Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேள்விக் கிடாய்

Featured Replies

வணக்கம் கள உறவுகளே !

இந்தக்கதையினூடாக ஒரு வேறுபட்ட முகத்தை காட்ட முயற்சிக்கின்றேன் . இது சரியா அல்லது பிழையா என்பதை என்னைத் தூக்கி வளர்க்கும் வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும் . இந்தக் கதையில் ஆக்க பூர்வமான உங்கள் விமர்சனத்தை வாசகர்களாகிய உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் .

நேசமுடன் கோமகன் .

*******************************************************************************************************************************************

வேள்விக் கிடாய்

ஒரு பேப்பருக்காக கோமகன்

விடிய 2மணிக்கு வேலையால வந்தவுடன உடுப்பை மாத்தாமல் குசினிக்குள்ளை பாஞ்சன். குஞ்சன் கோழிக்கறியும் கீரையும் மஞ்சள் சோறும் போட்டு வைச்சிருந்தான் . நான் இருந்த பசியில பரதேசி போட்ட உப்பு சுள்ளிட்டாலும் அது எனக்கு ருசியாத்தான் இருந்தது. மணி இனித் தான் வருவான். குஞ்சன் தண்ணியை போட்டிட்டு கவுண்டிட்டான். நான் மணிக்கு எல்லாம் எடுத்து வைச்சுபோட்டு றெஸ்ரோரண்டில செய்த வேலையை வீட்டை செய்தன் . நான் போட்ட சத்தத்தில குஞ்சனின்ரை வாயால தூசணம் துவள் பறந்திது. நானும் அவன்ர றேன்ஞ்சில இறங்கி குடுத்த மறுத்தானால அடங்கிப்போனான் . ஆனால் இடக்கிடை தண்ணி புசத்திக்கொண்டிருந்தது. நான் என்ரை அறைக்கை போய் உடுப்பை மாத்திப்போட்டு படுக்கைல கவிண்டன் . உடனை நித்திரையாப்போட்டன் ஏனெண்டால் அவ்வளவு வேலைக்களைப்பு .

இடையில தமன்னா வந்து என்னோட டான்ஸ் ஆடத்தோடங்க , பக்கத்தில இருந்த ரெலிபோன் அடிச்சு தமன்னாவை கலைச்சது எனக்கு பண்டிவிசராய் கிடந்திது. நான் கண்ணை திறக்காமலே ரெலிபோனை எடுத்து கலோ சொன்னன் . மற்றப்பக்கத்தில அப்பூ………… எண்டு அம்மாவின்ரை குரல் வந்திது . அம்மான்ரை குரலை கேட்ட உடனை தமன்னா என்னைவிட்டு பத்துக்கட்டைக்கு போட்டாள்.

« என்னம்மா இந்த நேரத்தில . இப்பத்தான் வேலையால வந்து படுத்தனான் . திரும்ப விடிய ஐஞ்சுமணிக்கு எழும்ப வேணும் . » இது நான் .

அம்மா சொன்னா,

« அப்பிடியே மோனை எனக்கு கொஞ்ச காசு அனுப்பிவிடு » .

எனக்கு பத்தி கொண்டு வந்திது .

« என்னம்மா போன மாசம் தானே அனுப்பின்னான். அதுக்குள்ளை முடிஞ்சு போச்சே « ?

« அடேயப்பா உனக்கு இங்கத்தையான் விலைதலையள் தெரியுமே ? ஒரு றாத்தல் பாணே 60 ரூபாய் விக்கிது . அதோட எங்கட கோயில் திருவிழா வருது . அப்பாவும் போட்டார் நாங்கள்தானே செய்யவேணும் « .

« என்னம்மா உவ்வளவு காசுக்கு நான் இப்ப எங்கை போறது « ?

« உதுகளை எல்லாம் கேக்காமல் கொப்பர் போட்டார் . நான் கேக்கவேண்டியதாய் கிடக்கு « எண்டு அம்மா அழத்தொடங்கினா.

எனக்கு அம்மா அழுதது ஒருமாதிரியா போச்சுது . பாவம் மனிசி எண்டு யோசிச்சு கொண்டிருந்தன் .

« என்னப்பு ஒரு சத்தத்தையும் காணேல « ?

« சரியம்மா எவ்வளவு வேணும் « ?

« ஒரு 3 ஐ போட்டுவிடன் « .

எனக்கு தலை சுத்தீச்சிது . அம்மான்ரை டிக்சனறியில 3 எண்டால் பின்னால ஐஞ்சு சைபர் போடவேணும் .

« என்னது மூண்டு லச்சமோ « ??

எனக்கு கோபத்தில கைகாலெல்லாம் உதறத்தொடங்கீட்டிது.

« என்னம்மா நான் இப்ப உவ்வளவு காசுக்கு எங்கை போறது ? சரி அனுப்பிறன் . இனி கொஞ்சநாளைக்கு கேக்கப்படாது » .

« என்னப்பு நீதானே எங்களுக்கு கருவேப்பிலை மாதிரி ஒரேயொரு ஆம்பிளை. உன்னால ரெண்டு கொக்காக்களையும் கரைசேத்துப்போட்டன் . உன்ரை தங்கச்சிக்கும் ஒரு வழி பண்ணினால் நான் நிம்மதியா கண்ணை மூடுவன் அப்பு « .

