Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் கருத்தென்ன..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்...
 
பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா?  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்துக்கள் என்னவாக இருக்கிறது..?(இது குறித்து ஒரு வானொலி விவாதம் இடம்பெறுகிறது புலம்பெயர் வானொலி ஒன்றில்..)
 
 
சம்பந்தப்பட்ட செய்திகள்...
 
 

 

 

அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு
  • TUESDAY, 04 DECEMBER 2012 04:31
  • SYDNEY
  • HITS: 6
  • emailButton.png
  • printButton.png
  • pdf_button.png

tna.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவசர சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதற்கான அழைப்பு நேற்று திங்கட்கிழமை கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ளது.

இடையில் நின்று போயிருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுத்து வரும் ஒரு சூழ்நிலையில், அரசியல் தீர்வுப் பேச்சுகளை உடனடியாக முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது சில யோசனைகளை முன்வைக்கும் சாத்தியம் இருப்பதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதம நீதியரசர் விவகாரத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசு நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினைத் தீர்விலும் இழுத்தடிப்பைச் செய்யாமல் முன்னோக்கிச் செல்ல உத்தேசித்து ஜனாதிபதி இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று அரச தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

அதேவேளை யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று யாழில் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்தை குழப்புகின்ற நோக்குடனேயே இந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்திருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகப் பதில் எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கொழும்பில் இல்லாத காரணத்தினால் அவர்கள் கொழும்பு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுமெனத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=5859:2012-12-04-04-33-04&catid=1:latest-news&Itemid=18

 

 

 

 

 

 

 

ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை
  • TUESDAY, 04 DECEMBER 2012 16:03
  • SYDNEY
  • HITS: 14
  • emailButton.png
  • printButton.png
  • pdf_button.png

tna.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கடந்த 2ம் திகதி அழைப்பு விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் நடைபெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வேறு திகதியில் பேச்சுவார்த்தைகளை நடாத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அடுத்த வாரமளவில் வேறும் ஓர் தினத்தில் இந்த சந்திப்பினை நடாத்த ஏற்பாடு செய்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=5867:2012-12-04-16-07-40&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரம் என்ற, எலிப்பொறியில் 'தமிழர் கூட்டணி' என்ற எலி ஒவ்வொரு தடவையும் மாட்டுப்பட்டுக் கொள்வதே, அதன் வரலாறு!

 

ஒவ்வொரு தடவையும், தப்பித்து வரும்போது, அந்த எலி, மேலும் மெலிந்து போன படியே வெளியே வருகின்றது!

 

இந்த எலியை, அழைத்துக்கொண்டு போய்ப் பொறியில் விடும், மற்ற எலிகள், கொழுத்துக் கொண்டே போகின்றன!

 

பொறுத்திருந்து பார்ப்போம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

பேசி எந்த பலனும் இல்லை என்றாலும் கூட சிங்களத்தின் மெத்தன போக்கை சர்வதேசம் முன் காட்ட இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளலாம்

மற்றது தமிழர் தரப்பு எப்பொழுதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக தான் உள்ளது என்பதனையும் இதில் கலந்து கொண்டு உலகிற்கு உணர்த்தலாம்

ஆனாலும் தொடர்ந்தும் அர்த்தமற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு tea உம் வடையும் சாப்பிட்டு வருவதை விட ஒரு சர்வதேசத்தின் நடுநிலைமையுடன் பேச்சுவார்த்தைக்கு போவதும் பலனைத்தரும்.........

பழைய பேச்சுவார்த்தை வரலாறுகளுடன் மலை அண்ணாவை மேடைக்கு அலைகின்றோம்

அதாவது தந்தை செல்வாவில் இருந்து சம்மந்தன் வரையான வரலாறுகளுடன் ஓடிவரவும் சுண்டலை நாடி வரவும்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பை பற்றி என்ன கருத்து சொல்ல இருக்கு? அரை நூற்றாண்டு காலமாய் அரைச்சமாவையே இரண்டுபகுதியும் அரைச்சுக்கொண்டு இருக்கினம்......இடையிலை இருக்கிற சனம் தான் அழிஞ்சுகொண்டிருக்கு.....

அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்...

 
பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா?  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்துக்கள் என்னவாக இருக்கிறது..?(இது குறித்து ஒரு வானொலி விவாதம் இடம்பெறுகிறது புலம்பெயர் வானொலி ஒன்றில்..)
 
சம்பந்தப்பட்ட செய்திகள்...
 

 

எவ்வாறு தமிழர் பிரச்னையை தீர்க்க மகிந்தர் வாருங்கள் என அழைக்கின்றார்? ஒரு தேசிய குழுவின் ஊடாக. (இன்று பிரதம  நீதியரசரே அவ்வாறான ஒரு குழுவில் நம்பிக்கை இல்லை என வெளிநடப்பு செய்தார்).

 

 

அது சாத்தியமா? இல்லை இன்னுமொரு இழுத்தடிப்பு நாடகாமா?

 

கூட்டமைப்பு  "தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வை முன் வையுங்கள்" என கேட்பதற்கு அதன் முன்னால் உள்ள பலம் பலவீனங்கள் என்ன?

 

  • கூட்டமைப்பை புதுடெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
  • தாயக மக்கள் பலத்த இராணுவ கட்டுப்பாட்டிற்குள்ளும், புலனாய்வுக்கும் இடையில் உள்ளனர்.
  • ஒட்டுக்குழுக்கள் தமது பண பலத்தையும் இராணுவ ஆதரவையும் கொண்டு அழுத்தம் தருகிறார்கள்.
  • அதேவேளை புலம்பெயர் மக்கள் நிதி உதவி உட்பட பெரிதாக உதவுவதில்லை. அதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் பலமான பாலம் இல்லை.

 

சிங்களத்தின் தேவை அரசியல் தீர்வை எக்காரணம்  கொண்டும் முன்வைப்பதில்லை.

  • மகிந்த இரண்டில் மூன்று பலத்தை கொண்டிருப்பதால் உண்மையாக தீர்க்க முடியும் என்பது யாவரும் அறிந்த உண்மை.
  • காலத்தை இழுத்தடித்து வடக்கிலும் தமிழர்களை சிறுபான்மை ஆக்குவது.

