Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லமுடியாத கதை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பு .வாழ்த்துக்கள் சாத்திரி

நீண்டநாளிற்கு பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி

  • Replies 55
  • Views 11.9k
  • Created
  • Last Reply

நல்ல ஒரு ஆக்கம், வாழ்த்துக்கள் சாத்திரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)கொடுத்தவிலைகளிற்கு ஒரு வீதம்கூட பயன்இல்லையே என்கிற விரக்தி.

2)தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை

3)வயசாயிட்டுது

நாய் வித்த காசு குரைக்காது. ஆனால் கடிச்சுப்போட்டுது பாத்தியளோ ?

Edited by samiyar

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல முடியவில்லைக் கருத்தொன்றும். எல்லா உழைப்பும் அர்ப்பணிப்புகளும் வீணாகி.................... :mellow::huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற வசனங்கள் இல்லாமல், கதை நல்ல திரில்லர் மாதிரி இருக்கிறது.

எல்லாம் வீணாப் போயிற்று.

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை வழமை போலவே சூப்பர் சாத்திரி அண்ணா. விறுவிறுப்பா இங்கிலிஸ் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு. பச்சை முடிஞ்சு போச்சு. வரதர், சுகந்தி, ரவியர் சம்பந்தப்பட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்பு பற்றி முன்னர் நீங்களோ வேறு யாரோ எழுதிய ஞாபகம். நீங்கள் எழுதிய "மசாயிர்", "ராஜு" அல்லது "கிட்டு" என நினைக்கிறன்.

நீங்கள் எழுதிய சில பெயர்கள் இறுதி சம்பவத்துடன் தொடர்புபட்டவை பின்னர் சிலர் சிறையிலிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையென்று வாசிக்கும் போது நன்றாக இருக்கின்றது.

நிஜத்தில் அந்த இளைஞன் பட்ட பாடு கண்ணீரைத் தருகின்றது

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

உடுகம்பொல என்றும் ஒருவன் இருந்தவன் அவன் பேலீஸ்எஸ்.பி தர அதிகாரியென நினைக்கிறேன். ஜேவி.பி யினரை மூர்க்கமாக ஒடுக்கியதில் பேர்போனவன். கைது செய்யப்படும் ஜே.வி. பி உனுப்பினர்களின் காதுகளில் இரண்டு பக்கமும் பேனையை வைத்து கைகளால் ஓங்கி அடித்து கொலைசெய்வது அவனது பாணி.. ஆனால் கதையில் வரும் வரும் உடுகொல சிஜடி இங்ஸ்பெக்ரர். .கதையை படிசச்சதும் அட சே ராணியாலை விசாரிக்கப்பட்டிருக்கலாமே என்டொரு பீலிங் தோன்றேல்லையா நிழலி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னால முடிஞ்சது. ஒரு பச்சை.

கதை நன்றாக உள்ளது. நன்றிகள்.

*தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை*

.......... வரிகள் எல்லோர் மனத்திலும் தீராக ஏக்கமாக அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல சமயங்களில் கற்பனைகளை உண்மைச்சம்பவங்கள் மிஞ்சிவிடுகின்றது.

உங்கள் எழுத்துநடை மிக அருமை. தனித்துவமாக இருக்கின்றது. தொடருங்கள்.

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் போராட்ட வாழ்வில் கற்பனைகள் எல்லாமே துச்சமாகி விடுகின்றன! நன்றி சாத்திரியார்!!

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

நீங்கள் இவ்வாறு எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . ஒரு கதை அல்லது நாவலுக்கு வெளிப்புறவர்ணனைகள் தேவையில்லை , உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்கின்றீர்கள் . ஒரு கதையில் அல்லது நாவலில் வெளிப்புற வர்ணனைகள் இல்லாவிட்டால் , ஆடைகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும் :unsure::unsure:^_^:icon_idea: .

கோமகன் நான் எழுதுகின்ற நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான மற்றும் துயரம் சம்பந்தமான கதைகளைக்குறித்துத்தான் அப்படி கூறியிருந்தேன்.மற்றும்படி பொதுவான கதைகள் உதாரணமாக காதல் மற்றும் உறவுகள் குறித்தகதைகளில் இந்த வர்ணனைகள் ஆலாபனைகள் மெருகேற்றும். என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அதே நேரம் ஒரு கருவை மட்டுமே கதையாக்குவதற்கு நிச்சயமாக இந்த ஆலாபனைகள் தேவைதான். ஆனால் சில நேரங்களில் சிலர் அதனை அதிகமாக்குவதும் வேண்டத்தாகாததே

இந்தக்கதையிலும் ஆலாபனை இருந்திருக்குது.ஆனால் கதையின் சீரியசான போக்கால் சிலர் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.என்னதான் அடக்கினாலும் நகைச்சுவை ததும்ப எழுதும் கதாசிரியரையும் மீறி அது வந்துதான் ஆகும்.முன்பு கவிதை எழுதிய கதைக்கு சாத்திரி எழுதிய கருத்து இப்ப அவரின் கதையில் எட்டிப்பாத்துள்ளது.நான் மிகவவும் ரசித்தேன் என்பதை விட அதை அந்த இடத்தில் இடைச்சொருகல் என்று நினைக்க வைக்கதமாதிரி புகுத்தப்பட்டுள்ளது.

