Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 10/25/24 in all areas
-
அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.4 points
-
நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??3 points
-
இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது. ஆனால் 1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. 1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்.2 points
-
சுமந்திரன் எதிர் பட்டாசு ரெஜிமென்ற்றின் "தோசை, இட்லி, குண்டு தோசை" என்று, ஒரே சரக்கை நேரத்திற்கேற்ப மாற்றிப் போடும் நிலையில்லா மூளைக்கு, இந்த செய்திக்கு அவர்கள் இட்டிருக்கும் பதில்கள் நல்ல உதாரணம்😂. இதே சுத்த இனவாதியான கம்மன்பில, 2016 இல் இருந்து புலிகள் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் சொல்லியிருப்பவை பொய் என்பார்கள், ஆனால் சுமந்திரன் பற்றி அவர் இப்பொது சொல்வது உண்மை என்கிறார்கள்! இந்த பட்டாசு படையணியை தாயக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டன! புலத்தில் மட்டும் தான் இந்த சத்தம்!2 points
-
ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி நீலன் துரோகி ரட்ன ஜீவன் கூல் துரோகி சம்பந்தன் துரோகி கருணாநிதி துரோகி ப சிதம்பரம் துரோகி இப்போது சுமந்திரனும் துரோகி ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி.2 points
-
குருவே இந்திய வீரர்களின் அன்மைக் கால விளையாட்டு சரி இல்லை இலங்கையிடம் ஒரு நாள் தொடரில் தோல்வி இப்போது சொந்த மண்ணில் நியுசிலாந்திடம் இரண்டாவது தோல்வியும் உறுதியாகி விட்டது பலம் இல்லா வங்கிளாதேஸ்ச வென்றார்கள் , இலங்கையிடம் தோல்வி அடைந்த நியுசிலாந்தை சொந்த மண்ணில் வெல்ல சிரம படுகினம்😁 கோலி ரோகித் சர்மா இவர்கள் அடுத்த 50ஓவர் உலக கோப்பைக்கு முதலே ஓய்வை அறிவித்தால் இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தை தன்னும் காப்பாற்றி கொள்ளலாம் நியுசிலாந் 301 ரன்ஸ் முன்நிலையில் நிக்குது இன்னும் கூடுதலா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சிலது விளையாட்டு நாளையோட கூட முடிந்து விடும் 😁 இப்ப எல்லாம் ஜந்து நாள் விளையாட்டு 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடுது 18 வருடத்த முன்னேக்கி பார்த்தால் பல விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் முடிந்து இருக்கு 20ஓவர் வருகைக்கு பிறக்கு இளம் வீரர்களுக்கு பொறுமை அறவே இல்லை குருநாதா😁.........................2 points
-
🤣........... குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது.............2 points
-
🤣............. முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசியலைத் துறந்து சினிமா எடுக்க போய்விட்டார். உதய கம்மன்பில பந்துல எடுக்கப் போகும் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு கதை, சமஷ்டி கதை என்று ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்புகின்றார் கம்மன்பில............ சமஷ்டியா.............. ஒரு சட்டி கூட எங்களுக்கென்று தனியாக கொடுக்க மாட்டார்கள் எந்த பெரும்பான்மை கட்சிகளும், அரசியல்வாதிகளும்...........2 points
-
அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு. சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியையம் தனக்கே வேணும் என்று அழுது அடம் பிடித்து எடுத்திருப்பார். இப்போ.... சுமன் காட்டில் அடை மழை பெய்யப் போகுது.2 points
-
குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல். சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.2 points
-
அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் .... இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி... செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர் செய்தார்.. சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்... கியூபா ஜனாதிபதி வருகின்றார் .. பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ... பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல2 points
-
எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வாங்கிய பின் அவர்கள் கல்யாணத்தை கட்டிய பின் சத்திய சோதனை சங்கடம் இல்லை உங்களுக்கு இதைவிட உலகில் உங்களைத் தவிர எவருக்குமே தெரியாத உங்களின் ரகசியங்களும் பலவும் உண்டு சிலருக்கு அவர்களின் எல்லாமே ரகசியங்கள் 'பொத்தர்' என்று பெயர் வைக்கலாம் அவர்களுக்கு வெகு சிலருக்கு அவர்களின் எதுவுமே ரகசியம் இல்லை திறந்த புத்தகம் என்பார்கள் சிலரிடம் நாலைந்து புத்தகங்கள் உண்டு ஒன்றை அப்படியே திறந்து வைத்து விட்டு மூன்றை முழுக்க மூடி வைத்திருப்பார்கள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மரண வீடுகளுக்கு போக வேண்டியிருக்கின்றது அங்கே கடைசியில் புகையாக கூண்டினூடு வெளியேற எத்தனை ரகசியங்கள் எவருக்குமே தெரியாமல் எரிந்து போகின்றதோ என்று தோன்றுகின்றது.2 points
-
இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.2 points
-
விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/14054841 point
-
"தனிமரம்" மாங்குளம் என்ற அமைதியான, போர் சூழல் இன்று மறக்கப்பட்ட, கிராமத்தில் ஒரு தனி ஆலமரம் நின்றது, அதன் வேர்கள், குண்டுகளாலும் ஷெல்களாலும் எரிந்த பூமியில் ஆழமாக மண்ணுக்குள் நீண்டு இருந்தது. அதன் கீழ் ஒரு தமிழ்த் தாய் சுந்தரி அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கை தன்னைச் சுற்றியுள்ள நிலத்தைப் போல வாடி, தனிமையாகி இருந்தது. போர் முடிந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுந்தரிக்கு அவள் இதயத்தில் போர் இன்னும் முடியவில்லை, ஏனென்றால் அவள் குடும்பம் - அவளது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் - விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆனால் அதன்பின் இன்னும் திரும்பி வரவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவு அமைதியின் கொடூரமான சாயலைக் கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து வந்த நாட்களில், தாங்கள் சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும் விசாரணைக்காக சரணடையுமாறு கோரி சீருடை அணிந்த அரச ஆயுத படையினர் அவளது கிராமத்தின் வழியாக ஊர்வலமாக சென்றனர். சுந்தரியின் கணவர் ராகவன், சிவா மற்றும் அர்ஜுனன் என்ற இரு மகன்களுடன் அவளது மகள் மீனா, வெறும் பதினேழு வயதுடையவளும் அழைத்துச் செல்லப்பட்டாள். சுந்தரி "அவள் ஒரு சிறிய பெண்" என்று கெஞ்சினாள், அழுதாள். ஆனால், வீரர்கள் காது கேளாதவர்களாக மாறி, எண்ணற்ற மற்றவர்களுடன் அவர்களை ஒரு டிரக்கின் [ஒரு பெரிய சாலை வாகனம்] பின்புறத்தில் தள்ளினார்கள். வழக்கமான விசாரணைக்குப் பிறகு திரும்பி அனுப்புவோம் என்று ராணுவ வீரர்கள் உறுதியளித்தனர். ஆனால் நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறி, இப்போது பதினைந்து வருடங்கள் வேதனையளிக்கின்றன. பதினைந்து ஆண்டுகளாக சுந்தரி கிராமத்தில் "தனிமரம்" மாக இன்னும் தன் கணவனும் மூன்று பிள்ளைகளும் வருவார்கள் வருவார்கள் என்று கண்ணீருடன், அதிகமாக அவள் விடியற்காலையில் இருந்து மாலை வரை ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, தனது அன்புக்குரியவர்களின் பார்வைக்காக தினம் காத்திருந்தாள். மாங்குள கிராமவாசிகள், அவள் முதுகுக்குப் பின்னால் பரிதாபமான வார்த்தைகளைக் கிசுகிசுத்தாலும், அவளுடைய வலிமையைப் பாராட்ட என்றும் தயங்கவில்லை. ஆனால் சுந்தரியின் இடைவிடாத தேடல் மற்றும் அதற்காக அவளின் பரந்தப் பட்ட குரலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவனத்தை ஈர்த்ததால், அது ஒரு அகிம்சை போராட்டமாக வலுப்பெற தொடங்கியது. அவளுடைய போராட்டம் வெறும் துயரம் மட்டுமல்ல, அவளை மௌனமாக்க விரும்பும் சக்திகளுக்கு எதிரான ஒரு நிலையான போராட்டம் ஆகும். சில மாதங்களுக்கு ஒருமுறை, அவள் தலைநகருக்குச் சென்று, அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்வாள், இராணுவ முகாம்களின் கதவுகளைத் தட்டுவாள், மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களுக்குச் செல்வாள். ஆனால் ஒவ்வொரு முறையும், அவள் சரியான பதில் ஒன்றையும் பெற முடியவில்லை. அவள் பலவழிகளில் பயப்படுத்தப்பட்டும் மோசமாகவுமே கையாளப்பட்டாள். அது மட்டும் அல்ல, அவளது குடும்ப உறுப்பினர்கள் எவருமே இதுவரை காவலில் வைக்கப்படவில்லை என மறுத்தது. "அவர்கள் வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும்" என்றும் "ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம்." என்றும் ஏளனமாக கூறியும் வந்தது. ஆனால் சுந்தரிக்கு உண்மை தெரியும் - அவளுடைய குடும்பம் தனக்கு முன்னாலேயே அழைத்துச் செல்லப்பட்டது, அவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. சுந்தரி தனது பல வருட தேடுதலில் இறுதியாக உள்ளூர் இராணுவத் தளபதியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிந்தது. அவனுடன் சில நிமிடங்கள் அனுமதிக்கப்படுவதற்காக அவள் பல நாட்கள் அங்கு பயணம் செய்துள்ளாள், கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் வெளியே காத்து நின்று இருக்கிறாள். அவள் இறுதியாக ராணுவ முகாமுக்குள் உள்ள சிறிய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு மேசைக்குப் பின்னால் இருந்த அலுவலகர் அவள் சமர்ப்பித்த அத்தாட்ச்சிகளையோ அல்லது அவளின் வேண்டுகோள் நிறைந்த கடிதத்தையோ ஏறிட்டு கூட பார்க்கவில்லை. ஆனால் அவள் தளரவில்லை. ஔவையின் மூதுரையை தனக்குள் முணுமுணுத்தாள் "அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா" ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்று தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், ஆக வேண்டிய காலம் வந்தால்தான் ஆகும். மரம் உயரமாக வளர்ந்துவிட்டது என்பதற்காக உடனே பழம் பழுக்கத் தொடங்கிவிடுமா? பூப்பூத்துக் காய் காய்த்துப் பழுக்கிற காலத்தில்தான் பழுக்கும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அந்த காலத்தை விரைவில் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை, அவளின் முயற்சியை ஊக்கிவித்துக் கொண்டே இருந்தது. தளர்ச்சியடையாமல் தொடர்ந்து முயல்க. ஒரு முறை, இருமுறை அல்ல, ஓராயிரம் முறையானாலும் முயல்க. அயராமல் செய்கிற முயற்சி உரிய பயனைத் தரும் என்ற வள்ளுவரின் குறள் - "ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்" - அவளுக்கு மனம் சோராமல் தொடர்ந்து போராட பலம் கொடுத்தது. "ஐயா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரையும் மூன்று குழந்தைகளையும் உங்கள் ஆட்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பல முறை என்னிடம் கூறினார்கள், ஆனால் எதுவும் இன்னும் நடக்கவில்லை. நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், தயவுசெய்து அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்." தளபதியின் குரல் எந்த தயக்கமும் கருணையும் இல்லாமல் . "நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மோதலின் போது பலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உங்கள் குடும்பம் அரசுக்கு எதிராக தொடர்புபட்டிருந்தால், அவர்கள் ஒருவேளை வேறுவிதமான விதியை சந்தித்திருக்கலாம்? " சுந்தரியின் இதயம் இறுகியது. "ஆனால் அவர்கள் போராளிகள் இல்லை ஐயா. அவர்கள் சாதாரண மனிதர்கள். என் மகளுக்கு பதினேழு வயதுதான். நான் எல்லா இடங்களிலும் தேடினேன். தயவுசெய்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் தான் பிடித்துக்கொண்டு போயிருந்தீர்கள் , அப்படியென்றால் என்ன நடந்தது கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், எதுவாகினும், அவர்களும் இந்த நாட்டின் மூத்த குடிகள் " தளபதி இறுதியாக மேலே பார்த்தார், அவரது கண்கள் கடினமாகவும் அலட்சியமாகவும் இருந்தன. "இந்த வழக்குகள் பொதுவானவை, பெண்ணே. பலர் காணாமல் போனார்கள். இதை வைத்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். பதிவுகள் இல்லை. வேண்டும் என்றால் மரணச்சான்றிதலும் இழப்பீடும் தரலாம். அதற்க்கான வழியை பாருங்கள். அதை பெற்று இதை மறந்துவிட்டு, உங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருங்கள்." "ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் வரை என்னால் நகர முடியாது," சுந்தரியின் குரல் உடைந்தது, ஆனால் அவள் அவன் முன் அழாமல், ஒரு கண்ணகியாக நின்றாள். "தயவுசெய்து, என் மகள் ஒரு குழந்தை, பெண் குழந்தை, அவளை என்ன செய்தீர்கள்? ,பொய் சொல்லவேண்டாம் ? உங்களுக்கு குழந்தைகள் ஒன்றும் இல்லையா?"அவள் கோபத்தில் கேட்டாள். தளபதி நாற்காலியில் சாய்ந்தார், கண்ணை மூடினார், பின் வேறு பக்கம் பார்த்துக்கொண்டு "அம்மா வீட்டுக்குப் போ. உன் புரிதலுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் உன்னை ஈடுபடுத்தாதே." அதட்டிப் பேசினான். புத்த சமயம் வாழ்வதாக கூறும் பூமியில், நீதி, மனிதம் இறந்துவிட்டது!! பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவளின் விடாமுயற்சியின் பயனாக, சுந்தரி நீதிமன்ற அறையில் நீதிபதியின் முன் நின்றாள். இது தமிழரினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கு - அவளைப் போன்ற தாய்மார்களின் சாட்சியம் மற்றும் யாருடைய மகன்கள், மகள்கள், கணவர்கள் வலிந்து காணாமல் போனார்களோ அவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர், இதுவே அவளுடைய கடைசி நம்பிக்கையாக இருந்தது. இறுதியாக இது அரசாங்கத்தை, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் என நம்பினாள். நீதிபதி, சோர்வான கண்களுடன் கூடிய ஒரு முதியவர், அவளது வழக்கறிஞர் தனது வழக்கை முன்வைப்பதைக் உற்றுக் கேட்டார். மனித உரிமை மீறல்கள், இதுவரை விசாரிக்கப்படாத வலிந்து காணாமல் போனவர்கள் பற்றி வழக்கறிஞர் மிக விபரமாக சாட்சிகளுடன் பேசினார். அவள், சாட்சியாகவும், வழக்கிட்ட நபராகவும் தனக்கு வரும் பேசும் தருணத்திற்காக காத்திருந்த சுந்தரியின் இதயம் துடித்தது. நீதிபதி அவளை முன்னோக்கி அழைத்தபோது, சுந்தரி தொண்டையில் ஒரு கட்டியை உணர்ந்தாள். "நான் பதினைந்து வருடங்களாக என் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவள் ஆரம்பித்தாள், அவள் குரல் தளதளத்தது, கண்ணீர் வடிந்தது, ஆனால் உறுதியாக சாட்சி கூட்டில் நின்றாள். "என் கணவர், என் மகன்கள், என் மகள் அனைவரையும் இராணுவம் பிடித்துச் சென்றது. நான் ஒவ்வொரு அரச அதிகாரத்தையும் கேட்டேன், கெஞ்சினேன், ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாரும் என்னிடம் இதுவரை சொல்ல மறுத்தார்கள், எனக்கு உண்மை மட்டுமே வேண்டும்." நீதிபதி பெருமூச்சு விட்டார். "அம்மா, இது நடந்தது ஒரு கடினமான காலத்தில் , நீண்ட மற்றும் இரத்தக்களரி போரில். பலர் காணாமல் போனார்கள்." என்று அவளைப்பார்த்து கூறினார். அவள், சுந்தரி , வாய்விட்டு சிரித்தாள், "கணம் நிறைந்த நீதிபதி அவர்களே, நான் கேட்பது போர் முடிந்தபின், முடிவிற்கு வந்தபின், விசாரணைக்கு என, அரசின் கோரிக்கைக்கு இணங்க சரணடைந்து, அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு வலிந்து காணாமல் போனவர்களையே, அதை நீங்கள் முதலில் விளங்கி கொள்ளுங்கள்" என்றாள். அதைத்த தொடர்ந்து "உங்கள் குடும்பம் வீட்டிற்கு