Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைத்தாலே நெஞ்சு பக் பக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்
Posted Today, 05:04 PM
கடந்த வருடம் நானும் என் கணவரும் இரண்டு பிள்ளைகளும் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தோம். கணவரின் ஒன்றுவிட்ட சகோதரன் தினேஷ் அங்கிருந்தான். இத்தாலி பற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருந்தாலும் அவன் இருக்கும் துணிவு ரோமில் போய் இறங்கியாச்சு. எங்க பாத்தாலும் கூடுதலா சிங்களவங்கள்தான். கூடிக் கூடி நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். அவங்கள் எங்களப் பாத்து நக்கலடிச்சுச் சிரிச்சமாதிரி இருந்திது. அவங்களுக்கு முன்னாலை கேவலப்பட்டுப் போனது போலை அவமானமா இருந்திது.
கணவரின் தம்பியை பத்து வருடம் கழித்துப் பார்த்தபடியால் என்ர மனுசன் குடும்பக் கதையள் கதைக்கத் தொடங்கீட்டார். போலி எண்ட இடத்திலதான் தம்பி இருந்தபடியால் அங்க போற பஸ்சில ஏறி இருந்தாச்சு. பஸ் வெளிக்கிட முதல் ஒரு தமிழர் ஓடி வந்து ஏறினார். இவர் பரம் என்ர பிரென்ட் ,ரூம் மேட் எண்டு தம்பி அறிமுகப் படுத்தினார். நான் வடிவா ஆளைப்பாத்தன். முதல் பார்வையிலேயே எனக்கு அவரப் பிடிச்சுப் போச்சு எண்டு சொல்லுவன் எண்டுதானே நினைக்கிறியள். அதுதான் இல்ல. பாத்தஉடனேயே எனக்கு அவனப் பிடிக்கேல்லை.
என்ர மனுசனும் தம்பியாரும் முன்சீற்ரில நானும் பிள்ளையளும் பின்சீற்ரில. எங்களுக்குப் பக்கத்தில இருந்த சீற்றில அவன் வந்து இருந்திட்டான். சீற் இருந்தா ஆரும் எங்கயும் இருக்கலாம்தானே எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்கிது. முன்னுக்கு நிறைய சீற்றுகள் இருந்தது. என்ர கணவரைப் பாத்து கலோகூடச் சொல்லேல்லை. என்னைப் பாத்து எத்தனை மணிக்கு வந்தனியள்? ரோம் எப்பிடி இருக்கு? சாப்பிட்டியளோ? இப்பிடி கேள்விமேல கேள்வி கேட்டது மட்டுமில்லாமல் இரண்டு மூன்றுதரம் என்ர மகளின் கையைப் பிடிக்க மகள் கையை இழுக்க, பாத்த எனக்குக் கோவம் வந்திட்டிது. அண்ணை மகளை விடுங்கோ அவ அழப்போறா எண்டு அவன்ர குரங்குச் சேட்டைக்கு முற்றுப்புள்ளி வச்சன்.

