் . வெக்கையைப் போக்க மின்வசிறி பெரும் சத்தத்துடன் காற்ரை வாரியடித்தது . மனைவி படுத்தவேகத்திலேயே என்னை அணைத்தவறு உறங்கிப்போனா . எனக்கு மட்டும் கடவுள் சயனசுகத்தைத் தருவதில் கஞ்சத்தனம் காட்டகின்றார் . மனைவியின் கையை மெதுவாக எடுத்து வைத்துவிட்டு , கட்டிலில் எழுந்து இருந்து அம்மாவின் படத்தை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . நேரம் 12 மணயைக் கடந்து விட்டிருந்தது . திடீரென முழித்த மனைவி ,

" ஏன் நித்திரை கொள்ளேல "?

" வருகுதில்லை".

" ஏன் "?

நான் பமினியின் கதையைச் சொல்லி , பிள்ளையாருக்கு குடுக்க இருந்த காசை அவளிற்குக் குடுத்ததைச் சொன்னேன் .

"நல்ல விசயம் தானே பிள்ளையாருக்கு எத்தினை தரம் அம்மாவாலை குடுத்தனிங்கள் . அது ஒண்டுமில்லை உங்களுக்கு எல்லாம் புதுசு . நீங்கள் படுங்கோ ".

நான் கண்ண இறுக்க மூடிக்கொண்டு வராத நித்திரையை வரச்செய்யத் தாக்குதல் நடத்தினேன் . அதிகாலை பிள்ளையார் கோயில் மணியோசை என்னைக் கலைத்தது . ஒருவரும் எழுந்திருக்கவில்லை , ஞாயிற்ருக்கிழமையின் சோம்பேறித்தனம் அவர்களுக்கு . நேரம் ஆறுமணியைத் தொட்டுக்கொண்டிருந்தது . மனைவி எழுந்து தனக்கும் எனக்கும் கோப்பி போட்டுக்கொண்டிருந்தா . நான் கைய்யில் உமிக்கரியுடன் றொனியனைப் பர்க்கப் போனேன் . அவனது நிலை மோசமாக இருந்தது அவனால் எழும்பிக்கூட நிற்கமுடியவல்லை . என்னை அவன் பரிதாபமாகப் பார்த்தான் . எனக்கு அம்மா என்னைப் பார்ப்பது போல் இருந்தது . நான் அவசரமாகக் கரியால் பல்லை மினுக்கிக் , கிணற்ரில் இருந்து வாழியால் அள்ளி அள்ளிக் குளித்தேன் . சூரியன் மெதுவாக ஏறத் தடங்கி வெளிச்சம் வரத்தொடங்கியது . நான் உடுப்புகளை மாற்ரிக் கொண்டு வந்ததும் மனைவி கோப்பியை நீட்டினா . கப்பியை வாங்கியவாறே முன் கேற்ருக்கு நகர்ந்தேன் . மனவியும் தனது கோப்பியுடன் என்னுடன் வந்தா .

" இண்டைக்கு றொனியனுக்கு ஒரு முடிவு கட்டவேணும்ப்பா ".

" ஏன் "?

" நீங்கள் அவனைப் பாத்தனிங்கள் தானே , அவனைப் பாக்க எனக்கு அம்மான்ர ஞாபகம் வருது ".

" இப்ப என்ன செய்யப்போறியள் ? பாலச்சந்திரன் மச்சானைக் கூப்பிட்டுக் காட்டுவம் . பின்னேரம் பரித்தித்துறைக்குப் போவம் . நீங்களும் அவரைப் பாக்கேலத்தானே . சரி போட்டுக் கெதீல வாங்கோ ".

