Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தபுர முற்றுகையில் நடந்தவைகள் என்ன? இன்று மூன்றாம் ஆண்டு நிறைவு!(படங்கள் இணைப்பு)

Featured Replies

April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது -

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு எரிகுண்டுகளை வீசியதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.

2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்தபுரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் 1000 விடுதலைப் புலிகள் 4,000 இராணுவத்தினரை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். இத் தாக்குதலானது உலகில் எங்கும் இதுவரை எந்த ஒரு விடுதலை அமைப்பும் மேற்கொள்ளாத கடும் தாக்குதலாக அமைந்தது. விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

ஒரு சிறிய இடத்தை பெரும் இராணுவப்படையால் கைப்பற்ற முடியாத நிலை தோன்றியது. களத்தில் பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகியோர் நிற்பதை இராணுவத்தினர் புலிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அங்கே நின்றால் இராணுவத்தால் 1 அங்குலம் கூட முன்னேற முடியாது என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். இதேவேளை இராணுவத்தினர் திடீரென 1 கிலேமீட்டார் பின் நோக்கி நகர்த்தப்பட்டனர். இது ஏன் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் சற்று நேரத்தில் அப்பகுதிக்கு, நச்சுவாயுக் குண்டுகளும், எரிக்கும் பொஸ்பரஸ் குண்டுகளும் வந்து விழுந்தது.

புலிகளுடன் போரிட்டு வெல்லமுடியாத இராணுவம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை அவ்விடத்துக்கு ஏவியது. இதனால் பல போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். நச்சுவாயுக் குண்டுகளையும், ஆட்களை மயங்கவைக்கும் குண்டுகளையும் பாவித்து இராணுவம் செய்த அட்டூழியங்கள் பல. இவ்வாறு ஏவப்பட்ட நச்சுக்குண்டால் பிரிகேடியர் தீபன் அவர்கள் உருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த இராணுவம் அவரை உயிருடன் பிடிக்க, தற்காலிக சிகிச்சை கூடக் கொடுத்துள்ளது.

deepan.jpg

வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.

அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப்படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள். மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள்.இன்னிலையில் ஆனந்த புரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூள்நிலை இன்னிலையில் காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை அங்கங்கு ஸ்ரீலங்காப்படையினர் ஊடுருவிவிட்டார்கள் தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார் அன்று செல்லும் வளியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து அதில் தாக்குதல் நடந்தேறுகின்றது. அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார் .தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.

தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனஅழிப்பு போரினை நடத்தினார்கள்.இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள் ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்னூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள் அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள் என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள் இதில்தான் எதியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள் அதாவது சிறு சிறு அணிகளாக அந்தபோராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள்.ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும் வீரச்சாவினை அடைகின்றார்கள் அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.

ananthapura-vedivellikal1-1024x992.jpg

அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எதிரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள் இதில் இன்னும் ஒரு நிகழ்வு நடந்தேறுகின்றது இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை ஸ்ரீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள்.இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.

இது இவ்வாறு ஆனந்தபுரம் மண் ஸ்ரீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது .இவ்வாறான நிலையில்தான் படையினர்; பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள்.தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்லாமல் எத்தனையோ பெயர்குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன.

வடபோர் முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை அந்த சிறப்பு மிக்கதளபதியின் வீரச்சாவு நிகழ்வு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது அந்தநினைவூகளை என்றும் மறக்கமுடியாது.

brigadier-thurga-vidusa.png

http://www.saritham.com/?p=55885

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எங்கட சனத்தில் பலர் சிங்கள நாட்டு தேநீர் குடித்து சிறிலங்கன் விமான நிலையத்தில் பயணித்து சிங்கள நாட்டு தேசிய கொடியுடன் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருகிறார்களே. எப்படி இவர்களால் நாங்கள் சிறிலங்கன் என்று சொல்லத் தோன்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் விடுதலையின் பால் பற்றுறுதி கொண்டு.. இறுதி வரை தாய் மண்ணின் மடியிலேயே விடிவை நோக்கி பயணிப்பதையே.. வாழ்வாக்கி வாழ்ந்து.. ஆதிக்க அதிகார சக்திகளினதும்.. எதிரிகளினதும்.. துரோகிகளினதும்.. கபடனத்தனத்தால்.. தடைசெய்யப்பட்ட நச்சுக் குண்டுகளுக்கு தம்மை இரையாக்கி வித்தாகி வீழ்ந்த.. எம் மாவீரச் செல்வங்களுக்கு வீர வணக்கமும்.. நினைவஞ்சலியும்.

இலட்சியப் பற்றுள்ள உண்மை வீரனின்... செயல் மட்டுமல்ல.. அவன் வித்துடலும்.. வீரம் விளைவிக்கும்.. இலட்சிய இலக்கை அடைய.. வைக்கும்..!

இன்னும் எங்கட சனத்தில் பலர் சிங்கள நாட்டு தேநீர் குடித்து சிறிலங்கன் விமான நிலையத்தில் பயணித்து சிங்கள நாட்டு தேசிய கொடியுடன் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருகிறார்களே. எப்படி இவர்களால் நாங்கள் சிறிலங்கன் என்று சொல்லத் தோன்றுகிறது

G tV பார்க்கவும்........

வீரத்தளபதிகள் மற்றும் போராளிகளுக்கும் ஆழ்ந்த வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!!உங்கள் தியாகங்கள் வீண்போகாது,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் விடுதலையின் பால் பற்றுறுதி கொண்டு.. இறுதி வரை தாய் மண்ணின் மடியிலேயே விடிவை நோக்கி பயணிப்பதையே.. வாழ்வாக்கி வாழ்ந்து.. ஆதிக்க அதிகார சக்திகளினதும்.. எதிரிகளினதும்.. துரோகிகளினதும்.. கபடனத்தனத்தால்.. தடைசெய்யப்பட்ட நச்சுக் குண்டுகளுக்கு தம்மை இரையாக்கி வித்தாகி வீழ்ந்த.. எம் மாவீரச் செல்வங்களுக்கு வீர வணக்கமும்.. நினைவஞ்சலியும்.