பஸ் ஒரு மணித்தியாலமா போகுது போகுது அனுராதபுரக் காட்டுக்குள்ளால போன மாதிரி எனக்குப் பயம் பிடிச்சிட்டுது. என்ன வீடுகள் ஒண்டையும் காணேல்ல காட்டுக்குள்ளேயோ இருக்கிறனியள் எண்டன் தம்பியைப் பார்த்து . பயப்பிடதைங்கோ வீட்டிலதான் இருக்கிறம் எண்டார் மச்சான். கொஞ்ச நேரத்தில வீட்ட போட்டம். அக்கம் பக்கத்தில ஒண்டுரண்டு வீடுகள் மாத்திரம்தான். ஆனால் வீடு நல்ல அழகாக இருந்ததால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. முதல்ல சாப்பிடுவம் நீங்கள் பசியோட இருப்பீங்கள் என்று அழைத்தார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போனால் அழகாக அலங்கரிச்சிருந்தார்கள். முதலில வயின் குடியுங்கோ என்று சொல்லியபடி பிள்ளைகள் உட்பட எல்லோருக்கும் தந்தார் மச்சானின் நண்பன். நான் மட்டும் கொஞ்சம் குடிக்கிறன் அவைக்கு வேண்டாம் என்றார் என் கணவர். வெளிநாட்டில இவ்வளவு காலம் இருக்கிறீங்கள் இதெல்லாம் பழகியிருக்க வேண்டாமோ என்றார் நண்பன். எவ்வளவு காலம் இருந்தால் என்ன கட்டாயம் பழகவேணுமோ என்றேன் நான். வெள்ளைக்காரர் கூட சின்னப்பிள்ளயளுக்குக் குடிக்கக் குடுக்கிறேல்லை என்றேன் தொடர்ந்து. எங்கள் பிள்ளைகளின் வயது நான்கும் ஏழும். நண்பரின் முகம் ஓடிக் கறுத்துவிட்டது. மிகுதியாக இருந்த மூன்று கிளாசையும் எடுத்துக்கொண்டு உள்ளே போனார். அதன்பின் பெரிதாகக் கதைக்கவில்லை. என் கணவர் தான் அவரிடம் வலியக் கேள்விகள் கேட்டு நிலைமையைச் சுமுகமாக்கினார்.
அடுத்தநாள் காலை எழுந்து கடன்கள் முடித்து வரவேற்பறைக்கு வந்தால் கையில் சிகரெற்றுடன் சோபாவில் இருக்கிறார் மச்சானின் நண்பன். எனக்கு சும்மாவே சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால் எரிச்சல் வரும். வீட்டுக்குள்ள பிடிச்சுக்கொண்டு நிக்க கோவம்தான் வந்திது. அனால் அது என்னுடைய வீடு இல்லையே அதனால் வாய் மூடிக்கொண்டு இருப்பம் என்று நினைத்துக்கொண்டு இருக்க மச்சான் உள்ளுக்குள் வந்து சின்னப்பிள்ளயளுக்கு முன்னால சிகரெட் பிடிக்காத வெளியில போய் பிடி என்றார். மச்சானை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு வெளியே போனார் நண்பர். எங்களுக்கு முன்னால ஏன் அப்பிடிச் சொன்னனி என்றார் என் கணவர். அவனை விடு உங்கட ப்ளான் என்ன என்று கேட்க நாங்கள் இன்று ரோமைச் சுற்றிப் பார்ப்பம் என்று கூறினோம். அந்தப் பரதேசியும் சேர்ந்து வெளிக்கிட்டுது.
உவனும் வாரானோ எண்டு கணவரிடம் முணுமுணுத்தேன். வந்தனாங்கள் சமாளிச்சுக்கொண்டுதான் போகவேணும் வாயை ரண்டு மூண்டு நாளைக்குத் திறக்காதை என்றார். சரி பார்ர்க்கலாம் என்று நானும் பொறுமையாய் இருந்தேன். பஸ்ஸில் கணவர் எமக்கு அரணாக இருந்தபடியால் அவனுடைய தொல்லை பஸ்சில இல்லை. இரண்டு மூன்று இடங்கள் பாக்கவே நேரம் போனது தெரியவில்லை. சரியான பசி. எங்கயாவது நல்ல இத்தாலிச் சாப்பாடு சாப்பிடுவம் என்று என்கணவர் கூறினார். நான் ஒரு நல்ல இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போறான் எண்டு முன்னால் போக விதவிதமான இத்தாலி உணவைக் கற்பனை செய்தபடி பின்னே போனோம். இங்க நல்ல சாப்பாடு என்று கூறியபடி ஒரு கடைக்குள் நுழைய நிமிர்ந்து பார்த்தால் மெக்டொனால்ட்ஸ். இது எல்லா இடமும் இருக்கிற கடைதானே என நான் நினைக்க என்கணவர் அதை உடனே சொல்லிவிட்டார். சரி அண்ணா இண்டைக்கு இங்க சாப்பிடுவம். நாளைக்கு நல்ல கடையாப் பாத்து சாப்பிட்டாப் போச்சு என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மச்சான். பின்னிரு நாட்கள் பரம் வேலைக்குப் போனதால் நாங்கள் நல்ல சந்தோசமா
நின்மதியா எல்லா இடமும் திரிஞ்சம். அடுத்த நாள் பீசா கோபுரம் பார்க்கப் போவதாக முடிவெடுத்தம்.
காலை எழுந்து சந்தோசமா வெளிக்கிட்டுக்கொண்டு இருக்கிறம் அறைக்கு வெளியில தம்பியாரும் பரமும் எதோ வாக்குவாத்ப்படுற மாதிரி இருந்திது. என்னெண்டு போய்ப் பாருங்கோவன் எண்டு மனிசனைக் கலைச்சன். அவர் போக நானும் பின்னால போனால் இண்டைக்கு எனக்கு வேலை நீங்கள் நாளைக்கு பீசாக்குப் போனால் நானும் வரலாம். என்னை விட்டிட்டு எப்பிடி நீ போவாய் எண்டு பரமு சொல்லிக்கொண்டிருந்துது. நான்தான் இண்டைக்குப் போவம் எண்டனான். நாளைக்கு என்ர பிரெண்ட் ஒருத்தனிட்ட வாறன் எண்டு சொன்னனான் என்று கணவர் சொன்னதும் ஒன்றும் பேசவில்லை பரமு. அன்று உலக அதிசயம் ஒன்றைப் பார்க்கப்போகிறோம் என்ற பிரமாண்ட எதிர்பார்ப்புடன் தொடருந்தில் பயணித்தோம். அங்கு போய்ப்பார்த்தால் நாம் நினைத்தது போல் பெரிதாக இருக்கவில்லை சாய்ந்த கோபுரம். இருந்தாலும் சாய்ந்தும் இன்னும் விழாதிருக்கும் அதிசயம் உண்மைதானே என மனதைத் தேத்திக்கொண்டு அன்று முழுவதும் அங்கேயே கழித்தோம். மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து கிளம்பி ரோமுக்கு வந்தோம். ரோமில் ஒரு பிரபல்யமான பீட்சா கடைக்குக் கூட்டிக்கொண்டு போனார் தம்பி. ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் விதவிதமாக பீட்சா சாப்பிட்டிருக்கின்றோம். ஆனால் தக்காளியும் கத்தரிக்காயும் பெரிதாக வெட்டிப் போட்டு மிகவும் உருசியாக இன்றுவரை எங்குமே அதுபோல் பீட்சா சாப்பிடவில்லை. இப்பொழுது நினைத்தாலும் வாயில் எச்சில் ஊறுகிறது. பின்னர் ஒருமணிநேரம் இரவு வெளிச்சத்தில் ரோமில் திரிந்துவிட்டு மிக்க மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் சிகரெட்டும் கையுமாக நிக்கிறார் பரமு. அன்றைய பொழுது நன்றாகப் போனதால் எனக்குப் பரமுவின் சிகரெட் புகைகூட ஒன்றும் செய்யவில்லை. வாங்கோ சாப்பிடுவம் என்றார் பரம். சின்னப்பிள்ளயளோடை எட்டு மணிவரை சாப்பிடாமல் இருக்கேலுமே. அதாலை அங்கேயே சாப்பிட்டாச்சு என்று மச்சான் கூற உடுப்பு மாத்திற சாட்டில நாங்கள் அறைக்குள்ள போட்டம். நான் விசரன் மாதிரிச் சமைச்சு வச்சிட்டுப் பாத்துக்கொண்டு இருக்கிறன். நீ உன்ர ஆக்களக் கண்டஉடன கடையில நக்கீற்று வாறியோ நாயே எண்டு திட்டின சத்தமும் டேய் அண்ணாக்கள் முதல்முதல் என்னட்டை வந்திருக்கினம். இன்னும் ஒருநாள்த்தானடா உன்ர புத்தியைக் காட்டாதை என்று தம்பியார் சொல்வதும் கேட்டது. அதுக்குப் பிறகு நாங்கள் வெளியில போகவில்லை. மனிசன் கதவைத் திறந்து தினேஷ் நாங்கள் படுக்கப்போறம். நாளைக்கு விடிய வேளைக்கு எழுப்பு என்று சொல்லிவிட்டு வந்து படுத்துவிட்டார். அன்றைய சந்தோசமெல்லாம் வடிந்துபோனத்தில் மீண்டும் பரமுவில் எரிச்சல்தான் வந்திது. அலைஞ்ச களைப்புத்தீர வடிவா குளிச்சிட்டுப் படுத்திருக்கலாம். எந்தப் பரதேசியால அப்பிடியே படுத்தாச்சு எண்டு மனிசனுக்கு சொன்னன். நாளைக்கு விடிய எழும்பி வடிவாக் குழி எண்டு சொல்லிப்போட்டு மனிசன் படுத்திட்டார். கொஞ்ச நேரத்தில நானும் நித்திரை கொண்டிட்டன்.

