Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜாவின் 69 ஆவது பிறந்த நாள் இன்று (june 2)..

Featured Replies

இளையராஜாவின் 69 ஆவது பிறந்தநாளை (born - 2 june 1943) முன்னிட்டு வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்து தமிழர் ஒருவர் முகநூலில் எழுதியதை அப்படியே இணைக்கிறேன்....

இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போனை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று (june 2). அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள்.

அவரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட். ஆம் ஜெயாடிவி 2005 ஆம் ஆண்டு புதுசா ஒரு பெரிய நிகழ்ச்சி ஒன்னு நடத்தனும் அதுக்கு நாம் ஏன் இளையராஜாவை வச்சு செய்யகூடாதுன்னு பிளான் போட்டாங்க ஆனா நிறைய பேர் ஐயோ அவர் டீவிக்கு இன்டர்வியூ கூட கொடுக்கமாட்டாரு அவரை போய் லைவ் ஷோ சான்ஸே இல்லை என்று எதிர் குரல் கொடுத்தபோதுதான் முடியும்னு இரண்டு பேர் சேலஞ்சை நடத்தி காட்டினாங்க ஒன்னு முரளிராமன் - வைஸ்பிரசிடன்ட் இன்னொன்னு டயமன்ட் பாபு. ஆம் இவங்க ரெண்டு பேரும் தான் இந்த நிகழ்ச்சியின் தூண்கள்.

நான் அப்ப ஜெயா டிவியின் சில டெக்னிக்கல் விஷயங்களை கவனித்து கொண்டிருந்த போது தான் டெய்லி மீட்டீங்கிள் இந்த பிராஜக்ட்டின் ஒரு அங்கத்தினர் ஆனேன். முதல் மீட்டிங் இளையராஜாவை அதுவும் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரின் அறையில்.

அப்போது தான் தெரிந்தது இளையராஜா ஒரு மூளை சூடு உள்ளவர், அவரிடம் ஜாக்கிரைதயா பேசனும், அவர் ஒரு ஷார்ட் டெம்பர் ஆள் என்று பொதுவாக உள்ள கருத்துக்கள் எவ்வளவு பெரிய பொய் என்று.

உண்மையிலே பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் கேட்டகரியில் இவரும் இருக்கிறார் என்று அடித்து சொல்லுவேன். அப்படி ஒரு சிம்பிள் சோல் தான் இளையராஜா. அது வரை அவர் லைவ் ஷோ அதுவும் 140 ஆர்டிஸ்ட் வைத்து ஒரே மேடையில் பண்ணினது இல்லை. அதனால் நேரு ஸ்டேடியத்தில் 1 வாரம் ரிகர்ஸல். மனுசன் கடைசி ரிகர்ஸல் வரைக்கும் பயந்த பயம் - அப்பா இதனாலதான் இவர் வெற்றி நாயகன் ஆக காரணம்னு தெரிஞ்சது.

140 பேர் வாசிச்சாலும் எங்காவது ஒரு பிசிறு இருந்தாலும் உடனே கண்டுபிடிசு சொல்லுவார். இசையும் சாப்பாடும் ஒன்னு, சிறு குறை இருந்தாலும் சாப்பாடும் அதை சாப்பிடும் ஆளும் கெட்டுபோயிடுவாங்கன்னு சொல்லுவார். அவ்வளவு ஒரு பர்ஃபெக்ஸனிஷ்ட். ஒரு வழியாக விழா அன்று கூடிய கூட்டத்தை பார்த்து உண்மையிலே இளையராஜா ஹை டென்ஷனில் தான் இருந்தார். நான் தேடும் செவ்வந்திபூ இது பாட்டு பாடும் போது சரணத்தில் ஒரு சின்ன மிஸ்டேக், அதை மக்களும் விடவில்லை, ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர்னு சொல்லி அவருக்கே புரிந்தது தான் தவறு செய்துவிட்டோம்னு அதை ஒப்பனா அங்கேயே தெரிவிச்சு அந்த சரணத்தை திருப்பியும் பாடி காட்டின ஒரு எளிமையான உள்ளம்.

