Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மணம் பலமனம்

Featured Replies

அச்சச்சோ சாத்திரி......ஹீரோ நிலமை இப்பிடி ஆச்சே.இருந்தாலும் ரொம்ப சுயநலம்தான்.அவா இல்லையென்டவுடனே இவாக்கு றோஸாம் சுடிதாராம்.

  • Replies 151
  • Views 22.7k
  • Created
  • Last Reply

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

முதலில இருந்து இப்பதான் படிகிறன் இன்னும் கடைசிப்பக்கத்துக்கு வரேல்லை.... நல்லாப்போகுது கதை....!

சோசமா முடிச்சு போடாதேங்கோ சாத்திரியார் உங்களை கெஞ்சிக்கேக்கிறன்..!

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :D

கதை நல்லா இருக்கு சாத்திரி ஐயா.

முடிவை வாசிக்க ஆவலாய் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :)

சனியன் என்று சொல்லாகூடாது கொனரபல் சனிஸ்வரபகவான் என்று மரியாதையாக சொல்லவும் :D:lol:

கல்யாணப்பரிசாக தாலியா? ஆகா :P :P :P

எப்ப தாத்தா இறுதி பாகம் வரும்? வாசிக்க ஆவலுடன் இருக்கிறன் :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்ததும் சுராயாவும் லோறோனும் வந்து என்னை கட்டி தழுவி தங்கள் வணக்கங்களை தெரிவித்து விட்டு சுராயா என்னை ப்பார்த்த எப்படி பயணம் நன்றாக அமைந்ததா? சரி எனக்கு ஏதோ நிறைய அதிர்ச்சிகள் கொண்டு வருவதாக சொன்னாயெ எங்கே ஒவ்வொன்றாக தா பாரக்கலாம் என்றால் அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு அதிர்ச்சியை பார்த்து அதில் நான் அதிர்ச்சியடைந்துபோய் இருப்பதை எப்படி அவளிற்கு சொல்ல முடியும் எனவே நான் ஓ.. அதுவா அது சும்மாதான் சொன்னன்

எனக்கு பயண களைப்பு அதைவிட தலைவலியாகவும் இருக்கிறது என்னை வீட்டில் விட்டு விடுங்கள் பின்னர் ஆறுதலாக எல்லவற்றையும் பேசலாம் என்று கூற சுராயாவும் ஓ அப்படியா சரி ஆனால் நான் உனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்ல போகிறேன் இதோ இந்த திருவாளர் லோறொன் இப்போ எனது காதலர் எப்படி என்று யோசிக்கின்றாயா?? லோறோன் முன்னரே தனது காதலை என்னிடம் வெளிப்படுத்தியிருந்தான் ஆனால் நான் தான் உன்னை மனதில் நினைத்து கொண்டு திரிந்த படியால் முன்னர் அவனது காதலை நிராகரித்து விட்டேன்.

நீதான் எனது காதலை ஏற்காத திருமணம் செய்ய போகிறென் என்று ஒடிவிட்டாய் அதில் மனமுடைந்து போய் சரியாக வேலையும் செய்ய முடியாமல் தவித்த காலங்களில் லோறோன் தான் என்னுடைய துன்பங்களில் பங்கு கொண்டு எனக்கு அறுதலாகவும் இருந்தவன் . யோசித்து பார்த்தேன் நீதான் எனக்கு இல்லையென்றாகி விட்ட பின்னர் எதற்காக இன்னமும் கவலைபட்டுகொண்டிருக்க வேண்டும் என நினைத்து என்னை விரும்பும் லொறெனிற்கு நான் சம்மதம் தெரிவித்த விட்டேன் .

இப்போ இருவரும் ஒன்றாக தங்குவதற்கு வீடு தேடி கொண்டிருக்கிறோம் என சொல்லியபடி லோறொனை பார்த்து கண்ணடித்து விட்டு என்னை பார்த்தாள். இருவரிற்கும் மீண்டும் எனது கைகளை குலுக்கி வாழ்த்துகள் எனகூறிவிட்டு வண்டியில் ஏறி புறப்பட தயாரானோம் . வண்டியில் ஏறியதும் சுராயா கேட்டாள் எனக்கு என்னபரிசு ஏதோவாங்கியதாக தொலை பேசியில் சொன்னாயே என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்றவும்.

