Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்கள் கல்லறைகளிலிருந்து கண்ணீர் வடிக்க சிங்க கொடியை உயர்த்திப்பிடித்திருக்கும் சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப் பகுதியிலிருந்து கூத்தமைப்பை இல்லாதொழிக்கும் நேரம் நெஉங்கிவிட்டது. இன்னுமொரு அரசியல் இயக்கத்தை தமிழர் தெரிவுசெய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். எமது உரிமையை வென்றெடுக்க நாம் எமக்கென இருந்த தேசியக்கொடியினை கையிலெடுக்கத் தயங்குகிறோம் அனால் எமை அழிக்க, அதே கொடியினை நேற்று எமது எதிரி கையிலெடுத்துள்ளான். சிங்களத்தின் கைக்கூகி டக்ளஸ்சுக்கே தனியான ஒரு கொடி இருக்கு தமிழர் கூத்தமைப்புக்கு என அவர்களது கையில் எக்கொடியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூட்டமைப்பை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை என்று கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்கியவர்கள் நிலை என்ன?ஆது ஏன் அடிக்கடி ஓன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று அடிக்கடி சம்பந்தர் கூறுகிறார்.கிளிப்பிள்ளைதான் யாரோ சொல்லிக் கொடுத்ததை திருப்பிச் சொல்லும்.தமிழினத்திற்கு தலைமை வகிக்க சம்பந்தர் தகுதியற்றவர்.உடனடியாகப் பதவி விலக வேண்டும்.கருணாநிதி எவ்வளவோ மேல் தமிழ் மக்களுக்கு இக்கட்டான கால கட்டத்தில் உதவி செய்யா விட்டாலும் மாவீரர்களின் குறிக்கோளான தமிழ்ஈழம் என்பதை அடிக்கடி சொல்லி நினவு படுத்திக் கொண்டாவது இருக்கிறவர்.கலைஞரை வசைபாடுபவர்கள் சம்பந்தனை தேசியத் தலைவர் என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

மீண்டும் கிழக்கில் இருந்தா இந்தத் தீய சக்தி வரவேண்டும்.நாங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப் போராடிக் கொண்டிருக்கையில் சம்பந்தர் எல்லாவற்றையும் தெற்குக்குள் அடவு வைக்கிறார்.தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி!எல்லாரும் வேட்டியை அவுட்டு தலையில் கட்டிப் போட்டு சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!சீ வெட்கம்...............இப்படிப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தற்காக தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522086_375072339212311_100001286453235_1074497_659277892_n.jpg

thanks-facebook

வெள்ளைக்காரன் லண்டன் மேதினக் கூட்டத்தில் எமக்காகக் குரல்கொடுக்க எமக்குத் தமிழீழம் வேண்டாம் என்று சிங்கக்கொடியைத் தூக்கிப் பிடிககிறார் சம்பந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி முக்கியமல்ல உரிமைதான் முக்கியம்.....

கொடி முக்கியமல்ல உரிமைதான் முக்கியம்.....

கொடி முக்கியமில்லைத்தான், சம்பந்தர் புலிக்கொடி பிடிக்கச்சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை ஆனால் சிறிலங்கா கொடி பிடிப்பது சரியல்ல. அந்தச் சிங்களக் கொடி தமிழர்களுக்கு ஏற்புடையதல்ல. அதுக்குப் பலகாரணங்கள் கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில், சம்பந்தர் எங்கள் காலத்தை வெற்றிகரமாக ;பண்டாரநாயக்கா காலத்திற்குப் பின்நோக்கி நகர்த்துவதில், வெற்றி கண்டுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில், சம்பந்தர் எங்கள் காலத்தை வெற்றிகரமாக ;பண்டாரநாயக்கா காலத்திற்குப் பின்நோக்கி நகர்த்துவதில், வெற்றி கண்டுள்ளார்!

