Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவா போகவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விடயங்கள் உள்ளமையால் இந்த தூதுக் குழுவில் அங்கு போய் பல விடயங்களை கதைக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டார்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"நாட்டிலே சமாதானம் ஏற்பட, நல்லிணக்கம் ஏற்பட மற்றும் நிலையான தீர்வு ஆகியன கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியும். தவிர வெளிநாட்டு தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை.

இந்த நாட்டில் அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்ற ஏனைய சக்திகளும் ஒரு தேசிய இணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் யதார்த்தமான முயற்சிகளை எப்படியாவது முறியடித்து, மீண்டும் கனவுலகிலே சஞ்சரித்துக்கொண்டு இந்நாட்டில் ஒரு தனி நாட்டை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்க்கக் கூடிய தீவிரவாத போக்கு மேலோங்குமாக இருந்தால் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியாது போகலாம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதோடு நெருங்கிய தொடர்புடைய, பொறுப்புக்கூற வேண்டிய இந்நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலும், நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு சமூகத்தின் உணர்வலைகளைப் பிரதிபலிக்கும் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையிலும் இந்த விவாதத்தில் நான் பங்குபற்றுவது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

நாங்கள் ஜெனீவாவுக்கு சென்று பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து சம்பந்தப்பட்ட விவகாரத்திலுள்ள நியாயங்களையும், அவற்றிலுள்ள சிக்கல்களையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் வெளிச் சக்திகள் தலையிட்டு முழுச் செயல்பாட்டையும் சீர்குலைத்து விடக் கூடிய அபாயத்தை எடுத்துரைத்தோம்.

அந்த முயற்சியின் போது, வெளிவிவகார அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பகலுணவு சந்திப்பில் பங்குபற்றிய பிரநிதிகள் மத்தியில் நான் கருத்து தெரிவிக்கும் பொழுது, நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் இருந்த போதிலும் தேவையற்ற தலையீகள் காரணமாக இனங்களுக்கிடையில் பாரதூரமான துருவப்படுத்தலை அது ஏற்படுத்திவிடும் என்பதை சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறிருக்கத்தக்கதாக, வெளிநாட்டு தமிழ் இணையத்தளமொன்றில் நேற்று வெளிவந்துள்ள செய்தியொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அதில் காணப்படுவதாவது, "ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவை பகிஷ்கரியுங்கள்: தமிழ் படைப்பாளிகள் கழகம்". கம்பன் விழாவினர் ஜெனீவாவில் மனித உரிமை அவையில் அமெரிக்க முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடி பரப்புரை செய்த ரவூப் ஹக்கீமை விழாவில் தொடக்க உரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் கம்பதாசர்களால் நடாத்தப்படும்; விழாவை புறக்கணிக்குமாறு தமிழ் தேசியத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இது எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களின் கூப்பாடாகும். இவ்வாறே மற்றொரு புறத்திலும் தீவிரவாத சக்திகள் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நண்பர்களைப் போல அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இன்று தீவிரவாத தமிழ் தேசியவாதம் உண்மையில் இந்தியாவின் நட்பை கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் தான் இன்று அவர்களுடைய தீவிரவாதம் ஈற்றிலே முடிவுக்கு வந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இலங்கை சார்பாக இந்தியாவுக்குள்ள அரசியல் யதார்த்த்தை புரிந்துகொள்ள முடியாத இந்த தீவிரவாத தமிழ் உணர்வாளர்கள் இறுதியில் இன்றைய நிலைமைக்கு வகைசொல்லியாக வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய பார்வையில் இவர்களுடைய நோக்கு எப்படி இருக்கிறது என்றால், புஷ்ஷூடைய அரசாட்சியில் மாதிரி காணப்படுகிறது. அதாவது 'நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் அல்லது எங்களுடைய எதிரியென்று தான் உங்களை நாங்கள் கருதுவோம். என்றவாறான பார்வையில் தான் எல்லாவற்றையுமே பார்க்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் ஒரு தமிழ் இலக்கிய நிகழ்விற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் போய் தொடக்க உரையாற்றுவதைக் கூட அவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அதுவும், தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவாவுக்கு போகவில்லை. நான் இந்த நாட்டின் நீதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விஷயங்கள் இருப்பதனால் நான் இந்தத் தூதுக் குழுவில் அங்கு போய் பல விஷயங்களை கதைக்க நேரிட்ட வேளையில் இவர்கள் இந்த விஷயத்தை எந்தப் பார்வையில் பார்க்கிறார்கள். எவ்விதமான தீவிரவாத போக்கிலே இந்த விஷயத்தை நோக்குகிறார்கள்.

இந்த நாட்டிலே சமாதானம் வருவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். அதேவேளை ஜெனீவாவுக்கு செல்வதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானித்த போது அவர்களின் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இது பெரும்பாலும் வெளிப்படையாக தெரிந்த விடயமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை ஒரு துரோகியென குறிப்பிட்டு அவரது கொடும்பாவியை எரித்து அல்லது தூக்கில் தொங்கவிட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதை தடுக்கும் முயற்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஈடுபட்டார்கள்.

எனவே இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் சமூகம் என்று சொல்லிக்கொள்கின்ற இந்த தமிழ் உணர்வாளர்கள் இந்த நாட்டில் இருக்கின்ற யதார்த்த்தை புரிந்து கொள்ளாமல், இந்த நாட்டில் அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்ற ஏனைய சக்திகளும் ஒரு தேசிய இணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கு எடுக்கின்ற யதார்த்தமான முயற்சிகளை எப்படியாவது முறியடித்து, மீண்டும் கனவுலகிலே சஞ்சரித்துக்கொண்டு இந்த நாட்டிலே ஒரு தனி நாட்டை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ளக்கூடிய தீவிரவாதப் போக்கு மேலோங்குமாக இருந்தால் நிச்சயமாக இந்த நாட்டிலே நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியாது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் இப்பிரச்சினை விவாதிக்கப்படுகின்றது. ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் அதன் பிரதிபலன்களில் நியாயமான செயற்பாடுகளை காண முடிகிறது. நல்லிணக்க செயற்பாடுகளை நாம் சரியாகப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் நலனுக்காக தீர்மானங்களை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதனால் அதன் பின்னரான செயற்பாடுகள் மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். அதேவேளை கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்தவற்றை கவனத்தில் எடுத்து இந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். எதிரணியினரின் நிலைப்பாட்டை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை அரசு தனது கடப்பாட்டை நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சுரங்கத்தின் ஊடாக அதாவது, குகையினூடாக வெளிச்சத்தை நோக்கும் ஒரு பார்வையை கொண்டிருக்கிறார்கள்.

மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதை இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களும் விளங்கி வைத்திருக்கிறார்கள். மனித உரிமை கவுன்சிலோடு தொடர்ச்சியாக ஈடுபாடு கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம் அதன் கடப்பாடுகளில் இருந்து விலகி ஒடி விடாது வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது.

நாட்டிலே சமாதானம் ஏற்படுவதாக இருந்தால், நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால், நிலையான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியுமே ஒழிய வெளிநாட்டுத் தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இதற்கு முரணாக ஐ.நா மனித உரிமை அமைப்பினரும் தலையிடுவதாக இருந்தால் ஓர் அரசியல் நோக்கத்திற்காக மூக்கை நுழைப்பதாக இருந்தால் நிச்சயமாக அது சாத்தியப்படப் போவதில்லையென்பதை நாங்கள் மனதிற் கொள்ள வேண்டும்.

எனவே தான் என்னைப் பொறுத்த மட்டிலே இந்த நாட்டிலே கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்றுகின்ற முயற்சியில் எதிர்க்கட்சிகைளச் சார்ந்த அனைத்து சக்திகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைத்து இந்த விஷயத்தை நோக்கி நாங்கள் முன்நகர வேண்டும்.

அதேவேளை ராஜதந்திர ரீதியாக இந்த விஷயத்துக்கு நாங்கள் அளவுக்கு மீறிய அழுத்தத்தைக் கொடுத்து மக்கள் மத்தியிலே கூடுதலான எதிர்பார்ப்பை வளர்த்து ஏதோ நாளை மறுநாள் எங்களுக்கு ஏதோ வித்தியாசமான நிலை தோன்றி விடும் என்கிற ஒரு கனவுலக சஞ்சாரத்தில் உலவி அத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் புத்திசாதுரியமாக செயல்பட வேண்டும்" என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38936-2012-04-05-11-26-40.html

  • Replies 56
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கி, கக்கீம் இவர்களின் அரசியல் இணக்க அரசியல் அல்ல சரணாகதி அரசியல்!

வெள்ளைவான் ஜனனாயகத்தில் சரணாகதி அரசியலுக்கூ மட்டும்தான் வாழ்வு உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி பிரட்டுவதை இன்னும் திறமாக செய்கிறார்.

உலகம் எவ்வளவு வளர்ந்தும் போன மாதம் வெளிப்படையாக செய்ததை இவ்வாறு சோற்றுக்குள் மறைத்து அதுவும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் ஒரு திறமை வேண்டும்.

  • தொடங்கியவர்

ஒரு கேவலமான நீதி அமைச்சர். இவர் கூட கைது செய்யப்பட்ட வேண்டியவர்:

- தொடரும் வெள்ளை வான் கடத்தல்கள்

- மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமைகள்

- ஒளிக்கப்படும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"நாட்டிலே சமாதானம் ஏற்பட, நல்லிணக்கம் ஏற்பட மற்றும் நிலையான தீர்வு ஆகியன கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியும். தவிர வெளிநாட்டு தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை.

அப்படி சிறிலங்காகாவால் தீர்க்க முடிந்திருப்பின் போர் முடிந்த 3 வருடங்களில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வை சிங்கள அரசால் கொடுத்திருக்க முடியும்.ஆனால் சிங்கள இனவாத அரசின் செயல்கள் தொடர்ந்து தமிழர்களை ஒடுக்குவது தான் என்பது அவர்களின் செயலே காட்டுகிறதே!! அந்த இனவாத அரசுக்கு ஹக்கீம் ஒரு வால்பிடிப்பவர்.அதுவும் இன்னொமொரு ஒடுக்கப்படும் முஸ்லிம் இனக்குழுவின் தலைவர்(தானே சொல்லிக்கொள்கிறார்)இன்னொமொரு சிறுபான்மை இனத்துக்கு எதிராக உலக அணிகளை திரட்டச்சென்றவர்களில் ஹக்கீமும் ஒருவர்.

நீதி அமைச்சராக ஜெனிவா வரை சென்றவர் மனச்சாட்சி ஒன்று இருந்திருந்தால் சிறையில் வாடும் தமிழ் மக்களை எங்கு இருக்கிறார்கள் என்று கூட சொல்ல முடியவில்லையா? எத்தனை தமிழ் மக்கள் தமது பிள்ளைகள் எங்கே என சிறைச்சாலை தோறும் கலை முதல் மாலை தேடுகிறார்கள்.வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்களை இவர் கொல்லப்படவில்லை என்கிறாரா?.சிங்களம் அதனை தானே சொல்கிறது.

இந்தியாவின் நட்பை கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் தான் இன்று அவர்களுடைய தீவிரவாதம் ஈற்றிலே முடிவுக்கு வந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

1989 இல் இந்திய படையினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களில் இருந்து 2009 இல் தீபன், விதுசா மற்றும் போராளிகள், மக்கள் மீது வீசப்பட்ட இரசாயன குண்டுகள் வரை இந்தியாவின் கைகள் இருந்தது உலகமே அறிந்தது. இதற்கிடையில் இந்தியா இலங்கையுடனும் உலகநாடுகளுடனும் தமிழருக்கு எதிராக ஆடிய நரி விளையாட்டுக்களையும் தமிழர்கள் அறிவர். இதனை நட்பு என்று எந்த வகையில் கூறுகிறார் ஹக்கீம்??

