Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் குமரிகளை.. Babe என்றீனம்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hi-babe.png

Babe என்றால் குழந்தை என்று தானே அர்த்தம். ஆனால் பல இடங்களிலும்.. குமரிகளை எல்லாம் ஆண்கள்.. அது கலியாணம் ஆகாத இளந்தாரிகள் ஆனாலும் சரி.. கலியாணம் ஆகி ஜொள்ளு விடும் ஆண்கள் ஆனாலும் சரி.. Hi.. Babe என்றீனமே... எதுக்கு..??! குமரிகளும்.. பதிலுக்கு.. பல்லை இளிச்சுக் கொண்டு அப்படி அழைப்பவர்களிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள்..! :lol:

குறிப்பாக.. எனது வெள்ளை இன நண்பன்.. அடிக்கடி அவன் கேர்ள் பிரண்டை.. பேபி பேபி என்பான். ஆனால் ஏன் அப்படி கூப்பிடுறா என்று கேட்டால்.. அது ஒரு லூசு... அதை அப்படி கூப்பிட்டாத்தான்... கூலா.. அடங்கி இருக்கும் என்று காரணத்தை வேறு சொல்லுறான்..!

எனக்கென்னா.. ஒன்னுமா விளங்கேல்ல..!

ஏன்.. குமரிகளை.. பேப்.. Babe.. Baby என்று அழைக்கினம்.. அவை என்ன குழந்தைகளா.. ராட்சதக் கூட்டமா எல்லோ இருக்குதுங்க..! குழந்தைகள் அல்லாத குமரிகளையும்.. பெண்களையும் பேபி என்று அழைப்பது அவர்களுக்கு பிடிக்குமோ..???! எனக்கென்றால்.. அப்படி கூப்பிடுறதை காதால் கேட்கவே அருவருப்பா இருக்குது..! இதை எல்லாமா பெண்கள் ரசிப்பார்கள்..??! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வார்த்தையை பெண்களைச் சாய்க்க ஆண்கள் பயன்படுத்துவார்கள் ....

ஆண்கள் குள்ளநரிகளாக இருந்தால் பெண்கள் இராட்சதக்கூட்டமாக இருப்பதில் தப்பில்லை தம்பி :icon_mrgreen:

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

:lol: :lol: :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

இந்த இரண்டு பதில்களும்.. சுவாரசியமாக உள்ளதோடு.. ஆண்களின் பெண்கள் மீதான உருக்கத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருக்கக் கூடிய.. சூட்சுமத்துக்கான காரணங்களையும் கொண்டு இருக்கிறாப் போல தான் இருக்குது..! இருந்தாலும்.. முழுசா ஏற்றுக்க முடியல்ல..! :):icon_idea::lol:

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

பதிலுக்கு அவைட அரசியல் எப்படி இருக்கும்.. Hi Lov.. Darling..

அன்பே.. ஆருயிரே.. அப்பா.. இஞ்சாருங்கோ.. என்று இருக்குமோ...! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol: :lol:

Yahoo இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது மை லார்ட். :D

Best Answer - Chosen by Asker

I always call girls babe. It means: he thinks you are attractive, he cares about you, he likes the thought of you caring about him, and he could (potentially) want to do somthing with you (sexually) but all in all, he wants you to know that he there as either a friend, a buddy, or something more. =) I think its a good thing.

http://answers.yahoo.com/question/index?qid=20080807214655AAtnFgM

Edited by தப்பிலி

இதுகு பதில் எழுதினா மேலிடதினர்அழிபீனமே :(

  • கருத்துக்கள உறவுகள்

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டுபண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல். அதுதான்

கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

post-1409-0-64115900-1329762377_thumb.jp

post-1409-0-19374000-1329762655_thumb.jp

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol:

ஆண்கள் பொதுவாக இப்படியான பெண்களின்பசப்புகளுக்கு உண்மையில் மயங்கமாட்டார்கள். மயங்கிறதா நடித்துக் கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். அதுதான் ஆண்களின் திறமையே..! இல்லாவிடில் அவர்களால்.. இந்தப் பெண்களோட காலம் தள்ளுறது ரெம்ப கஸ்டம்..! :lol::icon_idea:

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

கூவம் என்ன நிறம் என்று கேட்டால்.. கூவத்தில் வீழ்ந்து நீச்சலடிச்சு தப்பி வா என்ற கணக்கில இருக்குது இது. நமக்கு இந்த விசப் பரீட்சைகளில் எல்லாம் ஈடுபட்டு நிம்மதிக்கு தற்கொலை செய்யுற நோக்கம் இல்லை..! பெண்கள் விடயத்தை உணர்வு விடயமாக அன்றி அறிவு சார்ந்து அணுகனும். இல்ல ரெம்ப டேஜ்ஜராகிடும்..! கீறல் விழுந்த கண்ணாடியை கூட திருத்தலாம்.. ஆனால் பெண்ணின் கைபட்ட ஆணின் உடலில் உருவாகும் அழுக்கை.. நீக்க முடியாது. :lol::icon_idea:

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டு பண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல்.

