Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதிது ஆ? ஆட்டோட விளையாடலாம் மாட்டோட விளையாடலாம் மனித உணர்வுகளோட விளையாட முடியுமா? இந்த பொண்ணுங்களே இப்பிடி தாய்யா

இது உண்மைக்கதையா அக்கா?

கதை சொன்ன விதம் அழகு மனம் திறந்த பாராட்டுக்கள்

  • Replies 100
  • Views 9.2k
  • Created
  • Last Reply

இங்கே ஜேர்மனியில் பெரும்பாலான நகரங்களில் ஒரு கபிலாவது இருக்கத்தான் செய்கிறான்.

கதை எழுதியவிதம் நன்றாகாக இருக்கு ,மற்றப்படி சுற்றி சுற்றி சுப்பற்ர கொல்லைதான் .

நாம் இன்னமும் தமிழ்பட ,சீரியல்களை விட்டு தாண்டவில்லை என்று நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா..இதுவரை நீங்கள் எழுதிய கதைகளில் கண்ணீர்வரவைத்தகதை...

 

அன்பையும் நேசிப்பையும் சொல்லிக்கொடுத்தது எங்கள் பண்பாடு,எங்கள் தேசம்...கணவன் மனைவி என்கிற உன்னதமான உறவு உயிர்ப்புடன் வாழ்வது எங்கள் இனத்தில்...பறவைகள் திண்ணைகளில் அமரும் அளவுக்கு அன்பு நிரம்பிக் கிடக்கிறது எங்கள் கிராமம்களில், ஆடுகள் சில நேரங்களில் கன்றுக் குட்டிகள் கூட மனிதர்களின் மடியில் உறங்கும் அளவுக்கு இங்கு தாய்மையும், பெண்மையும் வழிந்தோடிக் கிடக்கிறது, கணவன் மனைவிக்கிடையிலான அன்பு எத்தனை வலிமையானது என்கிற வாழ்க்கையின் மிக உயர்ந்த சமன்பாட்டை எமக்குச் கற்பிப்பது எங்கள் பண்பாடு..வெளிநாடுகளின் நாகரீகங்களுக்குள்ளும் தம்மைதொலைத்துவிடாத கபிலன் போன்ற மனிதர்கள்தான் எம்மினத்தின் பெருமையை சொல்ல எஞ்சி இருக்கும் எச்சம்கள்..

 

இன்னொரு எழுத்தாளர் யாழுக்குள் உருவாகுகிறார்..வாழ்த்துக்கள் அக்கா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதம் நன்றாக இருக்கின்றது. சுமேரியர் அக்கா பாலசந்தர் படங்களை அதிகம் பார்திருப்பார் போலிருக்கின்றது. சர்ச்சைக்குரிய விடயங்களைத் தொட்டாலும் முடிவில் கொடுக்கும் தீர்வு எல்லாம் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்பது மாதிரித்தான். Mrs. Doubtfire படத்தை தமிழில் ஒளவை சண்முகி என்று எடுத்த கமலஹாசனும் சமுதாய சட்டகத்திற்குள் வெளியே தீர்வைக் கொடுக்கப் பயந்துதான் இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவும் நிஜமாவே அப்பிடி தான் அமைந்ததா? இல்லை வாசகர்களிடம் கல்லடி வாங்க வேண்டி வரும் என்டதற்காக சுபம் போட்டு முடித்தீர்களா?