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

உண்மையே. இந்திய உளவமைப்பின் தலையீடு மிகப்பெரியதே.

90 களின் பின்னர் தமிழர் மீட்புப் படை என்ற போர்வையில் தமிழகத்தில் இருந்து ஈழம்வந்து புலிகளிடம் பயிற்சியெடுத்தவர்களில் பெரும்பான்மையானோர் உளவுத்துறையினர் என்று சில கதைகள் உண்டு. மேலதிகமாக எதுவும் தெரியது. தமிழகத்தையும் உள்ளடக்கிய அகண்ட தமிழீழம் என்ற ஒரு சிறு எண்ணமும் தமிழர் மீட்புப் படையை உருவாக்க முனைந்தமையும் தான் ராஜீவ் கொலையை விட புலிகளை கருவறுப்பது என்ற இந்திய முடிவுக்கு காரணம் என்று நம்பப் படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? முன்னர் புலிகள் மீதான் தடையை நீக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் இந்த அகண்ட தமிழீழம் என்பது குறித்து வைக்கோவிடம் கேட்டதும் அவர் மறுத்ததும் செய்தியாகியிருந்தது.

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010

புலிகள் அகண்ட தமிழீழ கொள்கை வைத்திருந்தார்களா? நீதிபதிகள் வைகோவை கேட்டனர்.

புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ.

விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ.

ஆங்கிலவடிவம் இங்கே அழுத்துக. http://www.eelanatham.info/?p=867

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77064

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

பட்டிலந்தை( பாலத்தோட்டை) குண்டுவெடிப்பு காமினிதிசா நாயக்கா மற்றும் ஜ.தே.கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 62 பேர் அனைவரும் கொல்லப்பட்ட சம்பவம். சந்திரிக்கா வெல்வாரென தேர்தலிற்கு முன்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது புலிகள் அமைப்பு சந்திரிக்காவிடம் தெரிவித்திருந்தனர். காமினி இறந்ததும் காமினியின் மனைவி வஜிரா தேர்தலில் நிறுத்தபட்டார். வழைமையாக தற்கொலை குண்டுதாரிகளின் உடல் சிதறினாலும் தலைசேதமடைவதில்லை. தலையை வைத்து குண்டுதாரியை அடையாளம் காண்பது வழைமை ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரியான பெண்ணின் தலையும் சேதமடைந்திருந்ததால் இலங்கை புலனாய்வுத்துறை ஸ்கொட்லாண் யாட்டின் உதவியை நாடியிருந்தது. ஸ்கொட்லாண் நாட்டு சிறப்பு அணியொன்று இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சிதறிப்போன பெண்ணின் தலையின் பாகங்களை பரிசோதனை செய்து பெண்ணின் உருவத்தினை கணணியின் உதவியுடன் வரைந்து கொடுத்திருந்தனர். ஸ்கொட்லாண் யாட்டிற்கு இது ஒரு பயிற்சி களமாகவும் அமைந்திருந்தது அன்றைகாலங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தது

சம்பவம் நடைபெற்ற இடத்தின் சரியான சிங்களப்பெயர் தொட்டலங்க. தமிழ் பாலத்தோட்டை .எம்மவர் இரண்டையும் கலந்து பட்டிலந்தை சந்தை என்றே அழைப்பது வழைமை.

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

கதையை வரைந்தவர் புத்திசீவியா நாசமா போக :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ் அண்ணை! சத்தியமாகச் சொல்லுகின்றேன். கதையைப் படிச்சிட்டு... தலைசுத்தி விழுந்துபோட்டன்! கதையை கசக்கிப் பிழிஞ்சு எழுதியிருக்குறியள். :rolleyes::lol:

துன்பத்திலயும் ஒரு இன்பத்தை செருகி நல்லாத்தான் கொண்டு போயிருக்குறீங்கள். :wub:

கதையின் நடை,சுவாரசியம், விறுவிறுப்பு எல்லாமே நன்றாக இருந்தாலும் ... யாழில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதனால் பரவாயில்லை. :lol:

ஆனால் நான்தான் பாவம்! :o ரொம்ப உணர்சிவசப்பட்டுடுவன். அப்புறம்.....? :wub::lol:

ஒரு கவிதை கதையை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல விறுவிறுப்பாக வாசிக்கும்படி உண்மைச்சம்பவத்தினைத் தந்திருக்கிறார் சாத்திரி அவர்கள்.

மத்தியவங்கித்தாக்குதல் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்

http://en.wikipedia.org/wiki/Central_Bank_bombing

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கு 13வது பச்சையினை வழங்குகிறேன்.

ராணிக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது?

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்தண்ணா பகிர்வுக்கு,

கறுவல் - செந்தில் கவுண்டரை பார்த்து கேட்ட கேள்வியா இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.