Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்



நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை  மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான்.

செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் தானாகச் சொல்லவில்லை. வீட்டுக்கு வரும் உறவினர்கள் தமையனைப் பற்றிக் கதைத்து, இனியாவது அவனுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வையுங்கோவன் எண்டு சொன்னதாலதான். செல்வனுக்கு எழில்  செவ்வாய். அதுக்கேத்த செவ்வாய்க் குற்றம் உள்ள பெண்ணைத்தான்  பாக்கவேணும் என்று தாய்க்கே கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆனால் உராரின் ஏச்சுக்கும் நாக்குவளைப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கவாவது ஒரு கலியாணத்தை செய்து வைக்க வேணும் என எண்ணி பெண் தேட ஆரம்பித்துள்ளார்.

இன்று செல்வன் கன நாளின் பின் மகிழ்வோடு நித்திரை விட்டு எழுந்தான். அம்மா நேற்று தொலைபேசியில் அழைத்து இப்பதான் ஒரு செவ்வாய் குற்றம் உள்ள சாதகம் ஒண்டு பொருந்தியிருக்கு. படம் அனுப்புறன் பாத்திட்டுப் பிடிச்சிருந்தால் மேற்கொண்டு கதைக்கிறன் என்று கூறியிருந்தா. பிள்ளையை நீங்கள் பாத்தனீங்கள் தானே அம்மா என்று கேட்டான். ஓம் தம்பி எனக்குப் பிடிச்சிருக்கு என தாய் கூறியதும் நீங்கள் எனக்குப் பொருத்தமான பெண்ணைத்தானே பாப்பியள் அம்மா அதனால படம் பாக்க வேணும் எண்டு இல்லை. ஆனால் படத்தை அனுப்பிப் போட்டு மிச்ச அலுவலைப் பாருங்கோ என்றுவிட்டான்.

படம் இன்றுதான் வந்தது. வச்சுத் திரும்பத் திரும்ப எத்தின தரம்தான் பாத்தாலும்  பாக்கவேணும் போல இருந்தது. என்ர வாழ்க்கையிலும் ஒரு பெண் வரப் போறாள். நல்ல வடிவான ஆளத்தான். அம்மா நல்லாத்தான் தெரிவு செய்திருக்கிறா. அவனுக்குள் ஏதேதோ கற்பனைகள் உள்ளத்தில் ஊற்ரெடுத்தன. ஒருக்கால் தொலைபேசியில் கதைத்தால் என்ன என எண்ணவே எப்படி அம்மாவிடம் கேட்பது. இப்படி அலைகிறான் என அம்மா எண்ணினால் என்னசெய்வது என்றெல்லாம் எண்ணிவிட்டு சரி இருந்ததுதான் இருந்தம். வருமட்டும் பொறுமையா இருப்பம் என எண்ணியவாறே தன்  ஆசையை அடக்கிக் கொண்டான்.

அம்மா நேற்று எடுத்து, பெண்ணுக்கு எழு இலட்சம் காசும் வீடுவளவும் நகையும் போடீனமாம் என்றதும் இவனுக்குக் கோபம் வந்தது. ஏனம்மா சீதனம் கேக்கிறியள் என்று எசியவனை சும்மா இரு நீ. சீதனம் வேண்டாம் எண்டால் மாப்பிளைக்கு ஏதும் குறை எண்டுதான் இங்க நினைப்பாங்கள். உதில நீ தலையிடாத என்று கூறிவிட்டா. இவன்  அம்மா எனக்கு கூப்பிட ஏலாது. ஏஜென்சி மூலம் தான் கூப்பிட வேணும். சீதனம் வாங்கினால் நாங்கள் தானம்மா கூப்பிட வேண்டும் என்றவுடன் அம்மா அப்ப வீட்டை மட்டும் தாங்கோ, பொம்பிளையை அவையை அனுப்பச் சொல்லிக் கேக்கிறன் என்றவுடன் இவனும் ஓம் என்று கூறி விட்டுவிட்டான்.

ஆறு மாதங்கள் பெண் இன்று வருகிறாள் நாளை வருகிறாள் என்று அம்மா சொல்லிச் சொல்லி இவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். ஒருவாறு நாளை ஏஜென்சி அனுப்புவதாகக் கூறுகிறான் என்று அம்மா சொன்னது மனதுக்கு நின்மதி தந்தாலும் நூறு வீதம் நம்பிக்கை தரவில்லை. வந்த பிறகுதான் நம்பலாம் என எண்ணிக்கொண்டான். என்ன வாழ்க்கை இது நின்மதியா ஒண்டும் செய்ய முடியாமல். நாடு ஒழுங்கா இருந்தாலாவது உடன போய் கலியாணம் கட்டிக்கொண்டு வந்திருக்கலாம். ம்......... என்ர  விதி என்று பெருமூச்சும் விட்டபடி தூங்கிப்போனான்.

