Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை மூர்த்தியரை மாதிரி ஊருக்கு மூண்டுபேர் இருந்தாலே காணும்.கட்டிளம்காளைகள் பித்துப்பிடித்து அங்குமிங்கும் அலைய மாட்டார்கள். :icon_idea:

அந்த நேரம் எங்கடை ஊர்ப்பக்கம் வராமல் போயிட்டமே என்கிற உங்கடை ஆதங்கம் புரியிது :lol:

  • Replies 79
  • Views 13.5k
  • Created
  • Last Reply

அலைமகள் இந்தக் கதையில் அரசியலே வேண்டாம்.எமது சமூகம் அதில் உறைந்து போயுள்ள பல பிற்போக்கு தனங்கள் இளவயது பாலியல் உணர்வுகள் எப்படி தவறான பாதைகளில் பயணம் செய்கின்றது என்பதை மட்டும் பேசுவோமே..இங்கும் புலிகள் வேண்டாமே..ஏனெனில் இவைகள் புலிகள் காலத்திலும் இருந்தவைகள்தான்.இயற்கையானது

சாத்து நீங்கள் எப்பிடித்தான் தலைகீழாய் குத்தி நிண்டாலும் அறிவுகள் அங்கைதான் உங்களுக்கு முத்திரை அடிக்கிறாங்கள் :lol: :lol: :lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளிற்கு சாமான் பாரமெண்டால் நீயோ கிடைச்சனி//

உங்கடை அம்மம்மா லேசுப்பட்ட ஆளாத்தெரியேல்ல...

ஊர் பழசுகள் வாயைத்திறந்தால் கேக்கவா வேணும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்....நம்ம ரதி அக்காக்கு அடிக்கடி வாற மாதிரி.............

நீங்க அந்த ஆன்டி லா சாப்பலுக்கு பக்கத்தில இருக்கிற ஒரு கோயில்ல இருக்கிறா என்டு சொல்லிடிங்க இனி அங்க போற சனம் எல்லாம் சாமிய பாக்கிறதுக்கு பதிலா மலர் ஆன்டிய அல்லோ தேடபோயினம்......அவாக்கு ஒருத்தரும் இல்ல இருக்கிறதே அந்த கோயில் தான் பாவமல்லோ அவா

கதையின் இறுதியை படியுங்கள் பிறகு இப்படியான சந்தேகமே வராது

நல்ல இருக்கு சாத்திரி. யாழில் விரும்பி வாசிக்கும் சில ஆக்கங்களில் உங்களுடையது முக்கியமனது....

இப்படியான கதைகளை வாசிக்க என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு ஒருவர் வருவார் ஆளைக் கானோம்.

கனடாவில் இருந்து ஹி ஹி.

நன்றிகள் சசி. அவர் இந்தக் கிழைமை சரியான பிசியாம்.எல்லாருக்கும் பாம்பு விடப் போறாராம்.. :lol:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கிவிட்டிருந்தது.கலர் கலராய் டியூப் லைற்றுகள்.நாலு வீதியிலையும் லவுஸ்பீக்கர். வாழை தோரணம் என்று நானும் நண்பர்களுடன் சேர்ந்து அலங்கரித்தோம்.கொடியேத்தத்திற்கு மலரக்கா பட்டுச்சீலை உடுத்தபடி வந்திருந்தார். சீலையோடை நான் அவரை பாத்தது அதுதான் முதல் தடைவை.நல்ல வடியவாயிருந்தார். இன்றுவரை பெண்களிற்கு கவர்ச்சியான உடை எது எண்டு கேட்டால் சேலை தான் எனது முதலாவது தெரிவு. இரண்டாவது ஜுன்ஸ்.ரீசேட்.. கோயிலடியில் எப்படியாவது கதைக்கலாமெண்டால் முடியேல்லை சுத்திவர சொந்தக்காரர்.தெரிஞ்சாக்கள். அவரும் நானும் புன்னகைகளை மட்டும் பரிமாறிக்கொண்டம்.அந்த நேரம்தான் எங்கடை ஊரிலை ஒரு காதல் ஜேடி சாதி மாறி காதலிச்சவை விசுவமடுவுக்கு ஓடிட்டினமாம் எண்டு கதை அடிபட்டது.அந்த நேரம் காதலிச்சு ஊரை விட்டு ஓடுபவை விசுவமடு அக்கிராயன் பக்கம் ஓடிட்டினம் எண்டு கதை அடிபடும் .அந்த ஊர்கள் எங்கை எந்தப்பக்கம் இருக்கொண்டு எனக்குத்தெரியாது.

நான் யாழ்ப்பாணம் ரவுணுக்கு இரண்டு மூண்டுதரம் போயிருக்கிறன் அதுக்கங்காலை நாவக்குளி கோப்பாய் பாலத்தை தாண்டினது கிடையாது. திருவிழா நேரம் விசுவமடு அக்கிராயன் எங்கை யிருக்கொண்டு சிலரிட்டை விசாரிச்சன் அவை சொன்ன விபரங்கள் பிடிபடேல்லை.அந்த நேரம் எங்கடை ஊர் காரர் வன்னியிலை தோட்டம் செய்யிறவர் திருவிழாவுக்கு வந்திருந்தார். அவர் வன்னியாலை வரேக்குள்ளை மரைவத்தல் பண்டியிறைச்சி தொங்குமான் இறைச்சியெண்டு கொண்டுவந்து ஊருக்குள்ளை விக்கிறவர்.அவர் என்ரை மாமாவின்ரை சினேதன் அவரை கோயில்லை கண்டு பிடிச்சன் .

