Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடிகாரம் ஓடுமுன் ஓடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

clock.jpg

ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது

இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்கூடு ஒண்டு வரவேற்பறையிலை இருந்தது பாக்கிறதுக்கு ஒரு அலுமாரி மாதிரி இருக்கும். ஒரு ஆள்அளவு உயரம். மேலை மணிக்கூடு கீழை தோசைத்தட்டு மாதிரி ஒரு வட்டம் ஆடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அதுக்கு சாவி குடுக்கவேணும் நான் சின்னவயசிலை ஒரு கதிரை வைச்சு

ஏறித்தான் அதுக்கு சாவி குடுக்கிறனான். ஒவ்வொரு மணித்தியாலமும் அது அடிக்கிற சத்தம் கோயில் மணி அடிச்சமாதிரி இருக்கும். அதை முன்னேறி பாச்சல் நடவடிக்கை நேரம் சந்திரிக்கா அனுப்பின குரங்குகள் உடைச்சு போட்டுதுகள் எண்டு அம்மா கவலையோடை சொன்னா..

இஞ்சை வெளிநாட்டிலை பாத்தமெண்டால் கழிவறையிலை குளியலறையிலை படுக்கையறையிலை வரவேற்பறையிலை எல்லா இடமும் மணிக்கூடுதான். பத்தாததுக்கு கைத்தொலைபேசியிலை கணணியிலை பாக்கிற ரிவியிலை எண்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கும் காத்தாலை அலாரச்சத்தத்தோடை எழும்பி கழிவறைக்கு போறத்திலையிருந்து பல்லுத்தீட்டிறது குளிக்கிறது (இதுகள் செய்யாதவைக்கு பிரச்சனையில்லை ) உடுப்பு போடுறது எண்டு தொடங்கி வேலைக்குப் போய் வந்துஇரவு ரி.வி பாக்கிறது. குடும்ப காரர் எண்டால் பிள்ளையளோடை குடும்பத்தோடை மினக்கெடுறது. ஏன் கணவன் மனைவி உறவு கூட எல்லாத்தையுமே நேரம் பாத்துப் பாத்துத்தான் செய்யவேண்டியிருக்கும்.

ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந்த அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம்.

அனால் இந்த லண்டனிலை இருக்கிறவையள் போன பிறப்பிலை பாவம் செய்த பிறவியள். அதுகளிற்கு ஞாயிறும் நிம்மதியில்லை கிழைமையிலைஏழுநாளும் ஓட்டம்மதான். இப்பிடித்தான் ஒருக்கால் லண்டனிலை உள்ள என்ரை சினேகிதன் ஒருத்தனுக்கு பிறந்தநாள் அவனுக்கு வாழ்த்தும் சொல்லிட்டு. கொஞ்சம் ஊர்கதையளும் கதைப்பம் எண்டு இரவு போனடிச்சன் . போனை எடுத்தவன் மச்சான் ஓடிக்கொண்டிருக்கிறன் கொஞ்சம் பொறுத்து எடு எண்டான். கார் ஓடிக்கொண்டிருக்கிறான் எண்டு விளங்கிச்சிது. கொஞ்சத்தாலை திருப்ப அடிச்சன் அவனின்ரை மனிசி எடுத்து அவர்இப்பதான் வந்தவர் குளிக்கிறார் கொஞ்சத்தாலை அடியுங்கோ எண்டா. திரும்ப ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு எடுத்தன். அவன் போனை எடுத்து மச்சான் என்ன அலு....வ்......வ்.....வ்...வல் எண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எண்டு விளங்கிச்சுது அவசரமில்லை ஆறுதலாய் அடிக்கிறன் எண்டிட்டு நான் நித்திரையாய் போயிட்டன்.

பிறகு அடுத்தநாள் அவனுக்கு வாழ்த்தாவது எஸ். எம். எஸ் அனுப்புவம் எண்டு நினைச்சு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எண்டதை முழுசா எழுத எனக்கு நேரமில்லை.வேலைக்கு போற நேரம் கார் சிவப்பு சிக்னல்லை நிக்கிற நேரமாய் பாத்து அவசரமாய் W...U... H....B.....DAY எண்டு வாழ்த்து சொல்லி ஒரு எஸ் எம்.எஸ் சை போட்டிட்டு வேலைக்குபோயிட்டன் . அதை அவன் வாசிச்சு விளங்கி T.K.S எண்டு பதிலும் போட்டிருந்தான்.