தோழர்கள் அகூதா,தமிழரசு, நுனாவிலான் ஆகியோரிடம் ஓர் அன்பான வேண்டுகள்.முடிந்தால் உங்கள் எழுத்து

அளவுகளை சாதாரண அளவில் [12 size ] இல் உங்கள் கருத்துக்களை பிரசுரிக்க முடியுமா?? ஏனனில் நான் வேலை செய்யும் இடத்தில் உள்ள கணனியில் சிலவேளை யாழிற்குள் செல்வதுண்டு.அங்கு உங்கள் கருத்துக்களில் உள்ள எழுத்துக்கள் சதுர வடிவிலே தான் என்னால் காணமுடிகிறது. அவசியமில்லை முடிந்தால் முயற்சியுங்கள். இதை இந்ததிரிக்கு ஒவ்வாமல் இருந்தால் பொருத்தமான திரிக்கு நகர்த்துமாறு நிர்வாகத்தினரிடம் பணிவாக வேண்டுகிறேன்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வசனம் எடுத்துக் கொடுக்க எம் மத்தியிலேயே நம்மவர்கள் இருக்கிறார்களே. பிறகென்ன... அவர் இப்படியும் பேசுவார்.. இன்னும் பேசுவார். முதல் இவர் முஸ்லீம் காங்கிரஸின் தலைமையை.. வடக்குக் கிழக்கு முஸ்லீம்களிடம் கொடுத்துவிட்டு.. முஸ்லீம் காங்கிரஸுக்குள்.. முஸ்லீம்கள் அல்லாத மூவின மக்களுக்கும் இடமளித்திட்டு வரட்டும்.. அப்புறம் பேசலாம்.. யார் கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி..! இவர் எல்லாம் இன ஐக்கியம்.. நல்லிணக்கம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கு..! தமிழ் தேசியம்.. முஸ்லீம்களுக்கும் இடமளிச்சிருக்குது.. சிங்களவர்களுக்கும் இடமளிச்சிருக்குது. முஸ்லீம் காங்கிரஸில்.. ஒரு தமிழன்.. ஒரு சிங்களவன்.. இருக்கானா..?????????! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தாமும் தமிழர் என்று சொல்லிக் கொண்டு, கிழக்கு மாகாணத்திலும், வன்னி மாவட்டத்திலும்... பூர்வீகத்த்தமிழரின் அபகரித்த காணியை திருப்பிக் கொடுத்தாலே... தமிழ் இனத்தில் நல்லிணக்கம் ஏற்படும். தவிச்ச... முயல் அடிப்பதில், இவர்கள் வல்லவர்கள். சாத்தான் ஓதும் வேதத்தை... விட, அபத்தமானது ரவூப் ஹக்கீமின் பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமா கலக்கமா..?

புரியாணி கிடைக்குமா என வருத்தமா..?

டிஸ்கி:

உனக்கும் கீழே இருப்பவர் கோடி ( சாம்பிள்: அத்தியடி குத்திக்கு இப்ப ஐஸ் பிரியாணிதான் கொடுக்குறாங்களம் .தண்ணீர் ஊற்றி வைக்கபட்ட முந்தின இரவு சோறு )

அதை நீ நினைத்து நிம்மதி நாடு

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வசனம் எடுத்துக் கொடுக்க எம் மத்தியிலேயே நம்மவர்கள் இருக்கிறார்களே. பிறகென்ன... அவர் இப்படியும் பேசுவார்.. இன்னும் பேசுவார். - நெடுக்ஸ்

நண்பர் நெடுக்ஸ் யாரைக் கருதிச் சொன்னாரோ தெரியாது. ஆனால் தொப்பி எனக்கு அளவாக இருக்கு நெடுக்ஸ். அதற்காக முதல் வணக்கம்.

ஆய்வாளரான நீங்கள் சரியாகச் சொன்னதுபோல பெயரின்முன் நானே கவிஞன் என்று போட்டிருப்பதாலும் தனுசின் படத்தில் உப வேடமொன்றில் நடித்ததாலும் கலைஞன் என்று தெரிய வருகிற ஒருவன் என்பதை முதற்கண் ஏற்றுக் கொள்கிறேன்.

எனது நண்பரும் ஈழத்து முஸ்லிம் மக்களின் முன்னணித் தலைவருமான ஜனாப் ரவ் ஹஹ்ஹீம் அவர்கள்

- (ஈழத்து முஸ்லிம் மக்களின் தலைவர்களை முஸ்லிம் மக்கள் மட்டும்தான் தெரிவு செய்யலாம் நண்பர் நெடுக்ஸ் அதில் தலையிடவோ விமர்சிக்கவோ முடியாது) - தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.

நாளைக்கு நாம் பலம் பெற்று முஸ்லிம்கள் நம்மோடு பங்காளிகளாகும் நிலை உருவாகும் வரைக்கும் முன்றாவது சிறினம்/சிறுபாண்மை இனமான முஸ்லிம் மக்கள் எடுக்கும் அரசியல் நிலைபாடுகள் தற்காலிகமானவை என்றும் அதுபற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதான் என் நிலைபாடு.. அதனால் நெடுக்ஸ் முஸ்லிம் தலைவர்களை எதிர்த்து ஈழ விடுதலைக் கனவுகளுக்குக் குந்தகம் விழைவிக்காமல் அந்த நேரத்தையும் சக்தியையும் சிங்கள ஆழும் சக்திகளை எதிர்க்க பயன்படுத்த வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நாழை ஈழத்தின் பலங்களில் ஒன்றாக மாறக்கூடிய (முஸ்லிம் மக்கள் ) என் நண்பர் ஹஹ்ஹீம் அவர்களுக்கு வசனம் எழுதிக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை நெடுக்ஸ். ஆனால் நண்பர் ஹஹ்ஹீம் அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த ஓரிரு தமிழ் பேச்சாளர்களில் ஒருவர் என்கிறதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் நெடுக்ஸ்

நெடுக்ஸ் உங்களுக்கு எனது அன்பான தமிழ் புதுவருட நல்வாழ்த்துக்கள்..

Edited by poet

நாழை ஈழத்தின் பலங்களில் ஒன்றாக மாறக்கூடிய (முஸ்லிம் மக்கள் ) என் நண்பர் ஹஹ்ஹீம் அவர்களுக்கு வசனம் எழுதிக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை நெடுக்ஸ். ஆனால் நண்பர் ஹஹ்ஹீம் அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த ஓரிரு தமிழ் பேச்சாளர்களில் ஒருவர் என்கிறதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

பொயட்,

யாரும் தலை சிறந்த தமிழ்ப் பேச்சாளர்கள் என்பதற்காக அவர்கள் தமிழர்களின் தலையையே கொய்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நண்பர் ஹஹ்ஹீம் அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த ஓரிரு தமிழ் பேச்சாளர்களில் ஒருவர் என்கிறதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் நெடுக்ஸ்

தலைசிறந்த பேச்சாற்றல் இருந்தும் அந்த மொழிக்கு துளியும் நன்றியுணர்வை வெளிப்படுத்தாத ஒருவரை அவர் ஆற்றல் தமிழுக்கு பெருமை என்று சொல்ல வருவதே வெட்கக்கேடான ஒன்று.

பாரதியிடம் இருந்த மொழிப்புலமைதான் மக்கள் அவரை போற்றக் காரணமானது என்பது தவறு. ஏழை, எளியவர்களின் துன்பத்தை தன் சொந்த துன்பமாய் கருதும் அந்த மனிதநேசம்! மரணத்திற்கு அஞ்சாத கொள்கைவைராக்கியம்! இந்த இரண்டும்தான் பாரதி புகழை தூக்கிப்பிடிப்பது.

ஆனால் வைரமுத்துவை எடுத்துக் கொண்டால் மொழிப்புலமை என்ற ஒன்றுக்கு அப்பால் எதுவுமே இல்லை. தன்னிடைம் இருக்கும் திறமையை அப்படியே பணமாக்குகின்ற ஒரு வியாபாரி.

இல்லாதவனைப் புகழ்பவன் தெய்வத்தனம் கொண்ட கவிஞன்!

இருப்பவனைப் புகழ்பவன் கள்ளத்தனம் கொண்ட கவிஞன்! வைரமுத்து புகழ்பாடும் இருப்பவர்கள் பட்டியலில் கருணாநிதி, றயனி இப்படிப் பலர் நீழுகின்றார்கள்!

Edited by தேவன்

இந்தியாவிடம் கோபமோ பகையோ எமக்கு இல்லை - இலங்கை.

முழுக்கோபம் ஆனால் இப்படித்தான் அறிக்கை விடுவார்கள்.

தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.-பொயட்.

இதை விளங்காத வரை எமக்கு விடுதலை ரொம்ப கஷ்டம்,

நாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் பரம்பரை , தலை போனாலும் அனைத்து தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை இறுதி மூச்சுவரை வீர வசனம் பேசுவோம்.உலகமே எதிர்த்தாலும் தனிய நின்று தனிநாடு அமைத்தே தீருவோம் ஹா-- ஹா-- ஹா.

மீசை வேறு துடிக்கின்றது.கிளம்பிட்டாங்கள் புலிகேசிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்......பேச வேண்டும்...அதுதான் அவர்கள் இயல்பு.நான் பல இன,நிற,மொழி சோனகர்களுடன் பழகியிருக்கின்றேன்....சேர்ந்து வேலையும் செய்திருக்கின்றேன்..............உலகிற்கே தலையிடியான இவர்களால் எம்மினத்திற்கு பாயாசமும் பருப்பும் வருமாக்கும்.வந்துட்டானுகள் அவனுகளுக்கு வக்காளத்து வாங்க.....

உவையளோடை சேர்ந்து கதைச்சும் ஒருபிரயோசனமுமில்லை.......காக்கைவன்னியன்களோடைதான் நாங்கள் ஒண்டுக்குஒண்டாய் இருப்பம் எண்டால்.....ஒண்டும் செய்யேலாது....காசு பணம் பதவி எண்டு அலைகழியிறவையளோடை நாடு இனம் மண் எண்டு என்னெண்டு கதைக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிடம் கோபமோ பகையோ எமக்கு இல்லை - இலங்கை.

முழுக்கோபம் ஆனால் இப்படித்தான் அறிக்கை விடுவார்கள்.

தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.-பொயட்.

இதை விளங்காத வரை எமக்கு விடுதலை ரொம்ப கஷ்டம்,

நாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் பரம்பரை , தலை போனாலும் அனைத்து தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை இறுதி மூச்சுவரை வீர வசனம் பேசுவோம்.உலகமே எதிர்த்தாலும் தனிய நின்று தனிநாடு அமைத்தே தீருவோம் ஹா-- ஹா-- ஹா.

மீசை வேறு துடிக்கின்றது.கிளம்பிட்டாங்கள் புலிகேசிகள்.

ஐயா! தங்கள் புலிப்புறணிப்பாடத்தில் தங்கள் பாலியகல்வி அறிவுகூட மணம் வீசுகின்றது இல்லை! ஆனால் எங்களது சிங்களப்புறணிப் பாடத்தில் பண்பின் முதுமானி அறிவால் உபதேசம் போதிக்கின்றீர்கள்! இந்த இரட்டைகுணம் உங்கள் வருத்தமா? அன்னியனின் இன்னொன்றா தாங்கள்?

தாங்கள் பதிந்த இந்த மேற்கோளை யாழ்களத்தில் மகிந்தாவா பதிந்தார்?

அவர்களுக்கும் பலமுகம்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு புறமாக இயங்கும் அவர்கள் தேவைக்கு ஏற்ப. ஏன் என்றால் அது ஒரு அரசு. அதற்கு அப்படி வசதிகள் இருப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல!