அண்ணை நீங்கள் வன்னியிலைதானே காணி செய்யிறியள் அது எங்கை??

அது பூவரசங்குளம்

அது எங்கையிருக்கு

அதுவந்து தம்பி வவுனியா மன்னார் றோட்டிலையிருக்கு

அங்கை எப்பிடி போறது கன தூரமோ??

நீ சண்முகத்தின்ரை மருமேனனல்லோ உனக்கேன் உந்த விபரங்கள்.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வன்னியிலை காணி செய்யவேணுமெண்டு கேட்டார் அதுதான்....

அவரை என்னட்டை வரச்சொல்லு விளக்கமாய் சொல்லுறன் நீ சின்னப்பெடியன் உனக்கு இதுகள் விளங்காது...

அவரின் சின்னப் பெடியன் எண்ட வசனம் என்னை கோபப்படுத்தியது. ஆனால் எனக்கு வன்னிக்கு போகிற வழிமட்டும் சரியாய் தெரியவேயில்லை.மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லவேணும். அவா எப்பிடியும் ஓமெண்டுவா அவாவை கூட்டிக்கொண்டு எங்கையாவது ஓடிடவேணும்.ஆனால் எங்கையெண்டுறதுதான் தெரியாது.யாழ்ப்பாணத்திலை எங்கையும் ஓடமுடியாது எல்லாப்பக்கமும் சொந்தக்காரர் பிடிச்சிடுவாங்கள்.வன்னிக்கு போகவும் வழிதெரியேல்லை.சினேதங்களிட்டை கேக்கவும் விருப்பம் இல்லை அவங்களுக்கு இதை சொன்னால் பயத்திலை உடைனையே வீட்டிலை சொல்லிடுவாங்கள்.ஒரு வழியும் இல்லையெண்டால் படங்களிலை வாற மாதிரி தற்கொலைதான்.சாகிறதுக்கும் பயமாய்தான் இருந்தது.ஆனால் மலரக்காவை கட்டிப்பிடித்தபடியே தற்கொலை செய்தால் பயம் இருக்காது.ஆனால் தூக்கு மட்டும் போடக்கூடாது கயிறு கழுத்தை இறுக்கிற மாதிரி நினைத்துப்பார்க்கவே கைகால் நடுங்கியது.கிணறு ..வேண்டாம் மூச்சடக்கும் எனக்கு நீந்தத் தெரியும் .அதாலை பொலிடோல்தான்.முடிவுசெய்தேன்.

எதுக்கு உடைனையே தற்கொலை முடிவெல்லாம் முதல்லை மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுவம். எங்கை ஓடிப்போறதெண்ட ஜடியாவை அவாவிட்டை கேப்பம்.அவாக்கு ஏதும் வழி இருக்கலாம்.பிறகு யோசிக்கலாம்.கொஞ்ச பூவரசம் இலையளை புடுங்கி சுருட்டி கோயில் கேணிசுவரில் சிறி..மலர் என்று எழுதினேன். 5ம் திருவிழாவுக்கிடையிலை எப்பிடியாவது மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுறது அதுக்கிடையிலை ஓடிப்போறதுக்கு கொஞ்ச காசு சேர்க்கிறதெண்டு முடிவெடுத்தன்.வீட்டிலை அம்மம்மா காசு வைக்கிற மல்லிப் பேணி மிளகாய்ப்பேணி எல்லாத்தையும் திறந்து பாத்து எங்கை எவ்வளவு இருக்கெண்டு கணக்கெடுத்து வைச்சிருந்தன்.எல்லாம் கடைசி நாளண்டுதான் எடுக்கவேணும்.மலரக்காவை ஏத்திக்கொண்டு ஓடுறதத்துக்கு என்னட்டை சைக்கிள் நிண்டது.ஆனால் அவாவின்ரை பிள்ளை?? திரும்பவும் பிரச்சனை அவா பிள்ளையை விட்டிட்டு வருவாவோ ??பிள்ளையையும் கொண்டு ஓடுறதெண்டால் இருக்க இடம் எல்லாம் ஒழுங்கு பண்ணிட்டுத்தான் போகவேணும்.ஒரே குழப்பம்.அதுவும் அவாவிட்டையே கேப்பம்.

