Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே நெடுக்ஸ் அண்ணா நானும் சொல்கிறேன். இளையராஜா என்ற வியாபாரி தன் தொழிலை செய்கிறார் இதில் நமக்கு அவரை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கு?

இளையராஜா மட்டுமல்ல எந்த இந்திய,தமிழகத்தமிழனும் முதலில் தன்னை இந்தியனாகவே அடையாளப்படுத்துகிறான் அதன் பின்னர் தான் தமிழன் என்ற அடையாளம் நாம் தான் தொப்பிள்கொடி உறவு, இரத்த உறவு என்று வேஷம் போடுகிறோம்.

நாங்கள் தான் பொழுதுபோக்கைத்தேடி இளையராஜா பின்னால்,இந்தியச்சினிமா பின்னால் போகிறோமே தவிர நீங்கள் சொல்வது போல இளையராஜா இசைப்பிச்சை எடுக்கிறார் என்பது வடிகட்டின முட்டாள் தனம். ஈழத்தமிழரை நம்பியா இளையராஜா இல்லை,இந்திய,தமிழக சினிமா இருக்கிறது???? எவ்வளவு கீழ்த்தரமான கருத்து இது.!!!

இவ்வளவு பேசும் உங்களால் இல்லை ஈழத்தமிழனால் இளையராஜா இசையை அல்லது இந்திய சினிமாவை புறக்கணிக்க முடியுமா??????

ஒரு இசை போட்டியில் கலந்து கொள்வதுக்கு கூட இந்திய இசையை இசைக்க,போட்டிகளில் பங்குபற்ற இந்தியா தானே போகிறீர்கள்? அந்தளவுக்கு கூட சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

[size=5]இளையராஜா என்பவரை சினிமா இசை வியாபாரின்னு பார்த்து கருத்துச் சொன்னா.. அவர் கனடா தேசத்தவரை (வெள்ளைகளை) நம்பி வியாபாரத்தைக் கொண்டு வரல்ல. அவர் அங்குள்ள தமிழ் பேசுபவர்களை நோக்கியே அதைக் கொண்டு வாறார்.[/size]

அப்படி ஒரு வியாபாரம் வரும் போது அதன் நன்மை தீமைகளை ஆராய வேண்டிய பொறுப்பு ஒரு உலகில்.. விடுதலை வேண்டி நிற்கும் இனம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்டு.

எல்லா வியாபாரிகளும் வெறும் வியாபார நோக்கத்திற்காக வருவதில்லை. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பனிகள்.. வியாபார வடிவில் ஆக்கிரமிப்பை.. காலனித்துவத்தைக் கொண்டு வந்தன.

அதேபோல் சிங்களவர்கள் வியாபாரிகள் என்ற போர்வையில்.. சிங்கள மயமாக்கலைக் கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்க ஏகாதபத்தியம்.. மக்டொலாட்.. கே எவ் சி என்ற வடிவிலும் கொக்காகோலா.. அப்பிள்..இன்ரநெட் என்ற வடிவிலும் உலகை தானே ஆளும் தகுதியை இன்னும் இன்னும் உறுதியாக தக்க வைத்து வருகிறது. வெளிப்படைக்கு இவையும் வியாபாரம் தான்.

இளையராஜாவின் மேற்கு நாடுகள் நோக்கிய இந்த வியாபாரம் விரிவாக்கத்தின் நோக்கம்.. தேவை.. அது மக்கள் மத்தியில் செய்யவல்ல தாக்கம்.. அதனால் ஒரு விடுதலை உணர்வு பொருந்திய மக்கள் கூட்டத்தின் மத்தியில் நிகழக் கூடிய மாற்றங்கள்.. வியாபார விரிவாக்கத்தின் பின்னணி.. இவை ஆராயப்பட வேண்டும்.

அதை எல்லாம் கடந்து.. ஒரு பிரச்சனைக்குரிய நேரத்தில்.. அந்த வியாபாரம் திட்டமிட்டு புகுத்தப்படுவது குறித்தும் ஆராய வேண்டியது அவசியம்.

இது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள எல்லா மக்களிடமும் இருக்க வேண்டிய ஒரு அவதானமே.