 

 

 

எனவே ஒரு தீர்வானது சர்வதேச அழுத்தம் மூலம் மட்டுமே சாத்தியம். அதுவும் மகிந்த ஆட்சியில் உள்ள காலத்தில் நடக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டுமாயின் தனியாக பிரிந்து செல்வதால் மட்டுமே சாத்தியமாகும்.கூட்டமைப்பு தமிழ் ஈழம் பற்றி பேச மாட்டோம் என சத்தியபிரமாணம் எடுத்தபடியால் அது சாத்தியமாகாது.(சிங்களம் எதுவுமே தமிழர்களுக்கு தராது என்பது வேறு விடயம்)

 

"அழுதாலும் அவள் தான் பெற வேண்டும்" என்பது போல் தீர்வு எதுவாயினும் சிங்கள அரசிடம் இருந்து தான் பெற வேண்டும் என்பதால் அவர்களிடம் நேரடியாக மிக அவதானமாக பேசுவது தான் நல்லது.

 

தமிழர் வரலாற்றில் பல நடுநிலையாளர்களை கண்டுள்ளது.கடைசியில் காலைவாரிய வரலாறுகள் தான் தமிழர்களுக்கு  ஏனைய நாடுகளின் மத்தியஸ்த்தால் கிடைத்தது.

 

கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு போனவுடன் வடக்கு கிழக்கை இணை என தொடங்காமல் அதனிலும் சிறிய தமிழர்களுக்கு உள்ள பல பிரச்சனைகளில் ஒன்றை எடுத்து அதனை பற்றி அரசுடன் பேசி அதற்கான தீர்வை அரசிடம் இருந்து பெற்று அதன் மூலம் அரசின் மீது நம்பிக்கையையை ஏற்படுத்தும் படி அரசிடம் கேட்கலாம்.இதன் மூலம் இருபகுதியினருக்கும் ஒரு நம்பிக்கையை வளர்க்கலாம்.

 

அதே நேரம் மேற்கு நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்தக்கூடாது.

 

பேச்சுவார்த்தையில் முன்பும் பின்னும் மக்களின் அபிப்பிராயங்களை கூட்டமைப்பு கேட்க தவறக்கூடாது.இரகசியமாக பேச்சுவார்த்தை முடிவுகளை வைப்பதால் மக்களின் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கை குறையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஷ் சரியான நேரத்தில் ஒரு விவாத மேடையை உருகாக்க முனைகிறீர்கள்.நல்ல விஷயம்.இங்கே மிகவும் படித்த விஷயம் தெரிந்தவர்கள் பேசுவதே நல்லது என்பது என் கருத்து.அதனால் கருத்தாட விரும்பவில்லை.ஆனாலும் தமிழர்களின் எதிரிகள் இப்போது மிகவும் புத்திசாலிகள் என நினைக்கிறேன்.அவர்கள் பேச அழைக்கும் ஒவ்வொரு தரமும் தோற்ற வரலாறே எமது.அதனால் இப்பொழுது பேசப் போவது நன்றாக இருக்காது என்பதே என் எண்ணம்.

 " தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்துக்கள் என்னவாக இருக்கிறது..?" என்ற சொற்தொடரைப் பாவிக்கும்போது அது சில ஊகங்களை தூண்டுகிறது. அதாவது  இதில் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விட்டதாகவும் அதற்கு கூட்டமைப்பு போகவில்லை என்பது போலவும் பொருள் பிறக்கிறது. ஆனால் பல விடயங்களுக்கு மத்தியில் மகித்தா அவசரமாக பேச கூப்பிட்டார். அந்த பேச்சுவார்த்தை எதற்கு என்று எங்கும் சொல்லியில்லை. 

 

தீர்வு திட்ட பேச்சுவார்த்தை மகிந்தாவுடன் இடம் பெறவில்லை. அது SLFP க்கும் TNA க்கும் இடையில் நடைபெற்றது. அது எதிர்பாராத நீண்டகாலமாக இழுபட்டது. அதில் தீர்வின் தொடக்கப் படிகள் பற்றி பேசப்பட்டன.  சில பக்கத்து புள்ளிகள் மாதிரி "அடைக்கபட்டோரின் விபரங்கள், உறவினர், சட்டதுறை வல்லுனர்கள் சந்திக்க அனுமதி" போன்றவையும் பற்றி பேசப்பட்டது. இவற்றில் எழுப்பட்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க சம்மதம் தெரிவித்தது. ஆனால் பேச்சுவார்த்தை இறுகத்தொடங்க, அரசு தெரிவுக் குழு என்று கதையை மாற்றிவிட்டது. இதனால் எந்த கேள்விக்கும்(உ+ம்: கைதுசெய்யப்பட்டோரின் பெயர்கள் போன்றவற்றுக்குகூட )பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டது. ஆனல் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பின் நிலையை ஏற்கனவே அமெரிக்காவும்  இப்போது இந்தியாவும் ஆதரிக்கிறது போலுள்ளது.

 

மகிந்தா கடைசித்தடவை இந்தியா போகமுன் கூட்டமைப்பை மடக்க முயன்றார். சம்பந்தரை மட்டும் தனிய அழைத்தார். இதனால் கூட்டமைபுக்குள் முறுகல் கூடியது. அவர் இந்தியா போய் கூட்டமைப்பை விலங்கிட்டு பிடிக்க மன்மோகன்,கிருஸ்ணா போன்றோரின் உதவி நாடினார். பெரிய பலன் கிடைக்கவில்லை.   

 

அண்மையில் ஒரு பெண் இந்திய அதிகாரி வந்தபோது தனக்கும், சம்பந்தருக்கும் தனிபட்ட உறவுகள் இருப்பது போல காட்ட இடையில் புகுந்து படம் எடுத்தார். வரவு சேலவு திட்டத்தின் பொது கூட்டமைப்பினரிடம் தான் விரைவில் அவர்களுடன் பேசுவேன் என்றார்.

 

ஆனால் சம்பந்தர் அண்மையில் இரண்டு பிரச்சனைகளை எழுப்பியிருந்தார். சிராணியின் தெரிவுக்குழு; மாணவர் கைது. இந்த பிரச்சனைகளை சம்பந்தர் எழுப்பிய போது மகிந்தா தீடீரென அழைத்தார். இந்த மாதிரி அழைப்புகளை மகிந்தா உபயோகப்படுத்துவது, "மாடுகளின் காதுக்குள் இரகசியம் சொல்வது மாதிரி நடித்த சிங்கத்தின் கதை" போன்றதே.

 

அழைப்பு விடுக்கப்பட்ட நேரம் கூட்டமைபினரில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் தேசிய முன்னணியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தேசிய முன்னணியும் கூட்டமைப்பும் எதிலும் சேர முடியவில்லை. ஆனால் சிங்களகட்சிகளின் பிரதிநிகள் மனோ கனேசன் எல்லோரும் இதில் பங்கு பற்றினார்கள். இவர்கள் எல்லோரிடமிருந்து கூட்டமைப்பை பிரித்து ஆர்ப்பாட்டத்தை தோல்வியுறச்செய்ய விடுக்கப்பட்ட அழைபுத்தான் அவசர பேச்சுவார்த்தைக்கான அழைப்பு.

