Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை, நானும் தான்!

வாசித்து முடிந்ததும் 'ம்' போடுகின்றேன்!!!

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply

இந்த நிறுவனத்தில் எனக்கு என்ன வேலை உள்ளது என்பதில் குழப்பமாக இருந்தது. அதுவரையில் கனிமவளம் எடுப்பது என்றால் அகண்டகுழி முறை (Open-pit) தான் நான் கண்டது. அதுவும் படங்களில். இங்கே எனக்கென்ன வேலை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

எந்த முறையிலும் கனிம வளங்களை எடுத்தாலும் பின்னர் எவ்வாறு அந்த இடங்களை நிரப்புவார்கள்?

தாயகத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பதும் இவ்வாறன சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா சொன்னதற்கு நன்றிகள் சஜீவன், புங்கை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த முறையிலும் கனிம வளங்களை எடுத்தாலும் பின்னர் எவ்வாறு அந்த இடங்களை நிரப்புவார்கள்?

தாயகத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பதும் இவ்வாறன சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என எண்ணுகிறேன்.

நிலக்கீழ் சுரங்கமானாலும், தரையில் அகழ்வதானாலும் எவ்வாறு மீள நிரப்பப்போகிறோம் என்கிற திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நிலத்தை அகழும்போது அதில் பெரும்பகுதி கழிவு ஆகவும் சிறுபகுதி கனிமமுள்ள பகுதியாகவும் இருக்கும். இதில் கழிவுப் பகுதியுடன் சில கலவைகளைக் கலந்து நிலக்கீழ் சுரங்கங்களை நிரப்பும் முறை இங்கு பொதுவில் உள்ளது. தரையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை செப்பனிடவேண்டிய கடப்பாடும் நிறுவனங்களுக்கு உண்டும்.

குபெக் அரசின் அனுசரணையுடன் ஒரு வைரச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது.. அதற்கான காணொளியைக் கீழே காணுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றிகள் விசுகு அண்ணா.. :D தம்பி கட்டியது என்பதெல்லாம் பெரிய வார்த்தை.. :blink: தம்பியும் அணில் மாதிரி வேலை செய்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும்.. :unsure:

இந்தக்கட்டிடத்துக்குள் உள்ள வங்கியில் எனக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் வேலை செய்கின்றார்.

அதனால்தான் அதை ஞாபகம் வைத்திருந்தேன். மீண்டும் என்னை கனடாவுக்கு அழைத்துச்சென்றதற்கும் அதில் என் தம்பியின் பங்கு இருந்ததற்கும் பெருமையாக இருந்தது இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 24: பாலங்களை எரிப்பதில்லை

எனது அப்போதைய மேலாளருக்கு சந்தேகம் வராதபடிக்கு எனது நேர்முகத் தேர்வை முடித்துவிட்டிருந்தேன். :D ஓரிரு கிழமைகள் கழிந்திருக்கும். எனக்கு வேலையை வழங்குவதற்கான விருப்பக் கடிதம் வந்து சேர்ந்தது. அவர்கள் முதலில் குறிப்பாகச் சொன்ன தொகையிலிருந்து சம்பளம் ஒரு ஐயாயிரம் குறைந்திருந்தது. அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. :wub:

எனது ஒரே எண்ணம் கனடாவில் பிரபலமாக உள்ள கட்டுமான முறைகளைக் கற்றுத் தேர்வது.

இப்போது எனது பழைய மேலாளரிடம் சென்று செய்தியைச் சொல்லவேண்டும். ஆனால் ஏதும் கறள் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.unsure.gif

அந்தக் கிழமை வெள்ளிக்கிழமை எல்லோரும் வேலை முடிந்து போய்விட்டார்கள். ரிம் மட்டும் தனது அலுவலகத்தில் இருந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

"உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்."unsure.gif

"ஓ.. என்ன விசயம்?"

"எனக்கு இன்னொரு வேலைக்கு விருப்பக்கடிதம் வந்துள்ளது." unsure.gif

அவரின் முகத்தில் கவலைரேகைகள் தெரிய ஆரம்பித்தது.

"நீங்கள் அதை ஒத்துக்கொண்டு விட்டீர்களா?" :huh:

"இல்லை.. உங்களிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுப்பேன்." unsure.gif

"நான் அதன் பிரதியைப் பார்க்கலாமா?"