இல்லை இளையராஜா.. தமிழினத்தின் அடையாளம் என்று வருகிறார் என்றால்.. தமிழினத்தின் உணர்வுகளை அவர் உணரவும் மதிக்கவும் அல்லது அந்த உணர்வுகளை அவர் தாங்கி நிற்பதும் அவசியம். அதைத் தூண்டவும் வேண்டும். இளையராஜாவை வியாபார நோக்கமாகவோ அல்லது தமிழின அடையாளமாகவோ எவ்வழியில் முன்னிறுத்தினும் தமிழர்கள் அவரை நிராகரிக்க யாரும் சொல்லேல்ல.

இன்றைய பொழுதுகளில் இந்த நிகழ்விற்கு இது சரியான வேளை அல்ல. சரியான வேளையில் அதனைச் செய்யுங்கள் என்று தான் வலியுறுத்துகின்றனர். ஆனால் அதற்கும் அப்பால் சென்று இனத்தின் தேவை கருதியும் சிலவற்றை ஆராய்வது அவசியமே.

மேலும்.. எமது ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முதல் இருந்து இந்தியாவும் தமிழகமும் எம் மீது செல்வாக்குச் செய்தே வருகின்றன. அந்த வகையில் நாம் அவர்களின் அரசியல்.. பொருண்மிய.. சமூக நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்கிறோமே தவிர அவர்கள் எம்மில் தங்கியில்லை. அந்த வகையில் எமக்கு அவர்கள் மீதான அக்கறை இயல்பில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எம்மீதான அக்கறை அதிகம்.. அதற்கு பூர்வீக உறவு... தொடர்புகளும்.. மொழியும்.. கலாசாரமும். பண்பாடும் ஒன்றிணைந்திருப்பதும் காரணம்.

அந்த வகையில் தான் வைகோ.. ஐயா நெடுமாறன்.. அண்ணன் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் தங்கள் சுய அரசியல் இலாபங்களுக்கு அப்பால் இனத்தை.. மொழியை.. முன்னிறுத்தி எமக்கு ஆதரவளிப்பதோடு எமக்காகவும் உழைக்கின்றனர். அந்தளவுக்கு நாம் அவர்களுக்காக உழைப்பதில்லை.

ஆனால் அவர்களையும் இளையராஜாவையும் ஒரே தராசில் வைத்து நோக்க முடியாது. இளையராஜா நாம் மொழி ரீதியில் அவரின் இசையை ரசிப்பவர்கள் என்ற வகையில் அவரின் வருமானத்தில் ஒரு பகுதிக்கு சொந்தக்காரர்கள் என்ற வகையில் எம்மை அணுகுகிறாரே தவிர.. இன உணர்வு மிகுதியில் இது நடக்குது என்பது ஏற்றுக் கொள்ளப்பட சரியான காரணங்களைக் காண முடியவில்லை. அதற்காக அவருக்குள் இன உணர்வு இல்லை என்பதல்ல அர்த்தம். அந்த இன உணர்வு சரியான வகைக்கு வெளிப்படவில்லை என்பதே உண்மை.

மேலும்.. தமிழினம்.. குறிப்பாக ஈழத்தமிழினம்.. அரசியல்.. உரிமை சார்ந்து நெருக்கடிகளை.. ஒரு போராட்ட வடிவ இழப்பில் துவண்டு நிற்கும் அதேவேளை எதிரிகளின் பல முறை அழுத்தங்களுக்கும் ஆளாகி உள்ள நிலையில்.. அந்த இனத்திடம் விடுதலை.. உணர்வை தக்க வைக்க பலமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கும் இக்கட்டான இந்த நேரத்தில்.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி என்பது ஒரு குழப்பமான சூழலுக்குள் நிகழ்த்தப்படுவதால்.. பல சந்தேகங்களை அது தோற்றுவிக்கக் காரணமாக அமைகிறது. அதில் இளையராஜா எதிர்ப்பு என்பதைக் காட்டிலும்... இனத்தின் தேவை தான் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் தான்.. சீமான் உள்ளிட்டவர்கள்.. இந்த நிகழ்ச்சியை மறு திகதியிட வலியுறுத்துகின்றனரே தவிர.. இதில் இளையராஜா எதிர்ப்பு என்பதோ..அல்லது அவரின் வியாபார விஸ்தரிப்பை தடுக்கும் நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் என்னைப் பொறுத்தவரை.. இதனையும் கடந்து எந்த வியாபாரமானாலும்.. ஆக்கள் ஆனாலும் எம்மீது திடீர் அக்கறை காட்டும் போது அதனை நாம் எச்சரிக்கையோடும் அவதானத்தோடுமே அணுக வேண்டும். குறிப்பாக எமக்கான விடுதலையை நாம் உறுதி செய்யும் வரை இது அவசியம்..! இதனை மக்கள் ஒவ்வொருவரும் விளங்கிக் கொண்டு நடந்து கொள்வதோடு.. விடுதலையை அடையும் வரை அந்த உணர்வை சந்ததிகள் எங்கனும் காவி நிற்பதோடு.. உலகிற்கும் உணர்த்தி நிற்பது அவசியம். அதற்கு சாத்தியமான அனைத்தையும் மக்கள் செய்ய தயங்கக்கூடாது.

