Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

நன்றி போக்குவரத்து உங்கள் விபரமான பதிலுக்கும் & நேரத்திற்க்கும்.

1 & 3 சீரியசாகதான் கேட்டனான். பல நாடுகளில் நல்ல (Professional) பயிற்றுனர்களில்லை. அதனால்தான் அப்படி கேட்டேன்.

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி போக்குவரத்து உங்கள் விபரமான பதிலுக்கும் & நேரத்திற்க்கும்.

1 & 3 சீரியசாகதான் கேட்டனான். பல நாடுகளில் நல்ல (Professional) பயிற்றுனர்களில்லை. அதனால்தான் அப்படி கேட்டேன்.

வந்தி, உங்களுக்குத் தெரிந்தவர்கள் வாகன அனுமதிப் பத்திரம் பெற விரும்பினால்...

ஒரு மாத சுற்றுலா விடுமுறை எடுத்துக் கொண்டு, கனடாவுக்குப் போய்... போக்குவரத்திடம் வாகனம் பழகலாம்தானே...

கனடாச் சுற்றுலாவைச் செய்ததாகவும் இருக்கும், கார் லைசன்ஸ் எடுத்ததாகவும் இருக்கும்.

ஒரு கல்லில்... இரண்டு மாங்காய். எப்பிடி என் ஐடியா.

  • தொடங்கியவர்

நன்றி போக்குவரத்து உங்கள் விபரமான பதிலுக்கும் & நேரத்திற்க்கும்.

1 & 3 சீரியசாகதான் கேட்டனான். பல நாடுகளில் நல்ல (Professional) பயிற்றுனர்களில்லை. அதனால்தான் அப்படி கேட்டேன்.

நிச்சயம் இருப்பார்கள், நீங்கள் தேடி பிடிக்க வேண்டும். வீதி பரீட்சையில் உடனடியாக சித்தி பெறுவதை நோக்கமாக கொள்ளாது முறையாக வாகனம் ஓடுவதை கற்று கொள்வதை நோக்கமாக கொண்டு பயிற்றுனர்களை தேடல் செய்தால் சிறந்த பயிற்றுனர்கள் கிடைக்கலாம். எத்தனையோ தேவையில்லாத விடயங்களுக்கு மக்கள் பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் உயிரை பணயம் வைக்கும் வாகனம் ஓடுதல் கலையை கற்கும் போது பத்து டாலருக்கு பேரம் பேசுகிறார்கள். சுமார் 300 டாலர்கள் செலவளிக்க விருப்பம் இல்லாமல் திருட்டுதனமாக வகுப்பறையில் கற்றதற்கான சான்றிதழை 100 டாலர் கொடுத்து பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். வாகனத்தை முறையாக ஓட கற்று கொள்வது தமது உயிருக்கான முதலீடு என்பதை பலர் அறியாமல் உள்ளது கவலைக்குரியது.

வந்தி, உங்களுக்குத் தெரிந்தவர்கள் வாகன அனுமதிப் பத்திரம் பெற விரும்பினால்...

ஒரு மாத சுற்றுலா விடுமுறை எடுத்துக் கொண்டு, கனடாவுக்குப் போய்... போக்குவரத்திடம் வாகனம் பழகலாம்தானே...

கனடாச் சுற்றுலாவைச் செய்ததாகவும் இருக்கும், கார் லைசன்ஸ் எடுத்ததாகவும் இருக்கும்.

ஒரு கல்லில்... இரண்டு மாங்காய். எப்பிடி என் ஐடியா.

வேறு நாட்டில் உள்ளவர்கள் இங்கு வாகனம் பழகுவதற்கு இங்குள்ள விதிமுறைகளின்படியே செயற்பட வேண்டும். இதனால் பல சமயங்களில் வேறு நாடுகளில் இருந்து விடுமுறையில் வருபவர்கள் பழகமுடிவதில்லை. ஆனால் அமெரிக்காவில் லைசன்ஸ் எடுத்துவிட்டு இங்கு எம்மிடம் தமது திறமையை வளர்த்து கொள்வதற்காய் வந்து வாகனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களும் உள்ளார்கள்.

