Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் அப்பாவாகிறேன்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அப்பாவாகிறேன்....

appaagain.jpg

[size=5]தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும்.

ஒரு நாள் வேலையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என்னுடைய பொறுப்பதிகாரி வந்து உடனே வா உன்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னை கூட்டிக் கொண்டு தனது அலுவலகத்துக்குள் போனாள். இப்ப உனக்காக புதிய வேலை ஒன்று காத்திருக்கு என்றும் எங்கள் மேலிடத்துக்கும் அதற்கு மேலான சமூக சென்ரருக்கும் தகவல் அனுப்பி விட்டேன். நீ தான் அதற்குச் சரியான ஆள் என்றும் நான் தான் சிபார்சு செய்தேன் என்றும் சொல்லிக் கொண்டு போனாரே தவிர என்ன விடையம் என்பது பற்றி ஒன்றும் விளக்கமாகச் சொல்லவில்லை.

இந்த மனுசியைக் கோவிக்கவும் முடியாது. செய்தா ஏதோ அது நல்லாத் தான் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. கிட்டத்தட்ட இந்தத் தொழிலிலேயே பலவருடங்களுக்கு மேல் வேலை செய்த அனுபவமுள்ள மனுசி. என்ன விசயம் என்று சொல் நான் அதற்கு ஓமோ இல்லையோ என்று பதிலளிக்கிறேன் என்றேன்.

உனக்கு ஒரு நல்ல சந்தோசமான செய்தியாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் மிகுந்த சந்தேசத்துடன் சொன்னாள். அடுத்த கிழமை அகதி முகாமிலிருந்து அகதி அந்தஸ்த்துக் கிடைத்து இரண்டு தமிழ்க் சகோதரக் குழந்தைகள் எமது இடத்துக்கு வருகின்றார்கள். அவர்கள் ஏன் அனுப்பப்படுகின்றார்கள் என்ற சட்டரீதியான காரணங்களையும் இங்கே இருக்க வேண்டிய தேவைகள் பற்றியும் எனக்கு தெளிவாக விளங்கப்படுத்தினார்.

நான் கண்ணை வெட்டி முழிக்க, என்ன யோசிக்கிறாய். அவர்கள் இருவரும் போரிலே தாய் தந்தையைப் பறிகொடுத்த அனாதைக் குழந்தைகள், யாரோ உறவினர்களின் உதவியினால் இங்கு வந்தவர்கள் என்ற போது என் மனம் ஒரு கணம் பாஸ்போட் விஸா இல்லாமல் என் நாடு போய் திரும்பி வந்தது.

அனாதைக் குழந்தைகள் என்ற அந்தந் சொல்லை மறந்து அதற்கு இன்னொரு சொல் வைக்க வெண்டும் என்று என்மனம் அங்கலாய்த்துக் கொண்டது. போர் பற்றியும் அதன் கொடுமைகள் பற்றியும் இவர்களுக்கு நன்கு தெரிவது போல் இப்ப எங்களுக்கும் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இந்தக் கொடுமைகள் பற்றி நன்கு தெரியும்.

ஏற்கனவே இங்கே மூன்று தமிழ் குழந்தைகள் இருப்பதால் உனக்குப் பொறுப்புக்கள் கூட வரும் என எதிர்பார்க்கிறேன். உனக்கு என்ன தேவையோ அதைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் உனக்குண்டு என்றபடியே மிச்சக் கோப்பியை எடுத்து ஊத்தினாள். குடித்து விட்டு வேறு கதைகளும் கதைத்து விட்டு வெளியே வந்து விட்டேன்.

அன்று வேலையில் பொறுப்புக்கள் நிறைய இருந்தாலும் எதையுமே மனம் நிறைவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றியும் தாய் தந்தையை எப்படி பறிகொடுத்தார்கள் என்பது பற்றியும் அல்லது அசேலம் கேட்பதற்காக சும்மா தான் சொல்லியிருப்பார்களா? என்றும் அல்லது தனது கண்ணுக்கு முன்னே பறிகொடுத்திருப்பார்களா என்றும் அந்தக் கடும் போரை எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் எனது மனம் அங்கலாய்த்து அங்கலாய்த்து தவித்துக் கொண்டது. அவர்கள் வந்தால் எந்த அறையில் அண்ணன் தங்க வேண்டும் எந்த அறையில் தங்கை தங்க வேண்டும் என்ற ஒழுங்குகளோடு மற்றும் அவர்களுக்குத் தேவையான மற்றைய விடையங்களும் விரைவாக நடைபெற்றுக் கொண்டன.