அதற்காக எதிரிகளையோ... எதிர்ப்பாளர்களையோ அதிகரிக்க வேண்டும் என்றில்லை. சூழ்நிலைகளை விளக்கி.. தெளிய வைத்து.. அவர்களின் சம்மதத்தைப் பெற்று.. குழப்பங்கள்.. ஊடுருவல்கள் நிகழ்வதை அல்லது அதற்கு எழும் சந்தர்ப்பத்தை குறைக்க விழைவது அல்லது செய்வது அவசியமும் ஆகும்.

என்னுடைய பார்வையில்.. நான் இந்த நிகழ்ச்சியை மறு திகதியிட இவற்றையே முக்கிய காரணங்களாகக் கருதி கருத்துச் சொல்லி வருகிறேன்.

மற்றும்படி.. சிலர் சொல்வது போல வறட்டு விவாத வெற்றிக்காக அல்ல. விவாத வெற்றி என்பது எமக்கு இங்கிருந்து எதனையும் தரப்போறதில்லை. நேர விரயத்தைத் தவிர..! அப்படிச் சொல்பவர்கள் தான் அதற்காக இங்கு பலர் பெயர்களில் வருகிறார்களோ தெரியவில்லை. அவர்களைப் பற்றி எல்லாம் நாம் அலட்டிக் கொள்ள வேண்டி அவசியம் இல்லை. நாம் ஒரு தெளிவோடு விடயங்களை அணுகிக் கொண்டால்..!

உங்கள் நீண்ட கருத்திற்கு நன்றி. இப்போதாவது எமது கருத்தின் நோக்கங்களை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து இதில் கருத்தாடி பிரயோசனம் இல்லை. மேலும்.. நிகழ்ச்சிக்கான திகதி மாற்றம் பற்றிய அவசியம் உணரப்பட்டு.. அது குறித்து சம்பந்தப்பட்ட எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில்... எங்கள் கருத்துக்களும் எங்களைப் போலவே ஒத்த கருத்துள்ள மக்களின் கருத்துக்களும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்.. மேலும் மேலும் இது பற்றி கருத்துரைப்பது அழகும் அல்ல..! நிகழ்ச்சிக்கு நாளும் நெருங்கிவிட்டுள்ள நிலையில்.. எனி நடப்பவற்றை அவதானிப்பதே சிறப்பு.

நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • Replies 248
  • Views 20k
  • Created
  • Last Reply

தமிழ்சூரியன்,

தீவிரமாக போர் நடைபெற்ற காலங்களிலும் கனடாவில் பல நூற்றுக்கணக்கான இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றினை ஒழுங்கு படுத்தியவர்களில் அநேகர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த அமைப்புகளும் தான். அவற்றின் பின்னும் மக்கள் தெருக்களில் பனியிலும் குளிரிலும் விறைக்க விறைக்க போராட்டத்துக்காக அணி திரண்டனர்.

இசை நிகழ்ச்சி பார்ப்பதால் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்பது மீது வைக்கப்படும் மிக கேவலமான ஒரு விமர்சனம் ஆகும். மக்கள் பற்றிய இத்தகைய தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கான போராட்டத்தினை நடத்தவும் முடியாது அல்லது மக்களுக்கான இசையை வெளிப்படுத்தவும் முடியாது.

