Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பற் திருவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC00427_copy.jpg

[size=4]கடற்காற்று குளிராக வீசிக்கொண்டிருந்தது!

கிடுகு வேய்ந்த, தனது தோணிக்குள், அரிக்கன் விளக்கைக் கொஞ்சம் தூண்டி எரியவிட்ட சிங்கன், தனது வலது காலின் விரல்களை மெதுவாக, நீவி வீட்ட படி, ஒரு பீடியைப் பத்த வைத்துக்கொண்டான்!

சீ! இந்தக் கண்டறியாத 'சரளி வாதத்தாலை' ஒண்டும் ஒழுங்காச் செய்யேலாமல் கிடக்கு! தனக்குத் தானே புறு புறுத்துக் கொண்டான்! வேறெவரும் தோணிக்குள் இருக்கவில்லை! சிறிது முன்னர்தான், களங்கண்டித் தடிகள், ஊன்றும் வேலையில் பாதியை முடித்து விட்டிருந்த வேளையில், இந்தச் சரளிவாதம், அவனது கால்விரல்களை இழுத்து விட்டது! கொஞ்ச நேரம் செல்லச் சரிவரும், என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன், பீடிப் புகையை நன்றாக, இழுத்துவிட்ட வேளையில், அவனது நினைவுகள், கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தன!

போன முறை, அம்மன் கோவில் திருவிழா முடிஞ்ச கையோடு, அடைவு வைச்ச மனுசியின்ர தாலிக்கொடியை, அண்டைக்குப் பகல் தான், அடைவு மீட்டிருந்தான். இந்தக் களங்கண்டி மீன்பிடி, இன்னும் ஒரு கொஞ்ச நாள் தான் செய்ய வேணும்! அங்கால வாடைக் காற்றுப் பெயரத் துவங்கினால், இந்தக் கடலுக்கை இறங்கி நிண்டு, களங்கண்டி வலை விரிக்கிற வேலையோட மினக்கடத் தேவையில்லை, என்று நினைத்தவன், குறைப் பீடியைக் கடலுக்குள் வீசியெறிந்து விட்டு, மிச்ச வேலையைத் தொடர்ந்தான்!

வாடை பெயர்ந்தால், சிங்கனைப் பிடிக்க முடியாது!

கடற்கரையில், அந்த அம்மன் கோயிலடியில், அவனது ஓலைக் குடிசை ஒன்று, புதிதாக முளைத்திருக்கும்! குறைந்தது ஒரு நாலு பேராவது, அவனுக்குக் கீழே வேலை செய்வார்கள்! கடற்கரை முழுவதும், ஒரே திருவிழாக் கோலம் கொள்ளும்! வெளியூரில் இருந்து, வருகிற மீனவர்களுக்கெல்லாம், அவனிடம் ஒரு தனி மரியாதை! இதற்கு முதலாவது காரணம், அவன் உள்ளூரவன் என்பதாக இருக்கலாம்! ஊர்ப் பெரியவர்களும், சாதாரண ஊர் மக்களும், அவன் மீது காட்டும் மதிப்பும், மரியாதையும், அவனை, வெளியூரார்க்கிடையே, ஒரு உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாகவே, எண்ண வைத்திருந்தன! அதற்குப் பல காரணங்கள், இருந்தன! ஒரு முறை, கடலில் பிடிக்கப் படும் கணவாய்களுக்குத் திடீர் மரியாதை, வந்து விட்டது! காரை நகரிலிருந்த 'சீனோர்' நிறுவனம், இந்தக் கணவாய்களின் உடற்பகுதியை மாத்திரம், அதிக விலை கொடுத்து வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது! ஊர்மக்களுக்கு, கழிக்கப் பட்ட கணவாய்த் தலைகளும், செட்டைகளும் மட்டுமே விற்கப் பட்டன! அப்போது, ஊர்மக்கள் வாங்கிய பின்பு, மிச்சமிருக்கும் கணவாய்களை மட்டுமே, வெளியாருக்கு விற்கவேண்டும், என்று வாதாடியவனாம் சிங்கன்!. அத்துடன், அந்த ஊர் அம்மன் கோவிலில், நடக்கும் கப்பற்திருவிழா! இது சிங்கனாலும், அவனுடன் சேர்ந்த மற்ற மீன் பிடிப்பவர்களாலும் செய்யப் படுவது!

