Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15740
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/28/24 in Posts

  1. இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்.. அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்.. அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்.. உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது.. இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪
  2. கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.
  3. சேரும் கூட்டம் அத்தனையும் வாக்காகாது என்பது சிவாஜி, ரஜனி, கமல் என பலர் தமிழ் நாட்டில் காட்டிச் சென்றுள்ள அனுபவப்பாடம். ஆனால் எம் ஜி ஆர், விஜயகாந்த் என இதற்கு விதிவிலக்குகளும் உள்ளனர். விஜையும் ஒரு விதி விலக்காக அமைய வேண்டும் என்பது என் மனதார்ந்த அவா. முன்பு யாழில் சீமானை நான் கடுமையாக விமர்சித்த போது - அவர் எப்படி பட்ட அரசியலை செய்தால் நீங்கள் வரவேற்பீர்கள் என பலர் அடிக்கடி கேட்டு, நான் பலதடவை எழுதிய பதில்…. மொழிவாரி பிரிப்புக்கு பின், திராவிட/பெரியாரிய கொள்கையின் தொடர்ச்சி = தமிழ் தேசியம் என சீமான் கூற வேண்டும், அனைவரையும் தமிழர்களாக ஏற்க்கும் வட்டத்தை பெருப்பிக்கும் அரசியல் செய்ய வேண்டும்… குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினரின் (தெலுங்கு வம்சாவழியினர் உட்பட்ட) அதிகாரத்தை மட்டுப்படுத்த, சாதிக் கணக்கெடுப்பை நடத்தில் அதன்படி ஒதுக்கீடு வழங்க கோரல் வேண்டும். உணர்ச்சி வயப்படுதல், அவதூறு பேசல் போன்ற அடாவடி அரசியலை கைவிட வேண்டும்… இவ்வாறு நான் பட்டியல் இட்ட பலதை விஜை செயலில் கொண்டு வந்துள்ளார், கொள்கை விளக்கம் என்ற அடிப்படையிலாவது. விஜை வெல்வாரா இல்லையா என்பதை விட, அவரின் கருத்துகள், கொள்கை பிரகடனம், அரசியல் செய்யப்போவதாக சொல்லும் முறை - மிக சரியாக இருக்கிறது. கூட்டணியில் மட்டும் அல்ல, தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எல்லாம் அரசியல் நகர்வின் அடுத்த கட்டம். நிச்சயம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவை கிளப்ப விஜை முயல்கிறார். முயற்சி வெற்றி பெற வேண்டும். அதே போல் பாரி வேந்தர், கம்யூனிஸ்ட், இன்னும் சிலரை இணைக்க முயலவேண்டும். மிக முக்கியமாக பிசிறு என சீமானால் கேவலப்படுத்த பட்டு உள்ளே குமைந்து கொண்டிருக்கும் காளி அம்மாள் போன்ற உத்வேகம் மிக்க தமிழ் தேசிய அரசியல்வாதிகளை சீமான் போன்ற போலிகளிடம் இருந்து விஜை தன்பக்கம் ஈர்க்க வேண்டும். விஜை செய்ய விழைவது தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டில் re branding செய்யும் முயற்சி. திராவிட கொள்கை கருணாநிதி குடும்பத்திடமும், தமிழ் தேசியம் சின்ன கருணாநிதி சீமானிடம் சிக்கி கொண்டுள்ளன, இவை இரண்டையும் மீட்டு, காலத்துகேற்ப்ப புதுப்பித்து, நீக்க வேண்டியவை (கடவுள் மறுப்பு) நீக்கி, ஏலவே பல ஒற்றுமைகளை உடைய இரு தத்துவார்த்த வழிகளையும் ஒன்றாக்கி பயணிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மீட்சிக்கு அத்தியாவசியமானது. இந்த பெரும்பணியை விஜை என்ற தனிமனிதனால் செய்ய முடியாமல் போகலாம்…. அப்படி ஆககூடாது…. விஜை தன் முயற்சியில் வெல்ல வேண்டும் என்பது இயற்கையிடம் என் மன்றாட்டம்.
  4. மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம் தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் - இவ்வளவே நான். எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழக அரசையும் இங்கு எனது விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, நான் எதிரணியில் அமர்ந்து கொண்டு அல்ல; அவர்கள் பக்கம் நின்று கொண்டே ! எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் தாலி கட்டாததால் இடதுசாரிக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும் கூட அவ்வப்போது விமர்சிக்கும் பேறு பெற்றவன் நான். மற்றவர்களை நான் ஆட்டத்திற்கே சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் திராவிடக் கட்சிகள் தற்போது தி.க வும், ஓரளவு திமுகவும் ஆக இரண்டு மட்டுமே என்பது என் கருத்து. அது என்ன ஓரளவு ? இன்றைய காலகட்டத்தில் 'ஓரளவு' ஊழல் இல்லாமல் ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற கேடு கெட்ட நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டதன் விளைவே திமுக வை இன்னும் திராவிடக் கட்சிகள் பட்டியலில் வைத்திருப்பது. சமீபத்தில் பரபரப்பாகி இருந்த சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் ஆரம்பிக்கிறேனே ! அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாகத்தான் நான் பார்க்கிறேன். கோரிக்கைகள் ஏற்கப்பட்டன - ஒன்றைத் தவிர. மறுக்கப்பட்டது என்னவென்றால் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியவாறு - சட்டத்திற்கு உட்பட்டு - சங்கம் அமைக்கும் உரிமை. நிர்வாகம் விரும்புவது போல் சங்கம் வைத்துக் கொள்ளலாமாம். அத்தகைய ஒன்றைத் தொழிற்சங்கம் (Trade Union) என்று சொல்வதில்லை. ஒரு தொழிலாளர் அமைப்பு (Workers club) எனலாம்; அதிகபட்சம் தொழிலாளர் நல அமைப்பு (Workers Welfare club) எனலாம். அதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குள் மட்டுமல்ல, நிர்வாகிகளுடனும் டென்னிஸ், கோல்ஃப் முதலியவை விளையாடலாம். தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது. தொழிலாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் சங்கம் நடத்தக் கூடாது என்ற போர்வையில் அவர்களது உரிமையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது நிர்வாகம். வெளிப்படையாகச் சொல்வதானால், இடதுசாரித் தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்பதுதான் சாம்சங்கின் நிபந்தனை. முதல்வர் அவர்களே, நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ! இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய (தொழிற்)சங்கங்கள் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லையா - திமுக தொழிற்சங்கம் உட்பட ? சங்க அங்கீகாரத்தை வழங்குவது மாநில அரசு தொழிலாளர் நலத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும் கடமையும்தானே ? சங்கத்தைப் பதிவு செய்யும் மனுவை தொழிலாளர் நலத்துறை முதலில் கிடப்பில் போட்ட காரணமென்ன ? பின்னர் சாம்சங் நிர்வாகம் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும், CITU நீதிமன்றம் செல்லவும், பின்னர் அதைக் காரணம் காட்டி சங்கப் பதிவை அரசு மறுப்பதும் என்ன நாடகம் ? இதன் மூலம் அரசு அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லையா ? நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது மட்டும்தானே அரசின் வேலை ? தனது அமைச்சர்களை அனுப்பி அரசே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது அறநெறிதானா ? இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கலாம். எப்போது நடந்தாலும் தவறு தவறுதானே ? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அறிவுரை. நீங்கள் அரசா அல்லது சாம்சங் நிர்வாகமா ? இத்தனைக்கும் மேலாக தொழிலாளர்கள் வீடு வரை சென்று காவல்துறையின் மிரட்டல், கைது நடவடிக்கை எனும் அடாவடித்தனங்கள் வேறு. TESMA வின் கீழ் ஜெயலலிதா அரசின் காவல்துறை போராடிய அரசு ஊழியர்களை விரட்டி விரட்டிப் பழி வாங்கியதெல்லாம் நினைவுக்கு வருகின்றதே ! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக நடந்த போராட்டத்தில் அதிமுக அரசு நடந்து கொண்டதற்கும் சாம்சங் விவகாரத்தில் நீங்கள் நடந்து கொள்வதற்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அமைதி வழியில் போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்கள். அது மட்டும்தான் வேறுபாடா ? போராட்டம் தொடர்ந்தால் சாம்சங் சென்னையில் தனது தொழிற்சாலையை மூடிச் சென்று விடுவார்களே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால், கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசுவதுதானே சரியாக இருக்கும் ? சாம்சங் நிர்வாகத்துடன் நின்று கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது சரியாக இருக்குமா ? "சம்பளம் இப்போது பிரச்சினை இல்லை; எங்கள் உரிமையை மீட்டெடுப்பதே பிரச்சினை" என்று இக்காலத்தில் கூட தொழிலாளர் வர்க்கம் நிற்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த வரலாற்றின் நாயகர்களை நீங்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த வரலாற்றில் நீங்கள் ஒரு கரும்புள்ளி ஆவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இறுதியில் ஒரு வழியாக சமரசத் தீர்வு எட்டப்பட்டபோது அதில் தங்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்றெல்லாம் வெளிவந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என விழைகிறோம். சமரசம் ஏற்பட்டதற்கு நீங்கள் CITU விற்கும் நன்றி தெரிவித்ததை வரவேற்கிறோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை மே 2022 ல் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் இது தொடர்பாகத் தொடர்ந்த ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசினைக் கேள்வி கேட்ட பிறகு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக நவம்பர் 2023 ல் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அது என்ன, அரை மனது குறை மனதுடன் அப்படி ஒரு நடவடிக்கை ? அதிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முந்தைய அதிமுக அரசில் காவல் (ஏவல்?) துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டத்தில். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்களும் உங்கள் கட்சியினரும் இது தொடர்பில் எழுப்பிய கண்டனக் குரலெல்லாம் வெறும் அரசியல் ஆதாய ஆரவாரம்தானா ? ஆளுங்கட்சியான பிறகு காவல்துறையுடனும் அரசு நிர்வாக அமைப்புகளுடனும் சமரசம் செய்து கொண்டு போவது எழுதாமல் வரையறுக்கப்பட்ட விதிமுறையோ ? குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளிய விவகாரத்தில் வெறுமனே துறை சார்ந்த நடவடிக்கை என்பது கண் துடைப்பன்றி வேறென்ன ? கலைந்து ஓடியவர்களையும் தேடித்தேடிக் குறி பார்த்துச் சுட்டது முன்னரே திட்டமிடல் அன்றி ஒரு தற்செயல் நிகழ்வா ? ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை என்று எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு இருக்குமானால், அவர்கள் மீண்டும் மீண்டும் கொலைபாதகக் குற்றங்களை அரங்கேற்ற மாட்டார்களா ? போராடிய மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் விரட்டி விரட்டி ஆற்றில் மூழ்கடித்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் விரட்டி விரட்டிச் சுட்டதும் என்றுமே முற்றுப்பெறாத தொடர்கதைகளா ? இவற்றில் மேலும் ஒரு கோணம் இருக்கிறது. மாஞ்சோலையானாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆனாலும், சாம்சங் ஆனாலும் ஒரு ஜனநாயக அரசும் அதன் இயந்திரங்களும் முதலாளி வர்க்கத்துக்கு பணி செய்யவே உருவானவையோ ! பொள்ளாச்சி பாலியல் படுபாதகத்தில், "அண்ணா, அடிக்காதீங்கண்ணா ! நீங்கள் சொன்னதைக் கேட்கிறேன்" என்ற அபலைக் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் குரல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் செவிகளில் இருந்து இன்று மறைந்து விட்டதோ என்று எங்களை எண்ண வைக்கிறது. எங்கள் செவிகளில் இடி முழக்கமாய் இன்றும் கேட்கிறது முதல்வரே ! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே என்பது நீங்கள் அறியாததா ? அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமை; அதிமுகவில் பொள்ளாச்சி பிரமுகரின் மகன் முக்கிய குற்றவாளியாக செய்திகளில் அடிபட்ட விவகாரத்திலேயே விரைவான நீதி கிடைக்கவில்லை. அப்படியானால் ஒரு திமுக பிரமுகரின் பெயர் அடிபட்டிருந்தால் இந்த வழக்கு எந்தத் திசையில் சென்றிருக்கும் ? மீண்டும் வலியுறுத்துகிறேன் - இக்கேள்வியைக் கேட்கும் நான் ஒரு திமுக ஆதரவாளன் முதல்வர் அவர்களே ! பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதைப் பற்றியே பேசாமல் காலம் தள்ளுவது சரிதானா ? சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம். முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பில், "தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டியதில்லை. மற்றவர்கள் நிறைவேற்றினார்களா ?" என்று அடாவடியாய்ப் பேசியபோது அமைதி காத்தீர்களே ! அரசு ஊழியர்கள் போராடிக் கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க மட்டும், "நான் கொடுக்காமல் உங்களுக்கு யார் கொடுப்பார்கள் ? சிறிது கால அவகாசம் கொடுங்கள்" என்று உணர்வுடன் பேசி வாய்தா வாங்கி