எனக்கு அண்டங்கிண்டமெல்லாம் பத்தீச்சுது . எனக்கு 37 வயசாகி தலையில அரைவாசி வெளிச்சுப்போச்சு . நான் நெடுக மற்றவைய பாத்து கொட்டாவியே விடிறது எண்டு எந்தநாளும் எனக்கு விறாண்டல் . அம்மா ஏதாவது வத்தலோ தொத்தலோ பாப்பா எண்ட நம்பிக்கையும் எனக்கு கழண்டு போட்டுது . மனிசி என்ன நினைக்குது பாப்பம் எண்டு நானும் ,

« அம்மா என்ரை தலைமயிரெல்லாம் கொட்டுண்டுது ஏனம்மா « ? எண்டு அப்பாவியா கேட்டன் .

அம்மா அதுக்கு மேலால எனக்கு பினாட்டு தீத்திறா .

« உனக்கு ஆயிரந்தடவை சொல்லுறனான் சுடுதண்ணியில குளியாதை , கண்டகிண்ட சம்பூவை வைக்காதையெண்டு . நீ எங்கை என்ரை சொல்வழி கேக்கிறாய் ? எண்டு என்ரை அம்மா என்னில எகிறி பாஞ்சா . எனக்கு அழுகை அழுகையா வந்திது . மனுசி இப்போதைக்கு எனக்கு கலியாணம் செய்து வைக்காது . நானும் எவ்வளவு நாளைக்கெண்டு அடையளிட்டையும் கறுப்பியளிட்டையும் போய் நான் சுத்த ஆம்பிளைதனோ எண்டு ரெஸ்ற் பண்ணிறது ? இவன் குஞ்சன் வேறை நான் கலியாணம் கட்டாத கோபத்தில கறியளுக்கை உப்பை அள்ளி போடுறான்.

எனக்கு அம்மான்ரை போக்கு ஒண்டுமாய் விளங்கேல . இந்த வரியம் ஆடியோட ஆவணியா 37 வயசு முடியப்போகுது . எப்பிடியும் இந்த வரியம் கலியாணம் செய்து போட்டுத்தான் முதல் வேலை எண்டு யோசிச்சுக்கொண்டு , ஓடின தமன்னாவை தேடினன். கொஞ்சநேரத்தல தமன்னா எனக்கு கிஸ் தர போட்ட காச்சட்டை நனைஞ்சு போச்சுது . எனக்குப் பெரிய விசராப்போச்சுது கோதாரிவிழுந்த தமன்னாவிலையும் கோபம் கோபமாய் வந்திது .

விடிய காலமை 5 மணிக்கு மணியின் சத்தத்தில நானும் முழிச்சிட்டன் . எழும்பி முகம் கழுவி வெளிக்கிட்டு குசினியுக்கை வந்தன் . மணி எனக்கும் சேத்து தேத்தண்ணி போட்டு தானும் எடுத்துக்கொண்டு பல்கணியில சிகரட் பத்தவைச்சான் . நானும் போய் அவனோட நிண்டு தேத்தண்ணியை குடிச்சுக் கொண்டு என்ர சிகரட் ஒண்டை எடுத்து பத்த வைச்சன். என்ரை காலமை ரசனையை மணி கலைச்சான் ,

» ஆற்ராப்பா சாமத்தில உனக்கு போன் பண்ணினது ? ஏதாவது அரையண்டங்களோ « ?

« ஓமடாப்பா அம்மா ராத்திரி போன்பண்ணினவா . தனக்கு மூண்டு லச்சம்

அனுப்பட்டாம் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல மச்சான் « .

« உன்ரை கொம்மாக்கும் வேற வேலையில்லை . நீயும் திருந்தமாட்டாய் . ஏன்ராப்பா உன்ரை கஸ்ர நஸ்ரங்களை கொம்மாக்கு சொல்லுறதுதானே « ?

« இஞ்சை எனக்கு விடியக்காத்தால கிளப்பாதை . எத்தினை முறை மனிசிக்கு சொல்லிப்போட்டன் . மனிசி உலுத்து தனமாய் விளங்காத மாதிரிக் கதைக்கிது . நானும் எவ்வளவு காலத்துக்கு இந்த சீவியம் சீவிக்கிறது « ?

எண்டு மணியோட ஏறினன் . அவன் சிரிச்சு கொண்டு , « என்னட்டை கனகாசு இப்ப இல்லையடா . ஒரு முன்னூறு யூறோ தாறன் மிச்சத்தை நீ போடு . வாற மாசம் எனக்கு தா . நான் மனுசிய எடுக்கிற அலுவலாய் திரியிறன் தெரியும் தானே « ?