அந்த நாளும் வந்தது. அவர்களும் வந்தார்கள். பார்ப்பதற்கு அழகாய் முழிப்பாய் இருந்தார்கள். பொடியன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன் போலவும் கொஞ்சம் கூனிக்குறுகி பயந்து பயந்து முழித்துக்கொண்டான். ஆனால் பெட்டையோ மிகவும் துடிப்பானவளாகவும் மிகுந்த சுட்டித்தனமாகவும் காணப்பட்டாள். ஏற்கனவே எனக்குக் கிடைத்த தகவல்களுக்குரிய கற்பனைத் தோற்றத்தில் அவர்கள் இருவரும் இருக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த இடத்தில் இந்த இடம் பற்றியும் என்னைப் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம் என்றும் நான் தானாம் தங்களுக்கு சகல பொறுப்புக்கள் என்றும் சிரித்துக்கொண்டே தங்கை சொன்னாள்.

இப்படியே எனது வேலையும் எங்களது உறவும் வளர்ந்து கொண்டு போனது. நாட்கள் கிழமைகளாகி, கிழமைகள் மாதங்களாகி காலம் தன்னையறியாமல் கரைந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகவிடாமல் தங்களுடன் இருக்கும் படி அவள் பல முறை வேண்டிக் கொண்டாள். அல்லது எங்களையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போங்கள் என்றும் வேண்டினாள்.

என்னுடைய மனதிலும் பல மயக்கங்களும் குழப்பங்களும் வந்து போயின ஆனாலும் தவிர்த்துக் கொண்டேன். வேலையின் சட்டதிட்டங்களுக்கமைய என்னைக் கட்டுப்படுத்தியும் என்னை நானே வருத்தியும் சிலவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஒரு நாள் இரவு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஏதோ நினைத்தவளாய் நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். இங்கே ஒருத்தருக்கும் தெரியாத பெரிய உண்மையென்றும் இதுபற்றி ஒருத்தருக்கும் சொல்லக் கூடாது என்று என் கைகளைப்பற்றிக் கொண்டாள். நானும் வியப்போடும் ஆவலோடும் பார்த்துக் கொண்டு நிண்டேன். உண்மையிலே எனக்கு அம்மா இருக்கிறா, அப்பா தான் இல்லையென்றும் நான் மூன்று மாதக்குழந்தையாய் இருக்கும் போதே ஆமிக்கக்காரர் அப்பாவைச் சுட்டுப் போட்டினமாம்.நான் இங்கே வரும் வேளையில் தான் அம்மா எல்லாம் விபரமாகச் சொன்னவ, என்றும் இது பற்றி யாரிடமும் கதைக்கக் கூடாது என்றும் சொன்னவ. ஆனா, உங்களுக்கு இதை மறைக்க விரும்பவில்லை தெரியப்படுத்த வேண்டும் போலிருந்தது என அந்தப் பெரிய உண்மையையும் அந்த இருண்ட சோகத்தையும் என்மேல் இறக்கிவிட்டு அந்தக்குழந்தை மீண்டும் படத்தைப் பார்க்கத் தொடங்கியது.

என்னை அறியாமல் என் கைகள் அவளை அணைத்துப் பற்றிக் கொண்டது. ஏதோ நினைத்தவளாய் நான் அப்பாவின் போட்டோவைக் கூட பார்க்கவில்லை என்றும் ஒண்டோ இரண்டோ படம் இருந்ததாம் அதுவும் சண்டை நேரங்களில் துலைந்து விட்டதாம் அவர் எப்படியிருப்பார் என்று கூடத் தெரியாது என்றாள்.

நான் ஓன்றுமே பேசாது மௌனமாய் இருந்தேன். ரீவியில் ஓடிக்கொண்டிருந்த படம் பலத்த சத்தமாய் கேட்டது. என்னுடைய இந்தப்பாத்திரமானது மிகவும் கஸ்ரமாயே இருந்தது. நண்பனாய் தோழனாய் தாயாய் தந்தையாய்.. பல வேடங்களிலேற்று நடிக்கவேண்டியதாயிற்று. உலகம் தெரியாத அந்தக் குழந்தைகள் இரண்டும் என் அன்பை மட்டுமே வேண்டி நின்றார்கள்.