விட்டீர்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நீங்களும் உங்கள் அரசும் இருக்கிறீர்களா ? போராடிய அரசு ஊழியர்கள் கையறு நிலையில் ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்து மனு கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சீமானைக் கூட விட்டு வைக்காத இழிநிலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஓய்வூதியத்தின் இன்றியமையாமையை விளக்கும் எனது ஒரு கட்டுரையின் இணைப்பு : https://yarl.com/forum3/topic/270878- ஓய்வூதியம்-சுப-சோமசுந்தரம்/ இங்கு அக்கட்டுரையின் இணைப்பு உங்களுக்காக மட்டுமல்ல. "இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ஒரு கேடா ?" என்று கேட்கும் அதிமேதாவிகளுக்கும் சேர்த்துதான். மக்கள் நலத்திட்டப் பணிகள் முதலிய எத்தனையோ நிறைகள் உங்கள் அரசில் உண்டு. இருப்பினும் இது குறைகளைச் சுட்டும் களமாய்க் கொண்டதால், பல காலமாய் நெஞ்சில் கனக்கும் ஒரு பெருங்குறையினைச் சுட்டி இக்கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் அமைதியாக சுமார் இரண்டரை வருட காலம் நடந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனச் சொல்வது மிகையாகாது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமாரன் மற்றும் அவருடன் தோளொடு தோள் நின்ற பாதிரியார் மை.பா. ஜேசுராஜ், தோழர் புஷ்பராயன் ஆகியோர் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் - குறிப்பாக மீனவ மக்களின் - உறுதிமிக்க போராட்ட உணர்வுக்குச் சான்று பகர்வது. எந்தக் குறிப்பிட்ட கட்சி அரசியல் சார்புமின்றி சமீப காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அப்போராட்டத்திற்கு இணையாக டெல்லியில் சுமார் ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தையும், சென்னை மெரினா கடற்கரையில் சில நாட்கள் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் குறிப்பிடலாம். பின்னவை இரண்டும் வெற்றியில் முடிய, கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இக்காலகட்டத்தில் தனது நோக்கத்தில் இன்னும் வெற்றி பெறவில்லைதான். வெல்வதுதான் போராட்டம் என்றில்லை; தோற்பதும் போராட்டம்தான். மேலும் நோக்கத்திற்கு மட்டுமே வெற்றி தோல்வி உண்டு; போராட்டத்திற்கு அவ்வாறில்லை. போராட்டமே மானிடத்தின் வெற்றிதான். எந்த ஒரு அரசியல் கட்சியாலும் நடத்த முடியாத போராட்டம் அது. முதல்வர் அவர்களே ! கூடங்குளம் அணு உலைப் போராளிகளின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியும் தங்களால் தரப்பட்டதே. அவ்வளவு காலமும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த போராட்டத்தில் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளாய் இருக்கவே பெருமளவில் வாய்ப்பு உள்ளது என்பதில் போராட்டக் களத்திற்கு வராதவர்களே உடன்படுவர். நமது சட்டம், காவல் துறைகளின் கடந்த கால வரலாறு அப்படி. எடுத்துக்காட்டாக, 2003 ல் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் போராட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் அருகில் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த பேராசிரியர்கள் சிலர் மீது போடப்பட்ட வழக்கு அந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை அறுத்ததாம்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்ட பின்பும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் அடித்து விரட்டிய பின்பும் வாகனங்களுக்குக் காவலர்களே தீ வைத்தோ, அவற்றை உடைத்தோ தங்களின் மோசமான நடவடிக்கைகளுக்குக் காரணங்களை உருவாக்கியது வெட்ட வெளிச்சமானது. எனவே வாக்குறுதி தந்தது போல் அணு உலைப் போராட்டத்தில் அத்தனை வழக்குகளையும் இவ்வளவு தாமதமானாலும் இப்போதாவது வாபஸ் பெறுவதே அறநெறியின் பாற்படும். வழக்கின் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். உதாரணமாக, வழக்கினால் எத்தனையோ இளைஞர்களும் ஏனையோரும் வெளிநாடுகளுக்குக் கூட வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இது தொடர்பில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் அவர்கள் உங்களை நேரில் சந்தித்தும் கடிதங்கள் எழுதியும் நீங்கள் காலம் கடத்துவது ஏன் ? அவரைப்போல் சமூகப் போராளிகளை உங்கள் கட்சி உருவாக்கியது உண்டா ? இவ்வளவு அடக்குமுறையிலும், அடுத்து மணவாளக்குறிச்சி மணல் ஆலைப் போராட்டத்தின் நியாயங்களைப் பேசும் தோழர் சுப. உதயகுமாரன் எங்களைப் போன்ற 'நகர்ப்புற நக்சல்களுக்கு' ('Urban Naxals') தமிழ் நிலத்தின் சேகுவேராவாகத் தெரிகிறாரே ! உங்களுக்குத் தெரிவதில்லையா ? அல்லது அப்படித் தெரிவதால்தான் ஒன்றியமானாலும் மாநிலமானாலும் முதலாளித்துவ அரசுகள் அவரைப் போன்றவர்களைப் பழிவாங்குகின்றனவா ? திராவிட இயக்க அரசியல் (சமூக நீதிக்கான) போராட்ட அரசியல்தானே ! ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசினைக் குறைந்தபட்சம் தமிழ் நிலத்தில் காலூன்ற முடியாமல் செய்ய இப்போது எங்களிடம் இருக்கும் ஒரே மக்கள் ஆதரவுள்ள ஆயுதம் திமுக என்பது எங்களுக்குத் தெரிவது சரி. ஆனால் அது உங்களுக்கும் தெரிவதுதான் எங்களுக்கான அவலம். இருப்பினும் கையறு நிலையில், வந்தது வரட்டும் என்று பெரும்பான்மை மக்கள் பாசிசவாதிகளை நாடினால் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாய்த் தமிழ் நிலத்திற்கே என்று எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோர் தள்ளப்படுகிறோம். உங்களுக்கு ஆதரவையும் தந்து விட்டு உங்களிடம் மக்கள் பெறாத, பெறவேண்டிய நியாயங்களுக்காக நாங்களும் ஒரு 'நெஞ்சுக்கு நீதி' எழுதலாம் எனத் தோன்றுகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களே ! https://www.facebook.com/share/p/19QFqCFNNw/
  5. முட்டாள் தனம் என்பது ஒரே காரியத்தை மீள மீள செய்த படியே வெவ்வேறான விளைவுகள் வரும் என்று எதிர்பார்ப்பது! மிதவாதத்தை அனுமதிக்காமல், முன்னாள் ஆயுததாரிகளை "ஒற்றுமை" என்ற பெயரில் முன்னிறுத்துவது மேலும் மேலும் தாயக மக்களை அவமானம் செய்யும் செயல். அதிர்ஷட வசமாக, தாயக மக்கள் இந்த புலத்தில் இருந்து இயக்கப் படும் முட்டாள் தனத்தை நிராகரித்திருக்கின்றனர், இனியும் அதுவே நடக்கும்! (உங்களுக்கு முன்னால் என் கருத்தை மட்டும் தான் வைக்கிறேன், ஆனால் என் சான்றிதழ் நான் முன்னிறுத்தாமலே உங்கள் கண்ணுக்குள் குத்தினால் அது என் தவறல்ல😂) இப்போது, டொட்!
