Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் ஆதரவில் *நேசம்* உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் சிலவற்றையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் அன்பளிப்புச் செய்திருந்தனர். நேசம் நிறுவனத்திற்கான பெயர்ப்பலகைக்கான செலவினை பொது சுகாதார பரிசோதகர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்வுக்காக பெறப்பட்ட வாடகைக்கதிரைகளுக்கான செலவினை கணேஸ்வித்தியாலய அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேசம் உற்பத்தி நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கும் தொழில் அற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுமென்ற நல்நோக்கத்தை வரவேற்றுப்பேசிய உத்தியோகத்தர்கள் நேசம் உற்பத்தியின் வளர்ச்சியில் தமது ஆதரவுகளையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

நேசம் உற்பத்திகளில் கிடைக்கிற வருமானத்தில் ஒரு பெகுதி கல்வியில் பின்தங்கிய ஊர்களில் வாடும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முன்னோடிப் பரீட்சைகளையும் நடாத்த செலவு செய்யப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதர மாவட்டங்களுக்கும் நேசம் உற்பத்திகள் விரிவாக்கம் செய்யப்படுமெனவும் நேசம் உற்பத்தி நிர்வாகக் குழுவினர்களால் தீர்மானிக்கப்பட்டது.

நேசம் உற்பத்தி முதற்கட்ட செலவு விபரம் :-

nesamproductbatticalo_Seite_1.jpg

எமது இம்முயற்சிக்கு முதலீட்டாளர்கள் ஆதரவாளர்களை வரவேற்கிறோம். எமது மக்களின் மேம்பாட்டில் முன்னேற்றத்தை காண விரும்புகிற புலம்பெயர் தமிழர்களை நேசம் உற்பத்தி தொழில் முயற்சிகளுக்கான பொருளாதார ஆதரவினை வழங்கி உதவுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்வுப்படங்கள் :-

DSCN0214.png

DSCN0238.png

DSCN0242.png

DSCN0223.png

DSCN0225.png

DSCN0240.png

DSCN0229.png

Edited by shanthy

நல்ல முயற்சி...... சிறு துளி பெரு வெள்ளம்..... இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,உறுதுணையாய் இருந்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசம் உற்பத்தி முதற்கட்ட செலவு விபரம் :-

nesamproductbatticalo_Seite_1.jpg

இத்திட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் சாந்தி நீங்கள் வழங்கியிருக்கும் தொகை பெரிய தொகைதான். உண்மையிலேயே உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இதுவரைக்கும் நானும் எவ்வளவோ உதவிகளை தாயகத்தில் உள்ளவர்களுக்கு செய்திருக்கிறேன் ஆனால் இப்படி தனிப்பட பெருந்தொகையை என்னால் தனிப்பட்ட முறையில் கொடுக்க முடிவதில்லை. அப்படியே கொடுப்பதென்றாலும் கடன்பட்டுத்தான் கொடுக்கவேண்டும். இந்த விடயத்தில் நீங்கள் எங்கேயோ உயர்ந்து நிற்கிறீர்கள் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் சாந்தி நீங்கள் வழங்கியிருக்கும் தொகை பெரிய தொகைதான். உண்மையிலேயே உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இதுவரைக்கும் நானும் எவ்வளவோ உதவிகளை தாயகத்தில் உள்ளவர்களுக்கு செய்திருக்கிறேன் ஆனால் இப்படி தனிப்பட பெருந்தொகையை என்னால் தனிப்பட்ட முறையில் கொடுக்க முடிவதில்லை. அப்படியே கொடுப்பதென்றாலும் கடன்பட்டுத்தான் கொடுக்கவேண்டும்.

சகாரா, நானும் கடன்பட்டுத்தான் இம்முயற்சிக்கு பணத்தை போட்டுள்ளேன். நிலவுக்கு முதல் லைகாவை அனுப்பி பரிசோதனை செய்தமாதிரி கடனெடுத்து விரும்பி விசத்தை விழுங்கிக் கொண்டு வருகிறேன். ஒரு கட்டம் வரைதான் இந்த விசப்பரீட்சையும் தொடரும்.

இத்தகைய முயற்சிகளுக்கு யாரையும் வந்து உதவுங்கோ என்று கேட்க முடியாது. இலாப நட்டம் கேள்விகள் சந்தேகங்கள் என எழுப்பி முயற்சிகளை சிதைத்த வரலாறுதான் கண்டிருக்கிறேன்.