காலமை, வெள்ளாப்பு நேரம் கரையிறங்கிய சிங்கன், நேரே வீட்டுக்குப் போய் ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு, எழுந்து சாப்பிட்ட பின்பு, சந்தைப் பக்கம் போகிற பாதையில் நடக்கத் துவங்கினான்! கொஞ்சம் வெயில், தலையில சுட்ட மாதிரிக் கிடக்கத் தோளில் கிடந்த துவாய்த் துண்டை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு நடந்தான்! வழியிலிருந்த கள்ளுத் தவறணையிலிருந்து, சிங்கண்ணை என்று யாரோ கூப்பிட, தவறணைக்குள் நுழைந்தவனை, என்னண்ணை, வெயிலுக்கு மருந்திருக்கேக்கை, ஏன் வேர்த்து விறுவிறுப்பான்? என்ற தம்பையரின் குரல் வரவேற்றது!

சரி, அப்ப ஒன்டையடிப்பம் என்று தொடங்கியவன், நாலு போனப்பிறகு தான், கொஞ்சம் பொச்சடிக்கத் துவங்கினான்! அதுக்கிள்ள, தவறணையில் கூட்டமும் சேர்ந்துவிடத் தம்பையர் தான் முதலில் கதையைத் தொடக்கி வைத்தார்!

சிங்கன், இந்த முறை வாற, சித்திரைத் திருவிழாவில, நீயும், உன்ர ஆக்களும் நடத்திற 'கப்பல் திருவிழா' அந்த மாதிரி இருக்கோணும்! வழக்கம் போல, நாலு கூட்டம் மேளமும், சின்ன மேளமும் கட்டாயம் இருக்கும் தானே! என ஆரம்பித்து வைத்தார்!

சிங்கண்ணை, இப்போது வெறும் சிங்கனாகி விட்டார்! பனங்கள்ளின் மகிமை அப்படி!

தம்பையர், எங்கட திருவிழாவை விட நல்லா இந்த ஊரில, ஆராலும் செய்ய ஏலுமே?

இல்லச் சும்மா ஒரு கதைக்கென்டாலும், செய்யத் தான் விட்டிடுவமே?

சிங்கனின் ஆட்களும் சேர்ந்து கொள்ளத் திருவிழாவுக்கு, அத்திவாரம் போட்ட திருப்தியில், தம்பையரும், சிங்கன் உனக்கும், உன்ரை ஆக்களுக்கும், என்ர கணக்கில ஒவ்வொண்டு எண்டு சொல்ல சிங்கன் பாட்டி குளிர்ந்து போனது!

வாடையும் வழக்கம் போல வந்து போனது! சூடை மீனும், அந்த மாதிரி!

அம்மாளாச்சி துணையால, இந்த முறை, கடலன்னை கிள்ளித் தராம, அள்ளி எல்லோ தந்திருக்கிறா! மனசார அம்மாளாச்சியை வாழ்த்தினான், சிங்கன்!

பிள்ளையள் வளருதுகள்! வீட்டைக் கொஞ்சம் பெருப்பிக்க வேணும்! கிணத்துத் தண்ணி கொஞ்சம் மணக்கிற மாதிரிக் கிடக்குது! இந்த முறை, கட்டாயம் சேறு எடுக்க வேணும்! அவனது சராசரி மனம் கணக்குப் போட்டது!

திருவிழாவும் தொடங்கி விட்டது! எல்லாரும், சிங்கனுக்கு உசுப்பேத்திற வேலையில, மும்முரமாத் தொடங்கீற்றினம்!