ஒழுங்கையால் மாடுகளும் , ஆடுகளும் மேச்சலுக்கு வரிசை கட்டிப் போய்க்கொண்டிருந்தன . பிறந்த கன்றுக் குட்டிகள் தாய் மாட்டுக்குப் பின்னால் பால்குடித்த வாயால் நுரை தள்ளத் தளிர் நடை போட்டன . நான் குடித்த கோப்பையை மனைவியிடம் கொடுத்து விட்டு , மச்சானைப் பார்க்கப் பெறாமகனின் சைக்கிளில் வெளிக்கிட்டேன் . நான் ஒருவாறு தட்டத்தடுமாறி சைக்கிளில் ஏறி உழக்கினேன் . கனகாலம் சைக்கிள் ஒடாததால் சைக்கிள் தண்ணி அடித்தமாதிரி ஓடியது . நான் றோட்டிற்கு வந்ததும் சைக்கிள் பலன்ஸ்சைச் சரியாக எடுத்தேன் . நெரிசல் குறைந்த றோட்டில் சைக்கிளை எட்டி மிதித்தேன் . எனக்குப் பாலச்சந்திரன் மச்சானில் சின்னவயதில் இருந்தே ஒரு பிடிப்பு . இலங்கையின் மிகச் சிறந்த மிருகவைத்தியர் , பல பதவிகள் அவரது திறமையால் தேடிவந்தன . பல மகாநாடுகளுக்கு அரசசார்பில் ஐரோப்பா முழுவதும் வருவார் . ஒரு முறை 90 களில் பிரான்சில் என்னைச் சந்தித்தார் . இறுதியாக கால்நடைவளர்புப் பணிப்பாளராக இருந்தார் கோப்பாயை விட்டு நீங்காதவர்களில் அவரும் ஒருவர் . அவரை எந்த இடப்பெயர்வும் பாதிக்கவில்லை . ஓய்வெடுக்கும் வரை தனது நாட்டுமக்களுக்காகச் சேவையாற்ரிய ஒரு உதாரணமகன் . நான் அவரது வீட்டு வாசலில் சைக்கிளைக் கொண்டுபோய் நிப்பாட்டினேன். என்னைக் கண்டதும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் ,

" வாடாப்பா எப்ப வந்தனி "?

"ஒருகிழமை மச்சான் ".

"எனக்கு ஒரு உதவி உங்களாலை வேணும் ".

" சொல்லு ".

" எங்கட றொனியனுக்குச் சுகமில்லை . ஒருக்கா வீட்டை வங்கோவன் மச்சான் . என்ர மனிசியும் உங்களைப் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறா".

" ஏன் அவனுக்கு என்ன நடந்தது ? இரு வெளிக்கிட்டுக் கொண்டு வாறன் ".

நான் அவரின் வரவேற்பு அறையை நோட்டமிட்டேன். ஒரு புறத்தே மீன் தொட்டியில் மீன்கள் துள்ளி விளையாடின . ஒரு கூட்டில் இரண்டு சோடி காதல் பறவைகள் கிலுகிலுத்தன . வெளிக்கிட்டு வெளியே வந்தவர் கையில் ஒரு மெடிக்கல் கிட் இருந்தது. இருவரும் சைக்கிளில் வீட்டிற்குப் போனோம் . மச்சான் றொனியனை வடிவாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் . அவரைச்சுற்ரி எல்லாச் சின்னப்பட்டாளமும் நின்றனர் . மச்சான் சோதித்து விட்டு என்னைப் பார்த்தார் . றொனியனும் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான் .

" என்ன மச்சான் ஏதவது சொல்லவேணுமே "?

" இவங்களைப் போகச்சொல்லடாப்பா ".

பிள்ளையள் குட்டிமாமி வரட்டாம் என்று மனைவி கூப்பிட்டா .

" சொல்லுங்கோ மச்சான் . கண்ணன் இவனைக் காப்பாத்தேலாது . ஆள் கனகாலம் இருக்காது . தொண்டைலை கான்ஸ்சர் வந்திருக்குது . வெள்ளனக் கூட்டியந்திருந்தால் ஆளை ஏதாவது செய்திருக்கலாம் ".

" இப்ப என்ன செய்வம் மச்சான்".

" உனக்கு ஓம் எண்டால் சொல்லு . ஒரு ஊசி போட்டுவிடுறன் கருணைக்கொலைக்கு ".

நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன் . பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக ,

"சரி மச்சான் அப்பிடியே செய்வம் ."

மச்சான் தனது கிட்டில் இருந்து ஊசியை எடுத்துச் சரி பார்த்து விட்டு , றொனியனின் முதுகில் ஊசியை ஏற்ரினார் . சிறிது நேரத்தில் அவனது உடல் சிறு துடிப்புடன் அடங்கியது . அண்ணையின் மகன் அழத்தொடங்கி விட்டான் . அவனை , வேறொரு நாய்க்குட்டி வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப் படுத்தினேன் . உள்ளே மச்சான் தங்கைச்சியைப் பேசுவது காதில் விழுந்தது . நான் மச்சானைச் சாப்பிட்டு விட்டுப்போகும்படி சொல்லியிருந்தேன் . நான் எனது மனதைத் தேற்ரியவாறு மல்கோவா மா மரத்தடியில் றொனியனுக்கு கிடங்கு வெட்டினேன் . அவனை அதில் வடிவாகக் கிடத்தி விட்டு மண்ணை அள்ளி மூடினேன் . அதில் ஒரு வேப்ப மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்ரினேன் . மத்தியானம் ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்க மனம் பிடிக்காமல் , எல்லோருடனும் பரித்தித்துறைக்கு இ போ சா பஸ்சில் கனத்த மனத்துடன் ஏறினேன் .

