Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Featured Replies

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

நளினி உங்களுக்கு மட்டும் உண்மையை கூறியுள்ளார் என்று ஏன் நம்புகிறீர்கள்?

மற்றபடி விசுகு, தனக்கு தெரிந்ததை அறிந்ததை கூறுகின்றார்.

உங்களுக்கு தெரிந்தவற்றையும், நீங்கள் அறிந்தவற்றையும் பதிவு செய்யுங்கள்.

முந்தியொருக்கால் ஜேர்மனியிலை நளினியின்ரை......அதுதான் அவவின்ரை புறோக்கிறாம் நடத்துறம்...நடத்தப்போறம் எண்டுசொல்லிகாசு சேர்த்தவை....ஆனால் இண்டு வரைக்கும் நளினியையும் காணேல்லை அவவின்ரை புறோக்கிராமையும்காணேல்லை. குடுத்த காசையும் காணேல்லை அந்த காசிலை பெட்டிக்கடை நடத்துற ஆக்களைத்தான் காணக்கிடைக்குது. :lol:

நளினி எல்லாம் போய், இப்ப திரிசா வரை வந்தாச்சு. இனி என்ன செய்ய, குடுத்த காசை நினச்சு ஒருக்கா கள்ளுக்கொட்டிலுக்கு போய் வாங்க எல்லாம் சரியாப்போகும்.

  • Replies 210
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணையின் பதிவின் படி ரெலோதான் புலிகளை வம்புக்கிழுத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது...அது மட்டுமன்றி சமாதானம் பேச வந்த புலி உறுப்பினரையும் சுட்டுகொன்று சகோதரர்களையே இந்தியா எட்டப்பர்களுடன் சேர்ந்து அளிக்கத்துணிந்திருக்குறார்கள் ...இதற்கு மேல் பொறுமையாக புலிகள் இருந்திருக்க வேண்டும் என்று இந்த மாற்றுகருத்து சொல்பவர்கள் எதிர்பார்க்கிறார்களா..? நானும் என் வழியும் என்று இருக்கும் என் வழியில் குறுக்கிடுவது மட்டுமன்றி என்னைக்கொல்லவும் வரும்போது நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்....?

புலிகள் வேலைப்பளு காரணமாகவும் செயலுக்கே முன் உரிமை என்பதாலும் அதிகம் பேசுவதில்லை. அவர்கள் தமது தீர்ப்பு முடிந்ததும் அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள்.

ஆனால் அதை சிலர் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு சிறி சபாரத்தினத்தை சுட்டதுடன் போராட்டம் முடிந்தது என்று எமது மடிக்குள் பாம்புகளையும் தேள்களையும் போட்டபடி திரிகின்றார்கள்.

அதனால்தான் நாம் பேசணும். எமது மக்களுக்கு இதை கொண்டுவரணும், அடுத்த சந்ததி புலிகள் பொறுப்பில்லாமல் நடந்தார்களா?

தம்மை பாதுகாக்க, தமது இயக்கத்தில் போராளியாக இருந்த ஒருவர் நயவஞ்சமாக கொல்லப்பட்டதை தட்டிக்கேட்டார்களா? அறியணும். அதற்காகவே இதை நான் ஆரம்பித்தேன். அதற்கான நல்ல அறிகுறிகள் தெரிகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை

இதற்கு வலுச்சேர்த்த உறவுகள்

கோமகன்

கிருபன்

ரதி

இசைக்கலைஞன்

சாத்திரி

சாந்தி

புங்கையூரான்

நிழலி

வல்வை சகாரா

வொல்கனோ

நுணாவிலான்

புத்தன்

குமாரசாமியண்ணை

சுசியண்ணை

ஈஸ்

தும்பலையான்

தமிழ்சிறி

புலவர்

தமிழ் இனி

புரட்சிகர தமிழ்தேசிகன்

சசி

தப்பிலி

வசி

நொச்சி

இணையவன்

மருதங்கேணி

எழுஞாயிறு

சுண்டல்

நெருப்பு நீலமேகம்

.................

மற்றும் வழமைபோலவே

இதிலும் வில்லத்தனங்களையும் விசமத்தனங்களையும் எழுதிய

ARJUN அவர்களுக்கும்

நன்றிகள்

தொடரும்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் முன்னால் டெலோவின் வால். சிறியண்ணையின் இறப்போடு வெளிநாட்டுக்கு வந்து புலிக்காச்சல் பின்பு மாறி முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தெளிஞ்சுவிட்டேன்.