சிங்கன் இந்தமுறை 'கப்பல்' உண்மையான கப்பல் மாதிரி இருக்க வேணும், சரியோ!

சிங்கனுடைய ஆக்களும், இந்த முறை 'ராசேஸ்வரி' கோஸ்டி எண்டு சொல்லி, ஒரு பொம்பிளை மேளமொண்டு புதுசா வந்திருக்காம் என்று சொல்லச் சிங்கனும், விலை தலை ஒண்டும் விசாரிக்காமச் செட் அப் பண்ணச் சொல்லீட்டான்! விலையைப் பற்றி அவன் கவலைப் பட்டிருக்கவும் மாட்டான்! திரும்பவும், தங்கட திருவிழா தான், பெருசா இருக்க வேணும்!

திருவிழாவும் வந்தது! மேளக்கச்சேரியை, இந்த முறை ஒருத்தரும் அடிக்கேலாது எனச் சிங்கனின் காது பட எல்லோரும் கதைக்கச், சிங்கன் பெருமையால் குளிர்ந்து போனான்!

வடக்கு வீதிக்குச் சாமி வரக், கிட்டத்தட்ட விடியத் துவங்கி விட்டிருந்தது!

'சின்ன மேள மேடையைச்' சுத்திச் சனம் நெருக்கமா வரத் துவங்கீற்றுது!

முதலாவது வரிசையில், வயது போனவர்கள் அடிபட்டு இடம் பிடித்துக் கொள்ள, பெடியள் அவைக்குப் பின்னாலையும், இளம்பெடிக் கூட்டம், கடைசி வரிசையிலும் இடம் பிடித்துக் கொண்ட விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

'நாங்க புதிசா!

...

வாத்தியாரின் பாட்டோடு சின்னமேளம் துவங்கக் கரகோசமும், விசில் சத்தமும் வானத்தைப் பிழந்தன!

தொடர்ந்து , ஒரு பக்கம் பாக்கிறா.. ஒரு கண்ணைச் சாய்க்கிறா....[/size]

[size=4]எல்லாருடைய கண்களும் சாயத் தொடங்கி விட்டன! வயதானவர்களுடைய கண்களும் தான்!

கம்பி போட்ட ஜன்னலிலே.... கன்னத்தைத் தேய்க்கிறா....

மீண்டும் விசில் சத்தங்கள்!!!!

ஒரு மாதிரிக் 'கப்பலைக்' கொண்டு வந்து, கோயிலுக்கிள்ள வைச்சாப் பிறகு....

சிங்கனும், அவன்ர ஆக்களும் கணக்கு முடிக்க ஒன்றாகக் கூடினார்கள்!, எல்லாரும் தங்கட திருவிழா தான் இந்த முறையும் பெரிசு, என்று பெருமைப் பட்டுக் கொண்டு, தங்கள் முதுகுகளில் தாங்களே தட்டிக் கொண்டார்கள்!

வாற முறையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டார்கள்!

ஒரு வாரத்தின் பின்பு....

சிங்கனும். மனுசியின்ர தாலிக்கொடியோட அடைவு கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும்... பப்பா மரத்தில், ஏற்றி விட்டால் மனைவியின் தாலிக்கொடியை... அடைவு வைத்து திருவிழா செய்த சிங்கனைப் போல, பலர் எம்மில் இங்கும் பிள்ளைகளுக்கு... மண்டபம் எடுத்து... பல்லாயிரம் யூரோக்கள் கடன்பட்டு பிறந்தநாள், சாமத்தியச்சடங்கு, திருமணம் செய்பவர்கள் உள்ளார்கள். கதைக்கு நன்றி புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற ஆக்கள உசுபேத்தியே ஆண்டி ஆக்குற ஒரு கூட்டம் மற்ற ஆக்கள் தங்கள பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே வரவுக்கு மீறி செலவு செய்யும் ஒரு பகுதி என தமிழர்களின் போலி கவுரவத்தை தொட்டு சென்றிருக்குது உங்கள் கதை பாராட்டுகள்

சிங்கனும், அவன்ர ஆக்களும் கணக்கு முடிக்க ஒன்றாகக் கூடினார்கள்!, எல்லாரும் தங்கட திருவிழா தான் இந்த முறையும் பெரிசு, என்று பெருமைப் பட்டுக் கொண்டு, தங்கள் முதுகுகளில் தாங்களே தட்டிக் கொண்டார்கள்!

