Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

537919_534858449867449_1985513103_n.jpg

 

 

 

ஒரு ஆண் கடுமையா உழைச்சா....
பொண்டாட்டியைக் கண்டுக்க
மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா..
அவளையே சுத்தி சுத்தி வரான்.
வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம்
கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ்
டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத்
தெரியாத ஜடம்..!
ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள
மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம்
இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான்
ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய்
கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல
்.
ஒன்னும் வாங்கிட்டுப்
போகலேன்னா "ஒரு முழம்
பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"
ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, "
வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க
வேண்டியதுதானே..
எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"
ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப்
போனா, " அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க
மனுஷனுக்கு..
எப்படி உழைச்சு முன்னேறி கார்
பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"
ன்னு பூசல்..

இந்த
கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா,
ஆனாதிக்க உலகம்
அப்படின்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள்
நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம்
தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க... :(

 

(FB)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுக்கும் ரெண்டுக்கும் இடையில அல்லல்படுறீங்க  எண்டு மட்டும் புரியுது 

 

super subesh

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சுபேஸ்! நான் பார்த்த அளவவில் விதவைகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் ஆண்கள் மிருதங்கம் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும்... உண்மை சுபேஸ். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சுபேஸ் சரியா சொன்னீங்க.

 

பஸ்ஸில போகேக்க பொண்ணுக்குப் பக்கத்தில ஸீட்டு காலியா இருந்து அதில உட்கார்ந்தா வழிசல் எண்ட மாதிரி ஒரு மாதிரியாப் பாப்பாங்க உட்காராவிட்டால் பெரிய ராமன் மாதிரி ஏகபத்தினி விரதன் எண்டு மனசுக்க திட்டுவாங்க :(

 

இதனாலயும் ஆண்கள் சீக்கிரம் செத்துப் போறாங்க தெரியுமா சிறியண்ணா? :(

  • கருத்துக்கள உறவுகள்
ஆமா சுபேஸ் சரியா சொன்னீங்க.

 

பஸ்ஸில போகேக்க பொண்ணுக்குப் பக்கத்தில ஸீட்டு காலியா இருந்து அதில உட்கார்ந்தா வழிசல் எண்ட மாதிரி ஒரு மாதிரியாப் பாப்பாங்க உட்காராவிட்டால் பெரிய ராமன் மாதிரி ஏகபத்தினி விரதன் எண்டு மனசுக்க திட்டுவாங்க :(

 

இதனாலயும் ஆண்கள் சீக்கிரம் செத்துப் போறாங்க தெரியுமா சிறியண்ணா? :(

 

உண்மை தான்... காவாலி,

வீதியால்... பெண்கள் போகும் போது... சைட் அடிக்காவிட்டால்... பொன்னையன் என்கிறாங்க, சைட் அடித்தால்... பொம்பளைப் பொறுக்கீன்னு..... செருப்பை தூக்கி காட்டுறாங்க. மொத்தத்திலை ஆண்களை என்ன செய்யச் சொல்றங்கன்னு, தெரியலியே... பாவங்கள் ஆண்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நொந்து நூலாகியிருக்கின்றீர்கள்   :lol:  :D

  • எல்லாம் வயசுக்கோளாறு ..... :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுக்கும் ரெண்டுக்கும் இடையில அல்லல்படுறீங்க  எண்டு மட்டும் புரியுது 

 

நான் சொல்லல...நம்ம நந்தன் அண்ண நல்ல கருத்தா பேசுவாப்ல.. :D

super subesh

 

என் குத்தமா..உங்க குத்தமா...ஆம்பிளையாப் பொறந்ததுக்கு யாரை நாம குத்தம் சொல்ல... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மைதான் சுபேஸ்! நான் பார்த்த அளவவில் விதவைகள் அதிகம்.

 

சட்டம் ஒரு இருட்டறை பெண்களுக்கு...குருட்டறை ஆண்களுக்கு...
 

பெண்கள் அதுக்குள் டோச் அடித்துப்போய்விடுவார்கள்...ஆண்கள் அதுக்குள் தலைகுப்புற கவிழ்ந்துவிடுவார்கள்...... :(

Edited by சுபேஸ்

இதை வாசிச்சவுடன் ஓ என்று கண்ணீர் விட்டு  சுத்தி இருக்கின்ற பொண்ணுகளை எல்லாம் கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வைக்க வேண்டும் போல இருக்கு சுபேசு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் ஆண்கள் மிருதங்கம் என்கிறீர்கள்.