இது இப்பிடி அண்டாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்க என்னை தினமும் நித்திரையாலை எழுப்பிற என்ரை அலார மணிக்கூடு ஒருநாள் பழுதாய் போயிட்டுது. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் பாரிசிலை ஒரு அறையிலை நாலு தனிக்கட்டையள் (பெடியள்) சேந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கேக்குள்ளை வாங்கினது. பிறகு ஒவ்வொருத்தராய் கலியணம் கட்டி தனிக்குடித்தனம் போய் அறையிலை இருந்த ஒவ்வொரு பொருளாய் பாகப் பிரிவினை செய்யேக்குள்ளை நான் இந்த அலார மணிக்கூட்டை தூக்கிக் கொண்டு வந்திட்டன். காரணம் இது நான் தான் தேடி வாங்கினனான். ஓடுற டிக்..டிக்.. சத்தம் கேக்காது மணிக்கூடு ஓடுற சத்தம் கேட்டால் எனக்கு நித்திரை வாராது எரிச்சலதான் வரும் ஆனால் அது அலாரம் அடிக்கிற சத்தம் அந்த ஏரியாவுக்கே கேட்கும்.

பதினைஞ்சு வருசம் ஓடி ஓய்ந்து போன மணிக்கூட்டை திருத்தலாம் எண்டு நான் கடை தேடி அலைய மனிசி சொல்லிச்சிது உந்த பழசை கொண்டு அலையாதையுங்கே இப்பதானே விதம் விதமாய் புது எலெக்றோனிக் அலாம் மணிக்கூடுகள் வாங்கலாம். சத்தமும் வராது உதை குப்பையிலை எறியுங்கோ நான் புதுசு வாங்கியாறன் எண்டாள். பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் எண்டு முணு முணுத்தபடி கவலையோடை அதை குப்பை வாளிக்குள்ளை போட்டிட்டு நான் மணிக்கூடு வாங்க வெளிக்கிட திரும்பவும் மனிசின்ரை சத்தம் ''எங்கை மணிக்கூடு வாங்கவே போறியள் நீங்கள் போனால் நிண்டு நிதானிச்சு வடிவாய் பாத்து ஒண்டையும் வாங்கமாட்டியள் கையிலை அம்பிட்டதை தூக்கிக் கொண்டு வந்துடுவியள் .பக்கத்திலை சீனா சாமான் கடையொண்டு இருக்கு நான் போய் நல்லதாய் பாத்து வாங்கியாறன்'' எண்டாள். எடியேய் நிண்டு நிதானிச்சு எல்லாத்தையும் செய்யிறதெண்டால் உன்னையுமல்லோ செய்திருக்கமாட்டன் எண்டு சத்தமாவே சொன்னன். மசினி முறைச்சு பாத்திட்டு போயிட்டுது..

போய் சீனாக்கடையிலை எலெக்றோனிக் மணிக்கூடு ஒண்டை வாங்கியந்து தந்திட்டு இந்தாங்கோ எதுவும் உருப்படியாய் செய்யத் தெரியாது நேரத்தை யாவதுஒழுங்கா பிடிச்சு விடுங்கோ என்று,விட்டு போய்விட்டாள் எனக்கென்னவோ அது உள் குத்துமாதிரி தெரிஞ்சது. ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு எண்டு நினைச்சபடி பேசாமல் மணிக்கூட்டு பெட்டியை பிரிச்சன் . மணிக்கூடு பாவிப்பது எப்படி எண்டொரு விளக்கக் கடுதாசி இருந்திச்சிது. ஊரிலை முத்தத்திலை விழுகிற நிழலை வைச்சே எத்தனை மணி எண்டு சரியா சொல்லுற எங்களுக்கு இவங்கள் மணிக்கூடு எப்பிடி பாவிக்கிறதெண்டு சொல்லித்தாறாங்கள் எண்டு கொவத்திலை அதை எடுத்து முதல் வேலையா கிழிச்சு குப்பையிலை போட்டிட்டு வந்து மணிக்கூட்டை எடுத்து கறண்டை குடுத்தன். மணிக்கூடு 88 மணி88 நிமிசம் எண்டு காட்டிச்சிது. சீனாக்கடைக்காரன் மனிசியை பேய்க்காட்டிப் போட்டான் எண்டு விளங்கிச்சிது. மனிசிட்டை எடியேய் பாத்தியோ அப்பவும் சொன்னனான் சீனாக்கடைக்காரனிட்டை போகாதையெண்டு அவன் உன்னை சுத்திப்போட்டான் வந்துபார் மணிக்கூடு 88:88 எண்டு காட்டுது எண்டன் .

