Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

பலரையும், இணைத்துச் செல்வது தான்... ப.மே.க. வின் இலட்சியம். தப்பிலி. அதில் என்ன தப்பு? :D:lol::rolleyes::icon_idea:

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ர தலைவர் எங்களை அம்போ என்டு விட்டுப்போட்டார் :rolleyes: .மேல் உள்ளது தான் எனது கொள்கை.எந்தக்கட்ச்சி என் கொள்கைக்கு சரி வருமோ அங்கை இணையலாம் எற்று இருக்கிறேன் :lol: :lol:

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

ஐயோ... ஆளை விடுங்க தப்பிலி.

ஏன்... இந்தக் கொலை வெறி? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்

முதலில் நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் :unsure:

யார் உங்கள் தலைவர் விபரம் தரமுடியுமா? :unsure:

பின்னர் உங்கள் கொள்கையைப் பற்றியும்

உங்களை இணைத்துக் கொள்வதைப் பற்றியும்

மன்னாதி மன்னர்கள் சபை (யா ம ச வின் உயர்மட்டக்குழு ) :lol: :lol:

முடிவெடுக்கும்

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

Edited by வாத்தியார்

ப.மே.க. வின் இலட்சியம்

Edited by BLUE BIRD

Dell-Mobile-Precision-M6400-by-cheap-laptops-8.jpgப.மே.க அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

nec-kimi-kiss-laptops.jpg

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

ஆனால் சில நண்பர்கள் தெரிந்தே வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை

களத்தில் உட்புகுத்துகின்றனர்.இவர்களை மன்னிக்க முடியாது

அவர்களைத் திருத்துவதே எங்கள் முக்கியமான கொள்கை. :lol::icon_idea:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

வாத்து மன்னரே!,

எமது 6 அம்சக் கொள்கையில் 4வது அம்சமாக வரும் கொள்கையானது என்ன என்பதை நீங்கள் மறுபடியும் உங்கள் பூதவில்லையை அணிந்து பார்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

நாம் என்ன சொல்லியிருக்கிறோம் அதாவது

ண,ன,ந

ர,ற

ல,ள,ழகரங்களின் பிழையான பிரயோகங்களால் கருத்து மாறிப்போவதை தடுப்போம் என்பதே..

ஏனென்றால் அதிகமான கருத்துக்களத்தோழர்களுக்கு இத்தகைய குழப்பம் அதிகம் இருக்கிறது.

மன்னர் பெருமக்களே எப்போது பார்த்தாலும் "படிக்காத மேதைகள் கழகம்" என்ன செய்கிறது என்று வேவு பார்ப்பதே தொழிலாகக் கொண்டிருக்கிறீர்களே கருத்துக்கள மக்கள் பற்றி உங்களுக்கு யோசிக்கத் தோன்றாதா?

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா! ப. மே. க வினர் பாம்புகளை விட்டுட்டு பாவைகளை வைத்து பள்ளிப் பாடம் படிக்கப் போகினம்! இனி அவர்களின் பிரச்சாரம் மந்த கதியில்தான் நகரும்.

மன்னர்களே சந்தர்ப்பத்தை தவற விடாமல் கோடை இடியென மேடைகளில் முழங்குங்கள்!

வாக்காளர்களே , வேட்பாளர்களே எளிதாக மன்னராகலாம் எம்முடன் இணைந்து செங்கோல் ஏந்துங்கள்.

நாங்கள் வாக்காளர்களுக்கு வலை வீசுவதில்லை , வேட்பாளரை விலை பேசுவதில்லை!

எமது கோட்டைக்குள் காலடி வைத்தவுடன் நீங்களும் ஒரு மன்னரே!

அப்புறமாக நின்று நோட்டம் இடுவோரே , இப்புறம் வந்து இளைப்பாறுங்கள்!

தொலைவில் நிக்கும் தோழியரே , விரைவில் வந்து முடி சூடிடுவீர்!

வோட்டுப் போடு , பாத்துப் போடு!

எங்கள் ஒட்டு யாழ் மன்னர்கள் சபைக்கே!

படிக்காத மேதைகள் எல்லோரும் நல்லவர்கள், வல்லவர்கள், உழைப்பாளிகள். கவிஞர்கள், கலைஞர்கள் , கவிதாயினிகள்.