கக்கீம் எவ்வளவு சொன்னாலும் அவர் வரப்போவது கனடாவுக்கு. அமெரிக்கா நடுநிலையான பிரேரணையை மட்டும் தான் கொண்டுவருவதாக கூறி அப்படியே செய்தது. இந்த நடுநிலைமையான அமெரிக்காவை எதிர்த்து இவரின் சக மந்திரி பகிஸ்கரிப்பு போரட்டங்கள் நடத்துகிறார். ஆனால் கனடா விரும்பியது இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றையே. கனடா ஒருநாடுதான் பொதுநலவாய போட்டிகளை பகிஸ்கரிக்க போவதாகவும் அறிவித்தது. இந்த நாடுகள் நீதி அமைச்சர் காக்கீமுக்கு எதிராக ஒரு போர்குற்ற சாட்டை தமிழ் அமைப்புக்கள் வைக்காதவரையும் இவர் வருவதை தடுக்க மாட்டா. கக்கீமுக்குத்தான் மானம் இருக்க வேணும் தன் சக்காகலோடு சேர்ந்து கனடாவை பகிஸ்கரிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வசனம் எடுத்துக் கொடுக்க எம் மத்தியிலேயே நம்மவர்கள் இருக்கிறார்களே. பிறகென்ன... அவர் இப்படியும் பேசுவார்.. இன்னும் பேசுவார். - நெடுக்ஸ்

நண்பர் நெடுக்ஸ் யாரைக் கருதிச் சொன்னாரோ தெரியாது. ஆனால் தொப்பி எனக்கு அளவாக இருக்கு நெடுக்ஸ். அதற்காக முதல் வணக்கம்.

ஆய்வாளரான நீங்கள் சரியாகச் சொன்னதுபோல பெயரின்முன் நானே கவிஞன் என்று போட்டிருப்பதாலும் தனுசின் படத்தில் உப வேடமொன்றில் நடித்ததாலும் கலைஞன் என்று தெரிய வருகிற ஒருவன் என்பதை முதற்கண் ஏற்றுக் கொள்கிறேன்.

எனது நண்பரும் ஈழத்து முஸ்லிம் மக்களின் முன்னணித் தலைவருமான ஜனாப் ரவ் ஹஹ்ஹீம் அவர்கள்

- (ஈழத்து முஸ்லிம் மக்களின் தலைவர்களை முஸ்லிம் மக்கள் மட்டும்தான் தெரிவு செய்யலாம் நண்பர் நெடுக்ஸ் அதில் தலையிடவோ விமர்சிக்கவோ முடியாது) - தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.

நாளைக்கு நாம் பலம் பெற்று முஸ்லிம்கள் நம்மோடு பங்காளிகளாகும் நிலை உருவாகும் வரைக்கும் முன்றாவது சிறினம்/சிறுபாண்மை இனமான முஸ்லிம் மக்கள் எடுக்கும் அரசியல் நிலைபாடுகள் தற்காலிகமானவை என்றும் அதுபற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதான் என் நிலைபாடு.. அதனால் நெடுக்ஸ் முஸ்லிம் தலைவர்களை எதிர்த்து ஈழ விடுதலைக் கனவுகளுக்குக் குந்தகம் விழைவிக்காமல் அந்த நேரத்தையும் சக்தியையும் சிங்கள ஆழும் சக்திகளை எதிர்க்க பயன்படுத்த வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நாழை ஈழத்தின் பலங்களில் ஒன்றாக மாறக்கூடிய (முஸ்லிம் மக்கள் ) என் நண்பர் ஹஹ்ஹீம் அவர்களுக்கு வசனம் எழுதிக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை நெடுக்ஸ். ஆனால் நண்பர் ஹஹ்ஹீம் அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த ஓரிரு தமிழ் பேச்சாளர்களில் ஒருவர் என்கிறதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் நெடுக்ஸ்

நெடுக்ஸ் உங்களுக்கு எனது அன்பான தமிழ் புதுவருட நல்வாழ்த்துக்கள்..

முஸ்லீம் தலைவர்களில் எவராவது கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பட்ட இன்னல்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்களா..?????!

ஜெயலத் ஜெயவர்த்தனா.. விக்கிரமபாகு கருணாரட்ன.. வாசு தேவ நாணயக்கார.. போன்ற சிங்களத் தலைவர்கள் கூட செய்திருக்கின்ற சில நற்காரியங்களைக் கூட.. ஒரு முஸ்லீம் தலைமை தமிழ் மக்களுக்குச் செய்தது கிடையாது. குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் செய்தது கிடையாது. அஸ்ரப் காலத்தில் கிழக்கில் முழு வேலை வாய்ப்பும் முஸ்லீம்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வர்த்தகம் அவர்களின் கைக்குப் பரிமாறப்பட்டது. தமிழர் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி.. நேற்று ஒரு பதிவில் முஸ்லீம்களின் குறிப்பாக கக்கீமின்.. நிலைப்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கருத்திற்கு குறுந்தேசியம் என்று வரையறை வழங்கிய நீங்கள்.. சிறீலங்காவில் தனி மதக் கட்சியை வைத்திருப்பவர்களாக.. முஸ்லீம்கள் உளர். இது ஜனநாயகத்தில் எங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக் கூட முஸ்லீம்கள்.. சிங்களவர்களுக்கு இடமளித்திருந்தது. விடுதலைப்புலி என்று கைதாகி சிறையில் வாடும் சிங்கள இளைஞர்களும் உளர். வாடிய முஸ்லீம் இளைஞர்களும் உளர். அவர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். ஆனால்.. முஸ்லீம் காங்கிரஸ் தீவிர மத அடிப்படைவாத.. ஜிகாத் வழி ஒரு பாசிச அரசியட் கொள்கை கொண்ட கட்சி. இது உண்மையில் ஜனநாயகத் தன்மை கொண்ட கட்சியா என்ற கேள்வி கூட உண்டு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது சிங்களவர்களை உள்வாங்கி இருக்கிறது.. முஸ்லீம்களை உள்வாங்கி இருக்கிறது.. கட்சிக் கொள்கைக்கு இணங்க யாரும் கட்சியில் இணைய வழி இருக்கிறது. அதேபோல். தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியும் உள்ளது. இந்த நிலையில்.. குறுந்தேசியம் பற்றி கதைக்கின்ற நீங்கள்.. இங்குள்ள கக்கீமின் குறுகிய மத அடிப்படைவாத ஜிகாத் பாசிசத்தை ஏன் அடையாளம் காண மறுக்கிறீர்கள்..???! இதன் நோக்கம் என்ன..???????!

இப்படி நிறைய முரண்பாடுகள்.. முஸ்லீம்களின் நிலைப்பாடுகளோடு.. உங்களின் நிலைப்பாட்டிலும் நாங்கள் காண்கிறோம்.. பொயட். நீங்கள் ஒன்றில் அவற்றை விளக்க வேண்டும்.. அல்லது தவறை உணர்ந்து உங்கள் நிலைப்பாடுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

நாங்கள் முஸ்லீம் தலைமைகளை எதிர்க்கவில்லை. முஸ்லீம் தலைமைகளும் கட்சிகளும்.. மதம்.. முஸ்லீம் என்ற நிலைக்கு அப்பால்.. கூடிய ஜனநாயகத்தன்மையோடு.. மனதளவில் ஏற்றுக் கொண்ட சகோதரத்துவத்தை உண்மையாக வெளிப்படுத்தி களத்தில் நடக்க வேண்டும். புலம்பெயர் மக்களையோ தாயக மக்களையோ பிரித்துப் பேசுவது கூட.. சகோதரத்துவத்திற்கு கேடு. அதை ஏன் நீங்கள் உங்கள் நண்பருக்கு சொல்லிக் கொடுக்கவில்லை..???! புலம்பெயர் மக்கள் வேறு.. தாயக மக்கள் வேறல்ல. வடக்குக் கிழக்கு...முஸ்லீம்கள் வேறு.. கண்டி முஸ்லிமான கக்கீம் வேறு என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..???! கக்கீம் தான் ஏற்றுக் கொள்வாரா..?????!

எனவே முஸ்லீம் தலைமைகளின் தற்போதைய மிக பிற்போக்கான.. சகோதரத்துவத்திற்கு.. ஜனநாயகத்திற்கு.. மனிதாபிமானத்திற்கு கேடுவிளைவிக்கக் கூடிய குறுநிலை..நிலைப்பாடுகளை விட்டு அவர்கள் பரந்து விரிந்த.. சகோதரத்துவ நிலை நோக்கி தம்மை நகர்த்தி வருகின்ற போது தமிழ் மக்களும் அவர்களோடு நெருங்க.. நெருங்கிச் செயலாற்ற வழி பிறக்கும். அது சிறுபான்மை இனங்கள் ஒத்த குரலில் தமது வாழ்வுரிமையை நிலைநாட்ட உதவும். அதைவிடுத்து தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி.. அதில் தான் அரசியல் ஆதாயம் தேட.. கக்கீமோ.. அல்லது எந்த முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாத அரசியல்.. அல்லது ஆயுத அரசியல் குழுக்கள் நினைத்தாலும்.. அது எனி நடக்க அனுமதிக்கப்படக் கூடாது. இது விடயத்தில் மக்களை உடனுக்குடன் விழிப்புணர்வூட்ட வேண்டியது.. நியாயத்தை நிலைநாட்ட விரும்பும்.. எல்லோரினதும் கடமையாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்ப் பதவி கிடைச்சிடும் அவருக்கு. மக்களுக்கு நன்மை கிடைக்குதோ இலையோ அவற்ற காட்டில மழை.

செஞ்சோற்றுக் கடன் இருக்காத பின்ன?

அப்ப எதுக்கு இப்பிடி இடைக்கிட அறிக்கை விடுரார்றேண்டா யோசிக்கிறிங்க?

தச்சலா நாளைக்கு தமிழ் மக்கள் ஒருதிர்வை பெற்றுக்கொண்டால் தாங்கள் மாத்திரம் அம்மணமா இருக்கொனுன்னு செல்லி அவரு இப்பிடி இப்பிடியெல்ல செல்லிராறு. இனிபருங்க துடிர்ன்னு மூணந்தருப்பு என்னு ஒருக்கா அபிடியே புரட்டிப் போடுவாரு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.-பொயட்.

இதை விளங்காத வரை எமக்கு விடுதலை ரொம்ப கஷ்டம்,

நாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் பரம்பரை , தலை போனாலும் அனைத்து தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை இறுதி மூச்சுவரை வீர வசனம் பேசுவோம்.உலகமே எதிர்த்தாலும் தனிய நின்று தனிநாடு அமைத்தே தீருவோம் ஹா-- ஹா-- ஹா.

மீசை வேறு துடிக்கின்றது.கிளம்பிட்டாங்கள் புலிகேசிகள். - arjun

நன்றி அர்ஜுண், யாழில் எழுதி நான் என் பயனுள்ள நேரத்தை வீணாக்குவதாக பல தரப்புகளில் இருந்து கண்டனம் வருகிறது.

எனினுக்ம் உங்களைப் போன்ற ஆயிரத்தில் ஒருவர் எழுதும் குறிப்பு நான் யாழில் செலவு செய்யும் நேரம் பயனுள்ளது என நம்ப வைக்கிறது.

நாங்கள் மிக மிக சிறிய இனம்.அதிலும் பெரும்பகுதி இளையவர்கள் வெளி நாடுகளில். நமது ஈழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிபெற சீனாவில் இருந்தும் ரஸ்சியாவில் இருந்தும் ஈழத் தமிழர்களை இறக்குமதி செய்ய முடியாது. நெடுக்ஸ்போன்ற கடும்போக்குள்ள தீவிர ஈழ விடுதலை ஆர்வலர்களை வென்று தான் நாம் போராடமுடியும் முஸ்லிம் மக்களோடு உடன்படிக்கை செய்யாமாலும் எதிரியோடு நிற்கிறவர்களையும் இயலுமான வரையில் வென்றெடுக்காமலும் நாம் ஒரு போதும் வெற்றிபெறப்போவதில்லை.