விடிய வேலைக்குப் போவதற்காக வைத்திருந்த அலாம் அடிக்கிறது என்று எழுந்த செல்வனுக்கு அடிப்பது தொலைபேசி என்றதும் என்ன இந்த நேரம் யார் தொலைபேசியில் என்று யோசனையோடு எடுத்தால், தம்பி மோசம் போட்டமடா என்று அழுதபடி அம்மா. இவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள என்னம்மா விளங்கிற மாதிரிச் சொல்லுங்கோ என்றான். உனக்கு அனுப்பின பொம்பிள வந்த கப்பல் இத்தாலியில தாண்டிட்டுதாமடா என்றபடி குழற இவனுக்கு நெஞ்சுப்பரப்பெல்லாம் காலியானது போன்ற எண்ணம். நெஞ்சை ஒருமுறை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அம்மாவுக்கு முன் அழ மனம் இடம் தரவில்லை. நான் பிறகு அடிக்கிறான் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தபின்னும் அலை அடித்து ஓய்ந்த நிலமாக அவன் மனம் வெறுமையானது.

விதி என்னை விடுதே இல்லையே. எழுந்து சென்று அந்தப் பெண்னின் படத்தை எடுத்துப் பார்த்தான். அவனறியாது கண்ணீர் கைகளை நனைத்தது. உன்னுடன் என்னை எப்படியெல்லாம் எண்ணிக் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஏன் என்னை விட்டுப் போனாய் என மனம் ஓலைமிடுவதையும் தடுக்க மனமின்றி அப்படியே இருந்தான். மீண்டும் கட்டிலில் வந்து விழுந்தான். வேலைக்குப் போவதற்கும் மனமில்லை. அடித்து வரவில்லை என்றும் சொல்லவில்லை. நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன் இன்று  எல்லாம் மறந்துபோக மரத்துப் போனவனாகக் கட்டிலில் கிடந்தான்.

தொடரும்...............

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 72
  • Views 5.3k
  • Created
  • Last Reply

கதை நன்றாக விறுவிறுப்பாக நகர்கின்றது. வாழ்த்துக்கள் சுமோ அக்கா....!

இப்பிடி ஒரு சம்பவம் நான் கேள்விப் பட்ட மாதிரி இருக்கு .

 

உண்மைச் சம்பவமோ?   
நல்லா எழுதி இருக்குறியல் வாழ்த்துக்கள் சுமோ அக்கா.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை எழுதும் ஆர்வத்துக்கு என்பாராட்டுக்கள்.தொடருங்கோ. ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஊக்கப்படுத்த கருத்துகளைப் பகிர்ந்த தமிழினி, யாழ்அன்பு ,நிலா ஆகியோருக்கு நன்றி.

நன்றி சுமேரியர் சூப்பரா இருக்கு உங்கள் கதை

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.

தொடருங்கோ. ....
 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி தான் போல கிடக்கு, சுமோ!

 

தொடருங்கோ!

நன்றி சுமேரியர், தொடருங்கள்,

இது ஒரு உண்மை சம்பவம் போல் உள்ளது,ஜெர்மனியில் எனக்கு தெரிந்த ஒருவருக்கு இதேபோல் நடைபெற்றது, ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் உள்ள ஆற்றை கடக்கும் போது நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
சுமோவுக்கு தமிழாக்களின்ட கதை முழுக்க தெரியும் போல :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஜஸ்ட் ஸ்டார்டிங் போக போக பாருங்க.... மூத்த குடியாம் முதல்க்குடியாம் தமிழன் படும் பாட்டை

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர்கள்.. நீங்கள் தொடருங்கோ..

வாழ்த்துக்கள் நண்பி!! :)  சுமோ நீங்கள் கதை எழுதும்விதம் நன்றாக உள்ளது. கெதியாய் எழுத வேண்டும் :D



நன்றி சுமேரியர், தொடருங்கள்,

இது ஒரு உண்மை சம்பவம் போல் உள்ளது,ஜெர்மனியில் எனக்கு தெரிந்த ஒருவருக்கு இதேபோல் நடைபெற்றது, ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் உள்ள ஆற்றை கடக்கும் போது நடைபெற்றது.