எண்டான். எனக்கு அந்த நேரத்தில அவன் சொன்னது பெரிய ஆறதலாய் இருந்திது . மிச்சத்துக்கு பாங்கில ஓடி அடிக்க வேண்டியது தான் வேறை வழியில்லை எண்டு யோசிச்சுக்கொண்டு கிளீனிங் வேலைக்கு மெற்றோ பிடிக்க ஓடினன் . நாலு மணித்தியாலம் இதை செய்துபோட்டு பத்து மணிக்கு ரெஸரோறண்ட் வேலைக்கு ஓட வேணும் . ஆருக்கு விழங்கிது என்ரை நாய் பிழைப்பு ? அம்மாக்கு நான் காசு அனுப்பினா சரி . திண்டனோ வருத்தம் துன்பம் வந்திதோ அதுகளை பத்தி அக்கறை இல்லை . என்ன மனிசரப்பா ? எண்டு என்ர மனம் அலைபாஞ்சிது . நான் வேலையளை கடகடவண்டு செய்து போட்டு பெல்வீலில போய் குசனிட்ட இறைச்சியும் , பக்கத்தில மாலா கடையடியில வீரகேசரியும் வாங்கிக் கொண்டு வீட்டை போகேக்கை , அதில நிண்ட எனக்கு பழக்கமான லைலா « சல்யூ செரி » எண்டு கிட்ட வந்தாள் . நான் கண்டும் காணாத மாதிரி மெட்றோவுக்குள்ளை இறங்கீட்டன் . இனி பாங்கில போய் காசு ஓடியில அடிச்சுக்கொண்டு மார்கடே பொசினியரில இருக்கிற குமார் சொப்புக்கு உண்டியலில காசு போட போகவேணும் . எல்லாத்தையும் முடிச்சு திரும்பவும் வேலைக்கு போய் , இரவு பஸ்சில வீட்டை திரும்ப உடம்பெல்லாம் பிஞ்சுபோய் நொந்திது . பத்து பதினைஞ்சு வரியமாய் இந்தபட்டை அடி அடிச்சு எனக்கொண்டு ஐஞ்சு சதமும் இல்லை .எனக்கு என்ரை அப்ரையும் நாட்டு பிரச்சனையளையும் நினைக்க அண்டம் கிண்டமெல்லாம் பத்தீச்சுது . என்ரை வாய் என்னையறயாமலே தூசணத்தால பேசீச்சுது .

நான் வீட்டை போய் சாப்பிட பிடிக்காமல் படுத்திட்டன் . இப்பிடியே ஒரு மூண்டு வரியம் பறந்து போட்டிது . ஒரு நாள் அம்மா போன் பண்ணினா . எனக்கு ரெண்டு மூண்டு பகுதி கேட்டு வந்திதாம் . தான் அறுபது லட்சம் சீதனமும் , முப்பது பவுண் நகையும் , வீடுவளவும் இருந்தால் கதையுங்கோ எண்டு சொன்னவாவாம் . எனக்கு ஒண்டு மட்டும் கிளியறாய் விளங்கீச்சிது . எனக்கு சீவியத்தில மனிசி கலியாணம் செய்து வைக்காது எண்டு . நானும் ஒரு முடிவோடை ,

« அம்மா சொல்லிறனெண்டு கோவிக்கப்படாது . எனக்கு இப்ப நாப்பது வயசு ஆயிட்டிது . நான் இனி கலியாணம் செய்யிறதாய் அபிப்பிராயம் இல்லை » .

« ஏன் அப்பு எங்களுக்காக நீ எவ்வளவை செய்தனி . நான் சொல்லுறதை கேள் அப்பு . நான் கண்ணை மூட முதல் என்ரை பேரப்பிள்ளையை பாக்க வேணும் . ஏன் அப்பு உனக்கு கலியாணம் வேண்டாம் « ?

« ஏனோ !!!!!!!!!! ஏனெண்டால் நீங்கள் என்னை வேள்விக் கிடாயா வளத்துப்போட்டியள் . இந்தக்கிடாய்க்கு கலியாணமெல்லாம் வேண்டாம் « .

எண்டு அழுகையோடை போனை அடிச்சு வைச்சன் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வந்த பலபேர் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனையோ பேர் வாழ்க்கையில் நடக்கும்

நிஜத்தை எழுதியுள்ளீர்கள் அண்ணா. எல்லாரும் அப்படி இல்லை என்ற போதும் பல குடும்பங்களில், தாய்,தந்தை, சகோதரங்களுக்காய் சிலுவை சுமக்கிறவர்கள் அதிகம். சிலர் விரும்பியோ,விரும்பாமலோ தாமாகவே சுமக்கிறார்கள், சிலர் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால் நிச்சயமாக இது விவாதத்திற்குரிய விடையம் தான்.

இதை என்னவென்று சொல்வதென்பது தான் தெரியவில்லை அன்புத்தொல்லையா இல்லை அப்படி இருக்க இந்த சமூகக்கட்டமைப்பா,அதிக எதிர்பார்ப்பா????????

ஆண்கள் சாகும் வரை ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என்பது ஒரு எழுதாத விதியாக இருக்கும் சமூகத்தில் குடுப்பதும்,வாங்குவதற்கும் அப்பால் இப்படியான பெற்றோர்கள் பிள்ளைகளைப்பற்றியும் சிந்தித்தால் நன்று. அதே வேளை இதை எல்லாம் உடைத்தும் அவன் தனக்கான வாழ்வைத்தேடி இருக்கலாம். தவறு அவனிலும் தான் கல்யாணம் தான் பிரச்சனை என்றால் கல்யாணம் கட்டிய பின்னரும் குடும்பத்தை பார்க்கலாம் தவறில்லை, கொஞ்சம் அவன் தன்னை வளர்த்துக்கொண்டால். :icon_idea:

நன்றி அண்ணா தொடர்ந்து எழுதுங்கள் உங்களை பன்முகக்கலைஞனால பார்ப்பதே அவா. :)

டிஸ்கி: அதென்ன 37வயசிலை தமன்னா வேண்டிக்கிடக்கு? :rolleyes: அம்பிகாவோ,அமலாவோ,ராதாவோ இவங்க எல்லாம் வரக்கூடாதா? :wub::lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்வி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மூலம், எமது சமுதாயத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்!