"ஓ.. தாராளமாக.."

கொடுத்தேன். என்னுடைய விருப்பம் போய்வா ராசா என்று அவர் சொல்லி அனுப்ப வேண்டும் என்பது. :lol:

"ஜீசஸ்.. உங்களுக்கு இவ்வளவு கிராக்கி இருக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. என்னுடைய மேலாளரிடம் பேசிவிட்டு உங்களுடைய இந்த இலக்கத்தை இங்கேயே பெற்ருத்தரமுடியுமா எனப் பார்க்கிறேன். இரண்டு நாட்கள் அவகாசம் தாருங்கள்." :huh:

"தாராளமாக.. இங்கே வேலை செய்வதே என் விருப்பமும் ஆகும்..!" (பொய்) :lol:

நாங்கள் நடந்து, கடந்துவந்த பாலங்களை எரிக்காமல் விடுவதே புத்திசாலித்தனமாகும். எவ்வளவு இடைஞ்சல்கள் இடையில் வந்திருந்தாலும்.. unsure.gif

இரண்டு நாட்கள் கடந்தன. ரிம் என்னிடம் வந்தார்..

"பேசிப் பார்த்தேன்.. எங்கள் வியாபாரத்தின் அளவுகளுக்கு இது அதிகம்.. கனிமவள நிறுவனங்கள் வல்லூறுகள் மாதிரி வளைத்துப் போடுகிறார்கள் என்று எனது மேலாளர் திட்டினார்.." sad.gif

"நன்றிகள் ரிம்.. எனது தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கும்போது இதை மறுதலிக்க முடியாதுள்ளது. ஆகவே நான் உங்களிடமிருந்து விலகுவதே சரியாக இருக்கும்."unsure.gif

"சரி.."

இரண்டு கிழமைகள் கழிந்து ஒரு வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தில் எனது இறுதிநாள். என் மனைவியையும், மகளையும் வருமாறு கேட்டிருந்தார்கள்.

அன்று பிற்பகல் எங்களை ஒரு அலுவலக அறைக்கு வருமாறு கேட்டார்கள். அங்கே சென்றால் அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். கேக் வெட்ட வைத்து ஒரு மாதிரி ஆக்கிவிட்டார்கள். :D

ரிம் அங்கே பேசும்போது பிரிந்து செல்லும் ஊழியர்களுக்கு தாங்கள் இரண்டுவிதமாக கேக் வெட்டுவதாகவும், சிலருக்கு அவர்களின் இறுதிநாளிலும், வேறு சிலருக்கு அவர்கள் வேலையால் சென்றாற்பிறகும் என்று குறிப்பிட்டார். :lol:

எனது பெயர் பொறித்த அந்த நிறுவனத்தின் பேனாவும், இன்னுமொரு நினைவுப் பரிசும் வழங்கினார்கள். எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அடுத்த நேர்முகத் தேர்வுக்கு உதவும். :wub:

(தொடரும்.)

கலைஞரே, ஏன் நீங்கள் சொந்த்மகா தொழில் தொடங்கவில்லை ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரே, ஏன் நீங்கள் சொந்த்மகா தொழில் தொடங்கவில்லை ?

சட்டரீதியில் நான் இப்போது இங்கே ஒரு பொறியியல் நிறுவனம் தொடங்க முடியும். ஆனால் ஓய்வுபெறும்வரையில் இந்த நாட்டில் குடியிருப்பதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். :unsure:

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. தொழிலை ஆரம்பநிலையில் இருந்து தொடங்குவதை விட ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி அதைச் செம்மையாக வழிநடத்திப் பெருப்பித்தல் நல்லது. ஆனால் அப்படிச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.. :D

நல்லதொரு பதிவு. நல்ல நல்ல முக்கியமான தலைப்புக்களில் எழுதுகிறீர்கள்.

வேலையில் 'கடந்து வந்த பாலங்களை எரிப்பதில்லை' என்பது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி. வேலைகளை விட்டு விலகி வரும் பொழுது, சிவாஜியைவிட உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும். அடுத்த வேலைகளுக்கு நல்ல Reference கிடைக்கும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போகும் பொழுது, தற்காலிகமாக அவர்களின் வேலைகளை எடுத்துச் செய்யக் கூடியதாக இருக்கும்.