எம்மிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைசன். அவர் 1998/9 ம் ஆண்டளவில் பயிற்சி பெற்றார். அவர் குடும்பத்தினரும் பயிற்சி பெற்றார்கள். அண்மை காலங்களில் பயிற்சி பெற்ற சில மாணவர்களின் வீடியோ பதிவை இங்கே பார்க்கலாம்:

நாம் வாகனம் ஓட பழகும் மாணவர்களுக்கு மட்டுமன்றி வாகனம் ஓட கற்று கொடுக்கும் பயிற்றுனர்களுக்கும் (ஆசிரியர்களுக்கும்) கற்பிக்கிறோம் (பிரிதான சேவை).

நன்றி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இந்த வருடத்தின் இறுதிசுற்று முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில். உங்கள் அமோக ஆதரவுடன் பொற்கிளி(ழி) பன்னிரண்டு சுற்றுக்களை கடக்கின்றது. 2012 ஆரம்பத்தில் திட்டமிட்டபடி பரீட்சார்த்த முயற்சி பல தடங்கல்களின் மத்தியிலும் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வெற்றிக்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த வாரம் பொற்கிளி பிரசுரம் செய்யப்பட்ட பின்னர் தனிப்பட்ட விடயங்கள் நீங்கலாக பொதுவான கணக்கு அறிக்கையை தருகிறோம்.

பொற்கிளிக்கான உங்கள் ஆதரவையும், பங்களிப்பையும் 2013ம் ஆண்டிலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

2012 ம் ஆண்டு, போக்குவரத்தின் பொற்கிழிப்பரிசு யாருக்கு... என்று, எதிர்பார்த்தே... மாதங்கள், மிக வேகமாகக் கடந்து சென்றமையையை... மறக்க முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வருடத்தின் இறுதிசுற்று முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில். உங்கள் அமோக ஆதரவுடன் பொற்கிளி(ழி) பன்னிரண்டு சுற்றுக்களை கடக்கின்றது. 2012 ஆரம்பத்தில் திட்டமிட்டபடி பரீட்சார்த்த முயற்சி பல தடங்கல்களின் மத்தியிலும் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வெற்றிக்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த வாரம் பொற்கிளி பிரசுரம் செய்யப்பட்ட பின்னர் தனிப்பட்ட விடயங்கள் நீங்கலாக பொதுவான கணக்கு அறிக்கையை தருகிறோம்.

பொற்கிளிக்கான உங்கள் ஆதரவையும், பங்களிப்பையும் 2013ம் ஆண்டிலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

2013 லும் போக்குவரத்து தனது கடமையை தொடர "பச்சை" வழங்கி உங்கள் ஆதரவை காட்டுங்கள் உறவுகளே!!!

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வருடத்தின் இறுதிசுற்று முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில். உங்கள் அமோக ஆதரவுடன் பொற்கிளி(ழி) பன்னிரண்டு சுற்றுக்களை கடக்கின்றது. 2012 ஆரம்பத்தில் திட்டமிட்டபடி பரீட்சார்த்த முயற்சி பல தடங்கல்களின் மத்தியிலும் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வெற்றிக்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த வாரம் பொற்கிளி பிரசுரம் செய்யப்பட்ட பின்னர் தனிப்பட்ட விடயங்கள் நீங்கலாக பொதுவான கணக்கு அறிக்கையை தருகிறோம்.

பொற்கிளிக்கான உங்கள் ஆதரவையும், பங்களிப்பையும் 2013ம் ஆண்டிலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

சலிப்பில்லாமல் தொடர்ந்து  இதுவரை தெரிவுகளை மேற்கொண்ட உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியன. 2013 இல் பொருளாதார ரீதியாக பொறுப்பெடுக்க இருந்து சமீபத்தில் வேறு ஒரு பொது வேலைத் திட்டத்திற்கு அப்பொருளாதாரத்தை உபயோகிக்க தொடங்கியதன் நிமித்தம் இந்தப் பொற்கிழித்திட்டத்திலிருந்து விலகிக் கொண்டேன். இந்த விலகல் நீண்டதூரத்திற்கு அல்ல 2013 காலப்பகுதிக்கு மட்டுமே அதனால் இந்தக்காலப்பகுதியை பொருளாதார ரீதியிலும் தேர்வுகள் ரீதியிலும் கருத்துக்கள நண்பர்கள் போக்குவரத்துடன் உதவியாக நின்று முன்னெடுத்தால் நன்று. இந்த தெரிவுகள் தொடந்தும் இடம்பெறவேண்டும். அதனால் எனது பச்சைப்புள்ளியை போக்கு வரத்திற்கு வழங்கி ஆதரவு தெரிவிக்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வருடத்தின் இறுதிசுற்று முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில். உங்கள் அமோக ஆதரவுடன் பொற்கிளி(ழி) பன்னிரண்டு சுற்றுக்களை கடக்கின்றது. 2012 ஆரம்பத்தில் திட்டமிட்டபடி பரீட்சார்த்த முயற்சி பல தடங்கல்களின் மத்தியிலும் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வெற்றிக்கு ஆதரவும், பங்களிப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த வாரம் பொற்கிளி பிரசுரம் செய்யப்பட்ட பின்னர் தனிப்பட்ட விடயங்கள் நீங்கலாக பொதுவான கணக்கு அறிக்கையை தருகிறோம்.