இந்தக் கதையின் முடிவில் ஆச்சரியம் எதுவும் இல்லை. திரும்பி வந்த மனைவியை ஏற்றுக் கொண்டவர்களையே நான் அதிகமாக கண்டிருக்கிறேன். ஆனால் இதை அன்பில் செய்வதாக நான் நம்புவது இல்லை. அவர்களை யதார்த்தவாதிகளாகவே நான் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான சண்டை,கோபத்தின் உச்சத்தில் கடுமையான பரஸ்பர கடுஞ் சொற்கள்,கொடுமையான பிரிவு என்பதன் பின் நிகழ்கிற இனிமையான சந்திப்பு என்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை.உண்மையான நேசத்தை பரிமாறி என்றைக்கும் பிரிந்திட நினைக்காதவர்களால் மட்டுமே அது நிகழ்த்தப்படுகிறது.....
உண்மையான காதல் வாழ்கிற தருணம் அது!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை வந்து Internet ல அடுத்ததா பிடிக்கும் வரைக்கும் ஒரு இடைத்தங்கல் முகாம் ஓன்று வேண்டும் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்த கோமகன், சுண்டல், சபேசன், அர்யுன், சுபேஸ், கிருபன் ஆகியோருக்கு நன்றி. நான் எழுதியது உண்மையாக நடந்த நிகழ்வு. இதில் நேசன் என்பது என் சொந்தத் தம்பியின் பாத்திரம் என்பதால் நான்  அவர்களைப் பற்றி பல விடயங்களை அறிந்தேன். முடிவுகூட அதுதான். நான் கபிலனை நல்ல ஒரு மனிதனாகத் தான் பார்க்கிறேன். கபிலனின் துணிவு உங்களில் யாருக்கும் வருமா என்பது சந்தேகமே. ஒருமுறை சூடு கண்ட மது வாழ்வில் இனி தவறே செய்ய மாட்டாள். அவர்கள் இப்பொழுது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்கிறார்கள். மற்றவர்கள் கூட கபிலனின்  நல்ல மனத்தால் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு உறவாடுகின்றனர். ஆனாலும் அந்த வடு எப்படியும் அவர்கள் இருவர் மனதில் கடைசிவரை  இருக்கத்தான் போகிறது.

ஏன் அவா திரும்பி வந்தவா???

  • கருத்துக்கள உறவுகள்

மனதில வாழ் நாள் பூரா வடுவ வைச்சிட்டு வாழ்ந்து என்ன பிரியோசனம்? கறுமம் புருஷநிட்டையே துணிச்சு சொல்லி எனக்கு இன்னொருத்தன பிடிச்சிருக்கு எண்டு அதுக்கு இவர் டிக்கெட் போட்டு கொடுப்பாராம் அவவும் போயிட்டு போன் பன்னுவாவாம் அத்தான் நான் சொர்க்கம் எண்டு நினைச்சு வந்தான் நரகமா இருக்கெண்டு உடன இவர் திரும்பவும் டிக்கெட் அனுப்பி அவ்வா தன்னோட கூப்பிட்டு மறுபடியும் ஒரு குழந்தை பெத்து மகிழ்ச்சியா வாழ்விணமாம் சரியானா லூசுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களின் நடவடிக்கைளால் தான் என்றைக்குமே உண்மையாக இருக்க கூடியவர்களை கூட தற்போதைய காலத்தில் இனம் காண முடியாமல் இருக்கிறது...போறதுக்கு முதல் ஒண்டு,போய்ட்டு வந்து ஒன்று பெறுவது ஒன்றும் புதுமை இல்லை..ஒரு பெண் எண்டைக்குமே கண்ணியமாக வாழ பழகனும்...உண்மையாக பிரச்சனைகளோடு வாழும் பெண்கள் என்றால் பறவா இல்ல....இது கொழுப்பு...நினைச்சு போன அழவுக்கு வசதி வாய்புக்கள் இருந்திருக்காது கட்டுபாடுகள் அதிகமாக இருந்திருக்கும் திரும்பி வந்திருப்பா...

 

ஏன் அவா திரும்பி வந்தவா???

 

குட் குயஸ்டன்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழகாகக் கொண்டு சென்ற கதையைக் குழப்பிப் போட்டீர்கள் போல இருக்கு, சுமேரியர்!

கதையை யதார்த்தம் என ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மணவாழ்க்கை முன்பு போல இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன்!

என்னவோ, குழந்தைக்காகவும், உலகத்துக்காகவும் கபிலன் எடுத்த முடிவாக இருக்கும்!

 

ஒரு சின்னச் சபலம், ஒரு அருமையான மணவாழ்வை, உடைத்து விட்டது என்பது எனது கருத்து!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
முடிவுகூட அதுதான். நான் கபிலனை நல்ல ஒரு மனிதனாகத் தான் பார்க்கிறேன். கபிலனின் துணிவு உங்களில் யாருக்கும் வருமா என்பது சந்தேகமே. ஒருமுறை சூடு கண்ட மது வாழ்வில் இனி தவறே செய்ய மாட்டாள்.