அதனால்தான் சொல்கிறோம் , அவர்களை களமாளு மன்றத்துக்கு அனுப்பி சோம்பேறிகளாக்கி விடாதீர்கள்.

அந்தப் பொக்கிசங்களை பாதுகாக்கும் கடப்பாடு மகா மன்னர் வாத்தியாரின் தலையாய கடமையாகும்.

அதனால் எங்கள் தங்கம், ஆயிரத்தில் ஒருவன் , வாத்தியாரை மன்றத்துக்கு அனுப்பிடுவோம் திரண்டு வாரீர்!!

அந்தக் கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒளிவிளக்காய் வீசும் ஆனந்தஜோதியில் படகோட்டிகள் திசை மாறாமல் கரை சேர்ந்த்திடுவார்!என் அண்ணன் காஞ்சித் தலைவன் உங்களுக்காய் புதிய பூமி காட்டும் தனிப் பிறவி. நம்நாட்டை கண்ணிமை போல் காக்கும் காவல் காரன்.

மக்களின் மனத்தைக் கவர்ந்த மலைக்கள்ளன். அடிமைப் பெண்களின் விலங்கொடித்திடும் ஆயிரத்தி ஒருவன்.உலகம் சுற்றும் வாலிபன் எம் மன்னன் குடியிருந்த கோயிலாம் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்து நினைத்ததை முடிப்பவன்.

குழந்தைகளைத் திருடாதே என்று சொல்லி நான் என் பிறந்தேன் என்று விளக்கம் சொல்லி வீறு கொண்டெழுந்த நாடோடி மன்னன். அந்த நாடோடி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து , பணம் படைத்தவனாய் வாழும் குடும்பத் தலைவன்.

நேற்று இன்று நாளை என்று இல்லாமல் என்றும் நீதிக்குப் பின் பாசம் வழி வாழும் பணத் தோட்டம்!

தெய்வத் தாய் பெற்ற பிள்ளை ஒரு தனிப் பிறவி! அந்தத் தேடிவந்த மாப்பிள்ளையைத் தேர்ந் தெடுத்திடுவீர் களமாமக்களே!

நோ சுவி பிளீஸ் அழக்கூடாது, கொன்ரோல் யுவர் செல்வ்! :)

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

...

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

யாழ்கருத்துக்களமக்கள் குரலுக்கு ப.மே. கழகம் என்றும் மதிப்பளிக்கும் குட்டி

உங்கள் கருத்து எமது கழகத்தால் உள்வாங்கப்படுகிறது. உங்கள் விருப்பப்படி அத்தகைய "ஐ" "ஜ" குழப்பங்கள் நீக்கப்படும் அதற்கான செயற்பாட்டை கழகம் கையில் எடுத்துக் கொள்கிறது.

கழகத்தோழர்களே

கருத்தாளர் குட்டி அவர்கள் கூறியபடி இக்குழப்பத்தை எங்கு கண்டாலும் அதனை நிர்வாகத்தினருக்குச் சுட்டிக்காட்டும்படி வேண்டப்படுகிறீர்கள். :rolleyes:

இன்றிலிருந்து தமிழில் இருக்கும் "ய" வை யாராவது "ஜ" என்று எழுதினால் அங்கு எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாகி திருத்தம் செய்யும்படி கேட்பார்கள்

அதேபோல் தமிழ் எழுத்தான "ச" வை யாராவது "ஸ" என்றோ "ஷ" என்றோ உபயோகித்தாலும் அவ்விடத்தில் எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாவார்கள். ...

திருத்தம் செய்யுமாறு பதிவை இட்டவர் கேட்கப்படுவார்

இதுவரை கடந்த காலத்தில் என்னுடைய பதிவுகள் உட்பட பல தோழர்கள் இத்தகைய தமிழ் அல்லாத எழுத்தை உபயோகித்தோம் இதற்காக நானும் எமது கழகத்தோழர்களும் இவ்விடத்தில் பொதுமன்னிப்பு கேட்டு மீண்டும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான யாழ்கள வாக்காளப் பெருமக்களே..! :wub:

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது..! :rolleyes:

அடுத்த ஓராண்டுக்கு ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள்..! :huh:

இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை..! :unsure:

பாம்பு, ஆட்டக்காரர் என்று வித்தை காட்டும் பமேகவுக்கா உங்கள் வாக்கு?