அண்டைக்குகுமாரசாமியரின்ரை 5ம் திருவிழா வாணவேடிக்கை சின்னமேளம் எண்டு திருவிழா களைகட்டும்.எனக்கு காலையிலை இருந்தே ஒரே பதட்டம் என்ரை நண்பர் எல்லாரோடையும் போய் சும்மா பாத்து கதைச்சன்.பகல் திருவிழாவிலை மலரக்காவை பாத்து இரவு திருவிழாவுக்கு வருவார் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.திருவிழா முடிய கோயில்லையே அன்னதானத்தை சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்து விட்டேன் இரவு திருவிழா தொடங்கியது எல்லாரும் வரத் தொடங்கிச்சினம்.மலரக்கா பிள்ளையோடை வந்திருந்தா.சங்கக்கடை மனேச்சரும் நிண்டார்.அம்மம்மாவும் கோயிலடியிலைதான் நிண்டா.உடைனையே வீட்டை ஓடிப்போய் பேணியளிலை அவா போட்டு வைச்சிருந்த காசு எல்லாத்தையும் எடுத்து எண்ணிப்பாத்தன் ஒரு 150 ருபாய் வரை இருந்தது எடுத்துக்கொண்டுகோயிலடிக்கு வந்திட்டன்.சாமி வீதிஉலா எல்லாம் முடிஞ்சு 9 மணியளவிலை ஊரிலை உள்ள குமருகள் எல்லாம் வீடுகளுக்கு போட்டினம்.

மலரக்காவும்அவரது பக்கத்து வீட்டுகாரரோடை போய்கொண்டிருந்தா.அவர் வீதிக்கு வந்ததும் ஓடிப்போய் என்ன போறிங்களோ எண்டு கேட்டன். பிள்ளைக்கு சாப்பாடு குடுத்திட்டு பக்கத்து வீட்டிலை படுக்கவைச்சிட்டு சீலையை மாத்திக்கொண்டு திரும்பவும் வில்லுப்பாட்டு பாக்க வருவன் எண்டா. மனேச்சரும் போக வெளிக்கிட்டார் அவர் மலரக்கா வீட்டுப்பக்கம் போகிறாரா என வேவு பார்த்தோன். அவர் கடைப்பக்கமாய் போய்க்கொண்டிருந்தார்.அப்பாடா என்றொரு நிம்மதி பெருமூச்சு ஒண்டை விட்டன்.மேளச்சமா முடிந்து சின்னமணியின் வில்லுப்பாட்டுத் தொடங்கியிருந்தது நளன் தமயந்தி கதையை நளினத்தோடை சொல்லிக்கொண்டிருந்தார்.மலரக்கா கையில் ரோச்லைற்றோடை பக்கத்து வீட்டுக்கார மனிசியோடை வந்துகொண்டிருந்தார் அவர் வரும்வரை காத்திருந்த நான் அவரிட்டை போய் மெதுவாய் காதிலை "நீங்கள் திரும்ப வீட்டை போகேக்கை தனியா வாங்கோ உங்களிட்டை ஒரு விசயம் சொல்லவேணும்" என்று விட்டு ஓடிவிட்டேன் அவர் என்னையே ஆச்சரியமாய் பார்த்தபடிபோய்விட்டார்.

வில்லுப்பாட்டு முடிந்திருந்தது நேரம் பன்னிரண்டை தொட்டுக்கொண்டிருந்தது. அடுத்ததாய் சின்னமேளம் தொடங்க ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.கோயிலடியில் மிச்சம் மீதமிருந்த பெண்களும் சின்ன பெடியள்கூட வீடுகளிற்கு போகத் தொடங்கியிருந்தனர்.கோயில் நிருவாகத்திலையிருந்த பெருசு ஒண்டு யாராவது சின்னப் பிள்ளையள்.இளம் பெண்கள் இருக்கினமோ எண்டு கவனித்து அவையளை வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.பெரும்பாலும் வயதான ஆண்களும் ஆண்டு அனுபவிச்சு முடிஞ்ச கிழவியளும்தான் மிச்சம்.மலரக்காவும் பக்கத்து வீட்டு மனிசியும் போவதற்கு தயாரானார்கள். மலரக்கா அவரிடம் ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு வடக்கு வீதியில் என்னைப்பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரருகில் போய்

சைக்கிள்ளை ஏறுங்கோ.

ஆரும் கண்டாலும் எதுக்கு .முதல் வாங்கிக் கட்டினது காணாதோ.

எல்லாரும் சின்னமேளம் பாக்க குந்திக்கொண்டிருக்கினம் கெதியாய் ஏறுங்கோ

ஏதோ கதைக்கவேணும் எண்டுபோட்டு இப்ப சைக்கிள்ளை ஏறச்சொல்லுறாய்.

அதை சொல்லுறதுக்குத்தான் ஏறச்சொல்லுறன்.

அவர் கையை பிடித்து இழுத்து சைக்கிளில் ஏத்தியபடி சைக்கிளை மிதித்தேன். சின்னமேளம் தொடங்கிவிட்டிருந்தது ஒலிபெருக்கியில்....

ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ

ஓ… ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு

அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்

மனதில் அற்புதமே என்று

மகிழ்ந்து விற்பனை செய்யாதே

மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி

இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே

பெரும் ஞானியைப் போலே நினைந்து

வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே வா

பராசக்தி பாடல் போய்க்கொண்டிருந்தபொழுதே மலரக்கா வீட்டு ஒழுங்கைக்குள் இருந்த புளியமரத்தடிக்கு வந்துவிட்டேன்.ஒரே கும்மிருட்டாய் இருந்தது சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினேம். ஒருவருக்கொருவர் அருகருகே நின்றாலும் நிழலாய்தான் தெரிந்தது.