இப்படியே எங்கள் மூவரது நெருக்கமும் அன்பும் வளர்ந்து கொண்டு போக காலங்களும் நகர்ந்து கொண்டு போனது. இப்படியே ஒரு நாள் வேலைக்கு வந்த போது திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்துக்காக உடனே அழைக்கப்பட்டேன். எமது இல்லப்பொறுப்பாளர், உளவியலாளர், சமூகசேவையாளர், பாடசாலைப் பொறுப்பாளர்கள் என பலபேர் கூடியிருந்தார்கள். எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என்ன அப்படி என்ன அவசரக்கூட்டம் என நான் விழித்த போது எல்லாம் தாரணி பற்றிய விடையங்கள் தான் என்றும் பொறுப்பாளர் கதைக்கத் தொடங்கினார்.

இண்டைக்கு தாரணி எல்லாரையும் பயப்படுத்திப் போட்டாள். ஒருமாதிரி பிடித்து சமாளிச்சு வைச்சிக்கிறோம். இண்டைக்கு இரண்டு முறை தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டாள். என்ற போது என்னையறியாமல் உடம்பெல்லாம் படபடத்து வியர்த்தது.

தற்கொலையா..? வியப்போடு கேட்டேன். இவளின் பள்ளிக்கூடத்திலே ஏதோ விண்ணப்படிவம் நிரப்பும் படி கொடுத்த போது அப்பாவின் பெயர் வரவேண்டிய இடத்தில் உன்ரை பெயரைப் பதிந்திருக்கின்றாளாம். அதுமட்டுமல்ல பள்ளிக்கூடத்திலே பாவிக்கும் கொம்பியூட்டரின் இரகசிய பெயர்களுக்கும் உன்னுடைய பெயர் தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதாம். இது சம்பந்தமாக அவளுடன் கதைத்த போது, உன்னைத் தான் தனக்குத் தெரியும் என்றும் இவர் தான் எனக்கு அப்பா என்றும் அடம்பிடிக்கின்றாள். நான் இப்போது நல்ல சந்தோசமாய் இருக்கிறேன் என்றும் தயவுசெய்து என்னுடைய சந்தோசத்தைப் பறித்து என்னை அனாதையாக்கி விட வேண்டாம் என்றும் மேல் மாடியில் ஏறி நின்று கீழே குதித்து சாவேன் என்று அந்தக் குழந்தை அழுததை என்னால் தாங்க முடியவில்லை ஒரு பெண்ணாய் இருந்து ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது என்ற போதே அவளது வார்த்தைகள் வெளிவரத் குரல் தளதளத்தது.

எல்லோரும் மிகுந்த அமைதியாக இருந்தோம்.

பின்னர் அந்தக்குழந்தையுடன் கதைத்தவைகளும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகவைகளும் எனக்கு நடந்த உளவியல் செயற்பாடுகளும் இதிலே எழுதமுடியாதவை. தாரணியைப் போல் இன்று எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகளா. ஆதரவற்றவர்களாக....

பின்னர் அந்தக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் சட்டரீதியாக செய்யப்பட்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பது என் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள்.

பிறகு கொஞ்சக்காலத்தின் பின்னர் அந்த வேலையை விட்டிட்டு வேறு வேலை செய்யத்தொடங்கி அந்த வேலை இந்த வேலை என்று பலது மாறி இப்ப கொஞ்சக்காலம் புதிய ஒரு வேலையில் இணைந்து கொண்டேன். முன்பு போல் பெரிய பிள்ளைகள் அல்ல. மிகவும் சின்னக்குழந்தைகளை பராமரிக்கும் இடம் அழகான குழந்தைகள் போல் அழகான வேலையும். மனதுக்குப்பிடித்தமான சந்தோசமான தொழில்.

இதில் ஒரு விசேடம் என்னவென்றால் அந்த இடத்திலே நான் ஒருவன் தான் கறுப்பு நிறமுடையவன். எல்லாக்குழந்தைகளும் வந்து என் கையைத் தொட்டுப் பார்ப்பதும் தடவிப்பார்ப்பதிலும் மிகுந்த சந்தோசம் அடைவார்கள். இந்தப் பழக்கம் கூடக்கூட பல பேர் மிகுந்த நெருக்கமானார்கள். அமேல்லியா என்ற மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்று என்னுடன் மிகவும் நெருக்கமாய் பழகினாள்.

