Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியதை வாசித்துவிளங்கும் அறிவே இல்லை போலகிடக்கு அதற்குள் வியாக்கியானம் கொடுக்க வந்துவிட்டீர்கள் .என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை முதலில் வாசித்துவிளங்கி பின்னர் பதில் எழுதவும்.

இங்கு பின்னூட்டம் இடும் எல்லோரும் தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்ற கணக்கில்தான் நிற்கின்றார்கள் .ஏதோ தூரத்தில் இருந்துவந்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும் போலவும் அந்த ஒருநாள் கூட ஏதோ கட்டாயம் தமிழ் சாப்பாடு தான் சாப்பிட வீண்டும் என்பதுபோலும் ஏதோ முழு நாளும் அங்குதான் இருந்தனாங்கள் என்பதுபோலவும் கருத்துக்கள் .

இப்போது விளங்குகின்றது ஏன் போராடபோகாமல் நாட்டைவிட்டு ஓடிவந்தனீர்கள் என்று உங்களால் உங்களை சிறிதளவும் எதையும் ஒறுக்கமுடியாது.ஒருநாள் அவர்களுக்காக ஒதுக்கமுடியாமல் கொத்துரோட்டி ,ரோல்ஸ் பற்றி கதைப்பவர்களை நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

உங்கள் மனசாட்சிக்கே தெரியும் நீங்கள் செய்வது பிழை என்று ஆனால் அப்படியே வாழப்பழகிவிட்டீர்கள் மாறுவது கஷ்டம் .

சுபாசுக்கு மண்டபத்திற்கு போகும் போது இருந்த உணர்வுதான் எல்லோருக்கும் கட்டாயம் இருந்திருக்கிருக்கும் .சிலருக்கு அப்படி இருந்திராது ஏனெனில் அவர்கள் மனிதர்களே இல்லை .

"குறிப்பிட்ட படம் எடுத்ததற்கு எனக்கு எந்த நோக்கமும் இல்லை...எந்த தேவையும் இருக்கவில்லை..நான் எந்த புலத்து அரசியல் சில்லெடுப்புகளிலும் சிக்குவதும் இல்லை..எனது சுயத்தை நான் இளக்க விரும்புவதும் இல்லை என்பதுதான் இதற்கான காரணம்...குறிப்பிட்ட படம் நான் எடுத்ததிற்கான காரணமும் அதை யாழில் போட்டதிற்கான காரணமும் எனக்கு கொத்துரொட்டிவியாபாரம் மாவீரர்மண்டபத்தின் முன்னால் நிகழ்வதை பார்க்க அருவருப்பாக இருந்ததே..ஆனால் எனது படம் பல்வேறு அதிரவலைகளையும் பலர் தம் சொந்த அரசியல் செயல்பாட்டை கொண்டு செல்ல எடுப்பார்கள் என்பதையும் சற்றும் எதிர்பாக்கவில்லை"

இந்தவாக்கியம் தான் உண்மையிலும் உண்மை .

இது முற்றுமுழுதாக மக்கள் வருகையின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட எடுக்கும் ஒரு யுக்தியே தவிர வேறொன்றும் இல்லை .அமைதியாக ஆடம்பரமம் இல்லாமல் வந்து ஒரு விளக்கு கொழுத்திவிட்டு போங்கள் என்றால் சொந்தங்களை பறிகொடுதவர்களை விட ஒரு குருவியும் வராது .

சரி தமிழ் தெரிந்த நீங்கள் மேற்கூறிய பந்தியின் அர்த்தத்தை சொல்லுங்கோ பாப்பம்.

  • Replies 99
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் புலிகள் மீதுள்ள கடுப்பை கவிதையாக்கி இருக்கின்றார் அவளவு தான் எல்லோருக்கும் அது விளங்கியவுடன் இப்போ கருத்தை மாத்தப்பாகின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது முற்றுமுழுதாக மக்கள் வருகையின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட எடுக்கும் ஒரு யுக்தியே தவிர வேறொன்றும் இல்லை .அமைதியாக ஆடம்பரமம் இல்லாமல் வந்து ஒரு விளக்கு கொழுத்திவிட்டு போங்கள் என்றால் சொந்தங்களை பறிகொடுதவர்களை விட ஒரு குருவியும் வராது .