டோம் டாம் டும் எண்டு எதோ சத்தமெல்லாம் கேட்க திடுக்கிட்டு எழும்பினால்இரவுபதினொன்றேகால். கனவுதான் எதோ கண்டிருக்கிறான் எண்டு நினைச்சுக்கொண்டு திரும்பவும் படுக்கையில திரும்பிப் படுக்க இன்னும் பெரிய சத்தம். பேய் கீய் வாறதெண்டாலும் பன்னிரண்டு மணிக்கல்லோ வரும் இன்னும் பன்னிரண்டு ஆகேல்லையே எண்டு நினைச்சுக்கொண்டு மனிச்சனைத் தட்டுறன். வாறஇடத்திலையும் மனிசரைப் படுக்க விடுகிறாய் இல்லை எண்டு திட்டிக்கொண்டே மனிசன் எழும்புது. எனக்கே சந்தேகம் வந்திட்டுது. ரண்டு மூண்டு நிமிசம் ஒரு சத்தமும் இல்லை.சத்தியமா எதோ சத்தம் கேட்டதப்பா. நான்பொய் சொல்லேல்லை எண்டு சொல்ல பே பிசாசு வந்தாலும் உன்னக்கடசிவரையும் தூக்காது படு என்றுசொல்லிக்கொண்டு மனிசன் திரும்பிப் படுக்க எதோ எறியிறமாதிரி பெரிய சத்தம். இந்தமுறை எனக்குமுதல் மனிசன் எழும்பி இருந்திட்டுது. நான் பயத்தில மனிச்சனுக்குப் பக்கத்தில போய் இருந்தன். என்ன சத்தமப்பா எண்டு திரும்பவும் கேட்டன். வாறன் வெளியில போய்ப் பாக்கிறன் எண்டு மனிசன் எழும்பினார். என்னெண்டு தெரியாமல் போகாதைங்கோ எண்டு நான் தடுத்தன். அடிபடுறாங்கள் எண்டு சொல்லிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு போக தனியனிக்கப் பயத்தில நானும் பின்னால போய்நிக்க தினேஷ் என்னடா சத்தம் எண்டு இவர் கேட்கிறார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
திருத்தங்கள்