ஜயோ அது எலெக்றோணிக் மணிக்கூடு அப்பிடித்தான் காட்டும் அதுக்குத்தான் நேரத்தை பிடிச்சு விடச்சொன்னனான் எண்டு பதில் வந்தது .சாதாரணமாய் உலகம் முழுக்க 24 மணித்தியாலமும் 60 நிமிசமும்தானே அதெப்பிடி சீனாக்காரனின்ரை மணிக்கூடு மட்டும் கூடுதலாய் 88.88 நிமிசம் காட்டும் .மணிக்கூடு எப்பிடி பாக்கிறதெண்ட செய்முறை கடிதாசியைவேறை கிழிச்செறிஞ்சு போட்டன் மணிக்கூட்டிலைவேறை நாலைஞ்சு பட்டின் கிடக்கு எப்பிடி நேரம் பிடிக்கிறதெண்டு புலம்பிக்கொண்டிருக்க அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை மணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள்.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலாரம் றேடியோ வேலை செய்தது..துருக்கியில் நிலநடுக்கம்.பலநூறுபேர் பலி ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தாய்லாந்தில் மழைவெள்ளம். இதுவரை இருநூறுபேர் பலி. ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு வெடிப்பு முப்பது பேர் பலி இருபது பேர் காயம் எண்டு தொடர .. இதென்ன காலங்காத்தாலை ஒரே இழவு எண்டு றேடியோ மணிக்கூட்டு வயரை இழுத்து பிடிங்கிப் போட்டு வேலைக்கு தயாரானேன்.

கடைசியாய் ஒரு கேள்வி. சீனாக்காரனின்ரை எலெக்றோணிக் மணிக்கூடு ஏன் அடிக்கடி 88:88 நிமிசம் காட்டுதெண்டு யாருக்காவது தெரியுமோ

Edited by sathiri

< பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் >

சத்தியமான வார்தைகள் சாத்திரி புரியுமா திருமதிகளுக்கு???????? உங்களுக்கும் இதே கதைதானா , ஒன்றம் வாங்கத்தெரியாது என்று :lol: :lol: . தொடருங்கள் . வாழ்துக்கள் சாத்திரி :) :) .

Edited by komagan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

< பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் >

சத்தியமான வார்தைகள் சாத்திரி புரியுமா திருமதிகளுக்கு???????? உங்களுக்கும் இதே கதைதானா , ஒன்றம் வாங்கத்தெரியாது என்று :lol: :lol: . தோடருங்கள் . வாழ்துக்கள் சாத்திரி :) :) .

எனக்கு மட்டுமில்லை கோ...திருமணமாகி ஒரு 5 வருசம் கடந்தபிறகு எல்லா ஆண்களிற்கும் இதே நிலைமைதான் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு சாத்து. ஏன் 88.88 காட்டுது எண்டு உண்மையிலேயே தெரியாதா அல்லது சும்மா கேட்டீங்களா? சைனா மணிக்கூடு மட்டுமில்ல, எலெக்ரோனிக் தராசு, எலக்ரோனிக் கணிப்பான் எல்லாம் செட் பண்ண முதல் இந்த 88.88 தான் காட்டும். இவற்றில இருக்கிற "திரவப் பளிங்குத் திரை" (LCD) யில மூலக்கூறுகள் 88.88 வடிவில தான் ஓடித்திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வருடத்திற்கு இரண்டுதரம் வரும் நேரமாற்றத்தில்தான் ஏன் இத்தனை கடிகாரம், மணிக்கூடு என்று எரிச்சல் வரும். சரியாகப் பத்தொன்பது அயிட்டங்களில் ஐந்து மட்டும் தானாக நேரத்தை மாற்றும். மற்றையதில் நேரம் மாற்றவேண்டும்!!

//ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு //

ஹி ஹி ஹி :lol::lol: ... நன்னாயிருக்கே மாட்டர்... இனிமே கரெக்டா இருக்கா என்று பார்த்துங்க ..சார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை டணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள்.

மகளைப் போன்ற நடுநிலையாளர்களால் தான் உலகமே இயங்குகிறது போல. :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு சாத்து. ஏன் 88.88 காட்டுது எண்டு உண்மையிலேயே தெரியாதா அல்லது சும்மா கேட்டீங்களா? சைனா மணிக்கூடு மட்டுமில்ல, எலெக்ரோனிக் தராசு, எலக்ரோனிக் கணிப்பான் எல்லாம் செட் பண்ண முதல் இந்த 88.88 தான் காட்டும். இவற்றில இருக்கிற "திரவப் பளிங்குத் திரை" (LCD) யில மூலக்கூறுகள் 88.88 வடிவில தான் ஓடித்திரியும்.

கருத்திற்கு நன்றிகள் ஜஸ்ரின். சீனாக்காரனின்ரை மணிக்கூட்டிலை 88.88 ஏன் காட்டுதெண்டு கேட்டது சும்மா ஒரு நகைச்சுவைக்குத்தான். பிரான்சில் தனிநபர் நகைச்சுவை நாடகங்கள் பிரபலமானது; அதில் ஒரு நகைச்சுவையாளர் இந்த 88.88 மணியை வைத்து ஒரு நகைச்சுவையை செய்திருந்தார் அதை கேட்டதும் நானும் ஒரு மணிக்கூடு வாங்கியிருந்ததும் சேர்ந்து இந்த பதிவை எழுதத்தூண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பொன்னானது என்பதை நகைச்சுவையாக

எழுதிய சாத்திரி அண்ணாவிற்கு நன்றிகள்

ஊரிலே வீட்டுக்குள்ளால் வெளியே சென்று எங்கள் நிழலையே

அளந்து பார்த்து விட்டுப் பள்ளிக் கூடம் ஓடிய எங்களுக்கு

இப்போது சொகுசு கூடிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந் அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம்.

நன்றிகள், சாத்திரியார்! மீண்டும் நல்லதோர் நகைச்சுவைப் பதிவைத் தந்ததற்கு!

ஐரோப்பாவில் வாழும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் போல!

இங்கு சாமத்தியச் சடங்கு முதல், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை அன்று தான் நடக்கும்!

இப்போது புதிதாக ஒரு ஐம்பதாம் ஆண்டு விழா என்று, ஒரு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது!

ஆணுக்கு ஐம்பதிலா அல்லது பெண்ணுக்கு ஐம்பதிலா இது கொண்டாடப் படுகின்றது என்று தெரியவில்லை! வாய் விட்டுக் கேட்கவும் பயம்!

போதிய ஆய்வு செய்தபின் தெரிவிக்கின்றேன்!!! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிக்கூட்டை வைச்சு ஒரு பயங்கர அடி...எங்கையோ விழுந்துட்டுது.கடிகார கதை நல்ல கதை.