வாற முறையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டார்கள்!

இதைத்தான் கிடுகுவேலிக் கலாச்சாரம் என்று சொல்வதோ ?? உங்கள் ஒவ்வொரு அடியும் எனக்குச் சந்தோசத்தையே தருகின்றது . வாழ்த்துக்கள் புங்கை . தொடருங்கள் அடுத்த அடி நோக்கி .

பெயருக்கு ஏற்ற மாதிரி நடக்காவிட்டால் என்ன மாதிரி ?

நல்ல கதை .தாலிக்கொடியா? சின்ன மேளமா? முக்கியம் .

குஷ்புவிற்கு சங்கிலி எறிந்த லண்டன் ரசிகர்களைத்தான் கேட்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் திருவிழா,பொய்க்கால் குதிரையாட்டம்,சின்ன மேளம் பற்றி எல்லாம் எங்கள் வீட்டில் அம்மம்மா,தாத்தாஅடிக்கடி கதைப்பதை கேட்டு இருக்கிறன்..நேரில் பார்த்தத அனுபவம் எல்லாம் கிடையாது புங்கை அண்ணா நிசமாகவே எழுத்தில் காண்பித்து விட்டார்.வீட்டின் நிலை தெரியாது மற்றவர்களுக்கு விலாசம் காட்டுவதற்காக அடுத்தவர்களின் உசுப்பேற்றலுக்காக இப்படியான விடையங்களை செய்துட்டு கடசியில் மனைவியின்,பிள்ளைகளின் நகைகள் தான் மிகுதி பிரச்சனைகளுக்கு ஈடுகொடுப்பது போலும்...ஏன் வெளிநாடுகளில் சனி,ஞாயிறு தினங்கள் என்றால் வீட்டிலா எல்லாரும் இருக்கிறார்கள். ஒவ்வொரு விதமான கொண்டாங்களும் இருக்க,நிக்க நேரமில்லாத ஓட்டமுமாகத் தான் நாட்கள் நகர்ந்து கொண்டு போகிறது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நல்ல பகிர்வு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் திருவிழா கதை அருமை . பாராடுக்கள். பகிர்வுக்கும் உங்கள் நேரத்துக்கும்.

வெளி நாட்டிலிப்படியான விளையாட்டுகள் வேறு மாதிரி நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் நீங்கள் எழுதிய இந்தக்கதையைக் காட்சியாக நேரில்

பார்த்திருக்கின்றேன்.

பாவங்கள் அன்றாட உழைப்பாளிகளை உசுப்பேத்தியே ஒன்றுமில்லாதவர்களாக்கி

விடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் கப்பற்திருவிழா ஒரு பெருமைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை..

எங்களது வருமானத்தில் 30 வீதம் எங்களுக்கு வருவதில்லை என்று நினைத்து வாழ்ந்தால்- அதை சேமிப்பில்/ முதலீட்டில் இட்டால், கஸ்ரமான காலங்களில் down size பண்ணும் போது பெரியளவு கடினம் வராது என்று ஒரு நண்பர் சொன்னார். ஆனால் வரவை விட 30 - 50% கூட செலவு செய்தால் நடுத்தெரு மிக அருகில் தான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பகிர்வு.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்க்கோவில் திருவிழாக்களையும் அடகுப்பிரச்சனையளையும் நாகர்கோவில் கப்பல் திருவிழாவையும் ஞாபகப்படுத்தின புங்கையூரனுக்கு வணக்கம்.ஊரிலை திருவிழாவுக்கெண்டே தோட்டம் செய்தவையும் இருக்கினம்.போட்டிக்கு நாலுகூட்டு பெரியமேளம்,இரண்டு சோடி சின்னமேளம் எண்டு ஒரே அமர்க்களமாயிருக்கும்.....இதுக்கு

சுட்டிபுரம் அம்மன்கோவில் நல்ல ஊதாரணம்....

