Jump to content

Leaderboard

  1. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      30482


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      44391


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      79034


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      17037


Popular Content

Showing content with the highest reputation on 03/25/23 in all areas

  1. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
    5 points
  2. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
    3 points
  3. புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே... வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே... வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே.. ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே... மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே.. பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே... கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே... ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ... சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
    2 points
  4. விசுகு அண்ணாவின் மேற்கு விசுவாசம் புல்லரிக்க வைக்குது...தான் மட்டும் அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் ...ஆனால் ,இலங்கையிலேயே பிறந்து , அங்கே இலவச கல்வி கற்று அங்கு வாழும் தமிழ் மக்கள்அங்குள்ள அரசுக்கு எதிராய் போராட வேண்டும்
    2 points
  5. சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது. அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை) இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது. நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.
    2 points
  6. பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்கும் ஆளில்லை ஒப்பாரி வைக்க… ஊடகங்களும் தயார் இல்லை..! அதுமட்டுமா றோனுக்கு என்ன சனநாயகம்..?! மனித உரிமைகள்..??! இயந்திரத்திற்கு என்ன சிறைச்சாலை..???! நீதி கேள்வி கேட்கும்..! ஒப்பற்ற கண்டுபிடிப்பு அணு குண்டால் மனிதனை அழித்த பரம்பரை… இன்று றோன்களால் மிச்சம் மீதி தொடர்கிறது..! இதுவரை… அழித்த உயிர்களின் கணக்கு மட்டும் பல ஆயிரங்கள்..! “குற்றவாளி” அமெரிக்காவின் சந்தேகம் ஒன்றே போதும் ஓர் உயிர் எடுக்க.. இத்தனை ஆயிரம் சாவுகளும் அவ்வழி வந்தவையே.! பச்சிளம் குழந்தை முதல் பள்ளிப் பாலகர் வரை அதில் அடங்கும்..! இவை கண்டு… ஐநாவும் மூச்சின்றி கிடக்கும் யுனிசெப்பும் வாய்மூடிக் கிடக்கும்..! நீதிக்கும் அங்கு வேலை.. பூச்சியம்..! நாளை வாசிங்கடனில் லிங்கனின் உரையாம்… றேகனின் பரம்பரை றோனால் உலகை ஆள்வதே றோனாயகம்..! அதுவே அமெரிக்காவின் 21ம் நூற்றாண்டின் சனநாயகம்..! இதுதான் தலைப்பாம்..! வாக்குச் சீட்டும் போறடிச்சுப் போச்சு றோனால் அடிச்சு சாவுகளை எண்ணுவதே மேற்குலகின் தர்மமாய் ஆச்சு..! நாளை இது பஞ்சசீலம் வரை படர்ந்து விடும்..! தம்பி பிரபாவும் தமிழர் உயிர் எடுக்க வந்த இஸ்ரேலின் றோன்களுக்கு அடிக்கடி வன்னியில் ஆப்படிச்சதுண்டு..! அதனாலும்.. அவனைக் காலி செய்யும் திட்டம் றோனாயகத்திற்கு வந்திருக்கும்..! (2013 இல் எழுதியது.. மீள்பிரசுரம்.. ஆண்டுகள் ஓடினாலும்.. வல்.. ஆதிக்க சக்திகளின் எண்ணங்கள் மாறுவதில்லை.) https://kuruvikal.wordpress.com/2013/05/24/நாளை-வாஷிங்டனில்-லிங்கனி/
    2 points
  7. உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன. யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது. சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே. சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன். ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது, 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான். உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை. பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான். குளிர் -20 C (மறை 20) ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான். போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். நான் Bluetooth இன் மூலம் காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள். மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது. இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
    2 points
  8. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாமே இருக்கு. இவரும் எனது நண்பர் தான்.
    2 points
  9. Question Team1 Team 2 No Result Tie Prediction மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT CSK No Result Tie CSK ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS KKR No Result Tie KKR ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ LSG DC No Result Tie LSG ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH RR No Result Tie RR ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB MI No Result Tie RCB ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK LSG No Result Tie LSG ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC GT No Result Tie GT ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR PBKS No Result Tie RR ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா KKR RCB No Result Tie RCB ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ LSG SRH No Result Tie LSG ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR DC No Result Tie RR ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI CSK No Result Tie MI ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT KKR No Result Tie GT ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH PBKS No Result Tie SRH ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB LSG No Result Tie RCB ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI No Result Tie DC ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK RR No Result Tie RR ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS GT No Result Tie GT ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR SRH No Result Tie KKR ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB DC No Result Tie RCB ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG PBKS No Result Tie LSG ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI KKR No Result Tie KKR ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT RR No Result Tie GT ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB CSK No Result Tie CSK ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH MI No Result Tie MI ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR LSG No Result Tie RR ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி PBKS RCB No Result Tie PBKS ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC KKR No Result Tie DC ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK SRH No Result Tie SRH ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG GT No Result Tie GT ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI PBKS No Result Tie PBKS ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB RR No Result Tie RR ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா KKR CSK No Result Tie CSK ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH DC No Result Tie DC ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT MI No Result Tie MI ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB KKR No Result Tie RCB ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் RR CSK No Result Tie RR ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS LSG No Result Tie LSG ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR GT No Result Tie GT ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC SRH No Result Tie DC ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK PBKS No Result Tie CSK ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI RR No Result Tie RR மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG RCB No Result Tie RCB மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT DC No Result Tie DC மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS MI No Result Tie MI மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ LSG CSK No Result Tie CSK மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH KKR No Result Tie KKR மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் RR GT No Result Tie GT மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK MI No Result Tie CSK மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC RCB No Result Tie RCB மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT LSG No Result Tie GT மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் RR SRH No Result Tie RR மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR PBKS No Result Tie KKR மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை MI RCB No Result Tie RCB மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK DC No Result Tie CSK மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR RR No Result Tie KKR மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI GT No Result Tie MI மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH LSG No Result Tie LSG மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC PBKS No Result Tie DC மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR RCB No Result Tie RR மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK KKR No Result Tie CSK மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT SRH No Result Tie GT மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG MI No Result Tie LSG மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா PBKS DC No Result Tie DC மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH RCB No Result Tie RCB மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR No Result Tie RR மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி DC CSK No Result Tie CSK மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR LSG No Result Tie LSG மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI SRH No Result Tie MI மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB GT No Result Tie RCB ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT GT KKR Select KKR Select LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB RCB SRH Select SRH Select முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RR #2 - ? (3 புள்ளிகள்) RCB #3 - ? (2 புள்ளிகள்) CSK #4 - ? (1 புள்ளி) GT ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! SRH Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team CSK Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Wanindu Hasaranga இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Quinton de Kock இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) LSG இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Wanindu Hasaranga இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Buttler இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
    2 points
  10. அதனால்... ரஷ்யா, சீனா போன்ற அரச தலைவர்களின் தூர நோக்கு பார்வையை பாராட்ட நம்ம ஆட்களுக்கு மனம் வராது. 😂 ஏனென்றால்... அவர்களின் மூளையை, வெள்ளைக்காரன் வாஷிங் மெசினில் போட்டு கழுவி, காயவைத்து... இஸ்திரி போட்டு வைத்துள்ளதால்.. சனநாயகம் என்று.. கிளிப்பிள்ளை மாதிரி, கீக்கீ.. என்று பீத்திக் கொண்டு திரிய வேண்டியதுதான். 🤣
    2 points
  11. தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா? செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா? ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??
    2 points
  12. நான் ரசித்த நடனங்கள்.