  6. கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்! Oct 28, 2024 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மக்களாட்சி ஒரே நாளில் உருவாகவில்லை. அது வெகுகாலமாக அதிகாரக் குவிப்பிற்கும், அதிகார பகிர்விற்குமான இயங்கியலில் பரிணமித்தது. அதிகாரப் பகிர்வு என்றால் கூட்டணி ஆட்சி என்பதல்ல. ஒரு நபரிடம் அதிகாரம் குவியக் கூடாது என்பதுதான். ஆனாலும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அது ஒற்றை முடிவாகத்தான் இருக்கும். அதனை இறுதியாக எடுத்துச் செயல்படுத்தும் பொறுப்பு ஒருவரிடம் கொடுக்கப்படும். அந்த முடிவை இறுதி செய்பவராக தலைவர் என்று ஒருவர் நாட்டிற்கும், அரசுக்கும், நிறுவனத்திற்கும், எந்தவொரு குழுவிற்கும், கட்சிகளுக்கும் தேவைப்படுவார். அப்படி ஒருவர் தலைவராக இருப்பது எதைக் குறிக்க வேண்டும் என்றால் அவர் தலைமை தாங்கும் அமைப்புக்குள் பல்வேறு பார்வைகளும், அணுகுமுறைகளும், பல்வேறு நலன்களும் இருக்கும், அவற்றிற்குள் விவாதங்கள் இருக்கும்; அந்த விவாதங்களில் பயன்பெற்று ஒரு முடிவை இறுதி செய்யத்தான் தலைவர் தேவை என்பது பொருளாகும். சுருங்கச் சொன்னால் அரசியல் கட்சிகளுக்குத் தலைவர் என்று ஒருவரை நியமிப்பது வசதி. அப்போதுதான் கட்சியிலுள்ள பல்வேறு தலைமைப் பண்பு கொண்டவர்களை, பல்வேறு மாறுபட்ட கருத்து நிலைகளை ஒருங்கிணைக்க முடியும். மக்களிடையே கட்சியின் ஒருமித்த முகமாக அவர் செயல்பட வேண்டும். அதனால் ஒவ்வொரு கட்சியும் சரியான தலைமை அமைய வேண்டும் என்று தேடுதலில் இருக்கும். பல சமயங்களில் அப்படி அமையும் தலைவர்கள் எதேச்சதிகாரமாக செயல்படத் துவங்குவதும் நடக்கும். அப்போது மெல்ல, மெல்ல கட்சியில் உற்சாகம் குன்றி, பிளவுகள் தலையெடுக்கும். மக்களிடையே அதன் செல்வாக்கு சரியும். இந்த வகையில் பொறுமையாக சிந்தித்தால் எந்த ஒரு நிறுவனமோ, அமைப்போ, கட்சியோ வலிமை பெறுவது என்பது எந்த அளவு பல்வேறு கருத்துநிலைகளின் விவாதத்திற்கு அது இடம் தருகிறது, எப்படி பல்வேறு அங்கங்களின் தேவைகளை, கோரிக்கைகளை மதித்து நடக்கிறது என்பதனையெல்லாம் பொறுத்துத்தான் அமையும். ஒற்றைத் தலைவரிடம் அதிகாரம் குவிவது குறுகிய காலத்திற்கு பலன் தரலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது பெரும் பலவீனத்திற்கே இட்டுச் செல்லும். அரசியல் கட்சி எப்படி உருவாக வேண்டும்? ஒரு அரசியல் கட்சி கட்டடம் கட்டுவது போல முதலில் அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கல்களை வைத்துக் கட்டி, சிமென்ட் பூசி, கான்கிரீட் உறுதிப்பாடு தேவையென்றால் அதனையும் அமைத்து, ஒவ்வொரு தளமாக உருவாக்கிச் செல்ல வேண்டும். கட்சியின் அஸ்திவாரம் என்பதை வேர்மட்டம் என்றும் ஆங்கிலத்தில் கிராஸ் ரூட் என்றும் சொல்வார்கள். எந்த கட்சிகளெல்லாம் வலுவான வேர்மட்ட அமைப்புகளின் மூலம் வலுப்பெறுகிறதோ அந்த கட்சிகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எந்த கட்சியிலாவது தலைமை வலுவாக இருந்தாலும் வேர்மட்ட அமைப்புகள் கலைந்து போனால் அந்த கட்சி தாக்குப் பிடிப்பது கடினம். உதாரணமாகச் சொன்னால் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு பெருமளவு சீர்குலைந்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற மும்முனைப் போட்டியில் பலரும் காங்கிரஸிலிருந்து உள்ளிழுக்கப்பட்டார்கள். இன்றைக்கு பிரியங்கா, ராகுல் காந்தி போன்ற துடிப்புமிக்க தலைவர்கள் அங்கே இயங்கினாலும், கட்சி அமைப்பு சீர்குலைந்ததால் காங்கிரஸ் அங்கே காலூன்றுவது கடினமாகவே உள்ளது. வேறு பல மாநிலங்களிலும் காங்கிரஸ் இத்தகைய கட்டுமானச் சரிவை சந்தித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்பு என்னவென்றால் மிக வலுவான வேர்மட்ட அமைப்புகளை அது உருவாக்கியதுதான். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் தேநீர் கடைகளிலும், சலூன் கடைகளிலும், லாண்டரி கடைகளிலும், சைக்கிள் கடைகளிலும், கட்சிக் கிளைகளிலும், திருவள்ளுவர் மன்றங்களிலும் பலர் கூடி கட்சி ஏடுகளை வாசித்தார்கள். விவாதித்தார்கள். கட்சிக்கு என்று பெரும் லட்சியங்களும், கொள்கை, கோட்பாடுகளும் இருந்தன. தமிழ் மொழியின் பண்பாட்டுச் செழுமையினை அவர்கள் உரமாக்கிக் கொண்டார்கள். ஒரு புதிய அரசியல் சொல்லாடலை உருவாக்கினார்கள். அந்த வேர்கள் சமூக உளவியலில் ஆழமாகப் பற்றிப் பரவின. கவிதைகளாக, நாடகமாக, இலக்கியமாக அது பெரும் வீச்சினைக் கொண்டன. எங்களுடைய தி.மு.க துவக்க கால வரலாறு குறித்த Rule of the Commoner நூலில் காவியப் பாவலர் பண்ணன் என்ற உடுமலை நகர கிளை உறுப்பினரின் அனுபவப் பதிவுகளைக் கூறியுள்ளோம். அவருடைய வழிகாட்டியாக விளங்கிய பா.