பொற்கிளிக்கான உங்கள் ஆதரவையும், பங்களிப்பையும் 2013ம் ஆண்டிலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, தொடருங்கள்...

உங்கள் நேரத்திற்க்கும் ஊக்குவிப்பு சேவைக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பங்களிப்பும்,ஊக்குவிப்புக்களும் அடுத்த ஆண்டும் தொடர்விருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி!

மிகவும் சிறப்பாகவும், பாரபட்சம் காட்டாமலும், தேவை ஏற்பட்ட போதெல்லாம், சளைக்காது விளக்கங்கள் அளித்தும்,உங்கள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியைத் தொடர்கின்றது!

பொதுவாகவே, பரந்த பார்வையுள்ள தமிழர்களை, ஒருவரது மனமும் கோணாத விதத்தில், ஒரு குடையின் கீழ், அரசியல் கலப்படம் இல்லாது, ஒன்றிணைத்து இந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தி முடித்தது, என்னைப் பொறுத்த வரையில் ஒரு மகத்தான சாதனையாகவே நான் கருதுகின்றேன்!

இவ்வாறே, நல்லவைகளை அள்ளியும், தீயவைகளைத் தள்ளியும், நேரான பாதையில் பயணிக்கும் போது, வானம் மட்டுமே, தமிழனின் எல்லையாகும்!

போக்குவரத்திற்கும்,அவர் சார்ந்த நிறுவனத்திற்கும், எனது நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சேவையும் ஊக்குவிப்பும் தொடர்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி

 இதைவிட உங்களை சேவையை பாராட்ட வாழ்ந்த வார்த்தைகள் இல்லை

  • 2 months later...
  • தொடங்கியவர்

2012ம் ஆண்டில் பொற்கிளி நிறைவு பெறுவதற்கு இன்னு இரண்டு சுற்றுக்கள் உள்ளது. 2012ம் ஆண்டு மொத்தம் மாதாமாதமாக மொத்தம் 12 சுற்றுக்கள் திட்டமிடப்பட்டது. அதன்படி முயற்சிகள் தொடர்கிறது.

நேரசிக்கல் காரணமாக 2012 உடன் நாம் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாய் முன்பு கூறினோம். ஆயினும் எமது முடிவில் தற்போது மாற்றம் செய்துள்ளோம். 2013ம் ஆண்டில் நான்கு தடவைகள் (நான்கு காலாண்டுகளில்) பொற்கிளி முயற்சியை தொடர்ந்து எமது நிறுவனம் ( CarDriving.CA ) தொகுத்து வழங்குவதற்கும், அனுசரணை வழங்குவதற்கும் தீர்மானித்து இருக்கிறோம்.

2013ம் ஆண்டுக்குரிய எமது பொற்கிளி(ழி) திட்டம்:

காலாண்டு 01 - (Jan 2013, Feb 2013, Mar 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 April மாதம் முதல் வாரம்

காலாண்டு 02 - (Apr 2013, May 2013, Jun 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 July மாதம் முதல் வாரம்

காலாண்டு 03 - (July 2013, Aug 2013, Sep 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 October மாதம் முதல் வாரம்

காலாண்டு 04 - (Oct 2013, Nov 2013, Dec 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 December மாதம் கடைசி வாரம்

பொற்கிளி முயற்சிக்கு நீங்கள் இதுவரை தருகின்ற ஆதரவையும், பங்களிப்பையும் தொடர்ந்தும் எதிர்காலத்தில் 2013 இலும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி

இன்னும் சில வாரங்களில் 2013ம் ஆண்டின் முதல் சுற்றின் - காலாண்டு ஒன்று - பொற்கிளி(ழி) முடிவுகள். உங்கள் அமோக ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது, போக்குவரத்து!