கடும்போக்காளர்கள் முதல் எதிரியை விட்டு விட்டு அடுத்தவர்களுக்கே கல் எறிகிறார்கள். இது வீரப் பிரதாபங்களுடனான தோல்விக்கே வழிவகுக்கும். வீரப்பிரதாபங்களுடனான தோல்வியைத்தான் பாரி போன்ற சங்ககால குறுநில மன்னர்கள் கொண்டாடினார்கள். நான் தனிமைப்பட்டு தோற்றுப்போகும் வீரப்பிரதாபமான தோல்வியை அல்ல நசிய வேண்டிய இடத்தில் நசிந்தும் மோத வேண்டிய இடத்தில் முதல் எதிரியைத் தனிமைப் படுத்தி மோதியும் தமிழர் முஸ்லிம்கள் வேடர்கள் பறங்கியர்கள் உட்பட சகல் ஈழ மக்களும் வெற்றி பெறவேண்டும் என்பது ஒன்றையே ஒன்றை மட்டுமே வலியுறுத்துகிறேன்.

நாம் வெற்றி பெற்றால் தங்களுக்கு பாதுகாப்பிருக்கும் என்கிற நம்பிக்கையை ஈழத்தின் சிங்கள் சிறுபான்மையினருக்கும் உணத்துவது எங்கள் கடமை என்பேன்.

கக்கீம் கண்டியா அம்பாறையா என்பது நமது பிரச்சினை அல்ல நெடுக்ஸ். அதுபோல நமது தலைவர்கள் யாழ்ப்பாணமா மட்டக்களப்பா என்கிறது முஸ்லிம் மக்களின் பிரச்சினையுமில்லை.நெடுக்ஸ் தெளிந்த பிரச்சினைகளை எழுதி எங்களை தெளிவடைய வையுங்கள் தெளிவில்லாத பிரச்சினையில் மற்றவர்கள் சொல்வதைக் கேழுங்கள்.

சரியான விடுதலைக்கான ராசதந்திரம் எதிரியைத் தவிர எதிரியோடு நிற்க்கும் ஏனையவர்களில் பலரை வென்றெடுப்பது அல்லது நாளைக்கு வென்றெடுப்பதற்க்காக இன்று மோதாமல் இருப்பது. இது நான் வன்னியிலும் வைத்த விவாதம்தான்.

2

இருப்பவனைப் புகழ்பவன் கள்ளத்தனம் கொண்ட கவிஞன், இந்த இரட்டைகுணம் உங்கள் வருத்தமா? அன்னியனின் இன்னொன்றா தாங்கள்? -தேவன்

தேவன் என் எதிரிகள்கூட என்னை இப்படி அவம்திததில்லை. இராணுவமும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் என்னை கொல்ல கடத்திய சந்தர்பங்களில்கூட என்னை இப்படி அவமதிததில்லை. புகழ்பாடி நலன் பெறுவதாக இருந்தால் ஜெயசுக்குறு வெற்றியின்பின் வன்னியில் நான் எதைக்கேட்டாலும் கொடுதிருப்பார்கள். நான் வடபகுதி முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு பரிகாரம் செய்யுங்கள் என்றும் மாற்று கருத்துள்ளவர்களை தாக்கவேண்டாம் என்று மட்டும்மே கேட்டேன். ஒருமுறை என் தோழன் பசீர் சேகுதாவுத் (முன்னைநாள் ஈறோஸ் கிழக்கு அரசியல் தலைவர் தற்போது முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்) மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் தோழர் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு கஸ்ட்டம் வருகிறபோது அல்லா ஒருவரை அனுப்புவார் என்பது எங்கள் நம்பிக்கை அப்படித்தான் உங்கலைப் பார்க்கிறோம் என்று சொன்னார். அத்தோடு எனது முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும்தான் தான் வடகிழக்கு முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரசை அமைக்கக் மூலமாக இருந்தது என்றும் சொன்னார். (தோழர் அஸ்ரப்பின் ஆலோசகராக இருந்த தோழன் பெள்சார் (மூன்றாவதுமனிதன் லண்டன். இவ்விடயங்களை அறிவார்) நான் விரும்பியிருந்தால் அவரிடம் எந்த பாராளுமன்றப் பதவியையும் பெற்றிருக்க முடியும். அவரிடம் தமிழ் முஸ்லிம் மக்களது நல்லுறவு ஒன்றே என்கோரிக்கையாக இருந்தது.

தேவன் பிறரைப் போலியாகப் புகழ்ந்து உயிர்வாழும் கவிஞனல்ல நான். இடித்து உரைத்து உயிர்வாழ்கிற கவிஞன். (இடிப்ப்பாரை இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமல் கெடும் - வள்ளுவர்) செக்கென்ன சிவலிங்கம் என்ன நீங்கள் என்னை எப்படியும் நக்குங்கள் ஏன் மூத்திரம்கூட அடியுங்கள் நான் தாங்குவேன்.ஆனாலும் ஈழத்தாய் நாங்கள் தோழராகிறதையே விரும்புகிறாள்.

யாழ் தோழ தோழியர்களே நான் என் கருத்துக்கள் நமது விடுதலைக்கு எதிரானவை என்று நீங்கள் கருதினால் யாழ் களத்தில் இருந்து விலகிச் சென்றுவிடுகிறேன்

Poet இங்கு முடிந்தால் விவாதியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். உங்கள் கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகள் ஏற்றுக் கொள்ளப்படும். எதிர்க்கக் கூடியவை எதிர்க்கப்படும். தமிழரின் விதலைக்கு எதிரான கருத்துக்களைத் தமிழரே முன்வைத்தால் அவர்கள் ஒட்டுண்ணிகளுக்குச் சமானம்.சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லிம்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். யாழ் நகரைவிட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயம் மாத்திரம் ஒரு எதிர்நிலையில் வைத்துப் பேசக் கூடாது. கிழக்கின் ஒவ்வொரு தமிழ்க் கிராமங்களும் முஸ்லிம்களால் சீரழிக்கப்பட்டுள்ளதை தாங்களும் அறிந்திருப்பீர்கள்.சிறிலங்கா வரலாற்றில் கம்பளைக் கலவரத்தில் தமிழ்த்தரப்பினர் கொண்ட நிலைப்பாடு என்பதை முஸ்லிம்கள் இன்றுவரை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். தமிழரின் தீர்வு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்போதெல்லாம் முதலில் பேரினவாதம் முஸ்லிம்களைக் கொண்டே எதிர்க்கவைத்து தீர்வு என்பதைச் சீரழிக்கிறது.இவைகளெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ளக் கூடிய திரணியற்றவர்களா முஸ்லிம்கள்? இது நான் உங்களிடம் முன்வைக்கும் கேள்வி.ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் இஸ்லாமிய சகோதரர்களோடு கொண்டிருந்த நல்லுறவை இன்றைய உங்கள் நண்பர்களான முஸ்லிம் தலைவர்கள் ஏன் எண்ணிப்பார்க்க மறுக்கிறார்கள்?இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் பொது எதிரி பேரினவாதம்தான். இதில் மாற்றம் கிடையாது. ஆனாலும் ஒரு சிறு இனத்தை ஒடுக்குவதற்கு மூன்றாவது சிறு இனம் பேரினவாதத்தோடு கைகோர்த்து நிற்கிறது. இந்த நிலைப்பாட்டை உங்களால் காணமுடியாதிருக்கிறதா? அந்தப் பொது எதிரிக்காக இவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைய மறுப்பதேன்? தமது இனத்தின் பாதுகாப்புத்தானென்றால் அதைப் போன்ற மடைத்தனம் வேறொன்றுமில்லை.இந்தக் கேள்விகளை உங்களது இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். என்னைப் பொறுத்தவரை உங்களுக்கும் புலிப் பூச்சாண்டிதான் காட்டுவார்கள். எங்களுடன் வாழ்ந்த எமது பிரதேசத்தின் மைந்தர்களாக இருக்கின்ற முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களின் அவாக்களுக்குக் குறுக்கே நிற்பதுஅரசியல் சாணக்கியமா? அல்லது தாம்மட்டும் முன்னிற்கும் எண்ணமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.-பொயட்.

இதை விளங்காத வரை எமக்கு விடுதலை ரொம்ப கஷ்டம்,

நாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் பரம்பரை , தலை போனாலும் அனைத்து தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை இறுதி மூச்சுவரை வீர வசனம் பேசுவோம்.உலகமே எதிர்த்தாலும் தனிய நின்று தனிநாடு அமைத்தே தீருவோம் ஹா-- ஹா-- ஹா.

மீசை வேறு துடிக்கின்றது.கிளம்பிட்டாங்கள் புலிகேசிகள். - arjun

நன்றி அர்ஜுண், யாழில் எழுதி நான் என் பயனுள்ள நேரத்தை வீணாக்குவதாக பல தரப்புகளில் இருந்து கண்டனம் வருகிறது.

எனினுக்ம் உங்களைப் போன்ற ஆயிரத்தில் ஒருவர் எழுதும் குறிப்பு நான் யாழில் செலவு செய்யும் நேரம் பயனுள்ளது என நம்ப வைக்கிறது.

நாங்கள் மிக மிக சிறிய இனம்.அதிலும் பெரும்பகுதி இளையவர்கள் வெளி நாடுகளில். நமது ஈழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிபெற சீனாவில் இருந்தும் ரஸ்சியாவில் இருந்தும் ஈழத் தமிழர்களை இறக்குமதி செய்ய முடியாது. நெடுக்ஸ்போன்ற கடும்போக்குள்ள தீவிர ஈழ விடுதலை ஆர்வலர்களை வென்று தான் நாம் போராடமுடியும் முஸ்லிம் மக்களோடு உடன்படிக்கை செய்யாமாலும் எதிரியோடு நிற்கிறவர்களையும் இயலுமான வரையில் வென்றெடுக்காமலும் நாம் ஒரு போதும் வெற்றிபெறப்போவதில்லை.

கடும்போக்காளர்கள் முதல் எதிரியை விட்டு விட்டு அடுத்தவர்களுக்கே கல் எறிகிறார்கள். இது வீரப் பிரதாபங்களுடனான தோல்விக்கே வழிவகுக்கும். வீரப்பிரதாபங்களுடனான தோல்வியைத்தான் பாரி போன்ற சங்ககால குறுநில மன்னர்கள் கொண்டாடினார்கள். நான் தனிமைப்பட்டு தோற்றுப்போகும் வீரப்பிரதாபமான தோல்வியை அல்ல நசிய வேண்டிய இடத்தில் நசிந்தும் மோத வேண்டிய இடத்தில் முதல் எதிரியைத் தனிமைப் படுத்தி மோதியும் தமிழர் முஸ்லிம்கள் வேடர்கள் பறங்கியர்கள் உட்பட சகல் ஈழ மக்களும் வெற்றி பெறவேண்டும் என்பது ஒன்றையே ஒன்றை மட்டுமே வலியுறுத்துகிறேன்.

நாம் வெற்றி பெற்றால் தங்களுக்கு பாதுகாப்பிருக்கும் என்கிற நம்பிக்கையை ஈழத்தின் சிங்கள் சிறுபான்மையினருக்கும் உணத்துவது எங்கள் கடமை என்பேன்.

கக்கீம் கண்டியா அம்பாறையா என்பது நமது பிரச்சினை அல்ல நெடுக்ஸ். அதுபோல நமது தலைவர்கள் யாழ்ப்பாணமா மட்டக்களப்பா என்கிறது முஸ்லிம் மக்களின் பிரச்சினையுமில்லை.நெடுக்ஸ் தெளிந்த பிரச்சினைகளை எழுதி எங்களை தெளிவடைய வையுங்கள் தெளிவில்லாத பிரச்சினையில் மற்றவர்கள் சொல்வதைக் கேழுங்கள்.