  • Replies 103
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது எனக்கு உதவுங்கோ கொப்பி பண்ணி அனுப்பிய பிறகு அரைவாசிக் கதை இப்பிடி வந்திட்டுது.

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

எனக்கும் கிட்டத்தட்ட இப்படி ஒரு அநுபவம் இருக்கு .இலங்கைக்கு போன நேரம் எனது நண்பனின் நண்பன் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு கண் ஒபரேசனுக்கு வந்திருந்தார் .நாங்கள் போகுமிடமெல்லாம் கண் தெரியாதவரை வீட்டில் தனிய விடக்ககூடாது என்று கூட்டிக்கொண்டு திரிந்ததில் மூன்று நாட்கள் சரியாக கஸ்டப்பட்டுவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தா நமக இந்த மந்திரத 108 தடவ சொல்லுங்கோ எல்லாம் சரியாயிடும் :lol::D:icon_idea:

[size=4]திறந்துகொண்டு போக தனியனிக்கப் பயத்தில நானும் பின்னால போய்நிக்க தினேஷ் என்னடா சத்தம் எண்டு இவர் [/size][size=4]கேட்கிறார்.

[size=3]Edited by நிழலி, Today, 06:26 PM.

திருத்தங்கள்[/size][/size]



என்ன சண்டைக்கிடையிலை நிழலி கத்தியோடை, வாளோடை போட்டாரோ. ஏமாத்தமாய் இருக்கு முடிவை கேளாதது :D

Edited by மல்லையூரான்

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் மெசோ!

நன்றாக இருக்கிறது சுமேரியர் அக்கா, தொடருங்கள். :) என்ன நடந்ததென்று அறிய முன்னம் முடித்து விட்டீர்களே..... :D அடுத்த பகுதிக்காக waiting...

  • கருத்துக்கள உறவுகள்

எக்கச் சக்கமான இடத்திலை, விட்டுப் போட்டுப் போட்டீங்கள்!

தொடருங்கள், காத்திருக்கிறோம்!

வேறு வழி??? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நன்றாக இருக்கின்றது தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா கதை எல்லாம் எழுதிரா பிறகென்ன கலக்குங்கோ...... நல்லா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது, சுமேரியர்.

அடுத்த பகுதி எப்போ வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] நன்றாக் உள்ளது தொடர்ச்சியை படிக்கும் ஆவலுடன்...........[/size]

வணக்கம் மெசோ - மன்னிக்கவும் உங்கள் பெயரை சுருக்கியதற்கு.

கதை ஆரம்பம் நன்றாக இருக்கிறது. உங்கள் மைத்துனனின் நண்பனின் செயல் நாகரீகமற்றது போல் தெரிகிறது. பரம் அவரது உண்மைப் பெயராக இராது என்று நினைக்கிறேன். இருந்தால் அது சரியில்லை தானே.

