Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் ரியூசன் அவசியம்தானா?

Featured Replies

வணக்கம் உறவுகளே,

தாயகத்தில் ரியூசன் உருவானது எப்படி?  நீங்கள் எல்லோரும் ரியூசன் சென்றதற்கான காரணம் என்ன?  இன்றைய காலகட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அதிகமான செலவாக ரியூசனே உள்ளது.  தாயகத்தில் பிள்ளைகள் அதிகம் பெறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.  நாம் நினைத்தால் இந்தச் செலவைக் குறைக்கலாம்.  நாளடைவில் ரியூசனை இல்லாமல்கூடச் செய்து விடலாம்.  ரியூசன் பற்றிய உங்களின் அனுபவங்களைக் கருத்துக்களை கூறுங்கள்.  இந்த விடயத்தில் உங்கள் அனைவரின் உதவியையும் மிகவும் எதிர்பார்க்கிறேன்.  அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியில் ஆசிரியர்கள் ஒழுங்காக படிப்பித்தால் ரியுஷன் என்ற ஒரு நிறுவனம் வந்திருக்காது.

அத்துடன் போட்டி நிறைந்த இந்த உலகத்தில், முன்னேற பள்ளியில் படிப்பதைவிட அதிகம் படிக்க வேண்டியுள்ளது சோதனையில் அதிக புள்ளிகள் எடுப்பதற்கு.

வசதியுள்ளவர்கள் சோதனையில் சித்தி எய்தாவிட்டாலும் வேறு வழியில் முன்னுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். கஷ்டப்பட்டவர்களுக்கு, ஒரே ஒரு தெரிவு - நன்றாக படித்து பல்கலைக்கழகம் செல்வதே.

நான் ரியூஷனுக்குப் போனதே உயர்தரத்தில் மட்டுமே, அதுவும் இலவசம், நியூ மஸ்டரில் வேலை செய்த ஒரு அண்ணாவின் உதவியால். நாகநாதன் சேர் என்னை பணம் வாங்காமல் எல்லாப்பாடங்களுக்கு அனுமதியளித்தார். அத்துடன் ஊரில் படித்துவிட்டு இருக்கும் அண்ணா அக்காமாரிடமும் படித்தேன்.

படிக்க விரும்பினால் ஊரில் உள்ள படித்த அண்ணா அக்காமார் நன்றாக உதவி செய்வார்கள் பணம் வாங்காமல்.

முதலில் மாணவனுக்கு படிப்பில் அக்கறையும் நம்பிக்கையும் கற்பனையும் வேணும் முன்னேற வேண்டுமென்று.

எனக்கு குமாரண்ணா தான் கணிதத்தை படிப்பித்தார், அவரிடம் படித்தால்தான் கணிதமே என் சுவாசமானது.

நான் படித்தபின் எங்கள் ஊரில், பக்கத்து ஊர், ஏன் என்னுடன் படித்தவர்களுக்கு கூட இலவசமாக கொழும்பு வரும் வரை படிப்பித்துள்ளேன். எங்கள் வாசிகசாலைதான் முழு நேர இலவச ரியூசன் பல மாணவர்களுக்கு.

என் நண்பனும் விஞ்ஞானம், தாவரவியல், இரசாயனம், பொளதீகம் படிப்பித்தான் பலருக்கு இலவசமாக.

ஊரில் உள்ள படித்தவர்களை அனுகினால் இலவசமாக நன்றாக படிப்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி தான் முதல் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரியூஷன் மட்டும் இல்லையன்றால் உருப்பட்டிருக்க வழியில்லை என்பது எனது எண்ணம். பள்ளியில் படிப்பித்தது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. மற்றும் ரியூஷன் போவது வீட்டு நேரத்தில் வற்புறுத்தி படிப்பதற்கு சமன்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் காலத்தில் போரால் பள்ளிகள் அடிக்கடி மூடப்பட்ட நிலையில்.. சிறீலங்கா அரசின் பொருண்மியத் தடைகளால் ஆய்வு கூட வசதிகள் இல்லாமல் போன நிலையில்.. கடும் விமானத் தாக்குதல்கள்.. ஷெல் அடிகள் மத்தியிலும்.. எம் போன்ற மாணவர்கள் கற்றுத் தேற தனியார் கல்வி நிறுவனங்கள் பெரிதும் உதவின.

அன்றைய காலத்தில்.. தமிழீழ விடுதலைப்புலிகள் சில கட்டுப்பாடுகளோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்பட ஊக்கமளித்திருந்தனர். அதனால்.. போர்ச் சூழலிலும்.. வீழ்ச்சி இன்றி எமது மாணவர்கள் பல்கலைக்கழகங்களை நிரப்ப முடிந்தது..!