16397548314812782851452.jpg

தொடரும்.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(

கோமகன் உங்களின் இவ்வளவு தொடர்களிலும் என் மனதை தொட்டது இந்த 'றோனியனின்' பாகம்தான். ஊரில் சின்ன வயதில் நிறைய நாய்கள் வளர்த்திருக்கிறேன். நல்ல பயிற்சி கொடுத்து வளர்த்திருக்கிறேன். எல்லோரும் என் தம்பி மாதிரி. பள்ளி விட்டு வந்து அவர்களுடன்தான் விளையாட்டு. சனிக்கிழமைகளில் கடலில் குளியல். அதில் ஒருவனின் பெயர் 'றோனி' . மிகக் கெட்ட கரும்குறும்பன். சிறு வயதில் இறந்து விட்டது.

வெளிநாடு வந்த பின், ஊரில் கடைசியாக நான் வளர்த்த 'ரைகர்' எனும் நாயைப் பற்றி குறிப்பிடாமல் அப்பா கடிதம் எழுதியதில்லை. உங்கள் அம்மாவிற்கு நட்பாக துணையாக ரோனியன் இருந்திருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெருடிய நெருஞ்சி பற்றி என்னத்தை சொல்கிறது....மனசை நெருடிச் செல்கிறது.. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெருடுகிறது ..............வளரத் நாய்க்கு உங்கள் கையால் மண் போடும் பாக்கியமாவது கிடைத்தது. எங்கள் வீடிலும் ஒரு tommy ...இருந்தது........என் அப்பாவின் செல்லம். அப்பா பயணத்தால் வருவதை இனக்கண்டு வாலாட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டிலும் ஒரு நாய் இருந்தது அப்பாவின் வேலை மாற்றத்தால் நாங்கள் அதை அம்மம்மாவின் வீட்டை கொண்டு போய் விட்டு,விட்டு வேறு ஊருக்கு போய் விட்டோம்...விடுமுறைக்கு அம்மம்மாவின் வீட்டை போய் பார்த்தால் நாயைக் காணோம் அம்மம்மாவிட‌ம் கேட்டால் நாங்கள் போய் அடுத்த நொடியே நாய் எங்கட‌ வீட்டை போட்டுதாம் அங்கு போய் பார்த்தால் அது எங்கட‌ வீட்டை சுத்தி வந்து கொண்டு இருந்தது...பக்கத்து வீட்டு ஆட்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஒட்டிப் போய் இருந்தது நாங்கள் எங்களோடு கூட்டிப் போகவும் வர‌ மாட்டன் என்டு அங்கேயே இருந்தது...அடுத்த தட‌வை வரும் போது செத்துப் போய் விட்டது...[ஒரு தடவை எனக்கு ஞாபகம் இருக்கு நாங்கள் சின்னனாய் இருக்கும் போது ஒரு குட்டிப் பாம்பு வீட்டுக்குள்ள‌ வந்துட்டு எங்கள் நாய் தான் கண்டுட்டு பாம்பைக் கவ்விக் கொண்டு போய் வெளியால போட்டது]...அதற்கு பிற‌கு நாங்கள் வேறு நாய் வளர்க்கவேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கோமி உங்களுடைய நெருடிய நெருஞ்சியின் விமர்சனப்பகுதியாக இதை வைத்துக் கொண்டு தொடர்களை மாத்திரம் ஒரு பதிவாக இணைத்துவிடுங்கள். வாசிக்க இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்

கோமி உங்களுடைய நெருடிய நெருஞ்சியின் விமர்சனப்பகுதியாக இதை வைத்துக் கொண்டு தொடர்களை மாத்திரம் ஒரு பதிவாக இணைத்துவிடுங்கள். வாசிக்க இலகுவாக இருக்கும்.

நன்றி வல்வை சகாரா . எனது இந்த தொடர் முடிவடைந்து , ஒரே பதிப்பாக வெளியிட நிர்வாகம் சம்மதிக்கும் பேரில் , நிட்சயம் வெளிவிடுகின்றேன். :)

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த தொடர் முடிவடைந்தது ம் என்று சற்று மாற்றம் செய்தால் நன்று ...காரணம் நீங்கள் எழுதியிருப்பதை பார்த்துட்டு சற்று குளம்பி இன்று எழுதிய பகுதியை போய் பார்த்தால் தொடரும் என்று இருக்கிறது கோமன் அண்ணா............... :)

