Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த பெண்களே இப்படித்தான்..:)

Featured Replies

பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...!

* உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய் என்று.

* சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.

* அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.

=> இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய்விடுகிறாள்...!!

இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்

ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது.

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாக போய் சேரும்.

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.

சூப்பர் பவர்

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !!

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள்.

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!

kousalya2010.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, விடுங்கப்பா... :icon_idea:

நெடுக்காலைபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, விடுங்கப்பா... :icon_idea:

:D :D :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:):)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலைபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, விடுங்கப்பா... :icon_idea:

:D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, விடுங்கப்பா... :icon_idea:

அவளைத்தொடுவானேன்.

அவதிப்படுவானேன்............ :wub::icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, விடுங்கப்பா... :icon_idea:

:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம.. தலைப்பை.. நெடுக்காலபோவானை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறியளா என்றே போட்டிருக்கலாம். :):lol:

இது விசயத்தில நான் அதிகம் சொல்ல விரும்பல்ல.. ஏன்னா எனக்கு பெண்களோட அலட்டிற... அல்லது அவங்க அலட்டிறத.. செவிமடுக்கிற.. நேரடி அனுபவங்கள் அவ்வளவா இல்லை..

நீங்க இதைப் பாருங்க.. நீங்க எந்த ரகம்.. தீர்மானிச்சுக்கோங்க..!

http://www.youtube.com/watch?v=MZw32VmkMoo&feature=share

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியின் மனைவியால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்பவள் ஒரு புரியாத புதிர்!

அவள் புதிராகவே இருக்கட்டும்! விட்டு விடுங்கள்!

அந்தப் புதிர் புரிந்து போகும் எனில், வாழ்வு பொலிவிழந்து போய் விடும்! :wub:

இது விசயத்தில நான் அதிகம் சொல்ல விரும்பல்ல.. ஏன்னா எனக்கு பெண்களோட அலட்டிற... அல்லது அவங்க அலட்டிறத.. செவிமடுக்கிற.. நேரடி அனுபவங்கள் அவ்வளவா இல்லை..

அப்போ கேசுவலா யார்கூட ,

அலட்டுறது.... நேரம் செலவிடுவது...

ரொம்ப புடிக்கும் உங்களுக்கு நெடுக்கு?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கேசுவலா யார்கூட ,

அலட்டுறது.... நேரம் செலவிடுவது...

ரொம்ப புடிக்கும் உங்களுக்கு நெடுக்கு?? :rolleyes:

நான் யாழில தான் அதிகம் அலட்டிறது. வெளில அதிகம் யார் கூடும் பேசுவதில்லை. தேவையோட மட்டும் எல்லோரோடும் கதைப்பன். மற்றும்படி.. பெண்கள்.. ஆண்கள் சொல்லுறதுகளை எல்லாம் செவிமடுத்திட்டு இருக்கிறதில்ல. எனக்கு தேவையானது இருந்தால் மட்டும் செவிமடுப்பன்.. மற்றவற்றை அப்படியே விட்டிட்டு.. நடையக் கட்டிட்டிடுவன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

வெளில அதிகம் யார் கூடும் பேசுவதில்லை. தேவையோட மட்டும் எல்லோரோடும் கதைப்பன். மற்றும்படி.. பெண்கள்.. ஆண்கள் சொல்லுறதுகளை எல்லாம் செவிமடுத்திட்டு இருக்கிறதில்ல.

எந்த பக்கமும் சரியா செவிமடுக்காம,,,

இந்த பக்கம் எப்பவும் ,,, தப்பாவே இருக்கும்னு ...

எப்டி நெடுக்கு தீர்மானிச்சிங்க?/தீர்மானிக்குறீங்க?

உங்க தகவலுக்கு நன்றி ,,, நெடுக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

வீணா நன்றி பகிர்வுக்கு, ஆணெண்ண பெண்ணெண்ண, புரிந்து நடந்தா சரி

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பக்கமும் சரியா செவிமடுக்காம,,,

இந்த பக்கம் எப்பவும் ,,, தப்பாவே இருக்கும்னு ...

எப்டி நெடுக்கு தீர்மானிச்சிங்க?/தீர்மானிக்குறீங்க?

உங்க தகவலுக்கு நன்றி ,,, நெடுக்கு! :)

எந்தப் பக்கமும் செவிமடுப்பதில்லை என்ற பொருளில் எழுதல்லையே. தேவையானதை பேசுவேன்.. கேட்பேன் என்றதை நீங்கள் கவனிக்கல்லப் போல. தேவையற்றதை.. கேட்டும் கேட்காமலும் இருப்பேன்.