வருவதற்கு ஒவ்வொரு நாளும் காத்திருப்பது என்னவென்று உங்களுக்கு புரிகிறதா?" சுந்தரியின் குரல் வலுத்தது. "நான் ஒவ்வொரு நாளும் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து, அவர்கள் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் ஒருபோதும் இதுவரை நடக்கவில்லை . அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நான் அறியும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்." என்றாள். நீதிபதி சங்கடமான நிலையை உணர்ந்தார். "நீதிமன்றம் உங்கள் மனுவை பரிசீலிக்கும். நாங்கள் இந்த விடயத்தை மேலும் விசாரிப்போம், ஆனால் இந்த வழக்குகள் சிக்கலானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நேரம் ஆகலாம்." அவரின் கவனம் நீதியை நிலைநாட்டுவதை விட, சமாளிப்பதிலேயே முழு கவனமாக இருந்தார். "நான் ஏற்கனவே பதினைந்து வருடங்கள் காத்திருக்கிறேன்," அவள் சொன்னாள், அவள் குரல் ஆத்திரமும் சோகமும் கலந்து நடுங்கியது. "நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?", ஆனால் நீதிபதி எந்த பதிலையும் வழங்காமல் வழமை போல் வழக்கை ஒத்திவைத்தார். மெதுவாக நகரும் சட்ட அமைப்பில் சுந்தரியின் விரக்தி இறுதியில் அவளை எதிர்ப்பில் சேர வழிவகுத்தது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தொடர்ந்து நடைபெறும் வலிந்து காணாமல் போனோர் சங்கத்தின் ஆர்ப்பாட்டங்களில் அவள் முதல் முறையாக இணைந்துகொண்டாள், என்றாலும் தனிமரமாக தன் நடவடிக்கைகளையும் தொடர்ந்தாள். சுந்தரி , மற்ற தாய்மார்கள் மற்றும் விதவைகளுடன் சேர்ந்து, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் படங்களைப் பிடித்தபடி தெருக்களில் அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார். அத்தகைய ஒரு போராட்டத்தில், ஒரு நாள், சுந்தரி ஒரு அரசாங்க கட்டிடத்தின் முன் நின்று, “எங்கள் குழந்தைகள் எங்கே?” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை வைத்திருந்தார். கூட்டம் பதட்டமாக இருந்தது, அவர்களின் குரல்கள் தெருக்களில் எதிரொலிக்கும் கோஷங்களில் எழுந்தன. போராட்டக்காரர்கள் சத்தம் எழுப்பியதையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீசாரும் ராணுவத்தினரும் அவர்களை சுற்றி வளைத்தனர். ஒரு அதிகாரி சுந்தரியையும் மற்ற பெண்களையும் அணுகினார். அவன் முகம் கடினமாக இருந்தது, அவமானத்தால் கண்கள் சுருங்கியது. "இந்த போராட்டம் சட்டவிரோதமானது," என்று அவன் நாயைப் போல குரைத்தான். உடனே கலைந்து செல்லுங்கள், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினான். ஆனால், சுந்தரி குரலை உயர்த்தி முன்னேறினாள். "நாங்கள் நீண்ட நேரம் அமைதியாக காத்திருந்தோம், உண்மை தெரியும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம்." என உறுதியாக கூறி, அந்த இடத்தில் மற்றவர்களுடன் அமர்ந்தாள். அதிகாரி ஏளனமாக சிரித்த படி "எதுவும் இல்லாத இந்த இடத்தில் நீங்கள் சிக்கலை ஏற்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிலைமை மோசமாகும் முன் வீட்டிற்குச் செல்லுங்கள்." மீண்டும் தன் துப்பாக்கியை காட்டி எச்சரித்தான். "விடயங்கள் ஏற்கனவே மோசமாக உள்ளன," சுந்தரி மீண்டும் கத்தினாள். "நீ என் குடும்பத்தை அழைத்து சென்றாய். எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. உனக்கு வேண்டுமானால் என்னை கைது செய். ஆனால் எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று கேட்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்!" அவளும் எச்சரித்தாள். கூட்டத்தினர் கைதட்டல் மற்றும் முழக்கங்களுடன் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களின் எதிர்ப்பின் சத்தம் அந்த சூழலில் எங்கும் காதுகளில் ஒலித்தது. அவள் பல வருட போராட்டத்தின் வலியை ஆழமாக உணர்ந்தாள். இராணுவத்தால், அரசாங்கத்தால், நீதிமன்றத்தால் தாம் எந்த தீர்வும் இன்றி அவதிப்படுவதை உணர்ந்தாள். தன்னந்தனியாக அவள் மீண்டும் தினமும் காத்திருக்கும் தனி ஆலமரத்தின் அடியில் போய் அமர்ந்தாள். அவளது குடும்பம் அரசபடையால் கொண்டு செல்லப்பட்டு பதினைந்தாவது ஆண்டு நிறைவை நெருங்கும் வேளையில், சுந்தரியின் பலவீனமான உடல் மீண்டும் தலைநகருக்கு பயணத்தை மேற்கொண்டது. இம்முறை, போரின் போது காணாமல் போன பொதுமக்கள் தொடர்பில் விசாரணை செய்வதாக உறுதியளித்த புதிதாக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு அவள் சென்றாள். அவள் இதன் தந்திரத்தை, உலகை ஏமாற்றும் வேலையை கேள்விப்பட்டிருந்தாள், ஆனால் அவளுடைய இதயத்தில் ஏதோ ஒன்று, ஒருவேளை கடைசி நம்பிக்கையின் மினுமினுப்பு, கடைசியாக ஒரு முறை முயற்சி செய்ய அவளை வற்புறுத்தியது. சுந்தரி தனது குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தை அங்கு வழங்கினாள், பல வருடங்கள் தன் மார்போடு நெருக்கமாக வைத்திருந்த படங்கள் அவை. "இவர்கள் என் அன்புக்குரியவர்கள்," அவள் குரல் கரகரப்பான ஆனால் நிதானமாக இருந்தது. "அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் அவர்களை, நான் இறக்கும் முன்பு எம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்." அவள் கெஞ்சினாள். அதிகாரிகள் அவளை இம்முறை கொஞ்சம் அனுதாபத்துடன் பார்த்தார்கள், ஆனால் இது உண்மையான அனுதாபமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது? அவர்களின் கண்கள், அவள் மீண்டும் மீண்டும் பார்த்த, அதே உதவியற்ற கருணையற்ற தன்மையால் நிரம்பியிருந்தன. அவர்கள் விசாரிப்பதாகவும், காப்பகங்களை மறுபரிசீலனை செய்வதாகவும், சாட்சிகளை அணுகுவதாகவும் உறுதியளித்தனர். அவர்களின் வார்த்தைகளின் பழக்கமான ஓட்டை அவளுக்குத் தெரிந்திருந்தாலும், சுந்தரியால் நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நீண்ட பயணத்தை மீண்டும் மாங்குளம் நோக்கிச் சென்றபோது, உடல் வலுவிழந்தாலும், நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இன்னும் அந்த பலவீனமான உடலில் ஒட்டிக்கொண்டிருக்க, தன் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் இருப்பதை சுந்தரி அறிந்தாள். தனி ஆலமரம், தனிமரமான அவளுக்காகக் காத்திருந்தது, அதன் வேர்கள் அவளுடன் பிணைக்கப்படாத விடாமுயற்சியின் பிணைப்பில் பின்னிப்பிணைந்தன. அதனால் அவள் அந்தத் தனிமரம் போலத் தொடர்வாள் - காலத்தின் காற்றுக்கு எதிராக தனித்து நின்று, காத்திருந்து, தேடி, தன் குடும்பத்தின் நினைவை மங்க விட மறுத்து, எத்தனை சக்திகள் அவளை அலைக்கழித்தாலும், அவளுடைய அன்புக்குரியவர்கள் திரும்பி வரும் வரை, போர் முடிக்க மாட்டாள், ஓய்வெடுக்க மாட்டாள் என்று எல்லோரும் நம்பியிருந்த அந்த வேளையில் ... நேற்று கனவில் "புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது!" இன்று நனவில் "தனிமரம் சுந்தரி நீதிமறுக்கப்பட்டார் சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் மிரட்டினர் ஆல மரத்தின் அடியருகே அவளது சடலம் வாள்வெட்டுடன் கிடந்தது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