எனக்கு மட்டுமில்லை கோ...திருமணமாகி ஒரு 5 வருசம் கடந்தபிறகு எல்லா ஆண்களிற்கும் இதே நிலைமைதான் :lol: :lol:

சாத்திரிக்குப் பச்சை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு //

ஹி ஹி ஹி :lol::lol: ... நன்னாயிருக்கே மாட்டர்... இனிமே கரெக்டா இருக்கா என்று பார்த்துங்க ..சார் :D

தோட்டத்திலை நிக்கிற முல்லைக்கொடிக்கு ஒரு தடிநட்டு ஒழுங்கா வேலியிலை பிடிச்சுவிடச்சொல்லி மனிசி கனதரம் சொல்லிட்டுது நாங்கள் முல்லைக்கு தேர் கொடுத்த பரம்பரையாக்கும் தடியெல்லாம் நடமுடியாதெண்டு நான் இன்னமும் அதை தடிநட்டு பிடிச்சு விடேல்லை . அதைத்தான் நான் நினைச்சன். நீங்கள் என்னத்தை நினைச்சனியள் மதராசி :icon_mrgreen: :icon_mrgreen:

எனக்கு மனிசி பேசேக்க மட்டும் காது கேட்காது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வருடத்திற்கு இரண்டுதரம் வரும் நேரமாற்றத்தில்தான் ஏன் இத்தனை கடிகாரம், மணிக்கூடு என்று எரிச்சல் வரும். சரியாகப் பத்தொன்பது அயிட்டங்களில் ஐந்து மட்டும் தானாக நேரத்தை மாற்றும். மற்றையதில் நேரம் மாற்றவேண்டும்!!

கிருபன் நானும் நேரம் மாறுகிற நேரம் சில மணிக்கூட்டிலை நேரம் மாத்திறேல்லை . பிறகு நேரம் பார்க்கும் போது ஒரு மணித்தியாலத்தை கூட்டி கழிச்சு பாக்கிறனான். எப்பிடியும் ஒரு மாதமாகும் எல்லா நேரமும் மாத்திமுடிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பொன்னானது என்பதை நகைச்சுவையாக

எழுதிய சாத்திரி அண்ணாவிற்கு நன்றிகள்

ஊரிலே வீட்டுக்குள்ளால் வெளியே சென்று எங்கள் நிழலையே

அளந்து பார்த்து விட்டுப் பள்ளிக் கூடம் ஓடிய எங்களுக்கு

இப்போது சொகுசு கூடிவிட்டது.

கருத்திற்கு நன்றிகள் வாத்தியார்.

நன்றிகள், சாத்திரியார்! மீண்டும் நல்லதோர் நகைச்சுவைப் பதிவைத் தந்ததற்கு!

ஐரோப்பாவில் வாழும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் போல!

இங்கு சாமத்தியச் சடங்கு முதல், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை அன்று தான் நடக்கும்!

இப்போது புதிதாக ஒரு ஐம்பதாம் ஆண்டு விழா என்று, ஒரு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது!

ஆணுக்கு ஐம்பதிலா அல்லது பெண்ணுக்கு ஐம்பதிலா இது கொண்டாடப் படுகின்றது என்று தெரியவில்லை! வாய் விட்டுக் கேட்கவும் பயம்!

போதிய ஆய்வு செய்தபின் தெரிவிக்கின்றேன்!!! :rolleyes:

ஜம்பதாம் ஆண்டுவிழாவா?? புங்கையூரான் அல்லது அறுபதாம் கல்யாணமா?? அறுபதாம் கல்யாணம் ஒண்டு புதிசாய் எங்கடையாக்கள் இந்திய பிராமணியளை பாத்து செய்யத் தொடங்கியிருக்கினம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோட்டத்திலை நிக்கிற முல்லைக்கொடிக்கு ஒரு தடிநட்டு ஒழுங்கா வேலியிலை பிடிச்சுவிடச்சொல்லி மனிசி கனதரம் சொல்லிட்டுது நாங்கள் முல்லைக்கு தேர் கொடுத்த பரம்பரையாக்கும் தடியெல்லாம் நடமுடியாதெண்டு நான் இன்னமும் அதை தடிநட்டு பிடிச்சு விடேல்லை . அதைத்தான் நான் நினைச்சன். நீங்கள் என்னத்தை நினைச்சனியள் மதராசி :icon_mrgreen: :icon_mrgreen:

அப்ப நீங்களே உங்கட வீட்டு முல்லைக்கு தேர் தரவில்லை என்று எங்கட டூடிங் தேரை கொழுத்தினது? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மனிசி பேசேக்க மட்டும் காது கேட்காது .

