Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவுசெய்து யாராவது என்னை பாராட்டவும்!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன்.

எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை சகிச்சுக்கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

நான் சில நாட்களுக்கு முன் கணக்குப் பார்த்ததில் கடந்தவருடம் சுமார் 1000 மணித்தியாலங்களை நான் யாழில் செலவு செய்து உள்ளேன். (என்ன திகைப்பா இருக்கிதோ? எனக்கும் ஆரம்பத்தில அப்பிடித்தான் இருந்திச்சிது) சம்பளம் இல்லாத வேலைதான். எண்டாலும் இதற்கும் ஒரு திறமை வேண்டும். எல்லாராலும் இப்படி நேரத்தை செலவு செய்ய முடியாது. என்னைப் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இது முடியும்.

நான் பலதடவைகள் யாழைவிட்டு ஓட நினைத்த சமயங்களில் கு.சா அண்ணா, யமுனா, தமிழ்தங்கை அக்காச்சி, வல்வைமைந்தன், கந்தப்பு, சாணக்கியன் போன்றோரின் ஆதரவு காரணமாக நைசாக கழற முடியவில்லை.

எனது ஆக்கங்களின் அடிப்படை பொழுதுபோக்கு அம்சங்களே. எதிர்காலத்திலும் பொழுதுபோக்கு அம்சங்களிலேயே எனது கவனம் அதிகளவில் குவிக்கப்படும்.

மெய்யெனப்படுவது பகுதியில் நெடுக்காலபோவான், குறுக்காலபோவான் அண்ணை, சபேசன் அண்ணை, வெற்றிவேல், ஈழத்திருமகன் (ஆள இப்ப காண இல்ல), தூயவன், இளைஞன் எல்லாரும் ஆழமாக ஏதேதோ பற்றி கலந்துரையாடினாலும் நான் அங்கு ஏதாவது நகைச்சுவையாக அல்லது பொருத்தமற்ற முறையில் ஏதாவது அலட்டுவதன் காரணம் எனக்கு இந்த தத்துவ வேதாந்தங்களில் நம்பிக்கை இல்லை. நானும் ஒரு காலத்தில் உந்த ஆராய்ச்சிகள் எல்லாம் செய்ததுதான். ஆனால் பகுத்தறிவு, பனங்காப் பனியாரம் எண்டு குழம்பிக்கொண்டதால எனது காலத்தை வீண் செய்ததைவிட நான் வேறு ஒன்றும் காணவில்லை. இதனால்தான் இந்தப்பக்கம் நான் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், பொழுதுபோக்கில் ஈடுபட்டால் ஆகக்குறைந்தது எமது நேரத்தை இனிமையாகவாவது களிக்க முடியும்.

ஆரம்பத்தில் நான் யாழில் படைத்தவை எனக்காக மட்டுமே அடிப்படையில் இருந்தாலும், பின்னர் சிறிதுகாலத்தில் இருந்து நான் மற்றவர்களிற்காகவே ஆக்கங்கள் செய்து வருகின்றேன். மற்றவர்களை மகிழ்விப்பதிலும் ஒரு திருப்தி இருக்கின்றது. நிறையப்பேர் யாழுக்கு பொழுதுபோக்கவும், வாழ்க்கையில் கஸ்டங்கள் வரும்போது மனநிம்மதிக்காக கவலைகளை மறந்து ஏதாவது வாசித்து பொழுதுபோக்கவும் வருகின்றார்கள். எனவே, நிச்சயம் இவர்களை எனது ஆக்கங்களை படைக்கும்போது கவனத்தில் கொள்வேன். ஒவ்வொரு தனிப்பட்ட ஆக்கங்களிற்கும் வரும் பேஜ் ஹிட்ஸை வைத்து இதை கண்டுபிடிக்ககூடியதாக உள்ளது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்த நான் யாழில் ஆரம்பித்த கருத்தாடல் எண்டு சொன்னால் போனவருசம் யாழ் இணையம் அகவை ஒன்பதை ஒட்டி ஒரு நேரடிப் போட்டி ஒன்றை நடத்தி இருந்தேன். அது ஒரு உற்சாகமான அனுபவம். இந்தமுறையும் வசதி கிடைத்தால் அதை திரும்பவும் செய்யலாம்.

எனக்கு யாழில் மிகவும் மனக்கசப்பை அளித்த சம்பவம் என்ன என்றால் ஒருவர் என்னை சைக்கோ எண்டு பல இடங்களில் யாழில் சுவரொட்டி எழுதி ஒட்டி இருந்தார். நாங்கள் எல்லாரும் சாதாரண மனிதர்களே. பேர்பெக்ட் எண்டு ஒருவரும் இல்லை. எல்லாருக்கும் வாழ்க்கையில் கஸ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் உண்டு. நான் யாழில் எப்படி இணைந்தேன் என்ற சரித்திரம் ஏற்கனவே கூறியுள்ளேன். நானும் மற்றவர்களும் சற்று கலகலப்பாக, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டு நகைச்சுவையாக எழுதியவிடயங்களை வைத்து என்னை மட்டம் தட்டியதே நான் யாழில் நகைச்சுவைப்பகுதியில் எழுதுவதை குறைத்துக்கொண்டதற்கான காரணமாக இருந்தது.