சரியான விடுதலைக்கான ராசதந்திரம் எதிரியைத் தவிர எதிரியோடு நிற்க்கும் ஏனையவர்களில் பலரை வென்றெடுப்பது அல்லது நாளைக்கு வென்றெடுப்பதற்க்காக இன்று மோதாமல் இருப்பது. இது நான் வன்னியிலும் வைத்த விவாதம்தான்.

2

இருப்பவனைப் புகழ்பவன் கள்ளத்தனம் கொண்ட கவிஞன், இந்த இரட்டைகுணம் உங்கள் வருத்தமா? அன்னியனின் இன்னொன்றா தாங்கள்? -தேவன்

தேவன் என் எதிரிகள்கூட என்னை இப்படி அவம்திததில்லை. இராணுவமும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் என்னை கொல்ல கடத்திய சந்தர்பங்களில்கூட என்னை இப்படி அவமதிததில்லை. புகழ்பாடி நலன் பெறுவதாக இருந்தால் ஜெயசுக்குறு வெற்றியின்பின் வன்னியில் நான் எதைக்கேட்டாலும் கொடுதிருப்பார்கள். நான் வடபகுதி முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு பரிகாரம் செய்யுங்கள் என்றும் மாற்று கருத்துள்ளவர்களை தாக்கவேண்டாம் என்று மட்டும்மே கேட்டேன். ஒருமுறை என் தோழன் பசீர் சேகுதாவுத் (முன்னைநாள் ஈறோஸ் கிழக்கு அரசியல் தலைவர் தற்போது முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்) மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் தோழர் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு கஸ்ட்டம் வருகிறபோது அல்லா ஒருவரை அனுப்புவார் என்பது எங்கள் நம்பிக்கை அப்படித்தான் உங்கலைப் பார்க்கிறோம் என்று சொன்னார். அத்தோடு எனது முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும்தான் தான் வடகிழக்கு முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரசை அமைக்கக் மூலமாக இருந்தது என்றும் சொன்னார். (தோழர் அஸ்ரப்பின் ஆலோசகராக இருந்த தோழன் பெள்சார் (மூன்றாவதுமனிதன் லண்டன். இவ்விடயங்களை அறிவார்) நான் விரும்பியிருந்தால் அவரிடம் எந்த பாராளுமன்றப் பதவியையும் பெற்றிருக்க முடியும். அவரிடம் தமிழ் முஸ்லிம் மக்களது நல்லுறவு ஒன்றே என்கோரிக்கையாக இருந்தது.

தேவன் பிறரைப் போலியாகப் புகழ்ந்து உயிர்வாழும் கவிஞனல்ல நான். இடித்து உரைத்து உயிர்வாழ்கிற கவிஞன். (இடிப்ப்பாரை இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமல் கெடும் - வள்ளுவர்) செக்கென்ன சிவலிங்கம் என்ன நீங்கள் என்னை எப்படியும் நக்குங்கள் ஏன் மூத்திரம்கூட அடியுங்கள் நான் தாங்குவேன்.ஆனாலும் ஈழத்தாய் நாங்கள் தோழராகிறதையே விரும்புகிறாள்.

யாழ் தோழ தோழியர்களே நான் என் கருத்துக்கள் நமது விடுதலைக்கு எதிரானவை என்று நீங்கள் கருதினால் யாழ் களத்தில் இருந்து விலகிச் சென்றுவிடுகிறேன்

ஆனா ஊனா என்றால்.. கடும் போக்காளர்கள்.. குறுந்தேசியம் என்ற வார்த்தைகளூடு.. எங்கள் கருத்துக்களை சிதைக்க விரும்புகின்ற நீங்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் தரவில்லை.. ஏன்..???!

கடந்த 25 ஆண்டுகளில் எந்த முஸ்லீம் தலைமை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தது..??! யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் அவர்களின் பாதுகாப்பு வேண்டி வெளியேறக் கேட்கப்பட்டதற்கு குரல் கொடுக்கும் நீங்கள் மூதூரில் இருந்தும் கல்முனை.. சம்பாந்துறை.. காத்தான் குடி.. கிண்ணியா.. குச்சவெளி.. நிலாவெளி... கந்தளாய் போன்ற திருமலை கிராமங்களில் இருந்தும்.. பிற மட்டு - அம்பாறை தமிழ் கிராமங்களில் இருந்தும் தமிழ் மக்கள் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவுள்ள பிற முஸ்லீம் குழுக்களால் விரட்டி அடிக்கப்பட்டதை அப்படியே மூடி மறைப்பதன் பின்னணி என்ன..???! அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தான் என்ன..???! இதைச் சொல்வது.. கேட்பது..கடும் போக்கென்றால்.. உங்களின் இந்த மனித நேயமற்ற பக்கச் சார்பை முறியடிக்க.. அந்தக் "கடும் போக்கை" நாம் எடுப்பதில் என்ன தவறுள்ளது..???!

முஸ்லீம் ஊர்காவல் படையால்.. ஜிகாத் கும்பல்களால்.. பிற முஸ்லீம் கும்பல்களால்.. மன்னாரிலும்.. மட்டு- அம்பாறை மாவட்டங்களிலும் சிங்கள விசேட அதிரடிப்படையுடன் இணைந்து செய்யப்பட்ட கொலைகளுக்கு படுகொலைகளுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்..????! இவற்றை எந்த வகையில் நியாயப்படுத்தி.. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணங்களாக உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு தேடப் போகிறீர்கள்..???!

நிலைமைகள் இவ்வாறு இருக்க.. மேலும் மேலும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களிடம் இருந்து சலுகை பெறும் நோக்கோடு.. அஸ்ரப்பும் சரி.. கக்கீமும் சரி.. பேரியல் அஸ்ரப்பும் சரி.. ஹிஸ்புல்லாவும்.. வன்னியில் புனர்வாழ்வு செய்யும் முஸ்லீம் அமைச்சரும்.. சரி தொடர்ந்து தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதோடு.. அடிப்படை மனிதாபிமானம்.. மனித உரிமைகள் அக்கறை இன்றி செயற்படும் நிலையில்.. எந்த அடிப்படையில் தமிழ் மக்கள் முஸ்லீம்களிடம் தொடர்ந்து இரஞ்சிக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..???!

தமிழ் மக்களால் ஏதோ முஸ்லீம்கள் ஆண்டுக்கணக்கான வதைக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை எழுப்பும் நீங்கள்.. முஸ்லீம் மத அடிப்படைவாதிகளால் சிங்களப் பேரினவாத தயவோடு தமிழ் மக்கள் வதைக்கப்படுவதை நீங்கள் மறைப்பதன்.. மறைநிலை நோக்கம் என்ன..????! இப்படி மறைப்பதன் வாயிலாக உங்களின் தனிப்பட்ட நட்புகள் பலமடையலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன். பொயட் எனும் தனிமனிதனோ அல்லது 75 புத்தி சீவிகளோ அல்ல சமூகம். மட்டு கிராமங்களிலும்.. மூதூரிலும்.. கந்தளாயிலும்.. கல்முனையிலும்.. மன்னாரிலும்.. அம்பாறையிலும்.. இன்று தமிழ் மக்கள் மூன்றாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டுள்ள கொடுமை காண்கிறோம். அந்த மக்களின் உணர்வுகளை நீங்கள் எவருமே அங்கீகரித்து நின்றதாகத் தெரியவில்லை.

தமிழர்கள் என்றால்.. எல்லோரும் அடிக்க.. அடி வாங்கிக் கொண்டு அடிப்பவனையே அரவணைக்க வேண்டும் என்று கருத்துச் சொல்லும் நீங்கள்.. தமிழர்களை மனிதர்கள் என்ற அடையாளப்படுத்தலோடு பார்க்கிறீர்களா என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. இது தீவிர வாதமோ.. கடும்போக்கோ அல்ல. அடிப்படை மனிதாபிமான.. மனித உரிமைகள் சார்ந்த தளத்தில் இருந்து எழும் மனிதத்துவம் சார்ந்த சந்தேகம்.

எந்த நாட்டிலாவது முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது அதை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்களா..????! ஏன் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதைக் கூட அதில் இருந்த நியாயத்திற்கு அப்பால் முஸ்லீம்களிடம் சிங்களப் பேரின எதிர்களாலும் அஸ்ரப் போன்ற கடும் மத அடிப்படைவாதிகளாலும் தூண்டப்பட்ட உணர்வுகளுக்கு வடிகால் வேண்டி.. பகிரங்கமாகவே விடுதலைப்புலிகள் தங்கள் வருத்ததை கக்கீமை முஸ்லீம் பிரதிநிதிகளை அழைத்து தெரிவித்தனர்.

எந்த முஸ்லீம் தலைமைகள்.. மூதூர் உள்ளிட்ட கிழக்கு கிராமங்களில் இருந்தும்.. மன்னாரில் இருந்து தமிழ் மக்களை அடித்து விரட்டியமை.. மற்றும்.. செங்கலடி.. கொக்கட்டிச்சோலை.. படுகொலைகள்.. உட்பட பல படுகொலைகளுக்கு காரணமாக இருந்ததற்காக.. முஸ்லீம்கள் தங்கள் வருத்தத்தை பதிவுசெய்துள்ளன???! நீங்கள் இப்படி ஒரு தவறை முஸ்லீம் தலைமைகள் செய்துள்ளதை மனிதத்தின் அடிப்படையிலாவது உணர்கிறீர்களா..???!

இன்று இதை எல்லாம் கடந்து சர்வதேச ஏற்றுக் கொள்கின்ற மிகப் பெரிய மனிதப் படுகொலை என வர்ணிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்காலில் சுமார் 40,000 மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு.. உலகமே வருத்தமும் கண்டனமும் பதிவு செய்துள்ள வேளையில்.. முஸ்லீம்கள் ஒரு இரங்கல் அறிக்கை விட்டிருக்கிறார்களா..????! இப்படியான அடிப்படை மனிதாபிமானமற்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான மத அடிப்படைவாத குழுமத்தோடு ஒரு சகோதரத்துவம் என்பது எந்தளவு காத்திரமான அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்..???!

ஆப்கானிஸ்தானில்.. இறக்கும் தலிபான்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்கின்ற வடக்குக் கிழக்கு முஸ்லீம்கள்.. அல்குவைடா தலைவரின் இறப்புக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் முஸ்லீம்கள்.. கூட வாழ்ந்த வாழும் சாதாரண தமிழ் மக்களின் இறப்புக்கு ஒரு இரங்கலாவது தெரிவிக்க முடியாதவர்களா..???!

இது இன்று நேற்றல்ல.. முஸ்லீம்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இப்படித்தான்.. ஏன் இந்த நிலை..??!

மாவனல்லையில்.. முஸ்லீம்கள்.. அனுருத்த ரத்வத்தையால் கொல்லப்பட்ட போது.. தமது கண்டனங்களை பதிவு செய்த தமிழ் தலைமைகள் உள்ளன. அதில் இறந்தது வெறும் 10 பேர் வரை தான். ஆனால் 40,000 பொதுமக்களுக்கு மேல் கொல்லப்பட்ட இடத்தில்.. தமிழ் மக்களோடு கூடவே ஒரே மொழி பேசி.. கலாசாரம் கலந்து வாழும்.. முஸ்லீம்கள் காட்டிய மனிதாபிமானம் என்ன..??!