சரி தமிழ் தெரிந்த நீங்கள் மேற்கூறிய பந்தியின் அர்த்தத்தை சொல்லுங்கோ பாப்பம்.

schellack_schellackplatten.jpg அவர் ஒரு பழையதட்டு........நிண்ட இடத்திலையே நிண்டு சுத்துவார். :lol:

Edited by குமாரசாமி

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

என்இனமும் என்மண்ணும்

சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு

வடை றோலின் பெயரில்

வணக்க விழாவாவாம்

கூதல் குடிகொண்ட

புலம்பெயர் மண்ணில்

புலன் பெயர்ந்தவர்களால்

புலம்பெயர்க்கப்பட்ட

அந்நியம் தொட்டு

அருவருப்படைந்த

கார்த்திகைப்பூக்கள்

தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை

உங்களை வணங்குகின்றோம்

என்றபெயரில் களியாட்டா விழா

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும்

மொறுமொறுப்பாய் றோல்சும்

கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில்

இவைகளைப் பாராது

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ??

என்மண்ணில் உயிருடன் உலாவும்

கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி.........

அவள் வாழ்வும் அவள்

பிள்ளைகளும் நடுறோட்டில் ..........

சிங்களத்தின் கொட்டடியில்

பல கார்த்திகைபூக்கள் மனநிலை

பிறழ்ந்து கருகிப்போயின ........

இவர்களுக்கு வழிசொல்லி ,

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டி

வித்து மொறுமொறுப்பாக

றோல்சும் சாப்பிட என் கூதல்

நகரத்து மக்களுக்கு மனமில்லை

இவைகளைப்பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா??

கார்த்திகைப் பூக்களை மனதால்

வரித்தவன் உங்களைப் போல்

மௌனமாகி மனதால்

உங்களை வணங்கி செயலால்

காட்டுகின்றான் கொட்டமடிக்கும்

குள்ளநரிகள் மத்தியில்

அவன் பெற்ற பெயர் துரோகி !!!!!

இவைகளையும் பார்க்காமல்

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?????????

******** படங்கள் யாழில் இருந்து . நன்றி யாழ் இணையத்திற்கு .

யாழில் எழுதப்பட்ட மிகவும் மோசமான கவிதைகளில் முதலிடத்தைப் பெறுகின்றது கவிதை.

மாவீரர் தின நிகழ்வுகளின் வழக்கத்தை எதிர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு மாண்ட போராளிகளுக்கு மேல் காறித் துப்பி தங்கள் முகங்களை அழுக்காகிக் கொள்கின்றனர்.

அருச்சுனன் போன்றவர்கள் எதிர்ப்பது புலிகளையும் மாண்ட போராளிகளையும், அவர்களை நினைவில் நிறுத்தும் நிகழ்வுகளையும் அல்ல, அவர்களை தாங்கி நின்ற தாயகத்து மக்களின் விடுதலையை. இன்று மாற்றுக் கருத்து என்ற போர்வையில் நஞ்சு கக்கும் பலர் இந்த முறை மீண்டு எழும் மக்களின் உணர்ச்சிகளையும் அவர்கள் கொடுக்கும் புலிகளுக்கான ஆதரவையும் பொறுக்க முடியாமல் தொடர்ந்து தம் வலைத்தளங்களில் இவ்வாறு தான் எழுதுகின்றனர்.

மாற்றுக் கருத்து என்பது விடுதலையை அடைய நினைக்கும் வழி எது என்ற பொதுக் கருத்துக்கு பதிலாக இன்னொரு வழி முறையை பற்றி பகிர்வதும், அதனை விவாதிப்பதும் அதனூடாக விடுதலையை வென்றெடுக்க தங்களாலான பங்களிப்பை நல்குவது ஆகும்.

விடுதலையை, விடுதலை உணர்வை சிதைத்து போராடும் மக்களைக் காட்டிக் கொடுக்கும் கருத்துகள் எதுவும் மாற்றுக் கருத்துகள் ஆகாது.