அதுதான் கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

நைனா ரெம்ப டீப்பா எல்லாம் போய் அனலைஸ் பண்ணுறீங்க.. நமக்கென்றால்.. இது என்னவோ.. சப்ப மற்றர் என்று தான் தோணுது. பாப்பமே.. வரும் கருத்துக்களை வைச்சு ஒரு முடிவு எடுப்பமே..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

அப்ப.. கூகிழ் இன்ர அக்கா யாகூவ கலியாணம் கட்டினது நீங்களோ..! தெரியாமல் பேச்சே. எல்லாரும் எனி தெரிஞ்சுக்கோங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

பெண்கள்.. பற்றிய பகுதி உண்மைகளை வெளிக் கொணருகிற கருத்து. ஆனால் குழந்தைகள் போல நடக்கினம் என்றது கொஞ்சம் அல்ல.. ரெம்பவே ஓவர்..! :lol::D

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

சதா.. பரிசோதனைக் குழாயை பார்த்துப் பார்த்து.. போறடிக்குது. அதுதான் கொஞ்சம் மாறுதலான ஆராய்ச்சி. ஆனால் முக்கியமான ஆராய்ச்சி இது..! சும்மா.. அவையை பேபி எண்ட அவையும்.. தங்களைத் தாங்களே என்னவோ பேபி என்ற கணக்கில.. உள்ளூர நினைச்சிக்கிட்டு.. குமரி வேலையை காட்டிக்கிட்டு ஊரை ஏய்ச்சுக்கிட்டு திரியினம். அதுக்கு ஒரு தீர்வு தான் காண வேணாமோ..??! எத்தின நாளைக்குத்தான் ஆண்களும் தெரிஞ்சு கொண்டே ஒரே பொய்யச் சொல்லுறது..! :lol::D

Edited by nedukkalapoovan

Attached Thumbnails

  • post-1409-0-64115900-1329762377_thumb.jpg
  • post-1409-0-19374000-1329762655_thumb.jpg

  • add.png
  • 0

I dont hate anyland.....But Ilove my motherland

?????????????

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலந்த்தில் பல விதமா கூப்பிடுவார்கள் ..Hi Sexy, Hi babe, hi bi...

இதற்கெல்லாம் தமிழில் "குழந்தாய்" என்று நாங்கள் கூப்பிட்டால் ..சமய சொற் பொழிவாளர் ஆக்கிவிடுவார்கள்.

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

அரசியலிலும்.. வியாபாரத்திலும்.. வீட்டிலும் பெண்களை தாஜா பண்ண அப்படி கூப்பிடுறாங்களோ என்னவோ..! ஆனால் யுனில ஜொள்ளுப் பாட்டிகளைத் தவிர மற்ற ஆக்கள் அப்படின்னும் கூப்பிடுறது குறைவு..! யுனில நம்மள போல.. கொஞ்சம் டீசண்ட் கைஸ் இருக்கிறாங்கல்ல..! :lol::D:icon_idea:

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

:lol::D

வரலாற்றின் பக்கங்களிற்க்கு வராமல் போன ஒரு விடயம் இது:

1752 ஆம் ஆண்டு யாழ்பாணத்தை ஆட்சி செய்த மன்னரின் காவலர் ஒருவர் இரவு நேரத்தில் சுடுகாட்டு பக்கமாக நடந்து சென்றிருக்கின்றார். அங்கே அவர் ஓரு பேயை பார்த்துள்ளார். பதட்டத்தில் அவரிற்க்கு வார்த்தை வரவில்லை. பேய் பிசாசு என்ற வார்த்தைகளை பே....பி... என்று உளறத்தொடங்கினார். அப்படி உளறிக்கொண்டே ஓடினார். வழியில் மன்னரும் அவரது மனைவியும் வந்துள்ளனர்.

மன்னரின் மனைவி: என்ன காவலரே ஏன் இப்படி ஓடிவருகிறீர்கள்

காவலன்: பே....பி....

அந்த வார்த்தை மன்னரின் மனைவியை வெட்கம் கொள்ள வைத்தது. அதை உற்று நோக்கிய மன்னர் அன்றிலிருந்து அவரின் மனைவியை பேபி என்றே அழைத்து காதல் செய்து வந்தார்.

பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்த சொல்லில் பெண்கள் மயங்குகிறார்கள் என்றால் இது நிச்சயமாக "அழகானவள்" என்ற பதத்தை தான் குறிக்கும் என்று கருதியுள்ளனர். பின்னர் அவர்கள் இலங்கையை விட்டு செல்லும் போது இந்த சொல்லையும் எடுத்து சென்றுள்ளனர்.

அதுவே காலப்போக்கில் பேப் என்று சுருங்கியுள்ளது.

இது தான் பே...பி.. உருவான கதை!

அதாவது பேய் பிசாசின் சுருக்கமே இந்த பேபி சொல்லின் ஆரம்பம் என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

சும்மாவா சொன்னார்கள் பெண்ணென்றால் பேயும் ம்ம்ம் இப்படி ஏதோ ஒரு பழமொழி தான். தங்களிற்க்கு தெரியாததது ஒன்றுமில்லை. ஏனவே நீங்களே இந்த பழமொழியை நிறைவுசெய்துகொள்ளுங்கள்.

Edited by கருத்து கந்தசாமி

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது

போதையில்(மயக்கத்தில்) சொல்லும் சொற்களுக்கு :wub:

அர்த்தமோ

காரண காரியமோ

ஏன் அது உண்மையாகவோ

அல்லது நிலைக்கவேண்டும் என்றுமே இல்லையே....... :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.