மற்றது சில ஆக்கள் எனக்கும் யாழ் நிருவாகத்துக்கும் ஏதோ இரகசிய தொடர்பு இருக்கிறதாய் நினைச்சுக்கொண்டு இருக்கிறீனம். நானும் உங்களைப் போன்ற தெருவில் போய்க்கொண்டு இருக்கும் பொதுமகனே. நியாயமற்றமுறையில் நிருவாகம் தாக்குதலுக்கு உள்ளாகும் சில சமயங்களில் அவர்களிற்கு அபயக்குரல் கொடுத்து உள்ளேன். அவ்வளவுதான்.

எனது சேவைகளை பாராட்டி என்னை புகழ்ந்து ஏதாவது பட்டங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக்கருத்தாடலை நான் ஆரம்பிக்கின்றேன். ஏமாத்திப் போடாதிங்கோ.

இதுக்கு மேல எழுதினா தாங்கமாட்டீங்கள். டோஸ் மிச்சம் பிறகு தாறன்.

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

இந்த களத்திலே 1000 மணித்தியாளங்கள் இருந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் பழைய மாப்பிள்ளையில் இருந்த உற்சாகம் இந்த கலைஞனில் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

செல்வன் தொடரைப் பாதியில் கிடப்பில் போட்டதும் இப்போது தான் ஞாபகம் வருகின்றது. அதையும் கொண்டு செல்லுங்கள்.

உங்களிடம் தனித்துவமான திறமையிருக்கின்றது. கதை வசனம், பாடல், பாடுவது போன்ற திறமைகள் இருக்கனி;றது. ராஜேந்திரரைப் போல. அதை என்னமும் தாங்கள் வெளிப்படுத்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்

தங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். ஏதோ காலம் தான் கொடுத்து வைக்கவில்லை.

கலைஞன்,

நீங்கள் யாழிற்கு வந்தவுடனேயே கலகலப்பான உரையாடல் மூலம் யாழில் தனித்துவமான இடத்தைப் பிடித்து விட்டீர்கள். இளம் வயதிலேயே இத்னை திறமைகளையுடைய நீங்கள் எதிர்காலத்தில் மேலும் சாதனைகள் படைத்திட வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.

உங்கள் ஆக்கங்கள் தொடர வேண்டும்

வாழ்த்துகள்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்துச் சண்டை போட்ட ஆக்களை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அந்த வகையில் கலைஞனையும் பிடிக்கும்..!

அதுமட்டுமன்றி அவரின் சுய ஆக்கங்களாக வெளிப்பட்ட காணொளிப் பாடல்கள்... மிகவும் கவர்த்திருந்தன. கலைஞன் தந்த யாழ் களத்துக்கான கீதத்தை.. தரவிறக்கம் செய்து வைத்து.. சும்மா போர் அடிச்சா கேட்பேன்...!

யாழில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் கலைஞன் என்று அழைப்பட்டும் முன்னாள் மாப்பிள்ளை. :lol:

எனது கருத்துச் சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நான் ஒரு 10 வயசு முதலே இதை பல நச்சரிப்புக்களுக்கும் மத்தியில அடுத்தவயை சூடேத்தி.. செய்திட்டு இருக்கன். நான் யாழ் நகரில் வசித்தவன். அதுவும் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அண்மித்து. எங்கள் வீட்டில் குடியிருந்த யாழ் பல்கலைக்கழக அண்ணாமாரோடு.. தர்க்கிப்பன்.. அதுவே வாடிக்கையாப் போச்சு. அதற்காக கண்ட ஆக்களோடையெல்லாம் தர்க்கிப்பன் என்றில்ல..! எனக்கு பிடிச்சிருந்தால் தான் தர்க்கிப்பன். தலைக்கனம் பிடிச்ச ஆக்கள் என்று அடையாளம் காணிற ஆக்களோட அவ்வளவா கதை பேச்சு வைக்கிறதில்ல..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கலைஞன். மேலும் தரமான ஆக்கங்களை தாருங்கள்.

வாழ்த்துக்கள் கலைஞன் அண்ணா, நீங்க இப்படி கேட்கும் போது எப்படி வாழ்த்து சொல்லாமல் விடுவது? ஜஸ்ட் கிட்டிங் :lol::lol:

ஒரு வருடதில் 1000 மணித்தியாலம் யாழில் இணைந்திருப்பது மிகவும் கடினமான விடயம் தான்..... நான் உண்மையில் சிலரை பார்த்து வியப்பதுண்டு... இவர்களிற்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கின்றது என்று..