நளினி எல்லாம் போய், இப்ப திரிசா வரை வந்தாச்சு. இனி என்ன செய்ய, குடுத்த காசை நினச்சு ஒருக்கா கள்ளுக்கொட்டிலுக்கு போய் வாங்க எல்லாம் சரியாப்போகும்.

பசுமைநிறைந்த அந்த நாட்கள் மறக்கமுடியாது. கனக்க யோசிக்காதையுங்கோ நண்பர்களே நான் நளினியின் ரசிகன். :D

முடிந்துவிட்டதா அல்லது இன்னமும் தொடருமா?

பயமாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

மற்றும் எனக்கு வந்த தனிமடல்களையும் வைத்துபார்க்கும்போது

சிறி சபாரத்தினம் அவர்கள் தனியே ஒழித்து இருந்தபோது கிட்டு அவர்கள் தலைமையில் சென்ற புலிகளால் புலிகளுடன் தான்பேசவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தும் அது செவிமடுக்கப்படாது அந்த இடத்திலேயே கிட்டு அவர்களாலும் அவரது பணிப்புக்கு கட்டுப்பட்டவர்களாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தெரிகிறது. தம்மால் நிராயுதபாணியாக பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிலிருந்து எடுத்து அனுப்பப்பட்ட போராளியை சுடடுக்கொன்றதை அவர்கள் மன்னிக்க முன்வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

இனி........

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் போராட்டத்தையும்,புலியையும் ஆதரித்த பல பேருக்கு கிட்டுவை பிடிக்காதாமே! இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு கிட்டுவை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கொண்ட கொள்கைக்காக உறுதியாக நின்ற வகையில் கல்பாக்கத்துக்கு அருகில் தனதுயிரை மாய்த்து கொண்டவகையில் மிகவும் பிடிக்கும்..

டிஸ்கி:

கொண்ட கொள்கைகாக ... ஆனானபட்ட ஈழ ஆதரவாளர் (.......)அவர்களால் சுழ்நிலை கருதி சிறைக்குள் தள்ளப்பட்டு முட்டிக்கு முட்டி தட்டப்பட்ட( யாராவது வீர வசனம் பேசுபவர்கள் வாங்கினால் தெரியும்) கிட்டு அவரே உண்மையானவர்.. இங்க கிச்சு மிட்டாய் 2 ரூபாய் கணக்கில் நொப்படி... கிப்படி... என கருத்தெழுதபடாது.. வலித்தவன் எழுதினாலே அது சரியாக இருக்கும்.. : <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாராவது வந்து கிட்டு பொய்யர் என எழுதினார்களா?...நீங்கள் தேசியத்திற்காக பாடுபட்டு ஈழம் வாங்கிக் கொடுத்து விட்டீங்கள் போல இருக்குது.வந்திட்டாங்கள் கதைக்கிறத்திற்கு...பக்கத்தில் அவ்வளவு சனம் செத்து மடிய மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள் <_<

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் யாருக்கு முதலில் வேண்டும் என கிச்சு கிச்சு மூட்டுபவர்களக்கே தெரியல்ல.. இது ரொம்ப காமெடி. போக அவ்வபோது சொறிந்துகொள்ளபடாது.... எனினும் பெரும்பான்மையோர் ஆதரவாக இருக்கிறார்களென பெருமை பட வேண்டும் ..மாமன் மச்சான் ரிலேசன் சிப்பு ??

டிஸ்கி:

நான் முதலில் இருந்து கூவி வருபவது .... சும்மா இனம் இனம் என கூவி இருக்க படாது . ரிலேசன் சிப்பில் இறங்கிவந்தால் தான் வேலைக்கு ஆகும் ..

ஐஸ்வரியா ராய் போட்டோ போட்டு சும்மா ஆட்டம் கணப்படாது

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

உம் முகத்தைப் போய் கண்ணாடியில் பார்க்கவும்...நீங்கள் வேண்டுமானால் ஜஸ்வர்யாவோட ரிலேசன் சிப் வைத்தாலும் ஓகே அல்லது தமன்னாவோட வைத்தாலும் ஓகே ஆனால் தேவையில்லாமல் எங்கட பிரச்சனையில் மூக்கை நுளைக்காமல் இருந்தாலே போதும்...தேவையில்லாமல் கதைத்து விசுகு அண்ணாவின் இந்தக் கதையை திசை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை.