கோமகன், அருச்சுனன் போன்றவர்கள் இந்த வகையைச் சேர்ந்த நச்சு மாற்றுக் கருத்தாளர்கள்.

இப்படியானவர்களின் கருத்துக்கு பதில் எழுதாமல் விடுவதே இவர்களை புறம் தள்ளுவதற்கான சிறந்த விடயம்.

நிலவு பதிலுக்கு குரைப்பதில்லை என்பதை புரிந்து கொண்டால் சரி.

Edited by பூச்சி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வேறு சாப்பாடு அதுவும் வேறு கடைகளில் வாங்கி சாப்பிடலாம், அது தவறில்லை என்று சொல்கிறீர்களா?

இதைதான் பாலா அண்ணா சொல்லுவார் விதண்டாவாதம் எண்டு :( பாலா அண்ணா வை தெரியுமோ

இதைதான் பாலா அண்ணா சொல்லுவார் விதண்டாவாதம் எண்டு :( பாலா அண்ணா வை தெரியுமோ

நீங்கள் எதுக்கு இப்ப சம்பந்தமில்லாமல் பாலா அண்ணாவை இந்த திரிக்குள் இழுக்கிறீர்கள்? அவரை இழுக்காமல் கேள்வி கேட்க முடியாதோ? அர்ஜுன் அண்ணாவின் கருத்தையும் என் கேள்வியையும் சரியா வாசியுங்கோ. வாசிக்காமல் சும்மா கேள்வி கேட்க வேணும் என்று கேட்க கூடாது.

schellack_schellackplatten.jpg அவர் ஒரு பழையதட்டு........நிண்ட இடத்திலையே நிண்டு சுத்துவார். :lol:

முடியவில்லை குமாரசாமி :lol:

வடை ரோல் கொத்து ரொட்டி விற்பதால் என்ன பிரச்சனை? :rolleyes:

இதில் எனக்கு 2 கருத்துகள் உள்ளன.

ஒன்று மாவீரர் நாளை நடத்துபவர்களே கொத்துரொட்டி கடை போடுவது கொஞ்சம் அநாகரிகம் போலவும் இருக்கு,..

அதே நேரம் தூரத்தில் இருந்து பிள்ளை குட்டியோடு வாறவைக்கு எட் ஹாவது பசிக்கும் போது வாங்கி கொடுப்பதுக்கு ஒரு கடை வேண்டும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர‌ர் தினம் அடுத்த வருட‌ம் கொண்டாட‌ காசு தேவை என்டால் அதை எடுத்துச் சொல்லி மண்ட‌பத்திற்குள்ளே ரிக்கெட் விக்கிறது.கொத்திரொட்டி வித்துத் தான் காசு வரோனும் என்டு இல்லை இப்படி நேர்மையாக சொல்லியும் காசு கேட்கலாம்.மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

,அகதி முகாம்களிலும்,வீடுகளில் இருந்து சிக்கி சீர‌ழியும் போராளிகளுக்கு என்ன செய்தனீங்கள்?...மாவீர‌ர் தினம் அனுஸ்டிக்கும் அதே வேளை உயிரோடு இருக்கும் போராளிகளுக்கும் ஏதோ செய்யுங்கோ அப்பத் தான் மாவீர‌ர் தினம் அனுஸ்டிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும் அதே வேளை செத்த போராளிகளது ஆத்மா சாந்தியடையும்,தலைவர் எம்மை நம்பி விட்டுப் போனதை செய்த பலன் இருக்கும்.