இப்படியான, விரலுக்கு மிஞ்சிய எடுப்புக்களே, புலத்தில் தூள் கடத்தல், கடனட்டை மோசடி என்று பல்வேறு வடிவங்களில், தனது முகத்தைக் காட்டுகின்றது!

ஆனால், உங்கள் அம்மா, தனது நாகாஸ்திரத்தை, இன்னும் உபயோகிக்கவில்லை!

அதை உபயோகிக்கும் போது, உங்கள் பிடிவாதத்தையும், விட்டு விட்டுத் திருமனத்திற்குத் தலையாட்டுவீர்கள்!

ஏனெனில், வேள்விக்கிடாயின், கடைசிப் பலிபீடம் அது!

  • தொடங்கியவர்

ஒரு தீர்க்கமான விமர்சனத்தை முதலாவது ஆளாகத் தந்திருக்கின்றீர்கள் ஜீவா . பொதுவாகவே குடும்பத்தில் பெண்களுடன் பிறந்த ஒரேயொரு ஆண் சிறிது கூச்ச சுபாவமும் , சிறிது பெண்தன்மையும் கொண்டிருப்பார் . ஆதாவது குடும்ப சூழ்நிலைகள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருக்கும் . இந்தக் கதையின் கதாநாயகனும் அப்படியே . குடும்ப பாசத்திற்கும் நடைமுறை யதாரத்தத்திற்கும் இடையில் நடந்த இழுபறியில் அவர் யதார்த்தத்தை முன்னிறுத்தியது ஏற்புடையதே . ஏனெனில் 40 வயதிற்குப் பின்பு தாயின் வியாபாரத்தில் பலிக்கிடாயாகினால் அவரது திருமண வாழ்வுதான் இனிக்குமா ?? ஒரு பெண்ணினது வாழ்வைக் கெடுக்காது விட்டு இந்த சமூகத்திற்கு கொடுத்த தண்டனையாகவும் எடுக்கலாம்தானே . மற்றது தமனாவை கொண்டுவராமல் அம்பிகா பானுபிரியாவைக் கொண்டு வந்தால் கதாநாயகன்ரை இமேஜ் என்னாகிறது :lol: :lol: ?? உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் ,என்மீதுள்ள அக்கறைக்கும் மிக்க நன்றிகள் :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மூத்தது ஆண் பிள்ளை என்றில்லை பெண் பிள்ளையாய் பிறந்தாலும் குடும்ப பொறுப்புக்களை சுமக்க வேண்டி வரும்...நல்ல கதையை கருவாக எடுத்த கோமகனுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

: அதென்ன 37வயசிலை தமன்னா வேண்டிக்கிடக்கு? :rolleyes: அம்பிகாவோ,அமலாவோ,ராதாவோ இவங்க எல்லாம் வரக்கூடாதா? :wub::lol::icon_mrgreen:

கதை நல்லாய்யிருக்கு ... ஆனால் ஜீவாவின் இந்த கருத்துடன் நான் உடன்படமாட்டேன்...வயசுக்கும் கனவுக் கன்னிகளுக்கும் தொடர்பே இல்லை....:D

இப்படி ஆண்மையற்றவர்களுக்கு கல்யாணம் ஏன் என்றுதான் தோன்றுகின்றது .

அவன் ஒரு தொடர்கதை என்று படம் எடுக்க தான் உதவும் .

  • கருத்துக்கள உறவுகள்

15 வருசம் ஓடி ஓடி உழைத்து அலுத்துப் போனவருக்கு 40 வயதில்

திருமணத்திற்கு 60 லட்சம் 30 பவுண், வீடு அதோடை வளவும்

கேட்டது நல்லா இல்லை.

அதைவிட அவருக்கு லைலாவோடை வேறை பழக்கமாம் :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழ் இளையருடைய வரலாறு இது.

அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியை நீங்களும் செய்துள்ளீர்கள். :icon_idea:

*******************************************************************************************************************************************

, ஓடின தமன்னாவை தேடினன். கொஞ்சநேரத்தல தமன்னா எனக்கு கிஸ் தர போட்ட காச்சட்டை நனைஞ்சு போச்சுது . எனக்குப் பெரிய விசராப்போச்சுது கோதாரிவிழுந்த தமன்னாவிலையும் கோபம் கோபமாய் வந்திது .

கதையின் இந்த எழுத்தால் விருப்பு வாக்கை போட முடியவில்லை.

இதை எழுதித்தான் வாசகர்களை பெறணும் என்பது தற்பொழுது ஒரு யுக்தியாக வளர்வதை ஊக்குவிக்க விரும்பவில்லை. :( :(

தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள் :icon_idea:

எமது வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்ட உண்மையான சம்பவத்தின் தொகுப்பை சுவாரஸ்யமான கதை வடிவில் தந்திருக்கிறீர்கள் . உண்மையில் இந்தப்பிரச்சனை ,இந்தப்புலம் பெயர்நாடுகளில் மட்டுமல்ல ,எம் சொந்த மண்ணிலேயும் தொடரும் தீர்க்கமுடியாத ஒன்றாய் போய்விட்டது.ஏனனில் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அல்லது ஒரு சமூகத்தை எடுத்துக்கொண்டால் ,தங்கிவாழ்நிலை என்ற பதத்தை எம் கலாச்சாரமாக உள்ளடக்கி வாழும் ஓர் இனமே நாங்கள். இந்தக்காரணிக்கெல்லாம் பிரதான காரணமாக இருப்பது எம் பொருளாதார வளர்ச்சியின்மையும், எமது திட்டமிடாமையும். ஆகவே இந்தப்பிரச்சனை தீர்க்கப்பட வேணும் என்றால் எமது பொருளாதாரத்தை நாமே ஆளும் வகையில் ,ஆளுமைமிக்க ,பலமிக்க ,திறமைமிக்க அரசினைகொண்ட ஒரு தேசமாக எம் தேசத்தை ...........உருவாக்குவதற்கு முயற்சிசெய்ய வேண்டும்..........