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

உம் முகத்தைப் போய் கண்ணாடியில் பார்க்கவும்...நீங்கள் வேண்டுமானால் கருணாகதோடும் ரிலேசன் சிப் வைத்தாலும் ஓகே அல்லது ராக்சச பக்சே வைத்தாலும் ஓகே ஆனால் தேவையில்லாமல் எங்கட பிரச்சனையில் மூக்கை நுளைக்காமல் இருந்தாலே போதும்...தேவையில்லாமல் கதைத்து விசுகு அண்ணாவின் இந்தக் கதையை திசை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

நாளை விலாவரியாக விவரிக்கலாம் ..ஆள் இல்லாத நேரத்தில் ஆரவராம் செய்யபடாது.. நான் தூங்க போகிறேன்.... தொழர் விசுகு ஆரம்பித்த இந்த திரியில் நாளை தொடருவம்..:D மாற்றுகருத்து மாணிக்கங்கள் வருக பதிக .. ரைட்டு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் போராட்டத்தையும்,புலியையும் ஆதரித்த பல பேருக்கு கிட்டுவை பிடிக்காதாமே! இது உண்மையா?

84 85 86 ம் ஆண்டுகள் கிட்டு என்பவர் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல பொதுமக்கள் மற்றைய இயக்கத்தினரிற்கும் ஒரு கதா நாயகன். இந்தக் காலகட்டங்கள் வட கிழக்கு மட்டுமல் தென்னிலங்கைவரை பிரபாகரனைவிட கிட்டுபற்றி பேசப்பட்ட காலகட்டங்கள். மேலும் உள்ளே சென்று கருத்தெழுத விரும்பவிலை நன்றி வணக்கம். :)

கதாநாயகன் கமல் டூயட்டும் பாடுகின்றார்

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

84 85 86 ம் ஆண்டுகள் கிட்டு என்பவர் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல பொதுமக்கள் மற்றைய இயக்கத்தினரிற்கும் ஒரு கதா நாயகன். இந்தக் காலகட்டங்கள் வட கிழக்கு மட்டுமல் தென்னிலங்கைவரை பிரபாகரனைவிட கிட்டுபற்றி பேசப்பட்ட காலகட்டங்கள். மேலும் உள்ளே சென்று கருத்தெழுத விரும்பவிலை நன்றி வணக்கம். :)

தகவலுக்கு நன்றி அண்ணா...நான் தெரிந்து கொள்ளத் தான் கேட்டேன்...எனக்கு சொன்னவர்கள் கிட்டுவை பற்றி தப்பாக சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன் ஆனால் சொன்னவர்கள் புலிகளது தீவிர ஆதரவாளர்கள்

தங்களின் ஒரு போராளியை கொன்றதற்காக ஒரு சக இயக்க போராட்ட குழு தலைவரையே மன்னிக்க முடியாதவர்கள் எண்ணற்ற எதிரிகளை கொன்றுவிட்டு எதிரி மன்னிப்பான் என்று நினைத்தது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் ஒரு போராளியை கொன்றதற்காக ஒரு சக இயக்க போராட்ட குழு தலைவரையே மன்னிக்க முடியாதவர்கள் எண்ணற்ற எதிரிகளை கொன்றுவிட்டு எதிரி மன்னிப்பான் என்று நினைத்தது எப்படி?

தங்களின் ஒரு போராளியை சந்தர்ப்பவசமாக கொல்லவில்லை. நீண்டகாலப்போக்கில் இந்தியாவின் உறுதுணையுடனும் ஆலோசனையுடனும் தான் கொலை செய்கிறார்கள் என்பது சாமானிய மக்களுக்கே புரிந்து விட்டது கற்றுக்குட்டி அர்சுனுக்கு விளங்கவில்லையோ???. :huh::huh:

எதிரி மன்னிக்க வேண்டுமென்பதில்லை. அதாவது வெள்ளைக்கொடியுடன் நிராயுதபாணியாக சரணடைந்த போராளிகளை மன்னிப்பது போர் விதி.இது எந்த நாட்டிற்கும் பொருந்தும்.ஜெனிவா சட்டத்திலும் அது சொல்லப்படுகிறது.மாணிக்கதாசன்,சங்கிலியோடு இருத்த ஆட்களுக்கு இவைகள் விளங்கும் என எதிர்பார்க்க முடியாது தானே. :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்பது மிக உண்மை.

நீங்கள் உங்கள் சம்பந்தமான,நான் ஏன் புலியில் சேர்ந்தேன் என்று எழுதினால் மிக நன்றாக இருக்கும்,அதைவிட்டு போராட்டம் சம்பந்தமாக யாரோ சொன்னதைக்கேட்டு அதையே வரலாறு என எழுதக்கூடாது.