 

ஆம் நுணா அண்ணா...மிதி + தங்கம் - மிதிதங்கம்... இதுவே பின்னாடி மருவி பேச்சுவழக்கில் மிரிதங்கம் என்றாகியது...இன்று மிருதங்கம் ஆகி இருக்கிறது...அதாவது ஆண்கள் தங்கமானவர்கள் ஆனால் பாவம் பெண்களிடம் மிதிவாங்குகிறார்கள் என்ற அர்த்தத்திலேயே இந்தப்பெயர் வழக்கில் இருந்தது சங்க இலக்கியத்தில்... :D

அவ்வளவும்... உண்மை சுபேஸ். :D

 

எனக்குள் ஒரு அந்நியன் வேண்டும் இந்தப் பெண்களை கும்பிபாகம் செய்ய சிறி அண்ணை... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆமா சுபேஸ் சரியா சொன்னீங்க.

 

பஸ்ஸில போகேக்க பொண்ணுக்குப் பக்கத்தில ஸீட்டு காலியா இருந்து அதில உட்கார்ந்தா வழிசல் எண்ட மாதிரி ஒரு மாதிரியாப் பாப்பாங்க உட்காராவிட்டால் பெரிய ராமன் மாதிரி ஏகபத்தினி விரதன் எண்டு மனசுக்க திட்டுவாங்க :(

 

இதனாலயும் ஆண்கள் சீக்கிரம் செத்துப் போறாங்க தெரியுமா சிறியண்ணா? :(

 

 

பஸ்களில் ஆணின் பக்கத்தில் பெண் உட்காருவது பெண்உரிமை .. பெண்ணின் பக்கத்தில் உட்காரும் ஆண் எருமை - என்ன  காவாலி உலகம்...
 

இடையில சம உரிமை தேடும் நாங்கள்தான் பாவம் .... :(

 

 

 

 

உண்மை தான்... காவாலி,

வீதியால்... பெண்கள் போகும் போது... சைட் அடிக்காவிட்டால்... பொன்னையன் என்கிறாங்க, சைட் அடித்தால்... பொம்பளைப் பொறுக்கீன்னு..... செருப்பை தூக்கி காட்டுறாங்க. மொத்தத்திலை ஆண்களை என்ன செய்யச் சொல்றங்கன்னு, தெரியலியே... பாவங்கள் ஆண்கள்.

 

 

 

 

வெள்ளைமலருமல்ல வேறெந்த கலருமல்ல
உள்ளக்குமுறலடி உத்தமனார் சொல்லுவது... :(

 

 

எல்லோரும் நொந்து நூலாகியிருக்கின்றீர்கள்   :lol:  :D

 

 

 

வெந்த புண்ணில வேல் பாய்ச்சக்குடாது.... :D

 

 

  • எல்லாம் வயசுக்கோளாறு ..... :D

 

 

 

அம்புட்டு ஆம்பிளைப்பசங்களும் இங்கினைதான் இருக்றாப்ல...சங்கத்தை இங்கினையே கூட்டலாம் .... :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை வாசிச்சவுடன் ஓ என்று கண்ணீர் விட்டு  சுத்தி இருக்கின்ற பொண்ணுகளை எல்லாம் கட்டிப் பிடிச்சு ஒப்பாரி வைக்க வேண்டும் போல இருக்கு சுபேசு.

 

அழப்பிடாது...ஒரு சக ஆணாய் ஏதோ இம்புட்டுதான் என்னாலை முடிஞ்சது..

 

 

ஆம்பிளைங்க மனசு ரஜனிமாதிரி..சொல்றதத்தான் செய்வாங்க..செய்றதைத்தான் சொல்லுவாங்க..
 
பொண்ணுங்க மனசு சத்தியராஜ் மாதிரி..அவங்க கரக்டரையே புரிஞ்சுகொள்ளமுடியாது...
 
நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் அவசர மற்றும் சபல புத்தியால் வரும் வினைதான் இது.

 

சில நாட்களே போடும் உடுப்பை

செருப்பை....................???

???????

நிறம் பார்த்து

நீளம் பார்த்து

அகலம் பார்த்து

போட்டுப்பார்த்து...........