நிழலி இசை நிகழ்ச்சியை எப்போதாவது பார்க்க வேண்டாம் என்று நான் கூறினேனா ...............அகூதா கூறிய அவதானம் எமக்கு தேவை என்னும் கருத்துக்கே பதிலிட்டேன் ............எல்லாவற்றையும் நாம் தொலைத்ததிற்கு இந்த அவதானமே முக்கிய காரணமாகும் ...............இந்த விழிப்புணர்வு எம்மிடையே அறவே இல்லை ...அந்த வகையிலேயே கருத்திட்டேன் ...........

அதுதானே........ கனடிய இனம் ,கனடிய மொழி ,நாங்கள் கனடாக்காரர் ........[நிறத்தை தவிர]

இவ்வாறான தவறான திணிப்புகளை இத்தோடு நிறுத்துங்கள். தமிழினமாக இரு மொழியை வைத்திரு ஆனால் கனடா சட்டத்துக்கு உட்பட்டவனாக இரு இது தான் எனது கருத்து. உங்கள் நிலை சட்டங்களுக்கு அப்பாற்பட்ட வழிகாட்டல். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் இரட்டை நிலை. கோயில் நிகழ்வுக்கென்று மண்டபம் எடுத்து மாவீரர் தினம் இதர தேசீயக் கூட்டங்கள் நடத்தும் நிலை உங்களது. எந்தக் காலத்திலும் கள்ளத்தனமாக தேசீயத்தை எடுத்துச் செல்லமுடியாது. இதற்கு மோசமான பின்விழைவுகளை சந்திதது வரலாறு. மாவீரரரை எமது வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாது அவர்களை இறந்த மக்களை நினைவு கூர நேரடியான சட்ட அனுமதியை கனேடிய சட்டத்திடம் இருந்து பெறுவது அல்லது அதற்காக போராடுவது. இதுவே சரியான அணுகுமுறை. உங்களின் முன்யோசனையற்ற பயித்தியக்காரத்தனமான தேசீய வெறிக்கு பலியாவது இந்த இனம். கனடா பிரஜாஉரிமை பெற்றவன் கனேடிய சட்டத்திற்கு உட்பட்டவனாக இருந்தே ஆகவேண்டும். அவன் தமிழ்தேசியம் விடுதலை சார்பாக எதாவது செய்ய வேண்டுமானால் கனேடிய சட்டத்திடம் இருந்து அனுமதி பெற்றே செய்ய வேண்டும். அனுமதி மறுக்கப்பட்டால் அதற்காக போராடு இல்ல மறுக்கப்பட்ட காரணங்களை சரிசெய். குறுக்கு வழியை காண்பித்துவிட்டு நாங்கள் தான் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று நாட்டாமை வேலை பார்ப்பதை கைவிடவேண்டும் என்பதே கருத்து.

நன்றி சண்டமாருதன்!!!

இவ்வாறான தவறான திணிப்புகளை இத்தோடு நிறுத்துங்கள். தமிழினமாக இரு மொழியை வைத்திரு ஆனால் கனடா சட்டத்துக்கு உட்பட்டவனாக இரு இது தான் எனது கருத்து. உங்கள் நிலை சட்டங்களுக்கு அப்பாற்பட்ட வழிகாட்டல். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் இரட்டை நிலை. கோயில் நிகழ்வுக்கென்று மண்டபம் எடுத்து மாவீரர் தினம் இதர தேசீயக் கூட்டங்கள் நடத்தும் நிலை உங்களது. எந்தக் காலத்திலும் கள்ளத்தனமாக தேசீயத்தை எடுத்துச் செல்லமுடியாது. இதற்கு மோசமான பின்விழைவுகளை சந்திதது வரலாறு. மாவீரரரை எமது வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாது அவர்களை இறந்த மக்களை நினைவு கூர நேரடியான சட்ட அனுமதியை கனேடிய சட்டத்திடம் இருந்து பெறுவது அல்லது அதற்காக போராடுவது. இதுவே சரியான அணுகுமுறை. உங்களின் முன்யோசனையற்ற பயித்தியக்காரத்தனமான தேசீய வெறிக்கு பலியாவது இந்த இனம். கனடா பிரஜாஉரிமை பெற்றவன் கனேடிய சட்டத்திற்கு உட்பட்டவனாக இருந்தே ஆகவேண்டும். அவன் தமிழ்தேசியம் விடுதலை சார்பாக எதாவது செய்ய வேண்டுமானால் கனேடிய சட்டத்திடம் இருந்து அனுமதி பெற்றே செய்ய வேண்டும். அனுமதி மறுக்கப்பட்டால் அதற்காக போராடு இல்ல மறுக்கப்பட்ட காரணங்களை சரிசெய். குறுக்கு வழியை காண்பித்துவிட்டு நாங்கள் தான் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று நாட்டாமை வேலை பார்ப்பதை கைவிடவேண்டும் என்பதே கருத்து.