 

அளவெட்டிப் பெண்பிள்ளை ஒருவரும் இப்படி மரணமானவா என்று கேள்விப்பட்டனான் (ஆற்றைக் கடக்கும்)



நன்றி சுமேரியர், தொடருங்கள்,

இது ஒரு உண்மை சம்பவம் போல் உள்ளது,ஜெர்மனியில் எனக்கு தெரிந்த ஒருவருக்கு இதேபோல் நடைபெற்றது, ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் உள்ள ஆற்றை கடக்கும் போது நடைபெற்றது.

 

அளவெட்டிப் பெண்பிள்ளை ஒருவரும் இப்படி மரணமானவா என்று கேள்விப்பட்டனான் (ஆற்றைக் கடக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை கொண்டு வந்து ஒரு மாதிரி கவிட்டாச்சு..96 ம் ஆண்டு ஆரம்பத்தில் நடந்த சம்பவம் என்று நினைக்கிறன்.நூறு பேருக்கு மேல் உயிரிழந்திருந்தார்கள்.  பழைய சரக்கு கப்பல் ஒன்றினை  இரண்டு தமிழர்கள் ஒரு சிங்களவர்  சேர்ந்து  வாங்கி அதில்  சனத்தை ஏற்றி அனுப்பி விட்டிருந்தார்கள்.  கப்பல் மாலுமியும்  பணியளர்கள் சிலர் மட்டும்  தற்காப்பு படகில் ஏறி உயிர்தப்பி மோல்ராவிற்கு  போயிருந்ததாக அறிந்தேன்.

வாழ்த்துக்கள் சுமோ அக்கா, உங்களது இயல்பான வசன நடை கதைக்கு மெருகூட்டுகின்றது. விரைவில் தொடருங்கள். படிக்க ஆர்வமாய் உள்ளோம்.

சுமோவுக்கு தமிழாக்களின்ட கதை முழுக்க தெரியும் போல :lol:
 

 

  அவர்தான் லண்டன் குருவியாச்சே. ம்....ம்...தொடருங்கள், முடிவை பார்ப்போம்,

 

அல்லது அதே சேற்று மட்டைதானோ

ஊரின் பேச்சு நடையோடு நகரும் கதையின் போக்கு மனதை தொடுகிறது. எத்தனை வலிகள் எங்களின் வாழ்வுகளில். ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அம்மா.காத்திருக்கிறேன் அடுத்த பாகத்துக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி சுமோ. அடுத்த பகுதியை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ சுமோ.....

கதை நன்றாக விறுவிறுப்பாக நகர்கின்றது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய்த்தான் கதை சொல்லுறீங்கள் சுமேரியர் .

 

உங்கள் கதைகள் இயல்பு வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் பாங்கு நன்றாக இருக்கிறது. யதார்த்தத்தை வெளிக்கொணரும் உங்கள் கதைகளிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள் சுமேரியர். வாழ்த்துகள் ....தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஊக்கம் கொடுக்கும் உறவுகள் தமிழ 31,விசுகு அண்ணா, புன்கையூரன்,சுந்தரம்,ரதி, சுண்டல், இசை,அலை, சாத்திரி, ஜொய்லா,வந்தி, நேற்கொளுதாசன், நுனாவிலான், புத்தன், விழி,  மைத்திரேயி, கல்கி ஆகியோருக்கு நன்றி .

இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான்.

கிடைத்த நேரத்தை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கின்றது .  கதை எழுத எழுதத்தான் புதிய புதிய சிந்தனைகளும் சொல்லாடல்களும் வரும் . அதைக்கொண்டுவர மனப்பயிற்சியும் அத்தியாவசியம் . நல்ல கதை தந்த சுமேயிற்குப் பாராட்டுக்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 2

செல்வன் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டான். அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் கூடக் கதைக்கவில்லை எனினும் படத்தைப் பார்த்து மனதுள் கட்டிய கோட்டை இடந்து வீழ்ந்தது மனதில் பெரிய தாக்கம்தான். மனத்தால் அவளோடு பேசிச் சிரித்து கொஞ்சி மகிழ்ந்து இவள்தான் எனக்கு என எண்ணியதில் உணர்வும் உரிமையும் கூடிப்போயிருந்தது. இப்பதான் கொஞ்சம் அவளை மறக்கத் தொடங்கியிருக்கிறான். அவளைப்பற்றி நினைப்பதே இல்லை என்று மனதில் சபதம் எடுத்து படத்தையும் கிழித்து வீசிவிட்டு நின்மதியாக இருக்க முயற்சி செய்கிறான்.