என்னத்தை சொல்லப்போறாய் அதுவும் புளியமரத்துக்குக் கீழை கும்மிருட்டிலை வைச்சோ உனக்கு சொல்லவேணும்.பாம்பு கீம்பு வந்து கொத்தப் போகுது

என்றபடி மலரக்கா ரோச்வெளிச்சத்தை அடிச்சு நிலத்தை பாத்திட்டு என்னை நோக்கி வெளிச்சத்தை அடிச்சார்.அவர் கையிலிருந்த ரோச்சை பறித்து நிற்பாட்டி விட்டு

மலரக்கா நான் உங்களை லவ் பண்ணுறன்.

கொல்லென்று சிரித் தார் இருட்டில் அவரது முகபாவத்தை பார்க்கமுடியவிலை.

சரி சரி சைக்கிளை எடு போவம்.

மலரக்காவை இறுக்க கட்டிப் பிடித்தேன்

பகிடியில்லை மலரக்கா சத்தியமா. பிள்ளையாரான அம்மாளான உங்களை லவ் பண்ணுறன்.மாட்டன் எண்டு மட்டும் சொல்லிடாதேங்கோ.

என்னுடைய பிடியை பிரித்தெடுத்தவர் அந்த இருட்டிலும் குறி தப்பாமல் என் கன்னத்தில் பளாரெண்டு அவரது கை இறங்கியது.

டேய் உனக்கென்ன விசரா.என்ன கதைக்கிறாய். நான் ஏதோ சின்னப்பெடியன் எண்டு நினைச்சால்.நீ பெரிய...

நான் சின்னப் பெடியன் இல்லை..இல்லை..இல்லை..

சரி ஆனால் நான் அப்பிடியெல்லாம் நினைச்சு உன்னோடை பழகேல்லையடா.

அப்ப அண்டைக்கு உங்கடை கதையெல்லாம் சொன்னது என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சது.கொஞ்சினது.

எனக்கொரு தம்பி மாதிரி நினைச்சுத்தான்ரா அதெல்லாம் சொன்னான் ஏதோ என்ரை ஏலாத்தன்மை கட்டிப்பிடிச்சன்.

அதெல்லாம் எனக்கு தெரியாது.....

சரி நீ பெரிய பெடியன் .நான் உன்னோடை வாறன்.என்னை வைச்சு காப்பாத்துவியா? உனக்கு வருமானம் இருக்கா வேலை இருக்கா?

என்னட்டை 150 ருபாய் இருக்கு..

டேய் லூசு மாதிரி கதைக்காதை உன்ரை 150 ருபாயிலை ஒருகிழைமை தின்னலாம் பிறகு.என்ன செய்யிறது

எங்கையாவது ஓடிப்போகலாம்.நான் ஏதாவது வேலை செய்வன்.

எங்கை ஓடுறது??உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?? ஓடிப்போற இடத்திலையும் வயித்தை கழுவ நான் ஒரு சங்கக்கடை மனேச்சரைத்தான் பிடிக்கவேணும்.எங்கை ரோச்லைற்ரை கொண்டுவா

அழுதபடி கோவத்தில் ரோச்லைற்றை பத்தைக்குள் வீசி எறிந்துவிட்டு

அதெல்லாம் எனக்குத் தெரியாது.நான் உங்களை லவ் பண்ணுறன். நீங்கள் இல்லையெண்டால் நான் தற்கொலை செய்திடுவன்.

மீண்டும் கட்டிப்பிடிக்கப் போன எனக்கு அதே கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது

சரி வா....

அவரின்ரை வீட்டுக்கு என்ரை கையை பிடிச்சு இழுத்துக்கொண்டு போனார்.

என்ரை சைக்கிள்..

அது கிடக்கட்டும்வா ..

வீட்டிற்கு இழுத்துப் போனவர் முத்தத்தில் கிடந்த சாக்கு கட்டிலில் வேகமாய் என்னை தள்ளி என்ரை சேட்டை இழுத்துக் கழட்டினார்.தன்ரை சட்டையையும் உள் சட்டையையும் கழட்டியவர் என்னுடைய தலையை மார்போடு அணைத்தார்.

இந்தா இதுதானே உனக்கு வேணும்.இதுதான் உன்ரை காதல்.இதுக்குத்தானே தற்கொலை செய்யப் போறன்எண்டனி.

அவரின் வெறும் மார்பு என்முகத்தில் பட்டதும் நெருப்பு சட்டி பட்டது போலை இருந்தது.விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தேன். மலரக்காவும் அழுதார்.சில நிமிட அழுகைளின் பின்னர் மெளனம்.

அய்யோ இல்லை மலரக்கா இதுக்காக லவ் பண்ணேல்லை..

அப்ப எதுக்கு??

தெரியேல்லை....

என்னை நெற்றியில் முத்தமிட்டவர்.சாக்குக்கட்டிலில் சரிந்து படுத்தக்கொண்டு என்னையும் இழுத்து அணைத்துக்கொண்டார்.இருவருமே ஆள் பாதி ஆடை பாதி.எனக்குள் எந்த உணர்ச்சியும் இல்லை காற்சட்டை விறைக்கவில்லை...இருவருமே ஆடாமல் அசையாமல் ஆகாயத்தை பார்த்தபடி படுத்திருந்தோம்.சிறிது நேரத்து மொனத்தை அவரே கலைத்தார்.