    1 point
  13. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
    1 point
  14. உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹
    1 point
  15. நீங்கள் வேற இவங்கள் கடன் வாங்கின கையோட ஒரு கப்பல் முழுக்க முட்டையை இந்தியாவில இருந்து இறக்கினவையள் போன கிழமை. இந்தக் கூழ் முட்டைகள் பொறுத்ததுதான் பொறுத்தம் முட்டையை ஒரு இரண்டு மூன்று மாதம் சாப்பிடாமல் விட்டுட்டு கோழித்தீவனத்தை இறக்கியிருந்தால் உள்ளூரிலையே முட்டையை உற்பத்தி பண்ணியிருக்கலாம். கடன் கிடைத்ததும் மருதானையில வெடி கொளுத்திக் கொண்டாடுவதும் தமிழரை அழித்தது கிரிபத் கொடுத்துக் கொண்டாடுவதும் இவர்களுக்கு வழக்கமாகிப்போயிட்டுது. கொரோணா காலத்தில ஐரோப்பிய ஒன்றியத்திடம் நான் வாழும் நாடு இரண்டு பில்லியன் யூரோக்களைக் கடனாகப் பெற்றது அதிப் பெற்றுக்கொள்ளமுதல் நாடாளுமன்றத்தில ஒரு பிரேரணை கொண்டுவந்து வாங்களா இல்லையா பின்பு எப்படிக் கொடுப்பது இவைகளை விவாதித்து கடைசியில ஒவ்வொறு இந்த நாட்டுப் பிரஜையிடமுமிருந்தும் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு வருடாவருடம் நூத்திநாற்பத்து ஏழு யூரோக்களை வரி அறவிடும்போது சேர்த்தெ அறவுவம்படி சட்டம் இயற்றி இப்போ வருடாவருடம் அந்தக் காசை நானும் சேர்த்துக் அழுதுகொண்டு இருக்கிறோம். அதாலதான் பின்லாந்து நாடு உலகில் மகிழ்ச்சியான நாடாக இருக்கு காரணம் இந்த நாட்டின் உயர்விலும் தாழ்விலும் நானும் பங்குகொள்கிறேன் எனும் மனப்பாங்கு ஒவ்வொரு பின்லாந்துப் பிரஜையிடமும் இருப்பது மகிழ்சியாக இருப்பதற்கான பல காரணங்களில் ஒரு காரணமாகும். ஆனால் எனது ஒண்ணுவிட்ட சகோதரம் ஊரில திண்ணைக்கு மண் எடுத்துக்கொண்டு இருக்கு ஒருக்கால் மல்லாகப்பக்கம் போய் காணி வீடு வளவைப் பார் அங்க என்ன நடக்குது என ஒருக்கால் சொல்லு எண்டால் எனக்கு நேரமில்லை தவிர என்னால கனதூரத்துக்குப் போகமுடியாது என யாழ் நகர்ப்பகுதியிலிருந்து சொல்லுது. அடுத மாதத்தில இருந்து காசை நிப்பாட்டவேண்டும். நான் பத்துச் சென்ரிக்கு இனிப்பு வாங்கினாலும் ஒன்று தசம் நாஙு சென்ரி வரியை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டுத்தான் இனிப்பை வாயில போடவேண்டும் ஆனால் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் வரு உயர்வுக்கு வழக்குப்போடுகிறார்கள். இந்த விறுத்தத்தில் கிழக்காசியாவிலேயே இறுகமான ஊழல் மோசடிக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவாரன் என ரணில் கூறுகிறார் சட்டம் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அதே ஊழலில் ஊறிய அதிகாரிகள்தான் என்பதை வர் மறந்திட்டார். இந்தக் கெடுதியில தமிழர்களுக்கான உரிமைபற்றிப் பேச நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கூட்டமைப்பினர் இப்போ உள்ளூராட்சி தேர்தலை நடாத்துஙோ என ஊளையிடுகினம் இவர்களது யோக்கியதை தெரிந்துதான் ரணில் உள்ளூராட்சி தேர்தல் எனும் எலும்புத்துண்டை விட்டெறிய அதை நக்குவதற்கு கூட்டமைப்பு குரத்து ஒண்டுக்குமேல ஒண்டு கடித்து இரத்தம் வடிய புறுஞ்சுபோய் கிடக்குதுகள் ஆக ரணில் இவர்களைப் பிறிக்கவேணும் என நினைத்து எலும்புத்துண்டை எறிந்தவுடன் தமிழர் உரிமை எனும் துடை இறைச்சியை இவர்கள் மறந்துபோய் இப்போ அடிபட்டு பின்னங்காலைத் துக்கிக்கொண்டு அலையினம். தமிழர் அரசியல்வாதிகளுக்கு ரணிலைப்பார்த்து சுதந்திர தினத்துக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு எனச் சொன்னியள் என்னாச்சு எனக் கூற திராணியில்லாமல் எலும்புக்கு அடிபடுதுகள். சொறி...........ள்
    1 point
  16. அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
    1 point
  17. இவரைப் பற்றி நிறைய செய்திகள் பார்த்திருக்கிறேன்.....மிகவும் கெட்டிக்காரர்......! 👍 நன்றி பிரியன்......!
    1 point
  18. சில கொடூரங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் பார்க்கும்போதும் (முக்கியமாக ஈழத்தில் நடந்தவை) கடவுள் இல்லையென்றே தோன்றும். அதே சமயம் சில அதிசயங்களையும், மனிதனின் சக்திக்கு அப்பால் நடக்கும் இயற்கையின் செயல்களை பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி இருக்கிறதென சடுதியில் உறைக்கும். வாழ்க்கை முழுவதும் இந்த தளும்பு நிலை இருந்துகொண்டே இருக்கிறது. எனது வீட்டிலும் பூசை அறை இருக்கிறது, அது இல்லாளின் கட்டுப்பாட்டில். நான் அதிகம் செல்வதில்லை. பெரியாரின் கொள்கைகள் பல பிடிக்கும், ஆனால் கடவுள் மறுப்பில், மேலே சொன்னபடி மனம் இன்னும் தளும்பு நிலைதான்.
    1 point
  19. நம்ப முடியவில்லை.🥺🥺🥺ஆனால், அந்த அதிசயம் நடந்தது.
    1 point
  20. @Kandiah57 என்ன இன்னும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. உங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    1 point
  21. வண்டி போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென நின்றால் ... தள்ள ஆள் வேணும் என்று கவலைப் படத் தேவையில்லை. 🤣
    1 point
  22. இதனை விட. ஜேர்மன் வரமால். விடலாம்....வந்தால் தானே கைது செய்ய முடியும்.........பதவி இழந்த பின் இந்த புட்டுக்கு. ரஷ்யாவில் பாதுகாப்பு கிடையாது எதிரிகள் நிறையவே இருப்பார்கள்......அப்படியான நிலையில் இன்றைய நண்பனும். எதிரியாக மாறியிருப்பார்கள். எனவே… பதவி இலலாத. புட்டுக்கு. ரஷ்யாவில் எதிரிகள் தான் இருப்பார்கள் ஜேர்மனியில் வந்து பதுங்கும். ஐடியா போல் தெரிகிறது வரட்டும....வரட்டும். ஒரு கை பார்பபோம். 🤣🤣
    1 point
  23. பாதுகாப்பாக இருங்கள் மிசுசிப்பி மாநிலத்தில் உள்ள எமது உறவுகளே
    1 point
  24. ஜனாதிபதி பதவி இல்லாத நிலையில் கைது செய்யலாம் 😁
    1 point
  25. ஆதாரம்?, மேற்குலகின் பரப்புரை, அதை நம்பி மக்களின் ஆதரவைப்பற்றி கேள்வி கேட்கின்றீர்கள்?😁 இந்த அமெரிக்கன் ஈராக்கில் பெண்களுக்கு செய்த அட்டூழியங்கள் வீடியோ வீடியோவாக இருக்கு, எப்படி கிந்திய இராணுவம் எமது மண்ணில் செய்திச்சோ, அதே அட்டுழீயம் வியாட்னாமில், ஈராகில், ஆப்கானிஸ்தானில், .......... அவர்களின் ஆட்டத்திற்கு இது ஒரு இடைவேளை, தொடரும்... அதற்கு நீங்கள் ஆதரவு🤔
    1 point
  26. நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா- பா.உதயன் ரஷ்யா, உக்ரைன் போர் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. மனிதப் பேரழிவுகளோடும் பொருளாதாரப் பின்னடைவுகளுடனும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலகத்தை ஆக்கிரமித்து தாக்கிய கொரோன வைரசு ஒரு பக்கம் அதைத் தொடர்ந்த ரஸ்சிய உக்ரேன் யுத்தம் இப்படியே தொடரும் நோய் யுத்தம் போன்ற அழிவுகளினால் இன்று உலகில் சமூக அரசியல் பொருளாதாரம் ( social political and economical structure ) ஆட்டம் காண தொடங்கியுள்ளது. உலக மக்கள் பெரும் பொருளாதா பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இன்னும் குறிப்பாக ஏழை நாடுகளை இது பெரிதும் பாதித்துள்ளது. உலகின் பெரும் பான்மை மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போதும் பெருவாரியான பணமும் ஆயுதமும் போருக்காக வீண் விரயம் செய்யப்படுகின்றது. உலகம் பெரும் போர் ஒன்றை நோக்கி நகர்கிறதா இன்று நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா. Are we living in a turbulent world. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல்( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். அண்ணன் அமெரிக்காவும் அவர் தம் தம்பிமார் ஐரோப்பாவும் அணுகுண்டையும் ஆயுதங்களையும் செய்து கொண்டும் விற்றுக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கும் அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் சமாதானத்தை எப்படி ஏற்படுத்த முடியும். இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ( sovereignty and integrity ) என்று சொல்லிக் கொண்டே இன்னும் ஒரு நாட்டை ஆக்கிரமிப்பவர்களினாலும் தங்கள் அரசியல் பொருளாதார நலன்களையே எப்பொழுதும் சிந்திப்பவராலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு இன்னும் எண்ணை ஊற்றி எரிப்பவர்களினாலும் எங்குமே எல்லைகளை அறுத்து தின்னும் பெருச்சாளிகளினாலும் எப்படித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். எப்பொழுதுமே அதிகாரசக்தி மிக்க நாடுகளோடு சேர்ந்து பாடும் ஐ. நாவால் எப்படி ஒரு சமாதானத்தை எங்கும் ஏற்படுத்த முடியும். எந்தப் பிரச்சினையும் இருந்து கதைத்து இராஜதந்திரரீதியிலான அணுகுமுறையே சமாதானத்துக்கான பாதையை ஏற்படுத்த முடியும். ரஸ்சிய ஆளும் தலைமையிலும் அவர்களின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அருகில் இருக்கும் நாடுகளோடு சமாதானத்தை ஏற்படுத்தும் வழியை தேட வேண்டுமே தவிர யுத்தங்களினால் பெரும் அழிவே என்பதை அறிய வேண்டும் இதுவே இன்றும் எரிந்து கொண்டிருக்கும் ரஷ்யா உக்ரேன் போருக்கும் ஒரு சமாதானத்தை தேட வழி பிறக்கும். ஈராக்கை அழித்த போதும் ஆக்கிரமித்த போதும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் ஜப்பானில் அணுகுண்டை போடும் போதும் கியூபாவை அழிக்க எடுத்த முயற்சியின் போதும் ஜனநாயக மறுப்பு நாடான சவுதி அராபியாவோடு நட்பு கொண்டாடும் போதும் ஜனநாயகம் பேணாத நாடு சீனா என்று கூறிக்கொண்டும் அதனோடு வியாபாரம் செய்யும் போதும் சிறு பான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அடக்கியபோதும் எங்கே போனது உங்கள் இறைமையும் ஒருமைப்பாடும் ஜனநாயகமும் இன்று மட்டும் எப்படி வந்தது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இறைமையும் ஜனநாயகமும் பாதுக்காக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று. எல்லாமே உங்கள் உங்கள் தேசிய நலனுக்கு ஏற்றா போல் ஆடும் நாடகம் மட்டுமே. தத்துவவியலாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்தி கூறுவது போல் இந்த உலகம் யுத்தங்களினாலும் வன்முறையாலும் ஆயத உற்பத்தி விற்பனையாலும் அவர் அவர் தேசிய நலன்களோடு கூடிய தத்துவார்த்த சிந்தனைகளோடு அமைதி சமாதானம் இன்றி இருக்கிறது. மனிதர்கள் இன்னும் ஏன் இந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார்கள் என்ற பெரும் சவால் மிக்க கேள்வியை உலகத்திடம் கேட்கிறார். இனி வரும் உலகம் புதிய உலக ஒழுங்கோடு புதியதொரு முன்னுதாரண மாற்றங்களோடு (new paradigm shift) கூடிய பாதையில் இனி பயணிக்குமா. இவை எல்லாவற்றையும் கடந்து உலகின் அனைத்து இனங்களும் சமத்துவமான( Equality) ஒரு பாதையில் பயணிப்பதென்பது இனி வரும் உலக ஒழுங்கில் மிகவும் சவால் மிக்கதாகவே அமையலாம். பா.உதயன் ✍️
    1 point
  27. ஆர்ப்பாட்டம் என்பது சனநாயகத்தின் ஒரு அங்கம்தான. பிறகேன் இந்த அவலம்? இதற்கு ஒருவரிடமும் இருந்து பதில் வராது. பதில் வருமானால் எல்லோரினது நிறமும் வெளிவருமே ?
    1 point
  28. (ஜேர்மனி) "புடினைக் கைது செய்தல் என்பது ரஸ்யா மீதான யுத்தப் பிரகடனத்திற்குச் ஒப்பானது" 👇 If Germany Decides to 'Arrest' Putin, It Will Mean Declaring War on Russia, Says Medvedev 05:02 GMT 23.03.2023 © Sputnik / POOL / Go to the mediabank Subscribe International India Africa MOSCOW (Sputnik) - Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev said that if Germany decides to implement the decision of the International Criminal Court (ICC) on the "arrest" of Russian President Vladimir Putin, this will be equal to declaring war on Russia. Earlier, German Justice Minister Marco Buschmann said that the warrant for Putin's "arrest" would be valid in Germany after a request from the ICC. The order was also supported by Chancellor Olaf Scholz, who, during his visit to Japan, said that "no one is above the law." "Some idiots, halfwits like the German justice minister, say, 'Well, if he comes, we'll arrest him.'.. Does he understand what that means? Let's imagine... the incumbent head of a nuclear state arrives on the territory of, say, Germany and is arrested. What is this? A declaration of war on the Russian Federation!" Medvedev said in an interview with major Russian media, including Sputnik. He said Russia in such a situation would use all available means to target "the Bundestag, the chancellor's office, and so on." Medvedev said such decisions like the one the ICC made create a huge negative potential. On March 17, the ICC issued a warrant for the arrest of Putin and Russian Presidential Commissioner for Children's Rights Maria Lvova-Belova, citing "unlawful transfer of population (children) from occupied areas of Ukraine to the Russian Federation." The Kremlin said Russia is not party to the ICC and the court's decision is legally null and void for the country. https://sputniknews.com/20230323/if-germany-decides-to-arrest-putin-it-will-mean-declaring-war-on-russia-says-medvedev-1108708618.html செய்தியின் சாரம்தான் பிரதானமானது. ஒரு செய்தியை வரிக்கு வரி தனிச்செய்திகளாக்கினால் மேலே இணைக்கப்பட்ட செய்திபோல ஒரு செய்தியைப் பிரித்து ஆயிரம் செய்திகளை உருவாக்கலாம். 😏
    1 point
  29. போட்டியில் கலந்துகொண்ட கல்யாணியின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிபெற வாழ்த்துக்கள். இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்: 1 வாத்தியார் 2 ஈழப்பிரியன் 3 பையன்26 4 சுவி 5 கறுப்பி 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 புலவர் 9 அஹஸ்தியன் 10 சுவைப்பிரியன் 11 குமாரசாமி 12 வாதவூரான் 13 நில்மினி 14 கல்யாணி ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🏏 போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். வேறு வகையான பதில்கள் (உ+ம்: தடித்த எழுத்தில் காண்பிப்பது) ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும். கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing போட்டி முடிவு திகதி வியாழன் 30 மார்ச் 2023 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் இறுதி நேரம் வரை காத்திருக்காது இன்றே கலந்துகொள்ளுங்கள்.😄
    1 point
  30. நம்மூர்களில்... பெரும்பாலான இடங்களில்... முதுமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாமல் இருப்பது பெரும் சோகம். "காவோலை விழ குருத்தோலை சிரிக்கின்றது.." என்ற பழமொழியும் அதனையே சுட்டி க்காட்டினாலும் தனக்கும் இது, நிச்சயிக்கப் பட்ட ஒன்று என உணராமல் இருப்பது விசித்திரம்.