ஏங்க அவ்ளோ பலமாயா அடி விழுந்திச்சு ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா, இன் டைம் என்று ஒரு புதிய படம் வந்திருக்கிறது. கட்டாயம் பாருங்கள்.

அதைப்பார்க்கும் போது நான் இந்த கதையை தான் நினைத்து சிரித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, இன் டைம் என்று ஒரு புதிய படம் வந்திருக்கிறது. கட்டாயம் பாருங்கள்.

அதைப்பார்க்கும் போது நான் இந்த கதையை தான் நினைத்து சிரித்தேன்.

முடிந்தால் கட்டாயம் பார்க்கிறேன். நன்றி

அண்ணை........... 8 என்ற இலக்கத்தினை எங்கட தமிழ் ஆக்கள் கொஞ்சம் பயத்தோடதான் பார்ப்பினம். ஏனென்றால்,ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் 8,17,26 திகதிகளில் தான் "நல்லநாள்" (?) :o என்றொரு வழக்கம் இருந்திருக்கு. நாளைக்கு 8 வருதென்றால் என்ர அம்மா முதல் நாளே எல்லா சாப்பாட்டுச் சாமனையும் வாங்கி வச்சிருவா! ஊரில எல்லாரும் அப்பிடித்தான் செய்தவையள்! அப்பிடி ஒரு வில்லங்கமான சிறப்பு இந்த இலக்கம் 8 க்கு இருந்தது.

லிபரேசன் ஒப்பரேசன் ஆரம்பித்த நாள் முதல்............ இந்தியன் ஆமி காலத்திலும் அதற்குப் பின்னும் இந்த 8ஆம் இலக்கம் ஈழ மக்களை ஆட்டிப்படைத்தது.8 என்றாலே வெடியோடதான் விடிகின்ற காலைப் பொழுதுகள் கனதியானவை!

ஆனால் இந்த 8 ஆம் இலக்கம் சீனர்களின் அதிஷ்ட இலக்கம் என்று கேள்விப்பட்டுள்ளேன்! :)

இப்ப பார்க்கப் போனால் .... அது உண்மைதான் போலிருக்கு! :lol:

மற்றும் படி தொழில்நுட்ப ரீதியான காரணங்களும் இருக்கின்றது. இப்பொழுது வரும் சீனத் தயாரிப்புகளில் அந்த 88:88 என்பதனை பார்க்க முடிவதில்லை.

அதைப் பார்க்க 7ஆம் அறிவு இருக்கோனும் போல கிடக்கு............ :lol::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை........... 8 என்ற இலக்கத்தினை எங்கட தமிழ் ஆக்கள் கொஞ்சம் பயத்தோடதான் பார்ப்பினம். ஏனென்றால்,ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் 8,17,26 திகதிகளில் தான் "நல்லநாள்" (?) :o என்றொரு வழக்கம் இருந்திருக்கு. நாளைக்கு 8 வருதென்றால் என்ர அம்மா முதல் நாளே எல்லா சாப்பாட்டுச் சாமனையும் வாங்கி வச்சிருவா! ஊரில எல்லாரும் அப்பிடித்தான் செய்தவையள்! அப்பிடி ஒரு வில்லங்கமான சிறப்பு இந்த இலக்கம் 8 க்கு இருந்தது.

லிபரேசன் ஒப்பரேசன் ஆரம்பித்த நாள் முதல்............ இந்தியன் ஆமி காலத்திலும் அதற்குப் பின்னும் இந்த 8ஆம் இலக்கம் ஈழ மக்களை ஆட்டிப்படைத்தது.8 என்றாலே வெடியோடதான் விடிகின்ற காலைப் பொழுதுகள் கனதியானவை!

ஆனால் இந்த 8 ஆம் இலக்கம் சீனர்களின் அதிஷ்ட இலக்கம் என்று கேள்விப்பட்டுள்ளேன்! :)

இப்ப பார்க்கப் போனால் .... அது உண்மைதான் போலிருக்கு! :lol:

மற்றும் படி தொழில்நுட்ப ரீதியான காரணங்களும் இருக்கின்றது. இப்பொழுது வரும் சீனத் தயாரிப்புகளில் அந்த 88:88 என்பதனை பார்க்க முடிவதில்லை.