  • கருத்துக்கள உறவுகள்

மர்மக்கதை அதிகம் வாசிப்பீங்களோ :unsure: தொடருங்கள் நல்லாயிருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர அக்கா..நன்றாக இருக்கிறது..விரைவில் மிகுதியை இணையுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது, சுமேரியர்.

தொடருங்கள்

நன்றாக உள்ளது. தொடருங்கள் மெ.சு.

ஒளிவு மறைவில்லாத வஞ்சகமற்ற எழுத்துக்கள். :rolleyes:

இன்னும் பன்னிரண்டு ஆகேல்லையே எண்டு நினைச்சுக்கொண்டு மனிச்சனைத் தட்டுறன். வாறஇடத்திலையும் மனிசரைப் படுக்க விடுகிறாய் இல்லை எண்டு திட்டிக்கொண்டே மனிசன் எழும்புது.

சும்மா பகிடிக்கு. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை உற்சாகப்படுத்தும் உறவுகள் அனைவருக்கும் நன்றி. நேற்று முழுவதும் வீட்டுக் கணினியில் லொகின் பண்ண முடியவில்லை. எப்பிடியும் இன்று முழுக் கதையையும் அனுப்பியே தீருறதெண்டு இரவு நிழலிக்கும் மோகன் அண்ணாக்கும் மெயில் அனுப்பிவிட்டு சாமம் பண்ணிரண்டரைவரை எழுதி முடிச்சிட்டு சேவ் பண்ண மறந்திட்டன். கணினி ஸ்ரக் ஆகி எல்லாம் போச்சு. விடிய எழும்மிக் கொஞ்சம் எழுதினனான். மிகுதியை எப்படியும் இண்டைக்கு முடிச்சிடுவன்.