    1 point
  31. யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும்படி உத்தரவு வழங்கியது யார்? நூலகத்தை எரித்தது யார்? யாழ்ப்பாண நூலகம் தமிழரின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான மூன்று கேள்விகள் எழுந்தன. நூலகத்தை எரித்தது யார்? எவ்வாறு அதனை எரித்தார்கள்? எரிக்கும்படி உத்தரவிட்டது யார்? என்பனவே அம்மூன்று கேள்விகளும். யாழ்ப்பாண தமிழர்களின் கலாசாரப் பொக்கிஷமான நூலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரன் மிகுந்த வேதனையும், அதேநேரம் ஆத்திரமும் கொண்டார். இந்த நாசகாரச் செயலினால் தமிழினம் "கலாசாரப் பேரிழப்பொன்றினை அடைந்திருக்கிறது" என்று அவரது வாய் முணுமுணுத்தது. தென்னாசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை இன்னும் பலர் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றார்கள். சரித்திரத்தில் ஒரு இனத்தின் கலாசார அடையாளத்தைப் பேணும் நூலகங்கள் எரிக்கப்படுவது இதுவே முதல்முறையுமல்ல. இதற்கு முன்னர் இரு தடவைகள் இவ்வாறான் நூலக எரிப்புக்கள் சரித்திரத்தில் நடைபெற்றிருக்கிறன. முதலாவது 12 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசிய காடையர் கூட்டமான கில்ஜி எனப்படும் கொடூரனின் படைகள் நாலந்த என்றழைக்கப்பட்ட பெளத்த பல்கலைக் கழகத்தையும், அதனோடிணைந்த நூலகத்தையும் எரித்தது. இரண்டாவதாக 1619 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ் ராஜதானியைக் கைப்பற்றிய போர்த்துக்கேய படைகளின் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா என்பவன் தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த நூலகமும், தமிழர்களின் சரித்திரம், திராவிடப் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலங்களையும் கொண்ட சரஸ்வதி மகால் எனும் நூலகத்தை எரித்தான். மேலும், 500 சைவக் கோயில்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் தமிழரின் தொன்மையின் அடையாளங்களை இல்லாமப் போகச் செய்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. மூன்றாவதாக பாரம்பரிய நூலகம் ஒன்றும் பெளத்த நாடு என்று அறியப்பட்ட, பெளத்த ஜனாதிபதியினால் ஆளப்படும் இலங்கையில் எரிக்கப்பட்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரான சி.வி. சிவஞானம் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தி யாழ் நூலகம் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். உடனேயே சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகேந்திரா துரைசாமிக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த, அவரது மனவி மறுமுனையில் பேசினார். நூலகம் எரிவதுபற்றி தனக்கெதுவும் தெரியாது என்று கூறிய அவர், விடயங்களை அறிந்துகொண்டு மீளவும் அழைப்பதாகக் கூறினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சிவஞானத்தை மீள அழைத்த அரசாங்க அதிபரின் மனைவி நூலகம் எரிவது உண்மைதான் என்பதனை உறுதிப்படுத்தினார். உடனேயே சிவஞானம் நகரசபையின் காவலர் அறைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி நூலகம் எரிவது உண்மையா என்று கேட்டார். காவலர்களும் அதனை உறுதிப்படுத்தினர். நூலகத்தைச் சுற்றி நிற்கும் பொலீஸாரே நூலகத்திற்கு தீவைப்பதாக காவலர்கள் சிவஞானத்திடம் கூறினர். சி.வி. சிவஞானம் கடமையிலிருந்து ஆறு காவலர்களை தீயணைக்கும் இரு வாகனங்களை எடுத்துக்கொண்டு நூலகத்தை தீயிலிருந்து காக்குமாறு சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், யாழ்ப்பாண நகரசபையிடம் அன்றிரவு தீயணைப்பு வாகனங்கள் இருக்கவில்லை, "குறைந்தது நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதையாவது தடுத்து நிறுத்துங்கள்" என்று தனது காவலாளிகளிடம் கத்திவிட்டு, தானும் நூலகப் பகுதிக்குச் சென்றார். ஆனால் நூலகத்திற்கு அருகில் செல்வதிலிருந்தும், யாழ் நகரசபை கட்டடத்திற்குள் செல்வதிலுமிருந்து அவர் தடுக்கப்பட்டார். அவரை வழிமறித்த பொலீஸார், "நீ உள்ளே போகமுடியாது , திரும்பி சென்றுவிடு" என்று திருப்பியனுப்பினர். மேலும், மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் எப்படியாவது நூலகத்தினுள் சென்று தீயை அணைக்க முயற்சியெடுத்த வேளை, "வீதிக்கு வந்தீர்கள் என்றால் சுட்டுக் கொல்வோம்" என்று மாநகரசபையின் வாயிலுக்கு முன்னாலிருந்த் பொலீஸ் காவலரனில் கடமையிலிருந்த பொலீஸ் காடையர்கள் ஊழியர்களைப் பார்த்துக் குரைத்தனர். பீட்டர் கியூனுமென் கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியூனுமென் நூலகம் எரிந்த பின்னர் அதனை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே "அத்த" (உண்மை) எனும் சிங்களப் பத்திரிக்கையும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தது. அப்பத்திரிக்கைக்கு அழுதுகொண்டே பேட்டியளித்த நகரசபை ஊழியர் ஒருவர், "எங்களை உள்ளே செல்ல விடுங்கள் என்று பொலீஸாரிடம் நாங்கள் மன்றாடினோம். அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் எம்மைப்பார்த்து, நூலகம் முற்றாக எரியவேண்டும்" என்று கத்தினார்" என்று கூறினார். கியூனுமெனின் விசாரணைகளின்போது, நூலகம் எரிக்கப்பட்ட அன்றிரவு, அதனைச் சூழவுள்ள வீதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்திக் காவலுக்கு நின்ற பொலீஸார் அப்பகுதியினூடாக நூலகத்தை நோக்கி செல்லும் அனைவரையும் தடுக்கும் நோக்குடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. நூலகத்தின் பிரதான வாயில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, அவற்றின் முன்னால் பழைய டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. ஊர்காவற்றுரையில் இருந்த இலங்கை கப்பற்படையின் தளபதியுடன் தொடர்புகொண்ட சிவஞானம் உடனடியாகச் செயற்பட்டு தமிழரின் கலாசார சின்னமான நூலகம் முற்றாக எரிந்து சாம்பலாவதைத் தடுக்க உதவுமாறு கெஞ்சினார். தயக்கத்துடன் கடற்படைத் தளபதி சில வீரர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் நூலகம் முற்றாக எரிக்கப்பட்டுவிட்டது. நூலகத்தின் முழுக் கட்டிடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தமிழரின் வரலாற்றுப் பெருமையான யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாக மாறிக்கொண்டிருந்தது.
    1 point
  32. 1 point
  33. தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டது. ஒரு எல்லைக்குட்பட்ட நம்மால், ஒரு எல்லைக்குள்தான் சிந்திக்கவும் செயலாற்றவும் முடியும். இதற்குள் நம்மை நாமே வல்லுனர்களென்று கருதிக் கொள்வதெல்லாம் நமது தனிப்பட்ட ஆர்வங்கள் சார்ந்தது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு என்ன நடைபெறப் போகின்றது? இதற்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? தாயுமானவர் கூறுவது போன்று, நாமொன்றும் அறியோம் பராபரமேயென்று கூறிவிட்டு, அமைதியடைந்துவிடவும் முடியாது. பதிலளிக்கவும் வேண்டும் ஆனால் அந்த பதிலில் நிதானமும் தெளிவுமிருக்க வேண்டும். இதுவரையில் என்ன நடந்தது என்பதில் தெளிவிருக்கும் போதுதான், இனிமேல் நடைபெறப் போகும் – அல்லது, நடைபெறலாமென்று நாம் எதிர்பாக்கும் விடயங்களின் சாத்தியப்பாட்டை ஆராய முடியும்? ஒரு விடயத்தை சிலரும், சிலவேளைகளில் பலரும் கூறுவதை காணமுடிகின்றது. அதாவது, இந்தியாவை கையாண்டிருக்கலாம், அமெரிக்காவை கையாண்டிருக்கலாம், அதற்கான வாய்ப்பு இப்போதுமுண்டு, ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அதனை சரியாக புரிந்துகொண்டு கையாள முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களிடம் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கினால், அவர்களால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் இது பேசுவது போன்று, கட்டுரையெழுதுவது போன்று, இலகுவான விடயங்கள் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்ற சிலர் ஆற்றல்லற்றவர்கள் அல்லர். குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கின்ற சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஆற்றலுண்டு. அவர்களுக்கு இந்த விடயத்தில் நீண்ட அனுபமுண்டு. அதே போன்று, தமிழரசு கட்சியில் சுமந்திரனும் ஆற்றலுள்ளவர்தான். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விடயங்களை அறிந்தவர்தான். அதனை மறுதலிக்க முடியாது. ஆனால் இவர்களால் என்ன செய்யமுடியும்? தேர்தல் அரசியலுக்காக சில விடயங்களை கூறவேண்டிய நிர்பந்தத்திலிருந்தாலும், இவர்கள் கூறிவரும் விடயங்கள் எதனையும், அடைய முடியாதென்பதை அவர்களும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசியல் கட்சியென்பதால் தங்களால் முடியாதென்றும் மக்களிடம் கூறமுடியாது. ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் நிலைமை திரிசங்கு நிலைதான். இன்றைய தமிழ் தேசிய அரசியலை ஆழமாக நோக்கினால், ஒரு விடயத்தை காணலாம். அதாவது, இன்று தமிழ் தேசியமென்பது சில நம்பிக்கைகளினால் மட்டுமே அசைகின்றது. முதல் நம்பிக்கை, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டும். இரண்டாவது, நம்பிக்கை, இந்தியாவிற்கு ஒரு தேவையேற்படும், அப்போது வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கித்தான் வரவேண்டும் ஏனெனில், இலங்கைக்குள் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை கையாள முடியாமல் இந்தியா தடுமாறுகின்றது. மூன்றாவது நம்பிக்கை, புலம்பெயர் சமூகம் பற்றியது. புலம்பெயர் சமூகம் பலமாக இருக்கின்றது, மேற்குலக நாடுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆற்றலோடிருக்கின்றது. அவர்களின் அழுத்தங்களால் ஏதோவொரு வகையில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். நான்காவது, சீன – அமெரிக்க உலகளாவிய போட்டியின் காரணமாக, இலங்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த பின்புலத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஈழத் தமிழர்கள் இருப்பதால், அமெரிக்காவின் நகர்வுகளுக்கு தமிழர்கள் தேவைப்படுவார்கள், இது தமிழர்களுக்கு சாதகமானது. மொத்தத்தின் இவற்றின் வாயிலாக ஈழத் தமிழர்களுக்கு விமோசனமுண்டு. யுத்தமில்லாத கடந்த 13 வருடகால தமிழ் தேசிய அரசியலானது இவ்வாறான நம்பிக்கைகளின் வழியாகத்தான், நகர்ந்திருக்கின்றது. இவைகள் அனைத்துமே சிலரிடமும், பலரிடமும் உள்ள எதிர்பார்ப்புக்கள் மட்டுமே. முதலாவது நம்பிக்கையை நோக்குவோம், சர்வதேச அழுத்தங்களின் வழியாக தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் கிடைக்கும். இதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எதிர்பார்க்கலாம், எங்களுடைய அறிவின் எல்லைக்குட்பட்டு, அனுமானிக்கலாம். முதலில் சர்வதேச அழுத்தங்கள் என்பதால் நாம் எதை விளங்கிக் கொள்கின்றோம்? இது தொடர்பில் முன்னைய பத்திகளிலும் சில விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். முதலில் சர்வதேச அழுத்தமென்பது, மேற்குலக அழுத்தம் மட்டுமே. அதாவது, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அத்துடன் ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களாகும். மனித உரிமையின் மீதான கரிசனையே, இந்த அழுத்தங்களின் அடிப்படையாகும். ஒரு வேளை நாம் மனித உரிமை தொடர்பில் பேசாவிட்டாலும் கூட, அவர்கள் பேசுவார்கள். ஏனெனில் அது அவர்களின் வெளிவிவகார அணுகுமுறையாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மேற்படி நாடுகள் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. இந்த நாடுகளின் அழுத்தங்கள் நேரடியாகவும், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச அழுத்தமென்பது, இதுதான். இதுதான் கடந்த 13 வருடங்களாக இடம்பெற்றுவரும் அழுத்தங்கள். இந்த அழுத்தங்களை தீவிரப்படுத்துங்கள் – என்னும் பெயரில்தான், ஆண்டுகள் தோறும், தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக குழுக்களும், புலம்பெயர் குழுக்களும் கடிதங்களை அனுப்பியிருந்தன, பயணங்களையும் மேற்கொண்டிருந்தன. எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்தனவா? இல்லை. ஏன் அவ்வாறு நடைபெறவில்லையென்பதற்கு நம்மில் சிலரிடமுள்ள இலகுவான பதில், அரசியல்வாதிகள் இதனை சரியாக கையாளவில்லை. அவர்களுக்கு விடயங்கள் விளங்கவில்லை. இதிலுள்ள அடிப்படையான விடயம் அரசியல்வாதிகளால் இந்த விடயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் எதனையும் செய்ய முடியாது. கடிதங்களை அனுப்பலாம், தேர்தல் அரசியலுக்காக, தங்களுடைய கடிதங்களிலுள்ள விடயங்களைத்தான் ஆணையாளர் உள்வாங்கியிருக்கின்றார் – என்று அறிக்கை வெளியிடலாம். இந்த அறிக்கைகள் தேர்தல் அரசியல் தொடர்பானது. அதே போன்று, இன்னொரு கட்சி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரன் தடுக்கின்றார், என்று அறிக்கை வெளியிடலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரனால் எவ்வாறு தடுக்க முடியும்? நிச்சயம் முடியாது. இவ்வாறான கதைகளெல்லாம் தேர்தலில் ஒருவரை தோற்கடிப்பதற்கு மற்றைய கட்சி கூறும் கதைகள். ஆனால் அறிவுள்ள ஒரு தரப்பு இவ்வாறான கதைகளை ஆராயமல் உச்சரிக்கக் கூடாது. இரண்டாவது இந்தியா தொடர்பானது. இந்தியா தொடர்பில் தெளிவான பார்வை, தமிழ் சூழலில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இங்கும் பிரச்சினை இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புக்கள்தான். இதில் அரசியல்வாதிகளிடம் பிரச்சினையில்லை. ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரிடம்தான் பிரச்சினையுண்டு. ஒரு தரப்பினர், இந்தியாவை ஈழத் தமிழர்களின் வேலையாள் போன்று நோக்குகின்றனர். தாங்கள் விரும்பும் ஒன்றை இந்தியா செய்ய வேண்டும். இரண்டாவது, தரப்பினர், இந்தியாவென்னும் ஒரு பிராந்திய சக்தியின் தேசிய பாதுகாப்பே, ஈழத் தமிழர்களில்தான் தங்கியிருக்கின்றது – என்றவாறு புனை கதைகளை எழுத முற்படுகின்றனர். இரண்டுமே அடிப்படையிலேயே தவறானது. இந்தியா, நாம் விரும்புவதையெல்லாம் செய்யாது என்பதை நாம் முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவின் கொள்கை, அன்றிலிருந்து இன்றுவரையில், ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது, இலங்கை ஒரு நட்புநாடு. அந்த நட்புநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதில் தலையீடு செய்யும் கடப்பாடு இந்தியாவிற்குண்டு. அன்றைய சூழலில் இந்திராகாந்தி கூறியது ஒன்றுதான் – அதாவது, ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியாவானது, அருகிலுள்ள இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனால் அதற்காக சிங்களவர்களின் குரல்வளையை நசிக்க வேண்டுமென்று, தமிழர்கள் எதிர்பார்த்தால், அதனை இந்தியா ஒரு போதும் செய்யாது. ஏனெனில் இந்திராகாந்தி, அதன் பின்னர், அவரது புதல்வர் ராஜீவ்காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குரல்வளையை பிடிக்கும் சிறிய அணுகுமுறையிருந்தது உண்மைதான். ஒரு புறம் ஈழ ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்த இந்தியா, பின்னர் அதனையே ஒரு காரணமாகக் கொண்டு இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்தியாவின் அன்றைய அணுகுமுறை இராணுவரீதியானது. ஆனாலும் இந்தியா ஈழத் தமிழர்களின் பெயரில் தலையீட்டை முன்னெடுத்த போதிலும் கூட, அதன் மூலம் இந்தியாவிற்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இறுதியில் விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்தோடு, இந்தியா வெளியேறியது. மூன்றாவது நம்பிக்கை புலம்பெயர் சமூகம் தொடர்பானது. தாயக தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக புலம்பெயர் சமூகம் வளர்சியடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். அதனை மறுதலிக்க முடியாது ஆனால் இது தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. புலம்பெயர் சமூகம் தலையீடு செய்வதால்தான் மேற்குலம், இலங்கை விடயத்தில் சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக கருதுவது தவறானது. அண்மையில் கனடிய வெளிவிவகார விடயங்களில் நிபுனத்துவம் வாய்ந்த பேராசிரியர் கிம் நொஷலை, எனது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கான நேர்காணல் செய்திருந்தேன். இதன்போது அவர் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் அடிப்படையானது. மேலும் கனடாவின் அணுகுமுறை தனியானது அல்ல, அதன் நேச நாடுகளின் அணுகுமுறையின் அங்கமாகும். ஒருவேளை, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கூட, கனடாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. மேலும் கனடாவில் இடம்பெறும் புலம்பெயர் செயற்பாடுகளை உள்நாட்டு விவகாரமாக நோக்க வேண்டும். உதாரணமாக இனப்படுகொலை வாரத்தை அனுமதிப்பது. இவைகள் உள்ளுர் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளேயன்றி, கனடாவின் வெளிவிவகார கொள்கையில் தாக்கம் செலுத்தும் விடயங்களல்ல. எனவே விடயங்களை நோக்கினால், இவ்வாறான எதிர்பார்புக்களும், அந்த எதிர்பார்ப்புக்கள் மீதான எதிர்வு கூறல்களும் முற்றிலும் சரியானதல்ல. இவற்றுக்கான வாய்ப்புக்கள் என்பது, பெரும்பாலும் அதிஸ்டத்தை நம்புவது போன்றது. ஒரு இனத்தின் அரசியல் போக்கை இவ்வாறு அணுகுவது சரியானதா? கடந்த காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள் எவையுமே இவ்வாறான விடயங்கள் மீது நம்பிக்கை வைப்பதை சந்தேகத்துடன் நோக்குமாறுதான் வற்புறுத்துகின்றது. முதலில் நாம் ஏதாவதொரு வகையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஏதாவதொரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது. அவ்வாறில்லாவிட்டால், நமது நிலைமையானது, பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை என்பதாகிவிடும். கடந்த 13 வருடங்களாக, நமது காலம், பல்லக்கு பேச்சுக்களில்தான் கழிந்திருக்கின்றது. இது சுகமானது ஆனால் மக்களுக்கு பயனற்றது. http://www.samakalam.com/தமிழரின்-அரசியலை-வழிநடத்/
    1 point
  34. பார்த்த படங்களுள் மிகவும் சோகமான படம் தியேட்டரில் அழாதவரே இல்லை என்று சொல்லலாம். துலாபாரம் பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    1 point
  35. காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்......! 😍
    1 point
  36. அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்...... கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான்
    1 point
  37. இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பரவாயில்லை. இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான். எனது மனைவி 95இல் சாரதி அனுமதிபத்திரம் எடுக்கும் வரை காரில் ஏறினால் தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருப்பா. எப்ப சாரதி அனுமதிபத்திரம் எடுத்தாவோ அப்ப இருந்து இப்போது வரை எப்படி எப்படி எல்லாம் ஓட வேண்டுமென்று பாடமெடுத்தபடியே இருப்பா. முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.