  • கருத்துக்கள உறவுகள்

வேள்விக் கிடாய் நன்றாக இருக்கிறது..இப்படியான அம்மாக்களும் பிள்ளைகளும் மாறாமல் இருக்கும் மட்டும் எங்கள் சமுதாயத்தில் எதுவும் மாறும் என்று நாம் நினைத்து விட முடியாது இருக்கிறது...சொல்லப் போனால் ஆண்கள்,பெண்கள் முடிவுகளை எடுப்பதற்கு பூரண சுதந்திரம் தாயகம் தவிர எந்த நாட்டிலும் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குத் தான் இன்றைக்கு மக்கள் மாற்றம் பெற்று இருக்கிறார்கள்...இதை என் காதால் பலமுறை கேட்டும் இருக்கிறன்...அதன் பின் வாழ்வு என்றால் ஒரு வெறுப்பைத் தான் தந்து இருக்கிறது...

சுயமாக சிந்திக்காதவரையில் வயது வந்த ஆண்கள்,பெண்கள் வீட்டுப்பூச்சிகளாக சிறுவர்களாகவே இருக்கும் மட்டும் அம்மாக்களின் வாய்கள் இப்படி லட்சம்,லட்சமாய் கேட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறது...அதுவரை ஆண்கள் சரி,பெண்கள் சரி பலி ஆடுகள் தான்.அறுபது லட்சம் பணம் 30 பவுண் நகை போதுமா சீதணம்....இவ்வளவுக்கும் மகன் என்ன வேலை செய்யிறார்....அது தெரியாத அம்மா....ஊரில் இருப்பவர்களுக்கு நினைச்ச உடன் லட்சம்,லட்சமாய் அனுப்பி விடுவதற்கு புலத்தில் இருப்பவர்களை பணம் காய்க்கும் மரங்கள் என்று தான் இன்றுவரை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..அங்கு இருப்பவர்களது வசதி வாய்ப்புக்களோடு இந்த பணம் காய்க்கும் மரங்கள் இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை...அவ்வாறன தொலை பேசி அழைப்புக்கள் வருவதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக இருப்பவர்கள் யாரு.....விடுமுறையில் காலத்தை நேரத்தை செலவிட தாயகம் நோக்கி செல்பவர்கள் அங்கு போய் செய்யும் அனாவசியமான செலவுகள் எடுப்புக்கள் தான்..வசதி உள்ளவர்கள் குடுக்கிறார்கள்,வாங்குகிறார்கள் வசதி அற்ற வறிய தாய்,தந்தையர்கள் தங்களது பிள்ளைகளை வாழ வைக்க என்ன பாடுபடுவார்கள்...

குடும்பத்தில் இளையவர்,வயதுபோனவர் என்ற பேதம் இன்றி இந்த தொலை பேசி அழைப்புக்கள் தொல்லை கொடுப்பது உண்டு..தங்கள் பிள்ளைகளை முறித்துக் கொள்ளக் கூடாது,அவர்களை தொந்தரவு பண்ணக் கூடாது என்ற பிடிவாதத்தோடு மிகுதியாக இருக்கும் பிள்ளைகளுக்கும் சில பெற்றோர் தங்கள் சகோதரங்கள் மற்றும் அவர்களினது பிள்ளைகளிடம் போணுக்கு மேல்,போண் போட்டு லட்சம்,லட்சமாய் கேட்டு வாங்கி ஆடம்பரமாக திருமணங்களையும் மற்றும் செலவுகளையும்,ஏன் சீதணத்தை கூட கொடுப்வர்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள்...அப்படி கொடுக்காது விட்டால் ஊர் போய் வருபவர்களிடத்தில் தேவை அற்ற கதைகளை கதைத்து விடுவது போன்ற விடையங்களையும் தற்போதைய காலத்தில் பார்த்துக்கொண்டு இருக்க கூடியதாக இருக்கிறது..

Edited by யாயினி

  • தொடங்கியவர்

உங்கள் கதை மூலம், எமது சமுதாயத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்!

இப்படியான, விரலுக்கு மிஞ்சிய எடுப்புக்களே, புலத்தில் தூள் கடத்தல், கடனட்டை மோசடி என்று பல்வேறு வடிவங்களில், தனது முகத்தைக் காட்டுகின்றது!

ஆனால், உங்கள் அம்மா, தனது நாகாஸ்திரத்தை, இன்னும் உபயோகிக்கவில்லை!

அதை உபயோகிக்கும் போது, உங்கள் பிடிவாதத்தையும், விட்டு விட்டுத் திருமனத்திற்குத் தலையாட்டுவீர்கள்!

ஏனெனில், வேள்விக்கிடாயின், கடைசிப் பலிபீடம் அது!