எனக்கு தெரியும். ..நீ நல்ல பெடியன்.இப்பிடியெல்லாம் குறுக்காலை போற மாதிரி யோசிக்காமல் நல்லபடியாய் படி பெரியாளாய் வா உனக்கு நல்ல மனிசி கிடைப்பா.சரிதானே.

ம்.........

எனி தற்கொலை அது இதெண்டு சொல்லுவியா??

இல்லை...

இப்பவும் என்னை லவ் பண்ணுறியா???

...........................................................................மொளனம்.

அவரும் எழும்பி சட்டையை போட்டபடி

சரி எழும்பு சேட்டை போடு....

ம்......................

புறப்படத்தயாரானேன்.

டேய் கிட்டவா

ம்.........

என்ரை கையை தனது தலையில் எடுத்து வைத்தவர்.

போகமுதல் எனக்கு இரண்டு சத்தியம் பண்ணிட்டுபோ..

என்னது.....

உனக்கு உண்மையிலையே என்னிலை அன்பு இருந்தால்.நீ தற்கொலை செய்யிறணெண்டு போகக்கூடாது.அடுத்தது இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது. என்னை எங்கை கண்டாலும் கதைக்கவும்கூடாது நானும் கதைக்கமாட்டன்.சத்தியம் பண்ணு.

சத்தியம்.....

நான் சொன்னதை திருப்பி சொல்லி சத்தியம் பண்ணு....

அவர் சொன்னவைகனை திரும்பச்சொல்லி சத்தியம் பண்ணிவிட்டுபுளியமரத்தடிக்கு வந்து சைக்கிளை எடுத்தன் ஆனாலும் வீட்டை போக மனம் இல்லை அங்கையே புளியமரத்து வேரிலை கொஞ்சநேரம் இருந்தன். புத்தனுக்கு போதி மரம் எண்டு படிச்சிருக்கிறன் எனக்கு புளியமரம்.

அதுக்கு பிறகு அம்மம்மா வீட்டிலை இருக்கப் பிடிக்காமல் வீட்டிற்கே வந்து விட்டிருந்தேன். மலரக்காவை சந்திக்கவேயில்லை. அவரது செய்திகள் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும்.

மொட்டை மூத்தி செத்துப்போச்சாம்...

மனேச்சருக்கும் மலரக்காவுக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம்.

மலரக்கவை விட்டிட்டு மனேச்சரும் கலியாணம் கட்டி வேறை ஊருக்கு போட்டாராம்.

மலரக்காவின்ரை சகோதரங்கள் வெளிநாடு வந்து கலியாணம் கட்டிட்டினமாம்.

மலரக்காவின்ரை பிள்ளையளையும் மலரக்காவையும் சகோதரங்கள் வெளிநாட்டுக்கு கூப்பிட்டவையாம் பிள்ளையள் இரண்டும் வந்திட்டுதாம்.மலரக்கா தாய்லாந்திலை பிடிபட்டு ஜெயில்லையாம்.

ஜெர்மனியிலையிருந்து போன ஒரு ஏஜென்சி மலரக்காவை ஜெயில்லை இருந்து வெளியாலை எடுத்து ஜெர்மனிக்கு கொண்டு வந்திட்டாராம்.மலரக்கா இப்ப அந்த ஏஜென்சிகாரனோடைதானாம். ஒருபிள்ளையுமாம்.அவர் ஏற்கனவே கலியாணம் ஆனவராம்.

ஏஜென்சிக்காரன் வேறையொரு பெட்டையோடை தொடர்பாம் அதாலை மலரக்கா பிள்ளையோடை பிரான்சுக்கு வந்திட்டாவாம்

மலரக்காவின்ரை தங்கச்சிக்காரி ஒண்டுக்கு பிள்ளையள் இல்லாததாலை கடைசி பிள்ளையை அவா தத்தெடுத்திட்டாவாம்.மலரக்கா பாரிஸ் 12 லை தனியா றூமெடுத்து தங்கியிருக்கிறாவாம்.

மலரக்காவோடை சகோதரங்கள் பிள்ளையளும் கதைக்கிறேல்லையாம் இப்ப கோயில்லைதானாம் அவாவின்ரை சீவியம் போகுது.

அதிவேக இரயில் ஒரு நிறுத்தத்தில் நின்றது பயணிகள் பலர் ஏறவும் இறங்கவும் செய்தனர். நான் கண்ணை விழித்துப்பார்த்தேன்.மனைவியும் குட்டித் தூக்கதிலிருந்து எழுந்துவிட்டாள்.மகள் நல்ல நித்திரை ..

யாரவா..

எவா கோயில்லை கண்டவாவோ.??

ஓம் அவாதான்..

எங்கடை ஊர்க்காரி..

சொந்தமே??

இல்லை நல்ல பழக்கம்.

கோயில்லைதான் இருக்கிறனெண்டு ஏன் சொன்னவா குடும்பம் பிள்ளையள் இல்லையோ?