பராமரிப்பு நிலையத்தில் காலையில் தாய் வந்து அவளை விடும் போது ஓடி வந்து என்னையே முதலில் கட்டிக் கொள்வாள். பின்னர் தாய்வந்து கூட்டவரும் போது நான் போகமாட்டேன் என்றும் அடம்பிடித்து என்னிடம் ஒட்டிக்கொள்வாள். தன்னைத் தோளில் தூக்கி வை என்பதும் இருக்கும் போது காலில் வைத்து ஆட்டு என்பதும் அவள் விரும்பும் விளையாட்டுக்களில் முக்கியமானவை.

இந்த உறவு பற்றி அங்கு எல்லோரும் பேசிக்கொண்டார்கள். இவள் இப்படியாக இருப்பதும் நடந்த கொள்வதிலும் உனக்கேதும் பிரச்சினையில்லையோ என்று எனது இல்லப் பொறுப்பாளர் ஒரு நாள் கேட்டார். குழந்தைகள் என்றால் இப்படித்தானே.... எனக்கு இது விருப்பம் அதுவும் அமேலியாவைப் போல் துடிப்பான குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்றேன் சிரித்தபடி. உனக்குத் தெரியுமா வழமையை விட அமேல்லியா மிகுந்த சந்தோசமாய் இருக்கிறாள் என்று அவளின் தாய் இப்போது சொல்லுகிறாள்.

எங்களாலும் அதைக் கண்டுகொள்ளக் கூடியதாயுள்ளது என்றும்.. உன்னுடைய இந்த அன்பும் அரவணைப்பும் கட்டாயமாக அவளுக்குத் தேவையென்றும் ஏன் தெரியுமோ என்றும் கேட்டாள். நான் மௌனமாக தலையை ஆட்டியபடி அவளது விடைக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

அமேலியாவின் தகப்பன் எங்கடை நாட்டின் சார்பாக ஆப்கானிஸ்த்தானுக்குப் போருக்கப் போன இராணுவ வீரன். தகப்பனின் அன்பும் அரவணைப்பும் தெரியாதவளாய் தான் இவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வாரு நாளும் இரவு அவனுடன் ரெலிபோனில் கதைப்பது மட்டும் தான். இம்முறை வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு இங்கே வருவான் என்று அவளது தாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். எமது நாட்டு இராணுவ வீரர்களும் மிக விரை வில் நிரந்தரமாய் திரும்பிவர வேண்டும். ஏன் தான் அமெரிக்காவுக்கு எங்கடை நாடு வால் பிடிச்சுக்கொண்டு நிக்குதோ தெரியவில்லை என்றும் சொல்லிப் போட்டுச் சென்றுவிட்டாள்.

பிள்ளைகள் அங்கும் இங்குமாக ஒடிப்பிடிச்சு விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டு போய் மாதங்கள் பல கடந்தன. வழமை போல் ஒரு நாள் வேலைக்குப் போய் இறங்கிய போது எமது நிலையப் பொறுப்பாளர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து ஓவென்று கத்தியழுதினாள். எனக்கு ஒன்றும் விளங்கவும் இல்லை. புரியவும் இல்லை. பக்கத்தில் நின்ற மற்ற வேலையாட்களும் என் தோழிலே தட்டியபடி என்னை நெருங்கிக் கொண்டார்கள். ஒன்றுமே புரியாமல் முழித்துக் கொண்டேன்.

தலையை நிமிர்த்தியவளாய் அமேலியாவின் தந்தையும் அவனுடனும் சென்ற இருவரும் அங்கே போரிலே இறந்து போனார்களாம் என்ற செய்தி இப்பொழுது காலையில் தான் எமக்குக் கிடைத்தது என்றும் சொல்லிச் சொல்லி விக்கி விக்கி அழுதாள்.

உண்மையிலே என் மூச்சு ஒரு கணம் நின்று போனது போல் உணர்ந்து கொண்டேன். என் தொண்டையினுள் பாறாங்கல் ஒன்று இறங்கியது போன்ற பிரமை. ஓவென்று கத்திக்குறளியள வேண்டும் போல் இருந்தது. என் கண்முன்னே அமேலியா ஒரு கணம் வந்து போனாள். அவளைத் தூக்கிவிளையாடும் போது அவளில் இருந்து வரும் அந்த நறுமணம் கமழ்ந்து வந்தது. அது உண்மையோ பிரமையோ தெரியவில்லை. என் கண்கள் அமேல்லியா எங்கேயாவது நிக்கிறாளா என்று தேடியது. எங்கும் வெறுமையாகவே தென்பட்டது. என்னால் நிதானமாய் நிக்கமுடியாமல் இருந்தது.

