Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலைச் சொல்லிவிட்டான்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலைச் சொல்லிவிட்டான்..!

அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். :rolleyes: காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது.

அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. :(

"கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" :unsure:

"சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." :(

சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுச் செல்கிறாள். :rolleyes:

காதலியிடம் சென்றுவிட்டான்.. ஆனால் காதலில் வென்றுவிட்டானா? :unsure: அவன் மனதில் குழப்பங்கள். இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதுபோன்ற உணர்வு.. ஒரு நிலையில் நிற்க முடியவில்லை..

அவளோ ஒரு பட்டாம்பூச்சி.. :wub: வெள்ளந்தியாக மற்றவர்களிடம் அதிகம் சிரித்துப் பேசுவாள்.. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

காதலன்.. காதலி.. இந்த இருவரின் வெவ்வேறான மன உணர்வுகளையும் இசையால் சொல்ல முடியுமா? :unsure:

இப்போது காட்சியைக் காணுங்களேன்.. :rolleyes:

(பாடல் அலசல் தொடரும்.) :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இசைக்கு வருவோம்.. :rolleyes:

மேற்கத்தைய இசை முறையில் Chords எனும் ஒரு நுட்பம் உண்டு. வீணை, புல்லாங்குழல், வயலின் போன்றவற்றில் ஒரு கணத்தில் ஒரு சுரம்தான் வெளிப்படும். ஆனால் பியானோ, கிட்டார் போன்றவற்றில் ஒரு பொழுதில் மூன்று அல்லது நான்கு சுரங்களைச் சேர்த்து வாசிக்கலாம். இதற்கு கோர்ட்ஸ் என்று பெயர்.

கோர்ட்சில் பல பிரிவுகள் உண்டு.. ராகங்களுக்கேற்ப அவற்றின் சுரங்கள் வேறுபடும். இரண்டு பெரும் பிரிவுகள் இந்த நுட்பத்தில் உள்ளன.

  1. மேஜர் கோர்ட்ஸ்
  2. மைனர் கோர்ட்ஸ்

மேஜர் பெரும்பாலும் மகிழ்ச்சியான, உற்சாகமான உணர்வுகளைக் கொடுக்கக்கூடியது. மைனர் எதிர்மறையானது. இவை விதிகளல்ல. ஆனால் இவற்றின் பொதுவான தன்மைகள் இவ்வாறு காணப்படும்.

இந்தப்பாடலில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் நாதம்..

Scale: A B C D E F G

Chords: A மைனர், C மேஜர், D மைனர், G மேஜர்..

பாடலின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேஜர், மைனர் என்று வருவது இன்னும் சிறப்பு.. :rolleyes:

பல்லவி இவ்வாறு ஆரம்பிக்கிறது..

உறவெனும் புதியவானில்

பறந்ததே இதய மோகம்

ஓடும் அலை என மனம் போகும்..

கனவிலும்.. நினைவிலும்..

புதுசுகம்..

நீலத்தில் உள்ளது சோகம் இழையோடும் பகுதி.. Aமைனர் Dமைனர் உபயோகிக்கப்படுகிறது.. பச்சையில் உள்ள பகுதியில் ஒரு வெளிச்சம் அல்லது உற்சாகம் பிறக்கிறது.. இதில் G மேஜருக்கு வந்து C மேஜரில் முடிக்கிறார் இசையமைப்பாளர்.. :wub:

(தொடரும்..)

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் சும்மா பாட்டுக் கேட்பதோடு சரி இசையை பற்றி ஒரு அறிவும் கிடையாது :D ...உங்கள் பதிவு நல்லாயிருக்குது தொடருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றிகள் ரதி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இசையைப்பற்றி அதிகம் தெரியாது.