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் இசை , தப்பிலி , யாயினி , நிலாமதி , ரதி ,வல்வைசகாரா. நான் இந்த றொனியன் மூலம் இரண்டு செய்திகளை சொல்ல முயன்றேன் . ஒன்று , அம்மாவின் ஆசை வளர்ப்பு நாயாக றொனியன் இருந்தாலும் , அவனைச் சுற்ரி ஆட்கள் இருந்தும் , றொனியனைக் கவனிக்க ஆள் இல்லாத அவனது பரிதாப இறப்பும் , எங்கேயோ இருந்து வந்த நான் அவனுக்குச் செய்த பணிவிடையும் . இரண்டாவதாக , எனது றொனியனைப்போல பலமடங்கு வீரம் உள்ள றொனியன்கள் மனித உருவில் இருந்தார்கள் . ஒருவழியில் அந்த மனித றொனியன்களை நாம் காப்பாற்ரத் தவறியதால் வந்த வினைகளை அனுபவித்தோம் , அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் . :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை அள்ளி செல்லுது உங்கள் தொடர் அண்ணா............

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொடரை அழகாக, கடைசி நெருடலுடன் முடித்து விட்டீர்கள்!

எல்லா நெருடல்களையும் விட இந்தக் கடைசி நெருடல் (ரோனியனைச் சொல்கின்றேன்) நன்றாகத் தான் குத்தி விட்டது!

IPKF காலத்தில், இந்த முகம் தெரியாத போராளிகளினால் தான் , எமது உறவுகள் பலரது உயிர்கள் பாதுகாக்கப் பட்டன!

ஒரு சின்னக் கவனிப்பு இருந்திருந்தால், அவன் இன்னும் கொஞ்சக் காலம் வாழ்ந்திருப்பான்!

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் றோனியின் முடிவு பரிதாபமாக இருக்கு, நல்ல முடிவுதான்,

மரத்தில் ஏறி நின்றா புளிய மர படம் எடுத்தனிங்கள், பார்க்க வடிவா இருக்கு,

தொடருங்கள் பல மனதை நெருடுவதற்கு

இன்று தான் இந்தத் தலைப்பைப் பார்த்தேன். முதல் தொட்டு இறுதிவரை இடைவிடாது வாசித்து முடித்தேன். அருமையான பதிவு. நெருடல் என்பதை விட மனம் கடுக்கிறது என்றே சொல்லலாம். நெருஞ்சி குத்தினால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.

கடுக்கச் செய்யும் நெருஞ்சிக்கும் மஞ்சளும் பச்சையும் கூடிய அழகும் உண்டு.

அந்தப் புறாவும் குஞ்சுகளும் படம்...ஏற்கனவே எல்லோரும் சொன்னதைப் போல என்னமோ செய்கிறது. பாமினியின் கதை வெயில் படம் பார்த்தது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலால் இந்தத் தலைப்பை பலபடிகள் மேலே கொண்டு சென்றது றொனியன் பாத்திரம். அற்புதமாக உள்நுழைத்துள்ளீர்கள். எத்தனையோ பரிமாணத்தில் இந்த றொனியன் பாத்திரமும் அது கொலைசெய்யப்பட்டதோடான உங்கள் பயணத்தொடரின் முடிவும் வெளிப்படுகின்றன. அம்மாவின் ஞாபகங்கள் ஊரின் பிணைப்பு இறந்தகாலம் பற்றிய பரிதவிப்பு இழந்ததைத் காணத்துடிக்கும் ஏக்கம் முலான இன்னோரன்ன உணர்வுகளின் கோர்வையாகச் சென்று பலதைக் காட்டி றொனியனின் கொலையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழனின் புலம் மீள்கைக்கைக்கான பஸ் ஏறதல் ஆழ்ந்து வாசிக்கப்படக்கூடியதாக அருமையாக வெளிப்ட்டுள்ளது.

மனம் கடுக்கிறது

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாது? பாரிஸ் விமான நிலையத்துக்கே திரும்பி வந்து இறங்காமல் தொடர் முடிஞ்சிதா? ஏலே சின்றாசு............இது செல்லாது செல்லாது..................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலராலும் சுட்டிக்காட்டிய மாதிரி றொனியன் கடைசியில் வந்தாலும் கதையின் கதானாயகனாகிவிட்டான்.பின்னீட்டிங்கள்.கோமகன். :)

  • கருத்துக்கள உறவுகள்

தேன்கூடுபோல் தான் சேர்ந்து வாழ்ந்தோம், கல்லெறி பட்டதால் கண்ட துண்டமாய் பல கண்டங்களிலும் சிதறுண்டு போனோம் !

நன்றி கோமகன்! நெருஞ்சி சும்மா குத்தினால் குதியை தரையில் தேய்த்து விட்டு போகலாம், இது கொஞ்சம் கூட மனசுவரை குத்தீட்டுது! :huh:

Edited by suvy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.