பின்னோக்கி கொண்டு சென்றதுமட்டுமின்றி எமது போராட்டத்தையும் அதற்காக மரணித்த மாவீரர்களையும் அவமதித்துள்ளார்.

கட்டையில போற வயசில இதெல்லாம் எதுக்கு உந்த மனிதனுக்கு.

ஜால்ரா அடிச்சு கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணமோ?

தனியாக மேதின ஊர்வலம் ஏன் வைக்கமுடியாமல் போனது?

அதுவும் சிறீலங்கா கொடியை தூக்கியது புரியாத புதிராகவே உள்ளது?

தனியாக மேதின ஊர்வலம் ஏன் வைக்கமுடியாமல் போனது?

அதுவும் சிறீலங்கா கொடியை தூக்கியது புரியாத புதிராகவே உள்ளது?

நல்ல கேள்வி?

இதை சம்பந்தன், சுமத்திரன், சித்தார்த்தன் தலைமையிலான சோத்துப்பாசல் கும்பல், டக்கியின் ஒட்டுண்ணிக் கும்பல், விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்களிடம் கேட்க வேண்டும்.

சம்பந்தர் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எங்கே போகிறது? முப்பது ஆண்டுகள்வரை நடைபெற்ற நமது வீரமும் தியாகமும்

நிறைந்த விடுதலைப் போராட்டம் இவர்கள்மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்ன செய்வது? ஆழமாகச் சிந்திப்போம், செயல்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் எடுத்தது கொடியல்ல தடி என்பதை சிங்களம் புரிந்து கொள்ளும் காலம் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனியாக மேதின ஊர்வலம் ஏன் வைக்கமுடியாமல் போனது?

அதுவும் சிறீலங்கா கொடியை தூக்கியது புரியாத புதிராகவே உள்ளது?

பெரிய பிலாப்பழங்களுக்கே புரியாத புதிரெண்டால்!!!!!! என்னைப்போலை இருக்கிற கதலிவாழைப்பழங்கள் எங்கை போறது?

  • கருத்துக்கள உறவுகள்

அது தொடர்பான காணோளியில் கொடி ஒரு மூலையில் இருந்து நகர்த்தப்பட்டு, நடுவுக்கு கொண்டு வரப்படுகின்றது. அதன் மூலம் சம்பந்தர் பிடிக்க வைக்கப்படுகின்றார். அந்த சமயத்தில் பிடிக்க முடியாது என்று அடம்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. சிங்களக் கொடியைத் தூக்கிப் போட்டிருந்தால், சிங்கள அரசபயங்கரவாதம் எவ்வகையான செயலைச் செய்யும்? தங்கள் கொடியைச் சம்பந்தர் அவமதித்தார் என்று பிரச்சனையாக உருவாக்கியிருக்காதா?

உண்மையில் சம்பந்தர் மீது எனக்கு தீர்வுக்கான நம்பக்கை இல்லை. ஆனால் தமிழீழத்தை ஆதரித்து, அல்லது குறைந்த பட்சமாக அவரை விட, எம் மக்களின் தேவையைத் தீர்க்கக்கூடிய என்னுமொரு கட்சி எமக்குள் எழாதவரை இந்தக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

இல்லாவிடின் தமிழ் மக்கள் டக்ளனசையும், கருணாவையும் தான் தேட வேண்டியிருக்கும்.

கஜேந்திரனோ, பத்மினியோ ஒரு பரந்த சக்தியாகத் தங்களை மாற்றியிருந்தால் சம்பந்தனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை போலுள்ளது....