இன்றுபோல் என்றும் யாழில் இணைந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள்... :lol:

வாழ்த்துக்கள் கலைஞன் அண்ணா... தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பினை யாழுக்குச் செய்ய வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைஞன் வாழ்த்துக்கள். இது கருத்தாடுகளம்தானே சண்டைக்களம் அல்ல.

உங்கள் நல்ல குரல் வளம் இசைத்திறன் எல்லாம் யாழ்களத்துடன் நின்றுவிடாமல் வளர வேண்டும். பொழுதுபோக்கிற்காக செலவு செய்யும் நேரத்தில் ஒருபகுதியை உங்களது படைப்புக்களை செய்வதில் செலவிடுங்கள். வெற்றியுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்துச் சண்டை போட்ட ஆக்களை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அந்த வகையில் கலைஞனையும் பிடிக்கும்..!

அதுமட்டுமன்றி அவரின் சுய ஆக்கங்களாக வெளிப்பட்ட காணொளிப் பாடல்கள்... மிகவும் கவர்த்திருந்தன. கலைஞன் தந்த யாழ் களத்துக்கான கீதத்தை.. தரவிறக்கம் செய்து வைத்து.. சும்மா போர் அடிச்சா கேட்பேன்...!

யாழில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் கலைஞன் என்று அழைப்பட்டும் முன்னாள் மாப்பிள்ளை. :lol:

எனது கருத்துச் சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நான் ஒரு 10 வயசு முதலே இதை பல நச்சரிப்புக்களுக்கும் மத்தியில அடுத்தவயை சூடேத்தி.. செய்திட்டு இருக்கன். நான் யாழ் நகரில் வசித்தவன். அதுவும் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அண்மித்து. எங்கள் வீட்டில் குடியிருந்த யாழ் பல்கலைக்கழக அண்ணாமாரோடு.. தர்க்கிப்பன்.. அதுவே வாடிக்கையாப் போச்சு. அதற்காக கண்ட ஆக்களோடையெல்லாம் தர்க்கிப்பன் என்றில்ல..! எனக்கு பிடிச்சிருந்தால் தான் தர்க்கிப்பன். தலைக்கனம் பிடிச்ச ஆக்கள் என்று அடையாளம் காணிற ஆக்களோட அவ்வளவா கதை பேச்சு வைக்கிறதில்ல..! :lol::lol:

அப்படியென்றால் என்னை,..... நாரதரை... குறுக்காலபோவானை,.... சபேசனை எல்லாம் ரெம்பப் பிடிக்குமோ?.. இதற்காகவே என்னும் 10 தரம் சண்டை பிடிக்கலாம். :lol:

ஜெனரல்!!

என் அன்பிற்கும்.பாசதிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய டாக்டர்.கலைஞர் அவர்களே (அட அவர் டென்சன் ஆகிடுவார் அல்லோ கொஞ்சம் ஓவரா போயிட்டோம் போல :lol: )...அட 1000 மணித்தியாலங்கள் செலவு செய்தீர்களா சாதனை தான் எங்கே உங்கள் பலத்த கரகோஷம் எங்கள் ஜெனரலிற்கு :lol: ...ஆகவே தொடர்ந்தும் நீங்கள் பல மணித்தியாலங்கள் யாழில் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வதுடன் விரைவில் உங்கள் திருமணத்தை அறிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் :D ..மாப்பியாக இருந்து பின் மாப்பிகாக்கி என என்னால் செல்லமாக அழைக்கபட்டு பின் எனக்கே குருவாகி தற்போது ஜெனரலாக உயர்ந்து நிற்கும் கலைஞன் அண்ணாவே உங்கள் திறமையும் உங்கள் ஊக்கமும் என்றும் உங்களை முன் நிறுத்தும் :D தொடர்ந்தும் பல ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்பதோடு உங்கள் ஒரு வருச சேவையை வாழ்த்தி உங்களிற்கு டைகர் பமிலி சார்பாக நானே பொன்னாடையை அணிவித்து (அக்சுவலா பொன்னாடை எல்லாம் இல்லை கு.சா தாத்தா வீட்டு கொடியில காய போட்டதை தூக்கினது :D ).....உங்களிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்று தான் நினைத்தனாங்க ஆனா பிறகு நீங்க கொஸ்பிட்டலில போய் பக்ரிக்ஸ் பண்ண போறீங்க என்று சொன்னாலும் என்று :lol: "யாழின் தலை" என்ற பட்டத்தை யாழ்க்ள மெம்பர்ஸ் சார்பாக நம்ம சின்னப்பு தாத்தாவின்ட மனைவி திருமதி.சின்னாச்சி வழங்குவா......எங்கே உங்கள் பலத்த கரகோஷம்....