 

அரசு பேசத் தயாரானால் மகிந்தா அதில் இனி தலைத் போடக்கூடாது, பழைய குழு திரும்ப வந்து, தெளிவாக நாள் ஒன்றை ஊடகங்களுக்கெல்லாம் அறிவித்து,  விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்க வேண்டும். பேச்சுவார்தை என்பது தெலிபோனில் டாக்சியை கூப்பிடுவது போல இருக்கக்கூடாது.

 

  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு பேச்சு வார்த்தைக்கு போனாலும் சிங்கள் அரசு ஏமாத்தத் தான் போகுது
 

 

 

 

அண்மையில் ஒரு பெண் இந்திய அதிகாரி வந்தபோது தனக்கும், சம்பந்தருக்கும் தனிபட்ட உறவுகள் இருப்பது போல காட்ட இடையில் புகுந்து படம் எடுத்தார். 

 

அதென்ன உறவப்பா? ஏதாவது அப்பிடி இபிடி வில்லங்கமாய் இல்லைதான? :D

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஆதரவை நாடிநிற்க்கும் நிலையில் ஜெனீவா பேச்சுகளின்போது போராளிககள்  எடுத்த நிலைபாட்டை கூட்டமைப்பு எடுக்க முடியுமா?   என்பதுதான் எமக்கு முன் உள்ள கேள்வி.

பதில்.

இல்லை. நிச்சயமாக முடியாது என்பதுதான்.

 

. ஆனால் சர்வதேச நிர்பந்தத்தால் பேசப்போனால் நாம்

1. அரைக் கிணறு தாண்ட முடியாது

2. ஆனால் நமகொரு வாய்ப்புள்ளது. முன்னர் அரசு போராளிகளைப் provoke பண்ணியதுபோல இம் முறை நாம்  அரசை  provoke பண்ணி அவர்களை சர்வதேசத்துடன் பகைக்க வைக்கலாம். வைக்க வேண்டும்.

 

சர்வதேச விருப்பப்படி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்கும் அதே சமயம் அரசின்மீது சர்வதேசம் முன்வைக்கும் நாம் போர்க்குற்றச்சாட்டை  விசாரிக்கும்படி  தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.

 

சம்பந்தர் அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ரு சொல்வதைவ்டவும்  அழுத்தமாக போர்க்குற்ற விசாரனைகள் பற்றி பேசவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பல்கலைக் களக மானவர் பிரச்சினைபோன்ற பிரச்சினைகளைச் சர்வதேச மயப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அவை  இத்தகைய அனுகுமுறை நமக்கு நிறைய சர்வதேச இராசதந்திர வெளியை உருவாக்கும். மேலும் சர்வதேச வரம்புகளை மீறாமல் அரசை provoke பண்ணுவதாகவும் இருக்கும்..

 

இட்தோடு பின்வரும் எனது கருத்தையும் வாசிக்கவும்.

 

எல்லா வழியிலும் தோற்றுப்போனோம். மண் பறிபோகிறது. தேர்தலில் போட்டி ஏற்ப்பட்டதால் திருமலையில் எங்கள் பிரதிநிதித்துவம் ஒன்றாக குறுகிவிட்டது. அதுவும் மயிரிழையில்.

இத்தகைய நெருக்கடிகளையும் தாண்டி நாம் போராடுவதற்காவது நாம் சர்வதேச சூழலைப் பயன்படுத்திக்நம் மண்ணில் கொஞ்சமாவது நிமிரவேண்டும். சர்வதேசத்தின் உதவியை கைநழுவ விட்டால் அது இனி என்றுமே சாத்தியமில்லை. இப்போ கொஞ்சமாவது நிமிராவிட்டால் நமக்கு என்றுமே மீட்ச்சி இல்லை.


நமது போராளி அமைப்பு தோற்கட்க்கப் பட்டது இந்த நூற்றாண்டின் பெரும் துயரம். சர்வதேசம் தடை போர்குற்றச்சாட்டு என்று சர்வதேச ரீதியாக அவர்களது காலக் கட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள். ஆனாலும் நாம் நமது இனம் இதனை எல்லாம் கடந்து சாத்தியமான விடுதலையை நோக்கிச் முன் செல்லவேண்டும். .

நமது போராளிகள் அமைப்பு சர்வதேசத்தால் தடை பண்ணப் பட்டுள்ளது. சர்வதேசம் எதிரிகள்மீது மட்டுமன்றி அவர்கள்மீதும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளனர். இது சர்வதேசத்தால் நிராகரிக்கப் பட்ட குர்திஸ்கட்சியான PKK நிலமையைவிட சிக்கலான நிலமையாகும்.
இந்த நிலையில் நாம் அவர்களைக் தற்காலிகமாகவேனும் கடந்து சென்றால் மட்டுமே சர்வதேசத்தின் தயவைப் பெற முடியும். சர்வதேசம் பேசு பார்க்கலாம் என்றால் ஜெனீவாவில் போராளிகள் எடுத்த நிலையை எடுத்து சர்வதேசத்துடன் பகைத்து தனிமைப் பட முடியாது. ஆனால் இராசதந்திர ரீதியாக எதிரியை சர்வதேசத்துடன் முரண்பட வைத்துத் தனிமைப் படுத்த முடியும்.சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்று சற்றேனும் பலப்பட முடியும்.

இன்றைய சூழலில் சர்வதேசத்துடன் இணங்கிச் சற்றேனும் பலப்படாமல் எமக்கு எதிர்காலமில்லை. 
நாம் சர்வதேசத்தின் அனுசரனையைப் பெறுகிற நோக்கத்தோடு கடந்த காலத்தைக் தாண்டிச் செல்லவேண்டிய தருணமிது.

சர்வதேசம் புலத்திலும் களத்திலும் சிலரை போர்குற்றவாளிகளின் ஆதரவாளர்களாக அடையாளப் படுத்தியுள்ளது. அவர்கள் spoilers ஆகவே பார்க்கப் படுகின்றனர்.இதனை உள்வாங்காமல் சம்பந்தர் சர்வதேச ஆதரவை நாடி அரசியல் செய்ய முடியாது. 

அரசு வன்னியில் கைபற்றிய உள்நாட்டு வெளிநாட்டு ஆவணங்களை எதிர்கால விசாரனைகளில் முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய ஆவணங்களே போர்குற்றத்தில் இருந்து தப்பிக்கும்வகையில் - கைதாகி கேக்கிற்க்கு அல்லது டெல்கிக்குக் கொண்டு போகப்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மலேசியாவில் சிலரை அரசின் கால்களில் விழ வைத்துள்ளது என தோன்றுகிறது.