Edited by தூயவன்

மகிந்த கூட்டத்தை அகற்ற வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு, அதற்கு இரணில் - சம்பந்தர் அணியை உருவாக்கியுள்ளனர். இந்த இணக்கப்பாட்டில் சம்பந்தர் ஏமாறக்கூடாது, இந்தியாவின் ஆதரவுடன் ஒரு நியாயமான தீர்வை அரசியல் மாற்ற நிகழ்வில் பெறவேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே புலிக்கொடியை முதலில் வட-கிழக்கு மாகாண கொடியாக யாரும் ஏற்றலாம்.

vp_flag1.jpg

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது தொடர்பான காணோளியில் கொடி ஒரு மூலையில் இருந்து நகர்த்தப்பட்டு, நடுவுக்கு கொண்டு வரப்படுகின்றது. அதன் மூலம் சம்பந்தர் பிடிக்க வைக்கப்படுகின்றார். அந்த சமயத்தில் பிடிக்க முடியாது என்று அடம்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. சிங்களக் கொடியைத் தூக்கிப் போட்டிருந்தால், சிங்கள அரசபயங்கரவாதம் எவ்வகையான செயலைச் செய்யும்? தங்கள் கொடியைச் சம்பந்தர் அவமதித்தார் என்று பிரச்சனையாக உருவாக்கியிருக்காதா?

உண்மையில் சம்பந்தர் மீது எனக்கு தீர்வுக்கான நம்பக்கை இல்லை. ஆனால் தமிழீழத்தை ஆதரித்து, அல்லது குறைந்த பட்சமாக அவரை விட, எம் மக்களின் தேவையைத் தீர்க்கக்கூடிய என்னுமொரு கட்சி எமக்குள் எழாதவரை இந்தக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

இல்லாவிடின் தமிழ் மக்கள் டக்ளனசையும், கருணாவையும் தான் தேட வேண்டியிருக்கும்.

கஜேந்திரனோ, பத்மினியோ ஒரு பரந்த சக்தியாகத் தங்களை மாற்றியிருந்தால் சம்பந்தனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை போலுள்ளது....

அவர்களால் விட்டுகொடுப்பு அரசியல் செய்யமுடியாது.இருதேசங்கள் ஒருநாடு என்ற பிடியிலிருந்தும் அவர்கள் விலகப்போவதில்லை.ராணுவநெருக்கடிக்குள்ளும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில்அவர்கள் பரந்தசக்தியாக மாறவேண்டும் என்றால் பல உயிர்களைப்பலிகொடுக்க வேண்டும்.தற்போது சம்பந்தரின் காலம். அவர் தன்னால் செய்யக்கூடியவற்றைச்செய்துமுடிக்கட்டும்.கடந்த தேர்தலில் மக்கள் முன் அவர் கூறியதன்படி இப்போதுதான் செய்ற்பட ஆரம்பித்திருக்கின்றார்.:wub: அதன்பின்னர் மக்கள் தாமாக ஒரு மாற்றுச்சக்தியைத் தேடுவார்கள்.அப்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மக்கள் முன்வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தொடர்பான காணோளியில் கொடி ஒரு மூலையில் இருந்து நகர்த்தப்பட்டு, நடுவுக்கு கொண்டு வரப்படுகின்றது. அதன் மூலம் சம்பந்தர் பிடிக்க வைக்கப்படுகின்றார். அந்த சமயத்தில் பிடிக்க முடியாது என்று அடம்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. சிங்களக் கொடியைத் தூக்கிப் போட்டிருந்தால், சிங்கள அரசபயங்கரவாதம் எவ்வகையான செயலைச் செய்யும்? தங்கள் கொடியைச் சம்பந்தர் அவமதித்தார் என்று பிரச்சனையாக உருவாக்கியிருக்காதா?

உண்மையில் சம்பந்தர் மீது எனக்கு தீர்வுக்கான நம்பக்கை இல்லை. ஆனால் தமிழீழத்தை ஆதரித்து, அல்லது குறைந்த பட்சமாக அவரை விட, எம் மக்களின் தேவையைத் தீர்க்கக்கூடிய என்னுமொரு கட்சி எமக்குள் எழாதவரை இந்தக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

இல்லாவிடின் தமிழ் மக்கள் டக்ளனசையும், கருணாவையும் தான் தேட வேண்டியிருக்கும்.

கஜேந்திரனோ, பத்மினியோ ஒரு பரந்த சக்தியாகத் தங்களை மாற்றியிருந்தால் சம்பந்தனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை போலுள்ளது....