3 இலட்சம் மக்கள் வவுனியாவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட போது புனர்வாழ்வு அமைச்சில் இருக்கும் முஸ்லீம் அமைச்சர் நடந்து கொண்ட முறை என்ன..??! அதில் எங்கே இருந்தது மனிதாபிமானம்..??! சொந்த தமிழ் சகோதர்களுக்கு எதிராக தன்னை செயற்பட சொல்வதாகச் சொல்லி.. உண்மையில் மனித நேயம் இருந்திருந்தால்.. அந்தப் பதவியை திறந்து உலகிடம் நீதி கேட்கச் சொல்லி இருக்கலாம். வதை முகாம்களில்.. தமிழ் மக்கள் நீதியாக நடத்தப்படவில்லை என்று. ஆனால் அங்கும் பழிதீர்க்கும் படலமே முன்னின்று செயற்பட்டது. இன்று மன்னாரில் தமிழ் மக்களின் காணிகளை வீடுகளை வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் அடாத்தாகப் பற்றிக்கும் செயல்கள் தொடர்கின்றன..! மட்டக்களப்பிலும் அதே நிலை தொடர்கிறது. இவற்றை நீங்கள் அறிவீர்களா..???! அந்த மக்களின் வலி ஏன் முஸ்லீம்களைப் போல உங்களையும் வந்து சேர்வதில்லை..???! முஸ்லீம்கள் மட்டும் தானா மனிதர்கள்..??! தமிழர்கள் மனிதர்கள் இல்லையா..????! தமிழர்களுக்கு வலி சோகம்.. வரக்கூடாதா என்ன..??!

ஆக.. எவன் எதைச் செய்தாலும்.. பொறுமையாக இருந்து அதை எல்லாம் தாங்கிக் கொண்டு தமிழ் மக்கள் சகோதரத்துவமும்.. இன ஐக்கியமும் பேண வேண்டும். இது தான் உங்களின் மிதவாதக் கொள்கையா..???! இது அடிப்படை.. மனித உரிமைகளைப் பறிக்கும் மோசமான மிலேச்சக் கொள்கை. இதனை நீங்கள் தான் முதலில் கைவிட வேண்டும். கடந்த கால தவறுகளுக்கு இப்படியான கொள்கைகளே தமிழ் மக்கள் தங்களை தற்காக்க.. வன்முறையோடு கத்தியோடு வந்தவனை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

ஒரு புழுக்கூட தன்னை தீண்ட வரும் எறும்பிடம் இருந்து தன்னை காக்க போராடும் உரிமையைக் கொண்டுள்ளது. சக மனிதர்களிடம் இருந்து வரும் பல்வேறு ஆபத்துக்களில் இருந்தும் தம்மை தற்காத்துக் கொண்டு வாழும் உரிமையைக் கூட தமிழ் மக்களுக்கு மறுதலிக்கும் உங்கள் நிலைப்பாட்டுக்குப் பெயர் மிதவாதம் என்றால்.. அதை இப்பவே குப்பையில் போடுங்கள். இந்த மிதவாதம் மக்களின் துயருக்கு முடிவுகட்டவே முடியாத ஒரு மப்புவாதம். உங்களின் தனிப்பட்ட செல்வாக்குகளை எதிரிகளோடு கட்டி வளர்க்க அது உதவலாமே தவிர மக்களுக்கு உதவாது.

முஸ்லீம்களும் சிங்களவர்களைப் போலவே.. முதலில்.. மத வெறி கடந்து.. மனிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி ஒரு முஸ்லிமுக்குள் இரத்தமும் சதையும் உள்ளதோ.. அதேதான் தமிழர்களாகிய மனிதர்களுக்குள்ளும் உள்ளது என்பதை முதலில் முஸ்லீம்கள் குறிப்பாக கக்கீம் போன்ற காட்டுமிராண்டித்தன கொள்வை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக.. பதவிக்காக.. அடிப்படை மனிதத்தன்மை இழப்பவனிடத்தில் போய் நின்று கொண்டு சகோதரத்துவம் பேசிக் கொண்டிருப்பதுனூடு.. எந்த நன்மையும் தமிழ் மக்களையோ.. சாதாரண முஸ்லீம் மக்களையோ வந்தடையப் போவதில்லை.

முஸ்லீம்களின் முஸ்லீம் தலைமைகளின் மனநிலையில் நிறைய மாறுதல்கள் வர வேண்டும். தமிழ் மக்கள் மீதான உண்மையான சகோதரத்துவத்தை அவர்கள் வெளிக்காட்ட தமிழ் மக்களுக்குள்ள அடிப்படை மனித உரிமைகளை முதலில் அவர்கள் இனங்காணவும் மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல்.. தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கச் செய்வதை கைவிட வேண்டும். இந்த அடிப்படை நிலைப்பாடுகளில் மன நிலை மாற்றம் கொண்டு வராமல்.. சும்மா வடக்கில் இருந்து போனதற்கு பரிகாரம்.. காணு.. காத்தான் குடி சம்பவத்திற்கு தலைகும்புறன நில்லு.. என்று இரண்டு சம்பவங்களை வைத்துக் கொண்டு.. 10,000 சம்பவங்களை மூடிமறைக்க முடியாது பொயட்.. என்பதை நீங்கள்.. முதலில் உணர்ந்து கொண்டு விட்டு.. எம்மீது கடும்போக்கு.. பற்றிய கருத்துத் திணிப்பை செய்ய முன் வர வேண்டும்.

உங்களின் குறுந்தேசியவாதம்... கடும்போக்கு வாதம்.. போன்ற பதப்பிரயோகங்கள்.. எல்லாமே பிரச்சனைகளின் அடிப்படைகளை நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாத இயலாமையின் வெளிப்பாடகவே அமைகிறது.

கக்கீம்.. முஸ்லீம்களின் உரிமையை வெல்ல வேண்டின்.. முதலில் உலகெங்கும் மனிதர்களுக்குள்ள மனித உரிமைகளை அவர் அங்கீகரிக்க வழிகாட்டுங்கள். 40,000 அப்பாவி தமிழ் மக்களின் இழப்பை நியாயப்படுத்த கொடி பிடிக்கிற எவரும் அதை செய்ய முடியாது..! இவ்வாறு வெள்ளி தோறும் தொழுகையின் போதும்.. பின்னும் மதவெறி அரசியலை ஊட்டி தமிழ் மக்களுக்கு எதிராக சாதாரண முஸ்லீம்களை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் கக்கீம் போன்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்... தலிபான்களின் நிலைப்பாடு ஆப்கானிஸ்தானில் செல்லுபடி ஆகுமே தவிர.. அமெரிக்காவில் ஆகாது.

சில தடவைகள் சிந்திப்பேன்.. அமெரிக்கா போல.. ஆப்கானிஸ்தான் வல்லரசாக இருந்திருந்தால்.. நாங்கள் எல்லாம் தலையோடு இருக்க முடியுமோ என்று..! எம் பெண்கள் எல்லாம் முகம் காட்ட முடியுமோ என்று.

பொயட் ஒன்றைச் செய்யுங்கள்.. மனிதத்திற்கு எதிராக உள்ள முஸ்லீம் மதவாதத்தை அவர்களிடம் இருந்து அகற்ற அவர்களிடமும் உங்கள் தமிழ் மக்கள் பக்கச் சார்ப்பு கருத்தை (எங்களிடம் முன் வைக்கும் கக்கீம் சார்ப்பு நட்புப் பாராட்டல் கருத்தைப் போல) முடிந்தால் கொண்டு சென்று வென்று வாருங்கள். அப்போதாவது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குமோ என்று பார்ப்பம்.. முஸ்லீம்கள்... மத அடிப்படைவாதம் கடந்த சகோதரத்துவம் மிக்க மனிதர்களாக நம்மோடு ஒற்றுமையாக வாழக் கூடியவர்கள் தான் என்ற நம்பிக்கையை வளர்க்க... அது உதவலாம்.! அதைச் செய்துவிட்டு வந்து திட்டுங்கள்.. நீங்கள் தீவிரவாதிகள் என்று அப்போது நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை பரிசீலிக்கின்றோம்..!

தீவிரவாதம் என்பது.. தொடர் துன்பியலை.. இந்த உலகம் பரிசளிக்கும் போது.. அதில் இருந்து மீட்சி பெற வருகின்ற வாதமே அன்றி.. மனிதத்தை இழந்த காட்டிமிராண்டித்தன.. மத அடிப்படைவாதத்தை அங்கீகரித்து நிற்பது போன்ற ஒன்றல்ல..! தீவிரவாதத்தை விட பொயட் உங்களின் வாதத்தில் தான் அடிப்படை மனிதம் பக்கச்சார்போடு தொலைந்து நிற்கும்.. கருத்தை மிகையாக காண்கிறோம். இந்த நிலை இங்கு உங்களில் மட்டுமல்ல.. வேறு சிலரிலும் உண்டு. மனிதத்தை நேசிப்பவர்களாக இருந்தால்... இந்த நிலையில் இருந்து மாறுங்கள்.

மேலும்.. தமிழ் தலைமைகள்.. வடக்குக் கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோட்பாட்டிற்கு இனங்கள் வடக்கையும் கிழக்கையும்.. அதோடு மலைய மக்களையும் பிரதியீடு செய்வதோடு நின்றுவிடவில்லை. முஸ்லீம்களையும்.. சிங்களவர்களையும் உள்வாங்கி உள்ளன. கக்கீம்.. ஒரு தமிழனை கட்சியில் முதன்மைப் பதவியில் வைத்திருக்கட்டும்.. பார்க்கலாம்...???! வடக்குக் கிழக்கிற்கு வெளியில் இருந்து வரும் கக்கீமுக்கு எப்படி வடக்குக் கிழக்கு மக்களின் உணர்வு புரியும்..??! இவருக்கு சரியான ஜனநாயக வகுப்பெடுத்து.. இதுதான் ஜனநாயகம்.. மத அடிப்படைவாதம் எனி எதிர்மறைவிளைவுகளையே உண்டு பண்ணும்.. அதனை மேற்குலகம் தற்கால சந்ததியிடம் விதைவிட்டது.. என்ற உண்மையையும் சொல்லி வையுங்கள்..! முஸ்லீம்கள் பள்ளிவாசல்கள் தோறும்.. என்னதான் கூடிக் கூடி பேசி.. கத்தியோடு அலைந்தாலும்.. மத அடிப்படைவாத கட்சி ஜனநாயகம் என்பது எனி அவர்களால் செய்யப்பட முடியாத ஒன்றாகவே உலகெங்கும் மாறி வருகிறது. அதனையும் கக்கீமின் காதிலும்.. ஒட்டுமொத்த முஸ்லீம்களின் காதிலும் போட்டு வையுங்கள். அதேபோன்று உலகமே அங்கீகரித்து நிற்கும் மனித உரிமைகளை காக்க கற்றுக்கொள்ள.. அதற்காக குரல்கொடுக்க முஸ்லீம்கள் நியாயத்தோடு செயற்படுவது அவசியம். பயங்கரவாதமாக முஸ்லீம் மத அடிப்படைவாதம் எழுந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள்.. இன்று மதத்தின் பெயரால் மனிதர்களைக் படுகொலை செய்பவர்களுக்கு ஆதரவாக. ஆர்ப்பாட்டம் செய்யும் கொடுமையையும் நாம் காண்கிறோம். அப்பாவி மக்கள் சொந்த மதமல்லாதவர்கள் என்ற காரணத்திற்காக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதைக் கூட தயவு தாட்சண்ணியம் இன்றி அதை நியாயம் என்று காரணம் கற்பிக்க விளைகின்றனர். இந்த காட்டிமிராண்டித் தனங்களில் இருந்து கக்கீமும்.. முழு முஸ்லீம் சமூகமும் வெளி வந்து மனிதர்களாக சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.. சொன்ன "அயலவனையும் சகோதரனைப் போல நேசி" என்ற ஒற்றை வரியினையாவது இதய சுத்தியோடு ஏற்று முழுமனதோடு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும்.. கருத்தை கருத்தால் வெல்லுங்கள். அல்லது தெளிவு படுத்துங்கள். உங்களை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. பொயட் என்று நீங்கள் யாழ் களத்தின் உறவாகவே அறிமுகமானீர்கள். அதற்கு வெளியில் முன்னர் உங்களை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதேபோல்.. பொயட் என்று யாழ் அறிமுகப்படுத்திய பின் தான் நீங்கள் கவிஞர்.. நடிகர் என்ற இனங்காட்டலும் தெரிய வந்தது. அந்த வகையில் யாழ் உங்களின் உருவத்தை உங்களின் சந்ததி கடந்தும் காட்டியுள்ளது. அதற்கு நன்றிக்கடனாவது செலுத்துங்கள்..! :icon_idea:

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் பொது எதிரி பேரினவாதம்தான். இதில் மாற்றம் கிடையாது. ஆனாலும் ஒரு சிறு இனத்தை ஒடுக்குவதற்கு மூன்றாவது சிறு இனம் பேரினவாதத்தோடு கைகோர்த்து நிற்கிறது. இந்த நிலைப்பாட்டை உங்களால் காணமுடியாதிருக்கிறதா? - இறைவன்

நட்புகுரிய இறைவா, காணமுடியாமல் இருப்பது உண்மைதான் இறைவா.