கூடவே கூடாது.. :lol:

தலைவரை எங்கே என்று தேடிக்கொண்டிருக்கும் ஒற்றைத்தொண்டன் கட்சி ஏமுகவுக்கா உங்கள் வாக்கு?

ஆகவே ஆகாது.. :D

வாவா என்று அழைத்து பாட்டுப் போட்டு கட்சி வளர்த்துவிட்டு காணாமலே போய்விட்ட வாவா கட்சிக்கா உங்கள் வாக்கு? நெவர்..! :lol:

அல்லது காணாமல் போன காதலர் கச்சிக்கா.. ச்சே கட்சிக்கா?

வேண்டவே வேண்டாம்.. :icon_mrgreen:

உங்களுக்கு இருப்பது ஒரே தெரிவு..! அதுவும் நல்லதொரு தெரிவு.. :rolleyes:

போடுங்கம்மா ஓட்டு..

கேடயம் சின்னத்தைப் பார்த்து.. :lol:

swordaxe.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.கட்சி சார்பில்

களத்தில் சிறப்புற எழுதுவதற்கு நல்ல கீ போட் மற்றும் மௌவுசும் அனைத்து வாக்காளருக்கும் வழங்கப்படும்.

LogitechG19Keyboard.jpg

habu.jpg

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்குவதால் வன்முறைகள் வெடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் தேர்தல் கண்காணிப்பகம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

170060-security_guard_dog.jpg

குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்..

சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா?

இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? :D

மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசுகிறார்கள். இதற்கு எல்லாம் பயந்தால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாது...

நான் ஒன்றும் மன்னர் சபையில் புலவர் போட்டிக்கு வரவில்லை ..

முடிந்தால் நேர்மையான பண்பான அரசியல் மோதலுக்கு வாருங்கள் இல்லையேல் தோல்வியை ஏற்றுக் கொண்டு தேர்தலில் இருந்து பின்வாங்கி ஓடுங்கள்........ <_< <_<

Edited by வடிவேலு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

Edited by nedukkalapoovan

திரு நள்ளாறு பிரபல சோதிடர் "கவிழ்த்தான் கெடுத்தான்" அவர்கள் சனிமாற்ற பலனின் படி ப. மே. க கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மற்றைய கட்சிகள் தங்களிருப்பிடத்தை இலங்கையில் வன்னி போன்றபகுதிக்கு மாற்றுவதன் மூலம் விமோசனம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இல்லையேல் அவர்கள் விசக்கடிக்கு ஆளாகி இரத்த வாந்தி எடுத்து விண்ணுலகுக்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

coldplay-christmas-lights.jpg

ப மே க வின் நத்தார் வாழ்த்துக்கள்!

யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்..

யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

நன்றி. :)

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

Edited by குண்டன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

ஆம் சுயாதீனமாக இயங்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த குற்றச்சாட்டுக்கள் எழும் போது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள்.. மக்கள் சபைக்கு அது பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அது சுயாதீனமாக இயங்கலாம். :lol::icon_idea:

யாப்புத் திருத்தத்தில் இப்படி இது வரையறுக்கப்பட்டுள்ளது:

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

hi bro:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hi bro:)

என்னம்மா தங்கச்சி. கூப்பிட்டீங்களோ. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது.

மன்னர் இசைக்கலைஞர் இதற்கானபணிகளை ஆரம்பித்திருக்கின்றார்என அறியமுடிகின்றது.விரைவில் ஆவன செய்வார்.

சுயாதின தேர்தல் ஆணையகம் சுயாதீன தேர்தல் கண்காணிபகத்தை கைபொம்மையாக வைக்க பார்க்கிறது.மக்களே,கட்சிகளே பொங்கிஎழுங்கள்

மக்கள் கவனதிற்கு!

தேர்தல் நேரத்தில் கட்சிகள் உங்களுக்கு சிரமம் தந்தால் எமக்கு அறியதாருங்கள்

கட்சிகள் முதுகின் பின்னால் ஒளிந்து நாங்கள் ரகசிய கண்காணிப்புகள் செய்வோம் என்று சொல்கிறோம் சுதேக இலகுவில் ஏமாந்து போகது என்பதையும் இப்போதே தெரிவிக்கிறோம் :icon_idea:

இப்படிக்கு

சு.தே.க

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.