நன்றி உங்கள் விளக்கத்திற்கு ...........ஆனால் இங்கே நடை பெரும் மாவீரர் தினங்கள் அனைத்தும் இந்த நாட்டின் சட்டத்திற்கமையவும் உண்மையான காரணம் சொல்லப்படடபின்பும் காவல்துறை அல்லது உத்தியோகபூர்வமான

காப்பாளர் துணையுடனும் தான் இதுவரை காலமும் அனுஸ்டிக்கப்பட்டது ............இம்முறையும் அப்படித்தான் நடக்கும் .........ஆனால் கனடாவில் இப்படியொரு நிலைமை இருப்பது கனடாவில் உள்ளோர்க்குத்தான் தெரியும் ...................அதை விடுங்கள் இந்த விளக்கம் எனது பின்னூட்டத்திற்கு அவசியமற்றது ...........ஏனனில் நான் என்ன கருத்தில் எழுதினேன் என்பதை நீங்கக் சரியாக வாசிக்காமல் எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் ...........உங்களின் சில கருத்துக்களுடன் நான் உடன்பட்டாலும் ..........நான் என் இப்படி எழுதினேன் என்று தவறாக தாங்கள் புரிந்து பின்னூட்டம் இட்ட படியினாலேயே .....நான் எழுதியதன் கருப்பொருள் ............

நாம் புலம்பெயர்ந்து எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களுக்கு நாம் கட்டுப்படவேண்டும் ...........ஆனால் இன்னும் சில காலங்களில் இந்த நாட்டவர் யூதரை கலைத்தது போன்று எம்மையும் கலைக்கும் ஒரு நிலைமை வந்தால் ..நாம் எங்கோ ஒரு இடத்திற்கு திருப்பிசெல்லவேண்டும்...............அந்த வகையில் எம் உரிமைக்கான போராட்டத்தின் இந்த கட்டத்தையும் ,போராட்ட வடிவத்தையும் ,உணர்ந்து எமக்கு ஏற்பட்ட அத்தனை சவால்களையும் இனம்கண்டு ,வெற்றி கொண்டு பயணிப்பதே முறை ...அந்த வகையில்...........எம்மிடம் விழிப்புணர்வு என்ற ஒண்டு நிச்சயம் வேண்டும் .............நாம் பெற்ற அனுபவங்களை கொண்டு நம்ப நட ,நம்பி நடவாதே என்னும் வாசகத்துக்கமைய எம் செயல்பாடுகள் அமைய வேண்டும்...இந்த சில விடயங்களை வைத்தே என் கருத்து அவ்வாறு அமைந்தது .............யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல ...........

இறுதியாக ஒரு விடயம் -------------------விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் காசை சுத்திவிட்டார்கள் என்கிறோம் .............அப்படி நடந்திருந்தால் ........இப்படி நடக்கும் என்று எமக்கு அப்ப தெரிந்திருந்ததா ............ஆகவே இனியும் தமிழர்களிடம் இருந்து இப்படியான செயற்பாடுகள் நடக்கும் பொது நாம் விழிப்புணர்வுடன் இருக்க நினைப்பது அவசியமில்லையா ....................இங்கே கனடா சட்டத்தை மதிப்பதற்கும் ..அதற்கு மேலாக நாம் விழிப்புணர்வுடன் செயற்படுவதற்கும் வேறுபாடு இருக்குது .........நன்றி

[size=5]http://www.trinitytechinc.ca/ [/size]

[size=4]இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது.[/size]