இருந்தாலும் இது இசையை ரசிப்பவர்களுக்கும்

அதனுடன் தொடர்புடையவர்களுக்கும்

உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

வித்தியாசமான பதிவாக இருப்பதால்

நானும் தொடர்ந்து வாசிப்பேன் இசை

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி முடிந்ததும் 1:37 இல் இருந்து இசை தொடங்குகிறது. A மைனரில் கிட்டார் மீட்டலுடன் (Strumming) ஆரம்பிக்கும் இசையில் சிறிது சோகரசம் தெரிகிறது.. :rolleyes: ஆனால் சோகம், மகிழ்ச்சி இரண்டையும் கலந்து தரவேண்டுமல்லவா.. யாரும் வேறுபாட்டை அறிய முன்னர், 2:00 நேரக்கணக்கில் வயலின் இசையைப் புகுத்தி 2:04 நேரக்கணக்கில் மேஜர் வந்துவிடுகிறது.. :D மகிழ்ச்சியான ஒரு இசை வெளிப்படும் இடம் இது.. :rolleyes: இது அப்படியே மகிழ்ச்சியான மனநிலையுடன் சரணத்துக்குள் செல்கிறது..

சரணம்

பார்வை ஒவ்வொன்றும் கூறும்

பொன்காவியம்

பாவை என்கின்ற கோலம்

பெண் ஓவியம்..

மாலைவரும்போதிலே

நாளும் உந்தன் தோளிலே

கனவிலாடும்..

நினைவு யாவும்..

கனவிலாடும்..

நினைவு யாவும்..

இனிய பாவம்..

இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களில் அனுசுரங்களின் பாவனை அதிகமாக இருக்கும்.. ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் இவற்றைப் புகுத்திவிடுவார்.. அனுசுரம் என்பது பாடலின் ராகத்தில் உள்ளடங்காத ஒரு சுரத்தைப் பாவித்தல் ஆகும்.. :rolleyes:

முதல் சரணத்தில் பொன்காவியம், பெண் வியம் என்று பாடும்போது கவனியுங்கள்.. சிவப்பினால் காட்டப்பட்டுள்ள இடங்களில் வருவது அனுசுரம்.. ராகத்தில் இல்லாத G# சுரத்தை இவ்விடங்களில் பாவிக்கின்றார்.. :rolleyes: அது ஒரு மாறுபட்ட சுவையைக் கொடுக்கின்றது..

(தொடரும்..)

இசையை இரசிப்பன் இசை! ஆனால் என்னுடைய இசைப்பயணம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பயணம் என் பள்ளிக்கூட மேசையைவிட்டு வந்த நாளோடயே முடிஞ்சு போச்சு... :(:lol: :lol: :lol: :lol:

#தாளம் போட்டு ரொம்ப நாளாச்சு - அது ஒரு கனாக்காலம்# :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை நான் சும்மா பாட்டுக் கேட்பதோடு சரி இசையை பற்றி ஒரு அறிவும் கிடையாது :D ...உங்கள் பதிவு நல்லாயிருக்குது தொடருங்கோ

தங்கச்சி மாதிரி நானும் பத்தோடை பதினொண்டு :):D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி எழுதுங்கள் இசை அண்ணா. நீங்களும் கிட்டார் வாசிப்பவர் எண்டு இப்பத்தான் ஞாபகம் வந்திச்சு. நானும் Accoustic வாசிக்கிறனான், ஆனால் இப்ப கிட்டாரைத் தொட்டு கன காலம். ஊரிலே சும்மா லோக்கல் கிட்டார்கள் தான் இருந்தது. இங்க வந்து ஒரு Yamaha, ஓர் Gibson எண்டு வாங்கி வச்சிருக்கிறன். நான் விட்ட பிழை, ஒருநாளும் முறைப்படி கிட்டார் படிக்கவில்லை. எப்பவுமே ear music தான்.

அருமையான ஆய்வு. இந்தப்படமும் பாடல்களும் மிகப் பிடித்தமானவை. இந்தப் பாட்டு வித்தியாசமானது என்று ஒரு உணர்வு. ஆனால் இதற்குப் பின்னால் இவ்வளவு விளையாட்டு இருக்கிறது என்று தெரியாது.

இசையில் நல்ல ஆர்வம். இசைக்கருவிகள் பழகச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'ட்ரம்ஸ்' கொஞ்சக் காலம் பழகியிருக்கிறேன். '

'கிட்டார்' ஒன்று வாங்கிப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் வாத்தியார், கவிதை, குமாரசாமி அண்ணா, தும்பளையான், தப்பிலி.. :D

தும்ஸ், தப்பிலி.. வாங்கி வச்சிருந்தால் மட்டும் காணாது.. :D அப்பப்ப தட்டியும் பார்க்க வேணும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இசையைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லை.

காதுக்கு இனிமையாக... இருந்தால், கேட்பதுடன் சரி00008986.gif.