எடுக்கும் ஆண்

பெண் தெரிவில் மட்டும் அதைவிடுத்து வேறு எதையோ எதிர்பார்த்து

அல்லது வேறு ஏதாலோ மயங்கி முடிவெடுத்து விடுகின்றார்

அதிலிருந்து நாசம் ஆரம்பம்

இனி  புலம்பி  என்ன பலன்???? :D

 

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கே வாசிக்க உங்களை எல்லாம் நினைச்சு அழுகை வருது. பாவம் நீங்கள் எல்லாம். :D :D :D :D

 

ஆனால் இதாலை வேளைக்குச் சாவினம் எண்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியேல்லை. :lol: :lol: :lol: :lol: :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் அவசர மற்றும் சபல புத்தியால் வரும் வினைதான் இது.

 

சில நாட்களே போடும் உடுப்பை

செருப்பை....................???

???????

நிறம் பார்த்து

நீளம் பார்த்து

அகலம் பார்த்து

போட்டுப்பார்த்து...........

எடுக்கும் ஆண்

பெண் தெரிவில் மட்டும் அதைவிடுத்து வேறு எதையோ எதிர்பார்த்து

அல்லது வேறு ஏதாலோ மயங்கி முடிவெடுத்து விடுகின்றார்

அதிலிருந்து நாசம் ஆரம்பம்

இனி  புலம்பி  என்ன பலன்???? :D

 

மொத்தத்தில ஆண்கள்புத்தியே அவசரப் புத்தி... :D

 எனக்கே வாசிக்க உங்களை எல்லாம் நினைச்சு அழுகை வருது. பாவம் நீங்கள் எல்லாம். :D :D :D :D

 

உங்களைப்போல் இதை வாசிக்கும் எல்லாப்பெண்களும் இப்படி அனுதாபத்தை தங்கள் வீடுகளில் இருக்கும் அப்பாவி ஜீவன்மேல் காட்டினால் எனது இந்தப்பதிவை இங்கு இணைத்து என் ஆண் இனத்துக்கு ஏதோ கொஞ்சம் சாதித்த நின்மதியுடன் போவேன்.. :D

ஆனால் இதாலை வேளைக்குச் சாவினம் எண்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியேல்லை. :lol: :lol: :lol: :lol: :lol:

 

 

இவ்வளவு கடுப்பா அவரில் :rolleyes: . இதற்கு எழுதலாம், நீங்க அழுதுடுவீங்க

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு ஒரே வளி நெடுக்கரிட்ட போய் சரன்டர் ஆகிறது தான் :lol:

உதுக்கு ஒரே வளி நெடுக்கரிட்ட போய் சரன்டர் ஆகிறது தான் :lol:

 

 நெடுக்கர் அப்படியா? :wub:  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 நெடுக்கர் அப்படியா? :wub:  :D

 

 

நீங்க இதுக்குள்ள எங்களையும் இழுத்து விட்டதற்காகச் சொல்லுறம்..

 

நாங்க ஆண்களின் நீடித்த வாழ்விற்கு வழிகாட்டிறம்.. அப்படின்னு சொல்ல வாறார்.. சஜீவன் அண்ணா..!

 

ஆண்கள்.. நீண்ட காலம் வாழச் செய்ய வேண்டியது..

 

1. ஒரு பிகரப் பார்த்தா அங்கலாய்க்கக் கூடாது. பார்த்தமா கண்ணால ரசிச்சமா.. விசயம் முடிஞ்சுதா என்னிட்டு.. போய்க்கிட்டிருக்கனும்.

 

2. சரி.. அறியாமையில.. ஒரு வேகத்தில.. போனா போகிட்டன்னு.. ஒரு மரக்கட்டைக்கு தாலின்னு ஒண்ணைக் கட்டி மாட்டுப்பட்டுட்டீங்கன்னு வையுங்க.. அது மரக்கட்டை என்றதை மனசில இருத்திக்கனும். அதுக்கு உங்களட்ட இருந்து அன்பை.. ஆதரவை.. தடவலை.. கூலியை... வாங்க முடியுமே தவிர திருப்பிக் கொடுக்கத் தெரியாது. அந்த வகையில.. உதுகளை.. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.

 

3. மரக்கட்டையை குசிப்படுத்த.. நகை நட்டு. சாறின்னு.. சுடிதார்.. மினி.. கினி.. ஐபோன்... ஐபாட்... அதுஇதென்னு.. வாங்கிக் குவிச்சாலும்.. அதுக்கு நன்றி உணர்வே வராது. அந்த வகையில.. உங்களுக்கு யாரும் அன்பளிப்பா தாறதை மட்டும் கொடுங்க. நீங்கள் உழைக்கிறதை.. சம்பாதிக்கிறதை உங்கள் எதிர்காலத்திற்கு சேமிச்சு வையுங்க. உங்க மனசில.. எனது எதிர்காலத்தில் நான் தனிய.. நிம்மதியா வாழக்கூடிய நிலை இருக்குன்ன எண்ணம் வலுவாகவே ஊன்றிடனும். அதுக்குரிய அத்திவாரத்தை இளமையிலையே போட்டிடுங்க.