548309_348667071852838_100001286453235_1019867_1257679456_n.jpg

(மூன்று நாட்கள் தொடர்ந்த பெரும் சமரில் விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதிகள், கட்டளைதளபதிகள், தாக்குதல் தளபதிகள், மகளிர் படையணி தளபதிகள் என 700 இற்கும் மேற்பட்ட போராளிகளின் இரத்தத்தில் தமிழர் தேசம் சிவந்த நாட்கள் அவை.. )

வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம...

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ஆறாத்துயரில் வீழ்ந்தநாள்..! மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மண்ணின், விடுதலைக்காக இறுதிவரை போராடி.... தம் இன்னுயிரை கொடுத்த வீர வேங்கைககளுக்கு, வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக விடுதலைக்காய் தம்முயிரை ஈந்த அத்தனை மாவீரர்ச் செல்வங்களுக்கும் வீரவணக்கங்கள். :( :(

தாயக விடுதலைக்காய் தம்முயிரை ஈந்த அத்தனை மாவீரர்ச் செல்வங்களுக்கும் வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போராளியின் வீரத்திற்கு புகழ்; வெற்றி அல்ல கொடுப்பது, சாவிடம் தன்னைக் கொடுத்து போராடும் உறுதி அது ஒன்றுதான் காரணமாவது.

எத்தனை ஆயிரம் துரோகிகளின் கறைகளாலும் ஒரு உண்மையான வீரனின் புகழ் மாசுபடுத்த முடியாதது!

எமது எதிர்காலத்திற்கு ஈழத்தின் தோல்வி ஒரு பெரிய கறையாகலாம். ஆனாலும் இந்த வீரங்கள் காலத்தையும் வென்று வாழும் எம் இனத்து இரத்தங்க்களில் என்றும்!

சாவின் நேரம் அறிந்தும் இரத்தத்தில் வேகம் தளராத 'வீரம்', மானத்திற்கு ஆற்ற முடியாத பேறை எது ஆற்ற முடியும் உலகில்?

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச், சொன்னீர்கள் தேவன்.

அந்த உறுதி இறுதிவரை.... புலிப் போராளிகளிடம் இருந்தது.

அந்த மனமாவீர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். இவர்களின் பாதையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி எடுத்து கொள்ளுவோம்.

அதேவேளை

April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது -

புலிகளுடன் போரிட்டு வெல்லமுடியாத இராணுவம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை அவ்விடத்துக்கு ஏவியது. இதனால் பல போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். நச்சுவாயுக் குண்டுகளையும், ஆட்களை மயங்கவைக்கும் குண்டுகளையும் பாவித்து இராணுவம் செய்த அட்டூழியங்கள் பல. இவ்வாறு ஏவப்பட்ட நச்சுக்குண்டால் பிரிகேடியர் தீபன் அவர்கள் உருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த இராணுவம் அவரை உயிருடன் பிடிக்க, தற்காலிக சிகிச்சை கூடக் கொடுத்துள்ளது.

மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள்.இன்னிலையில் ஆனந்த புரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூள்நிலை இன்னிலையில் காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை அங்கங்கு ஸ்ரீலங்காப்படையினர் ஊடுருவிவிட்டார்கள்

ீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார் அன்று செல்லும் வளியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து அதில் தாக்குதல் நடந்தேறுகின்றது. அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார் .தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.

http://www.saritham.com/?p=55885

அங்கே நடந்ததை உள்ளதை உள்ளபடி எழுதபாருங்கள் உங்கள முரண்பாடான கற்பனைக்கான கதைக்களமாக, ஆனந்தபுர சமர்களத்தை மாற்றாதீர்கள். இது தான் அந்த மாவீரர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதை.

வீரம் என்பது வெற்றிக்காக போராடுவது மட்டுமல்ல,வெல்ல மாட்டோம் என்று தெரிந்த பின்னும் போராடுவதும் தான்.

Edited by பகலவன்

இந்த அற்புத தளபதிகளுக்கு வீரவணக்கங்கள் !

ஆனந்தபுரம் விட்டுச்சொன்ன வரலாறு 'உரிமைக்காக போராடுங்கள்' என்பதே. இந்த காவிய நாயர்கள் வழியில் இன்றுள்ள உலகமாற்றத்திற்கேற்ப விடுதலை வென்றேடுக்கப்படல் வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவேங்கைகளுக்கு என் நினைவஞ்சலிகள்.

வீர வணக்கம்...!

அமெரிக்கா நச்சு குண்டுகள் பாவித்தது உண்மையா என்று அறிய தமிழ் நாட்டில் அகதிகளை நேர்முகம் கண்டதாக செய்திகள் வந்திருந்ததே. இவற்றை அனுப்பி வைக்க முடியாதா?

அந்த வீரத்தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கங்கள். அவர்கள் காட்டிய வீரத்தையும் உறுதியையும்

நம் நெஞ்சில் தொடர்ந்து நினைவுகொள்வோம்.மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உரம் ஏற்றுவோம். அந்த அம்சங்கள்

நம்மவர்களை இயக்கும் சக்தியாகவேண்டும். ஒரு உபநிடதமகாவாக்கியம் கூறுவதுபோல் " நாம் அதுவாக வேண்டும்"

அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தபுரத்தில் அணைந்த எங்கள் தீபங்களுக்கு வீர வணக்கங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.