இன்றைய நிலையில் சம்பந்தரைப் பலப்படுத்துவது தவிர நமக்கு வேறு வழியில்லை. அரசு விரும்புகிறமாதிரி நெருக்கடி ஏற்பட்டால் சம்பந்தரை எதிர்ப்பவர்கலைக்கூட சம்பந்தரால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.

சர்வதேச ஆதரவை பெறும் கடைசி முயற்ச்சியில் சம்பந்தர் சரவதேசம் எதிர்பார்க்கும் மொழியில் பேசவும் சர்வதேசம் எதிர்க்கும் அமைப்புகளை நிராகரிக்கவும் வேண்டிய நேரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேணும். புலம்பெயர்ந்தநாம் விடுதலையாகவே உள்ளோம். விடுதலை களத்தில் அடிமைப் பட்டுள்ள நம் மக்களுக்கானது.இன்னுமொரு தோல்வி அவர்களது கனவுள் எல்லாவற்றுக்கும் சமாதி கட்டிவிடும்.

தற்காலிகமாகவேனும் களத்தில் நம்மக்களால் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசம் அங்கீகரித்த தலைமையின் பின்னே அணிதிரழ்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது..

Edited by poet

மேற்குலக மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குப் போவதுதான் நல்லது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

பேச்சுவார்த்தை மேசையில் குழப்பங்களை உருவாக்கி காலத்தைப் போக்கடிப்பது சிங்களத்திற்கு கைவந்த கலை. பிராந்திய வல்லரசுகளும் தங்கள் நலனிற்காய் தமிழர்களை அடகு வைத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விவாத திரி, பார்ப்போம் எல்லோரின் கருத்துகளையும் 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமும் பேச்சுவார்த்தைக்குப் போய் எதைக் கண்டோம் என்று புரியவில்லை. பேச்சுவார்த்தைகளைச் சிங்களம் தூசுக்குத்தன்னும் மதிப்பதில்லை என்று தெளிவாகிவிட்ட நிலையிலேயே ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அந்த ஆயுதப் போராட்டமும் சர்வதேச ஆதரவுடன் அழிக்கப்பட்டாயிற்று. இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை. இதனால் நடக்கப்போவது எதுவுமில்லை. இதுவரை காலமும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து எப்படித் தனது இனவழிப்பைச் சிங்களம் மேற்கொண்டதோ அதையேதான் இப்போதும் செய்யப்போகிறது. மேற்குலகிலிருந்துவரும் அழுத்தங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கவே பேச்சுவார்த்தைக் கவசம் அதற்கு இப்போது அவரசரமாகத் தேவைப்படுகிறது. இன்னும் கால நீடிப்புக்களுக்கும் புதிய ஏமாற்று வித்தைகளுக்கும் அவகாசம் கேட்கவே இந்தப் பேச்சுவார்த்தை. தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் தமிழினமும், கூட்டமைப்பும் இந்த வலைக்குள் விழக்கூடாது. சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்த்தம் ஒன்றிற்கூடான கால வரையறை குறிக்கப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை ஒன்றிற்கு மட்டுமே வரமுடியும் என்று கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்து இந்த சிங்களப் பேச்சுவார்த்தை நாடகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்.

போன தையில் கிருஸ்ணாவுக்கு மாட்டுப்பொங்கள் புக்கையை கொடுத்து பேச்சுவார்த்தையை குழப்பி தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு போகவேண்டும் என்று இந்தியாவிடம் கட்டளை வாங்கித் தந்தவர் மகிந்தா. ராஜபக்சாகளை பண்பின் சிகரங்களாகப் புகழ்ந்தவர் கிருஸ்ணா. ஆனால் மகிந்தா இப்போ இந்தியாவுக்கே போகமுடியாமல்  அவஸ்த்தைப்படுகிறார். கிருஸ்ணாவும் பதவி இழந்துவிட்டார். இதனாலேயேதான் நாரயணசாமி அடுத்த மார்ச்சில் என்ன வருகின்றது என்பதை பற்றிச்சொல்லாமல், இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என்ற்வர். இந்த களத்தில்  

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் மலேசியவை வைத்து K.P.மாட்டிவர். இன்று பயணத்தை கைவிட்டுவிட்டு நாடுவந்துவிட்டார்.

 

அவுஸ்திரேலியா, இவர்கள் மனித கடத்தல் செய்வதால், இவர்களின் கதை ஒன்றையும் நம்பாமல் இவர்களின் கழுத்தில் சுருக்கு போட்டுத்தான் குணரத்தினத்தை விடுவித்தவர்கள்.

 

கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ஒன்றும் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு போகவேண்டும் என்றே இதுவரையில் சொல்லவில்லை.

 

 

சம்பந்தர் தீர்வு காணுவதில் ஆர்வமாக இருக்கிறார் என்று மகிந்தாவின் அதிமுக்கிய நண்பனான சீனாவே சொல்லிவிட்டது.  

 

 

அன்று சம்பந்தர் தெரிவுக்குழுவுக்கு போகத்தான் வேண்டும் எழுதியவர்கள், தாங்கள் அன்று விட்டது பிழை என்றதை இன்னமும் ஒத்துக்கொண்டு எழுதவில்லை. போன மார்ச்சில், சம்பந்தர் ஜெனீவா வந்தால் அவரை புலிஎன்று கைது செய்யப் போகிறார்கள் என்றுதான் மிரட்டியவர்கள், இன்று வன்னி கணனிகள் பற்றி மிரட்டுவிடுகிறார்கள். தம்மிடம் ஆதாரங்கள் இருந்தால் மகிந்தா பகிரங்க போர்குற்றவிசாரணைக்கு ஒப்புக்கொள்ளட்டௌம். அது வரை வன்னிக் கணநிகளை வைத்து மிரட்டுபவர்களின் நோக்கம் எல்லோருக்கும் புரிகிறது.நாம் இந்த மிரட்டகளை சேமித்துவைத்து சரியான நேரம் திருப்பிவிடுவோம். 
 
13ம் திருத்தததை எதிர்க்கும் நயீப் மயீத்தை சம்பந்தர் ஆதரித்து அவரின் தலைமையை கிழக்கு மாகாணத்தில் ஏற்கவேண்டும் என்று எழுதியவர்கள், சம்பந்தர் பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் என்றால் அதன் பொருள் சம்பந்தர் 13ம் திருத்ததை அங்கேவிட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான். 
 

சம்பந்தர் 13ம் திருத்ததின் கீழ் எதையும் ஏற்கத் தேவை இல்லை. அதைத்தான் அரசு கொடுக்கபோகிறதாயின் அதில் பேச ஒன்றும் இல்லை. இது சம்பந்தரை பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள சொல்லும் எல்லா நாடுகளுக்கும் தெரியும். 