இன்று நிலைமையில் பாடசாலைக் கல்வியில்.. முன்னேற்றம் இருந்தாலும்.. இப்போதும் எல்லாம் முழுமை அடைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாத சூழலில்.. கட்டுப்பாடுகளுடன் கூடிய தனியார் கல்வி நிலையங்களின் தேவை சிறீலங்காவில் பிரதான போட்டிப் பரீட்சைகளை எதிர்கொள்ள அவசியம் என்பதே எங்கள் முடிவு. எங்கள் அனுபவத்தின் வாயிலான அறிவுரை என்றும் சொல்லலாம். இந்த நிலை பொதுவாக வெளிநாடுகளுக்கு தேவையில்லை. மாணவர்கள் வெளியார் கல்விக்கு பள்ளிகளில் ஊக்குவிக்கப்பட்டால் அன்றி வெளிநாட்டில் ரியூசன் அவசியமில்லை.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் டியூசனுக்குப் போனதில்லை.உறவினர் முறையான  அண்ணா , சின்னம்மா,  மாமாமார் பாடங்கள் சொல்லித்தருவினம். ஆனால் என்ன தாலியக் கட்டுவான்கள் குட்டுற குட்டில மூளையோடு கண் ,காது , கை ,( வாயும் மூக்கும் தவிர) எல்லாம் ஒவர்டைம் செய்யும் . :o:rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் சில பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை பெரிதும் பொருட்படுத்துவது இல்லை. சிலர் வில்லன்கள்போல் நடந்து கொள்வார்கள். சில வேளைகளில் பள்ளிக்கூடம் போவதே கசப்பான அனுபவம்.

ஆனால் தனியார் வகுப்புகள் மாணவர்களின் கட்டணத்தொதையை நம்பி நடத்தப்படுவதால் சற்று கூடுதல் மரியாதையை எதிர்பார்க்க முடியும். பள்ளிகளில் வில்லன்கள்போல் நடந்துகொள்பவர்கள் தனியார் வகுப்புகளில் மிதமாக நடந்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

இப்படி சொன்னால் உங்களிடம் ரியூசனுக்கு ஆட்கள் வர மாட்டினம், வருமானம் கெட்டுப்போடும் பாருங்கோ.. :rolleyes:

பாடசாலை ஆசிரியர்கள் எல்லாருமே திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. யாழ் இந்துவில் ஏ எல் செய்யும் போது ஒரு ஆசிரியர் இரசாயனம் கற்பிக்க வந்தார். இரண்டு கேள்விகள் கேட்டோம் என்றால்.. இன்றைக்கு எனக்கு மூட் அவுட் உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருந்தால் செய்யுங்கோ.. என்று சொல்வார். யாழ் இந்துவிலேயே நிலமை இப்படி என்றால்..
 
அவுஸ் இல் கூட பாடசாலைகளில் பெரிதாகக் கற்பிக்கப் படுவதாக இல்லை. இங்குள்ள தமிழ்ப் பெற்றோர்கள் பிள்ளைகளை பல ரியூஷன்களுக்கு அனுப்புவார்கள். போட்டி அதிகம். சீனர்களுடன் போட்டி போடவேண்டும்.
 
என் பிள்ளையை ரியூஷன் எதுக்கும் அனுப்பியதில்லை. இணையத்தில் உள்ள கல்வித் தளங்களில் பயிற்சிகள் செய்ய விடுவேன். வருடத்திற்கு 300 டொலர் மட்டில் செலவாகும்.   
 
இப்படி மென்பொருள்களைப் பாவித்து இலவசமாக ஊரில் கல்வி கற்பிக்கலாம். என்ன.. கணனி அல்லது டப்ளட்டுகள் தேவைப்படும். டப்ளட்டுகளின் விலையும் குறைந்து செல்வதால் இது ஒருவேளை சாத்தியப்படலாம்.

ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி கல்வி மிகைப்படுத்தப்பட்ட ஒரு விசயம். அது பூதகரமாக்கப்பட்ட விசயமாக இருக்கின்றது. இதன் பின்னணியில் கல்வி அறிவுக்கானது என்பதுக்கு அப்பாற்பட்டு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி என்ற நிலை காரணமாக உள்ளது. இவ்வாறான சூழல் காரணமாக எவ்வளவு தான் கல்வி கற்றாலும் அந்த சமூகங்கள் மேன் நிலை அடைவதில்லை மாறாக என்னுமொருவனுக்கு அடிமைச்சேவகம் செய்யும் நிலையிலேயே தொடர்கின்றது. ஒரு நாட்டை உருவாக்குதல் சுதந்திரம் சுயமரியாதையோடு வாழ்தல் நாட்டின் வளங்களை பாதுகாத்தல் நாட்டுக்கு சரியான தலமைகளளை தேர்ந்தெடுத்தல் சமூகங்களின் ஒற்றுமையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துதல் என்ற எந்த அடிப்படை விசயத்திலும் கல்வி அறிவு வெற்றியை காணவில்லை. கல்வி பிழைப்புக்கான ஒரு கருவியாகவே உள்ளது தவிர வாழ்வதற்கான வழியாக இல்லை. அதனால், ரியுசன் போனாலும் சரி விட்டாலும் சரி எஞ்சினீயர் டொக்டர் பேராசிரியர் என்ற எந்த நிலை ஆனாலும் சரி அதனால் சுதந்திரமோ சுயமரியாதையோ சமூக மேம்பாடோ இருக்கப்போவதில்லை. நாடோ நாட்டின் வளமோ பாதுகாக்கப்படப்போவதும் இல்லை.

  • தொடங்கியவர்

பள்ளியில் ஆசிரியர்கள் ஒழுங்காக படிப்பித்தால் ரியுஷன் என்ற ஒரு நிறுவனம் வந்திருக்காது.

அத்துடன் போட்டி நிறைந்த இந்த உலகத்தில், முன்னேற பள்ளியில் படிப்பதைவிட அதிகம் படிக்க வேண்டியுள்ளது சோதனையில் அதிக புள்ளிகள் எடுப்பதற்கு.