ஆறுமாதத்தில் போட்ட முதலை திரும்பிப் பெற்று இன்னொரு இடத்தில் இன்னொரு தொழிலுக்கு முதலிடலாம் என்ற கனவில் செய்துள்ளேன். வெற்றியும் தோல்வியும் இனி வரும் காலங்களில் மாதாந்த அறிக்கையாக போடுவேன். உதவ முடிந்தவர்கள் இத்தகைய முயற்சியில் கைகொடுத்து உதவினால் இன்னும் பல முயற்சிகளைச் செய்யலாம்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா, நானும் கடன்பட்டுத்தான் இம்முயற்சிக்கு பணத்தை போட்டுள்ளேன். நிலவுக்கு முதல் லைகாவை அனுப்பி பரிசோதனை செய்தமாதிரி கடனெடுத்து விரும்பி விசத்தை விழுங்கிக் கொண்டு வருகிறேன். ஒரு கட்டம் வரைதான் இந்த விசப்பரீட்சையும் தொடரும்.

இத்தகைய முயற்சிகளுக்கு யாரையும் வந்து உதவுங்கோ என்று கேட்க முடியாது. இலாப நட்டம் கேள்விகள் சந்தேகங்கள் என எழுப்பி முயற்சிகளை சிதைத்த வரலாறுதான் கண்டிருக்கிறேன்.

ஆறுமாதத்தில் போட்ட முதலை திரும்பிப் பெற்று இன்னொரு இடத்தில் இன்னொரு தொழிலுக்கு முதலிடலாம் என்ற கனவில் செய்துள்ளேன். வெற்றியும் தோல்வியும் இனி வரும் காலங்களில் மாதாந்த அறிக்கையாக போடுவேன். உதவ முடிந்தவர்கள் இத்தகைய முயற்சியில் கைகொடுத்து உதவினால் இன்னும் பல முயற்சிகளைச் செய்யலாம்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

:wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா..தற்போதைக்கு வாழ்த்து மட்டும் தான் என்னால் தர ஏலும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை சாந்தியக்கா

ஆனால் சமூக சேவையில் உள்ளவர் தன்னைத்தான் முதலில் பலியிடவேண்டும் என்பது எழுதாத விதி

நன்றி என்று தள்ளி நிற்க விரும்பவில்லை.

நிச்சயம் ஒரு நாள் உங்களுடன் இதற்குள் வருவேன்.

அன்புக்குரிய சாந்தி!ரமேஸ்!

இருவருக்கும் நன்றிகள் (ஒரு கையில் ஓசை வராது இருகையும் சேர்ந்து தட்டியதால் தான் இந்த பெரிய இலக்கை உங்களால் அடைய முடிந்தது)உங்களுடன் தொடர்பு கொண்டு உங்களுடன் நானும் கை கோர்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா...! மக்கள் உங்களை மறக்கமாட்டார்கள்.....இதைச் செய்யவேணும் என்ற எந்தத் தேவையும் உங்களுக்கு இல்லை..நீங்கள் ஒரு அரசியல்வாதியும் இல்லை...மற்றவர்களைப் போல் நீங்களும் ஒதுங்கி இருந்து பார்த்து அனுதாபப்பட்டுவிட்டுப் போகலாம்...பயன்பெற்றவர்களின் புன்னகையே உங்கள் வாழ்வின் பெரும்செல்வம்....

உங்கள் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் சாந்தி / ரமேஷ் வவுனியன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் தாயக மக்களை நோக்கி கொண்டு செல்லும் உதவிகளில் மாற்றம் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் ஆரம்பம் முதல் அதற்கு எம்மாலான உதவிகளை செய்து வந்திருக்கிறோம். ஏறத்தாழ நேசக்கரத்தினூடு மட்டும்.. 250 பவுன்களுக்கும் மேல் உதவிகளை அளித்திருக்கிறோம். மிகுந்த இடர் மிகுந்த சூழலிலும் நிதி உதவிகளைச் செய்திருக்கிறோம். அதை நேசக்கரத்தின் சில அணுகுமுறைகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாக.. தற்காலிகமாக நிறுத்தியும் இருந்தோம். மீண்டும் நேசக்கரத்தினூடாக தாயக மக்களிடம் அவர்களுக்கான உதவியை கொண்டு செல்லத்தக்க நல்ல மாற்றமாகவே இவற்றை பார்க்கிறோம். இன்னும் நேசக்கரம் தன்னை பொருண்மிய ரீதியில் பலப்படுத்தி செயற்பட வாழ்த்துகின்றோம்.

Edited by nedukkalapoovan

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சாந்தி மற்றும் ரமேஷ் வவுனியன் அவர்களுக்கு. உங்கள் முயற்சிகள் தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி என்று கேட்டு நிற்கும் உறவுகளுக்கு எல்லாராலும்,எல்லா நேரமும் உதவி செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்காது..அதே நேரம் ஓரு பொறுப்பை எடுத்தாலும் அவர்கள் கேட்டுக் கொண்ட உதவித் தொகையை மட்டுமே சிலரால் செய்யக் கூடிய தாக இருக்கும், சற்று கூடுதலாக உதவுவோம் என்று நினைத்தாலும் எல்லாராலும் அது முடியாது போகலாம்...ஏதோ ஒரு துறையில் தங்களை ஈடுபடுத்தி அதனூடாக தேவைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் வாழ்க்கையில் மற்றவர்களை எதற்கும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.மிகவும் வரவேற்க தக்க விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து ஆரம்பமான நேசக்கரத்தின் கடந்த காலம்..