தாயக நாட்டுப்பற்றும் தொழில்திறமையும் உள்ளவர்கள் பலவழிகளில் கட்டாயம் உதவேண்டும், உதவுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டரீதியில் நான் இப்போது இங்கே ஒரு பொறியியல் நிறுவனம் தொடங்க முடியும்.

:unsure: :unsure: :unsure:

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. தொழிலை ஆரம்பநிலையில் இருந்து தொடங்குவதை விட ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி அதைச் செம்மையாக வழிநடத்திப் பெருப்பித்தல் நல்லது. ஆனால் அப்படிச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.. :D

உங்களின் அனுபவத்தை வைத்து சொந்த தொழில் ஆரம்பிப்பது கூடிய சுதந்திரத்தை தராதா??.எலி வளையானாலும் தனி வளை வேண்டுமென்பார்களே??

  • கருத்துக்கள உறவுகள்

சட்டரீதியில் நான் இப்போது இங்கே ஒரு பொறியியல் நிறுவனம் தொடங்க முடியும். ஆனால் ஓய்வுபெறும்வரையில் இந்த நாட்டில் குடியிருப்பதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். :unsure:

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. தொழிலை ஆரம்பநிலையில் இருந்து தொடங்குவதை விட ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி அதைச் செம்மையாக வழிநடத்திப் பெருப்பித்தல் நல்லது. ஆனால் அப்படிச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.. :D

லண்டனில் வந்து செட்டிலாகும் ஜடியாவில் தானே இருக்கிறீங்கள் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வந்து செட்டிலாகும் ஜடியாவில் தானே இருக்கிறீங்கள் :lol: :lol: :lol:

இதைவிட நேரடியான வார்த்தை இல்லை.

புரிஞ்சா புரிஞ்சுக்கோ

இல்லாட்டி போங்கப்பா... :wub::lol::D

லண்டனில் வந்து செட்டிலாகும் ஜடியாவில் தானே இருக்கிறீங்கள் :lol: :lol: :lol:

ஆஆஆ இது அநியாயம். இசை அண்ணா கொழும்பில் எல்லாம் செட்டிலாகமாட்டார்.... :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ இது அநியாயம். இசை அண்ணா கொழும்பில் எல்லாம் செட்டிலாகமாட்டார்.... :lol: :lol: :icon_idea:

அதை அவரே வந்து சொல்லட்டும் பார்ப்போம் ^_^:lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு. நல்ல நல்ல முக்கியமான தலைப்புக்களில் எழுதுகிறீர்கள்.

வேலையில் 'கடந்து வந்த பாலங்களை எரிப்பதில்லை' என்பது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி. வேலைகளை விட்டு விலகி வரும் பொழுது, சிவாஜியைவிட உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும். அடுத்த வேலைகளுக்கு நல்ல Reference கிடைக்கும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போகும் பொழுது, தற்காலிகமாக அவர்களின் வேலைகளை எடுத்துச் செய்யக் கூடியதாக இருக்கும்.

அதுபோல ஏற்கனவே வேலைசெய்யும் நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். :unsure: துரோகிப் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது..! :lol:

அண்மையின் எனக்கு அப்படி ஒரு அழைப்பு வந்தது. மறுப்பது கஷ்டமாக இருந்தது.. :wub: ஆனாலும் இந்த ஒரு காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. :unsure:

தாயக நாட்டுப்பற்றும் தொழில்திறமையும் உள்ளவர்கள் பலவழிகளில் கட்டாயம் உதவேண்டும், உதவுவார்கள்.

எல்லாம் தாயக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பொறுத்து இருக்கு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 24: பாலங்களை எரிப்பதில்லை

எனது ஒரே எண்ணம் கனடாவில் பிரபலமாக உள்ள கட்டுமான முறைகளைக் கற்றுத் தேர்வது.

நாங்கள் நடந்து, கடந்துவந்த பாலங்களை எரிக்காமல் விடுவதே புத்திசாலித்தனமாகும். எவ்வளவு இடைஞ்சல்கள் இடையில் வந்திருந்தாலும்..