நாராயணன் அவரை கட்சி வேலைகளை நிறுத்திவிட்டு ஆனந்த விகடன் அறிவித்த இலக்கிய போட்டிக்கு நாடகம் எழுதி அனுப்பச் சொன்னதை விவரித்திருப்பார். அதற்காக கட்சி அனுதாபி ஒருவரிடம் சொல்லி அவரது தோட்டத்து வீட்டில் தங்கி முழு மூச்சாக எழுத வசதி செய்து தருகிறார். இப்படி ஆயிரம் பூக்களாக மலர்ந்த கட்சியைத்தான் சினிமா நடிகர்களால் வளர்ந்த கட்சி என்று ஒற்றைப் பரிமாணமாக பலர் புரிந்து கொள்கிறார்கள். அந்த சினிமா நடிகர்களின் காலத்தையெல்லாம் கடந்து நின்று இன்றும் இந்திய அளவில் திராவிட கருத்தியலை உயர்த்திப் பிடித்து சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றால் எந்த அளவு அதன் வேர்கள் சமூகத்தில் பரவியுள்ளன என்பதை யாரும் சிந்தித்துப் பார்க்கலாம். வெறும் தேர்தல்களில் வெல்லும் சூத்திரம் அல்ல இது. மக்களாட்சி தத்துவம் என்ற மாபெரும் கனவு. அடித்தளம் இல்லாத கட்டடங்கள் ஊடகங்கள் பெருகப் பெருக, மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவர் அவருடைய பிரபலத்தை முதலீடாக வைத்து கட்சி துவங்கிவிடலாம் என்று நினைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலும் ஊடகப் பிரபலங்கள் எதேச்சதிகார போக்கு கொண்ட தலைவர்களாக மாறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் பிரபலமானவர்தான். இவர் அதிபராக இருக்கும்போது யார் அறிவுரையையும் மதிக்காமல் முடிவுகள் எடுக்க முனைந்தவர், பாசிஸ்ட் என்று அவரிடம் பணியாற்றிய முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பாசிசம் என்பது தலைவரே கட்சி, ஆட்சி என்னும் நிலைதான். ஃபியூரர் கல்ச்சர் என்பார்கள். பெரும்பாலும் தன் பிரபலத்தை மட்டும் நம்பி கட்சி துவங்குபவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்தவன்தான் நான் என்பார்கள். கர்ணன் படப் பாடலில் கிருஷ்ணன் பாடுவது போல “மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே” என்று கூறுவார்கள். நாமெல்லாம் ஒன்றுபட்ட சக்தி என்று சொல்லும்போது அதுதான் பாசிசம் என்பதை உணர மாட்டார்கள். கட்சி என்றால் அதில் பல அடுக்குகளில் பொறுப்புகள் இருக்க வேண்டும். அந்த பொறுப்புகளை வகிப்பவர்களை தலைமை மதித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். அதன் பொருட்டுத்தான் மேடையில் பேசும்போது ஒவ்வொருவரின் பேரையும் கூறி “அவர்களே” என்று கூறுகிறார்கள். அதுதான் மக்களாட்சி பாயசம். அது ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் இயல்பிலேயே பாசிச மோகம் கொண்டுள்ளார் என்பது தெளிவு. பெரும்பாலும் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டில் கட்சி துவங்கும்போது இதுதான் நிகழ்கிறது. அவர்கள் ஒருவரை மட்டுமே, அவர்கள் பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்து கட்சி துவங்கப்படுகிறது. அவர் ஏதேதோ கொள்கைகளை எழுதி வைத்துப் படிக்கலாம். ஆனால் அவற்றை வடிவமைத்த கட்சி அமைப்பு எது. உயர்நிலைக் குழு எது, பொதுக்குழு எது என்றெல்லாம் தெரிய வேண்டும். அவர்களெல்லாரும் அந்தக் கொள்கைகளைப் பற்றிப் பேச வேண்டும். நடிகர் விஜயகாந்த் மதுரையில் கட்சி துவங்கியபோது நடத்திய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஆய்வு சார்ந்த களப்பணியில் இருந்ததால் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பாஸ் ஒன்றை நானும் பெற்றிருந்தேன். அதனால் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்தபோது மேடைக்கு வெகு அருகில் இருந்தேன். மக்கள் கூட்டம் அலைபோல மேடையை நோக்கி முண்டியபடி இருந்தது. முதல் நாளே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு வளாகத்தில் குழுமியிருந்தார்கள். அவர்கள் பலருடன் உரையாடினேன். அவர்கள் அனைவரும் புதிய வரலாறு படைக்கப் போகிறோம், கேப்டனை முதல்வராக்கி தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கப் போகிறோம் என்று எழுச்சியுடன் பேசினார்கள். தூத்துக்குடியில் கலாசி வேலை செய்யும் ஒருவர் வட்டிக்கு ஐயாயிரம் கடன் வாங்கி மாநாட்டிற்கு நன்கொடை அளித்ததாகச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். அப்போதுதான் மாநாட்டில் வாலண்டியராக சீருடையுடன் பங்கேற்க முடியும் என்று சொன்னார். உண்மையிலேயே பிரம்மாண்டமாக நடந்த அந்த மாநாடு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பிரச்சினை என்னவென்றால் அவ்வளவு பெரிய கூட்டத்திடம் பேசுவதற்கு ஆட்கள் இல்லை. மேடையில் பலர் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் யாருமே சிறப்பாகப் பேசக் கூடியவராக, தலைமைப் பண்பு மிக்கவராக இல்லை. விஜயகாந்த் பேச்சு மட்டுமே முக்கியமானதாக இருந்தது. இன்றுவரை அவருடைய தே.மு.தி.க கட்சித் தலைவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஷ், மகன் விஜய பிரபாகரன் என்பதைத் தாண்டி வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள், நிர்வாகிகள் என்று எவர் பெயரையும் கூற முடியவில்லை. அப்படி ஒரு கட்சி தேய்ந்து வலுவிழக்காமல் என்ன ஆகும்? பல கட்சிகளிலும் இந்த நிலைதான். கட்சியின் தலைவர் இவர் என்று இல்லாமல், இவருடைய கட்சி இது என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது. தலைவருக்காகக் கட்சிதானே தவிர, கட்சிக்காகத் தலைவர் இல்லை. இந்த நிலையில் கட்சி துவங்குவது என்பது மக்களாட்சி தத்துவத்திற்கே விரோதமானது. இந்த செல்வாக்குள்ள நபர்கள் தங்களைத் தவிர கட்சியில் வேறு யாரும் பெயர் பெறுவதையும் விரும்புவதில்லை. மேடையில் கட்சி பொறுப்பாளர்களின் பெயர்களைக் கூறுவதையும், கண்ணியமாக “அவர்களே” என்ற பின்னொட்டுடன் அவர்களை அழைப்பதையும்கூட