வசதியுள்ளவர்கள் சோதனையில் சித்தி எய்தாவிட்டாலும் வேறு வழியில் முன்னுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். கஷ்டப்பட்டவர்களுக்கு, ஒரே ஒரு தெரிவு - நன்றாக படித்து பல்கலைக்கழகம் செல்வதே.

நான் ரியூஷனுக்குப் போனதே உயர்தரத்தில் மட்டுமே, அதுவும் இலவசம், நியூ மஸ்டரில் வேலை செய்த ஒரு அண்ணாவின் உதவியால். நாகநாதன் சேர் என்னை பணம் வாங்காமல் எல்லாப்பாடங்களுக்கு அனுமதியளித்தார். அத்துடன் ஊரில் படித்துவிட்டு இருக்கும் அண்ணா அக்காமாரிடமும் படித்தேன்.

படிக்க விரும்பினால் ஊரில் உள்ள படித்த அண்ணா அக்காமார் நன்றாக உதவி செய்வார்கள் பணம் வாங்காமல்.

முதலில் மாணவனுக்கு படிப்பில் அக்கறையும் நம்பிக்கையும் கற்பனையும் வேணும் முன்னேற வேண்டுமென்று.

எனக்கு குமாரண்ணா தான் கணிதத்தை படிப்பித்தார், அவரிடம் படித்தால்தான் கணிதமே என் சுவாசமானது.

நான் படித்தபின் எங்கள் ஊரில், பக்கத்து ஊர், ஏன் என்னுடன் படித்தவர்களுக்கு கூட இலவசமாக கொழும்பு வரும் வரை படிப்பித்துள்ளேன். எங்கள் வாசிகசாலைதான் முழு நேர இலவச ரியூசன் பல மாணவர்களுக்கு.

என் நண்பனும் விஞ்ஞானம், தாவரவியல், இரசாயனம், பொளதீகம் படிப்பித்தான் பலருக்கு இலவசமாக.

ஊரில் உள்ள படித்தவர்களை அனுகினால் இலவசமாக நன்றாக படிப்பிப்பார்கள்.

உண்மைதான் உடையார்.  ஆனால் தாயகத்தில் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்வதில்லையே.  ஊரில் உள்ள படித்தவர்கள் இப்போதும் படிக்கின்ற பிள்ளைகளுக்கு உதவுவார்களா உடையார்?   அப்படி உதவுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே எனக்குத் தெரிகிறது.  

எங்கள் காலத்தில் போரால் பள்ளிகள் அடிக்கடி மூடப்பட்ட நிலையில்.. சிறீலங்கா அரசின் பொருண்மியத் தடைகளால் ஆய்வு கூட வசதிகள் இல்லாமல் போன நிலையில்.. கடும் விமானத் தாக்குதல்கள்.. ஷெல் அடிகள் மத்தியிலும்.. எம் போன்ற மாணவர்கள் கற்றுத் தேற தனியார் கல்வி நிறுவனங்கள் பெரிதும் உதவின.

அன்றைய காலத்தில்.. தமிழீழ விடுதலைப்புலிகள் சில கட்டுப்பாடுகளோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்பட ஊக்கமளித்திருந்தனர். அதனால்.. போர்ச் சூழலிலும்.. வீழ்ச்சி இன்றி எமது மாணவர்கள் பல்கலைக்கழகங்களை நிரப்ப முடிந்தது..!

இன்று நிலைமையில் பாடசாலைக் கல்வியில்.. முன்னேற்றம் இருந்தாலும்.. இப்போதும் எல்லாம் முழுமை அடைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாத சூழலில்.. கட்டுப்பாடுகளுடன் கூடிய தனியார் கல்வி நிலையங்களின் தேவை சிறீலங்காவில் பிரதான போட்டிப் பரீட்சைகளை எதிர்கொள்ள அவசியம் என்பதே எங்கள் முடிவு. எங்கள் அனுபவத்தின் வாயிலான அறிவுரை என்றும் சொல்லலாம். இந்த நிலை பொதுவாக வெளிநாடுகளுக்கு தேவையில்லை. மாணவர்கள் வெளியார் கல்விக்கு பள்ளிகளில் ஊக்குவிக்கப்பட்டால் அன்றி வெளிநாட்டில் ரியூசன் அவசியமில்லை.  :icon_idea:

சிறிய வயதிலிருந்தே ரியூசனுக்கு அனுப்பினால்தான் அவர்களால் ஓரளவேனும் மதிப்பெண்களைப் பெறக் கூடியதாக இருக்கிறது.  குப்பிவிளக்கில் படித்து பல்கலைக்கழகம் முடித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.  அங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் எப்படி வைத்திருக்கலாம் என்பதற்காகவும், அவர்களின் கட்டணங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காகவே இந்தத் திரியைத் திறந்தேன்.  உங்களின் அனுபவத்திலிருந்து அதற்கான ஆலோசனைகளைத் தாருங்கள்.  

நாங்கள் டியூசனுக்குப் போனதில்லை.உறவினர் முறையான  அண்ணா , சின்னம்மா,  மாமாமார் பாடங்கள் சொல்லித்தருவினம். ஆனால் என்ன தாலியக் கட்டுவான்கள் குட்டுற குட்டில மூளையோடு கண் ,காது , கை ,( வாயும் மூக்கும் தவிர) எல்லாம் ஒவர்டைம் செய்யும் . :o:rolleyes::)

படித்த உறவினர்கள் இல்லாதவர்கள் ரியூசனுக்குச் செல்ல வேண்டிய அவசியமுள்ளது. படித்த சொந்தக்காரர்களிலும் பலர் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை.  ஒரு காரணம், போட்டி, பொறாமை மற்றது நேரமின்மை.

அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் சில பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை பெரிதும் பொருட்படுத்துவது இல்லை. சிலர் வில்லன்கள்போல் நடந்து கொள்வார்கள். சில வேளைகளில் பள்ளிக்கூடம் போவதே கசப்பான அனுபவம்.

ஆனால் தனியார் வகுப்புகள் மாணவர்களின் கட்டணத்தொதையை நம்பி நடத்தப்படுவதால் சற்று கூடுதல் மரியாதையை எதிர்பார்க்க முடியும். பள்ளிகளில் வில்லன்கள்போல் நடந்துகொள்பவர்கள் தனியார் வகுப்புகளில் மிதமாக நடந்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

உண்மை.  சில மாணவர்கள் பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியர்களிடமே ரியூசன் சென்றதுண்டு.  அப்படித் தங்களிடம் வராது வேறு இடத்திற்குச் சென்றவர்களைப் பாரபட்சமாக நடத்தியதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பாடசாலை ஆசிரியர்கள் எல்லாருமே திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. யாழ் இந்துவில் ஏ எல் செய்யும் போது ஒரு ஆசிரியர் இரசாயனம் கற்பிக்க வந்தார். இரண்டு கேள்விகள் கேட்டோம் என்றால்.. இன்றைக்கு எனக்கு மூட் அவுட் உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருந்தால் செய்யுங்கோ.. என்று சொல்வார். யாழ் இந்துவிலேயே நிலமை இப்படி என்றால்..
 
அவுஸ் இல் கூட பாடசாலைகளில் பெரிதாகக் கற்பிக்கப் படுவதாக இல்லை. இங்குள்ள தமிழ்ப் பெற்றோர்கள் பிள்ளைகளை பல ரியூஷன்களுக்கு அனுப்புவார்கள். போட்டி அதிகம். சீனர்களுடன் போட்டி போடவேண்டும்.
 
என் பிள்ளையை ரியூஷன் எதுக்கும் அனுப்பியதில்லை. இணையத்தில் உள்ள கல்வித் தளங்களில் பயிற்சிகள் செய்ய விடுவேன். வருடத்திற்கு 300 டொலர் மட்டில் செலவாகும்.   
 
இப்படி மென்பொருள்களைப் பாவித்து இலவசமாக ஊரில் கல்வி கற்பிக்கலாம். என்ன.. கணனி அல்லது டப்ளட்டுகள் தேவைப்படும். டப்ளட்டுகளின் விலையும் குறைந்து செல்வதால் இது ஒருவேளை சாத்தியப்படலாம்.

வெளிநாடுகளில் ரியூசன் அவசியமற்றது.  இங்கு பாடசாலை தொடங்க முன்பும் பின்னரும் அரை மணிநேரம் ஆசிரியர்கள் வகுப்புகளில் இருப்பார்கள்.  நாம் அவர்களிடம் சென்று சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.  அவர்களின் ஓய்வு நேரங்களிலும் நாம் சென்று சந்தேகங்களைத் தீர்க்கலாம்.

ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி கல்வி மிகைப்படுத்தப்பட்ட ஒரு விசயம். அது பூதகரமாக்கப்பட்ட விசயமாக இருக்கின்றது. இதன் பின்னணியில் கல்வி அறிவுக்கானது என்பதுக்கு அப்பாற்பட்டு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி என்ற நிலை காரணமாக உள்ளது. இவ்வாறான சூழல் காரணமாக எவ்வளவு தான் கல்வி கற்றாலும் அந்த சமூகங்கள் மேன் நிலை அடைவதில்லை மாறாக என்னுமொருவனுக்கு அடிமைச்சேவகம் செய்யும் நிலையிலேயே தொடர்கின்றது. ஒரு நாட்டை உருவாக்குதல் சுதந்திரம் சுயமரியாதையோடு வாழ்தல் நாட்டின் வளங்களை பாதுகாத்தல் நாட்டுக்கு சரியான தலமைகளளை தேர்ந்தெடுத்தல் சமூகங்களின் ஒற்றுமையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துதல் என்ற எந்த அடிப்படை விசயத்திலும் கல்வி அறிவு வெற்றியை காணவில்லை. கல்வி பிழைப்புக்கான ஒரு கருவியாகவே உள்ளது தவிர வாழ்வதற்கான வழியாக இல்லை. அதனால், ரியுசன் போனாலும் சரி விட்டாலும் சரி எஞ்சினீயர் டொக்டர் பேராசிரியர் என்ற எந்த நிலை ஆனாலும் சரி அதனால் சுதந்திரமோ சுயமரியாதையோ சமூக மேம்பாடோ இருக்கப்போவதில்லை. நாடோ நாட்டின் வளமோ பாதுகாக்கப்படப்போவதும் இல்லை.

உலகில் எங்கு வேலை செய்தாலும் நாம் அந்தக் கம்பனிகளுக்கு அடிமைகளாகத்தான் வேலை செய்கிறோம்.  என்னவொன்று, நன்றாகப் படித்திருந்தால் கொஞ்சமேனும் சுதந்திரம் இருக்கும்.  படிக்காமலே இருந்தால் நாம் வாயைக்கூடத் திறக்காமல்தான் வேலை செய்ய வேண்டும்.