ம்..காசு கேட்டு ரிக்க‌ற் வித்த‌வ‌ன் பென்ஸ் காரில‌ அல்ல‌து பி.எம்.ட‌ப்லிவ் இல‌ வ‌ந்து இற‌ங்கினால் அதுக்குத் தான் அவ‌ன் ரிக்க‌ற் வித்தான் எண்டும் நீங்க‌ள் ஒரு இட‌த்தில‌ எழுதினீங்க‌ள் (ஒரு pay slip ஓட‌ கார் க‌ட‌ன் கிடைக்கிற‌ இந்த‌க் கால‌த்தில‌ பென்ஸ் வாங்கிற‌து க‌ஷ்ட‌ம் இல்லை எண்டு அப்ப‌ நான் ப‌தில் எழுதின‌தாக‌ நினைவு!) நிச்ச‌ய‌ம் கோம‌க‌ன் இதை விட‌க் கொதிக்க‌ வைக்கிற‌ க‌விதையை ரிக்க‌ற் வித்த‌துக்கு எழுதியிருப்பார்.

ஆனால் ஊரில‌ இருக்கிற‌ போராளிக‌ளுக்குக் கொடுக்க‌ வேணும் எண்ட‌து வ‌ரவேற்க‌ வேண்டிய‌ க‌ருத்துத் தான். அதுக்கும் கொத்து ரொட்டி வித்த‌துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் எண்டு என்ர‌ ம‌ர‌ம‌ண்டைக்கு விள‌ங்க‌ இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அர்யுன் அண்ணா,[/size]

[size=1][size=4]நீங்கள் போன இடத்தில் தண்ணி வேண்டினேன் அடித்தேன் இல்லை அந்த பார்டிக்கு போனேன் என எழுதும்பொழுது நாங்கள் கேட்பதில்லையே. " ஏன் அந்தப்பணத்தை நாடில் உள்ள வறியவர்களுக்கு கொடுத்தால் என்ன என?" அது நாகரீகம் இல்லை என்பது பெரும்பாலனவர்கள் கருத்து. [/size][/size]

[size=1][size=4]அதேபோல் இங்கே இசை கனேடிய சட்டம் பற்றி எழுதி இருந்தார். ரோப் போர்ட்டிற்கு என்ன நடந்தது என தெளிவாக புரிந்த [/size][size=4] நீங்கள் ஏனோ இதில் கண்ணை மூடி பொய்யிற்கு துணை போகிறீர்கள்.[/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

ஏன் கேட்க‌ இல்ல‌? ப‌ள்ளிக்கூட‌ ஒன்று கூட‌லுக்குப் போன‌ ப‌ட‌ங்க‌ளை யாழில் இணைத்த‌ போது கேட்டோமே? "த‌ண்ணியும் டான்சும் காட்டினால் தான் சில‌ பேர் வ‌ருவாங்க‌ள்" என்ற‌ ப‌திலை அர்ஜுன் சொன்னாரா அல்ல‌து ஏற்பாட்டாள‌ர்க‌ள் சொன்னதாக‌ அர்ஜுன் அறிக்கையிட்டாரா என‌ என‌க்கு நினைவில்லை. ஆனால் அது தான் ப‌தில். இப்ப‌ உட‌னேயே "பிளேட்டை" திருப்பிப் போடுவார்க‌ள்: " "ப‌ள்ளிக் கூட‌ ஒன்று கூட‌லும் மாவீர‌ர் நிக‌ழ்வும் ஒன்றா? உண்மையாக‌ உண‌ர்வுள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் இல்லாத‌தால் தானே குறுன‌ல் போட்டு அழைக்க‌ வேண்டியிருக்கு!" என்பார்க‌ள். திரும்பியும் முத‌ல் ச‌துர‌த்திலேயே வ‌ந்து நிற்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம கும்ஸ் தாத்த்ஸ் ஒரு வரில சொல்லிட்டாரே அவர் ஒரு பழைய தட்டு எண்டு இத விட அழகா யாராலையும் கூற முடியா

  • கருத்துக்கள உறவுகள்

;85 replies

1,979 views

இரு நாட்களில் 2000 பார்வையாளர்களை பெறும் வகையில் கவிதை வடித்த கோமகனுக்கு வாழ்த்துக்கள்....