இசைகலைஞனின் பதிவுகள் மூலம் ஏதாவது பயன் கிடைக்கும் என நம்புகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கனவிலாடும்..

நினைவு யாவும்..

இனிய பாவம்..

(தொடரும்..)

இந்தவரிகள் எங்களில் பலருக்குப்புரிவதில்லை தொடருங்கள் உங்கள் இசைப்பயணத்தை இசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3:18 நேரக்கணக்கில் ஆரம்பிக்கும் கிட்டார் இசை மைனர் வடிவில் சோகரசத்துடன் 3:32 வரை சென்று புல்லாங்குழல் இசையுடன் மகிழ்ச்சிக்குரியதாக (மேஜர்) மாறுகிறது.. :rolleyes: 3:49 இல் நுழையும் ஒற்றை வயலின் இசை சோகத்தைக் கொண்டுவந்து 4:01 வரை இசையை நகர்த்திச் செல்கிறது..

பிறகு அது வயலின் இசைத்தொகுப்பாகி 2:05 4:05 நேரக்கணக்கில் பியானோவின் இசைச் செருகலுடன் மகிழுணர்வுக்குள்(Euphoria) ரசிகர்களைக் கொண்டு செல்வதைக் கவனியுங்கள்.. :D ஏனென்றால் சரணத்தின் ஆரம்பம் மேஜரில் இருக்கவேண்டும் என்பதால்.. :D

இறுதிப்பல்லவியை (உறவெனும்) எஸ்.பி.பி. பாடுகிறார்.

உறவெனும் புதிய வானில்

பறந்ததே இதய மோகம்..

ஓடும் அலை என மனம் போகும்..

கனவிலும் நினைவிலும் புதுசுகம்..

"என மனம்" என்கிற வார்த்தைகளில் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கவனியுங்கள்.. ஜானகி அவர்கள் பாடியதைவிட வித்தியாசமாக இருக்கும்.. :rolleyes: காதலன் கெஞ்சுவதுபோல இருக்கு.. :D

பாடலின் பெரும்பாலான பகுதிகளில் தாளவாத்தியம் எதுவும் உபயோகிக்கப்படவில்லை.. :rolleyes: ஆனால் அதை உணர்ந்துகொள்வது கடினம். பேஸ் கிட்டாரை உபயோகித்து தாளம் மாதிரி செய்துவிட்டிருக்கிறார்.. இது மிகவும் சிக்கலான ஒரு உத்தி.. சரியான நோட்ஸ் கொடுக்கவில்லை என்றால் பாடலின் மூட் கெடுவதுடன் தாளமில்லாததுபோன்ற ஒரு நிலையும் தோன்றிவிடும்.. :rolleyes:

ஒரு பாடலை சூழ்நிலைக்கேற்ப இசையமைப்பது என்பது பெரிய வித்தை.. பாடலின் மெட்டு நன்றாக இருந்தால் பாடல் 50% மட்டுமே பூர்த்தியாகும். மிகுதியைக் கொண்டு நகர்த்துவது பின்னணி இசைதான்.. சந்திரபோஸ், சங்கர் கணேஷ் போன்றவர்கள் மெட்டை நன்கு அமைத்தாலும் பின்னணி இசையில் அக்கறை செலுத்தாமையால் அதிகம் பாடல்கள் நிலைபெறவில்லை.

(நிறைந்தது.)

கேள்வி-பதில்:

இந்தப் பாடலில் வரும் மோகன் கதாபாத்திரம் யாழ்களத்தில் யாராக இருக்கும்? :D

Reason for Editing: நேரக்கணக்கில் ஏற்பட்டிருந்த பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.

Edited by இசைக்கலைஞன்

மிகவும் சுவாரசியமானதும் பயனுள்ளதுமான பதிவு. மிக்க நன்றி. தொடருங்கள் இதுபோன்ற பதிவுகளை.