    1 point
  38. வணக்கம், யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா. ( தமிழ் சிறி) திரும்பும் வரலாறு! (Justin) காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை (goshan_che) மெய்தீண்டாக் காதல்........! ( suvy) அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்? (விசுகு) பைத்தியம் - U mad bro - குறுங்கதை (goshan_che) படம் கூறும் கதைகள் (பிரபா சிதம்பரநாதன்) தையல்கடை. ( suvy) விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.- (தமிழ் சிறி) மனிதா உன்னைத்தான்! ( karu) தமிழன்னை அருட்புகழ் ( karu) நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள் ( nilmini) மடகஸ்கார் பயண அனுபவம் ( nilmini) எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன் (uthayakumar) நடுவீதி... (விசுகு) ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். ( தமிழ் சிறி) செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..! (நியாயத்தை கதைப்போம்) புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 ( குமாரசாமி) எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் ( நிழலி) புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2 (இணையவன்) மலருக்கு தென்றல் பகையானால்.........! ( suvy) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
    1 point
  39. மகிந்தவுக்கும் இப்போ ஆதரவு இல்லை என்பதை பார்த்தோம். ஏன் அங்கு அமெரிக்கா அங்கு போகவில்லை என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
    1 point
  40. 1 point
  41. மலர்.................(2). சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய் பார்த்து தேவையான பரிசோதனைகள் எல்லாம் கூட செய்து விட்டார்கள். எல்லா பதில்களும் அவர்கள் இருவர் மீதும் உடலளவில் எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். இப்போதெல்லாம் சங்கருக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகத் தெரிகின்றது. தனக்குப் பின் திருமணம் செய்தவர்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளுடன் வரும்போது ஏக்கமாய் இருக்கும். அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. தாயையும் மகனையும் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கும். இவ்வளவுகாலமும் இல்லாத பிள்ளை இனி கிடைக்குமா என்னும் விரக்தியும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கு. நிர்மலாவின் மூத்த தமக்கைக்கு நான்கு பிள்ளைகள். அவளுக்கு பின் திருமணம் செய்த இரண்டாவது அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். தனக்கும் எந்தக் குறையும் இல்லை என்பதை தானே நன்றாக உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த சமூகம் பெண்கள் மீதுதானே குறைகளைக் கூறி வசை பாடுகிறது. ஒருபோதும் ஆண்களை சந்தேகிக்கிறதில்லையே. ஏதாவது உறவினர்களின் விசேடங்களுக்கு இவர்கள் போனாலும் அவர்களின் மங்களமான எந்த நிகழ்வுகளிலும் நிர்மலாவை தவிர்த்து விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் அவளாகவே அது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நிர்மலா அழுக்குத் துணிகளை அலசிப் பிழிந்து அவற்றை வாளியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக் கொல்லையில் இருந்த கொடியில் விரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அதன் பக்கத்தில் இருந்த அறையில் இருந்து இராசம்மாவும் மகன் சங்கரும் கதைப்பது கேட்கிறது. அவர்களது பேச்சில் தனது பெயரும் அடிபடுவதால் அவளும் அப்படியே நின்று கேட்கிறாள்......! --- இராசம்மா மகனிடம் தம்பி நான் சொன்னதை யோசிச்சனியோடா..... நீ என்ன சொல்கிறாய் என்று வினவ --- அது அம்மா வந்து.....நிர்மலா பாவம் அம்மா, இதெல்லாம் தேவையா என்றுதான் யோசிக்கிறேன்.....! --- நீ ஒன்றும் அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். நான் நல்ல நேரம் பார்த்து அவளிடம் பக்குவமாய் எடுத்து சொல்லுறன். அதுக்கென்ன அவளும் எங்களுடன் கூடவே இருக்கட்டும்......என்ன ஊர் உலகத்தில இல்லாததையா நீ புதுசா செய்யப் போகிறாய்......உங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் நான் ஏன் இப்படி சொல்லப் போறன்.......நானும் ஒரு பொம்பிளைதானே.....! --- அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் பார்த்து விட்டு செய்யலாம்தானே அம்மா. --- அது சரிதான்......ஆனால் நான் இப்ப பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். அப்பாவழி உறவும் கூட....பொம்பிளையும் நல்ல லட்ஷணமாய் இருக்கிறா. அதோட அவையிலும் அவசரப் படுகினம். இதை விட்டால் பிறகு எப்ப இப்படி அமையுமோ தெரியாது.அதுதாண்டா மோனை.....! --- சரியம்மா என்னவோ செய்யுங்கோ. பட்டும் படாமலும் சொல்கிறான். --- அப்ப நான் அவையளிட்ட சரியென்று சொல்லுறன்.நீ ஒன்றுக்கும் யோசியாத, வாறமாதம் நல்லநாள் இருக்கெண்டு சொன்னவை, கொஞ்ச ஆட்களுடன் சென்று கோயிலில தாலி கட்டி கூட்டிக் கொண்டு வரலாம். எல்லா அலுவலும் அவையளே பாக்கினம்,நாங்கள் செலவில் பாதி குடுத்தால் போதும். --- இதால பிரச்சினை ஒன்றும் வராதுதானே அம்மா. --- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். இவையனைத்தையும் எதிர்பாராமல் வெளியில் நின்று கேட்ட நிர்மலாவுக்கு வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தது போல் இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு சங்கரும் சரியென்று சொல்லுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அங்கிருந்து அழுதுவிட்டு பேசாமல் துணிகளை கொடியில் விரித்து விட்டு முத்தத்துக்கு வருகிறாள். அவள் பின் பக்கத்தில் இருந்து வெறும் வாளியுடன் வருவதைப் பார்த்த இராசம்மாவுக்கு தாங்கள் கதைத்ததை இவள் கேட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. கேட்டிருந்தால் அதுவும் ஒன்றுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் நிர்மலாவின் அழுது சிவந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளே போகிறாள்.......! மலரும்........! 🌷
    1 point
  42. அருமையான வசனங்கள், நாங்க ரெடி நீங்க ரெடியா????
    1 point
  43. அது சரி 13 ஐ நிறைவேற்றச் சொல்லி இந்தியாவுக்கு எழுதின கடிதம் என்னாச்சு?பதில் வந்ததா?சுதந்திரத்தினத்திற்கிடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று சொன்ன ரணிலுடன் நடத்திய பேச்சுவார்ததை என்னாச்சு. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாதவர்கள் தீர்வுக்கு விரோதமானவர்கள் என்று அரசியல் கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் எழுதினார்களே என்னாச்சு?கொங்சக் காலமாக சுமத்திரனின் அறிக்கைகள் ஒன்றையும் காணவில்லை. அவரும் சம்பந்தர் போல தூக்கத்திற்குப் போய் விட்டாரோ?