தான் இளையராஜா அப்படின்னு ஒரு இன்ச் ஈகோ கூட கிடையாத என்னைபொறுத்த வரை அவர் ஒரு ஞானக்குழந்தை.

See The Link.

[media=]http://www.youtube.com/watch?v=OT83a_mCA5c

அதுக்கபுறம் 4 மாதத்தில் நிறைய பழக்கம் ஏன் என்றால் கார்த்திக்கும், யூவனும் நெய்பர்ஸ். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் பொழுது கழியும். இளையராஜா பெரிய பேனர் பெரிய ந்டிகர்கள், பெரிய இயக்குனர்களுக்குத்தான் இசையமைப்பார் என்று நிறைய பேர் தெரியாம சொன்ன விஷயத்தை பொய்னு நிருபிச்சாரு.

ஒரு புதுமையான படத்திற்க்கு இசை அமைக்க முடியுமானு நான் பெர்ஸனலா கேட்டபோது - நோ பிராப்ளம் ரவி நீங்க சொன்னா அதுல கண்டிப்பா ஒரு புதுமை இருக்கும்னு ஒரு வார்த்தை கூட பேசாம ஒரு படத்துக்கு "உயிர்" கொடுத்தார்.

- மூலம்: முகநூல் -

Edited by காதல்

இசைஞானி தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை. இவருடைய இசையை இன்றைய தலைமுறையினரும் ரசிக்கின்றார்கள். இதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

இவருடைய சொந்தக் குணங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. இசையின் ஊடாகத்தான் அவர் என்னைப் போன்றவரோடு பேசுகிறார். அந்த மொழி அற்புதமானது.

இசைஞானிக்கு 69 வயது ஆகி விட்டது என்று நினைக்கின்ற பொழுது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. விரைவில் ஆயிரம் படங்களைக் கடந்து அவர் சாதனை செய்ய வேண்டும்

உயிருள்ள இசை கொடுத்த கலைஞன்.

இன்றுள்ள மாதிரி தகவல் தொடர்புகள் இளையராஜாவின் உச்ச காலத்தில் இருந்திருந்தால் உலகம் போற்றும் கலைஞனாக இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்றுப் போல அன்றாட வாழ்க்கையில் இசைமூலம் இரண்டறக் கலந்தவர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இசைஞானி க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று தான் இயக்குனர் மணிரத்தினத்தின் பிறந்த நாளும்...

தொடர்ந்து பருகும் தாய்ப்பால் போன்றது இளையராஜாவின் இசை எனக்கு. உடம்பின் நாடி நரம்பு எல்லாம் ஊடுபோய், உணர்வு முழுதும் நிரம்பித் ததும்பும் தேன் இளையராஜாவின் இசை. சாகும் இறுதித் தருணத்தில் மனதின் மூலையில் இளையராஜாவின் பாட்டு ஒன்று ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்

என்றென்றும் வாழ என் வாழ்த்துக்களும் பரிவுகளும்

  • தொடங்கியவர்

அட நான் பிறந்தநாள் வாழ்த்து கூற மறந்து விட்டேன்... :o இளையராஜாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்... :)

அபராஜிதன் அண்ணா கூறிய தகவலின் படி மணிரத்னத்துக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.... :)

நான் ரகுமானின் ரசிகையாக இருந்தாலும் எனக்கும் இளையராஜாவின் முன்னைய பல பாடல்கள் பிடிக்கும்... :)

அத்துடன் இசை பிடித்திருந்தால் யார் பாடலையும் நான் ரசிப்பேன்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

