Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதட்டத்தை எவ்வாறு குறைக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே இந்த பதட்டத்தை அதாவது (nervessness) எப்படி குறைக்கலாம் என்று உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளேன். எனக்கு முன்பு எப்போதும் இல்லாத மாதிரி இப்போது ஏதாவது புதிதாக செய்யும் பொழுது இந்த பதட்டம் வந்து தொற்றிக்கொள்கிறது.இது எனக்கு பெரிய பிரச்சினையாக

இருக்கிறது.இதனால் இரண்டு முறையும் சாரதிய செய்முறை பரீட்சையில் சித்தியெய்த முடியவில்லை.இத்தனைக்கும் நான் எழுதிய பரீட்சைகள் ஏராளம்.அப்ப இல்லாத இந்த பதட்டம் எல்லாம் இப்ப வந்திருக்கிறது.

இதை குறைக்க அல்லது இல்லாமல் செய்ய என்ன செய்யலாம்?

  • Replies 67
  • Views 5.3k
  • Created
  • Last Reply

சாரதிப் பரீட்சை எடுக்கப் போகும் முன் dark chocolate சாப்பிடுங்கள்.

நான் பாஸாகிய பின், சோதனை எடுக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தது என்று எனக்கு சோதனை நடத்திய driving test instructor இடம் கூறிய பொழுது, சாரதி பரீட்சையில் பதட்டமடையாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் தன்னிடம் பரீட்சைக்கு வந்த ஒரு Brain surgeon மிகவும் பதட்டப்பட்டதாகக் கூறினார்.

இது விடயமாக கள உறவு போக்குவரத்துக்கு நிறையத் தெரிந்திருக்கும்.

இதைவிட சாதாரணமாகப் பதட்ட்ப்படுபவர்களுக்கு தியானம் நல்லது என்று கூறுகிறார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன், ஒவ்வொரு வருடமும், வயது அதிகரிக்க, எமது 'Reflex" என்பது குறைந்து கொண்டு போவதாகச் சொல்லுகிறார்கள்!

அதாவது ஒரு பதினாறு வயதுடைவருக்குச் சராசரியாக, பன்னிரண்டு மணித்தியாலம் வகுப்புக்கள் போதுமானது! ஆனால், அவருக்கு இருபத்தைந்து வயதாகும் போது, மேலும் ஒன்பது வகுப்புக்கள் தேவைப் படலாம்!

உங்கள் வயது எனக்குத் தெரியாது! ஆனால், நண்பர்கள், உறவினர்களைப் பக்கத்தில் அமர்த்தி, நீண்ட நேரங்கள், பல விதமான சூழ்நிலைகளில், வண்டியை ஒட்டுங்கள்! இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து, Nervousness" ஐக் குறைக்கும்! அதுவே வெற்றிகரமாக, உங்களைச் சாரதியாக்கும்!

எதற்கும், போக்குவரத்துவின் கருத்தையும் கேழுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி அண்ணா.போன முறை சாரதி பரீட்சையில் கை கால் எல்லாம் தந்தியடிக்க வெளிக்கிட்டுடுத்து பெருந்தேருவிலை கை நடுங்கி அடுத்த பாதைக்குள் சில்லு கொஞ்சம் சென்று விட்டது.இப்ப கோபம் பயம் எல்லாம் உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் வருது.இத்தனைக்கும் இன்னும் கல்யாணம் ஆகேலை

[size=1][size=4]பொதுவாக தண்ணீரை குடிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு ஆழ்ந்த பெரு மூச்சை விடலாம்.[/size][/size]

[size=1]

[size=4]என்னால் முடியும் என மனத்திற்குள் கூறிய படி இருக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]உங்களின் ' ஹீரோ ' ஒருவரின் நினைவுகளை மீட்கலாம். [/size][/size]

வாதவூரான்

புதிதாக ஏதும் செய்யும் பொழுது பதட்டம் எல்லோருக்கும் வரும். அதே செயலை ஒவ்வொரு நாளும் செய்ய அது நீங்கிவிடும். எனக்குத் தெரிய சாரதிப் பரீட்சையில் பலமுறை தோற்று, பின்பு வென்றவர்கள் அதிகம். அவர்கள் எந்த சிறு விபத்துக்களும் நடவாமல் கவனமாக வாகனம் ஓட்டுவதைக் கண்டிருக்கிறேன்.

'வல்ல நாயகன் எம்மை வாட்டி வதைப்பது வலிமைப்படுத்துவற்கே' என்கிற மாதிரி ஒன்று சொல்வார்கள் அது உண்மை.