அதைவிட்டு.. பெண்கள்.. புதிர்.. அதிசயம்... அட்சயபாத்திரம்.. தேன் கிண்ணம்.. என்ற பிதட்டல்களை.. எல்லாம் நம்பிற அளவுக்கு நான் ஒன்றும் முழு முட்டாள் கிடையாது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தேவையோ/தேவையில்லையோ மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்,செய்கிறார்கள் எனத் தெரியாமல் எப்படி உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும்?...எது சரி/பிழை,நல்லது/கெட்டது என்பதை மற்றவர்களோடு பழகிப் பார்க்காமல் சொல்ல முடியாது என்பது என் கருத்து

முடியலை... பெண்களை இழுக்காமல் ஆண்களுக்கு பொழுதுதே போகாதுபோல.... <_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேசுதல் செவி மடுத்தல் விடயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறு பாடுகள் உண்டு. இதற்கு மூளையின் அமைப்பில் இருக்கிற வேறு பாடுகளும் ஒரு காரணம். மொழி/பேச்சு (language) என்பன தொடர்பான மையங்கள் மூளையின் இடது பாதியில் இருக்கின்றன. பார்வை, நுணுகி ஆராய்கின்ற, கணக்கிடுகின்ற (analytical) வேலைகளுடன் தொடர்பான மையங்கள் மூளையின் வலது பாதியில் இருக்கின்றன. பெண்களில் இடது பாதியும் ஆண்களில் வலது பாதியும் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு கருத்து இருக்கிறது. இதனால் பெண்களுக்கு பேசுவதும் செவி மடுப்பதும் இலகுவாக இருக்கும் போது ஆண்களுக்கு பார்ப்பதும் தங்களுக்குள்ளேயே யோசித்துக் கொள்வதும் இலகுவாக இருக்கிறது. பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளை விட இளவயதிலேயெ பேச ஆரம்பிக்கின்றன. இந்த மூளை அமைப்பு வேறுபாடுகளால் பெண்கள் பொறியியல் கணணியியல் போன்ற தொழில்களில் பிரகாசிக்க முடியாது என்று முதலில் கருதப் பட்டது. ஆனால், சமூக மாற்றத்தினாலும் பயிற்சியினாலும் இலகுவாக மாற்றப் படக்கூடிய ஒரு உறுப்பு மனித மூளை. எனவே தொழில் ரீதியில் இந்த மூளை அமைப்பு வேறுபாடுகள் ஆண்களையும் பெண்களையும் இப்போது பிரிப்பதில்லை. சமூக குடும்ப உறவுகள் மட்டத்தில் இந்த மூளை அமைப்பு வேறு பாட்டின் தாக்கங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.

Edited by Justin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

முடியலை... பெண்களை இழுக்காமல் ஆண்களுக்கு பொழுதுதே போகாதுபோல.... <_<

சிவனும் சக்தியும் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?

நீங்கள் எல்லாம் எங்களோட பாதி. எப்படிங்க விடமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியின் மனைவியால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் தாத்தா எழுதின் நீங்கள் ,

அதைவிட்டு.. பெண்கள்.. புதிர்.. அதிசயம்... அட்சயபாத்திரம்.. தேன் கிண்ணம்.. என்ற பிதட்டல்களை.. எல்லாம் நம்பிற அளவுக்கு நான் ஒன்றும் முழு முட்டாள் கிடையாது. :):icon_idea:

அப்போ நெடுக்கு என்ன ,,,நீங்க,,டெஸ்ட் டியூப் பேபியா?

ஏன்னா... எந்த ஒரு ......தன்னைதானே அறிவாளி எங்கிறவன்......

ஆக குறைந்தது ஒரு பெண்ணை ஆவது ,,ரொம்ப உயர்வா நினைப்பானே..!

அது ........

அவ(ன்/ள் ) தாய்!

அட்லீஸ்ட் அந்த ஒரு பொண்ணையாவது மதிக்கும்,,, பக்குவம் இருக்கா,,,

உங்ககிட்ட இருக்கா நெடுக்ஸ்?

அப்டி இருந்தா ,, .........

ஒரு உயர்ந்த,,, பாலினத்தை கொச்சைபடுத்தும் அதிகாரம்,

ஒரு தனிமனிதனான உங்களுக்கு , தந்தது யாரு... நெடுக்கு அண்ணா?

எனக்கு ஒண்ணை பிடிக்கலைன்னா,,, விலகிப்போறது ஒருவகை,,,

..

எனக்கு சரி இல்லைன்னு படுறது எல்லாம், எப்பவுமே கேவலம் எங்கிறது .....

இரண்டாவது!

நீங்க விலகிபோறவரா இல்ல... கேவலமானவரா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.