புருசன் இல்லை.பிள்ளையள் சகோதரங்கள் இஞ்சைதான் இருக்கினம். ஆனால் ஒருத்தரும் அவாவை அடுக்கிறேல்லை.

பிள்ளையளுமா??

ஓமாம்..

ஏன் அப்பிடி??

அது வந்து..அவாக்கு வாழ்க்கை சரியாய் அமையேல்லை அதாலை அவாவும் ஊரிலை கொஞ்சம் அப்பிடி இப்பிடி..ஆளும் நல்ல வடிவெண்டபடியாலை உண்மையை விட பல பொய்வதந்தியள்தான் உலாவினது.

பாத்தனான் இப்பவே நல்ல வடிவாய்தான் இருக்கிறா.அந்தநேரம் இளமையிலை இன்னும் வடிவாய் இருந்திருப்பா. நீங்களும் பின்னாலை திரிஞ்சனியளோ.

கொஞ்சம் பதறியவனாய் ""சேச்சே அப்பிடியெல்லாம் இல்லை "" கடவுள் உள்ள கல்லிலேயே பெரிய கூழாங்கல்லாய் தேடியெடுத்து எனது பெயரை எழுதி குடுவையில் போடும் சத்தம் கேட்டது.

அப்ப எதுக்கு வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்கொடுத்தனீங்கள்.

அன்று நள்ளிரவில் அதே புளியமரத்தின் கீழே வைத்து அதே அறை விழுந்ததுபோல் ஒரு பிரமை.கன்னத்தை மெதுவாய் தடவியபடி. "அதை கவனிச்சிட்டியா.??"

சரி நடந்ததை விளக்கமாய் சொல்லுறன்".அப்ப எனக்கு பதின்நாலு வயசு என்று தொடங்கிய நான். அனைத்தையும் விபரமாய் சொல்லி.அவா கேட்டமாதிரியே இனிமேல் உங்களை எங்கை கண்டாலும் கதைக்கமாட்டன் என்று மலரக்கா தலையில் அடித்து சத்தியம் பண்ணிட்டன்.இண்டைக்கு ஏதோ தற்செயலாய் சந்திச்சிட்டன். சிலநேரம் மலரக்கா என்னட்டை சத்தியம் வாங்கினதையே மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கேல்லை அதுதான் வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்குடுத்தனான். என்ரை சத்தியத்தை நான் காப்பாத்திட்டன்.

ஊகும்....இவர் பெரிய சத்தியவான்.காப்பத்திட்டாராம். இன்னும் இப்பிடி எத்தினை கதை இருக்கோ??..மனைவியிடமிருந்து ஒரு பெருமூச்சு ஒன்று வெளியானது.

நாங்கள் வசிக்கும் நகரத்திற்கு வந்துவிட்டதாக இரயிலில் அறிவித்தபடி வேகம் குறையத் தொடங்கியது. மகளை தட்டிஎழுப்பினேன்.

யாவும் கற்பனையே...............முத்திட்டுது :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனையா? :rolleyes: நம்பமுடியவில்லை.. இல்லை.. இல்லை.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முத்திட்டுது

நல்லாய் முத்திட்டது. :icon_mrgreen: :icon_mrgreen: :lol: :lol: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வன்னியாலை வரேக்குள்ளை மரைவத்தல் பண்டியிறைச்சி தொங்குமான் இறைச்சியெண்டு கொண்டுவந்து ஊருக்குள்ளை விக்கிறவர்.

குரங்கு இறைச்சியை தான்.... தொங்குமான் இறைச்சி என்று சொல்லி விற்கிறவர்கள் என்று நினைக்கின்றேன்.

பாத்தனான் இப்பவே நல்ல வடிவாய்தான் இருக்கிறா.அந்தநேரம் இளமையிலை இன்னும் வடிவாய் இருந்திருப்பா. நீங்களும் பின்னாலை திரிஞ்சனியளோ.

கொஞ்சம் பதறியவனாய் ""சேச்சே அப்பிடியெல்லாம் இல்லை "" கடவுள் உள்ள கல்லிலேயே பெரிய கூழாங்கல்லாய் தேடியெடுத்து எனது பெயரை எழுதி குடுவையில் போடும் சத்தம் கேட்டது.

சாத்திரியாற்றை இனிப்புப் போத்திலுக்குள்ளை, கனக்க கூழாங்கல் நிரம்பியிருக்கும். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜய்யோ....................கற்பனையா?

சீ சீ இதெல்லாம் கற்பனையில வந்த மாதிரி தெரியல்லியே.............மேபி......அப்பிடி ஒருவா அங்க இருந்திருக்கலாம்...நீங்களும் ஆசை பட்டிருக்கலாம்...அத வைச்சு மெடிக்கல்ல இருக்கேக்க நினைச்சு பாத்து பெருமூச்சு விட்டு எழுதி இருக்கலாம்..........

இப்ப இந்த சாத்ஸ அண்ணாவ நம்பி...பக்கத்து வீட்டு ஆன்டிய சைட் அடிச்சனான்....டீச்சர சைட் அடிச்சனாhன்....நாலு தெரு தள்ளி ஒரு அக்காவ காதலிச்சனாhன் என்டு கதை சொன்னவை தான் மாட்டுபட்டு போச்சினம்....