நான் தாயகத்தில் இருந்த காலத்தில் ரியூசனுக்குச் சென்றது ஒரு வருடம் மட்டுமே.  போர்ச்சூழல் காரணமாக ஐந்து தடவைகளுக்கு மேல் பாடசாலை மாறினேன்.  முதலில் எங்கள் ஊரிலிருந்து வேறொரு ஊருக்குச் சென்று படித்தேன்.  அதன் பின்னர், இந்தியாவில் ஒன்றரை வருடம்.  பின்னர் மீண்டும் யாழ்.  அதன் பின்னர், 1 வருடம் பாடசாலை செல்லவில்லை.  பின்னர் மீண்டும் பழைய பாடசாலைக்குச் சென்று படித்தேன்.  இந்தக் காலகட்டத்தில்தான் நான் ரியூசனுக்குச் சென்றதும். கனடா வந்ததும் எனக்கு வைத்த பரீட்சையில் நான் தேறவே இல்லை.  தமிழ் அதிபர் ஒருவர்தான் மதிப்பீடுகளைச் செய்வார்.  எனது மதிப்பெண்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.  அதனால் ஒரு வகுப்புக் குறைத்தே என்னைச் சேர்த்தார்.   இங்கு நான் எந்த ரியூசனுக்கும் சென்றதில்லை.  ஆனால், அந்தக் காலகட்டத்தில் இங்கு பதின்மூன்றாம் வகுப்புவரை இருந்ததால் ஐந்து வருடத்தில் நல்ல மதிப்புள்ளதொரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன்.  அடிப்படை இல்லாமல் இருந்திருந்தாலும் ஐந்து வருடத்தில் என்னால் உயர்தர பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறக் கூடியதாக இருந்தது.  அதற்காக நான் முனைந்து படித்தது என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.  விளையாட்டாகத்தான் படித்தேன்.  அப்படியிருந்தும் என்னால் அதிக மதிப்பெண்களைப் பெறக் கூடியதாக இருந்தது. 

எனது அண்ணா ஒருவர் தாயகத்தில் பாடசாலைக்கே வரமாட்டார்.  எமது பாடசாலையில் ஆசிரியர்கள் அப்படியொரு பாரபட்சம்.  அதனால் அவர் படித்தது முழுவதும் ரியூசனில்தான்.  அந்த வருடம் அவர்தான் பாடசாலையில் O/L இல் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  

என்னைப் பொறுத்தவரை ரியூசனுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லைத்தான்.  ஆனால், இப்போது தாயகத்தில் பாடசாலைக்கு மட்டும் சென்று அதிக மதிப்பெண்களைப் பெறமுடியுமா என்பதே எனது கேள்வி.    எம்மிடம் உதவி கேட்பவர்கள் எல்லோரும் ரியூசன் செல்வதற்குத் துவிச்சக்கர வண்டியும், ரியூசனுக்கான செலவும் எனக் கேட்டே வருகிறார்கள்.  பலர் தரமான தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவே முனைகிறார்கள்.  அப்படிச் செல்வதற்கு அவர்கள் அதிகதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.  அங்கு பல அமைப்புகள், ஊர்ச்சங்கங்கள் கட்டடங்களைக் கட்டிப் பல அபிவிருத்திகளைச் செய்கிறார்கள்.  ஆனால், அங்குள்ள பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா என அவதானிக்கிறார்களா?  அல்லது ஊரிலேயே  குறைந்த கட்டணத்தில் தரமான ரியூசன்களை நடத்துகிறார்களா என்பதே எனது கேள்வி.  இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருப்பவர்களால் இவ்வாறு ரியூசனுக்குச் செலவழிக்க முடியுமா?  ரியூசனுக்குக் கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளின் எதிர்காலம்தான் என்ன?  படிப்பதற்குரிய திறமை இருந்தும் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதல்லவா?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னாலை இவ்வளவுதான் இஞ்சை படிப்பிக்கேலும்.சோதினைக்கு படிக்கோணுமெண்டால் அங்கை ரியூசன் நடத்துறன்.அங்கை வாங்கோ.....எண்டு சொன்ன வாத்திமார் எக்கச்சக்கம் :icon_idea:
 
அப்ப அங்கை ரியூசனுக்கு போறதும் ஒரு பாஷன் கண்டியளோ...
 
பள்ளிக்கூடத்துக்கு வெள்ளைச்சட்டை :(
ரியூசனுக்கு கலர்ச்சட்டை.... :wub:  :wub: நான் விக்னாவிலை கலர் காட்டினவன்.... :D
  • கருத்துக்கள உறவுகள்

என் அனுபவப்படி மாணவர்களுக்கு கற்பித்தல் ஒரு கலை எனலாம்.

8ம் வகுப்பு வரை எனக்கு கணிதம் மிகவும் கடினமான பாடமாக இருந்தது.

ஆண்டிறுதி பரீட்சையில் 10 அல்லது 15 புள்ளிகள்தான் பெறுவேன்.

9ம் வகுப்பிற்கு சென்றபிறகு கொழும்பில் ஒரு பிரபல டியுசனில் கணிதம் படித்தேன் அவர் படிப்பித்த முறை இலகுவாக விளங்கிக்கொள்ள கூடிதாக இருந்தது, மேலும், மேலும் பயிற்சி செய்ய ஆர்வத்தையும் தூண்டியது. பின்பு சாதரண தரத்தில் விசேட சித்தி அடைந்தேன். ஆங்கிலமும் இதேதான் போன்று படித்தேன்.

பாடசாலையிலும் இதுபோல் இலகுவாக கற்பிக்க ஒருவரும் இல்லை.