அண்ணா எனக்கொண்டுமில்லை நீ போய்ப் படு என்று தினேஷ் சொல்ல மீண்டும் அடி விழும் சத்தம் கேட்கிறது. இவர் கதவைத் தள்ளுகிறார்.கதவு உள்ளே பூட்டியிருக்கு. கதவுக்கு முனால் ஏதேதோ பொருட்கள் விழும் சத்தம். தினேஷ் முதல்ல கதவைத்திறடா என்றபடி இவரும் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அண்ணா நீ போ அண்ணா.இவன் இப்பிடித்தான் காலமை சரியாவிடும் என்றி தினேஷ் கூற உண்ட ஆக்களைக் கண்டஉடன உனக்கு நான் விசரனாப் போனான் என்ன. தொடர்ந்து காதால் கேட்கமுடியாத அளவு தூசன வார்த்தைகள் கேட்கின்றன. வாங்கோ அப்பா போவம் எனநான். தினேஷ் நீ எண்ட தம்பியடா ஆரோ உன்னை அடிக்க நான் பாத்துக்கொண்டு பேசாமல் போகட்டோ என்று இவர் கேட்டதுதான் தாமதம் மீண்டும் அடிகள் பலமாக விழும் சத்தம் கேட்கிறது. இவர் கதவை உடைப்பதுபோல் இடிக்கிறார். டேய் கத்தியால குத்திப்போடுவன். ஏற்க்கனவே ஒருதனக் குத்த்ப்போட்டு ஜெயில்ல இருந்தனான் நான் என்று கூறிக்கொண்டு அடிக்கிறான்.எனக்கு அவன் கத்தி எண்டதும் பயம் பிடிச்சிட்டுது.மனிசன்ர கையைப் பிடிச்சு உள்ளுக்கை இழுத்துக்கொண்டு போறான். பிள்ளையளும் நீயும் இருக்கிறியள் எண்டு பாக்கிறன் இல்லாட்டி நாய முறிச்சுப்போடுவன். மனிசன் கோவத்தில கத்துது. இவர் எதுக்கும் துணிஞ்ச ஆள்.அதாலை நான் சொன்னன் அவன் ஜெயிலுக்குப் போனதெண்டுவேற சொல்லுறான்.ஏனப்பா தேவையில்லாத வேலை. நாளைக்கு விடிய எழும்பிப் போவிடுவம். இந்தக் காட்டுக்கை கூப்பிட்டாலும் ஒருத்தரும் வரமாட்டினம். அவன் கோவத்தில எங்களை வெட்டிப் புதைச்சாலும் ஒருத்தருக்கும் தெரியாது எண்டு புலம்பியபடி கதவின் கொண்டியைச் சரிபார்க்கிறேன்.கதவுக்குத் திறப்பு இல்லை. நினச்சா கதவை உடைத்துக்கொண்டு அவன் உள்ளுக்குள் வரலாம் என ஏதேதோ கற்பனை செய்தபடி படுக்கையில் வந்து இருக்கிறேன். மனிசனும் படுக்கவில்லை. எனக்கு வாய் திறந்து மனிசனோட கதைக்கவே பயமா இருக்கு. நல்லவேளை பிள்ளையால் நித்திரை. சிறுநீர் கழிக்கவேணும் போல் இருந்தாலும் பயத்தில போகவில்லை. கொஞ்ச நேரத்தில ஒரு சத்தமும் இல்லை. எம் அறைக்குள் என் இதயத் துடிப்பும் மனிசனின் இதயத் துடிப்பும் பெரிசாக் கேட்குது. படு நான் முழிச்சுக்கொண்டு இருக்கிறன் என்று மனிசன் சொல்ல நான் சரிஞ்சு படுக்கிறன். ஆனால் கண்ணை மூட முடியேல்லை. காதுகள் இரண்டும் கதவுப்பக்கமே காவல் காக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமா மனிசன் இருக்கும் தயிரியத்தில் கண்ணயர்ந்து போகிறேன். இருந்தாலும் தொடர்ந்து தூங்க முடியவில்லை. கனவில் அவன் கத்தியுடன் கலைப்பது போல் இருக்கு. திடுக்கிட்டு எழும்பிப் பாத்தா மனிசன் படுக்கையில் சாய்ந்துகொண்டு சுவரோடு தலை சாய்த்துப் படுத்திருக்கிறார்.எத்தினை மணி எண்டு நான் கேட்கிறேன். அஞ்சு மணியாகுது ஆறு மணிக்கு எழும்பி வெளிக்கிடுவம் என்கிறர். ஒரு நாளைக்கு இரண்டு பஸ் எண்டு சதீஸ் சொன்னமாதிரி இருக்கு. பிறகு ஏதும் சத்தம் கேட்டதோ என்கிறேன். பிறகு ஒண்டும் கேட்கேல்லை விடியட்டும் என்கிறார். நான் நிற்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வெளியில போகவும் பயத்தில இருப்பதைப் பர்ர்த்து வா டொயிலற்றுக்கு என்று மனிசன் கொண்டியை மெதுவாத் திறந்து வெளியில போக நானும் போறன். எவ்வளவு கெதியா அலுவலை முடிக்கேலுமோ அவ்வளவுகெதியா அலுவலை முடிச்சது அண்டைக்குத்தான். ஒரு மணித்தியாலம் ஒண்டும் பேசாமல் படுத்திருந்தம். பிறகு எதோ சத்தங்கள் கேட்டுது.பத்து நிமிசத்தில யாரோ கதவைத்திறந்துகொண்டு வெளியில போற சத்தம்.மனிசன் எங்கட கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் சதீஸ் எண்டு மெதுவாக் கூப்பிட்டார். சதீஸ் வெளியில வந்து தலையைக் குனிஞ்சுகொண்டு நிக்கிறது எனக்குக் கதவிடுக்கால் தெரியுது. நாங்கள் இப்ப வெளிக்கிடப்போறம்.பஸ் எத்தின மணிக்கு. காலை எழு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் தான் அண்ணா எண்டு எதோ சொல்ல வெளிக்கிட நீயும் எங்களோட வாறியோ எண்டு மனிசன் கேட்டஉடன சதீஸ் மெதுவா ஓமெண்டு தலையாட்டுவது தெரிகிறது. நான் உடனே பல் தீட்டி முகம் கழுவி வெளிக்கிட்டிட்டன். கொண்டுபோன இரண்டு சூட்கேசுகளையும் அடுக்கி மனிசன் பாத்ரூமால் வர பிள்ளைகளையும் வெளிக்கிடுத்தியாச்சு. இன்னும் பஸ்சுக்கு முக்கா மணித்தியாலம் இருக்கு பிள்ளையளுக்கு சான்விச் குடுங்கோ என்று சதீஸ் கொண்டுவந்து தந்திட்டுப் போனான். நானோ மனிசனோ சாப்பிடவில்லை. பிள்ளைகளும் அரைவாசி சாப்பிட்டபடி வச்சிட்டினம். எனக்கு அவன் திரும்ப வாறதுக்கிடையில வீடைவிட்டுப் போய்விட வேண்டும்போல் இருந்ததால் போய் பஸ்கோல்டில நிப்பம் எண்டு சொன்னன். சரியெண்டு எல்லாரும் வெளிக்கிட்டம். ஒரு பதினைந்து நிமிடம் நடந்தால் றோட்டுக்குப் போய்விடலாம். மனிசன் ஒரு சூட்கேசை இழுக்க சதீஸ் மற்றதைக் கொண்டுவர நான் கடைசி மகளைக் கையில பிடித்தபடி சுற்றிவரப் பார்த்துக்கொண்டு போறம். அங்கங்கே கிவித் தோட்டம். பார்க்க மனதை இலகுவாக்குகிறது. இத்தனை நாட்களாக கிவி மரத்தில்தான் காய்ப்பதாக எண்ணியிருந்த எனக்கு முந்திரிகைப் பந்தல் போட்டதுபோல் போட்ட பந்தலில் கொடிஎங்கும் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தற்செயலாகப் பார்வையைத் திருப்பினால் முன்னால பரம் வந்துகொண்டிருக்குது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மற்ற மகளையும் கையில பிடித்தபடி மனிசனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு நின்றேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் கிட்ட வர மனிசன் முந்திக்கொண்டு நாங்கள் கிளம்பிறம் என்றதுதான் தாமதம் பாஞ்சு போய் சதீசுக்கு அடிக்கத்தொடங்கிவிட்டான். அவையை நாளைக்கு எல்லே போகச் சொன்னனான் நாயே நீ சொல்லேல்லையே என்று மீண்டும் அடிக்க பிள்ளையள் அழத்தொடங்கிவிட்டினம். மனிசன் சூட்கேசை கீழே வைத்துவிட்டு அவர்களை நோக்கிப் போக நான் வேண்டாமப்பா நாங்கள் போவம் என்று சொல்ல பிள்ளையளும் போவம் எண்டு அழ அவன் சதீசை விட்டிட்டு வீட்டை நோக்கிப் போகத்தொடங்கினான். சதீசின் கண்ணாடி உடைந்து சேட்டெல்லாம் கிழிஞ்சு பாக்கவே பரிதாபமாக இருந்திது. நீ போ அண்ணா நான் சேட் மாத்திக்கொண்டு வாறன் என்று சதீஸ் திரும்ப எடேய் enra சேட் போடலாம் நில் எடுத்துத் தாறன் எண்டு சூட்கேசைத் திறக்கவெளிக்கிட இல்லை அண்ணா நீ போ வாறன் எண்டு எமது பதிலுக்குக் காத்திருக்காமல் போக நான் இரண்டு பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக போக மனிசன் இரண்டு சூட்கேசுகளையும் இழுத்துக்கொண்டு ஒருமாதிரி பஸ் போற வீதிக்கு வந்தாச்சு. நான் நேரத்தைப் பார்த்தேன்.இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு பஸ்வர. அவன் திரும்ப வாறானோ என்ற பயத்துடன் நான் நிற்கிறேன். ஏனம்மா சித்தப்பாக்கு அடிச்சவர் என மூத்த மகள் கேட்க அவனுக்கு விசர் என நான் கோவத்தோடு சொல்ல பிள்ளயளோட உப்பிடிக்க் கதைக்காதை என்றபடி அவை சும்மா விளயாடுக்குச் செய்தவை என்று கணவர் பிள்ளைக்குக் கூறுகிறார்.