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, நீங்கள் எழுதுவதால் யாரும் இங்கு திருத்த போவதில்லை, வாசிப்பவர்களுக்கு அந்த நேர கிளுகிளுப்பும் & அனுதாபமும் மட்டுமே தோன்றும், மலரக்கா இதை விரும்பி ஏற்க்கவில்லை, அவாவினது அப்பா அவாவை படிப்பித்து ஒரு நல்ல நிலையில் விட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது, இப்படி எத்தனையே பெண்களை பெற்றவர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

எங்கட ஊரில் கிளியக்கா என்று ஒரு ஆள் இருந்தவா அவாவின் regular customers ஜெகன் & குருதேவா (EPRLF)

எங்கட சனம் உடல் பசிக்காக அலையும் பணம் படைத்த பெண்களை பற்றி கதைப்பது என்ன, மூச்சே விடமாட்டார்கள், ஒன்று பயம & வீசி எறியும் எலும்புத் துண்டுக்காக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனையா? :rolleyes: நம்பமுடியவில்லை.. இல்லை.. இல்லை.. :icon_mrgreen:

கொஞ்சம் கற்பனை சரியா :wub:

சாத்திரி அண்ணா, நீங்கள் எழுதுவதால் யாரும் இங்கு திருத்த போவதில்லை, வாசிப்பவர்களுக்கு அந்த நேர கிளுகிளுப்பும் & அனுதாபமும் மட்டுமே தோன்றும், மலரக்கா இதை விரும்பி ஏற்க்கவில்லை, அவாவினது அப்பா அவாவை படிப்பித்து ஒரு நல்ல நிலையில் விட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது, இப்படி எத்தனையே பெண்களை பெற்றவர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

எங்கட ஊரில் கிளியக்கா என்று ஒரு ஆள் இருந்தவா அவாவின் regular customers ஜெகன் & குருதேவா (EPRLF)

எங்கட சனம் உடல் பசிக்காக அலையும் பணம் படைத்த பெண்களை பற்றி கதைப்பது என்ன, மூச்சே விடமாட்டார்கள், ஒன்று பயம & வீசி எறியும் எலும்புத் துண்டுக்காக

என்னது திருத்திறதா நானா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, கதையின் முக்கிய கட்டம் எழுதிய விதம் கன tamil sex கதைகள் google பண்ணி படிச்ச மாதிரி இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்த சாத்ஸ அண்ணாவ நம்பி...பக்கத்து வீட்டு ஆன்டிய சைட் அடிச்சனான்....டீச்சர சைட் அடிச்சனாhன்....நாலு தெரு தள்ளி ஒரு அக்காவ காதலிச்சனாhன் என்டு கதை சொன்னவை தான் மாட்டுபட்டு போச்சினம்....

என்ன சுண்டல், கதையோட கதையா ஆப்படிக்கிற மாதிரி இருக்கே :unsure: நான் மட்டுமில்ல எங்கட வகுப்பில இருந்த கன பேருக்கு மியூசிக் டீச்சரில ஒரு "இது" இருந்திச்சு :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, கதையின் முக்கிய கட்டம் எழுதிய விதம் கன tamil sex கதைகள் google பண்ணி படிச்ச மாதிரி இருக்கு,

அட நீங்களும் படிச்சிட்டீங்களா? :oகதையின் முக்கிய கட்டம் எண்டு எதை கருதறீங்கள்.கன்னத்தில் அறை வாங்கியதையா?? :mellow:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் இறுதியை படியுங்கள் பிறகு இப்படியான சந்தேகமே வராது

கதையின்ரை முடிவைப்பாத்திட்டு கனபேர் தலையிலை தாங்களே அடிக்கிற முடிவு வரப்போகுது. :lol:

இனிமேல் சாத்துவின் கதைக்கு கருத்தெழுத முதல் ஒண்டுக்கு நூறுமுறை யோசிக்கிற நிலமைதான் வரப்போகுது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை சாத்திரியின் முடிவு :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையின் முக்கிய கட்டம் எண்டு எதை கருதறீங்கள் // முக்கிய கட்டமெண்டிறது உச்சக் கட்டம்தானே..

சிறித்தம்பி என்றொரு கதையை மலரக்கா எழுதினால் எப்பிடியிருக்கும் என்று யோசிக்கிறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முக்கிய கட்டம் எண்டு எதை கருதறீங்கள் // முக்கிய கட்டமெண்டிறது உச்சக் கட்டம்தானே..

சிறித்தம்பி என்றொரு கதையை மலரக்கா எழுதினால் எப்பிடியிருக்கும் என்று யோசிக்கிறன்

சிறித்தம்பி எண்டு மலரக்கா கதை எழுதினால்.கீழை ..யாவும் கற்பனை எண்டு போடமாட்டா.உண்மைச்சம்பவம் எண்டுதான் போடுவா :lol:

சாத்திரியின் கதை நன்றாக உள்ளது. :D

அதிகமானவர்களுக்குப் பின்னாலும் இப்படிப்பட்ட பதின்ம வயது அனுபவங்கள் மறைந்திருக்கும்.

பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களால் இப்படிச் சீரழிந்த மலரக்காக்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜய்யோ....................கற்பனையா?

சீ சீ இதெல்லாம் கற்பனையில வந்த மாதிரி தெரியல்லியே.............மேபி......அப்பிடி ஒருவா அங்க இருந்திருக்கலாம்...நீங்களும் ஆசை பட்டிருக்கலாம்...அத வைச்சு மெடிக்கல்ல இருக்கேக்க நினைச்சு பாத்து பெருமூச்சு விட்டு எழுதி இருக்கலாம்..........

இப்ப இந்த சாத்ஸ அண்ணாவ நம்பி...பக்கத்து வீட்டு ஆன்டிய சைட் அடிச்சனான்....டீச்சர சைட் அடிச்சனாhன்....நாலு தெரு தள்ளி ஒரு அக்காவ காதலிச்சனாhன் என்டு கதை சொன்னவை தான் மாட்டுபட்டு போச்சினம்....

சுண்டல்! இதற்காகத்தான் நான் சாத்திரியண்ணை தன்ர வழமையான பாணியில் கிண்டலும் சுவாரசியமாகவும் கதையை கொண்டு போய்க்கொண்டிருக்க தொடர்ந்து அங்கங்கு கொடுப்புக்குள் சிரிச்சு ரசிச்சவாறு வாசித்துக்கொண்டுபோயும் உவர் ஏதாவது ஏடாகூடமாய் மாட்டிவிடுவார் :icon_idea: எண்டுதான் கடைசியில் கருத்தெழுதுவம் எண்டு வெயிற்பண்ணினனான்.... :D .

சாத்திரி அண்ணை கதையை ரசித்துப்படித்தேன்..கடைசியில் யாவும் கற்பனை எண்டு போட்டது ஒரு தற்பாதுகாப்புக்குத்தான :icon_idea:...?

ஜய்யோ....................கற்பனையா?

இப்ப இந்த சாத்ஸ அண்ணாவ நம்பி...பக்கத்து வீட்டு ஆன்டிய சைட் அடிச்சனான்....டீச்சர சைட் அடிச்சனாhன்....நாலு தெரு தள்ளி ஒரு அக்காவ காதலிச்சனாhன் என்டு கதை சொன்னவை தான் மாட்டுபட்டு போச்சினம்....

:D

எனக்கு இந்தக் கதையில் சாத்திரியாரின் அம்மம்மாவை நினத்துத் தான் சிரிப்பு :lol:

இனிமேல் சாத்துவின் கதைக்கு கருத்தெழுத முதல் ஒண்டுக்கு நூறுமுறை யோசிக்கிற நிலமைதான் வரப்போகுது. :icon_idea:

உண்மை தான் சாந்தியாரே :lol:

சிறித்தம்பி என்றொரு கதையை மலரக்கா எழுதினால் எப்பிடியிருக்கும் என்று யோசிக்கிறன்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா மிகவும் அண்மையில் தான் மோகமுள் பட‌ம் பார்த்திருக்கார் என்று இந்தக் கதையை வாசித்த எனது நண்பர் சொன்னார்...படத்தை பார்த்து விட்டு கற்பனையில் உணர்ச்சிகளை அட‌க்க முடியாமல் தன்னைப் பாத்திரப் படைப்பாய் போட்டு இதை ஒரு கதையாக்கி இருக்கார் என்று அவர் சொன்னார்.

ஆனால் என்ட‌ கருத்து என்ட‌ என்டால் சின்ன வயசில அவருடைய ஊரிலோ அல்லது அவரை சுற்றி இருந்த ஊரிலேயோ ஒரு அழகான அக்கா இருந்திருக்க கூடும்...மனேஜரோடு படுத்த அக்கா தன்னோடும் படுப்பார் என்று கற்பனையில் கணக்கு பண்ணி அந்த அக்காவிட‌ம் கேட்டு செருப்படியும் வாங்கி இருக்க கூடும் ஆனால் இதை வந்து யாழில் எழுதும் போது முடிவை மாத்தி மோகமுள் பட‌ம் கணக்கா முடிச்சிட்டார் :lol::D:icon_idea:

கதையின் ஆரம்பத்தில்...

img_7539.jpg

...

யாவும் கற்பனையே...............முத்திட்டுது :lol: :lol:

கதையின் முடிவில்...

Man-carrying-rock.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பத்தில்...

img_7539.jpg

கதையின் முடிவில்...

Man-carrying-rock.jpg

குட்டி சும்மாசொல்லக்கூடாது அசத்தட்டீங்கள்.. ஆனால் நான் கதையை எழுதத் தொடங்கிய பொழுதே நினைத்தபோலவே முடிச்சிட்டன். அதன் பெறுபேறுகள் நினைத்தது போலவே இருக்கின்றது. அனைவரிற்கும் நன்றிகள். மிக விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். அடுத்ததை எழுதத் தொடங்கிவிட்டேன். நன்றிகள்.அனைவரிற்கும்.

என்ன இந்தப் பக்கம் நெடுக்கரைக் கானோம் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.