 

கபிலனின் முடிவுக்கு சுயநலம், இயலாமை, பிள்ளையைத் தனிய வளர்க்க முடியாமை என்று பல காரணங்களைச் சொல்லலாம். மதுவுக்கு லண்டனில் என்ன நடந்தது என்று கதையில் சொல்லவில்லை என்பதால் அவருக்கு சூடு காணுமா, அல்லது லண்டனில் சூடு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

 

கபிலனின் துணிவு இல்லையென்றாலும் கரனின் துணிவு இருக்கு!

சுமோ அக்கா,

 

இந்த கதையின் கரு உண்மையாக இருந்தாலும், ஒருவித நாடக பாணியிலான முடிவாக தான் கதை முடிந்து இருக்கிறது. கதையின் நாயகன் கபிலனின் விட்டு கொடுப்பு அல்லது தியாகத்தை இந்த கதை எடுத்து காட்டினாலும், சமுதாயத்துக்கான பட்டறிவை, அல்லது சமுதாய பிறழ்வுக்கான தண்டனையை சுட்டி காட்ட தவறி நிற்கிறது.

 

மேலும் கட்டிய புருசனையும், குழந்தையும் விட்டுவிட்டு, கட்டிய புருசனிடமே நேரடியாக அனுமதி (விமான சீட்டு உட்பட) பெற்று கொண்டு சென்ற ஒரு பெண், தன்னை அழைத்தவன் ஏமாற்றினால் என்ன செய்வது, என்ற மாற்று ஏற்பாட்டை கூட அறியாமல் சென்றது ஒரு வித தழும்பலை காட்டி நிற்கிறது.

 

ஒரு முறை தவறு இழைத்தமையால், திருந்திவிட்டார் என்பது நம்புவதற்கு கடினமாயினும், கபிலனின் உள்ளத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் கபிலன் போன்ற வெகுளித்தனமான ஆண்களால் தான் பல பெண்கள் பிழைகளும் விடுகிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.

 

சினிமாக்களும், நாடகங்களும் சுபமான முடிவை தருவதன் மூலம் வியாபர வெற்றியை தந்தாலும், வாழ்க்கை பாடத்தை உணர்த்துவதில்லை. அது போல தான் இந்த கதையின் முடிவும்.

 

உங்கள் எழுத்து ஆற்றலும், கதை சொன்ன விதமும் மிகவும் அழகாக இருந்தது. நன்றி உங்கள் பதிவிற்கு.

Edited by பகலவன்

குட் குயஸ்டன்  :lol:

 

ஏன் இந்தக் கொலை வெறி? "முக நூல்காரனை  நம்பி புருசனைக் கைவிட்டவா ஏன் திரும்பி வந்தா எண்டு அறியத் தான், அதை சுமோ தணிக்கை செய்திட்டா

  • கருத்துக்கள உறவுகள்

சபலம் இல்லாமல் வாழ்க்கை இல்லை...அந்த சபலத்தை வெற்றி கொண்டவன் /கொண்டவள்....திறமைசாலிகள்... இப்படி சம்பவங்கள் நடந்திருக்கின்றன...நடக்கின்றன...இனியும் நடக்கும்...ஆனால் கபிலனை மாதிரி சொந்தக் காசில சூனியம் செய்யிற சனம் குறைவு..... சுமே பகிர்வுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை, யாயினி, பகலவன், சுண்டல், புங்கையூரன்,கிருபன், புத்தன் ஆகியோருக்கு.