சமூகக்கல்வி பாடம் படிப்பித்த‌ ஆசிரியர் மிக சிறப்பாக படிப்பித்தார் எனவே ஒருவரும் இப்பாடத்திற்கு டியுசன் செல்லவில்லலை ஆனால் அப்பாடத்தில் எல்லோருக்கும் நல்ல பெறுபேறு கிடைத்தது.

பல ஆசிரியர்கள் ஒழுங்காக கற்பிற்பதில்லை, பணத்திற்காக டியுசனில் படிப்கின்றார்கள்.

என்னை பொருத்தவரை ஆசிரியகள் பாடசலையில் ஒழுங்காக கற்பித்தால் டியுசன் போக வேண்டியதில்லை.

ஆனாலும் பாருங்கோ டியூசனிலும் வார இறுதியில், அந்த வயதில் ஆண்கள் பெண்கள் ஒன்றாக இருந்து பல பாடசாலை மாணவ, மாணவிகள் கலந்து, ஆசிரியரையும் குழப்பி, சிரீயசாக படிப்பிக்கும் போது இரட்டை அர்த்தம் ஜோக் அடித்து அதற்கு பெண்பிள்ளைகள் எல்லோரும் 'கொல்' என சிரிக்கும்போது இருக்கின்றதே சந்தோசம் அதை அனுபவித்தால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் போட்டி படிப்பு உள்ள சூழ்நிலையில் ரியுசன் அவசியம் என்றே சொல்வேன்.காரணம் பாடசாலைகளில் பல அசிரியர்கள் ஒழுங்காகக் கடமையுணர்வோடு படிப்பிப்பதில்லை.ஒர சில விதி விலக்குகளும் உண்டு.அத்துடன் ரியுசன் மூலம் வௌ;வேறு பாடசாலைகளைச் சேர்ந்தவர்களும் திறமையான ஒரே ஆசிரியரிடம் படிக்கக் கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே,

தாயகத்தில் ரியூசன் உருவானது எப்படி?  நீங்கள் எல்லோரும் ரியூசன் சென்றதற்கான காரணம் என்ன?  இன்றைய காலகட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அதிகமான செலவாக ரியூசனே உள்ளது.  தாயகத்தில் பிள்ளைகள் அதிகம் பெறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.  நாம் நினைத்தால் இந்தச் செலவைக் குறைக்கலாம்.  நாளடைவில் ரியூசனை இல்லாமல்கூடச் செய்து விடலாம்.  ரியூசன் பற்றிய உங்களின் அனுபவங்களைக் கருத்துக்களை கூறுங்கள்.  இந்த விடயத்தில் உங்கள் அனைவரின் உதவியையும் மிகவும் எதிர்பார்க்கிறேன்.  அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

வணக்கம்  தமிழச்சி

இது போட்டி காரணமாக  உருவாகி

இன்று எம்மையே  விழுங்கி  நிற்கிறது

இனி  இதை விட்டுவிடமுடியுமா என தெரியவில்லை..

லண்டனில் இதன் தாக்கம் மிகமிக  அதிகம்

ஆனால் பிரான்சில் இது இல்லை

எனது மக்களை  ஒரு போதும் இது போன்ற  வகுப்புக்களுக்கு நான் அனுப்பியதில்லை

ஆனால் பரீட்சை நேரங்களில் எதாவது பாடங்களில் சிக்கல்கள்  வந்தால்

அவர்களது உயர்தர மாணவர்களுக்கு பணம் கொடுத்து 

தெளிவாக்கியுள்ளேன்...

  • தொடங்கியவர்

என்னாலை இவ்வளவுதான் இஞ்சை படிப்பிக்கேலும்.சோதினைக்கு படிக்கோணுமெண்டால் அங்கை ரியூசன் நடத்துறன்.அங்கை வாங்கோ.....எண்டு சொன்ன வாத்திமார் எக்கச்சக்கம் :icon_idea:
 
அப்ப அங்கை ரியூசனுக்கு போறதும் ஒரு பாஷன் கண்டியளோ...
 
பள்ளிக்கூடத்துக்கு வெள்ளைச்சட்டை :(
ரியூசனுக்கு கலர்ச்சட்டை.... :wub:  :wub: நான் விக்னாவிலை கலர் காட்டினவன்.... :D

ஆறாம் வகுப்புவரை நான் கணிதத்தில் புலியாக இருந்தேன்.   என்னால் இவ்வளவுதான் படிப்பிக்க முடியும்.  மேலதிக படிக்க விரும்பினால் என்னிடம் வா என்ற மனநிலை கொண்ட ஆசிரியர்களால் எனது கணிதப் புலமையே இல்லாமல் போய் விட்டது.  என்னைப் பொறுத்தவரை, இந்த ரியூசனால் பல ஏழை மாணவர்களின் படிப்பே வீணாகிவிட்டது என்றுதான் கூறுவேன்.  

நான் ரியூசன் போகாததற்குக் காரணம் பொருளாதாரம் அல்ல.  எனது ஊரில் ரியூசன் இருக்கவில்லை.  அடுத்த ஊரில் சென்றுதான் படிக்க வேண்டும்.  அந்தக் காலகட்டத்தில் பெண்களை மாலை நேரத்திற்குப் பின்னர், ரியூசனுக்கு அனுப்ப எனது அப்பா விரும்பவில்லை.  அதனால் எனக்கு ரியூசன் கட்.   