தூரத்தில் சதீஸ் வருவது தெரிகிறது. சதீசின் பின்னால் அவன் வருகிறானா என நான் பார்க்கிறேன். அவனைக் காணாதது நின்மதியளிக்க சதீஸ் வந்தவுடன் நீ என்ரா அவனுக்குத் திருப்பி அடிக்காமல் அடி வாங்கிக் கொண்டிருந்தனி. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சன என்று இவர் கேட்க நான் முந்தி விசா இல்லாமல் இருந்தனான் அப்ப அவன்தான் என்னைப் பாத்தவன் என்கிறான் சதீஸ். அதுக்காகமட்டும் நீ பேசாமல் இருந்த மாதிரி எனக்குத் தெரியேல்லை. என்ன பிரச்சனை எண்டு சொல்லு என்ன செய்யலாம் எண்டு நான் சொல்லுறன் என்கிறார் இவர். சதீஸ் ஒன்றும் சொல்லாமல் நிற்க மனிசனுக்குக் கோவம் வந்திட்டுது. டேய் நான் கேட்கிறன் நீ வாய மூடிக்கொண்டு நிக்கிறாய் என்று சொல்லவும் அதே மவுனம். சரி நீ இனி இங்க நிக்க வேண்டாம் எண்ட பாஸ்போட்டில அண்ணியோட சுவிசுக்குப் போ. அண்ணி திரும்ப வந்து என்னைக்க் கூட்டிக்கொண்டு வரட்டும் என்கிறார் இவர். என்னால வர முடியாதண்ணா என்னும் சதீசை இவரும் நானும் கோபத்தோடு பார்க்கிறோம். ஏன் ஆரையாவது கொலகிலை செய்து அதை அவன் பாத்து பிளாக்மெயில் பண்ணுறானோ உன்னை.அல்லாட்டில் வேற என்ன பிரச்சனை எண்டு நீ சொன்னாத்தானே எனக்குத் தெரியும் என்று இவர் சொல்லிக்கொண்டிருக்க தூரத்தில் பஸ் வருவது தெரிகிறது.