 

 

இன்று அரசு பலகலைக்கழகத்தில் புலிகள் வந்துவிட்டார்கள் என்று சொன்ன படப்பாயத்தை யாரும் நம்பாமல், மாணவர்களை வெளியே விடுமாறு சர்வதேசம் கேட்கிறது. 

 
பலநாடுகளில் புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியே விடப்பட்டுவிட்டார்கள்.

 

மிச்சம் வரும் மார்ச்சின் பின்னர்தான் தெரியவரும்.

மேற்குலக மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குப் போவதுதான் நல்லது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

பேச்சுவார்த்தை மேசையில் குழப்பங்களை உருவாக்கி காலத்தைப் போக்கடிப்பது சிங்களத்திற்கு கைவந்த கலை. பிராந்திய வல்லரசுகளும் தங்கள் நலனிற்காய் தமிழர்களை அடகு வைத்து விடும்.

 

 

இது ஒரு சரியான கருத்து. ஆனால் அவர்களின் நோக்கம் இலங்கையில் தனிய அமைதிவருவது மட்டும் அல்ல. இலங்கை சீனா சம்பந்தமாக அவர்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவேண்டும். அதை அவர்கள் இலங்கை அரசு மீது திணிக்க முடியாது. எனவே அவர்கள் தமிழர் பிரச்சனையை வைத்து ராஜபக்சாக்களை பதவி நீக்கி, ஆட்சியை மாற்றுவதைதான் முதலில் விரும்புவார்கள்.  தமிழருக்காக பேச்சுவார்த்தையில் இறங்கி அதை மட்டும் முன்னேற்ற மாட்டர்கள். எதை அவர்கள் செய்தாலும், எமக்கு கிடைக்கும் தீர்வில் சுயநிர்ணய உரிமையை கேட்டுப்பெறவேண்டும். மேற்குநாடுகள், மகிந்தா கூட்டமைப்புடன் உண்மை மனத்துடன் பேசினாலும், அவரை வெளியேவிடவேதான் முயலும். இந்த மார்ச்சிற்கு பிறகு சீனா, ரஸ்சியா, கியூபா போன்ற்வை UNHRC இல் இருக்கப் போவதில்லை என்பதால் மகிந்தாவுக்கெதிராக அதையும் பயன்படுத்துவார்கள்.    

ஒரு அமெரிக்கரால் எழுதப்பட்ட இந்த கட்டுரையையும் வாசியுங்கள், இதன் குறுகிய தமிழ் ஆக்கமும் உள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112635#entry833869

 

உண்மையில் சீனா பற்றிய பயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருந்தால், கூட்டமைப்பு அந்த பயத்தை வைத்து காய்களை நகர்த்துவது புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கும் கருத்துக்களுக்கும் காலம் சரியில்லைப்போலும்

 

எதை  ஆரம்பித்தாலும் அதற்கு தடை வருகிறது

தற்பொழுது இதை ஆரம்பித்ததும்

சமம்பந்தரின் பாராளுமன்ற  உரை  வெளிவந்துள்ளது.

 

சுபேசுக்கே இந்த  திரி  பற்றி கருத்து மாற்றம்  வந்திருக்கலாம்.

அதை அவர் மீண்டும் இங்கு எழுதுவது முக்கியம்.

 

அதன் பின் நாம் தொடரலாம்.

பேச்சுக்களுக்கு செல்லவேண்டுமா இல்லையா என்பது குறித்து  தாயகத்தில் வாழும் மக்களின் கருத்து என்ன என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பு முடிவெடுப்பது பொருத்தமானது. பேச்சுவார்த்தைகளால் நாம் கண்ட பலன் என்ன என்பது எல்லோரும் அறிந்தது அதே நேரம் பேச்சுவார்த்தைகளை புறக்கணிப்பதால் என்ன பலன் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. செல்வதா வேண்டாமா என்பதைக் கடந்து மூன்றாவதாக எதையாவது சிந்திக்கவேண்டியுள்ளது. அந்தவகையில் மேலே தப்பிலி கூறியதுபோல் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் போவது ஒரு தெரிவு. எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டமைப்பு பலமான ஒரு அமைப்பாக மாறவேண்டியுள்ளது. புலம்பெயர் மக்களுக்கும் கூட்டமைப்பும் இணைந்து செயற்படவேண்டும். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் சக்தியாகவும் அதற்கு பக்கபலமாக புலம்பெயர் மக்களும் அமைப்புகளும் இருக்கும் பட்சத்தில் அதேநேரம் மூன்றாம் தரப்பு மத்தியட்சத்துடன் பேச்சுவார்த்தையை அணுகும் போது அதற்கு ஒரு வலிமை இருக்கின்றது. ஆனால் கூட்டமைப்பு உட்பட நாம் அனைவரும் பிரிந்து சிதைந்து பலவீனப்பட்ட நிலையில் சிங்கத்துக்கு முன்னால் நிற்கும் முயல்போலவே இது அமைகின்றது. கூட்டமைப்பு பலம்பெறவேண்டும் அதற்கு புலம்பெயர் மக்களும் சேர்ந்தியங்கவேண்டும். அதன்பிறகே இவ்வாறான கேள்விகள் குறித்து யோசிக்கமுடியும் என்பது எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அரசியல் வளக்கறிஞர்களின் விவாத விழையாட்டல்ல. தனி மனித தாக்குதலும் அல்ல.விவாதிக்க எதுவுமில்லாவிட்டல் எழுதியவனை அடி என்கிற அப்புக்காத்து அரசியல் எனக்குத் தெரியாது. 

 

சம்பந்தர் ஜெனீவாபோனால் புலியென்று கைது செய்யப்படுவேன் என்று எங்க்கே எழுதினேன்?  சம்பந்தர் ஜெனீவா  போவது பாதகமானது என்று எழுதினேன்.சம்பந்தர் ஜெனீவா சென்றால் அரசு தரப்பு அவரை போர்க்குற்றம் சாட்டப்பட்ட புலிகள் தரப்பாக்க குற்றம்சாட்டி விவாதங்களை திசை திருப்பும் என்றேன்.

அத்தகைய ஒரு தருனத்தில் சம்பந்தர்   புலிகள்மீது சர்வதேசம் வைத்துள்ள போர்குற்றத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுத்து  சர்வதேசத்துடன் பகைக்கவோ நேரும் என எச்சரித்தேன். மேலும் மாநாட்டை திசைதிருப்ப அரசுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையும் என்றேன்.