பிரான்ஸ்சில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தோசமாக வாசிக்கலாம்.

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

இயக்கத்தில் ஒருவரை பற்றி பிழையாக கதை பரவுதென்றால் அவர் ஒன்றில் ஓடிவிட்டார் அல்லது போடப்போகின்றார்கள் என்று அர்த்தம்.இவை எல்லாம் விளங்கக்கூடிய நிலையில் பலர் இல்லை.தலைமை சொல்லே மந்திரம்.இது அனைத்து இயக்கத்திற்கும் பொருந்தும்.பல உதாரணங்கள் எழுதலாம்.

புளொட்டின் சரித்திரமே அக்கு வேறு ஆணிவேறாக வேறு தளங்களில் எழுதப்பட்டுவிட்டது.இப்போதும் நேசன் என்பவர் என்.எல்.எப்.டீ இணையத்தில் எழுதுகின்றார்வாசித்தால் போராட்டத்திற்கு என்ன நடந்தது என பலருக்கு விளங்கும்.படங்கள் ,சாட்சிகளுடன் எழுதுகின்றார்.சரி பிழை பற்றி எம்முடன் கதைப்பார்.

நான் எனக்கு தெரிந்த உண்மையான புலிகள் பற்றிய சிறுவிடயங்களை எழுதினால் கூட நிர்வாகம் தூக்கிவிடும்.வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளையடித்து கொலைகள் செய்தவர்கள் யார்?விசுகுவின் முதலாம் பதிவு போல் ஒரு சம்பவம் தான் இது.

நளினியுயோடு பல நாட்களாக கதைப்பதில்லை................ இதை வாசிக்கும்போது நளினியின் ஞாபகம் வந்ததால் நளினியின் செல்லுக்கு ஒரு கோல் போட்டேன். யாராவது ஈழ தமிழன்கள் கனடாவில இருந்து உங்க வந்தாங்களா என்று கேட்டேன்?

சின்ன திரையைபற்றியா கேட்கிறீங்க என்றார். இல்லை உங்களை வந்து சந்திச்சாங்களா என்று கேட்டேன்?

எந்த சோழாமுடியும் வரவில்லை என்று சொன்னார்.

உண்மை இப்படியிருக்கு! ஆனா எப்படியெல்லாம் பினாத்த முடியுது.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டரைச் சிலருக்குப் பிடிக்காமல் போகக் காரணம் அவரது துணிச்சலான செயல்கள் தான். சில சமயம் eccentric ஆக நடந்து கொள்வார் என்று அறிந்திருக்கிறேன். கற்றுக் குட்டி அர்ஜூன் சொல்லும் "டூயட்" பாடும் கதையும் கிட்டு மீது ஒரு வித்தியாசமான பார்வை வரக் காரணம். கோட்டைக்குள் ஆமியை முடக்கி வைத்திருந்த அதே நேரம் ஒரு மருத்துவ பீட மாணவியைக் கிட்டு காதலித்துக் கொண்டிருந்தார். யாழ் நகரின் குறுக்கு வீதியொன்றில் இருந்த அந்த மருத்துவ பீட மாணவியின் வீட்டின் முன்னால் பெரும்பாலான மாலை நேரங்களில் கிட்டரின் "200 சி.சி' மோட்டர் சைக்கிள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். யாழ் நகரில் அந்த மாணவியை அண்ணி என்றும் அவரது தாயாரை மாமி என்றும் இளைஞர்கள் மிகவும் கவனமாக அக்கம் பக்கம் பார்த்துக் கேலி செய்வார்கள். யாழ்.மருத்துவ பீடத்தில் பகிடி வதை நடந்த போது ஒரு சிரேஷ்ட மாணவர் கொஞ்சம் அசட்டுத் துணிச்சலோடு இந்த "அண்ணி" விவகாரத்தை இழுத்து அந்த மாணவியைப் பகிடி வதை செய்திருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களாக அந்த சிரேஷ்ட மாணவரைக் காணவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கள்வியங்காட்டு வயல் வெளியொன்றில் மரத்தில் கட்டப் பட்டிருந்த அவரைக் கண்டு பிடித்தார்கள். அவர் ஒரு கால் நடக்க இயலாத மாணவர், எனது தூரத்து உறவினர். பெரிதாக ஒரு பொல்லாப்பும் நடந்திருக்கவில்லை. ஆனால் உதவி கேட்கும் எவருக்கும் இரங்கும் ஆழமான மனிதாபிமானம் கிட்டரிடம் இருந்தது. பாஷையூரைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு அவனது பாட்டி எழுதி வைத்து விட்டுப் போன பெருந்தொகை சொத்துக் காரணமாக மற்றைய உறவினர்களால் உயிராபத்து. வேறு வழியில்லாமல் கிட்டரிடம் போய் தஞ்சம் புகுந்து விட்டான். அவனைக் கிட்டு தன் கூடவே வைத்துக் கொண்டார். இந்தியப் படைகள் வந்த பின்னர் அவர்களிடம் சரணடைந்த அந்த இளைஞனை சில நாட்கள் சித்திரவதை செய்த பின்னர் விடுவித்தார்கள்.விடுவிக்கப் பட்ட சில நாட்களில் இந்தியப் படைகள் கூட இருந்த ஒட்டுக் குழு ஆயுததாரிகள் அவனை வீட்டுக்கு வெளியே பெயர் சொல்லிக் கூப்பிட்டுச் சுட்டுக் கொன்றனர். கிட்டர் ஒரு legend என்று தலைவர் சும்மா சொல்லவில்லை. அவருக்குள்ளே படைத்தளபதி மட்டுமில்லாமல் காதலன், பாதுகாவலன் , ஓவியன் என பல அவதாரங்கள் இருந்தார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, கண்ணால் காணமுடியாத தலைவரை விட, கிட்டு அண்ணரைத்தான் கதாநாயகனாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம்.