அது எல்லாம் சரி ஜெனரல் எங்கே பார்ட்டி எந்த ரெஸ்சுரண்டிற்கு கூட்டி கொண்டு போக போறியள்..பிறகு கோயில் அன்னதானதிற்கு கூட்டி கொண்டு போறதில்லை சொல்லிட்டேன்... :lol:

இந்த நன் நாளை முன்னிட்டு ஒரு நடனம்,பார்க்கிறவை எல்லாரும் டிக்கட் வாங்கி பார்க்க வேண்டும் சொல்லிட்டேன்!!

baby7eisq5sz0.gif

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இந்த களத்திலே 1000 மணித்தியாளங்கள் இருந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் பழைய மாப்பிள்ளையில் இருந்த உற்சாகம் இந்த கலைஞனில் இல்லையே?

நன்றி! உண்மையில் அது ஏன் என்று என்னால் தெரியவில்லை. ஆரம்பத்தில் நான் அப்படி கலகலப்பாக இருந்தபோது எனது உடல்நிலமை சத்திரசிகிச்சையின் பின் மிகவும் மோசமாக இருந்தது. பலருக்கு நான் பகிடிவிட்டது மாத்திரமே தெரிந்து இருந்தது. ஆனால், நான் அப்போது என்ன நிலமையில் கணணிக்கு முன்னால் இருந்தேன் என்று தெரியாது. ஏராளம் மருந்துக்குளிகைகள், வசிலின்கள், இரத்தத்தை துடைக்கும் துவாய்கள் என்று மேசையில் நிறைந்து இருக்க.. நோயாளியாக அந்த நிலமையில் இருந்து முஸ்பாத்தி செய்துகொண்டு இருந்தேன். ஆனால் இப்போது எல்லாம் போய்விட்டது. உடலால் துன்பப்பட்டு வருந்திக்கொண்டு இருந்தபோது பகிடிகள் விட முடிந்தது. இப்போது உடல் சுகமாக இருக்கும்போது அப்படி செய்யமுடியவில்லை. மீண்டும் நான் விரைவில் இன்னொரு சத்திரசிகிச்சைக்கு உள்ளாவேன். அப்போது முன்புபோன்ற நிலமை வருமோ தெரியாது.

கலைஞன்

செல்வன் தொடரைப் பாதியில் கிடப்பில் போட்டதும் இப்போது தான் ஞாபகம் வருகின்றது. அதையும் கொண்டு செல்லுங்கள்.

உங்களிடம் தனித்துவமான திறமையிருக்கின்றது. கதை வசனம், பாடல், பாடுவது போன்ற திறமைகள் இருக்கனி;றது. ராஜேந்திரரைப் போல. அதை என்னமும் தாங்கள் வெளிப்படுத்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்

தங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். ஏதோ காலம் தான் கொடுத்து வைக்கவில்லை.

நன்றி தூயவன். செல்வன் தொடரை நான் நிறுத்தியது சில தனிப்பட்ட காரணங்களிற்காக. அதை இங்கு எழுதமுடியவிலை. ஆனால் இனி சந்தர்ப்பம் வந்தால் யாழ் ஆக்களின் பெயரை போட்டு குறுங்கதைகளாக எழுதலாம்.

கலைஞன்,

நீங்கள் யாழிற்கு வந்தவுடனேயே கலகலப்பான உரையாடல் மூலம் யாழில் தனித்துவமான இடத்தைப் பிடித்து விட்டீர்கள். இளம் வயதிலேயே இத்னை திறமைகளையுடைய நீங்கள் எதிர்காலத்தில் மேலும் சாதனைகள் படைத்திட வாழ்த்துகிறேன்.

நன்றி இணையவன்.

கலைஞன்.

உங்கள் ஆக்கங்கள் தொடர வேண்டும்

வாழ்த்துகள்

நன்றி கறுப்பி.

நான் கருத்துச் சண்டை போட்ட ஆக்களை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அந்த வகையில் கலைஞனையும் பிடிக்கும்..!

அதுமட்டுமன்றி அவரின் சுய ஆக்கங்களாக வெளிப்பட்ட காணொளிப் பாடல்கள்... மிகவும் கவர்த்திருந்தன. கலைஞன் தந்த யாழ் களத்துக்கான கீதத்தை.. தரவிறக்கம் செய்து வைத்து.. சும்மா போர் அடிச்சா கேட்பேன்...!

யாழில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் கலைஞன் என்று அழைப்பட்டும் முன்னாள் மாப்பிள்ளை. :lol:

எனது கருத்துச் சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நான் ஒரு 10 வயசு முதலே இதை பல நச்சரிப்புக்களுக்கும் மத்தியில அடுத்தவயை சூடேத்தி.. செய்திட்டு இருக்கன். நான் யாழ் நகரில் வசித்தவன். அதுவும் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அண்மித்து. எங்கள் வீட்டில் குடியிருந்த யாழ் பல்கலைக்கழக அண்ணாமாரோடு.. தர்க்கிப்பன்.. அதுவே வாடிக்கையாப் போச்சு. அதற்காக கண்ட ஆக்களோடையெல்லாம் தர்க்கிப்பன் என்றில்ல..! எனக்கு பிடிச்சிருந்தால் தான் தர்க்கிப்பன். தலைக்கனம் பிடிச்ச ஆக்கள் என்று அடையாளம் காணிற ஆக்களோட அவ்வளவா கதை பேச்சு வைக்கிறதில்ல..!