சில பாடல்கள் ஏனென்று தெரியாமல் அதிகம் பிடித்துப்போய்விடுகின்றன. ஞாபகங்கள், சந்தர்ப்பஙகள் போன்றனவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எமது கடந்த கால அனுபவங்கள், மற்றும் எந்தச் சூழ்நிலையில் முதலில் அந்தப் பாடலில் நாம் லயித்தோம் என்பதில் தான் எமது அப்பாடல் பற்றிய உணர்வுகள் அனைத்தும் அமைகின்றனவா, அல்லது ஒவ்வொரு மனிதனிற்கு அவனது தன்மை சார்ந்து ஒவ்வொரு ராகங்களில் ஈர்ப்பு உண்டாகுமா? 'உனது நண்பரைக் காட்டு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற பழைய வசனம் போல 'பிடித்த ராகத்தைச் சொல்லு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற இருக்க முடியுமா?

உங்களிற்கு நேரமிருப்பின், இரு கேள்விகள்

1) பிரியா படப்பாடல்கள் (குறிப்பாக டாலிங் டாலிங் மற்றும் அக்கரைச்சீமை அழகினிலே) கேட்கும் போது, அது எங்கே எப்போ கேட்கிறேன் என்றில்லாமல் பின்வரும் சூழல் எனக்குள் விரிவதை அவதானித்திருக்கிறேன்: மப்பும் மந்தாரமுமான, கருமேகம் நிறைந்து சாதுவான தூறல் இருக்கின்ற ஒரு பொழுது. ஏதோ ஒரு மலர்--அதுவும் அதிகம் புழக்கத்தில் உள்ள பழகிப்போன மலரில்லாமல்-- சீமைக்கிளுவை (கிளுசரியா) போன்ற மலரின் வாசம் கமழ்வதாவும், மனிதர்கள் எல்லாம் ஏதோ ஒரு கிறங்கிய அல்லது சிருங்கார மனநிலையில் உலவுவது போன்றும் உணர்ந்துள்ளேன். மேற்படி பாடல்களில் இவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கும் இசைக்கோர்வைகள் ஏதேனும் இருக்கின்றனவா? அல்லது, வெறுமனே இப்பாடல்கள் எனக்குள் புகுந்த கணத்தின் ஞாபங்கள் தான் இவையா?

2) அதுபோன்றே மூடுபனியினின் என் இனிய பொன்னிலாப் பாடலையும் நேரம் கிடைப்பின் உங்கள் பாணியில் பிரித்து மேய்ந்தீர்கள் ஆயின் என்னைப் போன்றவர்களிற்கு மகிழ்வளிக்கும்.

உங்கள் நேரத்திற்கு முற்கூட்டியே மனதார்ந்த நன்றிகள்.

நன்றிகள் இசை அண்ணா இப்பிடியான ஒரு தொடரை /விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்கு எங்களவர்கள் மத்தியில் இசை சம்பந்தமான ஆக்க பூர்வ விமர்சனம்களோ விவாதங்களோ இது வரை என் கண்ணில் படவே இல்லை ஆனால் தமிழக உறவுகளுக்கிடையில் எப்போது பார்த்தாலும் இளையராசா, ரஹ்மான் பற்றிய காரசாராமான விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் நான் நினைப்பது இவர்களுக்கு வேற வேலையே கிடையாதா எப்போது பார்த்தாலும் இளையராஜா ரஹ்மான் எண்பதுகளிலான பாடல்கள் என்று சண்டை பிடிச்சு கொண்டே இருக்கிறார்கள் என்று அவர்களிடயே விவாதம்கள் மிகபெரியளவில் நடப்பது ஒன்று இளையராஜா ரஹ்மான் பற்றியதாக இருக்கும் மற்றையது கிரிக்கெட் சினிமா இலக்கியம் இதை விட்டால் சாதி பிரச்சினைகள் ஆனால் அதிகமான கருத்தாடல்கள் இளையராஜா பற்றி தான் நடந்து இருக்கும் என நினைக்கிறேன் நீங்கள் தமிழகத்தில் அதிக காலம் தங்கி இருந்தது தான் உங்களின் இசை ஆர்வத்தில் அதிக தாக்கம் செலுத்தி இருக்கும் என நம்புகிறேன் JAFFNA இல் இருக்கும் போதே உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்ததா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.... இடயில் கருத்து விட்டிருப்பதால், விட்டு, விட்டு வாசிக்க வேண்டி உள்ளது...ஒன்றாக தொகுத்து போடுங்கள்.