 

புலிகளின் போர்குற்றம் பற்றிய சம்பந்தரின் நிலைபாடு தொடர்பான சிக்கலையே அரசும் கஜேந்திரகுமாரும் அரசியலாக்கப் பார்த்தார்கள்.  எதிரிகளதும் அதி தீவிரவாதிகளதும் நடவடிக்கைகள் ஒரே இடத்தில் சந்திக்குமென ஒரு தத்துவ கருத்துள்ளது. (திருகோணமலை தேர்தலிலும் அரசின் நோக்கமும் கஜேந்திரகுமாரின் நோக்கமும் சந்திதது) இது பற்றித்தான் நான் எச்சரித்தேன்.

 

செல்வநாயகம் காலத்தில் இருந்து பிரபாகரன் காலம்வரை அரசில் உள்ள தமிழர்களுக்கு எந்தச்  சலுகைதராத தமிழர் தலைமை அரசில் உள்ள முஸ்லிம் மலையக இன தலைமைகளுடன் நல்லுறவாக இருந்துள்ளது. அவ்வப்போது அவர்களை வரவேற்று வாழ்த்தியுள்ளது. இந்த மரபின் அடிப்படையிலேயே முன்னனித் தமிழ் கலைஞனானா நானும் (யாராவது மறுக்கிறீர்களா? ) நஜீப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இதனை விளக்கி யாழில் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். மல்லையூரான் தனிமனித தாக்குதலில் ஈடுபடமுன்னம் இவற்றை வாசித்திருக்கவேனும். இவற்றை புரிந்துகொள்ள முடியாவிட்டால் மேற்படி விவாதங்களில் விளக்கம் கேட்டிருக்க வேனும். 

 

நாம் நமது பிள்ளைகளை நமது  வாழ்வை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இனப்படுகொலைக்கு ஆளான எங்கள் மக்கள் தொடர்பாக பேசுகிறோம் என்பதை எப்பவும் மறந்துவிடக்கூடாது. நம்மில் சிலர் அதனை மறந்து அதிதீவிர வாதம் பேசுகிறது ஆச்சரியமாக உள்ளது.  

கடந்த காலத்தில் களத்துக்குச் சென்று ஒரு துரும்பையும் நகர்தாதவர்கள் அதிதீவிர வாதம் பேசுவதை தவிர்க்கவேண்டும்.

 

விவாதத்துக்கு பதில் சொல்ல எதுவுமில்லாவிட்டால் ஒதுங்கி இருக்க வேனும். தொடர்ந்தும் எங்களைப் போன்றவர்கள் விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டுமென்றால் மல்லையூரானின் விவாதத்துக்கு சம்பந்தமில்லாத பெயர் குறிப்பிடாத தனி மனிதத் தாக்குதல்கலை நீக்கிவிடும்படி யாழை கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

எனது கருத்துக்கள் பற்றி  யாழ்க்கல உறவுகள் தங்கள் கருத்தைப் பதிவுசெய்ய முன்வரவேண்டுமென  பணிவன்புடன் கோருகிறேன்

 

Edited by poet

நாம் நமது பிள்ளைகளை நமது  வாழ்வை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இனப்படுகொலைக்கு ஆளான எங்கள் மக்கள் தொடர்பாக பேசுகிறோம் என்பதை எப்பவும் மறந்துவிடக்கூடாது. நம்மில் சிலர் அதனை மறந்து அதிதீவிர வாதம் பேசுகிறது ஆச்சரியமாக உள்ளது.  

 

கடந்த காலத்தில் களத்துக்குச் சென்று ஒரு துரும்பையும் நகர்தாதவர்கள் அதிதீவிர வாதம் பேசுவதை தவிர்க்கவேண்டும்.

 

இந்தக்கருத்தில் உண்மை உள்ளது அதேவேளை இன்னொரு பக்கமும் உள்ளது.

 

தாயகத்தில் உள்ள மக்கள் போர் முடிந்தும், தமது உறவுகள்  அழிக்கப்பட்டும் இன்றும் சுயமாக இயங்க முடியாமல் முழுக்க முழுக்க இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வாழ்கின்றனர்.

ஆகவே அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டியவர்கள், புலம்பெயர் மக்களே. அதை அவர்கள் பலமுறை கேட்டுள்ளனர், கடந்த சில நாட்களின் முன்னர் யாழ் பல்கலை மாணவர்கள் வாய்விட்டு கேட்டனர். எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பதை நீங்கள் அதிதீவிரவாதம் என கருத மாட்டீர்கள் என எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டியவர்கள், புலம்பெயர் மக்களே. அதை அவர்கள் பலமுறை கேட்டுள்ளனர், கடந்த சில நாட்களின் முன்னர் யாழ் பல்கலை மாணவர்கள் வாய்விட்டு கேட்டனர். எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பதை நீங்கள் அதிதீவிரவாதம் என கருத மாட்டீர்கள் என எண்ணுகின்றேன். - akootha

 

ஒருபோதுமில்லை அகோதா. என்னை யாழ்கள தோழ தோழியர் சிலர் புரிந்துகொள்லவில்லை என்பது வேதனை தருகிறது.

நான் அதிகம் தெரிந்தவனல்ல. வல்லமை உள்ளவனுமல்ல.

 

ஈழத்து தமிழ்பேசும் மக்கள்மீதான - தமிழ் முஸ்லிம் மலையக தமிழர்களவு விடுதலை தொடர்பான என்னுடைய நேசம் உண்மையானது. தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட தருணங்கலிலும் என் நோக்கத்தில் இருந்து பிவாங்கியதில்லை. 

 

மரணத்துக்கு முன்னம் தாய்மண் தொடர்பான நல்ல சேதியை கேட்க்கவேணும் என ஏங்கும் நம்மவர்கள் பலருள் நானும் ஒருவன்.

ஆகவே அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டியவர்கள், புலம்பெயர் மக்களே. அதை அவர்கள் பலமுறை கேட்டுள்ளனர், கடந்த சில நாட்களின் முன்னர் யாழ் பல்கலை மாணவர்கள் வாய்விட்டு கேட்டனர். எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பதை நீங்கள் அதிதீவிரவாதம் என கருத மாட்டீர்கள் என எண்ணுகின்றேன். - akootha

 

ஒருபோதுமில்லை அகோதா. என்னை யாழ்கள தோழ தோழியர் சிலர் புரிந்துகொள்லவில்லை என்பது வேதனை தருகிறது.

நான் அதிகம் தெரிந்தவனல்ல. வல்லமை உள்ளவனுமல்ல.

 

ஈழத்து தமிழ்பேசும் மக்கள்மீதான - தமிழ் முஸ்லிம் மலையக தமிழர்களவு விடுதலை தொடர்பான என்னுடைய நேசம் உண்மையானது. தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட தருணங்கலிலும் என் நோக்கத்தில் இருந்து பிவாங்கியதில்லை. 

 

மரணத்துக்கு முன்னம் தாய்மண் தொடர்பான நல்ல சேதியை கேட்க்கவேணும் என ஏங்கும் நம்மவர்கள் பலருள் நானும் ஒருவன்.