சம்பந்தர் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்க திட்டம் யாரோ போட்ட சதித்திட்டம் மாதிரித்தான் முதலில் தோன்றியது. எனினும் ரணில் சம்பந்தரின் கையில் கொடியைக் கொடுத்த பின்னரும் இந்த வயதிலும் அந்த ஆட்டு ஆட்டுகின்றாரே...

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை சம்பந்தர் ஆட்டியிருந்தாலும் அங்கஜன் குடுத்த கொடியை ஆட்டிட்டார் புலனாய்வுதுறையினரேடை சேந்திட்டார் என்பதுதான் செய்தி. பேசாமல் அவர் தன்ரை வேட்டியை கழட்டி ஆட்டியிருக்கலாம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை  சம்பந்தர்  ஆட்டியிருந்தாலும்   அங்கஜன்   குடுத்த  கொடியை ஆட்டிட்டார்  புலளாய்வுதுறையினரேடை சேந்திட்டார்  என்பதுதான் செய்தி.  பேசாமல்  அவர் தன்ரை வேட்டியை கழட்டி  ஆட்டியிருக்கலாம்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol:

வாத்தியார் ஓவராய் கற்பனை பண்ணிட்டார் போலை :lol: :lol: .. பின்ன என்ன செய்தியளை பாக்க எரிச்சல் அல்லோ வருது :( :(

தனியாக மேதின ஊர்வலம் ஏன் வைக்கமுடியாமல் போனது?

அதுவும் சிறீலங்கா கொடியை தூக்கியது புரியாத புதிராகவே உள்ளது?

13 ம் திருத்தம் இந்தியா, UNP யிடம் செய்து கொண்ட உடன்படிக்கை. UNP அதன் பின் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. எப்போதுமே அதை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கவில்லை. ரணில் பிரதமாராக இருந்த போது சந்திரிக்காவின் அரசியல் அமைப்பை நீலன் வரைந்து முடிய, UNP அதை சட்டமாக்க ஒத்துழைக்க மறுத்துவிட்டது. அந்த நேரம் ரணில் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் வைக்க தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று ரணில் கூட்டமைப்புக்கு கிடைக்க தொடங்கியிருக்கும் ஆதரவை இந்தியா போய் தன் பக்கம் திருப்பி கொண்டு வந்திருக்கிறார். ரணில், இந்தியாவிடம் தன்னால்13ம் திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் போலிருக்கு.

இந்தியா, அமெரிக்கா, ஐ.நா எல்லோருமே ரணிலை கவனத்தில் எடுக்காமல் விட்டு கனகாலம். பிரதானமாக அமெரிக்கா பொன்சாக்கவுடன் போய் அவரையும் கைவிட்டுவிட்டது. ஐ.நா வின் பிரேரணை வேறு கரைகளுக்கு போகமுன்னர் இந்தியாவுக்கு அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய அவசரம் வந்திருக்கு. என்வே கைவிட்ட ரணிலுடன் கை கோர்க்க முயல்கிறது இந்தியா. கூட்டமைப்புடன் கை கோர்த்ததால் பொன்சேக்காவை சிங்கள மக்கள் கை விட்டு அவர் சிறையில் இருக்கிறார். இதுவரையில் ஒரு தேர்தலில் வெல்லாத ரணில், இந்தியாவின் அன்பை வாங்க, அரசியல், பொருளாதார, திருப்பங்களை பயன் படுத்தாமல் கூட்டமைபுடன் கூட்டு வைக்கிறார். எல்லாம் நல்ல படியாக நடந்தால் காங்கிரசும் UNPயும் பதவிக்கு வரலாம். பிரேரணை வலுவிழக்கலாம். இதை வேண்டித்தான் மேற்குநாடுகள் பிரேரணைக்கு முத்தாய்ப்பு போட்டர்கள் என்றா காங்கிரசும் UNP யும் நினைக்கிறார்கள் என்பது ஒரு கேள்வி. இவற்றை சம்பந்தருக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவர் தன் வியூகத்துடன் செயலாற்றுகிறார் என்றுதான் வைத்து கொள்ள வேண்டும்.