 நான் கதை எழுதவில்லை. உண்மைச் சம்பவத்தைத்தான் எழுதியதால் எனக்கு நீங்கள் பலர் விரும்பியது போல் முடிவை எழுதுவதில் உடன்பாடு இல்லை.  கற்பனை எனில் எப்படியும் முடித்திருக்கலாம். நேசன் என்பது எனது சொந்தத் தம்பி. அதனாலேயே எனக்கு அவர்கள் பற்றி தெரிந்தது. நான் ஒருமுறை தம்பியிடம் யேர்மனிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக கபிலனும் மனைவியும் பிள்ளையுடன் வந்திருந்தனர். எனக்கு அவர்களின் திருமணம் பற்றித் தெரியாது. எனக்குத் தெரியாது எப்ப திருமணமானது எனக் கேட்டபோது நான் இருமாத விடுமுறையில் சென்றிருந்தபோது நடந்தது. அதனால் கூற மறந்துவிட்டதாக என் தம்பி கூறினான். அவர்கள் இருவரும் மிகவும் அன்னியோன்னியமாக  இருந்ததாக எனக்குப் பட்டதால் அவர்கள் சென்றபின் காதல் திருமணமோடா  பெட்டையைப் பார்த்தால் சின்னப் பெட்டையாக இருக்கு என்றபோதுதான் தம்பி இவர்களின் கதையை எனக்குக் கூறினான்.
இதில் கருத்தெழுதிய பல ஆண்கள், ஆண்களின் சாதாரண மனநினையையே பிரதிபலிக்கிறீர்கள். அது இயல்புதான். இதே தவறை ஒரு ஆண்  எத்தனை தடவை செய்தாலும் உங்கள் பார்வையில் தவறில்லை. அந்தப் பெண் செய்தது தவறுதான் அதற்காக தற்கொலை செய்திருக்க வேண்டும் என்கிறீர்களா ? சாத்திரியின் கதையில் எழுதியது போன்று. அல்லது தனிமையில் நாளும் பொழுதும் துடித்து வாழ்நாளைக் கழிக்கச் சொல்கிறீர்களா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்ற பழமொழி எல்லோருக்கும் தெரிந்ததுதானே பகலவன். மது திருந்திவிட்டார் என்றே நான் எண்ணுகிறேன். உண்மைச் சம்பவங்கள் தான் படமும் நாடகமுமாகத்  தயாரிக்கப்படுகின்றன கிருபன். மது வாழ்வின் மேல் ஆசைகொண்ட துணிவான பெண் என்றே நான் எண்ணுகிறேன். எனக்குக் கூட கணவரிடம் இப்படிக் கூறும் துணிவு வராது.

அலை அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன நடந்தது என்று எழுதப் பஞ்சியாக  இருந்ததாலேயே எழுதவில்லை. அத்தோடு அது தேவையும் இல்லை என நினைத்ததும் ஒரு காரணம். பலருக்கு அதை அறியும் ஆவல் இருந்தால் எழுதுகிறேன்.


 

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ கதை எழுதிய விதம் கைதேர்ந்த எழுத்தாளர் போல உள்ளது...அந்தப் பெண் ஏன் திரும்பவும் தன் கணவரிடம் போனார் என எழுதுங்கள்.
 
இங்கு இருக்கும் ஆண்கள் பலர் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணையோ அல்லது ஏற்கனவே போய் பிரண்ட் இருக்கும் பெண்ணையோ விரும்பி அவர்கள் வாழ்வை குலைக்க விரும்ப காரணம் என்ன?
 
இதே நேர‌த்தில் பெண்களும் கொஞ்ச‌ம் கூட‌ மனக் கட்டுப்பாடு இல்லாமல் தங்களுக்கு கல்யாணம் ஆனதையோ,தங்களுக்கு ஒரு போய் பிர‌ண்ட் இருக்குது என்பதையோ மறந்து மற்ற ஆண்களது மனத்தை கெடுத்து,அவர்களை மனதளவில் பழுதாக்கி விட்டு அவர்களை நடுத்தெருவில் விட்டுட்டு போன சம்பவங்கள் பல நட‌ந்து கொண்டு தான் இருக்குது.
 