என் அனுபவப்படி மாணவர்களுக்கு கற்பித்தல் ஒரு கலை எனலாம்.

8ம் வகுப்பு வரை எனக்கு கணிதம் மிகவும் கடினமான பாடமாக இருந்தது.

ஆண்டிறுதி பரீட்சையில் 10 அல்லது 15 புள்ளிகள்தான் பெறுவேன்.

9ம் வகுப்பிற்கு சென்றபிறகு கொழும்பில் ஒரு பிரபல டியுசனில் கணிதம் படித்தேன் அவர் படிப்பித்த முறை இலகுவாக விளங்கிக்கொள்ள கூடிதாக இருந்தது, மேலும், மேலும் பயிற்சி செய்ய ஆர்வத்தையும் தூண்டியது. பின்பு சாதரண தரத்தில் விசேட சித்தி அடைந்தேன். ஆங்கிலமும் இதேதான் போன்று படித்தேன்.

பாடசாலையிலும் இதுபோல் இலகுவாக கற்பிக்க ஒருவரும் இல்லை.

சமூகக்கல்வி பாடம் படிப்பித்த‌ ஆசிரியர் மிக சிறப்பாக படிப்பித்தார் எனவே ஒருவரும் இப்பாடத்திற்கு டியுசன் செல்லவில்லலை ஆனால் அப்பாடத்தில் எல்லோருக்கும் நல்ல பெறுபேறு கிடைத்தது.

பல ஆசிரியர்கள் ஒழுங்காக கற்பிற்பதில்லை, பணத்திற்காக டியுசனில் படிப்கின்றார்கள்.

என்னை பொருத்தவரை ஆசிரியகள் பாடசலையில் ஒழுங்காக கற்பித்தால் டியுசன் போக வேண்டியதில்லை.

ஆனாலும் பாருங்கோ டியூசனிலும் வார இறுதியில், அந்த வயதில் ஆண்கள் பெண்கள் ஒன்றாக இருந்து பல பாடசாலை மாணவ, மாணவிகள் கலந்து, ஆசிரியரையும் குழப்பி, சிரீயசாக படிப்பிக்கும் போது இரட்டை அர்த்தம் ஜோக் அடித்து அதற்கு பெண்பிள்ளைகள் எல்லோரும் 'கொல்' என சிரிக்கும்போது இருக்கின்றதே சந்தோசம் அதை அனுபவித்தால் தெரியும்.

எனது இப்போதைய கவலை எல்லாம் அங்கிருக்கும் ஏழை மாணவர்கள் பற்றியதே.  முன்னரே ரியூசன் கட்டணம் அதிகமாக இருக்கும்.  இப்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களால் எவ்வாறு இவற்றை எதிர்கொள்ள முடியும் என்பதே.  இதனால் எமது சந்ததியின்  வாழ்வியலே பாதிக்கப்படுகிறதே என்பதுதான்.  

என்னைப்பொறுத்தவரையில் போட்டி படிப்பு உள்ள சூழ்நிலையில் ரியுசன் அவசியம் என்றே சொல்வேன்.காரணம் பாடசாலைகளில் பல அசிரியர்கள் ஒழுங்காகக் கடமையுணர்வோடு படிப்பிப்பதில்லை.ஒர சில விதி விலக்குகளும் உண்டு.அத்துடன் ரியுசன் மூலம் வௌ;வேறு பாடசாலைகளைச் சேர்ந்தவர்களும் திறமையான ஒரே ஆசிரியரிடம் படிக்கக் கூடியதாக இருக்கும்.

ரியூசன் நிச்சயமாகத் தேவையில்லை.  உயர்தரப் பாடங்களின்போது மட்டும் சில வேளைகளில் தேவைப்படலாம்.  மற்றும்படி, பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலே போதுமானது.  பெற்றோரின் ஊக்குவிப்பு இருந்தால் நிச்சயம் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.  

வணக்கம்  தமிழச்சி

இது போட்டி காரணமாக  உருவாகி

இன்று எம்மையே  விழுங்கி  நிற்கிறது

இனி  இதை விட்டுவிடமுடியுமா என தெரியவில்லை..

லண்டனில் இதன் தாக்கம் மிகமிக  அதிகம்

ஆனால் பிரான்சில் இது இல்லை

எனது மக்களை  ஒரு போதும் இது போன்ற  வகுப்புக்களுக்கு நான் அனுப்பியதில்லை

ஆனால் பரீட்சை நேரங்களில் எதாவது பாடங்களில் சிக்கல்கள்  வந்தால்

அவர்களது உயர்தர மாணவர்களுக்கு பணம் கொடுத்து 

தெளிவாக்கியுள்ளேன்...

நானும் அப்படித்தான் படித்தேன் விசுகு.  கனடாவில் நான் எந்த வகுப்புகளுக்கும் சென்றதில்லை.  ஆனால், இன்று கனடாவிலும் இது ஊறிப்போயிருக்கிறது.  ரியூசன் மூலம் நாம் பிள்ளைகளின் சிந்திக்கும் திறமையை முடக்குகிறோம் என்றே கூறுவேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நான் ரியூசன் வகுப்புக்கு போயிருந்த படியால் தான்....
பரீட்சையில்.... நல்ல புள்ளிகள் பெறக் கூடியதாக இருந்தது.

ஆனால்... இங்கு எனது பிள்ளைகள், ரியூசன் வகுப்பிற்கு சென்றதில்லை.
மாறாக... சக மாணவர்களுக்கு ரியூசன் சொல்லிக் கொடுத்து, "பொக்கற் மணியாக" பணத்தை பெற்றுக் கொள்வார்கள்.