இதுவரையில் தமிழ் கட்சிகளை ஒருநாடும் நம்பவில்லை. சிங்கள அரசை நம்பாத நாடுகள் இருக்கவில்லை. நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. மேற்கு நாடுகள் இலங்கையை நம்புவதை குறைத்து கொண்டன. மன்மோகன் சிங், சிதம்பரம், தங்கபாலு, நாராயணன், நிரூபம்மா ராவ் எல்லோருமே தனித்தனிய தங்கள் வாயால் இலங்கை தம்மை எமாற்றி விட்டதாக கூறியிருந்தாலும், கூட்டு மொத்த காங்கிரசின் நடத்தை அரசாங்கத்தை நம்பி அதனுடன் பேச்சு வார்த்தைகளை வைப்பதாகவே இருந்தது. அந்த நடத்தைக்குத்தான் இரண்டு சோதனைகள் புதிதாக வந்திருக்கிறது. ஒன்று ஐ.நா பிரேரணை. இரண்டாவது சுஸ்மாவின் பயணம். முதலாவதை கங்கிரஸ் 13ம் திருத்தத்தால் சடைந்துவிட பார்க்கிறது. இரண்டாவது காங்கிரசின் அத்திவாரத்தை ஆட்டத்தக்க மறை அழுத்தம் உள்ளதாக இருக்கிறது. சுஸ்மாவை பொய் என்று இந்தியாவில் காட்ட காங்கிரசுக்கு இலங்கை அரசை பணிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இரண்டாவது பிரச்சனையையும் காங்கிரஸ் தனது "எஃஸ் ஒஃப்" UNP வைத்து நிறை வேற்ற திட்டம் போடுகிறது.

சம்பந்தரின், பேச்சுவார்த்தை தொடங்கிய காலம் முதலான, வாதம் தமிழர்கள் தீர்வை ஏற்கத்தயாராக இருக்கிறார்கள், ஆனால் அரசுதான் அதை தரத்தயாரில்லை என்பதாகும். கிருஸ்ணா தனது கடைசி பயணத்தில் கூட்டமைப்பு தெரிவுக்கு குழுவுக்கு சென்றுதான் அதை பெற்றுகொள்ள வேண்டும் என்றார். ஆனால் சுஸ்மாவின் பயணம் சில புதிய திருப்பங்களை கொடுத்துவிட்டது. அதாவது சுஸ்மா தனது, பேச்சு, எழுத்து, நடை, உடை பாவனை எல்லாவற்றாலும் இலங்கை அரசு நம்ப தகுந்த ஒரு அரசியல் இடம் அல்ல என்பதை காட்டி விட்டார். அது மட்டுமல்ல, சம்பந்தர் எல்லாவகையிலும் நம்பத்தகுந்த அரசியல் வாதி என்றும் கூறிவிட்டார். அதனால் காங்கிரசுக்கு சுஸ்மா பிழை என்று நிரூபிக்க, இலங்கை அரசை மிரட்டி 13ம் திருத்தத்தை நடை முறைப்படுத்த வேண்டும். சம்பந்தருக்கு, தமிழரை நம்புவதாக கூறும் முதல் அரசியல்வாதி சுஸ்மாவை சரி என்று நிரூபிக்க வேண்டும். இந்த நிலைகளை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