உங்கள் விடாமுயற்சி இந்தத் தொடரிலே தெரிகின்றது. அறிந்தவை எப்போதுமே சிறியவைஅறியாதவை அதைவிடப் பெரியவை. நீங்கள் உங்கள் துறையில் இன்னும் வளர என் வாழ்த்துகள் :D

அதுபோல ஏற்கனவே வேலைசெய்யும் நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். :unsure: துரோகிப் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது..! :lol:

அண்மையின் எனக்கு அப்படி ஒரு அழைப்பு வந்தது. மறுப்பது கஷ்டமாக இருந்தது.. :wub: ஆனாலும் இந்த ஒரு காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. :unsure:

உண்மை.

கழுவிற மீனில நழுவிற மீனாய் இருக்க வேண்டும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அனுபவத்தை வைத்து சொந்த தொழில் ஆரம்பிப்பது கூடிய சுதந்திரத்தை தராதா??.எலி வளையானாலும் தனி வளை வேண்டுமென்பார்களே??

நான் தனி ஒரு ஆளாக முதலில் ஆரம்பித்து வருடத்திற்கு 2000 மணித்தியாலங்களும் வேலை செய்தாலும் (நடப்பது கஷ்டம்) 2000*$125=$250,000 என்பது கணக்கு. ஆரம்பத்தில் வேலைகளை எடுப்பதே சிரமம். அப்படி எடுத்தாலும் பணம் வருவதில் இழுபறி காணப்படக்கூடிய நிலைமையும் வரலாம். :unsure: ஆக, என்னுடைய கணக்கின்படி நான் தனி ஒரு ஆளாக வேலை செய்வதில் பிரியோசனம் இல்லை.

ஆனால் ஒரு நிறுவனமாக உள்ளபோது, அதில் வேலை செய்யும் ஒவ்வொருவரின் உழைப்பில் இருந்தும் ஒரு பங்கு வரும். அப்படியான ஒரு சந்தர்ப்பம் அமையுமானால் யோசிக்கலாம்.

லண்டனில் வந்து செட்டிலாகும் ஜடியாவில் தானே இருக்கிறீங்கள் :lol:

இதைவிட நேரடியான வார்த்தை இல்லை.

புரிஞ்சா புரிஞ்சுக்கோ

இல்லாட்டி போங்கப்பா... :wub::lol::D

விசுகு அண்ணா.. எனக்கு விளங்குது.. :unsure: லண்டனில் வருமானவரி குறைவு.. அப்பிடித்தானே?? :D

ஆஆஆ இது அநியாயம். இசை அண்ணா கொழும்பில் எல்லாம் செட்டிலாகமாட்டார்.... :lol:

அதை அவரே வந்து சொல்லட்டும் பார்ப்போம் ^_^

தமிழினி.. வேல்ஸ், ஸ்கொட்லண்ட் பக்கம் பரவாயில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 24: பாலங்களை எரிப்பதில்லை

மிக உண்மையான விஷயம். நான் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிறிய கணக்கியல் நிறுவனத்தில் பகுதி நேரம் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது தான் நான் இப்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு சத்தம் போடாமல் விண்ணப்பித்து விட்டு இருந்தேன். நேர்முகத் தேர்வுக்கும் கள்ளமாகவே சென்றேன். எனது ஒரே பயம் எனது அப்போதைய நிறுவன முதலாளி அம்மாவைத் தான் எனது refree ஆகப் போட்டிருந்தேன். தப்பித் தவறி புதிய நிறுவனம் என்னைப் பற்றி அறிய அவவுக்கு போனடிச்சால் மனிசி குழம்பி விடும். கடவுளே எண்டு எனக்கு வேலை தருவது உறுதியாகிய பின் தான் எனது தற்போதைய நிறுவன மேலாளர், "can we call your refrees?" எனக் கேட்டார். இதற்கிடையில் நான் மெதுவாக அவவிடம் எனக்கு புதிய வேலை ஒண்டுகிடைக்கும் போல இருக்கு எண்டு மெதுவாக கூறி கடிதத்தை காட்டினேன். கடிதத்தை வாங்கிப் பாத்த மனிசி ஏற்கனவே வேலை கிடைசிட்டுதே பிறகென்ன எண்டு கேட்டா. அதோட அதில போட்டிருக்கிற சம்பளமும் எனக்கு கூடிப் போச்சுது எண்டு சொன்னா, ஏனென்டால் நான் அப்போது யூனி கூட முடிக்கவில்லை, இறுதி சோதினை எடுக்க வேண்டி இருந்திச்சு. கடைசியில "happy for you" எண்டு சொல்லி நல்ல reference உம் தந்தா. அதன் பிறகு நடந்த அலுவலக கிறிஸ்மஸ் பாட்டி அது இது எண்டு எல்லாத்துக்கும் அவர்கள் என்னையும் அழைப்பதுண்டு. சுமுகமாக பிரிவது சிலவேளைகளில் கொஞ்சம் கஷ்டம்.