ஏன் ஆண்கள் ஊரிலோ அல்லது இங்கோ கல்யாணம் ஆகாத பெண்களையோ அல்லது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊரில் இருக்கும் பெண்களை கட்டலாம் தானே!...இப்படி மாற்றான் மனைவி மீது  ஆசைப்படும் ஆண்கள் தான் இங்கு பிறந்து அல்லது சின்னனில் புலம் பெயர்ந்து வந்த பெண்கள் பப்புக்கு தங்கள் நண்பர்களோடு[ஆண்,பெண்] சேர்ந்து போனால் தப்பாய் கதைப்பார்கள்...இன்னொருத்தன் மனைவியாய் இருந்து கொண்டு அடுத்த ஆணை மயக்கும் பெண்களைக் காட்டிலும் [வயது வித்தியாச‌ம்,குடிகார‌ன்,அடிக்கிறவன்,கொடுமை செய்யிறவன் போன்ற ஆயிர‌ம் கார‌ணங்களை சொல்லலாம்.எது எப்படியிருந்தாலும் அவர்களோடு வாழப் பிடிக்காட்டில் அவர்களை விட்டு பிரிந்து போய் விட்டு பிறகு முடிவு எடுக்க வேண்டும்.ஆனால் அவர்களோடு இருந்து கொண்டே இன்னுருமொருவனை தங்களது வாழ்க்கைக்குள் நுழைக்க பார்ப்பது கேவலம்] பப்புக்கு போகும் பெண்கள் எவ்வளவோ மேல் என்பதே எனது கருத்து.
 
ஆண்களும் தனியே பணம்,பணம் எனத் ஒடித் தெரியாமல் மனைவியை புரிந்து கொண்டு நட‌க்க வேண்டும்...எது எப்படியோ இந்தக் கதையில் கணவரிலும் பிழை இருக்குது...இனி மேலாவது குழந்தைக்காக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நட‌ந்தால் நல்லது.
 
 
 
 
 

தொடர்கதை வாசிக்கப் பிடிக்காது. இன்று முழுமையாக வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். வாசிக்கும் பொழுது, சம்பவங்கள் மனத்திரையில் ஓடுகின்றன.

 

திருமண வாழ்வு பிடிக்காட்டி பிரிந்து செல்வது ஒருவரின் தனிப்பட்ட விடயம். ஆனால் போன இடம் சரியில்லாட்டி திரும்பி வாறது என்பது சுயநலம். இன்னுமொரு சரனையோ பரனையோ காணும் வரை கபிலன் தஞ்சம். கபிலனைப் போல ஆட்கள் இருக்கும் மட்டும் 'மது'க்கள் பயப்படத் தேவையில்லை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இரன்டாவது பிள்ளை பெறும் அளவுக்கு கபிலனுக்கு உடம்பு செயற்பட மனம் இடம் கொடுத்திக்குது.

 


 


 
ஆண்களும் தனியே பணம்,பணம் எனத் ஒடித் தெரியாமல் மனைவியை புரிந்து கொண்டு நட‌க்க வேண்டும்...எது எப்படியோ இந்தக் கதையில் கணவரிலும் பிழை இருக்குது...இனி மேலாவது குழந்தைக்காக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நட‌ந்தால் நல்லது.
 

 

 

 
 
 
 

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

மது விட்டிலை விள க்கு என நம் பி இருக் கிரா..........இக்கரைக்குஅக்கரை பச்சை யாக தெரிந்து இருக்கிறது. ......கபிலன் மனைவி  மேல் இரக்கபட்டு ஏற்று இருக்கிறான்..பிளேன் டிக்கற்  போடுவது கொஞ்சம் ஓவர்.......அவளுக்கு சொந்த புத்தியும் இல்லை. இன்னும் கணவனின் கொடுமைகளை சகித்து குழந்தை க்காக் வாழும் எத்தினை யோ பெண்கள் இருக்கிறார்கள் .

 

அந்த மூத்தமகனின் பாசம் கூடவா இல்லாமல்போனது .,,சூடு கண்ட பூனை இனித்திருந்தி விடுவா.......கபிலன்சிலருக்கு ஏமாளியாக் தெரிந்தாலும் அவனுக்குள் ஓர் நல்ல உள்ளம் இருந்து இருக்கிறது. மெசோ வுக்குஎன்பாராட்டுக் கள் ............(மதுவுக்கு அங்கு ..என்ன நடந்தது என எழுதினால் இன்னும் நன்று. )

அலை அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன நடந்தது என்று எழுதப் பஞ்சியாக  இருந்ததாலேயே எழுதவில்லை. அத்தோடு அது தேவையும் இல்லை என நினைத்ததும் ஒரு காரணம். பலருக்கு அதை அறியும் ஆவல் இருந்தால் எழுதுகிறேன்.

 

 

சுமோ மதுவுக்கு என்ன நடந்தது என்பதையும் எழுதுங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.