தேவையற்ற நாடகமாக கேலி செய்யும் அளவிற்குத்தான் மக்களாட்சி குறித்த புரிதல் உள்ளது. கலைஞர் ஒருமுறை எழுதினார். அடுக்குமொழியாகப் பேசுகிறேன் என்று சிலர் தானே சூடுபோட்டுக் கொள்கிறார்கள் என்றார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணம் மாற்றுக் கட்சிக்காரர் எழுதிய அடுக்குமொழி வசனம். “சர்பத்தையும் (பாம்பு) சாம்பார் வைத்து சாப்பிட்டுவிடுவேன்” என்று எழுதினாராம் அவர். அது போல பெரும் கூட்டத்தைக் கூட்டி தான் மட்டுமே பேசி அனுப்பிவைத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் “பாசிசம் பாசிசம் என்கிறார்களே, இவர்கள் மட்டுமென்ன பாயசமா?” என்று கேட்டுள்ளார். அவர் மக்களாட்சி என்பது பாயசம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடெங்கும் சாமானிய மக்களுக்கு அரசியல் உணர்வூட்டி, பேச்சுப் பயிற்சி கொடுத்து, சிந்தனைத் தெளிவு கொடுத்து தலைவர்களாக்கிய மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தானொருவன் பேசினாலே மாநாடு என்று நினைக்கும் விஜய், பாசிசம் என்றால் என்னவென்று முதலில் படித்தறிய வேண்டும். தலைமைக்காக கட்சி என்பதே பாசிச வடிவம்தான் என்பதை உணர வேண்டும். முதலில் உங்கள் கட்சி நிர்வாகிகளை மதியுங்கள். அவர்களே கட்சி என உணரச் செய்யுங்கள். கதாநாயக சினிமாவில் நீங்களே திரைப்படமாக விளங்கியதுபோல, கட்சியிலும் நீங்களே கட்சியாக இருக்க முடியாது. உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது. https://minnambalam.com/political-news/fascism-is-a-state-where-the-leader-is-the-party-and-the-government-article-in-tamil-by-rajan-kurai/
  7. தங்கள் தலையில் தாங்களே தொடர்ந்து மண் அள்ளி போட்டுவிட்டு அடுத்தவன் வந்து உதவில்லை என்று புலம்பல். எல்லா தீர்மானங்களையும் தாங்களே எடுப்பினமாம். சொதப்பின உடனே அடுத்தவன் எல்லாம் தனது வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணணுமாம். அதுக்குள்ள 25 நாடு வந்து அழிசிட்டுன்று வேற புலம்பல். ஒருவர் எடுத்த தீர்மானத்தின் விளைவை அவர் அல்லது அவரின் தலைமுறை தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். சும்மா அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிப்பது வீரம் இல்லை. பக்கா கோழைத்தனம். சரி இப்பவாவது தெரிஞ்சிட்டுது இல்ல. இனியாவது தலையில் தாமே மண் அள்ளி போடாமல் தலைக்குள்ள இருகிற களி மண்டை cleanup பண்டீட்டு கொஞ்சமாவது அறிவை ஊட்டவேண்டும். அதுவே உய்யுறத்துக்கு வழி.
  8. அண்ணை விசை மாநாட்டிலே நான் ரசித்தது அதைத்தான். உரக்க பேசும் அரசியல் நாம் செய்யமாட்டோம் என்று மூலம் வெளியாலை வருமளவு உரக்க பேசினதையையே. விசையின் கெத்து தி.மு.க அண்டா குண்டா சொம்பு பத்திரிக்கையாளர்களால் சுற்றப்பட்டு கொத்துபுரோட்டா போடப்படும்போதுதான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு. ஒரு எதிர்கட்சித்தலைவரையே காமெடிபீஸாக/குடிகாரனாக மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றி சுவடே தெரியாமல் அழித்த அரசியல் களம் இது. இந்த பாம்பை பார்த்து புஸ் விடுவது அவரது சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம். பார்ப்போம் தமிழக வெற்றிக்கழகமாக போகிறாரா இல்ல திரிஷா விஜய் கழகமாக போய் நம்ம ஆண்டவர் டார்ச்சை அணைத்து எறிந்துபோட்டு உடைஞ்ச டீ.வியையும் ரிமோட்டையும் தூக்கிட்டு திராவிடர்களிடம் ஓடியது போல ஓடுறாரா என்று
  9. பிரித்தானிய லேபர் பார்ட்டி ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒரு சேர வெற்றிகரமாக கைக்கொள்ளவில்லையா? அதேபோல் இதுவும் சாத்தியமே. ஏலவே இரெண்டும் மிக நெருங்கிய கொள்கைகளே. தமிழ் தேசியத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி வெறுப்பையும், திராவிடத்தில் இருந்து தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் மற்றும் ஊழலையும் நீக்கி விட்டால், இரு கொள்கைகளும் ஒன்றேதான். மீசை வைத்தால் இந்திரன் தமிழ்தேசியம், மீசை எடுதால் சந்திரம் திராவிடம். இன்னொரு திரியில் கருவாட்டு சாம்பார் என்றீர்கள். கறி இட்லியை போல் இதுவும் ஒரு வகை புதிய டிஷ் என சாப்பிட்டு பாருங்கள்🤣.
  10. அதீத பக்தியாகவும் இருக்கலாம் ... காலத்துக்கு காலம் மாற்றங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றது ... ...சாதாரண் தமிழ் மக்களை 70 வருடங்களாக இனவாத செயல்களை தூண்டி கொலை செய்யும் சிங்கள பேரினவாதிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட‌ சிலர் இருக்கும் பொழுது ...ஏன் சுரேசை மட்டும் பிழை சொல்லவேண்டும் .. எனக்கு இருக்கும் இறை பக்தி,தல வழிபாடு போன்று... உங்களுக்கும் வேறு இறையுடன் ,அல்லது தல அல்லது கருத்து மையங்களில் சிக்குப்பட்டவராக இருக்கலாம் அது தப்பே இல்லை ...
  11. எல்லாம் போச்சா... சுமந்திரனின், அமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டார்களே. 😂 உளறு வாயனுக்கு, ஆப்பு வைத்து விட்டார்கள். 🤣
  12. வசி, இம்முறை யாழ் மாவட்டத்தின் மொத்த அங்கத்தவர் தொகையே 6 தான். நீங்கள் 10 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்.