யாரெல்லாம் பதவியேறுகின்றனரோ அவர்களை வாழ்த்துவது என்கிற பெயரில் ஓடோடுவது தாங்கள் சிங்களத்துக்கு செய்த சேவையினை, தம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகத்தினை எடுத்து வைத்து பதவி பெறுவதற்கே. அனுரவுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கவேண்டுமென்று. முதலில் ஓடிய சிங்கத்துக்கு நல்ல விடை கிடைக்கவில்லை. கட்சியை நொறுக்கினார், அதுவே அவரது திறமைக்கு நல்ல சிறப்பு சான்றிதழ், கடந்த அரசுகளில் இவர்கள் அடைந்த சலுகைகள் அடுத்த முக்கிய சிறப்பு, இவர்களுக்கு பதவியளித்தால் என்ன நடக்குமென்று கடந்த அரசுகளின் வங்குரோத்து நிலை தெளிவாக்கியுள்ளது. இவற்றை சந்திக்க சென்ற யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அடுத்து வடக்கின் வசந்தம், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதென்று ஓடிப்போய் விழுந்தார் காலில். விரட்டிவிட்டார், பாராளுமன்றம் வாங்கோ அங்கே வந்து காட்டுங்கள் உங்கள் திறமையை என்று. கோத்த பாய விரட்டப்பட்டபின் ஒரு குழப்பமான நிலையில், தான் பிரதம மந்திரி பதவியை ஏற்க தயார் என்றவர் ஒரு செயல்வீரன். சிங்களத்தை அவர் அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். தேர்தலில் தோற்றார் என்றால் அவரது வாழ்வே கேள்விக்குறியாகும். இவரை யார் சட்டத்தரணியாக நியமிப்பார்? அதுதான் அவரது பொய், பிரட்டல் எல்லாம் சர்வதேச தூதுவர்கள் அறிந்த விடயமாச்சே. திறமையிருந்தால் பதவி தானாக தேடி வரும், பதவியை தேடி அலைந்தால் அவமானப்பட நேரிடும்.1 point
-
இப்படிப்பட்டவர்கள்,.தங்களுடைய சொந்த செலவுகளை சொந்தப்பணத்தில். செலவு செய்து வாழ. முடியாதவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய முடியும்????. இந்த கேள்வி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்1 point
-
எங்கட தமிழ் அரசியல்..? சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன. அது என்னவென்றால், ''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன. சிவன் அவர்களிடம் சென்னார், 'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன. அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம், 'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் கதைப்பம்' என்றார். நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன. 'சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சாப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார். 'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி விட்டது' என்றன. 'இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன். (கதை முடிஞ்சிது)1 point
-
அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது. வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய் அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம் கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம். இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார். செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார், இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார். ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார். லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார். தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர். https://thinakkural.lk/article/3111141 point
-
அதிகம் கோபபடாமல் இருந்தாலே மனவலிமை தானாக வந்துவிடும். கோபம் அதிகம் இருந்தால் அதிக நட்பு வட்டம் இருக்காது, இருக்கும் கொஞ்சமும் புட்டுக்கிட்டு போகும். உடலாலும் மனதாலும் எதிரிகள் அதிகமாகும் , எதிரிகள் அதிகமானால் எந்த மனவலிமை இருந்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பதே அடியேனின் எண்ணம். எதிரிகள் அதிகம் இல்லையென்றால் எந்த சபைக்கும் கெளரவமாய் போய் வரலாம், நம்முடன் அதிக நட்பு கொண்டிராதவன்கூட நமக்கொரு பிரச்சனையென்றால் பரிந்து பேச வருவான். எடுத்ததுக்கெல்லாம் கோபம் கொண்டு தகராறு வளர்ப்பவர்களின் நண்பர்கள்கூட பொறுத்த நேரத்தில் காய் வெட்டிவிடுவார்கள்.1 point
-
தேர்தலில் தோற்றவர்கள்.. தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போவதும், ஒரு வகையில் பின்கதவு தான். சுமந்திரனுக்கு... இப்போது இருக்கும் தெரிவு, தேசியப் பட்டியல் மட்டுமே. அதைத்தான்... பிடித்து தொங்கிக் கொண்டு பாராளுமன்றம் போவார். நவம்பர் மாதம் மட்டும் பொறுத்து இருங்கள், அப்போ தெரியும் அவரின் வண்டவாளம். 🙂1 point
-
இதற்கு சிறந்த வழி prepaid கடனட்டைகள். தேவையென்றால் பணத்தை போட்டுவிட்டு உபயோகித்துக்கொள்ளலாம். கைத்தொலைபேசியில் இருந்து கடனட்டைக்கு பணப்பரிமாற்றம் சில வினாடிகளில் நடக்கிறது. கைத்தொலைபேசியில் இருந்து கைரேகை மூலம் தான் உள்ளே செல்ல முடியும். அப்படியே சென்றாலும் பணம் வெளியில் போகும் போது ஒரு தகவல் வரும்படி setting செய்துள்ளேன். இதையெல்லாம் தாண்டி உள்ளே போனாலும் எடுப்பதற்கு பெரிய தொகை பணம் இருக்காது. சமபலம் வந்தவுடனே எல்லாம் பிரித்து பிரித்து ஒவ்வொரு திசைக்கும் அனுப்பிவிடுவேன். அந்த மாத செலவிற்கு ஒரு தொகை மட்டும் இருக்கும். ஒரு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தான் நடமாடுகின்றேன். 🤣1 point
-
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்கும். போதையால் அழிக்கும் போர் இருக்கும். அவர்களிடமோ? சொகுசுக் காரிருக்கும் மாளிகை வீடிருக்கும் Fபார் இருக்கும் அவர்களுக்கு நிறையப் படியிருக்கும். இவ்வளவு காலமாய் இதுவே!நடந்தது. இம்முறையாவது மாறுமா? இல்லையேல் இதுவே வாழ்க்கையா? இனங்களின் பிரச்சனை தீருமா? இலங்கையும் உலகோடு உயருமா? அன்புடன் -பசுவூர்க்கோபி.1 point
-
1 point
-
இதை விட இறக்குமதி பொருளாதாரம் என்ற வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழகமான அரசியல் ஜனாதிபதிகள் போலவே ஆப்பு கொடுக்கிறார் கொஞ்ச காலம் பொறுத்து பாருங்க என்கிறார்கள் ஆரம்பத்தில் தமிழரசு கட்சியில் பின்கதவால் சும் வந்தபோது அதை எதிர்த்து யாழில் அரசியல் கருத்துக்கள் எழுதி பலரிடமும் வாங்கி கட்டினேன் இப்போ 14 வருடத்தில் நடப்பது என்ன ? அதே போல் இடது சாரியையும் நச்சு பாம்பையும் கண்டால் முதலில் இடதை அடி என்ற கொள்கையாளர்கள் கூட அவரின் பேச்சை நம்புகிறார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி பார் லிஸ்ட் இந்தா வருது அந்தா வருது என்றார்களே அது எங்கே போச்சு ? அதை தடுத்தவர்கள் யார் ? என்ற கேள்விகளை கேட்டு பாருங்க பதில் வராது . சும்மா ஊடகங்களும் யூடுப் அண்ணாவிகளும் அடித்து விடுகினம் ஆ ஊ என்று அரசியல்வாதியும் ரெயிலும் ஒன்று ரெயில் வழக்கமான தண்டவாளத்தில் தான் பயணிக்கும் அதே போலத்தான் அரசியல்வாதியும் .1 point
-
இவர் போன்றவர்கள் இயக்கத்தை ஆதாரமாக வைத்து றொக்கெட் விடுபவர்கள் 🙂. தமது அடிப்படை ஆட்டம் காண வெளிக்கிட்டால் மூர்க்கமாக எதிர்ப்பார்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, இது தெரியாத ஆள் அவரில்லை, ஆனால் அவர் இந்தத் தடத்தில் வெகுதூரம் போய் விட்டார். இந்த எதிர்ப்பு பிழைப்புவாத அரசியல் மட்டுமே.1 point
-
வகுப்பில் குழப்படிகாரரை மாணவ தலைவனாக நியமித்தால் பிரச்சினை வராது எனும் உத்தியாக இருக்குமோ?😁1 point
-
விரைவாக சுகம் பெறவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வேண்டுதல்கள்.1 point
-
அனுபவம் எனக்குப் புதிதல்ல ஒன்றுக்கு மூன்று எனது கோட்பாடும் இது தான் பெண்கள் கல்வியில் என்றும் கவனமாக முன்னேறி வர வேண்டும் அதன் பின்னர் அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் மிக அவதானம் இப்போதெல்லாம் பெண்கள் தங்களை ஆண்களுடன் ஒப்பீடு செய்வதை விரும்புவதில்லை ஆண் பெண் எல்லாம் ஒன்றே என்ற பதில் தான் கிடைக்கின்றது1 point
-
கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில். கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது வித்தியாசமாக இருந்தது.1 point
-
திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ....1 point
-
காணமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் என்ற அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற விடயத்தில் தீவிரமாக ஈடுபடும் போதும் அதனை திறம்பட உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது மட்டுமே அது சர்வதேச மட்டத்தில் தாக்கங்களை உண்டு பண்ணி இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொண்டுவர வாய்புள்ளது. அதை விடுத்து காணாமல் போன உறவுகளை தேடும் அமைப்புகள் தன்னாட்சி சுயநிர்ணயம், தமிழரின் இறையாண்மையை மீட்டல் போன்ற அவர்களுடைய அமைப்புக்கு பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தும் போது அவர்களின் கோரிக்கை உலக மட்டதில் அனுதாபத்துடன் பார்க்கப்படமாட்டாது. மாறாக அவர்கள் அரசியல் கட்சிகளின் கையாட்களாக செயர்படுகிறார்கள் என்ற பார்வையையே உலக மட்டத்தில் ஏற்படுத்தும். (இதில் உண்மையும் இருக்கிறது) ஆகவே காணாமல் போனோரின் உறவினர்கள் அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்து உறுதியுடன் தன்னிச்சையாக போராடவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளினதும் புலம்பெயர்ந்த அமைப்புகளினதும் தேவைகளுக்காக அவர்களது கைப்பாவையாக செயற்பட்டு இவ்வாறான பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்தால் அவர்கள் நகைச்சுவையாளர்களாகவே பார்ககப்படுவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் கவனத்தை பெறாது.1 point
-
கொஞ்சம் சிக்கலான நிலை ட்ரம்பினுடையது. ட்ரம்பும் அவரது சிவப்புக் கட்சியும் தீவிர இஸ்ரேல் ஆதரவாளர்கள். ட்ரம்பின் மருமகனும், மகளும் (திருமணத்தின் பின்) யூத மதத்தவர்கள். ஆனால், ட்ரம்பின் வெள்ளையின மேலாண்மைப் பேச்சுக்கள் சில சமயங்களில் யூதர்களையும் தாக்கியிருக்கிறது. "ஹிற்லர் சில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார்" என்று ட்ரம்ப் தன் உள்வட்டத்தில் கூறியது போன வாரம் ஒரு கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. இது தான் ட்ரம்பின் நிலை. ஆனால்,சில குடியேறி அமெரிக்கர்களும், முஸ்லிம் அமெரிக்கர்களும் "பைடனும் கமலாவும் இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவில்லை" என்ற கோபத்தில் ட்ரம்பை நோக்கிப் பழிவாங்கல் வாக்களிப்பாக செயல்படவும் முயல்கிறார்கள். ஆனால், ட்ரம்ப் வந்தால் நெரன்யாஹு அவிழ்த்து விட்ட வேட்டை நாய் போல ஆகி விடுவர் என்பதை உதாசீனம் செய்து விடுகிறார்கள்😂.1 point
-
1 point
-
1 point
-
அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்1 point
-
பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.1 point
-
தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை. அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார். தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா. சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும்.1 point
-
அன்று இரவு எவருக்குமே தூக்கம் வரவில்லை. இந்தியப் பிரதமரும், சிதிலங்கா ஜனாதிபதியும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்..... வீம்பு காட்டிய சிறிலங்கா இந்தியாவுக்கு பணிந்தது. அரசியலில் கிழட்டு நரி என்று பெயர் பெற்ற ஜே. ஆரின் தந்திரம் எதுவும் இந்தியாவிடம் பலிக்கவில்லை. கடைசியில் ‘தமிழருக்கு பாதுகாப்பளிக்க’ இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் காலடி வைத்துவிட்டது கொழும்புக்கும், பலாலிக்குமாக இரவிரவாக விமானங்கள் பறந்து கொண்டே இருந்தன. என் சிந்தனையில், "எம். ஜி.ஆர் வாளோடு கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்த கதை, சேது அணை நிரவும் அண்ணாவின் பேச்சு எல்லாம் வந்தன, அவையெல்லாம் நனவாகிவிட்டது போன்ற ஒரு நம்பிக்கை பங்களாதேஷுக்கு விடு தலை பெற்றுத்தந்தது போன்ற பாணியில் ஈழத் தமிழருக்கு இந்தியா விடுதலை பெற்றுத் தரப் போகிறது என்ற மகிழ்ச்சி. நல்ல காலம்! என் கணவரின் ஆலோசனையை ஏற்று நான் கொழும்புக்குச் சென்றிருந்தால் ..! இந்தக் காட்சிகளை எல்லாம் கண்டிருக்க முடியுமா..... ? இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெள்ளையரின் இராணுவங்களையும் அவர்களோடு வந்த காப்பிலிகளை (நீக்ரோ)யும் பற்றி எனது பாட்டி இப்பொழுதும் கதை கதையாய் சொல்லும் போது, அவர்கள் எல்லாம் அந்த யுத்த காலத்தின் சாட்சிகள் என்று ஆர்வத்தோடு பார்ப்போம். எங்களது பேர மக்களின் காலத்தில் இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் பெருமையோடு சொல்வதற்குரிய கண்கண்ட சாட்சிகள் நாங்கள் தானே ...! இந்திய இராணுவம் இங்கு வந்ததும் இலங்கை இராணு வத்தின் கொட்டம் அடங்கி விட்டது இதில் இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால் 'புலிக் கொடி 'யை தங்களின் வாகனங்களில் கட்டிக்கொண்டு இந்திய இராணுவம் திரிந்தமைதான். இந்தக் காட்சிகள்யாவும் சிறீலங்கா படையினருக்கு புண்ணிலே புளியைப் பிழிந்து விட்டது போன்று மன எரிவைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உண்மை. எங்கும் 'இந்திய அமைதிப்படையின் மயமாக இருந்தது. நாங்கள் போய் வந்திராத மூலைமுடுக்குகள் - சந்து பொந்துகளில் எல்லாம் அமைதிப்படை வீரர்கள் நுழைந்து வந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது உறவினர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு.. அவர்களோடு பேசும் போது உறவினருடன் பேசுவது போன்ற ஒரு கனிவு! கவச வாகனங்களிலும் ஜீப் வண்டிகளிலும் அவர்கள் வீதிகளில் செல்லும் போது பெரியவர்களும் சிறியவர்களும் ஏன் சிறுமிகள் கூட நட்போடு கையசைத்துச் சிரிப்பார்கள். அவர்கள் கூட அப்படியே. ஒரு நாள் சுதுமலைக்கு ஜீப் வண்டிகள் - கவச வாகனங்கள் சங்கிலிச் சக்கரங்கள் கொண்ட டாங்கிகள் அணி வகுத்துச் சென்று, திரும்பும் வரையில் வழிநெடுக மக்கள் நின்று கையசைத்து ஆர்ப்பரித்தார்கள். அவர்களும் அப்படியே! அன்று மிஸிஸ் சிவபாதமும் பிள்ளைகளும் அவர்கள் வெளிவாசலுக்கே வந்து நின்று, கையசைத்து மகிழ்ந்த காட்சி..... இன்னும் என் கண்களுக்குள் நிற்கின்றது. அமைதிப்படையின் வரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் கலகலப்பாகி விட்டது. நாங்கள்கூட, மீண்டும் கே.கே.எஸ். இற்கு திரும்புவதென்று தீர்மானித்துவிட்டோம். மீண்டும் அதே வீட்டில் சென்று குடியமர்ந்தோம். அந்தப் பரந்த காணியும் - காணி நிறைந்த மாஞ்சோலையும்- நன்னீர்க் கிணறும் எம்மை வரவேற்று புது வாழ்வு கொடுத்தன. சிறீலங்கா இராணுவம் வருகிறது என்ற செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே காத தூரம் ஓடி ஒளியும் நானும் பிள்ளைகளும் அமைதிப்படை வீரர்களோடு நட்புரிமையோடு பழகினோம். அவர்களது புரியாத மொழியை புரிந்துகொள்ள - புரியவைக்க மேற்கொள்ளும் அபிநயங்களும் அவர்களுக்கு எப்படிக் கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளாத நிலையில், அலுப்புற்றுத் தமிழில் அவர்களை நாங்கள் திட்ட, அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்கும் சம்பவங்களும் எம்மிடையே நிகழும் நகைச்சுவை நாடகங்களாகும். யாழ்ப்பாணத்தில் என்ன, சுன்னாகத்தில் என்ன, கே.கே.