[size=4]பொதுவாக இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது இலகுவான விடயம் இல்லை. முன் பின் அனுபவம் இல்லாதவர்கள் நடாத்த முடியாது.[/size]

[size=4]எனவே ஒரு பொறியியல் நிறுவனம் என்னென்று இசை நிகழ்ச்சியை நடக்க முனைந்தது? எவ்வாறு இது சாத்தியம் ஆகும்?[/size]

[size=4]அதாவது இந்த நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பலமான ஆதரவு இருக்கவேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பொதுவாக இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது இலகுவான விடயம் இல்லை. முன் பின் அனுபவம் இல்லாதவர்கள் நடாத்த முடியாது.[/size]

[size=4]எனவே ஒரு பொறியியல் நிறுவனம் என்னென்று இசை நிகழ்ச்சியை நடக்க முனைந்தது? எவ்வாறு இது சாத்தியம் ஆகும்?[/size]

[size=4]அதாவது இந்த நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பலமான ஆதரவு இருக்கவேண்டும்.[/size]

ஏன் பூடகமாகச் பொடி போட்டுக் கதைக்கவேண்டும்?

தர்க்க ரீதியாகப் பார்த்தால் பெரும் மூலதனத்தைக் கொடுக்கக்கூடிய உளவு அமைப்புக்கள், நாடுகள்தான் பின்னணியில் நிற்கவேண்டும் என்று சொல்லுங்கள்.

தமிழ் மக்களின் தேசிய உணர்வை மழுங்கடிக்க நவம்பர் மாதத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்துவது உளவியல் யுத்தத்தின் ஒருவடிவம் என்று சொல்லுங்கள்.

இசைஞானி இளையராஜா இந்த சதிவலைக்குள் தெரியாமல் மாட்டுப்பட்டுவிட்டார். எனவே சதித்திட்டத்தை தோற்கடித்து, இசைஞானியை சதிவலையில் இருந்து மீட்டு, அவர் தமிழ் இசைக்காற்றும் பெருந்தொண்டின் காரணமாக அவருக்கு தமிழ்த் தேசிய ஞானஸ்தானத்தை கொடுத்து இரட்சிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் சொல்லுங்கள்.

இதன்மூலம் தமிழீழம் நோக்கிய நெடும் பயணத்தில் முக்கியமான காலடியை வைத்து முன்னேறலாம் என்றும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

| செவ்வாய்க்கிழமை, 30, அக்டோபர் 2012 (20:40 IST)

இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வருகின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்கு ஈழ ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கனடா வாழ் தமிழர்கள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

’’நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் நிகழ்ச்சி வேண்டாம். வேறு ஒரு மாதத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆனாலும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை டிரினிட்டி ஈவெண்ட்ஸ் கவனித்து வருகிறது. அதற்கான வேலைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.

திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளார்கள். இது வரை 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்னும் இரண்டு தினங்களில் விற்பனையாகும். இந்த அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, எப்படி நிகழ்ச்சி ரத்தாகும்?’’ என்கிறார்கள் சில கனடா தமிழர்கள்.

மேலும் அவர்கள், ’’நவம்பர் மாதத்தில் மூன்று தினங்கள்தான் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் அல்ல. அதனால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை’’ என்கிறார்கள்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=85213

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

[size=4]சிந்திப்பதால்,வாசிப்பதால்,கேள்விகளை கேட்பதால் மனிதன் பூரணமாகின்றான்.[/size]

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

இப்படியொரு சிந்தனை ,எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது ,என்கிறீர்களா ???

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

இசையை விரும்பாதவன் [எதிரானவன் ].......இறைவனை விரும்பாதவன் ........[ கொஞ்சம் ஈடுபாடு உள்ளவன் என்ற வகையில்]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size][size=4] [/size]

அறிந்திருப்பதில், அறிய நினைப்பதில் என்ன தவறு கண்டீர் ..... ???????

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

காசை சுத்தி விட்டார்கள் ,கொள்ளை அடித்துவிட்டார்கள் என்று பழிபோடும் நிலையில் ............நாளை அப்படியொரு நிலை இனியும் வருவதை தடுக்கலாம் என்று சிந்திக்க கூடாதா ????????