சம்பந்தர் யாழ்ப்பாணத்தில் மேதின கூட்டம் வைக்க UNP யை அழைக்கவில்லை. UNPயுடன் பத்திரிகை மகாநாட்டுக்கு போகவில்லை. கொடியை கொண்டுவந்து பின் மேடையில் வைத்திருந்து ரணில் கேட்கும் போது அதை அவரிடம் கொடுக்கிறார்கள். சம்பந்தரும் கொடியை எதிர்பார்த்திருந்து அது தன் கைக்குள் கிடைத்த பின், தட்டு தடுமாறாமல், நிதானமாகவே அசைக்கிறார். இது மேடையில் திடுதிப்பாக நடந்த ஒன்றல்ல. மேடைக்கு பின்புறத்தில் நன்றாக திட்டமிட்ட ஒன்று. சம்பந்தர், தான் சுஸ்மாவுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி சிங்க கொடிக்கு தலை வணகுகிறேன் என்றுதான் காட்டுகிறார். இதில் தமிழ் மக்கள் ஏமாந்தார்களோ இல்லையோ( நானும் தான்), அரசு நிச்சயமாகத்தான் ஏமாந்து போய்விட்டது. புலிக்கொடியை அரசின் அடியாட்கள் எங்கோ ஒரு மூலையில் நின்றுதான் பிடிக்கிறார்கள். அதைத்தான் அரசு படம் எடுத்து ஊடகங்களில் போடமுயன்றது. அதை தவிடு பொடியாக்கத்தக்கதாக சம்பந்தர் சிங்ககொடியை மேடையில் பிடித்து அரசை சொக்க பண்ண வைத்திருக்கிறார். இதனால்த்தான் புலிகொடிபிடித்த ஒற்றர்களை கைது செய்யாமல், உடனேயே கூட்டமைப்பின் அரசியல் கட்சிகள் மீது தனி நாடு பிரிக்க முயல்கிறார்கள் என்ற புதிய சோடிக்க பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு எனக்கு ஒரு சந்தேகம், கீழே ஊர்வலத்தில் புலிக்கொடி வர இருக்கிறது என்பதை யாரோ UNPக்கு சொல்லியபடியால்த்தான் ரணிலும் சம்பந்தரும் இப்படி செய்தார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இதையேதான் சந்தரின் பேச்சிலும் அவர் சொல்லியிருக்கிறார்.

இணைந்த இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் ஆனால் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது

http://www.yarl.com/...13

Edited by மல்லையூரான்

"விடுதலை புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம், இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கை தக்க வைத்துகொள்ள இவர்களுக்கு புலி மற்றும் புலிக்கொடி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் எஞ்சி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

"தேசிய கொடியை சிங்கள மக்கள் சிங்க கொடி என்று தான் பரவலாக கூறுகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இந்த சிங்க கொடி என்ற தேசிய கொடியை கையில் எடுத்தது கூட இந்த அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக தெரியவில்லை.

அந்த அளவுக்கு தமது சொந்த அரசியல் நோக்கங்கள் இவர்களது கண்களை திரையிட்டு மூடியுள்ளன. வடக்கில் நிகழ்ந்து முடிந்த மே தின நிகழ்வில் தேசிய ஒற்றுமை, தேசிய ஐக்கியம் என்பவை பற்றி தான் அதிகம் பேசப்பட்டன. உண்மையான தேசிய ஐக்கியத்திற்கு அடிப்படையாக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, தேசிய ஒற்றுமை கருத்துகளுக்கு இணையாக பேசப்படவில்லை. இது தற்செயலாக நிகழ்ந்துவிட்ட யதார்த்தம்.

இவை அனைத்திற்கும் சிகரமாக, பிரிபடாத இலங்கைக்குள் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாக, கூட்டமைப்பின் தலைவர் தேசிய சிங்க கொடியை கையில் ஏந்தினார். இதன்மூலம் சிங்கள மக்களுக்கு அவர் ஒரு செய்தியை வெளிப்படுத்தினார் என நான் நம்புகின்றேன்.

ஆனால் இத்தனை அரசியல் நாகரீகத்துடன் கூடிய நல்லெண்ண அடையாளங்களுக்கு பிறகும் இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டுள்ளது. எதிர்கட்சிகளின் ஊர்வலத்தில் புலிக்கொடி என்ற கதை, அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்பது சிறு குழந்தைக்கு கூட விளங்குகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.