நன்றி நெடுக்காலபோவான். நான் ஆரம்பத்தில் உங்களுடனேயே பல மோதல்களில் ஈடுபட்டு இருந்தேன். ஆனால் சிறிதுகாலத்திலேயே அதை தவிர்க்க தொடங்கிவிட்டேன். ஒருவர் கூறும் கருத்தை வைத்து அவரை எடைபோட நினைத்தது எனது தவறு. உதாரணமாக ஒருவர் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதுகின்றார் என்றால் உண்மையில் அவர் போராட்டத்திற்கு ஆதரவானவர் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், உண்மையில் ஆதரவு கொடுப்பவர் ஒன்றுக்கு பின் முரணாக ஏதாவது எழுதலாம். கடுமையாக விமர்சனம் செய்யலாம். விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்று பலருக்கு தெரியாமல் இருப்பதே உங்களுடன் நான் சண்டை செய்ததுபோல் பலர் உங்களுடன் மனஸ்தாபப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். நான் யாழுக்கு வந்த ஆரம்பத்தில் நெடுக்காலபோவான் யாழுக்கு தேவையா என்ற தலைப்பில் சண்டியன் தலைமையில் பெரிய சூடான வாதமும் கருத்துக்கணிப்பும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நீங்கள் மிகவும் இக்கட்டான நிலையில் அப்போது இருந்தீர்கள். நீங்கள் திறமையான முறையில் வாதம் ஒன்றை முன்வைக்கும்போது அதை வாதமாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வேறு வழியில் இப்படி பிரச்சனைகள் செய்யலாம். நானும் இப்படி தவறு செய்துள்ளேன். ஆனால் விரைவில் என்னை திருத்திக்கொண்டேன்.

வாழ்த்துக்கள் கலைஞன். மேலும் தரமான ஆக்கங்களை தாருங்கள்.

நன்றி நுணாவிலான்.

வாழ்த்துக்கள் கலைஞன் அண்ணா, நீங்க இப்படி கேட்கும் போது எப்படி வாழ்த்து சொல்லாமல் விடுவது? ஜஸ்ட் கிட்டிங்

ஒரு வருடதில் 1000 மணித்தியாலம் யாழில் இணைந்திருப்பது மிகவும் கடினமான விடயம் தான்..... நான் உண்மையில் சிலரை பார்த்து வியப்பதுண்டு... இவர்களிற்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கின்றது என்று..

இன்றுபோல் என்றும் யாழில் இணைந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள்... :lol:

நன்றி!

வாழ்த்துக்கள் கலைஞன் அண்ணா... தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பினை யாழுக்குச் செய்ய வாழ்த்துக்கள்

நன்றி கெளரிபாலன்!

வணக்கம் கலைஞன் வாழ்த்துக்கள். இது கருத்தாடுகளம்தானே சண்டைக்களம் அல்ல.

உங்கள் நல்ல குரல் வளம் இசைத்திறன் எல்லாம் யாழ்களத்துடன் நின்றுவிடாமல் வளர வேண்டும். பொழுதுபோக்கிற்காக செலவு செய்யும் நேரத்தில் ஒருபகுதியை உங்களது படைப்புக்களை செய்வதில் செலவிடுங்கள். வெற்றியுண்டு.

எதிர்காலத்தில் நேரம் கிடைக்கும்போது எனது பாடல்களை செய்யலாம் என்று நினைக்கின்றேன். தமிழ் தங்கை அக்காச்சியும் தனது கவிதைகளை இறுவட்டில் பாடல்களாக்கி தரும்படி ஒரு முறை கேட்டு இருந்தார். சமயம் வரும்போது வீட்டிலும், ஒலிப்பதிவு கலையகத்திலும் பாடல்களை செய்வேன்.

ஜெனரல்!!

என் அன்பிற்கும்.பாசதிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய டாக்டர்.கலைஞர் அவர்களே (அட அவர் டென்சன் ஆகிடுவார் அல்லோ கொஞ்சம் ஓவரா போயிட்டோம் போல ...அட 1000 மணித்தியாலங்கள் செலவு செய்தீர்களா சாதனை தான் எங்கே உங்கள் பலத்த கரகோஷம் எங்கள் ஜெனரலிற்கு :lol: ...ஆகவே தொடர்ந்தும் நீங்கள் பல மணித்தியாலங்கள் யாழில் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வதுடன் விரைவில் உங்கள் திருமணத்தை அறிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் :lol: ..மாப்பியாக இருந்து பின் மாப்பிகாக்கி என என்னால் செல்லமாக அழைக்கபட்டு பின் எனக்கே குருவாகி தற்போது ஜெனரலாக உயர்ந்து நிற்கும் கலைஞன் அண்ணாவே உங்கள் திறமையும் உங்கள் ஊக்கமும் என்றும் உங்களை முன் நிறுத்தும் தொடர்ந்தும் பல ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்பதோடு உங்கள் ஒரு வருச சேவையை வாழ்த்தி உங்களிற்கு டைகர் பமிலி சார்பாக நானே பொன்னாடையை அணிவித்து (அக்சுவலா பொன்னாடை எல்லாம் இல்லை கு.சா தாத்தா வீட்டு கொடியில காய போட்டதை தூக்கினது .....உங்களிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்று தான் நினைத்தனாங்க ஆனா பிறகு நீங்க கொஸ்பிட்டலில போய் பக்ரிக்ஸ் பண்ண போறீங்க என்று சொன்னாலும் என்று "யாழின் தலை" என்ற பட்டத்தை யாழ்க்ள மெம்பர்ஸ் சார்பாக நம்ம சின்னப்பு தாத்தாவின்ட மனைவி திருமதி.சின்னாச்சி வழங்குவா......எங்கே உங்கள் பலத்த கரகோஷம்....