நீங்கள் மிக சரியாகச் சொன்னீங்க. எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொது எதிரி சிங்களப் பேரினவாதம்தான். அதுதான் பிரச்சினையே. அதனால்தான் பொது எதிரியைத் தவிர பிறரை என்னால் காணமுடியாதிருக்கிறது. துரோணர் தன்னிடம் வில்வித்தைபழகிய மாணவர்களை கிழிக்கு இலக்கு வைக்கும்படி சொல்லிவிட்டு என்ன தெரியுது என்று கேட்டாராம். . சில மாணவர்கள் மரமும் கிழியும் தெரியுது என்றார்கள். சிலர் கிழையும் கிழியும் என்றார்கள். ஓரிருவர் சில இலைகளும் கிழியும் என்ற்றார்கள். அர்சுணன் மட்டும்கிழியின் கழுத்தைவிட வேறு ஒன்றுமே தெரியவில்லை என்றான். எனக்கும் பொது எதிரியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

நாம் மிக சின்ன இனம் வெற்றி பெறுவதானால் முதல் எதிரியைத்தவிர வேறு எதுவும் தெரியாத அளவுக்கு நாம் அரசியல் மயப்படவேண்டும். இல்லாவிட்டால் தனிமைப் பட்டுத் தோற்றுப் போவோம் இறைவா.

2

திரு நெடுக்ஸ் அவர்களே,

1985 கிழக்கு மாகாணத்தின் க்ரிய ஆண்டு. மருதமுனையில் இருந்து பொத்துவில் நீங்கலாக அம்பாறை மாவட்டம் முழுவதும் தமிழர்கள் முஸ்லிம் கடும்போக்காளர்களால் தாக்கப் பட்டார்கள் தென்கிழக்கு கிழக்கு மாகாணம் சுடுகாடானது. கல்முனையில் இருந்து மருதமுனைவரைக்கும் எரியூட்டப் பட்டு தமிழ் மக்கள் அகதிகளாகிய கொடுமையைப் பார்த்து மனமொடிந்த தோழர் அஸ்ரப் முஸ்லிம் என்று சொல்லவே வெட்க்கப் படுகிறேன் என மிகப் பிரபலமான அறிக்கையை வெளியிட்டுவிட்டு அரசியலை துறந்து கொழும்பில்போய் இருந்தார். முஸ்லிம் தலைவர்கள் மன்னிப்புக் கோரியதில்லை என எப்படி கேட்கிறீங்க?

தொடர்ந்து மட்டக்கலப்பு மாகாணத்த்ன் படுவான்கரையில் உறுகாமம் பாவற்க்கொடிச் சேனை போன்ற முஸ்லிம் கிராமங்கள் சில விடுதலை இயக்கங்களால் எரியூட்டப்பட்டு மக்கள் ஆதிகளாக ஏறாவூருக்கு விரட்டப்பட்டனர். பெண்களும் கொடுமை[ப் படுத்தபட்டனர்.

விரட்டப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் அவர்களின் பாதுகாப்பு வேண்டி வெளியேறக் கேட்கப்பட்டதற்கு குரல் கொடுக்கும் நீங்கள் - 70 ஆயிரம் மக்கள் உடுத்த உடையோடு வெளியேற்றபட்ட பாதகத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் மன்னிப்புக்கேட்ட ஒரு ஒரே ஒரு நிகழ்வை பதுகாப்புக்காக என்று குறிப்பிடும் ஒருவருடன் விவாதித்து என்ன பயன்?

விடுதலைப் புலிகளைவிட நீங்கள் தீவிரமான விடுதலை வீரரா? மீண்டும் தோல்விக்கு மட்டுமே நந்தவன பாணிச் சிந்தனைகள் இட்டுச் செல்லும். எமக்கெதிரான சர்வதேச சமூகத்தின் முதல் குற்றச்சாட்டு இதுதான். வெலிஓயாவில் இருந்து தமிழர்களை பாதுகாப்புக்காக விரட்டியதாக சிங்கள் இனவெறியன்கூட சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்காளா? சமுகம் உங்களுடன் இதுவரை விவாதிததற்க்காக என்னை மன்னியுங்கள்.

இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் பொது எதிரி பேரினவாதம்தான். இதில் மாற்றம் கிடையாது. ஆனாலும் ஒரு சிறு இனத்தை ஒடுக்குவதற்கு மூன்றாவது சிறு இனம் பேரினவாதத்தோடு கைகோர்த்து நிற்கிறது. இந்த நிலைப்பாட்டை உங்களால் காணமுடியாதிருக்கிறதா? - இறைவன்

நட்புகுரிய இறைவா, காணமுடியாமல் இருப்பது உண்மைதான் இறைவா.

நீங்கள் மிக சரியாகச் சொன்னீங்க. எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொது எதிரி சிங்களப் பேரினவாதம்தான். அதுதான் பிரச்சினையே. அதனால்தான் பொது எதிரியைத் தவிர பிறரை என்னால் காணமுடியாதிருக்கிறது. துரோணர் தன்னிடம் வில்வித்தைபழகிய மாணவர்களை கிழிக்கு இலக்கு வைக்கும்படி சொல்லிவிட்டு என்ன தெரியுது என்று கேட்டாராம். . சில மாணவர்கள் மரமும் கிழியும் தெரியுது என்றார்கள். சிலர் கிழையும் கிழியும் என்றார்கள். ஓரிருவர் சில இலைகளும் கிழியும் என்ற்றார்கள். அர்சுணன் மட்டும்கிழியின் கழுத்தைவிட வேறு ஒன்றுமே தெரியவில்லை என்றான். எனக்கும் பொது எதிரியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

நாம் மிக சின்ன இனம் வெற்றி பெறுவதானால் முதல் எதிரியைத்தவிர வேறு எதுவும் தெரியாத அளவுக்கு நாம் அரசியல் மயப்படவேண்டும். இல்லாவிட்டால் தனிமைப் பட்டுத் தோற்றுப் போவோம் இறைவா.

2

திரு நெடுக்ஸ் அவர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் அவர்களின் பாதுகாப்பு வேண்டி வெளியேறக் கேட்கப்பட்டதற்கு குரல் கொடுக்கும் நீங்கள் - 70 ஆயிரம் மக்கள் உடுத்த உடையோடு வெளியேற்றபட்ட பாதகத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் மன்னிப்புக்கேட்ட ஒரு ஒரே ஒரு நிகழ்வை பதுகாப்புக்காக என்று குறிப்பிடும் ஒருவருடன் விவாதித்து என்ன பயன்?

மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. குச்சவெளியில் இருந்து 1990 களின் நடுவில் முஸ்லீம்களால் திட்டமிட்டு ஆயுத முனையில் திட்டமிட்டு... எம் மக்கள் 30,000 பேருக்கு மேல்.. உடுத்த உடுப்போடு.. ஆபத்தான கடல்வழியூடு.. முல்லைக்கும் வடமராட்சி கிழக்கிற்கும் வதை வதையாக வந்திறங்கியது ஞாபகம் இருக்கா பொயட் அவர்களே. அது பாதகமற்ற செயலாகவா தெரிகிறது. மூதூரில் இருந்த எம் மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டு வீட்டுக் கற்களைக் கூடி இடுத்துச் சென்றதை நீங்கள் மறைக்கலாம்.. மன்னிக்கலாம். பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் எவரும் மன்னிப்புக் கேட்கவில்லையே..???! இதுதான் நீங்கள் தமிழ் மக்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் போன்ற மத அடிப்படைவாதிகளிடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் நியாயமா.. நிவாரணமா..??!

1990 இல் கிழக்கில் நடந்த சம்பவங்களே.. வடக்கில் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வைத்தது என்ற உண்மையை நீங்கள் ஏற்கத் தயார் இல்லை என்றால்.. நீங்கள் தமிழ் மக்களுக்காக அல்லது தமிழ் மக்கள் சார்பில் உண்மையில் குரல் கொடுக்க அருகதை அற்றவர் என்பது எனது முடிவு..!

விடுதலைப்புலிகள் தலைவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். அன்ரன் அண்ணா தான் ஒரு அறிவிப்பை விட்டார். விடுதலைப்புலிகள் உண்மையை முன்வைக்க முடியாத அளவிற்கு உங்களைப் போன்றோரும் கூட.. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள்.. வெளியேற்றப்பட்டதை பாதமாகக் கருதிப் புலி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தீர்களே தவிர.. உண்மையை உலகிற்கு ஆணித்தரமாக சொல்லவில்லை. அந்த இடத்தில் விடுதலைப்புலிகளின் செயலில் இருந்த நியாயம் உண்மைப் பின்னணி சாகடிக்கபட்டது. இந்த நிலையில் தான் பலமான பிரச்சாரத்தின் எதிரொலியாகவும்.. விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச நல்ல கண்ணோட்டத்தை கெடுக்கவும் தமிழ் - முஸ்லீம் பிரிவினையை தூண்டவும் சிங்களம்.. அந்த வெளியேற்றத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க.. அதற்கு முண்டு கொடுத்து அஸ்ரப்.. தனது அரசியல் இலாபங்களுக்கா அவரும் அதை பாதமாக்கிக் காட்டினார். உண்மைகள் அங்கு செத்துப் போயின. இன்று நீங்களும் அதையே செய்கிறீர்கள்.

நீங்கள் இதய சுத்தி உள்ளவராக இருந்தால்.. கிழக்கில் 1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம்கள் வெளியேற முன் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களோடு முஸ்லீம்களை நேரடி விவாதத்திற்கு அழைக்க முடியுமா..??! அதேபோல் அன்றைய நாட்களில் வடக்கில் இருந்த ஆபத்தான சூழல் குறித்து முஸ்லீம்கள் இதய சுத்தியோடு உண்மையை சொல்ல உங்களால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா..??!

நீங்கள் கிளியை பார்க்கிறீங்களோ.. அம்பைப் பார்க்கிறீங்களோ என்பதல்ல பிரச்சனை. உண்மை நிலையை ஆராய நீங்கள் தயார் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை இங்கு. அதனை ஆராயாமல்.. தமிழ் மக்களின் உள்ளங்களுக்குள் கிடக்கும் ஏக்கங்களை வலிகளைப் போக்காமல்.. வெறுமனவே முஸ்லீம்களை சாந்தப்படுத்துவதன் மூலம்.. நீங்கள்.. எதனையும் சாதிக்க முடியாது. இதில் இராஜதந்திரமும் கிடையாது எதுவும் கிடையாது. இங்கு உங்களின் தனிப்பட்ட மிதவாதி என்ற புகழ்பாடலும்.. புகழீட்டலுமே மிகுந்து கிடக்கிறது..! அப்படி நீங்கள் உங்கள் ஆதாயத்திற்காக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களே தவிர உண்மைக்கும் உங்களுக்கு வெகு தூரம்..!