அவைக்குள்ள என்ன பிரச்சனையாம் :lol::D ?? ஒரு ஆரம்பகால எழுத்தாளர்போல் எனக்குத் தெரியவில்லை . எழுத்தின் செப்படிவித்தைகள் எல்லாம் உங்களுக்கு அத்துபடியாக இருக்கின்றது . எல்லோரும் எழுதலாம் ஆனால் வாசகனை தன்னுடன் கட்டிப்போட்டு இது வராதா என்று பித்து பிடிக்க வைக்கும் வித்தை தெரிந்தவனே வாசகர் மனங்கவர் எழுத்தாளனாகின்றான் . அந்தவகையில் நீங்கள் இருப்பது கண்டு மிகவும் மிகிழ்சியடைகின்றேன் . அதேவேளையில் இணைப்பு முறைகளில் கவனம் எடுத்தால் நல்லது . உங்கள் நேரத்துக்கு தலை வணங்குகின்றேன் :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்குப் பாராட்டு எல்லாவற்றிலும் மேலான பரிசு. நன்றி கோமகன். நான் வானொலிக்குப் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன். இதுதான் என் இரண்டாவது கதை அல்ல அனுபவப் பகிர்வு. கணினியே என் முதல் எதிரி. நானென்ன செய்ய.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கிற எங்களுக்கே, நெஞ்சு பக்.... பக்...என்றால், அனுபவித்த உங்களுக்கு, எப்படி இருந்திருக்கும்?

தொடர்ந்து எழுதுங்கள்!

ஒருவருக்குப் பாராட்டு எல்லாவற்றிலும் மேலான பரிசு. நன்றி கோமகன். நான் வானொலிக்குப் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன். இதுதான் என் இரண்டாவது கதை அல்ல அனுபவப் பகிர்வு. கணினியே என் முதல் எதிரி. நானென்ன செய்ய.

ம்.............. ம் ..........கிட்டவந்திட்டியள் :lol: . பழுத்து வரட்டும் :D:icon_idea: . பழைய கணணி அல்லது பழைய சிஸ்ரம் என்றால் கணணியை கட்டிப்பிடிப்பது முறையல்ல . இப்பொழுது நவீன வசதிகளுடன் சிஸ்ரங்கள் குறைந்த விலையில் e bay யில் வாங்கலாம் :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணினி புதுசுதான். நாந்தான்பழசு. இருபது வருடமாகக் கணினி வீட்டில் இருக்கு. கணவரும் பிள்ளைகளும் நானாகப் பழகட்டும் என்று உதவ வருவதில்லை. முதல் இண்டிக் றான்சிலேசனே தடக்கும். யாழுக்கு வந்த பிறகுதான் அதுவே பழகியது. சரி பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ அக்கா. ஆவலைத் தூண்டுகிறது. நான் உங்களிண்ட மச்சான் மாதிரி இருந்தா பரமுவை வெட்டி கிவித் தோட்டத்தில தாட்டுப் போட்டுத்தான் மிச்ச வேலை. இன்னொரு விடயம், ஹொலிடே போகும் போது சொந்தக்காரரோட நண்பர்களோட தங்குவது நல்ல விடயம் அல்ல. சொந்தக்காரர் இருந்தாலும் நான் விடுதிகளில் தங்குவதுண்டு. காசு செலவழித்து போகும் போது மூடை நாசமாக்கி விடுவார்கள் அதோட பிரைவேசி மருந்துக்கும் இருக்காது. இலங்கை போகும் போது மட்டும் எமது வீடுகளில் நிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.