 

புலவரே,

எமது உறவுகளில் எல்லாருமே உங்களைப்போலத்தான் தாயக விடிவை நேசிக்கின்றோம். அதற்கான செயல்பாடுகளிலும் சிலர் ஈடுபடுகின்றோம். இன்னும் சிலர் தாயக மக்களுக்கு உதவுகின்றனர். எல்லோருமே உணர்வுகளுடன் தான் உள்ளோம்.

 

சிலர் சக ய்ரவுகளுடன் கருத்துக்களால் மோதினாலும் நாம் எல்லோருமே உணர்வால் தமிழர்களே.

நன்றிகள்.

முதலில் , யாழில் மட்டுமேயே பல தனிமனித தாக்குதல்கள் நடத்தி மூன்றுமுறை மன்னிபுக்கேட்டவர்கள் மற்றவர்களை தனிமனித தாக்குதல் நடதுவதாக கூறமுதல், தாங்கள் எழுத்திய திரிகளுக்கு திரும்ப சென்று தாங்கள் ஏன் மன்னிப்புகேட்டார்கள் என்ற காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். 

 

யாழுக்கு காய், கூய் போட்டு, வந்து பருதி கொலையில் தேடப்பட்ட வீடுகளை  தேடிப்பிடித்து  அதை வைத்து திருகுதாளக் கதை எழுதமுயல்வோர் அவர்களின் உள் நோக்கம் தெரியாது என்பது போல மற்றவர்களுக்கு புத்தி மதி சொல்ல கூடாது. அரசு பருதி கொலையில் சம்பந்தப்ட்டிருக்காவிட்டால், உதயன், வலம்புரியை கோட்டுக்கு இழுத்தது மாதிரி, லாபரிசையும் கோட்டுக்கு இழுத்துதான் ஆகும். கதைகளை திரிக்க அது அவரையும் பொறுமை காட்டவும். 

 

சம்பந்தர் ஜெனீவாபோனால் புலியென்று கைது செய்யப்படுவேன் என்று எங்க்கே எழுதினேன்?

சம்ப்ந்தர் மகாநாட்டுக்கு போனால் நடக்கூடியதாக காட்டி மிரட்ட முயன்ற விடையம்:

"மகாநாட்டில், அரசு,  சம்பந்தருக்கு புலிகளின் போர்க்குற்றத்தில் பங்கு என்று கூறும். உடனே சர்வதேசம் இலங்கை சொல்வதால் அதை சரி என்று ஒத்துக்கொண்டுவிடும். மேலும் இலங்கையிடம் Lies Agreed upon" யைவிட வலுவான ஆதாரமாக தாரிக்கப்பட்ட "புதிய வன்னியில் கண்டெடுக்கபட்ட  tapes" என்றது இருக்கிறது. இதில் புலிகள்  செய்த போர்க்குற்றமும், யார் யார் செய்தது என்பதும் படமாக்கபட்டிருக்கிறது. இந்த tapes இலங்கை அரசு வெளியே இழுத்துவிட்டவுடன் சம்பந்தர் வரைக்கும் electric chair க்குதான் போவார்கள்."    

 

இது குழப்பமாக, அடிநுனி விளங்காமல் சிந்தித்து, அரசுக்காக, புலிகளுக்கும், கூட்டமைப்புக்கும் எதிராக பிராசரம் செய்வதாக நினைத்து அரசை காட்டிக்கொடுக்கும் முயற்சி. 

 

அரசியல் என்பது வழக்கறிஞ்ஞர்களின் தொழில் அல்ல, ஆனால் அது என்மாதிரி சென்னையில் படம் காட்டுபவர்களின் தொழில் மட்டும் தான் என்பதா கருத்து?அதனால் தான் சம்பந்தர் மாதிரி பழுத்த வழக்கறிஞனுக்கு, அவர் ஜெனீவா வந்தால் ஆபத்து என்று புத்தி சொல்ல வந்தேன் என்பதா விவாதம்? தான் வழக்கறிஞன் இல்லாதவர் ஒருவர் பழுத்த வழக்கறிஞ்ஞன் ஒருவனுக்கு புலிகளை காட்டி,  புத்தி சொல்கிறதாக நடித்து பொது மக்களை மிரட்ட முயல்வது மற்றவர்களுக்கு விளங்காதா?

 

இலங்கை, சம்பந்தரை  ஜெனீவாவில் வைத்து விசாரிக்க மகாநாடு என்ன இலங்கை போட்ட நிகழ்ச்சி நிரலிலா நடந்தது?

 

மகாநாட்டை பற்றி அறிந்திருக்காவிட்டால் அதைபற்றி எழுதி இருக்க கூடாது. அதன் பின் எழுத வந்ததின் ஒரே ஒரு காரணம் அரசுக்கு சார்பாக பிரசாரம் செய்யவே என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு உத்தியோக பூர்வமாக மகாநாட்டுக்கு அழைக்கப்படிருந்தது.  சம்பந்தருக்கு உத்தியோகபூர்வ அழைப்பாக மகாநாடில் எந்த பிரதிநிதித்துவ அறிக்கை வாசிக்கவோ கருத்து கூறவோ அழைப்புவிடப்படவில்லை.  குறைந்தபட்டசமாக, நாடுகடந்த அரசு  செய்தது மாதிரி தன்னும், தனக்கு வேண்டியவர்கள்(கரன் பாக்கர் போன்றவர்கள்) மகாநாட்டில் அறிக்கை வாசிக்க தக்க நிலைமை ஒன்றைத்தன்னும் கூட்டமைப்பு தனக்கு மாகாநாட்டில் ஏற்படுத்தியிருந்தாக நான் அறியவில்லை. அந்த நிலைமை அப்படியிருக்க, அரசு சம்பந்தரை மகாநாட்டுக்குள் இழுத்துக்கொண்டுபோய் இவர்தான் புலிகள் தலைவன் பிரபாகரன் என்றிருக்கும் என்றால் அது அரிவரிக்குழந்தை விடாத பகிடி.என்பதை உணரவேண்டும். அரசு விரும்பியோ, விரும்பாமலோ சம்பந்தர் மகாநாட்டுகுள் உள்ளே போயிருக்க முடியாது. கூட்டமைப்புக்காக வந்த சிறிதரன் தன்னும் மகாநாட்டுக்குள் போனதாக நான் அறியவில்லை. மகாநாட்டுக்குள், அரசு, இலங்கைத் தெரிவு குழுவில் சிராணியை விசாரித்தது போல சம்பந்தை விசாரித்திருந்திருக்கும் என்று கவிதைகள் எழுதக்கூடாது.  இந்த நாடகத்தை  இலங்கை அரசு நிறைவேற்றவே மாகாநாட்டில் இலங்கைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் அதற்கமைவாகவே மகாநாட்டின் நிகழ்சி நிரல் தாயாரிக்கப் பட்டிருந்தது என்றும் பொய் எழுத கூடாது.  சம்பந்தர் மகாநாட்டுக்கு போக கூடாது என்று பகிரங்க அறிக்கை விட்டு விட்டு, அதை சடைய, இந்த  basic  விசையங்களை விளங்காதவர்கள் மாதிரி நடித்து பொய்கள், புனைந்துரைகள் எழுதக்கூடாது. சம்பந்தர் போக இருந்தது, சிறிதரன் செய்தவைகளை போன்று பிரதிநிகளை சந்தித்து பிரச்சாரம் செய்யவே. 