 

4. மரக்கட்டைகளைப் பார்த்தீங்கன்னா.. அதுங்களுக்கு மற்றவையைப் பற்றிய கவலை இருக்கோ இல்லையோ.. தங்களப் பற்றிய கவலை அதிகம். ஒழுங்கா கொஸ்பிற்றலுக்குப் போங்கள்.. சின்ன நோவுக்கும் பெரிசா பாசாங்கு பண்ணுங்கள்.. எடுத்ததிற்கும்.. டாக்டரற்றப் போங்கள்.. அதனால.. அதுகளை நோய் அதிகம் தீண்டுவதில்லை. அதுமட்டுமல்ல.. உங்களைட்ட இருந்து காசை.. உதவியை... வறுக.. உங்களுக்கு கண்டதையும் அளவுக்கு மிஞ்சி அவிச்சுப் போடுங்கள். நீங்களும் ஏதோ அன்பில தான்னு.. சாப்பிட்டு தொலைக்க.. அப்புறம் கொலஸ்ரால்.. காட் அட்டாக்.. ஸ்ரோக் என்று வந்து போய் சேர்ந்திடுவீங்க. அதுங்க உங்க பென்சனை.. இல்ல சேமிப்பை.. இல்ல சொத்துகளை வைச்சு.. பிள்ளை குட்டியோட என்ஜோய் பண்ணிக்கிட்டு இருக்குங்கள்..! இதையே நீங்க செய்துகிட்டா அந்த என்ஜோய்மென்ட் உங்களுக்கு வருமில்ல. எப்பவும்.. மரக்கட்டைகளை குசிப்படுத்த நினைக்காம.. முதலில உங்கட சுகமான சுத்தமான சுகாதாரமான வாழ்வை உறுதிப்படுத்திக்குங்க. அப்புறம் தான் மிச்சம்.

 

5. பிகரு.. பார்க்கிற பருவதில்ல உள்ள ஆணுங்க.. ஒரு பஸ்ஸு போனா இன்னொன்னு வரும் என்று சொல்லி.... இப்படியான விசயங்களில இறங்கப்படாது. ஏன்னா பஸ்ஸுங்க இப்ப எல்லாம் அடிக்கடி ரூட் மாத்திடுங்க. பிகருன்னா.. பாவிச்சிட்டு.. எப்பவும்.. குப்பையில போட்டுக்கக் கூடிய ருசு பேப்பர்ன்னு நீங்க.. நினைச்சுக்கனும். வேணுன்னு போது ஸ்ரொக் பண்ணிக்கலாம்.  வேணான்ன போது தூக்கிப் போட்டிட்டு.. போய்க்கிட்டு இருக்கனும். அதை எவன் பின்னாடி வந்து பொறுக்கிறான்னு எல்லாம் நின்று பார்க்கப்படாது. உடனவே.. நாங்க நம்ம வேலைக்கு போயிடனும்.

 

6. ருசு பேப்பரை தூக்கி வீசிட்டு.. அல்லது பிளாஸ் பண்ணிட்டு.. நாங்க.. சோகம்... தண்ணி.. தம்முன்னு இருந்தா.. சாவு வராம என்ன வரும்..???!

 

7. தெரியாம செஞ்ச தப்பால.. பிள்ளை குட்டின்னு வந்திட்டுன்னு வைச்சுங்க.. அதுங்க மேல அளவுக்கு அதிகம் அன்பை பொழியக் கூடாது. ஏன்னா பிள்ளை குட்டி வளர்ந்து நாளை உங்களை நடுத்தெருவில விட்டிட்டு போக நிறையவே வாய்ப்பிருக்கு. எப்பவும் அதுங்க சின்னனாகவே இருக்கப் போறதில்ல. அப்படித்தானே நீங்களும் வளர்ந்து உங்க அப்பா அம்மாவுக்கு செய்திருப்பீங்க. அதனால.. பிள்ளை குட்டியளோட பாசமா இருக்கலாம்.. ஆனா அதிகம் நெருக்கம் இருக்கக் கூடாது. ஒரு லிங் இருக்கலாம்.ஆனா அது உங்கட சந்தோசத்தை.. மகிழ்ச்சியை.. வாழ்க்கையை கட்டிப்போடாத லிங்கா இருக்க பார்த்துக் கொள்ளுங்க.