யாராவது மருத்துவத் துறை சார்ந்த கள உறவுகள் 'Anxiety and Nervousness ' பற்றி விளக்கமாகச் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி அண்ணா.போன முறை சாரதி பரீட்சையில் கை கால் எல்லாம் தந்தியடிக்க வெளிக்கிட்டுடுத்து பெருந்தேருவிலை கை நடுங்கி அடுத்த பாதைக்குள் சில்லு கொஞ்சம் சென்று விட்டது.இப்ப கோபம் பயம் எல்லாம் உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் வருது.இத்தனைக்கும் இன்னும் கல்யாணம் ஆகேலை

மொதல்ல கலியாணத்தைக் கட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்த சமயத்தில் அளவில்லாத பதட்டம் இருந்தது.. இது பெரும்பாலானவர்களுக்கு வருவதுதான் போலும்..

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் வா,வராட்டில் போ என்று நினைத்துக் கொண்டு போங்கோ கட்டாயம் சித்தியடைவீர்கள் :lol:

[size=4]வீதி பரீட்சை பற்றிய சில உதவி குறிப்புக்கள் : [/size][size=4]http://www.yarl.com/...8&showentry=198[/size]

[size=4]எங்கள் மாணவர்களினால் முடியும் என்றால் உங்களினாலும் முடியும்![/size] [size=4]: http://www.yarl.com/...8&showentry=208[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆலோசனை கூறிய அனைவருக்கும்.நாளைக்கு மூன்றாவது முறையாக பரீட்சைக்கு தோற்ற இருக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்குது என்று.

[size=5]வாதவூரன், நீங்கள் தமிழீழத்தில் சைக்கிள் ஓடியிருந்தால் பிரச்சனை இல்லை. கார் அப்பனே சிவனே எண்டு தன்பாட்டைல 4 காலில் நிற்கும். சைக்கிள் அப்படி நிற்காது தானே. அப்ப யோசித்துப் பாருங்கோ சைக்கிள் ஓடிய நீங்கள் கார் ஓடுவதற்குப் பதட்டப்படலாமா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாகனச் சாரதி பத்திரம் எடுக்கும் போது... பலருக்கும், பதட்டம் ஏற்படுவது வழமை தான்...

உங்களுக்கு இரண்டு முறை... அனுபவமுள்ளதால், மூன்றாவது முறை பதட்டம் ஏற்படச் சந்தர்ப்பம் குறைவாக... இருக்கும் என நினைக்கின்றேன்.

விரும்பின‌ சாமியை... கும்பிட்டு, திருநீறை பூசிக் கொண்டு போங்க‌ள், ம‌ன‌துக்கு தைரிய‌மாக‌ இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆலோசனை கூறிய அனைவருக்கும்.நாளைக்கு மூன்றாவது முறையாக பரீட்சைக்கு தோற்ற இருக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்குது என்று.

தைரியத்துடன் பரீட்சைக்கு செல்லுங்கள். ஓடும் முறைகள் தெரிந்திருப்பதால்தான் பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்டீர்கள்.......... அதனால் என்னால் முடியும் என்ற துணிவுடன் சென்று வென்று வாருங்கள்.

வெற்றி நிச்சயம். தயங்காமல் போய் வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தால் வா,வராட்டில் போ என்று நினைத்துக் கொண்டு போங்கோ கட்டாயம் சித்தியடைவீர்கள் :lol:

வாதவூரான்!

தங்கச்சி சொன்னமாதிரியும் சொல்லலாம் இல்லாட்டி மனதை சிம்பிளாய் வைச்சிருங்கோ.....எப்பவும் ரேக் இட் ஈசி......கனக்க யோசிக்கக்கூடாது.....தோல்வியும் வெற்றியும் சமன் எண்டு நினையுங்கோ...... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிற்கு பிடிக்காதவர் ஒருவரின் படத்தை உங்களிற்கு முன்னால் ஸ்ரேறிங்கில் ஒட்டிவிட்டு காரை ஓட ஆரம்பிக்கவும் வெற்றி நிச்சயம். திருமணமாகியிருந்தால் உங்கள் திருமணத்தின் போது எடுத்த படத்தை பாவிக்கலாம்

[size=5]வாதவூரன், நீங்கள் தமிழீழத்தில் சைக்கிள் ஓடியிருந்தால் பிரச்சனை இல்லை. கார் அப்பனே சிவனே எண்டு தன்பாட்டைல 4 காலில் நிற்கும். சைக்கிள் அப்படி நிற்காது தானே. அப்ப யோசித்துப் பாருங்கோ சைக்கிள் ஓடிய நீங்கள் கார் ஓடுவதற்குப் பதட்டப்படலாமா? [/size]

[size=4]நல்ல பதில் அலையரசி. ஆம், முதல் முதலாக இரண்டு சில்லு துவிச்சக்கரவண்டி ஓடுவதும் ஒரு சவாலாகவே எல்லோருக்கும் முதலில் இருந்திருக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்.. இதுக்கெல்லாம் கவலைப்படலாமா? :rolleyes: எல்லாம் சரியா வரும்.. :)

Spoiler
கனக்கத்தரம் போனால் எவ்வளவு ஃபெயில் பண்ணினாலும் திரும்பவும் வாறான்.. ரொம்ப நல்லவண்டா எண்டு பாஸ் பண்ணி விடுவாங்கள்.. :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சீரியஸ் ஆக என்ன பதில் போடலாம் என்று நினைத்து பார்கிறேன்.