அது எல்லாம் சரி ஜெனரல் எங்கே பார்ட்டி எந்த ரெஸ்சுரண்டிற்கு கூட்டி கொண்டு போக போறியள்..பிறகு கோயில் அன்னதானதிற்கு கூட்டி கொண்டு போறதில்லை சொல்லிட்டேன்...

இந்த நன் நாளை முன்னிட்டு ஒரு நடனம்,பார்க்கிறவை எல்லாரும் டிக்கட் வாங்கி பார்க்க வேண்டும் சொல்லிட்டேன்!!

baby7eisq5sz0.gif

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜெனரல். பட்டம் தரச்சொல்லி கேட்டது சும்மா பகிடிதான். உண்மையில கொஞ்ச காசு தாருங்கோ எண்டு கேட்டு இருக்கவேணும். பிழை விட்டிட்டன்.

ஓ வயசு போகிது. விரைவில் திருமணம் செய்யத்தான் வேணும். ஹிஹி. உங்களுக்கு சொல்லாமலா. அப்படி ஏதாவது செய்தி எண்டால் நிச்சயம் அறிவிக்கிறன். மறக்காமல் தாரளமா மொய்போடுங்கோ. ஆனா கலியாணம் கட்டினால் அதுக்குபிறகு யாழுக்கு வர நேரம் கிடைக்குமோ தெரியாது. குசினியுக்க இருந்து சமைச்சுக்கொண்டு இருக்கவேண்டிய நிலமை வருமோ தெரியாது. நான் முந்தி ஒருமுறை பகிடியாக மணமகள் தேவை எண்டு ஒரு கருத்தாடலை யாழில் ஆரம்பிப்பம் எண்டு நினைச்சன். பிறகு மோகன் அவர்கள் பாவம். அவர பிறகு மாமா எண்டு கூப்பிட்டால் எனக்குத்தான் கெட்டபெயர். சனம் பிறகு உவங்கள் யாழில மற்றிமோனியல் சைட் துவங்கீட்டாங்கள் எண்டு குழம்பீடும். எல்லாம் பகிடியாகவும் இருக்ககூடாது தானே. இதால் அப்பிடி பகிடியா ஒண்டு எழுதிறத யோசனையை தவிர்த்துவிட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்சுவலா பொன்னாடை எல்லாம் இல்லை கு.சா தாத்தா வீட்டு கொடியில காய போட்டதை தூக்கினது )

டேய் ஜமுனா என்ன பழக்கம் இது?????? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மாப்பி.

உங்களுடைய ஆக்கங்கள் பாராட்டப் பட வேண்டியவை. நகச்சுவையோடு ஆக்கங்கள் தருவது தான் உங்களது சிறப்பு.

வளர்க உங்கள் பணி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களை பாராட்டவோ வாழ்த்தவோ என் மனம் இடங்கொடுக்கவில்லை. மன்னிக்கவும் :lol:

ஓ, வந்து ஒரு வருசம் ஆச்சா...??? சரி சரி நல்ல இருங்கோ....! :lol::D:)

வருட நிறைவு வாழ்த்துக்கள்... மிச்சம் அடுத்த வருசம் சொல்லுறன்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கலைஞன். 2007ல் யாழில் இணைந்தவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் சுகன். மற்றவர் நீங்கள்.