  13. கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான். இது இரகசியம்.
  14. இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி. நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன். நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை. பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை. ஒருநாள் நிமால் லான்ச பிரதமராக தயாரா என என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன். அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார், அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன். அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை, தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள். நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம். மக்கள் அனுரகுமார திசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் தனது பதவியை தொடரவேண்டும். அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது. ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது. ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும். அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும். தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும். தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அனுர எனக்கு தெரிவித்தார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தானே 51வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள். அவர் கஸ்டப்படுகின்றார் என நான் தெரிவிக்கின்றேன். https://www.virakesari.lk/article/197266
  15. கடந்த வாரம் சுவிச்லெண்டில் உள்ள தெரிந்தவர்கள் சொன்னார்கள் இந்தியர் சுற்றுலா குழு ஒன்று 100 பேர்வரை இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனத்து ஊடாக வநதிருந்ததாம். சுற்றுலா தலத்தில் உள்ள கட்டண பொது கழிப்பறையில் கட்டணம் மெசினில் காசு போட்டு தான் உள்ளே செல்ல முடியும். இந்திய ஆண்கள் மெசின் தடை கம்பிக்கு மேலாக ஏறி குதித்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர். இந்திய பெண்கள் மெசின் தடை கம்பிக்கு கீழே தவழ்ந்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர் 🙆‍♂️
  16. "புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்...
  17. கேள்வியிலே ஒரு தவறு இருப்பதை கவனித்தீர்களா Paanch? நீங்கள்தான் சிறீலங்காவில் இருந்து யேர்மனிக்கு வந்தீர்கள். உங்கள் பேரன் அல்ல. உங்கள் பேரன் பிறப்பால் யேர்மனியன். ஆக நீங்கள் வந்த காரணத்தைச் சொன்னால் போதும். அவர் புரிந்து கொள்வார்.
  18. உற‌வே சில‌ உண்மைக‌ளை சொல்லித் தான் ஆக‌னும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் ஒவ்வொரு தேர்த‌லிலும் கூடி கொண்டு தான் போகுது விஜேய் த‌ன‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிரூபிக்க‌ வில்லை . ஆனால் சீமானை விட‌ விஜேய்க்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு கூட‌ என்ப‌து உங்க‌ளுக்கும் தெரியும் நான் முன்னுக்கு பின் முர‌னாக‌ எழுத‌ வில்லை..................... உண்மையை தான் எழுதினேன் 2026க‌ளில் சீமானுக்கு ஓட்டு கூட‌லாம் சில‌து குறைய‌லாம் தேர்த‌ல் முடிவுக‌ள் மூல‌ம் தெரியும்...................... விஜேன்ட‌ அப்பா ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌லே சொன்னவ‌ர் த‌ன‌து ம‌க‌ன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌ன் என்று.............................
  19. உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி. 17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌வில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம். த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26 எட்டு மணித்தியாலங்களுக்கு பின்பு மாறி க‌ப்ட‌னையும் க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார் விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது .விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்
  20. நீங்கள் ஏன் வந்தீர்களோ அந்த உண்மையை குழந்தைகளுக்கு சொல்வதே சரியானது.
  21. இது தான் முட்டாள் தனம். அதிலும் படித்த முட்டாள்தனம்.. எவ்வளவு மரியாதை கொடுத்து எழுதினாலும் உங்களால் இந்த முட்டாள்தன எழுத்தில் இருந்து மீளமுடியாது. டொட்..
  22. கருத்துக்களத்தில் தாராளமாக அரசியலை பற்றி எழுதுங்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையுமில்லை. ஆனால் காலாகாலமாக சிங்களவனின் காலைக்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுத எந்த அருகதையுமில்லை!
  23. பாஞ்ச் அண்ணை…. பேரனுக்கு, நீங்கள் இங்கு வந்த காரணத்தை மறைக்காமல் சொல்லி விடுவதே நல்லது. எப்படியோ அவரின் பதின்ம வயதுகளில்… அவருக்கு உண்மை நிலவரம் தெரிய வரும் போது… தனது தாத்தா பொய் சொல்லி விட்டார் என்று அவரை கவலைப் பட வைக்க வேண்டாம்.
  24. நேற்று விஜயின் பேச்சை முழுமையாக கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. இது வேற லெவல் அரசியல். மற்றும் பேச்சு (இவ்வளவுக்கு பார்க்காமல் அரசியல் பேச விஜயால் முடியும் என்பதையே நம்பமுடியவில்லை) வணக்கம் தம்பி கோசான். நல்ல மீள்வரவு.
  25. உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டியவராக மாறியுள்ள ஈழத்தின் பாடலாசிரியர்! தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் எழுதியுள்ளார். தமிழகத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பன்முக திறன்கள் குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் G V பிரகாஸ் இன் தயாரிப்பில் "நாம்" பாடல் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை. குறித்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300ற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். "செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே" பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இவர் நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக் கொண்டவராகவும் விளங்கி வருகின்றார். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார். https://tamilwin.com/article/lyricist-eelam-become-must-celebrate-world-tamils-1730089943#google_vignette
  26. இங்கை ஓராளுக்கு கல்லு எங்கை பட்டாலும் பின்னங்காலை தூக்கிறதே பிழைப்பாயிருக்கு. காலாகாலமா சிங்களவனுக்கு கால்கழுவி நக்கிப்பிழைக்கும் கூட்டத்திற்கு அறிவுரை வேற!
  27. அவரை நல்லம் என்று சொல்லி மன்னிப்பு வழங்கவில்லையே .... தேவை கருதி அவரை கூட்டமைப்பில் இணைத்ததே வரலாறு . உங்கள் கருத்தினை பார்த்தால் பக்க சார்பாக சொல்வதாக தெரிகிறது ....
  28. கமலை இறக்கி பார்த்தார்கள். ரஜனியை இறக்கி பார்த்தார்கள். இப்பொழுது விஜய். பொறுமை புலம்பெயர்ந்தவர்களே. ஒரு சராசரி மனிதனுக்கு புரியும் படி இப்பொழுது எந்த அரசியல் காய் நகர்த்தல்களும் இடம்பெறுவதில்லை. நாம் பார்ப்பதையும் அவர்கள் பேசுவதையும் வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. 😁
  29. அல்வாயன்... நிச்சயமாக உதவி செய்வேன். எந்த இடத்தில் உதவி தேவை என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் முதலாவதாக கந்தப்பு எழுதிய கேள்விக் கொத்தை நீங்கள் பதில் எழுதும் பெட்டியில் பதிந்து விட்டு.. ஒவ்வொன்றாக, நிதானமாக பதில் எழுதிக் கொண்டு வர பெரிய பிரச்சினை இல்லை. அதுகும் நீங்கள் அண்மையில் ஊரில் நின்று விட்டு வந்ததால்... கள நிலைமை எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். ஆகவே... தயங்காமல் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
  30. அய்…. கோசானை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாஸ்…. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறிவார்கள். அதை எல்லாம் மனதில் வைக்காமல், @கந்தப்பு அவர்கள் நடத்தும் பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கணிப்பை சொல்லுங்கள்.