நான் தனி ஒரு ஆளாக முதலில் ஆரம்பித்து வருடத்திற்கு 2000 மணித்தியாலங்களும் வேலை செய்தாலும் (நடப்பது கஷ்டம்) 2000*$125=$250,000 என்பது கணக்கு. ஆரம்பத்தில் வேலைகளை எடுப்பதே சிரமம். அப்படி எடுத்தாலும் பணம் வருவதில் இழுபறி காணப்படக்கூடிய நிலைமையும் வரலாம். :unsure: ஆக, என்னுடைய கணக்கின்படி நான் தனி ஒரு ஆளாக வேலை செய்வதில் பிரியோசனம் இல்லை.

ஆனால் ஒரு நிறுவனமாக உள்ளபோது, அதில் வேலை செய்யும் ஒவ்வொருவரின் உழைப்பில் இருந்தும் ஒரு பங்கு வரும். அப்படியான ஒரு சந்தர்ப்பம் அமையுமானால் யோசிக்கலாம்.

ஆரம்பத்தில் உங்களைப் போல் ஒரே துறையில் உள்ளவர்கள் இணைந்து ஆரம்பிக்கலாம். ஆனாலும் வியாபாரம் முதல் மூன்று வருடங்களிற்கு பெரிதாகப் பணம் பண்ணாது. ஓய்வு பெறுபவர்கள் இணைந்து நிறுவனம் ஆரம்பிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

உங்களுக்கு நிறுவனம் ஆரம்பிக்கும் ஐடியா இருந்தால்.. இப்போது தொழில்நுட்பப்பகுதியில் மாத்திரம் வேலை செய்கிறீர்கள் என்றால்.. மெதுவாக இப்போது வேலை செய்யுமிடத்திலேயே அதன் வியாபாரப்பகுதியில் (Sales) நடக்கும் விசயங்களிலும் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறையப் படிப்பீர்கள். தொடர்புகளும் வரும். பிற்காலத்தில் அங்கு வேலை செய்பவர்களும் உதவுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் தும்பளையான்..

ஆரம்பத்தில் பணம் வராது என்பதுதான் எனது காரணமும். கனடாவிலேயே வாழ்க்கையை ஓட்டுவதில்லை என்கிற முடிவில் இருப்பதனால் தனிக்கடையில் ஆர்வம் வருகுதில்லை.. :D

எங்கள் துறையில் முதுநிலைக்கு வரும்போது வியாபாரம் செய்யவேண்டியதும் கட்டாயம் ஆகின்றது. இப்படிச் செய்யாதவர்கள் பிந்தள்ளப்பட்டு விடுவார்கள். நாங்கள் வேலை செய்யும் ரெண்டர்கள் வெற்றிகரமாக முடிந்தால்தான் எங்களுக்கே வேலை இருக்கும்.. :D நிறுவனத்தின் வருவாய்தான் எங்கள் வெற்றி.

எனது நிறுவனத்திலேயே என்னை சிலர் கேட்பார்கள்.. ஏன் தனியாக நிறுவனம் ஆரம்பிக்கவில்லையென்று. நான் ஆரம்பித்தால் நான் இப்போது வேலை செய்யும் நிறுவனமே எனக்கு வேலைகள் தரும் எனவும் தெரியும். ஆனால் எனது ரொராண்டோ திரும்பும் முடிவு பலவற்றையும் யோசிக்க வைக்கிறது. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 25: புதிய உலகம் (பாதாளம்)

2007 கோடையில் இப்போது வேலைசெய்யும் இடத்திற்கு வந்தேன். எல்லாமே புதிது.. ஊர் மிகவும் சுகாதாரமாக இருந்தது. ஒரு தொழிற்சாலைகளும் இல்லை.. வாகனங்களும் குறைவு. மூன்று பெரிய குளங்கள்.. குளம் என்றால் ஊரின் குளங்கள் மாதிரி அல்ல.. :D மறு கரையே தெரியாது.. :wub:

தலைமை அலுவலகத்தில் வேலை. அங்கே ஒரு 150 ஊழியர்கள். நிறுவனத்தில் மொத்தமாக 1500 ஊழியர்கள். எங்கள் நிறுவனத்தை ஒரு தென்னாபிரிக்க நிறுவனம் வாங்கியிருந்தது. அவர்களுக்கு லண்டனிலும் கிளைகள் உண்டு. :lol:

நான் ஒரு முதுநிலைப் பொறியியலாளராகச் சேர்ந்திருக்கிறேன். கொக்கிரீட் தொழில் நுட்பத்தில் எனக்கிருந்த தேர்ச்சி காரணமாகவே என்னை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். கனடாவில் குளிர் அதிகமானதால் கொங்கிரீட்டில் கட்டுவது குறைவாக இருந்தது. அதனால் அதில் தேர்ச்சி பெற்றவர்களும் குறைவு. ஆனால் இப்போது காலம் மாறிக்கொண்டு வருவதனால் ஆள் பற்றாக்குறை.

எங்களது நிறுவனம் ஒரு கட்டுமான நிறுவனம். உலோகங்கள் இருக்கும் ஆழமான பகுதிகளுக்கு வழி சமைப்பதே எமது வேலை.. இதை Shaft Sinking என்று சொல்வார்கள். :D

அங்கே ஒரே ஒரு இளநிலைப் பொறியியலாளர்தான் (என்னை நேர்முகத்தேர்வு செய்தவர்களில் ஒருவர்.) நல்ல திறமையான பையன். எமது நிறுவனத்தின் அப்போதைய வயது 9. அதனால் ஒரு ஒழுங்கமைப்பு இருக்கவில்லை. 1998 இல் 5 பேருடன் தொடங்கிய நிறுவனம் அபாரமான வளர்ச்சி கண்டுவிட்டிருந்தது. :unsure:

ஏதோ ஒரு புதிய வேலைத்திட்டம் இருப்பதாகவும் அதற்காகத்தான் என்னைச் சேர்த்ததாகவும் முதலில் பேசிக்கொண்டார்கள். ஆனால் எனக்கு சிறுசிறு வேலைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன.. :unsure: சத்தம் போடாமல் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவதானிக்க ஆரம்பித்தேன். :unsure:

இடையிடையே அங்கே எவ்வாறு வேலைகளை வடிவமைக்கிறார்கள் என்பதை வரைபடங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் அடக்கமான மாணவனாக விடயம் தெரிந்தவர்களுடன் உரையாடி தெளிவு பெற்றுக்கொள்வது வழமை.. :D

இதற்குள் இரும்பினால் வடிவமைக்கும் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சிறுசிறு வேலைகள் செய்துகொண்டிருந்ததால் பெரிய பிரச்சினைகள் ஏதும் வரவில்லை. அப்போது எனக்கு அலுவலக அறை ஒதுக்கப்படவில்லை. கியூபிக்கிள்தான். அது ஒரு முதுநிலைப் பொறியியலாளருக்குக் குறைவான மரியாதை. இது முதலில் எனக்கு ஒரு குறையாகத் தோன்றவில்லை. unsure.gif

ஆனால் அங்கே ஒரு அலுவலக அறை யாருக்காகவோ அவரின் பெயரிட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. அது வெறுமையாகவே இருக்கும். மூன்று மாதங்கள் கழித்து அவர் வந்து சேர்வார் என சொன்னார்கள். நானும் யாரோ ஒரு பெரிய மேலாளராக்கும் என்று விட்டுவிட்டேன்.. :unsure:

மூன்று மாதங்கள் கழித்து அவர் வந்து வேலையில் சேர்ந்தார். பார்த்தால் அவரும் என்னைப்போல ஒரு முதுநிலைப் பொறியியலாளர்தான். என்னடா இது ஒரு கண்ணுக்கு வெண்ணை.. இன்னொன்றுக்கு சுண்ணாம்பா என்று கடுப்பாகிவிட்டேன்.. :unsure:

(தொடரும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.