பழமொழி: அவன் இன்றி அணுவும் அசையாது

புதுமொழி:புலி இன்றி எவனும் அசையான்

எவன்( அரசியல்வாதி,கவிஞன்,எழுத்தாளன்,கிறுக்கன்,குடும்பஸ்தன்,தண்ணிச்சாமி,கருத்தாளன்,)</p>

Edited by putthan

நம்ம கும்ஸ் தாத்த்ஸ் ஒரு வரில சொல்லிட்டாரே அவர் ஒரு பழைய தட்டு எண்டு இத விட அழகா யாராலையும் கூற முடியா

உண்மை என்பது எப்பவும் ஒரே மாதிரி இருப்பதால் அது சிலருக்கு அது உடைந்த ரெக்கோட் தான் ,பொய்கள் பல வர்ணத்தில் வெவ்வேறு கோணங்களில் வருவதால் கேட்க நன்றாகதான் இருக்கும்.இழவு வீட்டிற்கு மனுஷன் துக்கம் விசாரிக்கத்தான் போவான் இன்றுதான் தெரியும் சிலர் சாப்பிடவும் போகின்றார்கள் என்று .

பூச்சி ,பூரான்,பாம்பு எல்லாம் நேரத்திற்கு நேரம் வந்து விரும்பியமாதிரி விஷம் கொட்ட முடியாது .

சாத்திரி இது பற்றி முதலில் ஒரு கதையே எழுதியிருந்தார் .மேலிடத்தில் வேறு கதைத்ததாக வேறு சொல்லியிருந்தார் .ஒரு மனநெருடல் அதில் இல்லாவிடில் ஏன் சாத்திரி இதை மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

சுபாஸ் தான் அங்கு போயிருந்த போது தனக்கு வந்த மனநிலையை பதிந்திருந்தார் .

ஏன் இவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது என்பதற்கு முதலில் யாராவது பதில் தாருங்கள் .

அதைவிட்டு ஒரு நல்ல சினிமா விமர்சனம் எழுதி இதில் சிலுக்கு டான்ஸ் தேவைஇல்லாமல் புகுத்திவிட்டார்கள் என எழுதினால் சிலுக்கு டான்சை மட்டும் தூக்கி வைத்து ஆடிக்கொண்டுநிற்கின்றீர்கள் .

எந்த கொம்பானவன் வந்து சரி என்றாலும் என்மனதிற்கு இப்படியான ஒரு நிகழ்வில் கொத்து ரோட்டி ,ரோல்ஸ் போன்றவை விற்பது ஏற்புடையாதாக இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு உண்மையில் ஒரே நோக்கமெனின் ஏன் நாம் வேல்லோரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்க வேண்டும்.எதோ அவர் எழுதிவிட்டார் நாமும் ஒருமுறை எழுதிவிட்டால் போதாதா ஏன் மீண்டும் மீண்டும் வந்து கொடுக்குகளால் குற்ற வேண்டும். நாம் எழுதுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றதே தோழர்களே :D :D

இரு நாட்களில் 2000 பார்வையாளர்களை பெறும் வகையில் கவிதை வடித்த கோமகனுக்கு வாழ்த்துக்கள்....

பழமொழி: அவன் இன்றி அணுவும் அசையாது

புதுமொழி:புலி இன்றி எவனும் அசையான்

எவன்( அரசியல்வாதி,கவிஞன்,எழுத்தாளன்,கிறுக்கன்,குடும்பஸ்தன்,தண்ணிச்சாமி,கருத்தாளன்,)</p>

[size=4]பொதுவாக இந்தக்களத்தில் தலைப்பு கவர்ச்சியாக போட்டால் அது வாசகர்களை கவரும். உதாரணத்திற்கு 'விடுதலைப்புலிகள்' 'பிரபாகரன்'. ஊர்ப்புதினத்தில் இணைக்கப்படும் செய்திகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. [/size]

[size=1][size=4]அதேபோல் சில எழுத்தாளர்கள் எழுதுவதை, முன்வைக்கும் ஆக்ககங்களை சில கருத்தாளர்கள் கண்ணும் கருத்தாக பார்ப்பதுண்டு, காரணம் அவை சர்ச்சைக்குரிய மாற்றுக்கருத்துக்களை கொண்டதாக இருக்கும். அதனால் அவைபற்றி கூடிய பார்வைகளும் பின்னூட்டங்களும் வைக்கப்படுகின்றன.[/size][/size]