ஊரிலே என்ரை நண்பன் ஒருவன் ஆமியால் சுடப்பட்டபோதும், இன்னொரு நண்பன் தன்ரை இயக்கத்தாலேயே சுடப்பட்ட போதும், மற்ற இன்னுமொரு தோழன் மாற்று இயக்கத்தாலே சுடப்பட்ட போதும் ஒரு இயக்கமும் வேண்டாம் ஒரு சண்டையும் வேண்டாம். இந்தப் பொல்லாப் போன போரும் வேண்டாம் விடுதலையும் வேண்டாம் என்று தானே இங்கே வந்து என் வாழ்வைத் தொடங்கினேன். ஆனால் நான் எங்கு போனாலும் இந்தப் போரின் கொடுமைகளும் அனர்த்தங்களும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.

தாரணியைப் போல் அமேலியாவைப் போல் இன்று உலகம் முழுதும் எத்தனையோ ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பச்சைப் பாலகர்கள். பெற்றோரை இழந்து பாழாப் போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் மட்டுமல்ல நானும் தான்.[/size]

- நிலாதரன்.

http://ndpfront.com/...-10-06-10-30-12

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனத்த பகிர்வுக்கு நன்றி சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பயந்துபோனன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ன்றி சுபேஸ். நிலாதரனைப் போல் பலர் மனிதநேயத்துடன் இருக்கிறார்கள். எனக்குக் கூட இதுபோன்ற அனுபவம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு மனதை கணக்க வைத்த கதை இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

நான் பயந்துபோனன்.. :D

ஏன் பயந்தனீங்கள் சுபேசுக்கு பிள்ளை இருக்குது என்டோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]. நிலா தரனுக்கு என் பாராட்டுக்கள். சுபேசின் பகிர்வுக்கு நன்றி .[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்......

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, சுபேஸ்! மிகவும் யதார்த்தமானது.

இதன் மற்றப் பக்கத்தில், ஒரு வித்தியாசமான அனுபவம் உண்டு! அதை, இங்கு பகிர்வது பொருத்தமென நினைக்கிறேன்.

விடுமுறை கால்னகளில், அவுஸின் தூரவுள்ள கிராமங்களுக்குக் 'காம்பிங்' போவது எனது, நீண்ட கால வழக்கம்.

ஒரு முறை, இவ்வாறு போனபோது, ஒரு வயதான, இரண்டு அவுஸ்திரேலியர்களைச் சந்தித்தேன். அவர்களது, இரண்டு குழந்தைகளும், கடற்கரையொன்றில், விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தூண்டிலில் வெறும் 'எறியால்' மீன்கள் மட்டும் மாட்டிக்கொண்டிருந்தன! அதுவும், இருபது சென்டி மீட்டருக்குக் கீழான அளவு.. அதில் ஆர்வமில்லாமல், பக்கத்தில் இருந்த அந்தப் பெரியவரிடம் கதை கொடுத்தேன். அவர் சொன்ன விபரங்களின் படி, அந்தக் குழந்தைகள் இருவரும், இலங்கையில், கடுமையான யுத்தத்தால், பாதிக்கப் பட்டவர்கள், என்றும், தாங்கள் அவர்களை, ஒரு சர்வதேச அமைப்பின் மூலம், தத்தெடுத்து, வளர்த்து வருவதாகவும் கூறினார்கள்.

அவர்களது, தகப்பன் போரில், கொல்லப் பட்டு விட்டதால், தான் அந்த இரண்டு சகோதரிகளையும், எடுத்து வளர்த்து வருகின்றேன் என்றும் கூறினார்.

இதில், எனது மனதை, அரித்த விசயம் என்னவென்றால்,

அவர்கள் இருவரும் சிங்களக் குழந்தைகள்! :wub:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இணைப்பிற்கு நன்றி சுபேஸ்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நிலாதரனின் ஆக்கத்தை எம்முடன் பகிர்ந்த சுபேசுக்கு நன்றிகள்.

பூப்பூவாய் பூத்திருக்கும் சின்னஞ்சிறு இதயங்கள்; பிரிவு தனிமை ஏக்கம் பயம் முதலிய உணர்வுகளால் தாக்கப்படும்போது பாவம் அச் சிறு மலர்கள்வாடி வதங்கி மனம் ஊனமுற்றுப் போய்விடுகின்றன. இப்படியான குழந்தைகளுக்கு தேவையான அன்பையும் பராமரிப்பையும் கொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.

