Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் அமைச்சராக இருந்து இதுவரை செய்தவை என்ன?

Featured Replies

[size=2]

[size=4]டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்து இதுவரை மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.[/size][/size]

[size=2]

[size=4]அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது உரையாற்றுகையில்,[/size][/size]

[size=2]

[size=4]அடுத்த வருடம் 60 ஆயிரம் குடிசைக் கைத்தொழில்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்றை செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார். இதேபோன்றுதான் கடந்த ஆண்டிலும் அறிவித்தார். ஆனால் அவ்வாறு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி உள்ளாரா? [/size][/size]

[size=2]

[size=4]இன்று அபிவிருத்தி தொடர்பாக ஊடகங்களில் ஜனரஞ்சகமாகவும், ஜனாதிபதியைத் திருப்தியடையச் செய்வதற்காகவும் மாத்திரமே செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் வெளியிடப்படும் அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதுதான் மக்கள் முன் எழுந்துள்ள கேள்வி. பரந்தன் தொழிற்சாலை நமது நாட்டுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களில் பெரும் பகுதியை உற்பத்தி செய்தது.[/size][/size]

[size=2]

[size=4]எனினும் கடந்த பல வருட காலமாக இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் இயக்ங்கச்செய்ய மூன்று பில்லியன் செலவிலான உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம் நமக்குத் தேவையான குளோரின் மற்றும் சலவைச் சோடா ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும். [/size][/size]

[size=2]

[size=4]இவ்வாறு நமக்குத் தேவையான சகல வளங்களும் இங்கே இருக்கும்போது சலவை சோடாவைக்கூட நாம் இறக்குமதி செய்கின்றோம். எனவே, உங்களுடைய செயற்றிட்டங்களை செய்தியாக மட்டும் வெளியிடாமல், செயலிலும் காட்டுங்கள். இதன் மூலம் தொழில்வாய்ப்புகளை மட்டுமன்றி, அந்நியச் செலவாணியையும் மீதப்படுத்த முடியும். அதேபோன்று காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்தவும், உற்பத்திகளை ஆரம்பிக்கவும் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த "ரஸல் கைமா' என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. அங்கு முறைசார் சாத்தியவள கூற்றறிக்கை ஆய்வுசெய்யப்பட்டு 35 வருடகால ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தையும் செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். [/size][/size]

[size=2]

[size=4]வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளைப் பரிசீலனை செய்யும்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்குக் கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான நிதியை வைத்துக்கொண்டு அமைச்சர் என்ன அபிவிருத்தியை செய்யப்போகின்றார் என்று தெரியவில்லை என்றார். [/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=244981632622430679[/size]

  • Replies 81
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் தானே யாழ் மத்திய கல்லூரியில் நீச்சல் தாடகத்தினைக் கட்டியவர். மத்தியில் கூட்டாச்சி, மானிலத்தில் தனியாட்சி என்று முழங்கியவர். இப்படி யாராவது முழங்கமுடியுமா?. வேலையில்லாத பலருக்கு சிங்கள தேசத்து இராணுவத்தின் துணைக்குழுவில் சேர்த்து எப்படிக் கொலை செய்து சம்பாதிப்பது என்று வழிகாட்டியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் அமைச்சராக பணியாற்றுவதே ஒரு சாதனைதானே :icon_mrgreen: . கூட்டமைப்பினர் இதையிட்டுப் பெருமைப்படாமல் எப்போதும் குறைசொல்லுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் அமைச்சராக இருந்து இதுவரை செய்தவை என்ன?

1) கோவில்,கோவில் மதில்களுக்கு வெள்ளையடிச்சது.

2) இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரிலை தான்மட்டும் படம் பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

dna எடுத்துப் பாக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

1) கோவில்,கோவில் மதில்களுக்கு வெள்ளையடிச்சது.

2) இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரிலை தான்மட்டும் படம் பார்க்கிறது.

டக்ளஸ், அடாத்தாய்...... தனது கட்சி அலுவலகமாக... ஆமியுடன் சேர்ந்து, பிடித்து வைத்திருப்ப‌து...