இசை,

இந்தப் பாடலை முன்பு வந்த தரமான ஒலிநாடாவை பாவித்து Nakamichi dragon cassette deck இல் கேட்டிருக்கிறேன். முன்பு கேட்காத சில சத்தங்களுடன் மிகவும் தரமாக இருந்தது. அதில் கேட்ட எல்லா இளையராஜாவின் பாடல்களும் நன்றாக இருந்தன. அவருடைய பாடல்களில் இடையிடையே சில வாத்தியங்களை மெல்லிய சத்தத்துடன் குறைந்த நேரத்திற்குப் பாவிப்பார். அது தரம் குறைந்த cassette deck இல் துல்லியமாக கேட்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் தமிழ்சிறி, வாத்தியார்..

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் தற்செயலாக பார்த்தேன் இசை.

இசையில் ஆர்வமும் தெளிவுமுண்டு

கவனமாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன்

கருத்துக்கும், கேள்விக்கும் நன்றிகள் இன்னுமொருவன்..

நீங்கள் விவரித்த காட்சிகள் உங்கள் சிறுவயதில் அப்பாடல் உங்கள் மனதில் ரீங்காரமிடும்போது கண்ட காட்சிகளாக இருக்கலாம்.. இவ்வாறு எனக்கும் தோன்றுவதுண்டு.. அந்தப் பாடல்களை திரும்பவும் கேட்க ஆரம்பிக்கும்போது வேறு காட்சிகள் பதிவாகிவிடுகின்றன..

உதாரணமாக, "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்னில் வரைந்தாள்" என்கிற ஒரு பாடல்.. கனடாவுக்கு வந்து இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்துக் கேட்டிருந்தேன்.. அப்போது கொழும்பில் இருப்பதுபோன்ற உணர்வு வரும்.. ஆனால் அதை அடிக்கடி கேட்க ஆரம்பித்ததில் இருந்து காட்சி மாறிவிட்டது.. :D

வேலை கிடைக்காமல் பழைய காரில் அலைந்த நேரத்தில் இப்பாடல் காருக்குள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்போது இப்பாடலைக் கேட்கும்போது வேலை இல்லாமல் அலைந்த ஞாபகம் வந்து ஒரு Gloomy ஆக இருக்கும்.. :D

2) அதுபோன்றே மூடுபனியினின் என் இனிய பொன்னிலாப் பாடலையும் நேரம் கிடைப்பின் உங்கள் பாணியில் பிரித்து மேய்ந்தீர்கள் ஆயின் என்னைப் போன்றவர்களிற்கு மகிழ்வளிக்கும்.

உங்கள் நேரத்திற்கு முற்கூட்டியே மனதார்ந்த நன்றிகள்.

நிச்சயம் செய்கிறேன் இன்னுமொருவன்.. தங்கள் சித்தம்.. என் பாக்கியம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் இசை அண்ணா இப்பிடியான ஒரு தொடரை /விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்கு எங்களவர்கள் மத்தியில் இசை சம்பந்தமான ஆக்க பூர்வ விமர்சனம்களோ விவாதங்களோ இது வரை என் கண்ணில் படவே இல்லை ஆனால் தமிழக உறவுகளுக்கிடையில் எப்போது பார்த்தாலும் இளையராசா, ரஹ்மான் பற்றிய காரசாராமான விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் நான் நினைப்பது இவர்களுக்கு வேற வேலையே கிடையாதா எப்போது பார்த்தாலும் இளையராஜா ரஹ்மான் எண்பதுகளிலான பாடல்கள் என்று சண்டை பிடிச்சு கொண்டே இருக்கிறார்கள் என்று அவர்களிடயே விவாதம்கள் மிகபெரியளவில் நடப்பது ஒன்று இளையராஜா ரஹ்மான் பற்றியதாக இருக்கும் மற்றையது கிரிக்கெட் சினிமா இலக்கியம் இதை விட்டால் சாதி பிரச்சினைகள் ஆனால் அதிகமான கருத்தாடல்கள் இளையராஜா பற்றி தான் நடந்து இருக்கும் என நினைக்கிறேன் நீங்கள் தமிழகத்தில் அதிக காலம் தங்கி இருந்தது தான் உங்களின் இசை ஆர்வத்தில் அதிக தாக்கம் செலுத்தி இருக்கும் என நம்புகிறேன் JAFFNA இல் இருக்கும் போதே உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்ததா?