[size=1][size=4]அவ்வளவும்தான். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்பது எப்பவும் ஒரே மாதிரி இருப்பதால் அது சிலருக்கு அது உடைந்த ரெக்கோட் தான் ,பொய்கள் பல வர்ணத்தில் வெவ்வேறு கோணங்களில் வருவதால் கேட்க நன்றாகதான் இருக்கும்.இழவு வீட்டிற்கு மனுஷன் துக்கம் விசாரிக்கத்தான் போவான் இன்றுதான் தெரியும் சிலர் சாப்பிடவும் போகின்றார்கள் என்று .

பூச்சி ,பூரான்,பாம்பு எல்லாம் நேரத்திற்கு நேரம் வந்து விரும்பியமாதிரி விஷம் கொட்ட முடியாது .

சாத்திரி இது பற்றி முதலில் ஒரு கதையே எழுதியிருந்தார் .மேலிடத்தில் வேறு கதைத்ததாக வேறு சொல்லியிருந்தார் .ஒரு மனநெருடல் அதில் இல்லாவிடில் ஏன் சாத்திரி இதை மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

சுபாஸ் தான் அங்கு போயிருந்த போது தனக்கு வந்த மனநிலையை பதிந்திருந்தார் .

ஏன் இவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது என்பதற்கு முதலில் யாராவது பதில் தாருங்கள் .

அதைவிட்டு ஒரு நல்ல சினிமா விமர்சனம் எழுதி இதில் சிலுக்கு டான்ஸ் தேவைஇல்லாமல் புகுத்திவிட்டார்கள் என எழுதினால் சிலுக்கு டான்சை மட்டும் தூக்கி வைத்து ஆடிக்கொண்டுநிற்கின்றீர்கள் .

எந்த கொம்பானவன் வந்து சரி என்றாலும் என்மனதிற்கு இப்படியான ஒரு நிகழ்வில் கொத்து ரோட்டி ,ரோல்ஸ் போன்றவை விற்பது ஏற்புடையாதாக இல்லை

விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்ட எந்த நிகழ்வும் எந்தக்கொம்பன் வந்து சொன்னாலும் அது உங்கள் மனதிற்கு ஏற்ப்புடையாகது என்பது எமக்குத்தெரியும் அதை நாங்கள் ஏற்க்கசொல்லியும் உங்களை வர்ப்புருத்தப்போரதில்லை ஏன் என்றால் உங்கள் அரசியல் பதை வேறு வெள்ளிப்படையாக கூறிவிட்டு களமாடும் ஒரு உறவு நீங்கள் ஆனல் இவர்கள் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு விஷம் கக்குபவர்கள்

  • தொடங்கியவர்

சும்மா இருந்த எனக்கு " மாற்றுக்கருத்தாளர் " எண்ட புது பதவியை தந்திருக்கினம் யாழ் இணைய கள உறவுகள் :o . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை :lol: . மாற்றுக்கருத்தாளர் பதவி எண்டால் என்ன ?? எனக்கு ஒரு நாசமறுப்பும் விளங்கேலை :icon_mrgreen::D . ஆராவது உதவி செய்யுங்கோப்பா . கோடி புண்ணியம் கிடைக்கும் :) :) .

உண்மைதானை அண்ணை.இப்ப உட்காந்து இருந்துகொண்டு மாற்றுக்கருத்து சொல்லிறதே உங்களைமாதிரி சிலருக்கு styleஆய்ப் போச்சு.ஒரு கல்லுதூக்கி போராட்டக் கிணத்துக்கை போட்டிருப்பியளோ? எண்டாலும் தமிழ் இலக்கிய உலகில தவிர்க்க முடியாமல் நீங்களும் ஒரு பெரிய ஆளாய் வந்துகொண்டிருக்கிறியள் எண்டது மட்டும் உண்மை. :( :( :(

மச்சி, நான் சொல்ல வந்ததை அப்படியே நீங்கள் சொல்லி விட்டீர்கள். :D

சும்மா இருந்த எனக்கு " மாற்றுக்கருத்தாளர் " எண்ட புது பதவியை தந்திருக்கினம் யாழ் இணைய கள உறவுகள் :o . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை :lol: . மாற்றுக்கருத்தாளர் பதவி எண்டால் என்ன ?? எனக்கு ஒரு நாசமறுப்பும் விளங்கேலை :icon_mrgreen::D . ஆராவது உதவி செய்யுங்கோப்பா . கோடி புண்ணியம் கிடைக்கும் :) :) .