எஸ் இல் என்ன கடை வீதிகளில் எல்லாம் அமைதிப் படையினர் ... ! இவர்கள் கடைகளில் நுழைந்தால் கடைக்காரர்களும், இவர்களும் ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளில் பேரம் பேசுவதிலேயே மணித்தியாலங்கள் கழியும். எம்மைப் போன்றவர்களை வரவேற்று, வியாபாரம் செய்வதற்கு எமது கடைக்காரர்களால் முடியாதிருக்கும். வீதி ரோந்து வரும்போது இருவர் இருவராக வருவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பீடி பற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது அந்தச் செய்கை கூட விசித்திரமாகத்தான் தோன்றியது. எங்கள் வீட்டைத்தாண்டி வீதியால் போகும் எல்லா அமைதிப்படை வீரர்களுக்கும் எங்கள் மா மரங்களின் மேல் ஒரு கண். சிலவேளை எங்கள் அனுமதியுடனும் பல வேளைகளில் அனுமதி இல்லாமல் உரிமையுடனும் மாங்காய்களைப் பறித்து உண்பதுண்டு. அவர்களது அந்தச் செய்கை எமக்கு ஆத்திரம் ஊட்டுவதற்குப் பதிலாக அவர்கள் மீது ஒருவித இரக்க உணர்வையே தோற்றுவிக்கும். எங்களுக்காக தங்கள் தாய் நாட்டையும், மனைவி, மக்கள், உறவுகளையும் துறந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து இங்கு வந்திருக்கும் அவர்களுக்குக் கொடுப்பதில் நாம் என்ன குறைந்தா விடுவோம் என்று நினைப்பதுண்டு. இன்னும் ஒருபடி மேலாக அவர்கள் எங்கள் வீடுகளில் இப்படி நடந்துகொள்வது பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வது கூட உண்டு. அவர்களில் ஒருவன் அடிக்கடி அவ் வீதியால் வருபவன். அவன் அடிக்கடி வருவதால் அவன் முகம் பரிச்சயமாகி விட்டது. ஏன்......? எங்களுக்குள் ஒருவித நட்புக் கூட உதயமாகி விட்டது. அவன் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவனாம். ஏதோ ஒரு சர்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனுக்கு குஜராத்தி தாய் மொழியாய் இருந்தும் கூட, நன்கு தமிழில் பேசினான். ஆனால். தூய தமிழ் நாட்டு உச்சரிப்பல்ல.மலையாளம் கலந்த தமிழ். அவன் வரும் போதெல்லாம் என்னுடன் - பிள்ளைகளுடன் - பாட்டியுடன் சிறிது நேரம் ஏதாவது பேசிவிட்டு, கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டோ அல்லது, மாங்காய்கள் பறித்துக்கொண்டோ தான் செல்வான். ஒருமுறை அவனோடு வந்த இன்னொருவன் கிணற்றிலே தண்ணீர் அள்ளிச் சரித்துக் குடித்து விட்டு மீதித் தண்ணீரை, வாளியோடு சரித்து மீண்டும் கிணற்றினுள்ளேயே ஊற்றிய போது, அவன் செய்கை விசித்திரமாகவும் ஒரு வகையில் அருவருப்பாகவும் இருந்தது. அவனது அந்தச் செய்கையைச் சர்மாவிடம் சுட்டிக் காட்டினேன். அவன் ஏதோவொரு மொழியில் அவனுடன் பேசினான். அவன் ஏதோ ஒரு பதில் சொன்னான். இவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் ஏதோ சொன்னான் ....! அவனும் சிரித்தான்.... பிறகு சர்மா அவனது செய்கைக்கான விளக்கம் சொன்னான். "இந்தக் கிணற்றுத் தண்ணீர் கற்கண்டு போல அருமையாக இருக்கிறதாம். இவனுடைய ஊரில் தண்ணீரே கிடைக்காதாம். தண்ணீருக்கே பல கிலோமீற்றர் போக வேண்டுமாம். அதனால், இந்த நல்ல தண்ணீரை வெளியே கொட்ட மனமில்லாமல் மீண்டும் கிணற்றுக்குள்ளேயே கொட்டியிருக்கிறான். அதுதான் நான் சொன்னேன் .... நம்ம ஊர்போல இல்லை யாழ்ப்பாணம். நீ இனி இப் படிச்செய்யாதே! தண்ணீர் எவ்வளவு எடுக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு நல்லது. புதுத் தண்ணீர் ஊறும். நீ வெளியே எடுத்த தண்ணீரை மீண்டும் கிணற்றுக்குள் கொட்டுகிறது, இங்கு அசிங்கமான செயல் என்று விளக்கம் சொன்னேன்" என்று சிரித்தபடியே கூறினான். இன்னுமொரு விடயத்தையும் கூறினான். உண்மையிலேயே, யாழ்ப்பாணத்து மக்களையும் அவர்கள் வசிக்கின்ற வீடு வாசல்களையும் பார்க்கும் போது தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதாம்......! சாதாரண ஏழை கூட வசதியான வீடுகளில், பரந்த காணிகளில் வாழுகின்றதைப் பார்க்கும் போது இது ஒரு செல்வந்த நாடாகவே தனக்குப் படுகின்றது. இப்படிப்பட்ட - பெரிய வசதியான வீடுகளை இந்தியாவில் ஒரு கிராமத்தில் கூட ஒன்று சேர்ந்தாற்போல காண முடியாது அங்கே எல்லாம் பெரிய மாளிகை - பக்கத்தில் சேரிக் குடிசைகள். ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கும் என்று தன் மனதிலே பட்டதைக் கூறினான் .....! நாளடைவில் அவன் மட்டில் எமக்கிருந்த பயம் அறவே நீங்கிவிட்டது. எதையும் துணிந்து கேட்கலாம் என்ற அளவிற்கு நட்பு வளர்ந்து விட்டது இந்திய அமைதிப்படை வந்த நாள் முதல், எங்கள் வைத்தியசாலையில் உள்ள விசயம் தெரிந்தவர்கள் சிலர் பேசிக்கொண்டவை என் காதுகளில் விழுந்தன அது பற்றி 'என்றாவது ஒரு நாள் அவனிடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும்' என நான் நினைத்தேன் "இந்தியா, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, தமிழர்கள் மீதுள்ள அன்பினாலோ, தமிழர் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கரிசனையினாலோ அல்ல. தமிழர் போராட்டங்களை அடக்கு வதற்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, சிறீலங்கா அரசின் அனுமதியுடன் - இந்தியாவின் எதிரி நாடுகளில் ஏதாவது ஒன்று இலங்கைக்குள் காலடியெடுத்து வைத்துவிட்டால் அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடும் என்பதற்காகத் தான். உதாரணமாக, பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது அமெரிக்காவோ இஸ்ரேலோ ஏதாவது ஒன்று இங்கு தளம் அமைத்து விட்டால் அது இந்தியாவிற்கு ஆபத்தாகி விடும் என்பதனால் அந்த நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான், தமிழர்களுக்கு உதவி செய்வதாக வலிந்து வந்து உள் நுழைந்துள்ளார்கள் ..... ! " என்ற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு என்பதை அவன் வாயினால் அறிய விரும்பினேன். அதைக் கேட்டும் விட்டேன். நான் சொன்னதைக் கேட்டு, அவன் இதழ்களில் ஒரு வித சிரிப்பு மலர்ந்தது. “யாழ்ப்பாணத்து ஆளுங்கள் ரொம்ப படிச்சவங்க. இப்படியெல்லாம் சிந்திக்கிறதிலை தப்பில்லை. ஆனால், இந்தியாவில இருந்து நாம புறப்பட முந்தி நம்ம ஆளுங்களுக்கெல்லாம் சொல்லப்பட்டது இது தான்... சிறீலங்காவில தமிழர்களை சிங்களவங்க கொலை பண்றாங்க - தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறாங்க. அவங்களை காப்பாற்றுகிறத்துக்காக தான் நம்ம அமைதிப்படை போகுது, அப்பிடின்னு சொல்லி அனுப்பி இருக்காங்க....!" என்றான். நான் அந்த நாளில் கேள்விப்பட்ட எம். ஜி. ஆர், அண் ணாத்துரை ஆகியோரின் விடயங்கள் மீண்டும் நனவாகி விட்ட உணர்வு எனக்குள் ! அந்த அமைதிப்படைச் சிப்பாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் சத்திய வசனங்களாகக் கொண்டேன். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அவனுடைய சொந்த மாநிலம் குஜராத். அது சத்தியத்தின் படி, சத்தியத்துக்காக வாழ்ந்து காட்டி, 'சத்திய சோதனை ' தந்த மகாத்மா பிறந்த மாநிலம். ஆகையால், அந்த மண்ணில் இருந்து வந்த இந்த சர்மாவின் வசனங்கள் கூட சத்தியமாகவே இருக்கும் என்று நம்பினேன். இன்னுமொரு நாள் அவனிடம் கேட்டேன். "ஏனப்பா எங்கடை கடைகளில் எல்லாம் உங்கடை ஆட்கள் தானே மொய்த்துக் கொண்டிருக்கிறாங்க ... ! எங்கடை ஆட்கள் இந்தியாச் சாமான்கள், சாறிகள் வாங்க உங்கடை நாட்டுக்குப் போகினம். நீங்கள் என்னடா எண்டால் எங்கட நாட்டில சாமான் சாமானாக வாங்கிக் குவிக்கிறீங்க ..." அதற்குக் கூட அவன் சிரித்துக் கொண்டு தான் பதில் சொன்னான்." நெசம் தாங்க. நம்ம நாட்டில ஓண் புறொ டெக்ஷன்ஸ்' எல்லாம் இந்தியத் தயாரிப்புகள் தான். ஆனா உங்கட நாட்டில எல்லாமே ஃபாறின் புறொடெக்ஷன்ஸ். நம்ம நாட்டில ஃபாறின் சாமானுக எல்லாம் வாங்க முடியாது • Buy Indian Be Indian' என்கிறதுதான் நம்ம பாலிசி. ஆமா, கண்ணில படக்கூடிய இடம் பூரா, ஏன் வண்டிகளில் கூட 'Buy Indian Be Indian' அதாவது, 'இந்திய உற்பத்திகளை வாங்கி இந்தியனாகவே வாழு' அப்படின்னு எழுதி வைச்சிருக்கிறாங்க....... என்று கூறி, அவன் மேலும் ஒரு வசனத்தையும் சேர்த்துக் கூறினான். "நம்ம பாலிசி Buy Indian Be Indian என்கிற மாதிரி. உங்க பாலிசி 'Belive Indian', அமாங்க இந்தியாவை -இன்டியன்சை இன்டியா உங்களுக்காக எடுக்கிற நல்ல முயற்சிகளை இலங்கைத் தமிழ் ஆளுங்க நம் பணும்.'Belive Indian' 'என்றான். " அந்த நம்பிக்கையைத் தானேயப்பா இது வரையில் நாங்க உங்க மேலே வைச்சுக் கொண்டிருக்கிறம்." என்று கூறியதற்கு அவனது பதில், 'அச்சா" என்று ஒலித்தது.1 point
-