ஸ்ரீத‌ர் தியேட்ட‌ர் இல்லை, வின்ச‌ர் தியேட்ட‌ர் என‌ நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

[size=4]முன்னைய பதிவு ஒன்று [/size]

[size=4]

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_003.jpg

மத்திய கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட இந்த நீச்சல் குளத்துக்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் இறைக்க வேண்டும்... யாழ் குடாநாடு போன்ற வரண்ட பிரதேசங்களில் இது சாத்தியமா? மற்றும் புழுதிக் காற்றால்... இந்த நீரை பாதுகாக்க, வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை திறந்து வைத்தவர்கள் யோசித்தார்களா?[/size]

[size=4]மத்திய கல்லூரியிலிருந்து 300 மீற்றர் தொலைவில் கடல் இருக்கும் போது... நீச்சல் குளம் அவசியமா?[/size]

[size=4]இந்த நீச்சல் குளத்துக்கு, பாவிக்கும் நிலத்தடிநீரால்... குடி நீருக்கும், விவசாயத்துக்கும் பாதிக்கப்படப் போவது குடாநாட்டு மக்களே.

[/size]

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=147&t=97868&qpid=727901

  • கருத்துக்கள உறவுகள்

பழைய உருப்படியான, பதிவு ஒன்றை தேடிப்பிடித்தமைக்கு... நன்றி அகூதா. :rolleyes:

அமைச்சராக இருந்து, அமைச்சராக இருந்து, அமைச்சராக இருந்து, ஆங்......... என்னப்பா செய்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்கள், செய்வதைத் தானே, செய்கிறார்?

உணவு உண்ணல் - சொத்துக்களைக் குவித்தல்

கழிவகற்றல் - தேவையில்லாதவை, என்று அவர் கருதுபவற்றை அகற்றுதல்

இனம் பெருக்குதல் - இதற்கு அர்த்தம் சொல்லக் களத்தின் கட்டுப்பாடுகள் அனுமதிக்காது.

அவ்வளவும் தான்! :o

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்கள், செய்வதைத் தானே, செய்கிறார்?

உணவு உண்ணல் - சொத்துக்களைக் குவித்தல்

கழிவகற்றல் - தேவையில்லாதவை, என்று அவர் கருதுபவற்றை அகற்றுதல்

இனம் பெருக்குதல் - இதற்கு அர்த்தம் சொல்லக் களத்தின் கட்டுப்பாடுகள் அனுமதிக்காது.

அவ்வளவும் தான்! :o

அவரின், முன்னாள் காதலி மகேஸ்வரியைப்பற்றி சொல்கிறீர்களோ....

ஐயோ... அதைக் கிளறினால், செத்த எலி வாசம் அடிக்கும்.smiley-sick006.gif

மினக்கெட்ட சிகை அலங்காரி பூனையை பிடித்து சிரைச்சானாம்.

பிராக்கு போகாத கூட்டமைப்பு பா.உ. தேவானந்தாவை பற்றி பேசிகிறார்.

அந்த நேரத்திற்கு சிறிதரனுக்கு ஆதரவு கொடுத்து ஆமி கடத்திக் கொண்டு போயிருக்கும் 109 பெண்பிள்ளைகளையும் பற்றி பேசியிருக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

doulgas.jpg

Pun1712A.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எம்.ஜி.ஆர்...:D :D.வாழ்க நல்ல ஸ்டைலா நடக்கிறார்...அவரை சுற்றி மெய்பாதுகாவலரும் உண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் மண்ணை களவெடுக்கிறாரோ அல்லது மக்களின் பணத்தை சூறையாடுகிறாரோ தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பை விட அதிகம் செய்துள்ளார் என்பது தான் உண்மை.

சிறுகச் சிறுக அமைச்சர் நிறைய அபிவிருத்திகளை செய்கின்றார் என்பதே உண்மை. மேலே பிரபா கணேசன் குறிப்பிடுவது போல் பேரினவாதிகளின் மத்தியில் மக்களுக்காக முடிந்ததை செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பேரினவாதிகளையும் அனுசரிக்கவேண்டும் அதே நேரம் மக்களுக்கும் ஏதாவது செய்யவேணும். இதற்கு மனிதாபிமானம் நிறைந்த சேவை மனப்பான்மை அவசியம். தற்போது இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் மிகச் சிறந்தவராக செயலாளர் நாயகம் இருக்கின்றார். பேரினவாதம் என்னும் சிங்கத்தின் குகைக்குள் இருந்து ஊழையிடுவதாலோ அல்லது குரைப்பதாலோ எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்து தந்திரமாக தன்னாலானதை செய்கின்றார். கூட்டமைப்புக்கோ அல்லது இதர கோஸ்டிகளுக்கோ இலங்கையில் தமிழர்கள் சார்பாக புடுங்குவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் அதற்கான தளம் இல்லை. காலம் முழுக்க அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

Edited by nunavilan

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.

எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,

எங்கள் முதுகுத்தோல் பிய்ந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.

கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.

இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.

கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111828

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு அபிவிருத்திக்கு நிதியே ஒதுக்குவதில்லை.ஆதலால் பெரிய அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க முடியாது.அரசின் தந்திரம் இங்கே தான் இருக்கிறது. அதாவது தாமும் டக்ளசும் தான் அபிவிருத்தி வேலைகளை செய்வதாக காட்டி மக்களின் ஆதரவை தங்களுக்காக திருப்பும் அதே நேரம் கூட்டணி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதாகும்.

செயலாளர் நாயகம் செய்த, செய்யும் அடாவடி தனங்கள் பற்றி பந்தி பந்தியாக ஆதாரத்துடன் தேவையென்றால் எழுதலாம்.

கூட்டமைப்புக்கு அபிவிருத்திக்கு நிதியே ஒதுக்குவதில்லை.ஆதலால் பெரிய அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க முடியாது.அரசின் தந்திரம் இங்கே தான் இருக்கிறது. அதாவது தாமும் டக்ளசும் தான் அபிவிருத்தி வேலைகளை செய்வதாக காட்டி மக்களின் ஆதரவை தங்களுக்காக திருப்பும் அதே நேரம் கூட்டணி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதாகும்.

செயலாளர் நாயகம் செய்த, செய்யும் அடாவடி தனங்கள் பற்றி பந்தி பந்தியாக ஆதாரத்துடன் தேவையென்றால் எழுதலாம்.

செயலாளர் நாயகத்தை 12 தடவைக்குமேல் கொல்ல முற்பட்டதெல்லாம் அடாவடித்தனமில்லையா? இதிலிருந்தே தெரிந்தகொள்ளலாம் காய்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்பது. எத்தனை ஆதரத்தை முன்வைத்தாலும் செயலாளர் நாயகம் செய்த அடாவடித்தனங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கும் அதே நேரம் அபிவிருத்தி வேலைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும்.

டக்கிளசை தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரியும். டக்கிளசின் பலம், தன்னை எதிர்ப்பவர்களை கூடியவரைக்கும் தன் பக்கம் இழுக்கச் செய்யும் குணம். எனக்குத் தெரிந்து அவரை எதிர்த்து எழுதிய பல ஊடகவியலாளர்களை பலமுறை தன்னைச் சந்திக்க செய்து தன் பக்கம் இழுத்தவர். வீரகேசரி பத்திரிகையாளர்கள் பலரிடம் இது பற்றிக் கேட்டால் உண்மை என்று சொல்வார்கள். மீடியாவை தன் பக்கம் வைத்திருக்கத் தெரிந்த ஒரு சமயோசித தமிழ் அரசியல்வாதி இவர் மட்டுமே. மீறி துணிச்சலாக இருந்தவர் டக்கிளசால் கொல்லப்பட்ட மதிப்பிற்குரிய நிமலராஜன் மட்டும்தான்.

என் அண்ணன் முறையில் வரக்கூடிய தினமுரசு ஆசிரியர் அற்புதனை போட்டுத் தள்ளிய பின், அற்புதனுடன் தோளோடு தோள் நின்ற காரணத்தால் லண்டன் சென்று ஒழிந்து கொண்ட சந்திரகுமாரைக் கூட தன் பக்கம் இழுத்து எம் பி ஆக்கிய சமயோசிதமும் தந்திரமும் கொண்டவர் டக்கிளஸ்.

இவரது அரசியல் தந்திர அறிவின் நூறில் ஒரு பங்கு கூட சம்பந்தருக்கோ அல்லது எந்த ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கோ இல்லை என்பதுதான் துயரமான விடயம்.