யூ மீன்..... " நீ இந்தப் பெடிச்சியை கட்டாட்டிக்கு என்னை உயிரோடை பாக்கமாட்டாய் . எனக்குக் கொள்ளியும் வைக்கப்படாது சொல்லிப் போட்டன் " இதுதானே :lol::lol::D:D:icon_idea: . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு புங்கையூரான் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை கோம்ஸ் அண்ணா ஆனால் பிழை வேள்வி கிடாயில தான் அன்றி தாயில் இல்லை. முன்பும் இதே கருத்தை கூறி இருக்கிறேன், அதாவது புலத்தில் இருக்கும் வாழ்க்கை கஷ்டங்கள் தாயகத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. புலத்தில் இருப்பவர்களும் தாங்கள் வசதியாக இருப்பதாக காட்ட, கேட்ட உடனேயே கேட்ட தொகையிலும் கூடவாக அனுப்புகிறார்கள். இதனால் ஊரில் இருப்பவர்கள் "தம்பி வெளிநாட்டில நல்லா இருக்கிறான்" எண்டு புளுகிப் புளுகி செலவழிக்கிறார்கள். நான் அவுஸ் வந்த சில வருடங்களிலும் நான் ஊருக்கு விடுமுறை போகும் போதும் சில நண்பர்கள் வாயைத் திறந்து கேட்டார்கள். "மச்சான், உனக்கு உதெல்லாம் பெரிய காசே? தூக்கித் தாடா"என்பது அவர்களின் அபிப்பிராயம். கேட்ட ஒருவருக்கும் காசாக ஒரு சதம் கூட குடுக்கவில்லை. பல்கலையில் படித்துக் கொண்டிருந்த ஒரே ஒருத்தனுக்கு மட்டும் கையில் சில ஆயிரங்களைத் திணித்து விட்டேன். சிறுவயசிலே தகப்பனை இழந்தவன் அவன்.

இன்னொரு விடயம் அண்ணா, வெளிநாட்டில் வேற பொம்பிளயளுடன் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் உண்மைகளை சொல்லாது ஊரிலே பெண் எடுப்பது மிகப் பெரிய கொடுமை. உள்ளதை உள்ளபடி சொல்லி கட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. கனவுகளுடன் விமானம் ஏறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவது மிகப் பெரியதொரு பாவம். இதில் சீதனம் கேட்பது அதைவிடப் பெரிய கறுமம்.

  • தொடங்கியவர்

பொதுவாக மூத்தது ஆண் பிள்ளை என்றில்லை பெண் பிள்ளையாய் பிறந்தாலும் குடும்ப பொறுப்புக்களை சுமக்க வேண்டி வரும்...நல்ல கதையை கருவாக எடுத்த கோமகனுக்கு பாராட்டுக்கள் .

உண்மைதான் ரதி அக்கா . ஆம்பிள்ளையளுக்கு ஒருபக்கம் அடியெண்டால் பொம்பிளையளுக்கு நாலு வளத்தாலையும் அடிதான் . உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி .

கதை நல்லாய்யிருக்கு ... ஆனால் ஜீவாவின் இந்த கருத்துடன் நான் உடன்படமாட்டேன்...வயசுக்கும் கனவுக் கன்னிகளுக்கும் தொடர்பே இல்லை.... :D

அதுதானே :lol: :lol: ????????? மிக்க நன்றிகள் புத்தா .

  • தொடங்கியவர்

இப்படி ஆண்மையற்றவர்களுக்கு கல்யாணம் ஏன் என்றுதான் தோன்றுகின்றது .

அவன் ஒரு தொடர்கதை என்று படம் எடுக்க தான் உதவும் .

நாப்பது வயசுக்கு பின்னால ஆண்மையை காட்டி என்ன செய்யப்போறார் ?? ஆதால தான் அவருக்கு கலியாணம் வேண்டாம் . மிக்க நன்றிகள் அர்ஜுன் உங்கள் நேரத்திற்கு .

  • தொடங்கியவர்

15 வருசம் ஓடி ஓடி உழைத்து அலுத்துப் போனவருக்கு 40 வயதில்

திருமணத்திற்கு 60 லட்சம் 30 பவுண், வீடு அதோடை வளவும்

கேட்டது நல்லா இல்லை.

அதைவிட அவருக்கு லைலாவோடை வேறை பழக்கமாம் :D:rolleyes:

டீலைப் போட்டது அம்மாக்காறி வாத்தியார் . பெடி என்ன செய்யும் ? வருகைக்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]நாப்பது வயசுக்கு[/size] பின்னால [size=6]ஆண்மையை காட்டி [/size]என்ன செய்யப்போறார் ?? ஆதால தான் அவருக்கு கலியாணம் வேண்டாம் . மிக்க நன்றிகள் அர்ஜுன் உங்கள் நேரத்திற்கு .

யாழில் பலருக்கு கோபத்தை உண்டாக்கும் கேள்வி இது.

எனக்கும் தான்.

எங்களைப்பற்றிய தங்களது கணிப்பு தப்பானது கோ...... :wub::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பலருக்கு கோபத்தை உண்டாக்கும் கேள்வி இது.

எனக்கும் தான்.

எங்களைப்பற்றிய தங்களது கணிப்பு தப்பானது கோ...... :wub::D :D :D

யாழிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும்அவர்களுக்கெல்லாம் கோபம் வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் ஆக்கள்ள இருக்குற பிரச்சனையே இது தான் 40 வயசுக்கு மேல ஒண்டுமே பண்ண முடியதேண்ட எண்ணம் வெள்ளையல்ல பாருங்க அவங்க வாழ்கையே 40 வயசுக்கு மேல தான் ஆரம்பம் ஆனா என்ன எங்கட ஆக்கள் உடம்ப கவனிக்கிறேல்ல 35 வயசிலையே தொப்பைய தள்ளிட்டு திரிறது...