[size=4]ஆகவே ......சிந்திப்பதால்,வாசிப்பதால்,கேள்விகளை கேட்பதால் மனிதன் பூரணமாகின்றான்.[/size] அருமையான ,யதார்த்தமான சிந்தனை அகூதா

  • கருத்துக்கள உறவுகள்

போங்க தமிழ்சூரியன்

உங்களுக்கு பிழைக்கத்தெரியாதா?

போய் நெதர்லாந்து சட்டத்தை முதலில் படியுங்கள்

மதியுங்கள்

புலிகள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளார்கள்

அவர்களது பெயரை உச்சரிப்பதை பேசுவதை பாடுவதை விடுங்கள்

பிள்ளைகளுக்கும் அதையே அறிவுறுத்துங்கள். பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று.

தமிழினம் ஒரு காட்டுமிரண்டி இனம். அவர்களைக்கண்டால் பழகவேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.

நானும் இதைதத்தான் இனி செய்யப்போகின்றேன்

புலிகள் போல் நிமிர்ந்து நின்று இவர்களைப்போன்றவர்களால் நானும் அழிய விரும்பவில்லை.

[size=6]புலிகள் போல் நிமிர்ந்து நின்று இவர்களைப்போன்றவர்களால் நானும் அழிய விரும்பவில்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சிந்திப்பதால்,வாசிப்பதால்,கேள்விகளை கேட்பதால் மனிதன் பூரணமாகின்றான்.[/size]

ஆம். உண்மைதான். ஆனால் தமிழர்களின் சிந்தனை, வாசிப்பு, கேள்விகள், செயற்பாடுகள் என்பனவற்றின் வீச்செல்லைகளைத் தீர்மானிக்க அரூபமான சக்திகள் இருக்கின்றார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றதல்லவா!.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இழையராஜா இசை நிகழ்வும் மாவீரர்தின தேசிய நிகழ்வும்: - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை. [/size]

[Tuesday, 2012-10-30 23:06:02]

[size=4] CTC%20logo%20seithycom.jpg

இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழுவிபரம் கீழ்வருமாறு..

கனடியத் தமிழர் பேரவை

29-10-12

------------------------

அன்பான தமிழ் மக்களே!

கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு

கனடிய தமிழர் பேரவை

(416) 240-0078

http://www.seithy.co...&language=tamil[/size]

Edited by தமிழரசு

[size=4]சிந்திப்பதால்,வாசிப்பதால்,கேள்விகளை கேட்பதால் மனிதன் பூரணமாகின்றான். [/size]

[size=4]இதை எதிரிகளும் கூட நன்கு அறிவார்கள்.[/size]

[size=4]எனவே அந்த பலம் பொருந்திய மிகவும் கெட்டித்தனமான சிங்கள எதிரிகள் எம்மை பிளவுபடுத்தக்கூடிய வகைகளை ஆராய்ந்தே திட்டம் தீட்டுவார்கள்.[/size]

[size=4]இவ்வாறு அவர்கள் எம்மை பிரிக்க தேர்ந்து எடுத்த ஒன்றுதான் 'இசை'. இறுதியாக உன்னி கிருஷ்ணன் யாழ் சென்றதும், அங்கு டக்ளசால் பொன்னாடை போர்த்தப்பட்டதும், பின்னர் அவர் மன்னிப்பு கோர நாமும் மன்னித்ததும் சரித்திரம்.[/size]

இவ்வளவு தீவீரமான விவாதம் மாண்டு போன மாவீரகளுக்காய் நடந்ததில்லை.

வீதியில் வைத்து விபச்சாரி ஆக்கப்பட்டவளுக்கும் நடந்ததில்லை.

புதிய உலகில் பயணிக்கிறோம்.

இவ்வளவு தீவீரமான விவாதம் மாண்டு போன மாவீரகளுக்காய் நடந்ததில்லை.

வீதியில் வைத்து விபச்சாரி ஆக்கப்பட்டவளுக்கும் நடந்ததில்லை.

புதிய உலகில் பயணிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!

தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.

எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.

இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.

ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.

எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Thatstamil

[Tuesday, 2012-10-30 23:06:02]

[size=4] CTC%20logo%20seithycom.jpg

இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம் மற்றும் அதையொட்டிய மாவீரர் வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழுவிபரம் கீழ்வருமாறு..