பெற்றோரின் ஊக்குவிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு ரியூசன் தேவையில்லை சிறி.  படிப்பறிவற்றவர்களின் பிள்ளைகளுக்குச் சிலநேரம் ரியூசன் தேவைப்படலாம்.  அவர்கள்கூட ஆசிரியர்களிடம் கேட்டே படிக்கலாம்.  ஆனால், ரியூசன் போனால் மட்டும்தான் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம் என்ற நிலையிலல்லவா தாயகம் இருக்கிறது?   அதுதான் எனது ஆதங்கம்.  

கல்வி எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடசாலைகள் இலவசமாகக் கல்வி கற்றுக் கொடுக்கிறது.  அப்படியிருக்கையில், தனியார் கல்வி நிறுவனங்களை உருவாக்கி இப்போது வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கல்வி பயிலும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்களே? 

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி வசதி எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும்  ஒ கே
அதே போல தகுதி  உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். 

திண்ணைப்பள்ளி ஆரம்பத்தில் பின்னர்  குருகுலம் இவை எல்லாம் இலவசமாகவும்

செல்வந்தர்களுக்குமாகவே இயங்கின. ஏழைகளுக்குக்  கல்வி வசதி தேவை இல்லை என்றனர் மேட்டுக்குடியினர். அதனால் அரசுப் பள்ளிகளானது அனைத்துப் பாடசாலைகளும்.

தனியார் கல்வி தாயகத்தில் இல்லையென்றால் அது மாணவர்களுக்கும் கஸ்டம்.

அங்கே கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கஸ்டம்.
பல ஆசிரியர்கள் தங்கள் வேலை வாய்ப்பையும்  வருமானத்தையும்  இழக்கவேண்டி வரும்.

பல மாணவர்கள் தேர்வில் புள்ளிகளை இழக்கவேண்டி வரும்.
வசதி படைத்தவர்கள் தான் பிரத்தியேக வகுப்புக்களில் பங்குகொள்கின்றனர் என மேலோட்டமாகக் கூறமுடியாது.
பாடசாலையில் கல்வி நிலையில் பின்தங்கியவர்கள் தான் அதிகம் தனியார் வகுப்புக்களுக்குச் செல்கின்றனர்.

சில தனியார் கல்வி நிறுவனங்களில் சில ஆசிரியர்கள் திறமைசாலிகள்
அவர்களுக்குத் தெரியும் எப்படியான கேள்விகள் எந்த வடிவத்தில் தேர்வுப் பரீட்சைகளில் வரும் எனக் கணித்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.அப்படியானவர்களைத் திறமைசாலி மாணவர்களும் நாடுவதுண்டு.

எனது அபிப்பிராயத்தின்படி  இன்றைய சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் அவசியம். அதே வேளை பணம் படித்த் மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தாலும் அவர்கள் அனைவரும்
தேர்வுகளில் அதிகப் புள்ளிகளை அள்ளிச் செல்கின்றனர் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

தனியார் கல்வி நிலையங்கள் எப்படி  உருவாகியது.

பாடசாலையில் பலதரப்பட்ட மாணவர்களும் இருப்பார்கள்
சிலர் ஆசிரியர் விளங்கப்படுத்துவதைக் கப் பென்று பிடித்து விடுவார்கள்
சிலருக்கு இருமுறை விளங்கப்படுத்த வேண்டும்.சிலருக்கு எத்தனை முறை சொன்னாலும் விளங்காது.
மூன்றாவது தரத்தினருக்கு ஆசிரியர் பாடசாலை முடிந்ததும் நேரம் எடுத்து விளங்கப்படுத்துவார். பின்னர் வீட்டுக்கு அழைத்து விளங்கப்படுத்துவார். பின்னர் மாணவர் கூட்டம் அதிகரிக்க அதையே தனது வருமானம் ஆக்கினர் சில ஆசிரியர்கள் .

  • 2 weeks later...

தாயகத்தில் நான் ரியுசன் போனது..வலுக்கட்டாயமாக எனது பெற்றோர்கள் அயலவர்கள் தங்கள பிள்ளைகளை அனுப்புகிறார்கள் மற்றது சிறுவராக பாடசாலை விட்டு வந்து ஒரே விளயாடிகொண்டிருக்கிறோம்..என்பதற்காக தான்...

நான் பள்ளிக்கூடத்தில் படிப்பித்து விளங்காததை ரியூசனில் போய் விளங்கியதாக..நானோ  எனது எந்த நண்பர்களுக்குமோ அறியவில்லை :)

எனக்கு பள்ளிகூடத்தில் படிபித்த எந்த ஆசிரியருமே மாணவர்களை ரியூசனுக்கு போ/வா என்று பணித்தது கிடையாது..

காட்லிக்கல்லூரியில் சிவசிதம்பரம் என்னும் விஞ்ஞான ஆசிரியர் இருந்தார் அவரது பள்ளிகூட மாணவர்கள் அவரது தனி ரியூசனுக்கு போனால் அவர்களிடம் பணம் பெறமாட்டார்....

(பி.கு: நாற்பது பேர் இருக்கும் வகுப்பில் எனது ராங்கிங் எப்போதுமே முப்பதோ அதற்கும் கீழே தான்...ஆகவே ரியூசனுக்கு போயும் பிரயோசினம் இல்லை என்பது வேறு விடயம்)

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.