    1 point
  44. தமிழரின் பொக்கிஷத்தை எரித்த சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாணத்தில் அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு வன்னியில் மறைந்திருந்த நாட்களிலும் கூட, இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றார் பிரபாகரன். ஆனால், அவரும், மீதமாக இருந்த டெலோ தலைவர்களும் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தனர். டெலோ இயக்கம் 1981 ஆம் ஆண்டு சித்திரை 26 ஆம் திகதி தனது தலைவர்களில் ஒருவரான ஜெகன் எனப்படும் கணேசநாதன் ஜெகநாதனை காட்டிக்கொடுத்தல் ஒன்றின் மூலம் பொலீஸாரிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தமிழ் மக்களின் மனங்களில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எதிர்பாத்திருந்த உமா மகேஸ்வரனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சுந்தரம் எனப்படும் சிவஞானமூர்த்தியுடன் இணைந்து மாவட்ட அபிவிருந்திச்சபைகளுக்கான தேர்தல்களைக் குழப்புவதென்று உமா முடிவெடுத்தார். அதன்படி, வைகாசி 24 ஆம் திகதி, காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஏ. தியகாராஜா புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏ. தியகாராஜா தொண்டைமானும், 1978 ஆம் ஆண்டிலிருந்து ஜெயாருக்கு ஆலோசகராகக் கடமையாற்றி வந்தவரான ஏ.ஜே. வில்சனும் வட மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்று ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். "தமிழர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு ஒருவரைத் தெரிவு செய்யட்டும்" என்று வில்சன் ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், ஜெயாரோ வடக்கில் தனது விசுவாசிகளாக இருந்த கணேசலிங்கம், புலேந்திரன் போன்றோரின் ஆலோசனைகளையே நடைமுறைப்படுத்த விரும்பினார். 10 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் குறைந்தது இரு உறுப்பினர்களையாவது வெல்லவைப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தன்னுடன் இருப்பதாகக் காட்டலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். இதனைச் செய்வதற்கு தேர்தலில் எந்தவகையான முறைகேடுகளையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஏ.ஜெயரட்ணம் வில்சன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும், தேர்தல்களை நடத்துவதற்கும் உதவியாக தனது இரு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்தியூவையும், காமிணி திசாநாயக்கவையும் ஜெயவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். முதலில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிறில் மத்தியூ, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில் தனது காடையர்களை ஏற்றிக்கொண்டு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் தங்கிக்கொண்டார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற காமிணி திசாநாயக்க யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கிக்கொண்டார். வில்சனின் கூற்றுப்படி, காமிணி யாழ்ப்பாணத்திற்குப் போகும், அவரை வழியனுப்பி வைத்த ஜெயார், "சிறில் மத்தியூ மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சிறில் மத்தியூ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றில் ஈடுபடப்போகிறார் என்பதை ஜெயார் அறிந்திருந்தார் என்பது உறுதியாகிறது. சிங்கள மிருகங்கள் - ஜெயவர்த்தன, சிறில் மத்தியூ இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்ப் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வந்தது. அக்கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் வைகாசி 31 ஆம் திகதி, காங்கேசந்துறை வீதியில், நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ் நகர மேயர் தலைமை தாங்கியிருந்தார். பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்க வந்திருந்த நான்கு பொலீஸார், கூட்டத்தின் பின்புறமாக அடுக்கப்பட்டிருந்த வாங்குகளில் அமர்ந்திருந்து கூட்டத்தை அவதானித்தானித்துக்கொண்டு இருந்தனர். பொலீஸாரின் பின்புறமாக வந்த புளொட் அமைப்பின் ஆயுததாரிகள் பொலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கொன்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகிய இரு பொலீஸ்காரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனைய இரு பொலீஸ்காரர்களான உஸ்மானும், குலசிங்கவும் காயப்பட்டனர். இச்சூட்டுச் சம்பவம் இன்னொரு வன்முறையினைத் தூண்டிவிட்டது. வெற்றிவேல் யோகேஸ்வரன் இச்சம்பவம் நடந்து சரியாக 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்த பொலீஸார், கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட தமது சகாக்களை எடுத்துச்சென்றதுடன், அவ்வாறு செல்லுமுன் நாச்சிமார் கோயிலுக்கும், அருகிலிருந்த சில வீடுகளுக்கும், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்களுக்கும் தீவைத்துவிட்டுச் சென்றனர். மேலும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இறுதி போக்குவரத்து பஸ்ஸை மறித்து, பயணிகளை அடித்து விரட்டிவிட்டு அதிலேறி யாழ்நகர் நோக்கிப் பயணித்தது ஒரு பொலீஸ் குழு. யாழ்நகரை அடைந்ததும், யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் இயங்கிவந்த பல வியாபார நிலையங்களை வரிசையாகக் கொழுத்திக்கொண்டே சென்றனர் பொலீஸார். பின்னர், யாழ்நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் பஸ்ஸை நிறுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகேஸ்வரனின் ஜீப் வண்டி, அவரது நண்பரின் கார் மற்றும் யோகேஸ்வரனின் வீடு ஆகியவற்றிற்கும் தீமூட்டினர். தாக்குதல் நடந்தவேளை யோகேஸ்வரனும், மனைவியும் வீட்டில் இருந்தபோதும், சமயோசிதமாக தமது வீட்டின்பின்புறத்தால் ஏறிக் குதித்து அயலவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்ததன் மூலம் உயிர்தப்பிக்கொண்டனர். யோகேஸ்வரனின் வீட்டிற்குத் தீமூட்டிய பொலீஸார் பின்னர் அங்கிருந்து, பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் நோக்கிச் சென்று அதற்கும் தீமூட்டினர். பொலீஸாரின் இந்த வன்முறைகள் நடந்தேறி சரியாக ஒருவாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட யோகேஸ்வரன், "என்னைக் கொல்வதற்காகவே அன்றிரவு பொலீஸார் எனது வீட்டிற்குத் தீவைத்தனர். நான் உயிருடன் இருப்பது அதிஷ்ட்டமே" என்று கூறினார். யோகேஸ்வரனின் பேச்சினை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறில் மத்தியூ, "யோகேஸ்வரனது வீட்டில், அவரும் பயங்கரவாதிகளும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறித்து பொலீஸாருக்குத் தகவல் வந்ததனாலேயே பொலீஸார் அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது" என்று கூறினார். மேலும், "யோகேஸ்வரனின் வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வீடு தீப்பற்றிக்கொண்டது" என்றும் பொலீஸாரின் அக்கிரமத்தை நியாயப்படுத்தினார் சிறில் மத்தியூ. கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், நீதிக்கான அமைப்பு இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் யோகேஸ்வரனைக் கொல்லும் நோக்கிலேயே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குத் தீவைத்தனர் என்று கூறியிருந்தது. "பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உயிர் தப்பியது அதிஷ்ட்டமே, ஏனென்றால், அவரைக் கொல்லும் ஒரே நோக்கத்திற்காகவே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குச் சென்றனர்" என்று அது கூறியிருந்தது. பொலீஸாரின் வெறியாட்டம் மறுநாளான, 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதியும் தொடர்ந்தது. அந்தச் சோகமான இரவில், தமிழர்களின் பெருமையான, விலைமதிப்பற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த நிசப்தமான இரவில், யாழ்ப்பாணத்தின் வானத்தை மறைத்துக்கொண்டு மேலெழுந்த கரிய புகையினை, உதவுவார் எவருமின்றி ஆதரவற்ற தமிழர்கள், செய்வதறியாது பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தமது பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்படுவது தெரிந்து உணர்வுமேலீட்டால் ஓடிச்சென்று அணைத்துவிடலாம் என்று எண்ணி, வீதிகளில் இறங்கி நூலகம் நோக்கிச் சென்ற தமிழர்களை நூலப்பகுதியில் நின்றிருந்த பொலீஸார் அடித்து விரட்டினர். பல தமிழர்கள் தம் கண்முன்னே தமது சொத்து எரிக்கப்படுவது கண்டு ஓவென்று அழ, மீதிப்பேர் அந்த அக்கிரமத்தைப் பார்க்க விரும்பாது கண்களை இறுக மூடிக்கொண்டனர். எரிக்கப்பட்டுக் கிடக்கும் எமது பொக்கிஷம் - யாழ்ப்பாண நூலகம் 1981 ஆனால், ஒரு இளைஞன் மட்டும் இதனை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உறுதிபூண்டான். வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகளை அவன் ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டான். கண்கள் வீங்கிச் செந்நிறமாக, முகத் தசைகள் இறுகத்தொடங்க அவனது இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. இதற்குப் பழிவாங்குவேன் என்று அவன் சபதம் பூண்டான். ஜெயவர்த்தனவின் காடையர்கள் எனது பணியை இலகுவாக்கி விட்டார்கள் என்று அவனது வாய் முணுமுணுத்துக்கொண்டது. உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பத்தை இந்த நூலக எரிப்பு அவர்களுக்குக் கொடுத்தது. அவர்கள் மனங்களில் என்றும் அழியாத வடுவை அது ஏற்படுத்தியது. இந்த சதிகார நாசச் செயலை எந்தவொரு தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, அவனே பிரபாகரன். எரிந்துகொண்டிருந்த தமிழரின் பொக்கிஷத்திற்கு வெகு அருகிலேயே அவன் அப்போது ஒளிந்திருந்தான். அவனது மனம் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
    1 point
  45. இங்கு வரும்போதே நரை விழுந்து 30 களில் முழு மொட்டை இதுக்குள்ளை 😀
    1 point