நன்றி! உண்மையில் அது ஏன் என்று என்னால் தெரியவில்லை. ஆரம்பத்தில் நான் அப்படி கலகலப்பாக இருந்தபோது எனது உடல்நிலமை சத்திரசிகிச்சையின் பின் மிகவும் மோசமாக இருந்தது. பலருக்கு நான் பகிடிவிட்டது மாத்திரமே தெரிந்து இருந்தது. ஆனால், நான் அப்போது என்ன நிலமையில் கணணிக்கு முன்னால் இருந்தேன் என்று தெரியாது. ஏராளம் மருந்துக்குளிகைகள், வசிலின்கள், இரத்தத்தை துடைக்கும் துவாய்கள் என்று மேசையில் நிறைந்து இருக்க.. நோயாளியாக அந்த நிலமையில் இருந்து முஸ்பாத்தி செய்துகொண்டு இருந்தேன். ஆனால் இப்போது எல்லாம் போய்விட்டது. உடலால் துன்பப்பட்டு வருந்திக்கொண்டு இருந்தபோது பகிடிகள் விட முடிந்தது. இப்போது உடல் சுகமாக இருக்கும்போது அப்படி செய்யமுடியவில்லை. மீண்டும் நான் விரைவில் இன்னொரு சத்திரசிகிச்சைக்கு உள்ளாவேன். அப்போது முன்புபோன்ற நிலமை வருமோ தெரியாது.

சத்திரசிகிச்சைக்கு காரணம் நீங்கள் சிறிலங்கா சிறைச்சாலையில் அனுபவித்த கொடுமைகளா?

சும்மா வந்து சும்மா போவோர் சங்கத் தலைவருக்கு வணக்கம்,

இதற்கு நாங்கள் உங்களுக்கு வாழ்த்து சொல்வதை விட நீங்கள்தான் நன்றிகள் தெரிவித்திருக்க வேண்டும். ஏனேனில் யாழ் இல்லாமல் நீங்களோ நானோ இருந்துவிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இங்கே வந்து புலம்புவது எங்கள் சுயதிருப்திக்காகஅன்றி வேறு எவருக்காகவும் இல்லை. அந்த வகையில் உங்கள் துன்பங்களை மறந்து உங்கள் மனத்தை உட்சாகமாக வைத்திருக்க யாழ் உதவியிருக்கிறது.

எமது வயதின் ரசனைக்குத் தகுந்த சுவையாக விளங்கும் யாழ்களம், முகம் தெரியாவிட்டாலும் பலருடன் மனம் விட்டுப் பேசவும், வழமையாக நாம் சந்திக்கும் முகத்துதி பாடுபவர்களிடையே எங்கள் கருத்துகளுக்கு கிடைக்கும் வரவேற்பை விட யாழ்களத்தில் சந்தித்த முகமூடிகளின் காரமான மற்றும் சில சாரமான கருத்துகள் எமது கருத்துக்களை சீர்தூக்கிப்ப் பார்க்கவும் கூர்தீட்டிக் கொள்ளவும் உதவியது. முக்கியமாக மற்றையவர்களின் கருத்துகள்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை எனக்கு கற்றுத் தந்தது. முன்னர் நானும் சலிப்படைந்து வெளியேற முனைந்த போது நீங்களும் எனக்கு உதவியிருந்தீர்கள். நன்றி.

திறமைகள் பல தன்னகத்தே கொண்ட நீங்கள் வாழ்வில் வெற்றிகள் பல கண்டு சிறந்து விளங்கிட வாழ்த்துகள்!

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம் சார்பாக

சாணக்கியன்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் மாப்பி.

உங்களுடைய ஆக்கங்கள் பாராட்டப் பட வேண்டியவை. நகச்சுவையோடு ஆக்கங்கள் தருவது தான் உங்களது சிறப்பு.

வளர்க உங்கள் பணி!!!

நன்றி இன்னிசை.

மற்றவர்களை பாராட்டவோ வாழ்த்தவோ என் மனம் இடங்கொடுக்கவில்லை. மன்னிக்கவும் :(

உங்கள் இந்தப் பாராட்டு ஒன்றே போதும் கு.சா அண்ணை :lol::D

ஓ, வந்து ஒரு வருசம் ஆச்சா...??? சரி சரி நல்ல இருங்கோ....! :lol::D:)

வருட நிறைவு வாழ்த்துக்கள்... மிச்சம் அடுத்த வருசம் சொல்லுறன்...

நன்றி தலை.

வாழ்த்துக்கள் கலைஞன். 2007ல் யாழில் இணைந்தவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் சுகன். மற்றவர் நீங்கள்.

சத்திரசிகிச்சைக்கு காரணம் நீங்கள் சிறிலங்கா சிறைச்சாலையில் அனுபவித்த கொடுமைகளா?

நன்றி கந்தப்பு. நான் சிறீ லங்கா சிறை அனுபவம் தொடரை எழுதிமுடிக்க முக்கிய காரணம் நீங்கள் தந்த உற்சாகமே. இல்லாவிட்டால் அதை அறைகுறையில் நிறுத்தி இருப்பேன்.

சத்திரசிகிச்சை சிறை காரணமாக வந்தது அல்ல. அது வேறு ஒரு பிரச்சனை.