கே.கே. எஸ் இல் இனி இருக்கமுடியாது என்ற நிலைமை ஆகியிட்டது. துறைமுகத்தில் இருந்து தங்களது அரண்களை இராணுவம் விஸ்தரித்துக் கொண்டே வந்தது. அல்லாமலும் பலாலியில் இருந்து கே. கே. எஸ் வரையும் இராணுவம் ரோந்து போகும் வேளையிலே வீதிக்கரையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புறப்பட்டு வெகு தூரம் ஓடுவதும் அவர்கள் போன பின்னர் மீண்டும் வந்து வீடுகளில் இருப்பதுவும் நாளாந்த நிகழ்வாகி விட்டது. அவர்கள் வரும் வீதிகளில் போராளிகளின் கண்ணி வெடித் தாக்குதல் ஒன்றிரண்டு இடம்பெற்றால் இராணு வம் தனது ரோந்து அணியை மூன்றாகப் பிரித்து ஒரு பிரிவு வீதியால் வரவும், மற்றைய இரண்டு பிரிவுகளும் வீதிக்கரையின் இரண்டு பக்கங்களில் உள்ள வளவுகளின் ஊடாக வேலியை வெட்டியும், மதில்களை உடைத்தும் வரத்தொடங்குவர். சில வேளைகளில் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி வளைத்துக் காவல் நிற்கவும் தொடங்குவர். சில சமயம், இராணுவம் வருகிறது என்று நாம் அறிந்து வீடுகளைப் விட்டுப் புறப்படும் முன்னரே அவர்கள் அண்மித்து விடுவதால், வெளியேறப் பயந்து கதவுகளை அடித்துப் பூட்டிவிட்டுச் சாவித்துவாரங்களூடாகவும் - சன்னல் இடைவெளிகளூடாகவும் இதயம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான ஒருநாளில் எங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டு இராணுவம் நிற்கின்ற பொழுது எனது பாட் டிக்கு அடக்க முடியாத தும்மல் தொடங்கவே நாங்கள் பட்டபாடு இருக்கிறதே...! பாட்டியின் முகத்தைத் தலையணைக்குள்ளே அழுத்தி தும்மச் செய்து ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டோம். இன்னுமொருமுறை இராணுவம் அண்மித்து வந்து விட்டது என்பதை அறிந்ததும் எப்படியோ ஓடிவிட்டோம். அவர்கள் சென்றதன் பின்னர், மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதையும் றேடியோ', 'ரீ.வி' முதலான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டிருப்பதையும் கண்டோம். இந்த நிலையில் பிள்ளைகளையும் பாட்டியையும் வீட்டிலே விட்டு, நான் யாழ்ப்பாணம் வேலைக்கு வருவதும்... தங்குவதும் அந்த நாட்களில் அமைதியிழந்து ..... என் கட மையில் ஈடுபட முடியாமல் அந்தரிப்பதும் வழக்கமாகி விட்டது. "இந்தப் பிரச்சினைகள் எதற்கு......? ஓரளவு அமைதி ஏற்படும் வரையாவது என்னோடு கொழும்புக்கு வந்து இரு, பிள்ளைகளின் படிப்பும் கெடாது!" என்று எனது கணவர் எழுதும் கடிதங்களில் எல்லாம் வற்புறுத்தி கொண்டே வருகின்றார். அனைத்து விடயங்களிலும் என் கணவரோடு ஒத்துப்போகும் என்னால் இந்த விடயத்தில் மட்டும் ஒத்துப்போக முடியவில்லை. இருபத்திரண்டு வருட சேவைக் காலத்தில் பதினைந்து வருடங்கள் யாழ்ப்பாணம் தவிர்ந்த மலையகம், சிங்கள மாவட்டங்களிலும் வேலை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் அங்கு போய் வாழ்வதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.ஆனால், இப்பொழுது இந்த மண்ணி நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டமிருக்கிறதே...! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த மண்ணைவிட்டு வெளியேறுவது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலைதான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் செயன்முறைப் பயிற்சி பெறும் போதனா வைத்திய சாலை. நான் இங்கு கடமை செய்யத் தொடங்கி இந்த ஏழு வருடங்களுக்குள்ளும் எத்தனை வைத்திய மாணவர்கள் டொக்ரராகப் பட்டம் பெற்று வெளியேறிவிட்டார்கள்! அப்படி வெளியேறியவர்கள் எல்லாம் இன்று எங்கே..? இரத்த ஆறு பெருகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டியவர்கள் எங்கே ..? பட்டம் பெற்று முடித்ததும்.. இங்கு பணிபுரியப் பயந்து. இங்கு பெற்ற பட்டத்தைக் கொண்டு வெளிநாடு களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சிலர் வெளிநாடுகளுக்கே தப்பிப் பறந்து போய்விட்ட சம்பவங்களை கேள்விப்படும்போது வெட்கமாக இருக்கின்றது ! வேறு சிவர் இங்கு எம்.பி.பி. எஸ். பட்டம் பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சென்று தமது கல்விக்கும் தகைமைக்கும் பொருத்தாத கூலிகளாக வேலை செய்வதாகக் கேள்விப்படும் போது எத்துணை வேதனையாக இருக்கின்றது! "இந்த மண்ணிலே வாழ்வோம். இந்த மண்ணின் மக்களுக்கே பணிபுரிவோம்." என்ற வைராக்கியத்துடன் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் வைத்தியர்களுடன் பணிபுரிவதில் கிடைக்கும் நிறைவு இருக்கிறதே......! அதற்கு ஈடாக எதையுமே கூறிவிட முடியாது. எனது சேவை வாழ்வின் ஆரம்ப காலங்களின் பெரும்பகுதியைப் பிற இடங்களில் கழித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தக் காலத்தில் இங்கு பணியாற்றக் கிடைத்த பேறு சாதாரணமானதா.....? இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள், இந்த ஆபத்தான வேளைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியர்கள்- தாதியர்-சிற்றூழியர்களைத் தெய்வத்திற்கு அடுத்தபடியாக நன்றியுடன் நோக்கும் பார்வை இருக்கின்றதே...... ! அது ஒன்றே போதும் ....! நாம் வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்வதற்கு. இத்தகைய ஒரு சூழலில், இக்கட்டான நிலையில் ஏனையவர்களைப் போல உயிருக்கு அஞ்சி ஓடுவதை என் மனம் ஒப்பவில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது......? நிச்சயமாக நான் படித்த புத்தகங்கள் கற்பித்த பாடங்கள் இது என்று தான் நினைக்கின்றேன். "நிற்க அதற்குத் தக!'' என்ற வள்ளுவம் எனக்கு வழிகாட்டி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றது, எனவே தான்,எனது கணவரது கோரிக்கையை என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால், அவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொழும்பிலிருந்து வந்து போய் கொண்டிருக்கின்றார். ஆனால், ஒரு விடயத்திற்கு நான் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள்! திருமணம் ஆகாமலே என்னுடன் வீட்டில் தங்கியிருக்கும் இருபத்தியெட்டு வயதான தம்பி. இவர்களையும் வைத்துக்கொண்டு கே.கே.எஸ்.இல் தொடர்ந்து எப்படி இருப்பது ...... ? என்றைக்காவது ஒரு நாள் அவர்களது சுற்றிவளைப்புக்குள் இவர்கள் அகப்பட்டுக்கொண்டால் நிலைமை என்ன ஆவது......? ….. இப்படியெல்லாம் நான் பயந்து கொண்டிருந்த போது தான் ஒருநாள், அந்தப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. அன்று நாம் எதிர்பாராத வேளையில், இராணுவம் ரோந்து வந்தது. ' அமெரிக்கன் மிஷன்' பாடசாலைக்கு அண்மையில் கண்ணிவெடி ஒன்றின் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளின் பிளிறல்கள்.....! நாம் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம். இதற்கிடையில் பலாலி இராணுவ முகாமுக்குச் செய்தி கிடைத்து, ஹெலிக்கொப்ரர் ஒன்று வேட்டுகளைக் கக்கிய வண்ணம் எமக்கு மேலே பறக்கத் தொடங்கியது. எங்களோடு இன்னுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் ஒரு கையிலே இரண்டு வயது குழந்தை வேறு மறு கையிலே ஒரு சிறிய துணிப்பை. வயிற்றுச் சுமையோடு கைச்சுமையையும் சுமந்து, ஓடி வர முடியாமல் அவள் ஒரு இடத்தில் இடறி விழுந்து விட்டாள். எங்களோடு ஓடி வர முடியாமல் பாட்டி வீட்டிலேயே தங்கி விட்டார். வயதான அவரை, இராணுவம் ஒன்றும் செய்யாது என்ற அசட்டுத் துணிவில் விட்டு வந்துவிட்டோம். கீழே விழுந்த அவளையும் பிள்ளையையும் தூக்கி அழைத்துச் செல்வதற்குள் பெரும் பாடாகி மேலே சுட்டபடி பறந்து கொண்டிருக்கும் ஹெலி…. கீழே நாங்கள். என்னையும் அவளையும் விட்டு ஓடமுடியாத பிள்ளைகள். என் தம்பி கூட அன்றைய தினம் எங்களோடு இல்லை. எங்கேயோ போயிருந்தான். சுமார் ஒரு மணி நேரம் நாம் பட்டபாடும் பெற்ற அனுபவமும் போதும் என்றாகிவிட்டது. எனவேதான், இனியும் அங்கு தொடர்ந்து இருப்பது மடமை. அங்கிருந்து புறப்படுவது என்று முடிவெடுத்தோம்! நல்ல காலமாக உடுவிலில். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். அங்கே எல்லாம் இராணுவம் வரும் என்ற அச்சம் எதுவுமில்லை. மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் மகளுக்கும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மகனுக்கும் படிக்க இடங்கள் கிடைத்து விட்டன. கே. கே. எஸ். இல் இருந்து யாழ்ப்பாணம் வேலைக்குப் போவதிலும் இப்பொழுது உடுவிலில் இருந்து வேலைக்குப் போவது.... எட்டு மைல்கள் குறைவாக இருந்தது. இன்னும் இலகுவாயிருந்தது ! நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிசயம் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நிகழ்ந்தது. "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தை நாங்கள் நேரடியாகவே செய்யப் போகின்றோம்" என்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தியா, இலங்கைக் கடல் எல்லை வரை வந்து திரும்பிய சம்பவம் நடைபெற்றது. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. கடல்வழியை இலங்கைக் கடற்படை மறித்து, "இந்தியாவில் உள்ளவர்களுக்கே கொண்டு சென்று விநியோகியுங்கள்!" என்று திருப்பி அனுப்பிய செயலும், பொறுமையோடு இந்தியப் படகுகள் திரும்பிச் சென்றதும் எனக்கு வியப்பைக் கொடுத்தன. இந்தியா எத்துணை பெரிய நாடு! பெரும் வல்லரசான சீனாவையே விரட்டி அடித்த வலிமையுள்ள நாடு. கேவலம்! சிறீலங்கா சுண்டெலி அளவில் இருந்து கொண்டு அவர்களோடு வீராப்புப் பேசியிருக்கிறதே...! இந்தச் சுண்டெலிக்கு அஞ்சியது போல் இந்தியாவும் பேசாது, திரும்பிப் போயிருக்கிறதே! இதில் சிறீலங்கா தன் பலமறியாது நடந்து கொண்ட அறியாமையை நினைத்துச் சிரிப்பதா......? அல்லது மௌனமாகச் சென்ற இந்தியாவின் பெருந்தன்மையை எண்ணி வியப்பதா? என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், ‘பெருக்கத்தில் வேண்டும் பணிவு’ என்பதற்கு உதாரணமாக இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. "இந்தியா, இது விடயத்தில் இனியும் மௌனமாக இராது. பதில் நடவடிக்கை எடுத்தே தீரும்!" என்று நிச்சயமாக நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை! அன்று பகல் ஓய்வு நாள் என்பதால் வேலைக்கும் போகவில்லை. சமையல் எல்லாம் முடிந்த பின்னர், சற்றுத் தொலைவில் மருதனாமடம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இடம் பெயர்ந்து வந்திருக்கும் கே. கே. எஸ் ஐச் சேர்ந்த குடும்பம் ஒன்றைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த மிஸிஸ் சிவபாதம், ஒரு கிறீஸ்தவப் பெண், படித்த பெண். அவளுக்கு இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும். பெண் உடுவில் மகளிர் கல்லூரியில் ஜீ. சீ. ஈ. படித்துக் கொண்டிருந்தாள். மூத்த பையனும், கடைசிப் பையனும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் மட்டக்களப்பில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் வேலை. வீட்டுக்கார அன்ரியின் தாயாரும் அவர்களுடனேயே இருந்தார். படித்த பண்பான குடும்பம். பழகுவதற்கு இனியவர்கள். கே. கே. எஸ் நண்பர்களை சந்திக்கப்போன நாங்கள் அந்தக் குடும்பத்தினருடனும் நட்பை வளர்த்துக் கொண்டோம். அன்றும் கூட அந்த அன்ரியுடன்தான், சிறீலங்கா கடற்படை இந்தியாவுடன் வாலாட்டியதைச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன் என்னை விட மிஸிஸ் சிவபாதம் இந்தியாவின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தபடியால் இதைப்பற்றிப் பேசுவதே சுவையாக இருந்தது. திடீரென்று என் தம்பி அங்கு விரைந்து வருவதைக் கண்டேன். வந்தவன் உற்சாகத்துடன் கூறினான். " அக்கா இப்ப லேற்ரஸ்ற் நியூஸ் என்ன தெரியுமா? இந்தியா - யுத்த விமானங்களின் காவலுடன் உணவுச் சாமான் ஏற்றிய விமானங்களையும் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைச்சிருக்காம். தம்பி அந்தச் செய்தியைச் சொல்லி வாயை மூட வில்லை. எங்கள் ஆச்சரியத்தை நாம் வெளிப்படுத்தக் கூடவில்லை. அதற்குள் வானமே இடிந்து விழுவது போன்ற பேரொலி. சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்த்தோம். அங்கே ..! அந்தக் காட்சியை எப்படி வர்ணிப்பேன் வானத்தில் நான்கு விமானங்கள் சேர்க்கஸ் விளையாட்டுக் காட்டிக் கொண்டு இந்தியாவின் யுத்த விமானங்கள் தாம் அவை என்பதைப் பின்னர் அறிந்தோம். செங்குத்தாக மேலே எழுவதும் அதே பாணியில் கீழே குத்தென வருவதும் பக்கமாகப் புரள்வதுமாக அவை வான வேடிக்கை நிகழ்த்தி நகர்ந்து கொண்டிருக்க அமைதியாக மூன்று விமானங்கள், சீரான வேகத்தில் எங்கள் தலைகள் மீது மிதந்து சென்றன! எம்மைத் தாண்டிச் சற்றுத் தொலைவில் சென்றதும். வான தூதர் செட்டைகள் விரித்து இறங்குவதுபோல் அந்தக் கப்பல்களிலிருந்து பரசூட்களில் பொதிகள் பூமியை நோக்கி மிதந்தபடி வந்தன. பைபிளிலே 'கானான் நாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவன் 'மன்னா" எனும் அப்பத்தை வானில் நின்று பொழிந்ததாகச் சொல்லப்படுகின்றதே! அந்தக் காட்சி கூட இப்படித் தான் நிகழ்திருக்குமோ…? எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. "இந்தா..இந்தியா வந்திற்றான். இனிக்கவலை இல்லை என்று மிஸிஸ் சிவபாதம் சந்தோஷத்தால் கத்தினார். எனக்கு வார்த்தைகளே பிறக்கவில்லை கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்தன. மிஸிஸ் சிவபாதத்தின் பிள்ளைகள் ஆர்ப்பரித்துக் கைதட்டித் துள்ளிக் குதித்தனர். "இந்தச் சத்தமொன்றே போதும், பலாலி முகாமில் இருக்கிற ஆமிக்காரனுக்கு வயிற்றைக் கலக்கி காற்சட்டையோடு போயிருக்கும்.'' என்றான் அவரது மூத்த பையன். அதைக் கேட்டு நாமெல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம் அவை இந்திய விமானங்கள் என்பதை அறியாத பலர், சிறீலங்காவின் குண்டு வீச்சு விமானங்கள் என்று அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் ஓடியவர்களும், நிலத்திலே குப்புற விழுந்து படுத்துக் கொண்டவர்களுமாக அல்லோல கல்லோலப் பட்டனர். அனைவருக்கும் உண்மை தெரிந்ததன் பின்னர் ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கின்றதே ... அப்பப்பா ! அதை விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ..!1 point
-
தற்போதைய சூழல் கவிதை அருமை. ஒற்றுமை என்றால் என்ன எனும் உலகில் வாழ்கிறோம். ஒற்றுமைக்கும் பிரம்பு வேண்டும் என்பதை ஒரு காலம் சொல்லி நின்றது.1 point
-
பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனுடன் இன்னொரு பெண்ணையும் பழக அனுமதிப்பவர்களுக்கு மனம் ஆகாயத்தை விட பெரியது. பெரிய மனதிற்கு வாழ்த்துகள்.1 point
-
நீங்கள் தந்தையாக இருந்து உங்கள் பெண் பிள்ளையை பொது வெளியில் பல பெண்களுடன் தொடர்புள்ள ஒருவருடன் பழக விடுவீர்களா? அல்லது பாலியல் இச்சையை தீர்க்க எந்த நடவடிக்கைகளிலும் இறங்குவீர்களா? நிற்க.... நான்கு வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாண திருநெல்வேலி வாடகை வீட்டிலிருந்து ஒரு பல்கலைக்கள மாணவன் தன் சக வகுப்பு தோழியுடன் அதுவும் கட்டிலிக்கடியில் இருந்து உடலுறவு கொள்ளும் காணொளியை உலகம் முழுவது பரப்பி விட்டிருந்தான். இதெல்லாம் தெரியுமா தெரியாதா? அல்லது இது செய்தியாயின் விவாதிக்கலாம் வாருங்கள்.1 point
-
ஒரு இளைஞனின் அறைக்கு ஒரு மாணவி வந்து போவதற்கும் பல மாணவிகள் வந்து போவதற்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உள்ளது. காதலுக்கும் காம வேட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் எம்மிடம் இன்னும் அதிகமானோர் உள்ளனர். சில வேளைகளில் போதை மருந்துகளின் நடமாட்டங்களும் இருக்கலாம்.ஏனென்றால் நாட்டு நிலவரங்கள் அப்படி.1 point