நான் அவசரபடாதே தருகிறேன் என கூறி விட்டு அவர்கள் பார்க்காத சமயம் அவளிற்காய் வாங்கிய சுடிதார் பையினுள் நான் எழுதி வைத்திருந்த அந்த காதல் மடலை மெதுவாய் எடுத்து எனது சட்டை பையினுள் வைத்து விட்டு இந்தா இதுதான் உனக்கு வாங்கிய பரிசு என்று கொடுக்கவும் வாங்கி பார்த்தவள் வாவ்........என்று மகிழ்ச்சியில் எனக்கு நன்றிகள் கூற லோரொன் என்னை பார்த்து அப்ப எனக்கு எதுவுமே இல்லையா என்றான்??? எல்லோரிற்கும் இருக்கு அவை பெரிய பொதியில் இருக்கிறது பின்னர் தருகிறென் என்றவும்

. ஓ அப்ப சுராயாவின் பரிசை விசேடமாக கைகளிலேயெ கொண்டு வந்தாயா??என்று கேட்டு சிரிக்க சுராயாவும் சிரித்தாள் எனக்கு சிரிப்பு வரவில்லை ஆனாலும் சிரிப்பதைபோல நடித்தேன் . வீடு வந்து சேர்ந்தாகி விட்டது இறங்கி கொண்ட நான் எனது பொதியை வீட்டிற்குள் கொண்டு வந்து தரவா??என லோறொன் கேட்டான் வேண்டாம் நானெ எடுத்து கொள்கிறேன் எனகூறி இருவரிற்கும் நன்றி கூறி விடை பெற்றுகொண்டு பொதியை தூக்கினேன் பொதியின் பாரம் எனது மனதின் பாரம் இரண்டும் சேர்ந்து என்னை சற்று தள்ளாட வைத்தது வீட்டினுள் புகுந்துகொண்டநான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு கட்டிலில் சில நிமிடங்கள் வீழ்துகிடந்த எனக்கு மெதுவாய் எழுந்து சாப்பாட்டு மேசையை பார்த்தேன்.

அன்று நான் வருவது தெரிந்து எனது நண்பன் சமைத்து வைத்துவிட்டு ஒரு போத்தல் விஸ்கியும் வாங்கி வைத்து விட்டு வேலைக்கு போயிருந்தான். ஒரு கிளாசை எடுத்து அதில் சில ஜஸ்கட்டிகளை போட்டு விஸ்கியை அதில் ஊற்றிவிட்டு உங்களிற்கு சொல்கிறேன் நான் கவலைக்காக குடிக்கவில்லை ஏதோ குடிக்கவேண்டும் போல் இருக்கிறது அதனால் குடிக்கிறேன்............................................

முடிந்தது)

இந்த கதையில் கதையின் நாயகன் மற்றும் நாயகி சுராயா போன்றோர் எடுத்து முடிவுகள் பற்றி உங்கள் கருத்துகளையும் வையுங்கள்.

மேலதிகமாக சில தகவல்கள் இந்த கதையின் நாயகி நிதர்சினி தனது காதலன் குமாரை திருமணம் செய்து பிள்ளைகளுடன் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள். சுராயாவும் லோறோனும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்து இருவரிற்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால் இருவரும் பின்னர் பிரிந்து விட்டார்கள்.கதையின் நாயகன் சுதனும் திருமணமாகி மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். அப்பாடா ஒரு மாதிரி கதையை முடிச்சாச்சு நிம்மதி உறவுகளே மீண்டும் அடுத்த ஒரு தொடருடன் எண்டு சொல்லதான் ஆசை சே..... இப்போதைக்கு இந்த கோடை முடியும் வரை எனக்கு நேரம் கிடைக்காது எனவே மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் சாட்றீ

கதை நல்லா இருக்கு. முடிவு எப்படியிருக்கப்போகுதோ :?