  31. அவர்கள் வைத்த பொறியில் அவர்களே மாட்டி கொண்டார்கள் ..................... அதற்கு பதிலாக சக தமிழர்களுக்கு நீதியான தீர்வை கொடுத்து இரு இனமும் ஒன்றாக நாட்டை முன்னேற்ற பாடு படனும் ஆனால் அது நடக்காது அப்படி நடக்கவும் விடமாட்டார்கள் இரண்டு பக்க அரசியல்வாதிகளும் .
  32. 2௦௦9 க்கு முதல் அந்த இறைவன் உங்களுக்கும் இறைவனாகத்தான் இருந்தார் வேணுமென்றால் உங்களின் பழைய கருத்துக்களை நீங்களே தேடி படித்து பாருங்க .
  33. இங்கு நீங்க சொல்லும் தமிழ் மக்களின் எதிரி சுமத்திரன் என்று கூறியதுக்கு உங்களுக்கு பச்சை புள்ளி குத்த இன்று இல்லை நாளை குத்துகிறேன் பாஸ் .
  34. எதை வைத்து மொழி உருவாக்கம் நடைபெரும் என்று சொல்கிறீர்கள் ? ஒருத்தனை அழிக்கணும் என்றால் ஒன்றில் முகத்துக்கு நேரே சண்டை போடணும் அதைவிட இலகுவான வழி கூட இருந்து குழி பறிக்கனும் அதே திராவிடம் கடைசி சண்டையில் என்ன செய்தது ? மானாட மயிலாட ஆட்டி கொண்டு இருந்தது
  35. நால்வருக்கு வயிறெரியும் ... 1) சீமான் 2) உதயநிதி ஸ்ராலின் 3) அண்ணாமலை 4) திருமா (🤣) ஒருவருக்கு வயிற்றோட்டம்,.... 1) ஸ்ராலின் 🤣
  36. சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .
  37. என‌து விருப்ப‌ம் க‌ருணாநிதி குடும்ப‌ ம‌ன்ன‌ர் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க‌னும் .................இந்த‌ 3 ஆண்டுக‌ளில் அவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ளை பொறுத்து கொள்ள‌ முடியாம‌ இருக்கு ஊழ‌ல் , கொலை ,கொள்ளை , க‌ஞ்சா , க‌ள்ள‌ சாராய‌ம் . 30 ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் இப்ரான் என்ற‌ யூடுப்ப‌ர் இந்திய‌ ச‌ட்ட‌த்தை ம‌திக்காம‌ த‌ன‌து யூடுப்பில் காணொளி போடுவ‌து . அவ‌ரை உத‌ய‌நிதி ம‌றைமுக‌மாய் காப்பாற்றுவ‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கு ப‌த‌வி திமிரில் ஆடுகின‌ம்..................எதிர் க‌ட்சி ஆதிமுக்கா வாயை மூடி மெள‌வுன‌மாக‌ இருக்குது எதிர் க‌ட்சி கேக்க‌ வேண்டிய‌ கேள்விக‌ளை சீமானே கழிவிட‌ மாட‌ல் அர‌சை பார்த்து கேக்கிறார்...................சீமான் கேக்கும் கேள்விக்கு ப‌தில் இல்லை 200ரூமாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு சீமான் மீது அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ வைப்ப‌து தான் இப்போது க‌ழிவிட‌ மாட‌ல் செய்யுது😡🫤 இனி திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் விஜேய் மீதும் கல் அதிக‌ம் எறிவார்க‌ள்😡.................விஜேன்ட‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கைய‌ கூட‌ இணைய‌த்தில் ப‌திவேற்ற‌ம் செய்யுங்க‌ள்................இது தான் பெரியாரிட‌ம் இருந்து திமுக்கா க‌ற்று இருக்கு......................த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி திமுக்கா 2009 எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌தில் இருந்து என‌க்கு திமுக்காவை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது..............10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌வை 2026 ஆட்சிய‌ இழ‌ந்தால் இவ‌ர்க‌ள் மீண்டும் இவ‌ர்க‌ள் ப‌டு தோல்வி அடைந்து க‌ட்சி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழிந்து போக‌னும்................... திருமாள‌வ‌ன் திமுக்கா கூட்ட‌னிய‌ விட்டு வெளிய‌ வ‌ந்தாலே போதும் திமுக்காவின் தோல்வி உறுதியாகிடும்🙏..............................
  38. பாவம் , அவரும் வார்த்தைகளில் வாள் வீசுகின்றார் . ........ வேறு என்னதான் செய்ய முடியும் , அதைத் தவிர ........! பகிர்வுக்கு நன்றி நுணா ..........!
  39. ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂
  40. ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர வீரர்கள் தான்....
  41. இந்த ரொய்லெற் ஊடகங்கள் புகழ்பாட வேண்டுமென்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஊடகங்கள் என்றால் நிருபர்கள், சம்பவங்களை அறிந்தோர், ஆய்வாளர்கள் என்று சிலரை வைத்து எழுத வேண்டும். இவர்கள் ஒருவர் அல்லது இருவர், காலமை எழும்பி கொமட்டில் முக்கிக் கொண்டிருக்கும் போது வரும் எண்ணங்களை எழுதி விட்டு "ஊடகங்கள்" என்றால் விபரமானவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. விசிலடிச்சான் குஞ்சுகள் அப்படியே சாப்பிடுவர்😎, தாயக மக்கள் விசில் குறூப் அல்லவே?
  42. வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
  43. யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார். என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏
  44. திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ..........!
  45. நானும் போட்டியில் கலந்து கொள்வேன். ஆனால் நவம்பர் 8 இற்கு பின்னரே கிருபன் குறிப்பிட்ட மாதிரி, இலங்கையில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்கணிப்புகளோ எவர் பக்கம் அலையுள்ளது எனக் காட்டக் கூடிய தெளிவான கட்டுரைகளோ இந்த தேர்தலில் இல்லை என்பதால் என் பதில்களும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் தான் அமையும்.
  46. தகவலுக்கு நன்றி சிறி. பாஞ்ச்சின் துணைவியார் விரைவில் பூரண குணமாகி குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்க வேண்டுகிறேன்.
  47. வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் பாஞ்ச் ஐயாவின் மனைவி திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.