குமார் பொன்னம்பலம் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் டக்கிளஸ் அரசியல் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வந்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்

செயலாளர் நாயகத்தை 12 தடவைக்குமேல் கொல்ல முற்பட்டதெல்லாம் அடாவடித்தனமில்லையா? இதிலிருந்தே தெரிந்தகொள்ளலாம் காய்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்பது. எத்தனை ஆதரத்தை முன்வைத்தாலும் செயலாளர் நாயகம் செய்த அடாவடித்தனங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கும் அதே நேரம் அபிவிருத்தி வேலைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும்.

[size=4]செயலாளர் நாயகம் மீது இந்தியாவில் ஒரு கொலைகுற்ற வழக்கு உள்ளது. நியாயமாக கௌரவமாக பார்த்தால் அவர் தனது பெயருக்கு முன்னாள் உள்ள களங்கத்தை கலைத்து இன்னும் நற்மதிப்பை எமது மக்கள் மத்தியில் கூட்ட[/size] [size=4]வேண்டும் :rolleyes:[/size]

[size=4]செயலாளர் நாயகம் மீது இந்தியாவில் ஒரு கொலைகுற்ற வழக்கு உள்ளது. நியாயமாக கௌரவமாக பார்த்தால் அவர் தனது பெயருக்கு முன்னாள் உள்ள களங்கத்தை கலைத்து இன்னும் நற்மதிப்பை எமது மக்கள் மத்தியில் கூட்ட[/size] [size=4]வேண்டும் :rolleyes:[/size]

ஒரே ஒரு கொலை வழக்கு. அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆரம்பகாலங்களில் யார்தான் தவறுவிடாதவர்கள்? ஆனால் அதன் பின்னரான மக்கள் பணி அபிவிருத்திகள் என்றுபார்த்தால் இவருக்கே முதலிடம். முன்பை விட இப்போது இவர் அதிகம் செயற்படுகின்றார். வாயால் வடை சுட்டு வித்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு நாடுகடந்த அரசு போன்றவற்றை விட ஏதோ முடிந்ததை பேரினவாதத்தின் மத்தியில் செய்கின்றார் என்பது பெரியவிசயமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கொலை வழக்கு. அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆரம்பகாலங்களில் யார்தான் தவறுவிடாதவர்கள்? ஆனால் அதன் பின்னரான மக்கள் பணி அபிவிருத்திகள் என்றுபார்த்தால் இவருக்கே முதலிடம். முன்பை விட இப்போது இவர் அதிகம் செயற்படுகின்றார். வாயால் வடை சுட்டு வித்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு நாடுகடந்த அரசு போன்றவற்றை விட ஏதோ முடிந்ததை பேரினவாதத்தின் மத்தியில் செய்கின்றார் என்பது பெரியவிசயமே.

தெரிந்த கொலை ஒன்று தெரியாத கொலை பல.....தன்னையும் நல்லாய் அபிவிருத்தி செய்கிறார்...என்ன இருந்தாலும் அவரின் கட்சி வடமாகணத்தில் இதுவரை மக்களின் நம்பிக்கையான கட்சியல்ல....செல்லையா குமாரசாமி,தேவநாயகம்,ராஜாதுரை,அல்பிரட் துரையப்பா போன்றோர் செய்த அபிவிருத்தி வேலைகளைதான் இவரும் செய்கிறார்..அவர்கள் ஜனநாயக முறையில் செய்தார்கள் .இவர் ஆயுத முறையில் செய்கிறார்...

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]செயலாளர் நாயகம் [/size]

சோறு போடுவதாக சொல்லி

மக்கள் பணத்தில் தன் வாய்க்குள் போட்டது தான் அதிகம்

சலுகைகள் சார்ந்தும்

அப்படியே...................

எமது உரிமைப்போராட்டத்தில்

தட்டிவிட்ட பெருமையும் இவருக்குத்தான் முதலிடம். :( :( :(

கூட்டமைப்பையோ

சாதாரண தமிழர்களையோ இவருடன் ஒப்பிடுவது சரியல்ல

இவர் போல் வாழ அவர்கள் முயலவில்லை என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மண் கொள்ளை பற்றி யாரும் சொல்லவில்லையே ...... ?

கட்டப்பஞ்சாயத்து அடங்கும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.