மாற்று கருத்தாளர் என்பது பதவி இல்லை பாருங்கோ..... :lol: எப்ப பாரு பணம், புகழ், பதவி பற்றியே உங்களுக்கு நினைப்பா போச்சு.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதைக்கு எதிராக கருத்து எழுதியவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கொத்துரொட்டி சாப்பிடத்[சாப்பிடவும்] தான மாவீரர் தினத்திற்கு போகின்றோம் என சொல்லியுள்ளார்கள்...இதிலிருந்து உண்மையாகவே யார் மாவீரர் தினத்தை அவமதிக்கின்றனர் எனத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குது...நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

உண்மைதானை அண்ணை.இப்ப உட்காந்து இருந்துகொண்டு மாற்றுக்கருத்து சொல்லிறதே உங்களைமாதிரி சிலருக்கு styleஆய்ப் போச்சு.ஒரு கல்லுதூக்கி போராட்டக் கிணத்துக்கை போட்டிருப்பியளோ? எண்டாலும் தமிழ் இலக்கிய உலகில தவிர்க்க முடியாமல் நீங்களும் ஒரு பெரிய ஆளாய் வந்துகொண்டிருக்கிறியள் எண்டது மட்டும் உண்மை. :( :( :(

வண்டு முருகா உங்களை நான் மதிக்கிறன் . இருந்துகொண்டு கருத்து சொல்லுறனோ அல்லது நிண்டு கொண்டு கருத்து சொல்லுறனோ எண்டிறது முக்கியமில்லை . என்ரை கருத்தாலை இந்த சமூகத்துக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கோ எண்டுதான் பார்க்கவேணும். உங்களைப் போலை வெட்டியாக பேசுவதை விட , சமூகத்தின் சிந்தனையை தூண்டும் வகையில் கவிதை வடிப்பது நல்லது எண்டு நினைக்கிறன் .

இந்தக் கவிதைக்கு எதிராக கருத்து எழுதியவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கொத்துரொட்டி சாப்பிடத்[சாப்பிடவும்] தான மாவீரர் தினத்திற்கு போகின்றோம் என சொல்லியுள்ளார்கள்...இதிலிருந்து உண்மையாகவே யார் மாவீரர் தினத்தை அவமதிக்கின்றனர் எனத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குது...நன்றி வணக்கம்

இங்கு எவருமே கொத்து ரொட்டி சாப்பிட தான் மாவீரர் தினத்துக்கு போன என்று சொல்லவில்லை. ஆனால் மாவீரர் தினத்திற்கு சென்றவர்கள் மாவீரரை வணங்கிய பின் கொத்துரொட்டி சாப்பிட்டிருந்தால் அதை தவறு என்று சொல்ல முடியாது என்று தான் கூறியுள்ளனர்.

உதாரணமாக நானும் மாவீரர் தினத்துக்கு போனனான். போகும் போது அவர்கள் கொத்து ரொட்டியோ அல்லது வேறு உணவு விற்பார்கள் என்றும் தெரியாது, கொத்து ரொட்டி சாப்பிடலாம் என்று நினைத்தும் போகவில்லை. கொத்து ரொட்டி சாப்பிடவும் இல்லை. அங்கு என்னென்ன விற்றார்கள் என்றும் தெரியாது.