சிறையில் நான் உடலால் அடைந்த பாதிப்பை விட உளத்தால் அடைந்த பாதிப்பே அதிகம். நான் இன்று இவ்வளவு அடாவடியாக அல்லது துணிவாக யாழில் எழுதுவது எல்லாம் கூட எனது உளவியல் பாதிப்பின் ஒருபகுதி அல்லது பக்கவிளைவு என்று கூட சொல்லலாம். சிறைக்கு உள்ளே ஒரு முறை போய்வந்தது எனது வாழ்க்கையில் பலவித மாற்றங்களை கொண்டுவந்தது. சிறைக்கு போய் இருக்காது இருந்தால் நான் இந்தநேரம் இப்போது இருப்பது போன்றது அல்லாத வேறு ஒரு மனநிலையுடன் வேறு ஒரு வாழ்க்கை நிலமையில் இருந்து இருப்பேன்.

சும்மா வந்து சும்மா போவோர் சங்கத் தலைவருக்கு வணக்கம்,

இதற்கு நாங்கள் உங்களுக்கு வாழ்த்து சொல்வதை விட நீங்கள்தான் நன்றிகள் தெரிவித்திருக்க வேண்டும். ஏனேனில் யாழ் இல்லாமல் நீங்களோ நானோ இருந்துவிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இங்கே வந்து புலம்புவது எங்கள் சுயதிருப்திக்காகஅன்றி வேறு எவருக்காகவும் இல்லை. அந்த வகையில் உங்கள் துன்பங்களை மறந்து உங்கள் மனத்தை உட்சாகமாக வைத்திருக்க யாழ் உதவியிருக்கிறது.

எமது வயதின் ரசனைக்குத் தகுந்த சுவையாக விளங்கும் யாழ்களம், முகம் தெரியாவிட்டாலும் பலருடன் மனம் விட்டுப் பேசவும், வழமையாக நாம் சந்திக்கும் முகத்துதி பாடுபவர்களிடையே எங்கள் கருத்துகளுக்கு கிடைக்கும் வரவேற்பை விட யாழ்களத்தில் சந்தித்த முகமூடிகளின் காரமான மற்றும் சில சாரமான கருத்துகள் எமது கருத்துக்களை சீர்தூக்கிப்ப் பார்க்கவும் கூர்தீட்டிக் கொள்ளவும் உதவியது. முக்கியமாக மற்றையவர்களின் கருத்துகள்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை எனக்கு கற்றுத் தந்தது. முன்னர் நானும் சலிப்படைந்து வெளியேற முனைந்த போது நீங்களும் எனக்கு உதவியிருந்தீர்கள். நன்றி.

திறமைகள் பல தன்னகத்தே கொண்ட நீங்கள் வாழ்வில் வெற்றிகள் பல கண்டு சிறந்து விளங்கிட வாழ்த்துகள்!

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம் சார்பாக

சாணக்கியன்.

நன்றி சாணக்கியன். நீங்கள் சொல்வது உண்மைதான். யாழ் இணையம் வெவேறு நாடுகளில் பிரிந்து இருக்கும் எம்மை தமிழ் மொழியால் இணைத்துள்ளது. எமது தனிப்பட்ட மனச்சுமைகளை இறக்க உதவியுள்ளது. எமது பல தனிப்பட்ட துன்பங்களை போக்க உதவியுள்ளது. நான் மோகன் அவர்களிற்கு பலதடவைகள் இதற்காக நன்றிகள் தெரிவித்து உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சத்திர சிகிச்சையை விரைவில் செய்யவும்.

அப்ப தான் பழைய மாப்பாக பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! நான் யாழில் இனைந்து கொஞ்சகாலமே ஆகின்றது. இதற்குள் என்னை மிகவும் கவர்ந்தவர் நீங்கள். அதுவும் சமீபகாலமாக உங்களின் ஆக்கங்கள் விரிந்து பரந்துள்ளது. உங்கள் குரலிலேயே பல செய்திகள், காணொலிகள், பேட்டிகள் எல்லாம் இனைத்துக்கொண்டு வருகிறீர்கள். இதுபோன்ற திறமைகள் ஏற்கனவே உங்களிடம் இருந்தபோதும்கூட அவற்றைச் சாணைபிடித்து இறக்கி வைக்கும் தளமாக களம் இருக்கிறது.

உங்கள் பணி மேலும் தொடரவேண்டும். வாழ்த்துக்கள் . :lol::D

மாப்பு குப்பை கொட்ட வெளிக்கிட்டு வருடம் ஒன்றா?????

வாழ்த்துக்கள் மாப்ஸ்

ஓ ஒரு வருசமாச்சா வாழ்த்துக்கள். சும்மா பத்தோடு பதினொன்றென்றில்லாமல் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கின்றீர்களே அதற்கு என் வாழ்த்துக்கள்.

Edited by Vasampu

ஆகா கலைஞன் யாழோடு இணைந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டதா? வாழ்த்துக்கள் கலைஞா

உங்கள் ஆக்கங்கள் மிகவும் சுவாரிசியமாக நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்கும் திறமை

உள்ளது. நான் உண்மையிலுமே உங்கள் ஆக்கங்களின் இரசிகை. பாராட்டுக்கள்

மேலும் நீங்கள் நல்ல தரமான சிறந்த படைப்புக்களைத்தர வேண்டும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.