Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. பீனாகொலடா ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் ) Oct. 17 2014, அக்டோபர், இதழ் 60, இலக்கியம், சிறுகதை, முதன்மை 5 no comments இன்று லீவு நாள் வழக்கம் போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ யை போட்டு எடுத்த படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு அறையில் இருந்து மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை" என்று சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை…

    • 19 replies
    • 3.1k views
  2. நல்லெண்ணை நிறம். நீண்ட ஆரோக்கியமான விரல்கள். கருமையான கேசம். உருண்டை விழிகள். கிளிச்சொண்டு மூக்கு. கழுத்தில் பெயர் பட்டி. பெயரை வாசிக்கு முன்னர் கைப்பை மறைத்துக்கொள்கிறது. ஜேர்மன் பொறியியல் போன்ற உடல் அசைவுகள். அவள் ஒரு சஞ்சிகையினைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நல்லெண்ணைக்கும் கருமைக்கும் இடையில் ஒரு நிறம். குழந்தைக் கொழுப்பு வாலிபத்திலும் அவனோடு இருக்கிறது. மொழுமொழு கைகள். கொழுத்த கன்னங்கள். தலை நிறைய முடி. தலையினை இருக்கையில் சரித்து இருந்தபடி தூங்குகிறான். குறட்டை உரிமைக்குரல் போன்று ஒலிக்கிறது. அவள் காதிற்குள் இசையில்லை. கண்கள் சஞ்சிகையில். அரை அடி தள்ளி அவன் இருக்கை. சமரசமற்ற அவன் குறட்டை. அவள் இருப்பை அவனோ அவன் குறட்டையினை அவளோ உணர்ந்ததற்கான அறிகுறிகளே இல்…

  3. நினைவழியாத்தடங்கள் - 09 காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பால்ராஜ் அண்ணை அப்பொழுது தான் வெளியில் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். உடனே லக்ஸ்மன் அண்ணையைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தின் பின் அவசர அவசரமாக வெளியில் வந்தவர், உடனடியாக அங்கு இருந்தவர்களை புறப்படுமாறு கூறினார். இரண்டு வாகனங்களில் புறப்பட்டோம். லக்ஸ்மன் அண்ணையின் வாகனத்தில் ஏறிய பால்ராஜ் அண்ணை மற்றவர்களைப் ”பின்னால் வாங்கோ” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார். வாகனம் பண்டத்தரிப்புப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு அவசரத்தின் காரணம் புரியவில்லை. இராண…

  4. August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் . காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து , “அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" . நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் . காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் . “ந…

  5. கோழிமுட்டைக் கண்ணன்! அதுதான் பெருத்த முழிகொண்ட கணக்கு வாத்தியாரின் பட்டப்பெயர். இந்தப் பட்டப் பெயரை மாணவர்கள் அவருக்குச் சூட்டியிருப்பது வாத்தியாருக்கும் தெரியும். அதற்குப் பழிதீர்ப்பது போன்று, முட்டை முட்டையாகக் கணக்குகளை இடுவார்! நாங்கள்தான் அதனைப் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும். கோழிகளுக்குக்கூட 21 நாட்கள் அவகாசமுண்டு! ஆனால் எங்களுக்கோ...! இரண்டொரு நொடிகளில் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும்! சற்றுப் பிந்தினாலும் பென்சிலுக்கும் அவர் விரலுக்கும் இடையே அகப்படும் காதுமடல், அடுத்த நாள்வரை தொட முடியாதபடி வீங்கி வலிக்கும். அந்தப் பரிதவிப்பைப் பார்த்து அம்மாதான் எண்ணைபோட்டுத் தடவி ஒத்தணம் தந்து ஆறுதல்படுத்துவா. பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் நாங்கள் கிளித்தட்டோ, கிட்டிப்புள்ளோ…

  6. என்ன நடந்ததென்றால்.. நான் சங்கக்கடைக்கு போனேனா .. ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்.. ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்.. சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ... வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ... இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய் ... தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்.. காணவில்லை.. "நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா. சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது. பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி…

  7. ஒரு கிராமத்தில் முதலாளி ஒருவர் இருந்தார் . அவருக்கு கீழே சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் . ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன் செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம் அவருக்கு விருப்பமான, வார் அறுந்த செருப்பு காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று ஏய் இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில் கை வைத்து ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன் சற்று தயங்கி ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறா…

  8. இன்றைய சூழலில் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக கோடை காலக் களியாட்டங்களில் செய்யக் கூடிய (செய்ய வேண்டிய மாற்றங்கள்) மாற்றங்கள் தாயக மக்களின் அவல வாழ்க்கைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்பவை குறித்த என் மன ஆதங்கங்களை ஏதோ ஒரு படைப்பு மூலம் வெளிக் கொணர வேண்டும் என நினைத்தேன். அந்த எழுத்து வடிவம் குறித்து ஒரு குழப்பகரமான சூழலில் ஒரு நாடக வடிவில் இதனை வெளிக்கொணர முயற்சிக்கிறேன். நாடகப் பிரதிகளை எழுதுவது குறித்த எந்தவிதமான அனுபமும் எனக்கு இல்லை என்பதால் இது குறித்த உங்கள் விமர்சனங்களை தவறாது முன்வையுங்கள். குறிப்பாக நாடகப் பிரதிகளை எழுதுவதில் அனுபவமுள்ள பலரும் இங்கிருக்கிறீர்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் என்னைப் புடம் போட்டுக் கொள்ள பெரிதும் உதவும்.. அத்துடன் சர…