தொப்பை இருந்தாலும் நாங்கள் சகலகலாவல்லவர்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பல முதலாவது புலம்பெயர் தலைமுறை அண்ணாமாரின் சொந்தக்கதை சோகக்கதை...நல்ல கதைக்கரு கோமகன் அண்ணா...வாழ்த்துக்கள்..

எங்கட தமிழ் ஆக்கள்ள இருக்குற பிரச்சனையே இது தான் 40 வயசுக்கு மேல ஒண்டுமே பண்ண முடியதேண்ட எண்ணம் வெள்ளையல்ல பாருங்க அவங்க வாழ்கையே 40 வயசுக்கு மேல தான் ஆரம்பம் ஆனா என்ன எங்கட ஆக்கள் உடம்ப கவனிக்கிறேல்ல 35 வயசிலையே தொப்பைய தள்ளிட்டு திரிறது...

இங்கு எண்பத்துஐந்து வயது வாலிபன் மணிக்கு நூறு நூற்று இருபது கிலோமீற்றர் வேகத்தில் ஆடம்பரமான காரில் பறப்பதை பார்க்கின்றோம். எழுபது, எண்பது வயதுகளிலேயே உலகத்தை ஆட்டிப்படைக்கின்றார்கள். இருபது, முப்பது வயதுக்காரர்களினால் செய்யமுடியாத காரியங்களை 60, 70, 80 வயதுக்காரர் செய்வதைப்பார்க்கின்றோம்.

தற்காலத்தில் எமது உடம்பின் அடி தொடக்கம் நுனி வரை எல்லாவிதமான அங்கங்களினதும்/உறுப்புக்களினதும் வயதுக்குறைபாடுகளையும், இயலாமைகளையும் மருத்துவம், வசதிகள் மூலம் நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு அல்லது பின்தள்ளிப்போடுவதற்கு முடிகின்றது.

எமது உடல்நலத்திலும், உளநலத்திலும் அக்கறை எடுத்தால், அத்துடன் வசதி, வாய்ப்புக்களை கிடைத்தால்/உருவாக்கினால் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு வயது ஓர் தடையாக அமையாது.

தமன்னா கனவில் வந்தால் காற்சட்டை நனையும் அளவுக்கு ஆள் வலுவற்று திடகாத்திரம் இல்லாமல் காணப்பட்டால், அத்துடன் புகை, மதுப்பழக்கமும் காணப்பட்டால் நிலமை பாரதூரமானதே.

வெளிநாட்டு வாழ்க்கையில் பல இடையூறுகள் உள்ளன. அதற்காக நூறுடன் நூற்றொன்றாக நாம் மடியவேண்டும் என்று இல்லையே.

குடும்பங்களினுள் மட்டுமல்ல, வெளியார் - இதர உறவினர்கள், ஒட்டி உறவாடுபவர்கள்... வாங்கி மகிழ்ந்தவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நாம்தான் கொடுக்கல், வாங்கலில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவேண்டும். காசு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு செலவளிக்கும் எமது நேரம், எமது தலையில் ஏற்றுகின்ற இதர பொறுப்புக்களையும் கவனமாகக்கையாளவேண்டும்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

வேள்விக் கிடாய் நன்றாக இருக்கிறது..இப்படியான அம்மாக்களும் பிள்ளைகளும் மாறாமல் இருக்கும் மட்டும் எங்கள் சமுதாயத்தில் எதுவும் மாறும் என்று நாம் நினைத்து விட முடியாது இருக்கிறது...சொல்லப் போனால் ஆண்கள்,பெண்கள் முடிவுகளை எடுப்பதற்கு பூரண சுதந்திரம் தாயகம் தவிர எந்த நாட்டிலும் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குத் தான் இன்றைக்கு மக்கள் மாற்றம் பெற்று இருக்கிறார்கள்...இதை என் காதால் பலமுறை கேட்டும் இருக்கிறன்...அதன் பின் வாழ்வு என்றால் ஒரு வெறுப்பைத் தான் தந்து இருக்கிறது...

சுயமாக சிந்திக்காதவரையில் வயது வந்த ஆண்கள்,பெண்கள் வீட்டுப்பூச்சிகளாக சிறுவர்களாகவே இருக்கும் மட்டும் அம்மாக்களின் வாய்கள் இப்படி லட்சம்,லட்சமாய் கேட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறது...அதுவரை ஆண்கள் சரி,பெண்கள் சரி பலி ஆடுகள் தான்.அறுபது லட்சம் பணம் 30 பவுண் நகை போதுமா சீதணம்....இவ்வளவுக்கும் மகன் என்ன வேலை செய்யிறார்....அது தெரியாத அம்மா....ஊரில் இருப்பவர்களுக்கு நினைச்ச உடன் லட்சம்,லட்சமாய் அனுப்பி விடுவதற்கு புலத்தில் இருப்பவர்களை பணம் காய்க்கும் மரங்கள் என்று தான் இன்றுவரை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..அங்கு இருப்பவர்களது வசதி வாய்ப்புக்களோடு இந்த பணம் காய்க்கும் மரங்கள் இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை...அவ்வாறன தொலை பேசி அழைப்புக்கள் வருவதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக இருப்பவர்கள் யாரு.....விடுமுறையில் காலத்தை நேரத்தை செலவிட தாயகம் நோக்கி செல்பவர்கள் அங்கு போய் செய்யும் அனாவசியமான செலவுகள் எடுப்புக்கள் தான்..வசதி உள்ளவர்கள் குடுக்கிறார்கள்,வாங்குகிறார்கள் வசதி அற்ற வறிய தாய்,தந்தையர்கள் தங்களது பிள்ளைகளை வாழ வைக்க என்ன பாடுபடுவார்கள்...