உன் இசையுடன் வளர்ந்த நிமிடங்கள்தான் வாழ்வில் அதிகம்....இன்பத்திலும்,துன்பத்திலும் தாயாய் தலைதடவுவது உன் இசையல்லவா...சொல்லி அழமுடியாத சோகங்களின் போதெல்லாம் கூட இருந்து கைபிடித்து தோள்தடவி மீட்டுவந்தது உன் இசை தானே...நீ எங்களிடம் இருந்து எடுத்தது எதுவுமில்லை ஆனால் நாம் உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டவற்றிற்க்கு என்ன விலை கொடுக்க முடியும்..? அள்ளி வழங்கிய உன் இசையில் மிதந்தபடியே அசைகிறது ஆயிரமாயிரம் கோடி மனிதர்களின் நாளாந்த உலகம்....பெட்டிக்கடைகளிலும்,குச்சி வீடுகளிலும்,குக்கிராம மூலைகளிலும் உச்சி வெயிலில் வாழ்வுடன் போராடும் மனிதர்களின் வாழ்வுடன் கூட இருக்கிறது உன் இசை...எதனாலும் கொடுக்க முடியாத நிம்மதியை உன் இசை அந்த எளிய மக்களுக்கு கொடுக்கிறது....எதனாலும் அழிக்கமுடியாத இசையால் உன் பெயரை இந்த உலகில் எழுதி வைத்திருக்கிறாய்... வாழ்க கலைஞ்ஞனே....

தொடர்ந்து பருகும் தாய்ப்பால் போன்றது இளையராஜாவின் இசை எனக்கு. உடம்பின் நாடி நரம்பு எல்லாம் ஊடுபோய், உணர்வு முழுதும் நிரம்பித் ததும்பும் தேன் இளையராஜாவின் இசை. சாகும் இறுதித் தருணத்தில் மனதின் மூலையில் இளையராஜாவின் பாட்டு ஒன்று ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்

என்றென்றும் வாழ என் வாழ்த்துக்களும் பரிவுகளும்

இளையராஜாவின் இசை வாழக்கையை வெறும் 3 வரிகளில் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் விளக்கிய நிழலிக்கு ஜுனியர் திருவள்ளுவர் என்று பட்டல் அளிக்கலாம்மா? அதுவும் கடைசி வரி அருமை நிழலி, இவருடைய பட்டிக் கேட்கும் போதெல்லம் , இந்தியன் ஆமிக்காரனும் சாரம் கட்டி நெஞ்சில் மகசீன்களுடன் திரியும் இயக்கப் பெடியளும் தான் கண்ணுக்கு முன் வருவான் அதாவதுஅந்த நாள் பழைய ஞாபகங்கள் எல்லம் கண்முன்னே வரும்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானிக்கு 69 எனும் போது நம்பவே முடியவில்லை.அவரின் இசை எப்போதுமே இளமையானது.இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.... :)

இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் இதோ... கேட்டு மகிழுங்கள்... :)

பாடல்: உன்னை தானே

படம்: நல்லவனுக்கு நல்லவன்

[media=]

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் இசைக்கு வயதில்லை அவர் உருவத்திற்கு மட்டுமே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

அத்தோடு இயக்குனர் மணிரத்தினத்திற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • தொடங்கியவர்

நன்றி சகாறா அக்கா உங்கள் கருத்திற்கு...

இதோ இன்னொரு இளையராஜா பாடல்...

பாடல்: ராசாத்தி மனசில

[media=]http://www.youtube.com/watch?v=ZvvZB75LFIo

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இளையராஜா இசை என்பதை விட தமிழனின் பாரம்பரிய கிராம இசையை உலகறிய செய்த வித்தகர். அவர் பாடும் கிராமத்து துள்ளல் பாடல்களை ரசித்து கேட்பதில் அலாதி பிரியம்.

மிகவும் விரும்பிய பாடல் கார்த்திக் நடிக்கும் படத்தில் வீட்டுக்கு வீடு வாசல் படி ........

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வோடு இசையாய் வாழும் எங்கள் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[media=]

இசைஞானிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

பொடிப்பயலாய் இருக்கும்போது என் தாய்மாமன்மாரின் ஓடியோ செட்டில் கேட்ட முதலாவது இளையராஜா பாடல் இது. அன்றிலிருந்து என் கனவுத் தொழிற்சாலையை இயக்கும் மின்சாரம் இவரின் இசையருவியில் இருந்தே உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

என் அறிவுக்கெட்டியவரை தமிழி சினிமாவில் Keyboard இசையை அறிமுகப்படுத்தியது இவர் தான் என்று நினைக்கிறேன். அது இப்பாடலில் தான். பாடலின் ஆரம்பத்தில் இது அருவியாகத் தொடங்குகிறது.

இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ்க இசை வள்ளலே.

[media=]

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இசைஞானி க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று தான் இயக்குனர் மணிரத்தினத்தின் பிறந்த நாளும்...

கருணாநிதியின் பிறந்தநாளும் இன்று தான்.... அபராஜிதன்.

  • தொடங்கியவர்

கருணாநிதியின் பிறந்தநாளும் இன்று தான்.... அபராஜிதன்.

:( :( :( :(

இத்திரியில் சிரித்துக்கொண்டிருந்த என்னை அழ வைத்து விட்டீர்களே...

  • கருத்துக்கள உறவுகள்

.

பொடிப்பயலாய் இருக்கும்போது என் தாய்மாமன்மாரின் ஓடியோ செட்டில் கேட்ட முதலாவது இளையராஜா பாடல் இது. அன்றிலிருந்து என் கனவுத் தொழிற்சாலையை இயக்கும் மின்சாரம் இவரின் இசையருவியில் இருந்தே உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

என் அறிவுக்கெட்டியவரை தமிழி சினிமாவில் Keyboard இசையை அறிமுகப்படுத்தியது இவர் தான் என்று நினைக்கிறேன். அது இப்பாடலில் தான். பாடலின் ஆரம்பத்தில் இது அருவியாகத் தொடங்குகிறது.

இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ்க இசை வள்ளலே.

[media=]

கதைப்பது போல் ஒரு மெட்டு.. :rolleyes: அதையும் பாடலாக்குவார்.. :D

உப்பு, தூள் போட்டால் (அழகான, அளவான பின்னணி இசை) எந்த மெட்டும் வெற்றிபெறும் என்பதை விளக்கியவர்.. :rolleyes: இன்று அதே அளவு மினக்கடுறாரா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

எத்தனை பேருடைய காதலை கரைசேர்த்திருக்கும் ராஜாவின் இசை.

அன்னம்,புறாவை தூது விட்ட காலம் போய் இளையராஜாவின் பாடல்வரிகளை கடிதமாக்கி கரைசேர்ந்தவர்கள் எத்தனை பேர்.. :rolleyes:

பூவே பூச்சூடவா பாடல் வந்த போது அந்த பாட்டை பாடி காதலிச்சு ஓடிப்போன அண்ணா,அக்காமார் பலர்

(கேள்விப்பட்டது தான் :rolleyes: )

காதல் சோகத்திலும் ராஜாவின் இசையால் மீண்டோர் பலர்.

முதல் மரியாதை பட பாடல்கள் மாத்திரம் 10,000 தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.

ஆயிரமாயிரம் புதிய பாடல்கள் வந்தாலும் சிலநாட்கள் மட்டுமே நினைவில் நிக்கும்

காலத்தால் அழியாத கேட்க கேட்க தித்திக்கும் பாடல்களின் ராஜா.. எப்பவும் ராஜா தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

பூவே பூச்சூடவா பாடல் வந்த போது அந்த பாட்டை பாடி காதலிச்சு ஓடிப்போன அண்ணா,அக்காமார் பலர்

(கேள்விப்பட்டது தான் :rolleyes: )

நீங்கள் என்னமாதிரி?? :rolleyes: "டாடி மம்மி தேவையில்லை" பாட்டைக் கேட்டிட்டு "செயலில்" இறங்கினீங்களா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்னமாதிரி?? :rolleyes: "டாடி மம்மி தேவையில்லை" பாட்டைக் கேட்டிட்டு "செயலில்" இறங்கினீங்களா? :D

:lol: :lol: :lol:

வெளிய சொன்னா வெட்கக்கேடு .. சொல்லலைனா மானக்கேடு.. :rolleyes::icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்

நீங்கள் என்னமாதிரி?? :rolleyes: "டாடி மம்மி தேவையில்லை" பாட்டைக் கேட்டிட்டு "செயலில்" இறங்கினீங்களா? :D

:lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.