இதுபோலவே முதியவர்களும். நான் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்வதால் தினமும் தனிமையில் ஏங்கித் தவிக்கும் எத்தனையோ முதியவர்களை சந்திக்கிறேன். எமது அன்பும் ஆதரவும் பராமரிப்பும் அவர்களுக்கு எவ்வளவு மனஆறுதலை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் நன்றி சொல்லும்போது அவர்கள் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்த்துளிகள் சாட்சி சொல்கின்றன. முதியவர்களும் ஒருவிதத்தில் குழந்தைகள்தான் என்று தினமும் நினைப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பதிவு, சுபேஸ்[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனத்த பகிர்வுக்கு நன்றி சுபேஸ்

நன்றி நந்தன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்...

நான் பயந்துபோனன்.. :D

ஏன் பயந்தனீங்கள் சுபேசுக்கு பிள்ளை இருக்குது என்டோ :lol:

துலைவார்... :lol::D

ன்றி சுபேஸ். நிலாதரனைப் போல் பலர் மனிதநேயத்துடன் இருக்கிறார்கள். எனக்குக் கூட இதுபோன்ற அனுபவம் உண்டு.

உண்மை அக்கா..நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துப் பகிர்விர்கும்...முடிந்தால் அடுத்தடுத்த கதைகளில் ஒன்றாக உங்கள் அநுபவத்தை எழுதுங்கள் அக்கா...

நல்லதொரு மனதை கணக்க வைத்த கதை இணைப்பிற்கு நன்றி சுபேஸ்

நன்றி ரதி அக்கா வாசிப்பிற்கும் கருத்துப் பகிர்விற்கும்...

[size=4]. நிலா தரனுக்கு என் பாராட்டுக்கள். சுபேசின் பகிர்வுக்கு நன்றி .[/size]

நன்றி நிலா அக்கா வாசிப்பிற்கும் கருத்துப் பகிர்விர்கும்...எங்கை அக்கா உங்கட கதை ஒன்றையும் காணல..? விரைவில் ஒரு ஆக்கம் தாங்க யாழுக்கு...

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்......

நன்றி குமாரசாமி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்...அண்ணா இப்பிடியான மனம் கனக்கும் பதிவுகளை வாசித்து டென்சனை கூட்டி ஏன் உங்கள் உடம்பை கெடுத்துக்கிறீங்க...? :(

Edited by சுபேஸ்

நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றிகள் சுபேஸ். இப்படி எத்தனையோ சிறுவர்கள் அன்பிற்காக ஏங்கி வாழ்வது உண்மையிலேயே மனதை கனக்க வைப்பதோடு எம்மால் இப்படி அன்பிற்காக ஏங்கும் சிறுவர்களுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் வைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, சுபேஸ்! மிகவும் யதார்த்தமானது.

இதன் மற்றப் பக்கத்தில், ஒரு வித்தியாசமான அனுபவம் உண்டு! அதை, இங்கு பகிர்வது பொருத்தமென நினைக்கிறேன்.

விடுமுறை கால்னகளில், அவுஸின் தூரவுள்ள கிராமங்களுக்குக் 'காம்பிங்' போவது எனது, நீண்ட கால வழக்கம்.

ஒரு முறை, இவ்வாறு போனபோது, ஒரு வயதான, இரண்டு அவுஸ்திரேலியர்களைச் சந்தித்தேன். அவர்களது, இரண்டு குழந்தைகளும், கடற்கரையொன்றில், விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தூண்டிலில் வெறும் 'எறியால்' மீன்கள் மட்டும் மாட்டிக்கொண்டிருந்தன! அதுவும், இருபது சென்டி மீட்டருக்குக் கீழான அளவு.. அதில் ஆர்வமில்லாமல், பக்கத்தில் இருந்த அந்தப் பெரியவரிடம் கதை கொடுத்தேன். அவர் சொன்ன விபரங்களின் படி, அந்தக் குழந்தைகள் இருவரும், இலங்கையில், கடுமையான யுத்தத்தால், பாதிக்கப் பட்டவர்கள், என்றும், தாங்கள் அவர்களை, ஒரு சர்வதேச அமைப்பின் மூலம், தத்தெடுத்து, வளர்த்து வருவதாகவும் கூறினார்கள்.

அவர்களது, தகப்பன் போரில், கொல்லப் பட்டு விட்டதால், தான் அந்த இரண்டு சகோதரிகளையும், எடுத்து வளர்த்து வருகின்றேன் என்றும் கூறினார்.