டிவிங் டரியல் கட்டும் பொது பயம்...இதை தடுப்பதற்கான வழிகள்

௧. நண்பனின் காரில் டரியல் கட்டுதல்

௨. பென்சதியையும் பின் சீட்டில் இருக்க வைத்து டரியல் கட்டுதல்

௧. பாஸ் பண்ணினால் மொட்டை அடிக்கிறது என்று நேத்தி வையுங்கோ

௧.இரண்டு தேசிக்காயை தொங்கவிடல்

௧.இந்தியாவில் இருந்து வந்த சாத்திரிமார்களிடம் காண்டம் பார்க்கிறது

௧. ஒரு பத்து பவுன்ஸ் ஐ பொக்கற்றுக்குள் தள்ளுவது

௧. டரியல்க்கு போகும் போது இரண்டு கோப்பி வாங்கி கொண்டு போவது

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ மூச்சை இழுத்து வெளிவிடுங்கள்.சாரதி பரீட்சையில் சித்தியடைவேன் என்று அடிக்கடி மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.மன உறுதியுடன் வாகனத்தை செலுத்துங்கள்.வெற்றி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பதட்டம் என்பது தானாக உருவாகுவதில்லை.

அதை நாங்களாகவே உருவாக்கிக் கொள்கின்றோம்.

மனதில் உறுதியுடன் அதிக கவனத்துடன் நிதானம் தவறாமல்

நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றி.துரதிஷ்டவசமாக மீண்டும் சித்தியடைய முடியவில்லை.இந்த முறை எந்தவித பதட்டமும் இல்லாமல் ஓடினேன்.முடியும் வரைக்கும் நான் சித்தியடைந்துவிட்டேன் என்றுதான் நினைத்தேன் .ஆக மூன்று சிறிய பிழைகள் தான்.ஒரு வீதி விளக்கை கடக்கும் போது அது மஞ்சளுக்கு மாறி அடுத்தது சிவப்பு வருகிற நேரம் நான் நிறுத்தி விட்டேன் அதிலை துவிச்சக்கர வண்டி பாதையும் நடை பாதையும் இருந்தது முன்னுக்கு துவிச்சக்கர வண்டி பாதை.நான் திடீரென நிறுத்தியதால் முன் சில்லு சிறிய தூரம் நான் நினைக்கிறான் ஒரு மூன்று அங்குலம் நிறுத்தல் கோட்டை தாண்டி விட்டது.இது தான் தீவிரமான பிழையாக பரீட்சகரால் சொல்லப்பட்டது.எனது பயிற்றுனர் சொல்லித்தந்தது.நீங்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தினாலும் பரவாயில்லை சிவப்பு விளக்கு எரியும் போது போகக்கூடாது என்று.எனக்கு விளங்கவில்லை ஏன் இது தீவிர பிழை என்பது.இதை விட என்னால் நன்றாக ஓட முடியாது.இனி என்ன செய்தால் சித்தியடைய முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

வாதவூரான். மனம் தளர வேண்டாம். எனக்கு நெருங்கியவர் ஆறாம் முறைதான் சித்தியடைந்தவர். எனது பயிற்றுனர் (சிறந்த பயிற்றுனர்) ஏழோ எட்டாம் முறைதான் சித்தியடைந்தவர். அதனால்தான் மற்றவர்களுக்கு நன்றாகப் பழக்கக் கூடியதாக இருக்குதென்று கூறுவார். இருவரும் சிறந்த சாரதிகள்.

ஒன்றை மறக்க வேண்டாம், சந்திக்கும் தோல்விகள் எதிர்கால நன்மைக்கே.

பணம் செலவாகும்தான் விடாமல் அடுத்த தேர்வை விரைவாக எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒவ்வொரு தோல்வியும் ஏணிப் படிகள் ஆகட்டும் .அப்போது தான் அந்த வெற்றிக்கு மதிப்பு இருக்கும். அடுத்த முறை எங்களுக்கு சொல்லாமல் சென்று வென்று வருக. :D[/size][size=4] [/size][size=4] [/size]

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.