அவர் ஹீரோவாக இருக்கும் போது டூயட் பாடினால் என்ன? மற்றவர்களும் தான் டூயட் பாடினார்கள்.

அவர் எப்போதும் மக்களுக்கு துணையாக நின்றார்.

இங்கே யாராவது வந்து கிட்டு பொய்யர் என எழுதினார்களா?...நீங்கள் தேசியத்திற்காக பாடுபட்டு ஈழம் வாங்கிக் கொடுத்து விட்டீங்கள் போல இருக்குது.வந்திட்டாங்கள் கதைக்கிறத்திற்கு...பக்கத்தில் அவ்வளவு சனம் செத்து மடிய மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே நீங்கள் <_<

ரதி இது ஒரு பண்பான விமர்சனமாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அரசு எங்கள் விடையத்தில் செய்த குளறுபடிகளுக்கு அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?. அவர்கள் எமது போராட்டத்தில் பார்வையாளர்கள் இல்லை, மாறாகப் பங்காளிகள் ஒருவர் விடுகின்ற தவறுக்கு ஒட்டுமொத்த தமிழக உறவுகளை ஓரே கோணத்தில் பார்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழக உறவுகளது வாழ்வாதாரப் பிரச்சனைகளில் எமது ஆதரவுக்குரல் எங்காவது இருந்ததா?????????? ஒரு உதாரணத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் பிரச்சனைகளில் அவர்கள் தமது உயிரையே தற்கொடையாக தந்ததை இப்படி இலகுவில் மறப்பீர்கள் என நான் எதிர்பார்கவில்லை. சரித்திரங்களை மறந்து கதைப்பது எனக்கு நல்லதாகத் தெரியவில்லை. பிழையாக எழுதியிருந்தால் நண்பர் தானே என்று மன்னித்து விடுங்கள் ரதி.

மதுரை அழகிரி போலத்தான் இவரும் என இந்த கற்றுக்குட்டியின் கருத்து.

அழகிரியை பற்றி அவரின் ஆதரவாளர்களிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டண்ணா

ஒரு வீரன்

பெரும் படைகளை மறித்து படை நடாத்திய தளபதி

கால் இழந்தபின்பும் எதிரியை நடுங்கவைத்த போர்வீரன்

அவரை பெண்கள் விரும்புவது என்பது இயல்பே

இங்கு சிலருக்கு அவர் மேல் பொறாமை

சோத்துப்பாசலுக்கே வீட்டைத்தட்டுபவர்களை எவர் விரும்புவர்........??? :(:(:(

Edited by விசுகு

மதுரை அழகிரி போலத்தான் இவரும் என இந்த கற்றுக்குட்டியின் கருத்து.

அழகிரியை பற்றி அவரின் ஆதரவாளர்களிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

கொஞ்சம் புரியும்படி சொல்வீர்களா அர்ஜுன் குறையாக எடுக்காவிட்டால்.நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.