இதில், எனது மனதை, அரித்த விசயம் என்னவென்றால்,

அவர்கள் இருவரும் சிங்களக் குழந்தைகள்! :wub:

நல்ல மனிதாபிமானமுள்ள அவுஸ்திரேலியர்கள்...யுத்தம் தமிழரையும் சிங்களவரையும் பாத்தித்தது..ஆனால் தமிழர்களை மிகக்கொடுமையாகப் பாத்தித்தது..சிங்களவர்களை அவ்வளவுதூரம் பாதிக்கவில்லை என்பது உண்மைதான்..நன்றி உங்கள் அனுபவத்தையும் அழகாகப் பகிர்துகொண்டதிற்கும் வாசிப்பிற்கும் அண்ணா...

[size=4]இணைப்பிற்கு நன்றி சுபேஸ்.[/size]

நன்றி தமிழரசு அண்ணா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..அப்பிடியே லண்டன் வந்தால் ஒரு நாள் சாப்பாடு கண்டிப்பாய் உங்கள் வீட்டில்தான் அண்ணா. :(

பகிர்வுக்கு மிக்க நன்றி சுபேஸ்.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..நலமாய் இருக்கீங்களா அக்கா..? யாழுக்குள் மெளனமாக நிற்பதைவிட்டுவிட்டு அடிக்கடி இப்படி வெளிய வாங்க அக்கா...எழுதுங்க அக்கா... :)

நல்ல கதையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்..!

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..அட இப்பவாவது சீரியசாய் கதைத்தீர்களே...எந்த நேரமும் பகிடிதான் உங்களுக்கு போங்க..எப்பிடித்தான் வேலையிலை சீரியஸான பொஸ்சாய் இருக்கிறியளோ தெரியலை...அங்கையும் fun தானோ..? :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாதரனின் ஆக்கத்தை எம்முடன் பகிர்ந்த சுபேசுக்கு நன்றிகள்.

பூப்பூவாய் பூத்திருக்கும் சின்னஞ்சிறு இதயங்கள்; பிரிவு தனிமை ஏக்கம் பயம் முதலிய உணர்வுகளால் தாக்கப்படும்போது பாவம் அச் சிறு மலர்கள்வாடி வதங்கி மனம் ஊனமுற்றுப் போய்விடுகின்றன. இப்படியான குழந்தைகளுக்கு தேவையான அன்பையும் பராமரிப்பையும் கொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.

இதுபோலவே முதியவர்களும். நான் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்வதால் தினமும் தனிமையில் ஏங்கித் தவிக்கும் எத்தனையோ முதியவர்களை சந்திக்கிறேன். எமது அன்பும் ஆதரவும் பராமரிப்பும் அவர்களுக்கு எவ்வளவு மனஆறுதலை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் நன்றி சொல்லும்போது அவர்கள் கண்களில் துளிர்க்கும் கண்ணீர்த்துளிகள் சாட்சி சொல்கின்றன. முதியவர்களும் ஒருவிதத்தில் குழந்தைகள்தான் என்று தினமும் நினைப்பேன்.

நிறைய நெஞ்சைத்தொடும் கதைகள் உங்களிடமும் இருக்கும் அக்கா...நீங்கள் ஒரு இரும்புப் பெண்மணி...இழப்புகளில் இருந்து துவண்டுவிடவில்லை...நெஞ்சுறுதியோடு மீண்டெழுந்த உங்கள் துணிவை பாத்து வியந்திருக்கன்..நன்றி அக்கா உங்கள் வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..உங்கள் அநுபவங்களையும் எழுதுங்க அக்கா..

[size=5]நல்ல பதிவு, சுபேஸ்[/size]