விடுதலைப்புலிகளை விட மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பாதிப்புக்களின் அடிப்படையில் தான் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே உருவானது. எனவே நான் விடுதலைப்புலியாக இருந்து குரல்கொடுக்க வேண்டிய நிலைக்கு அப்பால்.. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தவன்.. மக்களில் ஒருவன் என்ற வகையில்.. அந்த மக்களோடு அவர்களுக்காக அன்றைய காலத்தில் பள்ளி மாணவனாக..நிவாரணப் பணியாற்றியவன்.. சாரணப் பணி செய்தவன் என்ற வகையில் எனக்கு உங்களை விட கொஞ்சம் அதிகமாகவே அந்த மக்களின் வலி புரியும்..! அதையே இங்கு பதிவிடுகிறேன்.

மன்னார் மாந்தைக் கிரமாத்தின் இன்றைய நிலை என்ன..! திருக்கேதீஸ்வரத்திற்கு அருகில் உள்ள அந்தக் கிராமம் இன்று முழு முஸ்லீம் மயப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இவை எல்லாம் பாதகமே அல்ல.. அந்த மக்களின் ஒரு வலியே அல்ல.. 3 இலட்சம் தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டது வலியே அல்ல. 3 இலட்சம் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரைவதை அனுபவித்தது.. அனுபவிப்பது வலியே அல்ல.. 40,000 மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக கொல்லப்பட்டது வலியே அல்ல.. 70,000 பேர் பாதுகாப்பாக வெளியேறக் கேட்டது வலி..!

1995 இல் அத்தனை இலட்சம் தமிழ் மக்களும் தான் யாழ்ப்பாணத்தை விட்டு பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். அதையும் வலி என்று நாங்கள் வரையறுத்தால்.. அன்றே ஒரு பெரிய முள்ளிவாய்க்காலை நாம் தரிசித்திருப்போம்..!

பொயட்.. சும்மா உங்களின் கக்கீமுடனான.. முஸ்லீம்கள் சிலருடனான நட்புவட்டத்தை மையமாக வைத்து யதார்த்ததைப் புரட்டி போட நினைக்காதீர்கள். மக்களின் வலிகளை.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தாதீர்கள்.

சிங்களப் பேரினவாதத்திற்கு சமாந்திரமாக முஸ்லீம் மத அடிப்படைவாதத்தையும் எதிர்கொண்டு தான் நாங்கள் போராடினோம் என்பதை மறக்க வேண்டாம். ஜிகாத் அமைப்பின் முஸ்லீம் மத அடிப்படைவாதிகள்..செயற்பாடுகள் மன்னார்.. வவுனியா.. மட்டக்களப்பு.. திருமலை.. அம்பாறையில் எமது போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்துள்ளன. காட்டிக் கொடுப்புக்களை செய்துள்ளது. சிங்களப் பேரினவாதத்தோடு இணைந்து நின்று படுகொலைகளைச் செய்துள்ளன.இவை இன்றும் தொடர் கதை தான்.

இப்படியான புற்றுநோய்களை மறைத்து வைத்துக் கொண்டு வெறும் காயங்கள் என்று நீங்கள் அவற்றிற்கு சாதாரண மருந்திடலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

நீங்களும் சரி இன்னும் சிலரும் சரி.. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி என்பதை.. எமது தோல்வி என்பதாக வரையறுப்பவர்கள். அவை எமது தோல்வியே அல்ல. அவை சர்வதேச படைப்பலப் பிரயோகத்தின் முன் நாம் போராட முடியாமல் வீழ்ந்த செயலே அன்றி.. சிங்களவர்களோ.. முஸ்லீம்களோ எம்மை அவர்களின் நியாயமான செயற்பாடுகள் மூலம் வெற்றி கொண்டதாக நீங்கள் காட்ட முனைவது அப்பட்டமான மிகக் கீழ்த்தரமான உண்மைக்குப் புறம்பான சந்தர்ப்பவாதம். இதன் பின்னால் நாம் கொடுத்த உயிர் விலைகளைக் கூட நீங்கள் மோசமாக மலினப்படுத்தி வருகிறீர்கள்.

இப்பவும் சொல்கிறேன்.. எப்பவும் சொல்வேன். நீங்கள் கிளி என்று நினைப்பது.. உங்கள் தலையையே. முஸ்லீம்கள் சரி.. சிங்களவர்கள் சரி சரியான மதிப்பீடுன்றி தமிழ் மக்களின் மனவோட்டங்களில் பதிந்துள்ள கடந்த கால நிகழ்வுகளின் பாதிப்புணராமல்.. உங்களைப் போன்றோர் பக்கச்சார்பு நியாயம் பேச வெளிக்கிட்டு.. சாதிக்கப் போவது எதனையும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி வைக்கிறேன்.

நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை எமக்காக மக்களுக்காக மாற்றாவிட்டாலும் பறுவாயில்லை.. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சவாலாக சொல்கிறேன்.. முடிந்தால்.. உங்களின் இந்த நிலைப்பாட்டோடு இருந்து நீங்கள் தமிழ் - முஸ்லீம் நல்லுறவை வளர்த்துக்காட்டி.. தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவாக உள்ள துயர்களை போக்குங்கள் பார்க்கலாம். மூதூர் தொடங்கி.. மன்னார் வரை எம் மக்களின் மனதில் முஸ்லீம்கள் ஏற்படுத்தி உள்ள காயங்களை ஆற்றுங்கள். கொக்கட்டிச்சோலை தொடங்கி.. செம்மணி ஈறாக... முள்ளிவாய்க்கால் வரை நடந்த அப்பட்டமான மனித.. இனப் படுகொலைகளுக்குப் பின்னால் சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து நின்ற முஸ்லீம்களை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோட்கச் செய்யுங்கள் பார்க்கலாம்..!

விடுதலைப்புலிகள் நேர்மையான முஸ்லீம் - தமிழ் நல்லுறவை விரும்பியதால்.. தங்கள் பக்கம் நியாயம் இருந்தும் அதை வலியுறுத்தாது விட்டுக்கொடுப்போடு மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர். தவறுகளை ஒத்துக் கொண்டனர். அதனைப் போல.. உங்கள் நண்பர் கக்கீமை அவரின் கட்சியை.. முஸ்லீம்களை நடக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இது எனது சவால். இதை செய்து முடித்துவிட்டு வாருங்கள்.. நான் அதன் பின் உங்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறேன்..!

இதனை செய்ய நாதி இல்லையேல்.. சும்மா கதையளந்து கருத்துப் பரிமாறி நீங்கள் எதனையுமே வெட்டி விழுத்தப் போறதில்லை என்பது வெள்ளிடை மலையாகும் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றையவர்களின் வழிமுறைகளில் உள்ள நியாயத்தை தெளிவடையக் கற்றுக் கொள்ளுங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இனித் தமிழ் மக்களின் விடுதலை பற்றிப் பேச வேண்டாம். ஏனென்றால் அதுக்கான அருகதை உங்களுக்கிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. முடிந்தால் ரவூப் ஹக்கீமுடனும், ரிஷாத் பதியுதீனுடனும் சேர்ந்து கொள்ளும், குறைந்தது அவர்களாவது உங்களது நிலைப்பாட்டிற்காக உங்களை தங்களுடன் இணைத்துக்கொள்ளட்டும்.

1990 இல் வெளியேற்றப்பட்ட 70,000 முஸ்லீம்களுக்காக இப்போதும் அழுது புளம்புகிற நீங்கள், அவர்கள் மீண்டும் அங்கே குடியேறிவிட்டார்கள் என்பதை ஏதோ காரணத்துக்காக சொல்ல மறுக்கிறீர்கள், அல்லது உங்களுக்கு அது தேவையற்ற விடயம். புலிகளைக் குற்றம் சாட்ட உங்களுக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான் அது, ஆகவே நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் 1990 இலிருந்து உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் வெளியேற்றப்பட்டு இன்னும் தமதிடங்களுக்குத் திரும்ப முடியாமலிருக்கும் நீங்கள் சேர்ந்த சமூகமாகக் கருதப்படும் தமிழர்கள் பற்றி உங்களுக்குக் கதைக்க மனம் வருவதில்லை, அப்படிக் கதைத்தால் அது புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போலாகிவிடும் என்கிற கவலை உங்களுக்கு.

காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்காக மட்டுமே அழுகிறீர்களே, அதே காலத்திலும், அதுக்குப் பின்னரு, இபோதும் கொல்லப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சாவு உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அப்படித் தமிழர்கள் கொல்லப்படுவது நியாயமானதுதான் என்று நீங்கள் யோசிப்பதன் விளைவா உங்கள் மெளனம்?

நாம் சொல்லும் எதையுமே நீங்கள் கேட்கப்போவதில்லை. அப்படிக் கேட்டால் உங்கள் முஸ்லீம் நண்பர்களுக்கிடையே நீங்கள் கொண்டிருக்கும் " நடுநிலைவாதி" என்கிற உங்கள் திருப்பெயர் கெட்டுவிடும்.

நீங்கள் தொடர்ந்தும் உங்கள் நண்பர்களுக்காக அழுங்கள், குறுந்தேசியவாதிகள் என்று எம்மைப் பேசுங்கள், அவ்வப்போது புலிகளையும் குற்றம் சொல்லுங்கள், அல்லது முஸ்லீம்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்காக சிங்களவன் உங்களுக்குச் செய்வது சரிதான் என்று வசைபாடி திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள். எமக்கு எல்லாம் ஒன்றுதான்.

தனது சகோதர இனத்தின் இனவழிப்பிற்குத் துணைபோய், இன்றுவரை அந்த இனவழிப்பை நியாயப்படுத்த முன்னிற்கும் ஒரு அமைச்சன் உங்களுக்கு நண்பனாகவும், சிறந்த பேச்சாளனாகவும் தெரிகிறது. இதே பேச்சாற்றலாலதான் அவன் தமிழர்களின் இனவழிப்பையும் இன்றுவரை நியாயப்படுத்துகிறான் என்பது உங்களுக்குத் தெரியப்போவதில்லை. ஏனென்றால் அது உங்கள் நண்பனல்லவா?? அவன் எப்படிப் பேசினாலும் ரசிக்கும் படியிருக்கும் உங்களுக்கு.

உங்களது கருத்துக்களைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முஸ்லீம்களுக்காக இங்கு வந்து வைக்கும் ஒப்பாரியைப் பார்க்கும்போது எமக்கே ஆச்சரியமாக இருக்கிறது, உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் முஸ்லீம்களுக்காக தவமிருப்பதைப் போல முஸ்ல்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் தமிழருக்காக பேசுவதைக் கண்டிருக்கிறீரா?? அப்படி ஒருத்தனைக் கண்டால் இங்கே கூறுங்கள் பார்க்கலாம்???

உங்களது நண்பனான ஹக்கீமிடம் எப்போதாவது தமிழரின் வலிகள் பற்றிப் பேசியதுண்டா??? உங்கள் நண்பனின் தமிழர் வலிபற்றிய நிலைப்பாடுதான் என்ன என்பதை இங்கே கூறும் நாங்களும் கேட்கிறோம்.

உங்கள் நண்பனான ஹக்கீமின் கருத்தினை உங்களால் இங்கே கூறமுடியாதென்பது எமக்குத் தெரியும். ஏனென்றால் அவன் உங்களை தனது நண்பனாக ஏற்றுக்கொள்வதன் அடிப்படையே உங்களது தமிழர் மற்றும் புலியெதிர்ப்புவாதமேயன்றி வேறில்லை என்பது உங்களுக்கும் தெரியும், எமக்கும் தெரியும். என்று நீங்கள் தமிழர் வலிபற்றிக் கதைக்கத் தொடங்குகிறீரோ அன்றே உங்களை அவன் தூக்கி எறிந்துவிடுவான், அதுக்குப்பிறகு உங்களது "நடுநிலையாளன்" என்கிற திருப்பெயர் நாறிவிடும்.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.