 

8. எப்பவும் நீங்க பெஸ்ட் என்று நினைக்கப்படாது. நீங்க செக்கண்ட் என்று நினைச்சுக் கோங்க. ஏன்னா இந்த ஈகோ தாங்க ஆண்களின் அதிக.. உடல் நலத்தைக் கெடுக்கிற சாமான். முயற்சி இருக்கனும்.. ஆனா தோல்வி இருக்கப்படாது என்று நினைக்கக் கூடாது. வெற்றி இருக்கலாம்.. ஆனால் வெறி இருக்கப்படாது. அன்பு இருக்கலாம்.. ஆனால் அடிமைத்தனம் இருக்கப்படாது. பண்பு இருக்கலாம்.. ஆனால்.. பசப்புக்கு மயங்கிறது இருக்கப்படாது. சுகம் இருக்கலாம்.. ஆனால் சுமை இருக்கக் கூடாது. மகிழ்ச்சி இருக்கலாம்.. ஆனால்..மண்டையை போட்டு பிசஞ்சுக்கிற நிலை இருக்கக் கூடாது. தியானம் இருக்கலாம்.. ஆனால் குழப்பம் இருக்கக் கூடாது. அமைதி இருக்கனும்.. ஆனா அவதி.. அவா இருக்கக் கூடாது. திட்டமிடல் இருக்கனும்.. ஆனால் திட்டுக்களை எல்லாம் காதில போட்டுக்கவே கூடாது. தோல்வி இருக்கலாம்.. ஆனால் தேம்பிக்கிட்டே இருக்கக் கூடாது. தயக்கம் இருக்கலாம்.. ஆனால் அதிகம் தத்துவமா வாழ்க்கை இருக்கக் கூடாது. வாழ்க்கையை எப்பவும் இலகுவாக்கிக்கிறவன் தான் ஆம்பிளை... மனிதன். அதைக் கடினமாக்கக் கூடாது.

 

9. எப்பவும் தினமும் ஒரு 30 நிமிசத்தை உடற்பயிற்சிக்கு அர்ப்பணியுங்க. நல்லா நடவுங்க. நீச்சலடிங்க. உங்கள் BMI..  BP.. BGlu (Blood glucose).. BC (Blood cholesterol) .. BCa (Blood calcium) இதுகளை சரி பார்த்துக்கிட்டே இருக்க. அது 15 வயசானாலும் சரி 50 வயசானாலும் சரி 90 ஆனாலும் சரி.. இந்த 9 வழிமுறைகளையும் கடைப்பிடிச்சு.. சிக்ஸ் பக் இல்லாட்டிலும் சுமாரா ஒரு பிளட் பக்.. என்றாலும் வயிற்றில வைச்சுங்க. அதோட மனசை அதிகம் பிறீயா எப்பவும் வைச்சுங்கோங்க. அடுத்தவங்க சொல்லுங்கு நீங்க கட்டுப்படுவதிலும்.. உங்க மனச்சாட்சியிடம் பேசிட்டு அதுக்குக் கட்டுப்படுங்க. அப்படி வாழ்ந்தா.. நீங்களும் 100 தாண்டி ஆகா.. ஓகோன்னு.. வாழலாம் ஆண்களே. ஓகேய். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பயந்து பயந்து சாகிறவன்  இருந்தும் என்ன பயன்?:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு பிரம்மச்சாரி தனது முப்பதாவது வயதில் தன் துணைக்காக ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்க்கின்றார் என வைத்துக்கொள்வோம்.அவரின் ஆயுட்காலம் தொண்ணூறு வயது மட்டும் எனவும் வைத்துக்கொள்வோம்.(சக்திகளை விரயம் செய்யாத பிரம்மச்சாரிகளுக்கு ஆயுள் அதிகமாம்) அப்படியாயின் அந்த பிரம்மச்சாரி எத்தனை நாய்களோடு காலங்களை கழிக்க வேண்டும்? அதன் பராமரிப்பு செலவுகள் அண்ணளவாக எவ்வளவு வரும்?
 
ஏனெண்டால் எனக்கு தெரிஞ்ச குடும்பமொண்டு தங்கடை 30வயது பெடியனுக்கு கனகாலமாய் பொம்புளை தேடீனம். ஒண்டும் சரிவராட்டில் நாய்க்குட்டி ஐடியாவை சொல்லுவமெண்டு யோசிக்கிறன். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.