நானும் இதை அவதானித்திருக்கிறேன் அபராஜிதன்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சாப்பாடு பிடிக்கும்.. :D அதைப் போலத்தானே இதுவும்..? :D

எனக்கு ஈழத்தில் இருந்த காலத்திலேயே இசை ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.. வரும் புதிய மாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்துவிட்டுப் பிறகு தேய்ப்பதே எமது வேலை.. :D

தென்றல் வந்து என்னைத்தொடும் என்கிற பாடல் வந்து அப்போது பிரபலம்.. பாடல் ஆரம்ப இசையுடன் தொடங்கும்.. அதில் வரும் தாளச் சத்தம் பாடல் தொடங்குவதற்கு முன் சில வினாடிகள் நிறுவிடும் (வயலின் இசை ஒலிக்கும்போது..) அந்தத் தாளத்தை அப்படியே வயலினுக்குள்ளும் தொடர்ந்தால் பிசகில்லாமல் சேர்கிறதே என்று ஆராய்ச்சி பண்ணிய அனுபவமும் உள்ளது.. :lol:

மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.... இடயில் கருத்து விட்டிருப்பதால், விட்டு, விட்டு வாசிக்க வேண்டி உள்ளது...ஒன்றாக தொகுத்து போடுங்கள்.

இந்தமுறை கோட்டை விட்டுவிட்டேன்.. :D வரும் திரிகளில் அவ்வாறே செய்கிறேன் வன்னி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை,

இந்தப் பாடலை முன்பு வந்த தரமான ஒலிநாடாவை பாவித்து Nakamichi dragon cassette deck இல் கேட்டிருக்கிறேன். முன்பு கேட்காத சில சத்தங்களுடன் மிகவும் தரமாக இருந்தது. அதில் கேட்ட எல்லா இளையராஜாவின் பாடல்களும் நன்றாக இருந்தன. அவருடைய பாடல்களில் இடையிடையே சில வாத்தியங்களை மெல்லிய சத்தத்துடன் குறைந்த நேரத்திற்குப் பாவிப்பார். அது தரம் குறைந்த cassette deck இல் துல்லியமாக கேட்காது.

நாக்கமுக்கா தெரியும்.. :unsure: அதென்ன நாக்கமிச்சி? :lol:

முன்பு ஒலிப்பதிவின் தரம் சரியாக இல்லாததால் பல பாடல்கள் வீணாகவே போய்விட்டன.. அவற்றை மீள உருவாக்கினாலும் பழையதுபோல் வராது.. வயலின், புல்லாங்குழல் இசையில் இருவர் ஒரே சுரத்தை வாசித்தாலும் தனிநபர் பக்குவம் தெரியும்.. கீபோர்ட் போன்றவற்றி C என்கிற கட்டையை யார் வாசித்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. :D

தற்போதுதான் தற்செயலாக பார்த்தேன் இசை.

இசையில் ஆர்வமும் தெளிவுமுண்டு

கவனமாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன்

தொடருங்கள்

ஆறுதலாகப் பதிவிடுங்கள் விசுகு அண்ணா..

நாக்கமுக்கா தெரியும்.. :unsure: அதென்ன நாக்கமிச்சி? :lol:

'நாகம்மா ஆச்சியில்' :D பாடலைக் கேட்டு விட்டு, நானும் ஒன்று வாங்க முயன்றேன். பழையதே சரியான விலை. :(

இது உலகத் தரம் வாய்ந்த கருவி.

http://www.ebay.com/itm/NAKAMICHI-DRAGON-AUTO-REVERSE-CASSETTE-DECK-/300660464039?pt=LH_DefaultDomain_0&hash=item4600c299a7

யாரோடும் ஒத்து ஊதுவதோடு சரி.

பாகவதர் காலம் தொட்டு விஜயபிரகாஸ் வரை பல சினிமா பாட்டுக்கள் என்ன படம், யார் பாடியது,ஓரளவு வரிகள் கூட மனப்பாடம். ஆனால் இசை பற்றி ,

சூப்பர் சிங்கர் பார்க்க தொடங்கியபின் தான் சங்கதி போன்ற சொற்களே கேள்விப்பட்டது .அவ்வளவு ஞானம் .

தொடர்ந்து எழுதுங்கள் நாங்களும் கொஞ்சம் அறிந்துகொள்ளுவம்.

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.