தமிழர்களிடம் சில திறமைகள் மறைந்திருக்கின்றன என்பது உண்மை தான் என்பதை, உங்கள் கருத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நினைத்துக் கொள்வது உண்டு!

அது தான், தான் எடுத்த காரியத்தைச் செவ்வனே முடிக்க வேண்டும் என்ற மன உந்துதல்! :D

அது உங்களிடம் நிரம்பவே உண்டு!

தங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்களும், நன்றிகளும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் போக்குவரத்து.உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

முயற்சிகள் தொடர வாழ்த்துக்களும், நன்றிகளும்...

உங்கள் முயற்சி  வெற்றி அடைய வாழ்த்துக்கள் 

போக்குவரத்து அவர்களின் தளராத முயற்சிக்கு நன்றி. :)

அனேகமாக நீங்கள் இத்திரியில் ஏதும் எழுதினால் முதலாவதாக அல்லது இரண்டாவதாக தமிழ்சிறி அண்ணா ஓடி வந்து கருத்தெழுதியிருப்பதை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அவரையும் இந்நேரம் நினைவு படுத்துகிறேன். :rolleyes: களத்திற்கு மீண்டும் வந்ததும் உங்களுக்கு கருத்து எழுதுவார் என்று நினைக்கிறேன். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி  வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில வாரங்களில் 2013ம் ஆண்டின் முதல் சுற்றின் - காலாண்டு ஒன்று - பொற்கிளி(ழி) முடிவுகள். உங்கள் அமோக ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

முதன் முறையாக... காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் பதிவு என்பதால்... மிக ஆவலாக எதிர்பார்க்கின்றோம். எங்களை அதிகம் காக்க வைக்காமல்... பொற்கிளியை அறிவியுங்கள் போக்குவரத்து. :)

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி போக்குவரத்து. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கும் நேர இழப்பிற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி போக்குவரத்து.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். :icon_idea: 

  • 1 month later...

இன்னும் சில வாரங்களில் 2013ம் ஆண்டின் முதல் சுற்றின் - காலாண்டு ஒன்று - பொற்கிளி(ழி) முடிவுகள். உங்கள் அமோக ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி

எப்ப வெளிவரும்?

  • தொடங்கியவர்

நிர்வாக இடர்ப்பாடுகள் சில காரணமாக குறித்த நேரத்தில் 2013ம் ஆண்டு முதற் காலாண்டிற்கான பொற்கிளி(ழி)யை வழங்க முடியவில்லை.

எமது துறை (driver training industry) இதுவரை காணாத இக்கட்டான நிலையில் தற்போது உள்ளது. இதனால் Google, Yellow Pages, Flickr ஏனைய இதரவழிகளிலான விளம்பர சந்தைப்படுத்தல் தேவைகளை நாம் தற்காலிகமாக முடக்கியுள்ளோம்.

இந்த லிங்கில் சென்று பிரபல பத்திரிகையில் ஒன்றில் வந்த கட்டுரையை பாருங்கள். எமது துறை எப்படியான சவால்களை தற்போது எதிர்கொள்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கும். போக்குவரத்து அமைச்சின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான முறைகளில் பலர் விரைவாக பணம் சம்பாதிக்க முனைவதால் நீண்டகாலமாக நேர்மையான வழியில் நேர்த்தியாக இயங்கும் நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன.

http://www.thestar.com/news/investigations/2013/03/05/star_investigation_toronto_driving_schools_bending_the_rules_to_make_a_buck.html

2013 ம் ஆண்டுக்குரிய இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டுகளிற்கான பொற்கிளி(ழி) நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் தொடர்வதற்கு முயற்சி செய்கிறோம். ஆயினும், முதல் காலாண்டு முடிவுகள் விரைவில் வழங்கப்படும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மைக்கு காலமில்லை.எத்தொழிலுக்கு போனாலும் சுத்துமாத்துக்களும் short cut களும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.