Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தின் பெயர்ப் பலகையின் தமிழ் மொழியின் நிலை (படம்)

Featured Replies

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்கு எல்லாம் சிங்கள அரசும் அதன் படைகளும் மட்டும் காரணமல்ல.. சிங்கள அரசின் தயவில் இயங்கும் காட்டிக்கொடுப்பு.. தமிழ் மக்கள் அழிப்பு.. தமிழ் அழிப்பு.. தமிழ்.. முஸ்லீம் கும்பல்களும்.. ஆயுதக் குழுக்களும்.. உள்ளூராட்சி மன்றங்களையும்.. மாகாண சபைகளையும் கைப்பற்றுவதும் ஒரு காரணம். இதற்கு தமிழ் பேசும் மக்கள் எனியும் இடமளிக்கக் கூடாது. தமிழ் பிரதேசங்களில் தமிழ் பற்றுள்ள தேசப்பற்றுள்ள.. கல்வி அறிவுள்ள...தமிழ் பேசுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..! :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன ஆச்சரியம் அங்குள்ள மொழி மட்டுமல்ல மக்களின் நிலையும் இப்போது அப்படித்தானே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.co...யில்-அமைந்துள்/

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

அவர்கள் போட்டிருப்பது [size=5] உனவு [/size] உணவு அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

அது மூன்று சுழி "ண" தான் - ஆனால் அதை எழுதி இருக்கும் முறை தான் பிழை போல் தெரிகிறது..

முழுதாக வட்டம் போடவில்லை ...

முதலில் உனவு என எழுதிவிட்டு பின்னர் திருத்தி எழுதியதுபோல் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை தரவிறக்கம் செய்து அதை 10 மடங்கு பரிமாணத்திற்கு மாற்றி ஆராய்ந்து பார்த்தேன். பலகையில் ண-எழுத்தின் 3 சுழி வட்டங்களும் அருகருகே ஒன்றுடன் ஒன்று நெருங்கியிருப்பதால் பார்வைக்கு அதிலுள்ளது 2 சுழியுடன் ன-எழுத்துபோல் தெரிந்தாலும் அங்கு உணவு என்பது சரியாகத்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் 100 விழுக்காடு தமிழர் பிரதேசத்திலுள்ள பெயர் பலகைகளிலும் சிங்களத்தை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் எனக்கு உறுத்தலாக உள்ளது.

Edited by vanangaamudi

அவங்களுக்கு தங்கட மொழியிலேயே ஒழுங்காய் எழுத்தத் தெரியுமோ தெரியாது, அதுக்கை நீங்கள் வேறை

  • கருத்துக்கள உறவுகள்

அதில் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இதில எழுத்துப்பிழை.. இருக்கோ இல்லையோ என்பதல்ல.. இவ்வாறான எழுத்துப் பிழைகள்.. பல இடங்களில் முன்னர் அவதானிக்கப்பட்டு உள்ளன தானே. அதேபோல் சிங்களப் பெயர்களும்.. இராணுவ பிரிவுப் பெயர்களும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் நினைவிடங்களுக்கும் திணிக்கப்படுகின்றன.

கிட்டு பூங்கா இடிக்கப்பட்டு.. அங்கிருந்து இரும்புகள்.. உட்பட்ட பொருட்கள் டக்கிளஸ் தேவானந்த கும்பலால் காசுக்கு விற்கப்படுகின்றன.

இம்முறை நல்லூரில் திருவிழா அங்காடிகளை வெறும் 10,000 ரூபாக்கு ஒரு சிங்களவன் எடுத்திருக்கிறான்.

யாழ் மாநகர சபை.. மிகுந்த ஊழலும்.. குழறுபடியும் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

நல்லூர் உற்சவ கால வருமானம்.. டக்கிளசின் வங்கிக் கணக்கிற்கு போகிறது..! சில்லறை வியாபாரிகளின் பணம்.. மாநகர சபை ஈபிடிபி ஆட்களுக்குப் போகிறது. மாநகர சபைக்கோ.. அதன் அபிவிருத்திக்கோ அல்ல..! :icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

:icon_mrgreen:

mgr%20-taklas.jpg

இந்த உனவு கலஞ்சியத்தை திரந்து வய்ததே ... மான்புமிகுவாம் ஈலத்து எம்.சி.ஆர் அத்தியடிக்குத்தி!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

ஓம் அதில் என்ன எழுத்துப் பிழை நெல்லையன்?...3 சுழி "ண்"ன்னா போட்டுத் தானே எழுதி இருக்குறார்கள்...நீங்கள் தந்த படத்தை பெரிதாக்கியும் பார்த்தேன் அதில் ஒரு பிழையும் தெரியவில்லை ஒரு வேளை என் கண்ணில் தான் கோளாறோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

இதில் எழுத்துப் பிழை பற்றியதாக தலைப்பு இல்லையே.

தமிழ் மொழி.. தமிழ் பிரதேசத்திலேயே அதன் முதன்மை இழந்து.. இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து போய் நிற்பது தான் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்..! அதுதான் தமிழின் நிலை அங்கு..!

தாங்கள்.. அதனை புரிந்து கொள்ளாது.. எழுதுறீங்க போல இருக்குது.

அதற்காக எழுத்துப் பிழைகள் நடக்கவே இல்லை என்றில்லை. தமிழர் பிரதேசங்களில்.. சிங்களத்தில்..ஊர்ப் பெயர் மாற்றங்களும்.. சிங்களப் படைத்துறை பெயர்களும்.. புத்த கோவில்களும் திணிக்கப்படுவது நடக்கின்றன என்பதையும் தான் குறிப்பிடுகிறார்கள்..! :icon_idea:

JaffnaLibrary.jpg

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

இந்த நிலை அங்கு இல்லை..!

Edited by nedukkalapoovan

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால்,

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.

முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.

கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சுழி தான் போட்டு இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

:D முடியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

அண்ணர் கரும்பு சொன்ன அதே மொக்கைக் கூட்டங்கள் தான். கையில கமெரா இருந்தால், கண்டதையும் படமெடுத்து போடுவாங்கள். இவங்கள் எல்லாம் ஒரு ஊடகம்? நாதாரிக் கூட்டங்கள்.

நான் இன்றுவரை களஞ்சியத்திற்கு "ள" பாவிக்கப் படுவதைத் தான் கண்டிருக்கிறேன். பாடப் புத்தகங்களிலும் "ள" தான் பயன்பட்டிருக்கு. ஈழத்தில் "ழ" இருப்பதால் "ழ" பாவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். அகராதியில் தேடிய போதும் களஞ்சியம் தான் சரி என வருகிறது. ஆனால் பல இணையத் தளங்கள் கழஞ்சியம் எனப் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். களஞ்சியம் என்று ஏற்றகனவே பாவிக்கப் பட்டிருந்தால் அதை மறைக்க கழஞ்சியம் என அவர்கள் மாற்றி பயன்படுத்தி இருக்கலாம்.

Yarl1.jpg

Yarl2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.