.இலங்கையிலேயே முதன்முதலாய் தென்னிந்திய பாட்டுக்காரனை திருவிழாவுக்கு கூப்பிட்டு கச்சேரி வைச்ச பெருமையும் சுட்டிபுரத்துக்குத்தான் சாரும்.அது சீர்காழி கோவிந்தராஜன் எண்டது அநேகருக்கு தெரியும்.ஆனால் சீர்காழி வாறதுக்கு எத்தினை தாலிக்கொடி,எத்தினை காணிஉறுதி அடகுக்கு போனதெண்டது எனக்குத்தெரியாது :icon_mrgreen: அடகுக்கு போனது உண்மை.........ம்.........சரி அதை விடுவம்...உங்கள் கதைக்கு நன்றி புங்கையூரன். :)

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தியே சாமிக்கு திருவிழா செய்திட்டாங்கள்,,,,,சாமிக்கு சாத்துப்படி செய்து மகிழ்வதில் இந்த மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை? பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா தாத்தா சொன்ன அதே தான்.

கப்பற்திருவிழா என்றதும் நாகர்கோவில் கப்பற்திருவிழாவைத்தான் நினைத்தேன். வேறு எங்கும் கப்பற்திருவிழா செய்ததாக அறியவில்லை.

வல்லிபுரக்கோவில் கேணித்தீர்த்தம் முடிந்ததும்,கச்சான்,பான்ஸி கடைகாரர் எல்லாம் அப்படியே நாகர்கோவிலுக்கு போய்விடுவார்கள்.

ஊரிலை அனேகம் எல்லாக்கோவிலிலும் இப்படி போட்டிக்கு திருவிழா செய்தாலும் வரணி சுட்டிபுரம் அம்மன் கோவில், கரணவாய் மூத்தவிநாயகர் கோவில் எல்லாம் நல்ல பேமஸ். :rolleyes:

நன்றி அண்ணா மீண்டும் ஒரு நல்ல பதிவுக்கு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கு.சா தாத்தா சொன்ன அதே தான்.

கப்பற்திருவிழா என்றதும் நாகர்கோவில் கப்பற்திருவிழாவைத்தான் நினைத்தேன். வேறு எங்கும் கப்பற்திருவிழா செய்ததாக அறியவில்லை.

வல்லிபுரக்கோவில் கேணித்தீர்த்தம் முடிந்ததும்,கச்சான்,பான்ஸி கடைகாரர் எல்லாம் அப்படியே நாகர்கோவிலுக்கு போய்விடுவார்கள்.

ஊரிலை அனேகம் எல்லாக்கோவிலிலும் இப்படி போட்டிக்கு திருவிழா செய்தாலும் வரணி சுட்டிபுரம் அம்மன் கோவில், கரணவாய் மூத்தவிநாயகர் கோவில் எல்லாம் நல்ல பேமஸ். :rolleyes:

நன்றி அண்ணா மீண்டும் ஒரு நல்ல பதிவுக்கு. :)

ஜீவா, பின் வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்மையில் நீர்வேலியில் நடந்த கப்பல் திருவிழா!

http://www.neervely.com/2009/?subaction=showfull&id=1264871666&archive=&start_from=&ucat=1&

நாகர் கோவில், கப்பல் திருவிழா, அந்தக் கோவில் வரலாற்றுடன் இணைந்தது!

அதைப் பற்றிப் பின்பு சொல்கிறேன்!