கனடியத் தமிழர் பேரவை

29-10-12

------------------------

அன்பான தமிழ் மக்களே!

கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதென கேட்டுக் கொள்கின்றது.

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும் மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு

கனடிய தமிழர் பேரவை

(416) 240-0078

http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனவே அந்த பலம் பொருந்திய மிகவும் கெட்டித்தனமான சிங்கள எதிரிகள் எம்மை பிளவுபடுத்தக்கூடிய வகைகளை ஆராய்ந்தே திட்டம் தீட்டுவார்கள்.[/size]

:lol: உருண்டு பிரண்டு சிரித்தேன் :D:lol:

நாங்கள் ஏதோ ஒற்றுமையாக பலம் பொருந்தி இருப்பதாகவும் சிங்கள எதிரிகள் எம்மை பிரித்தாள மிகவும் கெட்டித்தனமாக வேலைசெய்ய ஆராய்ச்சி செய்து திட்டம் தீட்டுகின்றார்கள் என்றும் சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதீர்கள் :lol:

தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நெல்லைக்காய் மூட்டை. கொள்கைக்காக பேதங்களை காட்டுவதை விட கதிரைக்காகப் பேதம் காட்டுபவர்கள் இவர்கள்.

புலம்பெயர் நாடுகளில் இயங்குபவர்கள் தேசியம், தாயகம் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு "சில்லறை"ப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் பிளவுண்டு புடுங்குப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே எதிரிக்கு வேலை மிகவும் குறைவு..

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா இனி எந்தவொரு தமிழ்நாடுத் தமிழனும் எங்களுக்குகாக வர முதல் ஆயிரம் தடவை யோசிப்பான் .நன்றி கனடா தமிழ்ச் சங்கத்திற்கு

இது வரை 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்னும் இரண்டு தினங்களில் விற்பனையாகும்.

[size=4]இந்த நிகழ்வு நடக்கும் மண்டபம் மொத்தமாக எண்பதினாயிரம் மக்களை கொள்ளக்கூடியது. இருந்தும் நாற்பதினாயிரம் பேரை மட்டுமே எதிர்பார்த்துள்ளார்கள் போலுள்ளது.[/size]

[size=4]மூன்று கிழமைகளில் 30,000 சீட்டுக்களை விற்றுள்ள நிலையில் சீட்டுக்கள் இரண்டு தினத்தில் 10,000 விற்கப்படும் என்பது நேர்மையான கூற்றாக தெரியவில்லை.[/size]

Edited by akootha

நவம்பர் 3 மாவீரர் வாரத்தில் வராது என்பதை என்னுடைய அன்புத் தம்பிமார்கள் தெளிவுபடுத்தியதாலும், இசை நிகழ்ச்சியில் வரும் நிதியில் ஒரு பகுதி அல்லல்படும் தமிழீழ மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதாலும், தமிழ் தேசியத்தின் இசை அடையாளமாய் திகழும் இசைஞானியின் நிகழ்ச்சியை "நாம் தமிழர்" கட்சி ஆதரிக்கின்றது.

இப்படி ஒரு அறிக்கையை சீமானும் விடுவது நல்லது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தை காப்பற்றுவதற்காவது உதவும்.

Edited by சபேசன்

மேலும் அவர்கள், ’’[size=5]நவம்பர் மாதத்தில் மூன்று தினங்கள்தான் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.[/size] அந்த மாதம் முழுவதும் அல்ல. அதனால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை’’ என்கிறார்கள்.

http://www.nakkheera...ws.aspx?N=85213

[size=5]நவம்பர் 03 பல நிகழ்வுகள் டொராண்டோவில் நடக்கின்றன. [/size]

[size=5]இதுவும் ஒன்று....[/size]

career_counciling.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110482

ஊனமுற்று, வாழ வழியில்லாமல் வாழும் போராளிகளைப் பற்றி இங்கு எழும் கேள்வி குறைவு. இங்கு பார்த்த மட்டில், சுற்றிய பணத்தை மறைப்பதில் பலர் வல்லவர்களாய் இருக்கிறார்கள். யாரும் கதைத்தாலும் அது அடக்கப்படும்.

மூன்று வருடமாயிற்று. மக்களின் மறதியை வைத்து இனி பிழைப்பு ஓடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.