1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=27323&st=0

2. http://www.yarl.com/...opic=42893&st=0

3. http://www.yarl.com/...showtopic=41526

4. http://www.yarl.com/...showtopic=47550

5. http://www.yarl.com/...showtopic=64782

6. http://www.yarl.com/...showtopic=65231

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் முதலாவது திட்டமிடல் செயற்பாட்டிலிருந்து இங்கு காணலாம்

http://nesakkaram.blogspot.fr/2009/09/blog-post_28.html'>http://nesakkaram.blogspot.fr/2009/09/blog-post_28.html

http://nesakkaram.blogspot.fr/

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

உங்கள் முயற்சிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா.. நானும் விரைவில் இணைந்துகொள்கிறேன்.

மிகவும் மன நிறைவை தருகின்றது .தொடருங்கள் உங்கள் பணியை .வாழ்த்துக்கள் .

சாந்தி அக்கா, உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள். :)

உங்கள் திட்டங்கள் படிப்படியாக மேல்நோக்கி செல்ல என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள். :)

Edited by காதல்

அவசியமான நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!!

சர்வதேச தரத்துடன், சுத்தமாக, சுவையுடன் தயாரிக்கப்பட்டு நேர்த்தியாக பொதி செய்யப்பட்டால் நாளடைவில் பலரும் தேடி வாங்குவார்கள்! இந்த முயற்சி வெற்றியளிக்க முறையான சந்தைபடுத்தல் வாய்ப்புக்களையும் சந்தைபடுத்தல் வலையமைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

புலம் பெயர் உறவுகள் நேசக்கரம் போல் சில அமைப்புக்களை உருவாக்கி இன்னும் இரண்டு துறையில் உதவலாம்.

(1) வறண்ட, பொருளாதார வளம் குறைந்த மன்னார் பகுதியில் பெருமளவு பனைவளம் வீணாக்கப்படுகிறது! அங்கு குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச தரத்துடன், சுத்தமாக, பனங்காய் பணியாரம், பனாட்டு, பனங்கிழங்கு, புழுக்கொடியல், புழுக்கொடியல் மா போன்றவை தயாரிக்கப்பட்டு முறையான சந்தைபடுத்தல் வாய்ப்புக்களை செய்தால் அந்த முயற்சியும் நிச்சயம் பெருவெற்றியடையும்!

(2) கிழக்கின் சில பகுதிகளிலும், வடக்கிலும் (குறிப்பாக வன்னி பகுதிகளில்) விவசாய உற்பத்திப் பொருட்களை (குறிப்பாக நெல்), முறையாக களஞ்சியப் படுத்தும், முறையாக சந்தைபடுத்தும் வசதிகள் இல்லை. இதனால் பெருமளவு இலாபத்தை இடை முகவர்களான சிங்கள - முஸ்லிம் தமிழின விரோதிகளே பெற்றுக் கொள்கின்றனர். சிலவேளை ஒரு கிலோ ரூபா 18 - 20/- என வற்புறுத்தி பெறுகின்றனர், பெற முயற்சிக்கின்றனர். இவர்களால் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக சுரண்டப் படுகிறார்கள். இதற்கு சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளும், சிங்கள அதிகாரிகளும் துணை போகின்றனர். இதே நெல்வகை அனுராதபுரம், வெளி ஓயா பகுதிகளில் ஒரு கிலோ ரூபா 30 - 35/- க்கு சிங்கள இனவாத அரசால் கொள்வனவு செய்யப்படுகிறது. பொலநறுவை பகுதிகளில் ஒரு கிலோ ரூபா 30 - 40/- க்கு இனவாத அரசால் கொள்வனவு செய்யப்படுகிறது. எம் மக்கள் தாமே களஞ்சியப்படுத்தி, தாமே சந்தைபடுத்தும் வசதிகளை பெற்றால் பெருமளவு இலாபம் அவர்களை சென்றடையும். எம்மக்களுக்கு பொருளாதார பலமும் கிடைக்கும்.

இவையிரண்டும் கடந்த சில மாதங்களின் முன்னர் இப்பகுதிகளுக்கு சென்ற போது, அப்பகுதி மக்களுடன் கதைத்த போது எனது மனதில் அப்போது தோன்றியவை.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, அவுசில் ஒரு திட்டத்தில் இணைந்து, பாதிவழியில் நிற்கின்றேன்!

முடிந்ததும், இணைந்து கொள்ள முயல்கின்றேன்!

ந‌ல்ல‌ முய‌ற்சி... வாழ்த்துக்க‌ளும் ந‌ன்றிக‌ளும். :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.