நன்றி லியோ வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றிகள் சுபேஸ். இப்படி எத்தனையோ சிறுவர்கள் அன்பிற்காக ஏங்கி வாழ்வது உண்மையிலேயே மனதை கனக்க வைப்பதோடு எம்மால் இப்படி அன்பிற்காக ஏங்கும் சிறுவர்களுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் வைக்கிறது.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும்..உண்மைதான் அக்கா..ஒன்றா இரண்டா எம்மினத்தில் இப்படிக்குழந்தைகள்..?எத்தனை எத்தனை ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதர்வாக ஈழத்தில் இருக்கிறார்கள்..இவர்களுக்காக எங்கள் தலைவன் கட்டிய செஞ்சோலைகூட இன்று சிதறிக்கப்பட்டுவிட்டது..இப்படிப் பட்ட குழந்தைகளை அரவணைக்க வேண்டியது புலம்பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் எம்மவர்களின் கடமை..எல்லோரும் முடிந்தளவுக்கு அப்படிப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம்...அவர்கள் வளர்ந்து படித்து ஆளாகும் வரை ஒவ்வொரு குடும்பமும் ஆக்ககுறைந்தது ஒரு குழந்தையின் செலவையாவது பொறுப்பெடுக்கலாம்..அவர்களுடன் கடிதம் மூலமும்,தொலைபேசி மூலமும் தொடர்பில் இருந்து தங்கள் அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையா? உண்மைச் சம்பவமா?

கதையென்று நினைத்துக்கொண்டு போகமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையா? உண்மைச் சம்பவமா?

கதையென்று நினைத்துக்கொண்டு போகமுடியவில்லை.

இது கதையில்லை கிருபன் அவர் உண்மையாகவே தன்ட அனுபவத்தை எழுதியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

நிலாதரன் எழுத்துக்களில் எல்லையற்ற மானுட நேசிபபும் அதன் ஏக்கங்களும் பளிச்சிடுகின்றன. வாசித்து முடிக்க முடியாமல் போர் அதன் வாதைகள் அனாதைகள் ஆக்கப்பட்ட சிறார்கள் பெற்ற பிள்ளைகளைக்கூட தன்னுடனே வைத்திருக் முடியாமல் எங்கோ தூரதேசம் அனுப்பி வைத்த உறவுகள் அற்ற தாய் . நெஞ'சு கனத்துப் போவது அப்பாவாகும் உறவுக்கு மட்டுமல்ல எமக்குந்தான். வார்த்தை ஒத்தடங்களால் ஆற்ற முடியாத வலிகள் இவை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை.

சுபேசின் பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தலைப்பை பார்த்துவிட்டு......[/size]

[size=4]இந்தாளுக்கு இதே வேலையா போச்சு என்று நினைத்தேன்.[/size]

[size=4]அவர் அதை வேலையாக செய்கிறார்![/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கதையா? உண்மைச் சம்பவமா?

கதையென்று நினைத்துக்கொண்டு போகமுடியவில்லை.

நன்றி கிருபன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..இது உண்மைக்கதைதான்..என்னாலும் கடந்துபோக முடியலை..அதுதான் இங்கு பகிர்ந்தேன்..

நிலாதரன் எழுத்துக்களில் எல்லையற்ற மானுட நேசிபபும் அதன் ஏக்கங்களும் பளிச்சிடுகின்றன. வாசித்து முடிக்க முடியாமல் போர் அதன் வாதைகள் அனாதைகள் ஆக்கப்பட்ட சிறார்கள் பெற்ற பிள்ளைகளைக்கூட தன்னுடனே வைத்திருக் முடியாமல் எங்கோ தூரதேசம் அனுப்பி வைத்த உறவுகள் அற்ற தாய் . நெஞ'சு கனத்துப் போவது அப்பாவாகும் உறவுக்கு மட்டுமல்ல எமக்குந்தான். வார்த்தை ஒத்தடங்களால் ஆற்ற முடியாத வலிகள் இவை.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..நெஞ்சில் பலநாட்களுக்கு தங்கிவிடும் இப்படியான கதைகளின் அதிர்வுகள்..

நல்லதொரு கதை.

சுபேசின் பகிர்வுக்கு நன்றி

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..ஏன் இப்பொழுது அடிக்கடி காணமுடியலை யாழில்..,?

[size=4]தலைப்பை பார்த்துவிட்டு......[/size]

[size=4]இந்தாளுக்கு இதே வேலையா போச்சு என்று நினைத்தேன்.[/size]

[size=4]அவர் அதை வேலையாக செய்கிறார்![/size]

:lol:

நன்றி மருதங்கேணி வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..மருதங்கேணி வெளிகளில் நீந்தியும் ,கிட்டிபுல்லு அடித்தும், விடிய விடிய கண்விழித்து கோஸ்டி பார்த்த நண்பர்களின் நினைவுகளையும் எழுதலாமே மருதங்கேணி..

Edited by சுபேஸ்

நல்லதொரு கதை .இப்படியான பல கதைகள் இன்றுமட்டும் இதைப்போல இடங்களில் வேலை செய்யும் பலரால் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.