அதைப் பார்க்க 7ஆம் அறிவு இருக்கோனும் போல கிடக்கு............ :lol::rolleyes:

கவிதை இலக்க சாத்திரம் மட்டுமல்ல எந்த சாத்திரத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால். ஈழத் தமிழர் வாழ்வில் கறுப்:பு ஜீலை 26 சோகமானது. நவம்பர் 26 எழுச்சியானது. இந்த 26 ந்திகதி .18.ந்திகதி 8ந்திகதி மகிழ்ச்சி எழுச்சியோடு சோகத்தையும் கொடுத்திருக்கின்றது. அப்படிப்பார்த்தால். மே 19 மிகப்பெரிய சோகம் எனவே இலக்கத்தில் எதுவும் இல்லை. என்பது எனது கருத்து. ஆனால் தலைவரிடம் கடவுள் பக்தி முக்கியமாக அம்மன் மீதானது . இலக்கங்கள் மீதான நம்பிக்கை ஆரம்ப காலங்களில் இருந்தது. பின்னர் பலர் அதனை பொய் என்று நிருபித்தபின்னர் அவரிடமும் அது இல்லாமல் போய்விட்டது.

Edited by sathiri

சீனாக்காரனுக்கு எட்டாம் இலக்த்தில நல்ல விருப்பம். கணகிகிலும் கெட்டிக்காரர் அதுதான் அப்படி. நாலுதர எட்டு முப்பதிரெண்டு. அதில கடசி எட்டைக் கழித்தால் இருபத்திநான்கு . நேரம் சரிதானே!!

சீனர்கள் கெட்டிக்காரர் என்பதை விட கடின உழைப்பாளிகள் என்பதே பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இலக்க சாத்திரம் மட்டுமல்ல எந்த சாத்திரத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால். ஈழத் தமிழர் வாழ்வில் கறுப்:பு ஜீலை 26 சோகமானது. நவம்பர் 26 எழுச்சியானது. இந்த 26 ந்திகதி .18.ந்திகதி 8ந்திகதி மகிழ்ச்சி எழுச்சியோடு கவிதை இலக்க சாத்திரம் மட்டுமல்ல எந்த சாத்திரத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால். ஈழத் தமிழர் வாழ்வில் கறுப்:பு ஜீலை 26 சோகமானது. நவம்பர் 26 எழுச்சியானது. இந்த 26 ந்திகதி .18.ந்திகதி 8ந்திகதி மகிழ்ச்சி எழுச்சியோடு சோகத்தையும் கொடுத்திருக்கின்றது. அப்படிப்பார்த்தால். மே 19 மிகப்பெரிய சோகம் எனவே இலக்கத்தில் எதுவும் இல்லை. என்பது எனது கருத்து. ஆனால் தலைவரிடம் கடவுள் பக்தி முக்கியமாக அம்மன் மீதானது . இலக்கங்கள் மீதான நம்பிக்கை ஆரம்ப காலங்களில் இருந்தது. பின்னர் பலர் அதனை பொய் என்று நிருபித்தபின்னர் அவரிடமும் அது இல்லாமல் போய்விட்டதுகத்தையும் கொடுத்திருக்கின்றது. அப்படிப்பார்த்தால். மே 19 மிகப்பெரிய செகம் எனவே இலக்கத்தில் எதுவும் இல்லை. என்பது எனது கருத்து. ஆனால் தலைவரிடம் கடவுள் பக்தி முக்கியமாக அம்மன் மீதானது . இலக்கங்கள் மீதான நம்பிக்கை ஆரம்ப காலங்களில் இருந்தது. பின்னர் பலர் அதனை பொய் என்று நிருபித்தபின்னர் அவரிடமும் அது இல்லாமல் போய்விட்டது

சாத்திரியார்,

உங்கள் எழுத்துக்களையும், அதில் ஓடும் நகைச்சுவைகளையும் விரும்பி வாசிப்பவன் என்னும் முறையில்.....

உங்களின், கடந்த சில நாள் எழுத்துக்கள்... சில தடுமாற்றத்தை உங்களுக்கு தந்துள்ளது போல்... உணர்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.