கதை நல்லா இருக்கு. முடிவு எப்படியிருக்கப்போகுதோ :?

என்ன அங்கிள் அதுதான் கதை முடிஞ்சிதே அப்புறம் என்ன கதை எப்படி இருக்க போகுதோ?? :? :? :?

ம் ஒரு மாதிரி அவசரப்பட்டுக் கதையை முடிச்சிட்டீங்கள்.நாயகன் நாயகி எடுத்த முடிவுகள் சரிதான். அம்மா அப்பாக்காக திருமணம் செய்திட்டு தத்தளிக்கிறதை விட நாயகன் எடுத்த முடிவு நல்லதுதான் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

நல்ல கதை நல்ல முடிவு சாத்திரி.

வாழ்த்துக்கள்! :lol: :P

நல்ல முடிவு. நன்றி சாத்திரி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அம்சமான முடிவு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

சாத்திரமும் சம்பிரதாயமும் எங்களுக்காக நாங்களே உருவாக்கினது தானே சாத்திரி அங்கிள்.....

நல்லா முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் எல்லா தம்பதிகளூக்கும். :P :P :P சுதனும் சந்தோசமாக வாழ்த்து மழலை செல்வமும் கிடைக்க :P வாழ்த்துறேன் :P :P

எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

தேவையான நேரத்தில கிடைக்கேல்ல எண்டு யாரு சொன்னது? :roll: அதென்ன எல்லாச் சூழ் நிலையிலும்? :lol:

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

சாத்திரிக்குப் பயமாக இருக்கிறது போல் உள்ளது. கவலைப்படாதீர்கள், உங்கள் தொழிலிற்கு மோசம் வராது. ஏனெனில் பெரியோர்கள் இருக்கிறார்கள். :wink: 8)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையினை வாசித்த திருப்தி. அடுத்த கதையினை ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்

விருவிருப்பாக சிறுகதை எழுதுவதில் சாத்திரிக்கு நிகர் யாழில் ஒரு வரும் இல்லை. பாராட்டுக்கள்

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருந்தது

ஆனால் ஆரம்பத்தில் சுதன் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் முடிவில இல்லை

மனைவியை விரும்பியவனுடன் சேர்த்து வைக்கும் கணவனாக ஓகே ஆனால் அதுக்கு பிறகு அவர் சுரயாவை தேர்ந்து எடுக்கும் முடிவு சரியில்லை

கதையும் அதை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருந்தது பாராட்டுகள்

:P

  • 5 years later...

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் மதியமே திண்ணையில் பார்த்து முழுக்க வாசித்துவிட்டேன் லாலிப் பப் கருத்துகளை தவிர அதை படிக்கவேயில்லை,

வாசிக்கும் போதே இது பாக்கியராஜின் படம் மாதிரி தாலியை கலடிற சீன் வரும் ஆனா கலட்ட வைப்பிங்கள் என்றே எதிர்பாத்தேன், நன்றி நல்ல உயிர் ஓட்டமா எழுதியிருக்கிறீர்கள், யாரவது சுட்டு படமெடுக்க போறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

ஆ...ஆ...ஆச்சும். 5 வருசத்திற்கு பிறகு தப்பிலி தூசு தட்டியதில் வந்த தும்மல் அது. தற்சமயம் சுதனைப்பற்றி மட்டுமே தெரியும். 3 பிள்ளைகள் சந்தேசமாக இருக்கிறான். மற்றையவர்கள் பற்றி எதுவும் தெரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை சம்பவங்கள் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்.சிலது மட்டுமே நினைவில் நிற்கின்றது. அடுத்ததாய் இன்று திரும்ப இந்தபக்கத்தை ஒரு நோட்டம் விட்டேன். அடடா சாத்திரிக்கு அந்த நேரம் எவ்வளவு இரசிகைகள் இருந்திருக்கினம். யாழ் களத்திலை அந்த நேரம் ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. இப்ப என்னடாவெண்டால் நாலு கிழவியளோடை மாரடிக்கவேண்டிக் கிடக்கு.சே......வாழ்க்கை வெறுத்திட்டுது. :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.