  9. 01 திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம். இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 2002…

  10. Started by putthan,

    நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர் விடைபெற்றார்... வழ‌மையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படி உரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே...... அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக பிர‌முகர்கள் பிரமாண்டமான‌ முறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில் தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள். பிரமாண்டமான‌ ஒரு மேடையை, புலம்பெய‌ர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர். …

  11. வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்.... அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட்…

  12. Started by sathiri,

    உதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன் முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண…

  13. Started by pri,

    ஊருக்குள் எல்லா இயக்கங்களும் உலவி திரிந்த ஒரு காலம் இருந்தது. விரும்பிய இயக்கத்துக்கு போவதுவும் வீண்பழி சுமத்தி யார்மீதும் குண்டுகள் பாயாத வாழ்வும் இருந்தது. அதுவெல்லாம் ஒரு நல்ல கனவு போல பின்னாளில் கலைந்து போனது. இந்திய இராணுவம் குடியிருந்த காலை பொழுதொன்றில் தம்பசெட்டியில் இருக்கிற ரவியின் வீட்டுக்குள் துப்பாக்கிகள் சுமந்த ஐந்து இளைஞர்கள் நுழைகிறார்கள். ரவியின் கைகளையும் கண்களையும் துணியால் கட்டி அவனை அழைத்துக் கொண்டு நடைதூரத்தில இருக்கிற குகனின் வீட்டுக்கு போகிறார்கள். ரவியின் மூலமாக குகனை கூப்பிடுகிறார்கள். வெளியில் வருகிற குகனையும் பிடித்து கைகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இளைஞர்களை தள்ளிவிட்டு குகன் பாய்ந்து ஓடிவிடுகிறான். தங்கள் பிடியில் இருந்த ரவியை சுட்ட…

    • 3 replies
    • 3k views
  14. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியி…

  15. அனுராதபுரப் புகையிரத நிலையத்தில் ஒரு பெருமூச்சோடு தனது பயணத்தின் பாதி தூரம் கடந்த நிம்மதிய்டன் தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தியது அன்றைய யாழ்தேவி! தனது பயணத்தின் பாதித் தூரம் கடந்த நிம்மதியுடன் வாசுகியும் தனது பயணப் பொதியைத் தோளில் தொங்கவிட்ட படியே யாழ்தேவியை விட்டு இறங்கினாள்! ஏழு வருடங்களுக்கு முன்னர் அங்கு ரீச்சர் வாசுகியாக இறங்கும் போதிருந்த பயமும், தயக்கமும் அவளிடமிருந்து விடை பெற்று நீண்ட காலம் போய் விட்டது போல இருந்தது! வழக்கமாக அவளுடன் கூடவே பயணிக்கும் மாம்பழம், பலாப்பழம், நல்லெண்ணெய், பனங்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவையும் அவளுடன் இன்று பயணிக்கவில்லை! பாரதி கண்ட புதுமை பெண்ணைப் போன்ற மனநிலையில் அனுராதபுரம் பஸ் நிலையத்தை நோக்கி அவளது கால்கள் நடந்து …

  16. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் …

  17. Started by putthan,

    "நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் . த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அ…

  18. அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., …

    • 7 replies
    • 3k views
  19. எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை வீதி செல்கிறது. அப்பாதையில் தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை. இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு. எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தான…

  20. வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அ…

  21. நாங்கள் சிறியவர்களாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும். காட்சியைக் காணாது கதையை மட்டும் நீங்கள் வாசிப்பதனால் உங்களுக்கு சிலவேளை சாதாரணமாக இருக்கலாம். அயலில் உள்ளவர்கள் நாங்கள் வயது வித்தியாசமின்றி விளையாட்டு நண்பர்களாக இருந்த காலம். எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். எங்கள் அயலில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் இருந்த மூத்த மகளுக்கு ஒருவருடன் காதல். அயலட்டை எல்லாம் ஒரே இது பற்றித்தான் கதை. எமக்குப் பெரிதாக விவரம் இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சமாவது விளங்கும்தானே. அவர்கள் வீட்டுக்குப் பின்புறமாக என் பெரியம்மாவின் வீடு இருந்தது. பெரியம்மா வீட்டுக்கு சாதாரணமாகச் செல்வதானால் சுற்றுப் பாதையில் செல்லவேண்டும். இவர்களின் வீட்டின் கு…

  22. தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள். பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை. பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும்…

  23. எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் . அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட…

  24. Started by putthan,

    அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்…

    • 21 replies
    • 2.9k views
  25. யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.