  46. நீர்வேலி வங்கிக்கொள்ளை கடுமையான பணத்தட்டுப்பாடினை எதிர்நோக்கிய டெலோ அமைப்பு, தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தியான சூழ்நிலையினைப் பாவித்து, குறும்பசிட்டியில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான நகை அடைவுபிடிக்கும் நிலையம் ஒன்றினை 1981 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். பின்னர் நடைபெறவிருந்த வன்முறைகளுக்கு இது முன்னோடியாக அமைந்திருந்தது. தனது பணத்தினையும், நகைகளையும் கொள்ளையடிக்க வந்திருந்த குழுவைக் கண்டதும் உரத்துக் கூக்குரலிட்ட உறிமையாளர், அயலவர்களின் உதவியுடன் கொள்ளையிட வந்த குழுவினரைக் கலைத்துவிட்டார். ஆனால், அக்குழு ஒரு தமிழ்ப் போராளி அமைப்பென்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. தப்பியோடிய கொள்ளைக் குழு தம்மைத் துரத்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஐய்யாத்துரை, குலேந்திரன் ஆகிய இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பங்குனி 16 ஆம் திகதி, டெலோ அமைப்புடன் சேர்ந்து பிரபாகரன் தனது முதலவாது ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளியாக மாறியிருந்த முன்னாள் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவரான செட்டி தனபாலசிங்கத்தை யாழ்ப்பாண நகருக்குச் சற்று வெளியே இருந்த கல்வியங்காடு பகுதியில் சைக்கிளில் சென்ற பிரபாகரனும், குட்டிமணியும் சுட்டுக் கொன்றனர். வீதியில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த செட்டி, பிரபாகரனும், குட்டிமணியும் வருவதைக் கவனித்திருக்கவில்லை. செட்டி சுதாரித்து, இடுப்பில் செருகியிருந்த தனது கைத்துப்பாக்கியை எடுக்கும் முன்னரே நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 1981 ஆம் ஆண்டு, பங்குனி 25 ஆம் திகதி, இலங்கையில் அதுவரை நடைபெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் மிகவும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமான நீர்வேலி வங்கிக்கொள்ளையினை குட்டிமணி நடத்தியிருந்தார். நீர்வேலிக் கிளையில் தினமும் சேரும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தலைமைக் கிளைக்குக் கொண்டு சேர்க்கும் மக்கள் வங்கியின் செயற்பாட்டினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த குட்டிமணி இக்கொள்ளையினை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டார். நீர்வேலிச் சந்திக்கு அருகில், ஆளரவமற்ற பகுதியில், இராணுவச் சீருடையில் பதுங்கியிருந்த குட்டிமணியும் அவரது தோழர்களும் யாழ்ப்பாணக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டி வரும்வரை காத்திருந்தனர். பணத்தைக் காவிவந்த வாகனம் தமக்கருகில் வந்தவுடன், குட்டிமணியின் தோழர்களில் ஒருவர் வீதிக்குக் குறுக்கே, வாகனத்தின் முன்னால்ப் பாய்ந்து, "நிறுத்துங்கள்" என்று சிங்களத்தில் உரக்கக் கூவியிருக்கிறார். தம் முன்னால் நிற்பது இராணுவ வீரர்கள்தான் என்று எண்ணிய வாகனத்திலிருந்த பொலீஸார், வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு கீழிறங்கும்போது, அவர்கள் இருவரையும் குட்டிமணியும் தோழர்களும் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பொலீஸ்காரர்களின் பெயர்கள் முதுபண்டா மற்றும் ஆரியரட்ண என்பதுடன், வாகனத்தில் நேர்த்தியாக பணம் அடுக்கப்பட்டிருந்த ஐந்து சூட்கேஸுகளுடன் குட்டிமணியும், தோழர்களும் தப்பிச் சென்றனர். அன்று கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு 79 லட்சம் ரூபாய்கள். அரசாங்கம் அதிர்ந்து போனது. ஜெயவர்த்தன கலங்கிப் போனார். வீரதுங்கவின் ராணுவ நடவடிக்கையினால் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் செயலிழந்து போய்விட்டன என்று அவர் கட்டிவந்த கனவுக் கோட்டை கலைந்துபோனது. தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெயார், கொள்ளையிட்டவர்களை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறியதுடன், கொள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டார். மேலும், கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோரு பத்து லட்சம் ரூபாய்கள் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சித்திரை 5 ஆம் திகதி, பருத்தித்துறை கிழக்கில் அமைந்திருந்த கரையோரக் கிராமமான மணற்காடு பகுதியில் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல படகிற்காகக் காத்திருந்தவேளை குட்டிமணி, தங்கத்துரை, செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகிய மூவரும் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பில் வழக்கைச் சந்தித்த தங்கத்துரையுடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. என்னிடம் பேசிய தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "எங்களை சிறிசபாரட்ணமே கடற்கரையில் இறக்கிவிட்டார். படகு இரவு 11 மணிக்கு வரும் என்று எங்களிடம் அவர் கூறினார். ஆனால், அது வரவில்லை. பின்னர், துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியபடி வந்துகொண்டிருந்த பொலீஸ்காரரை நாங்கள் கண்டோம். "சரணடையுங்கள்" என்று அவர்கள் உரக்கக் கத்தினார்கள். தப்பியோடுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தோம், அப்போதுதான் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எம்மால் தப்பிச்செல்ல முடியவில்லை. நாம் கைகளை உயர்த்தியபடி சரணடைய முயலும்போது, குட்டிமணி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுக்க முனைந்தார். தன்னைத்தானே சுட்டுக்கொல்லவே அவர் முயன்றார். ஆனால், பொலீஸார் அவரை மடக்கிப் பிடித்துவிட்டனர். கைகலப்பில் துப்பாக்கி வெடித்து, சன்னம் அவரது காதினைத் துளைத்துச் சென்றது. எம்மைக் கைது செய்து, விலங்கிட்டு, சங்கிலிகளால் பிணைத்து வைத்தார்கள். பின்னர் கொழும்பிற்கு விமானத்தின்மூலம் கொண்டுவரப்பட்டு பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம்". "உங்களைப் பற்றி யாராவது பொலீஸாருக்கு அறிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் அவரைக் கேட்டேன். "நாமும் அந்த முடிவிற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். தனது சந்தேகத்திற்கான காரணங்களை தங்கத்துரை பின்வருமாறு கூறினார். அவர்களைக் கைதுசெய்ய வந்த பொலீஸ் பரிசோதகரும் அவரது படையும் தமது ஜீப் வண்டியை தொலைவில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவே சத்தமின்றி அவர்களை நோக்கி முன்னகர்ந்து வந்திருக்கின்றனர். ஆறுபேர் அடங்கிய அந்த பொலீஸ் குழுவினர் தாமிருந்த பகுதியை வட்டமாகச் சுற்றிவளைத்து முன்னேறியது தாம் தப்பிச்செல்வதைத் தடுத்துவிடவே என்று அவர்களுக்குப் புரிந்தது. பொலீஸார் தம்முடன் கைவிலங்குகளையும் எடுத்து வந்திருந்தது, குட்டிமணி குழுவினரைக் கைதுசெய்யும் திட்டத்துடனேயே என்பதைப் புலப்படுத்தியிருந்தது. மேலும், சிறி சபாரட்ணம் கூறியபடி இரவு 11 மணிக்கு படகு வராது போனது கூட, நேரம் வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்டதனால்த்தான் என்றும் அவர்கள் சந்தேகித்திருந்தனர். "நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டேன். அவர் பதில் கூறவில்லை. புன்னைகையே பதிலாக வந்தது. "நாங்கள் வெளியில் வந்ததன் பின்னர் நீங்களே அறிந்துகொள்வீர்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். "அப்படியானால், படகோட்டியைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று மீண்டும் அவரைக் கேட்டேன். அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. "படகினை ஒழுங்கு செய்தது யார்?" என்று நான் கேட்டேன். "பிரபாகரன்" என்று அவர் பதிலளித்தார். "அவரைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் மீண்டும் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசிய அவர், "நான் எனது சந்தேகங்களை ஒரு பத்திரிக்கையாளரிடம் சொல்ல முடியாது. நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி நானே விசாரிப்பேன்" என்று அவர் கூறினார். ஆனால், அவரால் வெளியில் வரமுடியாமலேயே போய்விட்டது. அவரும், குட்டிமணியும், தேவனும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நேர்காணல் நடந்து சரியாக ஒருவருடத்தின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாம் நாளன்று அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுப் போனார்கள். நீர்வேலி வங்கியைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றினை முடுக்கிவிட்டிருந்தனர். அதனைச் செய்தது டெலோ அமைப்பினரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்த தேடுதல் வேட்டை மீண்டும் ஒருமுறை பிரபாகரனின் சமயோசிதத்தை வெளிக்காட்டியிருந்தது. பொலீஸாரின் ஒவ்வொரு அசைவினையும் முன்னமே கணிப்பிட்டு , அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். தனது ஆயுதங்களை உடனடியாக புதிய மறைவிடங்களுக்கு அவர் மற்றிக்கொண்டார். பிரபாகரனின் பழைய மறைவிடங்களைப் பொலீஸார் சோதனையிட்டபோது எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் தேடுதல் நடவடிக்கை பிரபாகரனைத் தொடர்ந்தும் ஓட்டத்தில் விட்டிருந்தது. இதனால் வன்னிக்குத் தப்பியோடிய பிரபாகரன், காட்டில் வாழ்ந்து வந்ததுடன் முட்புதர்களுக்குள் தூங்கியும், உணவின்றியும் அவதிப்பட்டார். குட்டிமணியும், ஜெகனும் 1982 ஆம் ஆண்டில்
    1 point
  47. அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல் நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர், நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள். எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள். அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம். தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது.
    1 point
  48. ரதியை காணவில்லை எங்கே என்று கேட்டிருந்தேன். வந்துவிட்டீர்கள். நானும் பூச்சி மாதிரி என்னவோ இருக்கு என்று யோசிச்சினான்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.