குடும்பத்தில் இளையவர்,வயதுபோனவர் என்ற பேதம் இன்றி இந்த தொலை பேசி அழைப்புக்கள் தொல்லை கொடுப்பது உண்டு..தங்கள் பிள்ளைகளை முறித்துக் கொள்ளக் கூடாது,அவர்களை தொந்தரவு பண்ணக் கூடாது என்ற பிடிவாதத்தோடு மிகுதியாக இருக்கும் பிள்ளைகளுக்கும் சில பெற்றோர் தங்கள் சகோதரங்கள் மற்றும் அவர்களினது பிள்ளைகளிடம் போணுக்கு மேல்,போண் போட்டு லட்சம்,லட்சமாய் கேட்டு வாங்கி ஆடம்பரமாக திருமணங்களையும் மற்றும் செலவுகளையும்,ஏன் சீதணத்தை கூட கொடுப்வர்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள்...அப்படி கொடுக்காது விட்டால் ஊர் போய் வருபவர்களிடத்தில் தேவை அற்ற கதைகளை கதைத்து விடுவது போன்ற விடையங்களையும் தற்போதைய காலத்தில் பார்த்துக்கொண்டு இருக்க கூடியதாக இருக்கிறது..

மறைமுகமாக நான் இந்த வேள்விக்கிடாய் மூலம் சொல்லவந்த செய்தியும் இதுதான் . அடைப்படையில் புலத்தில் ஊர்ச்சீவியங்களை சீவித்துக்கொண்டு உதட்டளவில் முற்போக்குக்கு விசிலடிக்கும் இனக்குழுமமாகவே நாங்கள் இருக்கின்றோம் . இப்படி நான் சொல்வது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் . ஆனால் எல்லோரது மனச்சாட்சிக்கும் தெரியும் நூறுவீதமான உண்மையென்று . மிகவும் ஆரோக்கியமான விமர்சனத்தை தந்த எனதருமைத் தங்கை யாயினிக்கு மிக்க நன்றிகள் . உங்கள் போன்றோரது விமர்சனங்களே எனது எழுத்து வலிகளை மாற்றுகின்றன .

  • தொடங்கியவர்

நல்ல கதை கோம்ஸ் அண்ணா ஆனால் பிழை வேள்வி கிடாயில தான் அன்றி தாயில் இல்லை. முன்பும் இதே கருத்தை கூறி இருக்கிறேன், அதாவது புலத்தில் இருக்கும் வாழ்க்கை கஷ்டங்கள் தாயகத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. புலத்தில் இருப்பவர்களும் தாங்கள் வசதியாக இருப்பதாக காட்ட, கேட்ட உடனேயே கேட்ட தொகையிலும் கூடவாக அனுப்புகிறார்கள். இதனால் ஊரில் இருப்பவர்கள் "தம்பி வெளிநாட்டில நல்லா இருக்கிறான்" எண்டு புளுகிப் புளுகி செலவழிக்கிறார்கள். நான் அவுஸ் வந்த சில வருடங்களிலும் நான் ஊருக்கு விடுமுறை போகும் போதும் சில நண்பர்கள் வாயைத் திறந்து கேட்டார்கள். "மச்சான், உனக்கு உதெல்லாம் பெரிய காசே? தூக்கித் தாடா"என்பது அவர்களின் அபிப்பிராயம். கேட்ட ஒருவருக்கும் காசாக ஒரு சதம் கூட குடுக்கவில்லை. பல்கலையில் படித்துக் கொண்டிருந்த ஒரே ஒருத்தனுக்கு மட்டும் கையில் சில ஆயிரங்களைத் திணித்து விட்டேன். சிறுவயசிலே தகப்பனை இழந்தவன் அவன்.

இன்னொரு விடயம் அண்ணா, வெளிநாட்டில் வேற பொம்பிளயளுடன் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் உண்மைகளை சொல்லாது ஊரிலே பெண் எடுப்பது மிகப் பெரிய கொடுமை. உள்ளதை உள்ளபடி சொல்லி கட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. கனவுகளுடன் விமானம் ஏறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவது மிகப் பெரியதொரு பாவம். இதில் சீதனம் கேட்பது அதைவிடப் பெரிய கறுமம்.

சொல்லப்போனால் இரண்டுபக்கத்தையும் தொட்டிருக்கறன் . காசுகளை அனுப்பி பண்ணையார்தனம் விடுறது பிழை . அதோடை பெடியள் எண்டால் அம்மாமாருக்கு நேந்துவிட்ட கிடாய் தான் . நீங்கள் சொன்ன கருத்துக்காகத்தான் அவர் கலியாணமே வேண்டாமெண்டவர் . ஏனெண்டால் வெளிநாட்டு மாப்பிளை எண்ட தகுதியோடை , அம்மாகாறியின் கொழுத்த சீதனத்தோட ஒரு பெட்டையின்ர வாழ்க்கையோட அவர் விளையாட றெடி இல்லை . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தும்ஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.