 

சம்பந்தர் ஜெனிவா வரமுதலே சம்பந்த பட்ட நாடுகள் எல்லாவற்றுக்கும் போய்வந்துவிட்டார். அவர் போய் வந்த இந்த மேற்கு நாடுகளிலிருந்து யாராவது  ஒருவர் விட்ட அறிக்கையில், நீங்கள், சம்பந்தர் ஜெனீவா சென்றால் புலிகள் சம்பந்தாமாக பிரேரணை நேரம் விசாரிக்கப்படுவார் என்று கூறும் விதண்டவாதத்தை நிரூபிக்க  ஆதாரம் ஏதாவது இருந்தால் அதை இங்கே இணைக்க முடியுமா? கட்டுகதைகளை கவிதை எழுத்துபவர்கள் எழுதலாம். அது சம்பந்தர் மாதிரி வழக்கறிஞ்ஞனுக்கு பிரச்சனையாகாது. மேலும் இதை எழுதுபவர்களுக்கு, சம்பந்தரை, புலிக்கதை கூறி மருட்ட முடியாது என்பதை நன்கு தெரிந்தும் தான் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் சம்பந்தருக்கு ஒரு தனி மடல் போடாமல், யாழில் வந்து சம்பந்தருக்கு பங்கிரங்க மடல் வரைவது போல நடித்தது புலம் பெயர் மக்களை மிரட்ட முயன்றது. சம்பந்தர் மாதிரி பழுத்த வழக்கறிஞ்ஞர்கள் இந்த கட்டுக்கதை கவிதைகளை சட்டை செய்வதில்லை.

இலங்கை அரசு சர்வதேச அரங்கில் சொல்லும் பொய்களை எதிர்த்துப் பொய்யென நிரூபிக்க வக்கில்லாமல், அரசு மகாநாட்டின் திசையை திருப்புகிறது என்று கூறி, கோழிக்கரப்பால் கூட்டமைப்பு தன்னைத்தான் மூடிக்கொள்ளவேண்டுமாயின், எந்த நாள் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சனைகளை சர்வதேச அரங்கில் போட சந்தர்ப்பம் கண்டுபிடிக்க போகிறது என்பதை உணர்ந்தபின்னரா இந்த ஆலோசனை கூறப்பட்டது. அப்படியாயின் என் இப்படி வக்கில்லாத கூட்டமைபை இனி தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூரவில்லை. 

 

நயீப் மயீத்தானவர்  தமிழர்களின், முஸ்லீம் மக்களின் பயங்கர எதிரியாவார். மு.காவை மிரட்டி 13ம் திருத்தத்திற்கு எதிரான திவிநிகும்ப சட்டத்திற்கு ஒப்புதல் வாங்கினார் என்று மு.கா தலைமைகள் குற்றம் சாட்டின. இப்படிப் பட்ட கேடு கெட்ட அரசியல்வாதியை, வாழ்த்த வேண்டி வருவது தனிபட்ட நன்மைக்கே. அதே நேரம் அந்த வாழ்த்தில்,  பெருந்தந்மையுடன் வென்ற வேறு ஒரு, முஸ்லீம், தமிழ் பிரதிநிதிகளையும் வாழ்த்தவில்லை. 

 

யாழுக்கு வெளியே விடப்பட்ட  ஒரு அறிக்கை தெளிவான வசனங்களில், நயீப் மயீத்தின் வாழ்த்துக்கு மேலே போயிருக்கிறது. அந்த வசனங்களை எப்பவுமே எங்கும் மறுத்து வெளிவிட்ட அறிக்கைகளை நான் இதுவரையில் பார்க்கவில்லை.  

 

நயீப் மயீத் கருணா, பிள்ளையானை போன்றவர்களைவிட மோசமானவர். அதே நேரம் இவர், அவர்கள் மாதிரி மூளையே இல்லாத ஒரு ஓடு காலியும் அல்ல. அரசியல் பலம் பொருந்தியவர். மிக ஆபத்தானவர். யாழில் தமிழரின் நலன் கருத்தும் ஒவ்வொருவரும் நயீப் மயீத்தின் தோல்விக்காக உழைக்க வேண்டும் என்பது மட்டும்தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள ஒருசில உண்மையான தேடல் உள்ளவர்களோடு விவாதிக்கும் விருப்பதிலேயே நான் யாழ் வருகிறேன்.அத்தகைய உரையாடல்கள் அவற்றின் முரண்பாடுகள் விவாதங்களோடு நமது விடிவுக்கு வழிகாட்டும்.

நான் போர்க்காலத்திலும் வன்னியில் கேட்டுக்கொண்டதற்கிணங்க 1996 - 2006 காலக்கட்டத்தில் வருடா வருடம் பாதி நாட்க்கள் ஈழத்தில் - அனைத்து வடகிழக்கிலும் -  ஆய்வுகளிலும் விவாதங்கலிலும் கழித்திருக்கிறேன். ஜெயசுக்குறு தரணத்தில் என் உழைப்பு பாராட்டப்படது. 2006 கொலை ஆபத்து நிச்சயமான சூழலில் அதுவும் வன்னியும் முஸ்லிம்தோழர்களும் வலியுறுதிதிய நிலையில்தான் எனது வருடாந்த  ஈழ ஆய்வுப் பயணத்தைக் கைவிட்டேன். சும்மா இருந்துவிட்டு நான் பேசவில்லை. 

இன்னமும் இலங்கை செல்ல முடியவில்லை.

 

இந்த விவாதத்துக்கு “அரசியல் என்பது வழக்கறிஞ்ஞர்களின் தொழில் அல்ல, ஆனால் அது என்மாதிரி சென்னையில் படம் காட்டுபவர்களின் தொழில் மட்டும் தான் என்பதா கருத்து?” என்கிற கோணல் மனசின் வக்கிரம்  எந்த வகையில் பங்களிப்புச் செய்கிறது.? 

 

விதாண்டாவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை என்பதை யாழ் அன்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.