ஏனைய கோவில், கப்பல் திருவிழாக்களில், 'கட்டப் படும் கப்பல்;; ஒரு வாகனமாக, உருவகிக்கப் படும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட தமிழ் சிறி, சுண்டல், அர்ஜுன் ஆகிய உறவுகளுக்கு, நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கனும், அவன்ர ஆக்களும் கணக்கு முடிக்க ஒன்றாகக் கூடினார்கள்!, எல்லாரும் தங்கட திருவிழா தான் இந்த முறையும் பெரிசு, என்று பெருமைப் பட்டுக் கொண்டு, தங்கள் முதுகுகளில் தாங்களே தட்டிக் கொண்டார்கள்!

வாற முறையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டார்கள்!

இதைத்தான் கிடுகுவேலிக் கலாச்சாரம் என்று சொல்வதோ ?? உங்கள் ஒவ்வொரு அடியும் எனக்குச் சந்தோசத்தையே தருகின்றது . வாழ்த்துக்கள் புங்கை . தொடருங்கள் அடுத்த அடி நோக்கி .

எங்கட ஊரில, 'காவோலைக் கலாச்சாரம்' என்று தான் அழைக்கிறோம்! :D

நன்றிகள், கோமகன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் திருவிழா,பொய்க்கால் குதிரையாட்டம்,சின்ன மேளம் பற்றி எல்லாம் எங்கள் வீட்டில் அம்மம்மா,தாத்தாஅடிக்கடி கதைப்பதை கேட்டு இருக்கிறன்..நேரில் பார்த்தத அனுபவம் எல்லாம் கிடையாது புங்கை அண்ணா நிசமாகவே எழுத்தில் காண்பித்து விட்டார்.வீட்டின் நிலை தெரியாது மற்றவர்களுக்கு விலாசம் காட்டுவதற்காக அடுத்தவர்களின் உசுப்பேற்றலுக்காக இப்படியான விடையங்களை செய்துட்டு கடசியில் மனைவியின்,பிள்ளைகளின் நகைகள் தான் மிகுதி பிரச்சனைகளுக்கு ஈடுகொடுப்பது போலும்...ஏன் வெளிநாடுகளில் சனி,ஞாயிறு தினங்கள் என்றால் வீட்டிலா எல்லாரும் இருக்கிறார்கள். ஒவ்வொரு விதமான கொண்டாங்களும் இருக்க,நிக்க நேரமில்லாத ஓட்டமுமாகத் தான் நாட்கள் நகர்ந்து கொண்டு போகிறது..

எல்லாக் கொண்டாட்டங்களும், ஒரு சமுதாயப் பிணைப்பை, மேலும் வலுவூட்டுவதற்காகவே உருவாகின!

ஆனால், மனிதன் அவற்றைத் தனது ;நான்' என்ற மமதையில்,புதைத்து விட்டதன் விளைவே, மேலுள்ள கதை!

இது தான் இன்று புலத்திலும் நடக்கிறது!

பானையில் இருப்பது தானே, அகப்பையிலும் வரும், யாயினி?

கருத்துக்கு நன்றிகள்!

புங்கையூரான் நீங்கள் எழுதிய இந்தக்கதையைக் காட்சியாக நேரில்

பார்த்திருக்கின்றேன்.

பாவங்கள் அன்றாட உழைப்பாளிகளை உசுப்பேத்தியே ஒன்றுமில்லாதவர்களாக்கி

விடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் கப்பற்திருவிழா ஒரு பெருமைக்குரிய விடயம்.

கருத்துக்கு நன்றிகள், வாத்தியார்!

எனது ஆதங்கமும், உங்களைப் போன்றதே!

அத்துடன் 'யாவும் கற்பனை' என்று நான் போடவில்லையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த நிலாமதியக்கா, சஜீவன், வொல்கானோ, புத்தன், நந்தன், குமாரசாமியண்ணை ஆகிய உறவுகளுக்கு, எனது நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.