போய் மாவீரரை வணங்கி விட்டு நிகழ்வுகளை பார்த்து கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலத்தின் பின் இருட்டியும் விட்டதால் வீடு செல்ல வெளிக்கிட்டேன். விடியவிலிருந்து எதுவும் சாப்பிடாமல் தான் போனனான். எனக்கும் அந்த நேரம் பசித்தது. ஆனால் வெளியே வரும் போது ஒரே மழை பெய்தபடி இருந்தது. அதனால் எதுவும் வாங்கவும் இல்லை. வீட்ட போவம் என்று நினைத்தன். மழை பெய்யாமல் விட்டிருந்தால் சிலவேளை நானும் ஏதும் வாங்கி சாப்பிட்டும் இருப்பன்.

அதற்காக நான் கொத்துரொட்டி சாப்பிடேல்லை என்பதற்காக பசியால் சாப்பிட்டவர்களை குறை சொல்ல எனக்கு தோணவில்லை.

மாவீர் தினத்துக்கு சென்றவர்கள் கொத்துரொட்டி சாப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள் எல்லாரும் அன்றைய தினம் முழுக்க வீட்டிலோ வெளியிடத்திலோ சாப்பிடாமல் உபவாசமா இருந்தீர்கள்?

  • தொடங்கியவர்

உண்மைதானை அண்ணை.இப்ப உட்காந்து இருந்துகொண்டு மாற்றுக்கருத்து சொல்லிறதே உங்களைமாதிரி சிலருக்கு styleஆய்ப் போச்சு.ஒரு கல்லுதூக்கி போராட்டக் கிணத்துக்கை போட்டிருப்பியளோ? எண்டாலும் தமிழ் இலக்கிய உலகில தவிர்க்க முடியாமல் நீங்களும் ஒரு பெரிய ஆளாய் வந்துகொண்டிருக்கிறியள் எண்டது மட்டும் உண்மை. :( :( :(

நான் கிணத்துக்கையோ இல்லை ஆத்துக்கையோ கல்லை போட்டனான் எண்டு நீங்கள் புத்துக்கை இருந்துகொண்டு சாத்திரம் சொல்லாதையுங்கோ வண்டுமுருகன் .

உண்மைதானை அண்ணை.இப்ப உட்காந்து இருந்துகொண்டு மாற்றுக்கருத்து சொல்லிறதே உங்களைமாதிரி சிலருக்கு styleஆய்ப் போச்சு.ஒரு கல்லுதூக்கி போராட்டக் கிணத்துக்கை போட்டிருப்பியளோ? எண்டாலும் தமிழ் இலக்கிய உலகில தவிர்க்க முடியாமல் நீங்களும் ஒரு பெரிய ஆளாய் வந்துகொண்டிருக்கிறியள் எண்டது மட்டும் உண்மை. :( :( :(

உங்களுக்கு தெரிஞ்ச இந்த உண்மையை ஒத்துகொண்டதற்கு நன்றி வண்டுமுருகா :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111732

இந்த கவிதையில் எழுதியதை விடவா கேவலமான வார்த்தைகள் கோமகன் அண்ணாவால் எழுதப்பட்டுள்ளது?

சிலர் தமது தனிப்பட்ட கோவங்களைக்காட்டவே எழுதுகிறார்களோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது. :(

http://www.yarl.com/...howtopic=111732

இந்த கவிதையில் எழுதியதை விடவா கேவலமான வார்த்தைகள் கோமகன் அண்ணாவால் எழுதப்பட்டுள்ளது?

சிலர் தமது தனிப்பட்ட கோவங்களைக்காட்டவே எழுதுகிறார்களோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது. :(

இதில் எதிர்கருத்து எழுதியவர்கள் எல்லாருக்கும் கோமகன் அண்ணா மேல் தனிப்பட்ட கோபம் இருக்கா? எனக்கு தெரியாமல் போச்சே... அப்ப ஆதரவா கதைப்பவர்கள் எல்லாரும் கோமகன் அண்ணா மேல் கொண்ட நட்பினால் கதைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

அந்த திரியில் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளன தானே... பிறகு எதற்கு இந்த திரியில் அந்த இணைப்பை தருகிறீர்கள். அப்படியானால் நெடுக்ஸ் அண்ணா மேல் தனிப்பட்ட கோபதாபம் உங்களுக்கு இருப்பதாக எடுத்துக்கொள்வதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.