தங்கை நேற்று கதைக்கும் போது அம்மா உனக்கு இரண்டு மூன்று பொருத்தங்கள் பார்த்தவா என்று கூறினாள். இவனுக்கு நம்பிக்கை இல்லை. அதற்கான பதிலைத் தங்கைக்கும் கூறவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான். அம்மா ஊரில் வீடு வாசல் இருக்க தனக்கு முதுகு வருத்தம் என்று சாட்டிக் கொண்டு வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறா. எல்லாம் இவன் அனுப்பும் பணம் செய்யும் வேலை. இவனும் இரண்டு மூன்று முறை தாய்க்குச் சொல்லிப் பார்த்துவிட்டான் ஊருக்குப் போங்கோவன் என்று. தாய் கேட்பது மாதிரி இல்லை. இன்னும் இரண்டு மூன்று ஊராட்கள் வெளிநாட்டுக் காசில்  வெள்ளவத்தையில் வீடெடுத்து ஊதாரித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கினம். அம்மாவும் அவர்களுடன் சேர்த்தி. கொஞ்சம் ஊண்டிச் சொன்னால் அம்மா என்னில ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்று அழுவா. அதுக்குப் பயந்து இவன் இப்போ ஒன்றும் கதைப்பதில்லை.

அம்மா வழமைபோல் நேற்று போன் எடுத்து எங்கட ஊர் இல்லை. ஆனால் நல்ல வடிவான பெட்டை. பெரிசா சீதனம் ஒண்டும் இல்லை. ஆனால் செவ்வாய் குற்றம் உள்ளது. பொருத்தம் பார்த்தேன் பொருந்துகிறது. நீ ஓம் எண்டா நான் மிச்ச வேலை பாக்கிறன் என்று சொல்ல என்னெண்டாலும் செய்யுங்கோ என்று சொல்லிவிட்டான். பெண் வரட்டும் படம் வேண்டாம் என்றும் விட்டான். அம்மா இவனைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டாவோ என்னவோ பெண்ணை அனுப்ப அவவே முன்னின்று எல்லா அலுவலும் முடிச்சிட்டு நாளைக்கு உங்கு வருகிறாள். என்னொரு ஆள்தான் தன்  மனைவியின் பாஸ்போட்டில் கூட்டிக்கொண்டு வரப் போறார். அதனால எயாப்போட்டால வெளியில வந்த உடன உனக்கு போன் செய்வார். நீ நேரத்துக்குப் போய் நில் என்றுவிட்டு வைத்துவிட்டா.

வேலைக்கு லீவு சொல்லவேணும். அம்மா பாத்த வேலை என மனதில் சிறு சலிப்பு எட்டிப் பார்த்தாலும் சலிப்பை மீறிய ஒரு மகிழ்ச்சியும் மனதில் உதித்தது. அந்த மகிழ்ச்சி அவன் வேலைக்குச் சென்ற போதும் தொடர்ந்தது. வேலையிடத்து நண்பன்  என்ன செல்வன் இண்டைக்கு என்ன ஏதும் விசேசமே. நல்ல சந்தோசமாய் இருக்கிறாய் என்றதும் என்ன என் முகம் இப்பிடிக் காட்டிக் குடுக்கிறதே என எண்ணி கூச்சமடைந்தவனாய் ஒன்றும் இல்லை என்று விட்டு தன் அலுவலைப் பார்க்கத் தொடங்கினான். மனதுக்குள் பழைய  கீறல்களில் வலி எட்டிப் பார்க்க கடவுளே இந்த முறை என்னைக் கைவிட்டுடாதை என மனம் கடவுளை வேண்டியது.

இந்த இரவு அவனின் தூக்கம் தொலைந்து போக, பலதை எண்ணியபடி விடிந்தபின்னும் கட்டிலில் கிடந்தான். நேரத்தை நிமிர்ந்து பார்த்தபோது இன்னும் விமான நிலையத்துக்குப் போவதற்கு நேரம் இருக்கு. எதுக்கும் அம்மாவுக்கு ஒருக்கா அடிச்சுப் பாப்பம் என்று எண்ணியபடி எழுந்து காலைக் கடன் முடித்து அம்மாவை அழைத்தான். அம்மா இன்னும் நீ எயாப்போட் போகவில்லையா என்றதற்கு இனித்தான் போகவேணும் என்றுவிட்டு, ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே. ஏத்தியாச்சுத் தானே அவையை என அம்மாவிடம் விசாரித்தான். ஒண்டுக்கும் பயப்பிடாதை ஏறிவிட்டினம் வந்து சேர்ந்தாப் பிறகு எனக்கு போன் பண்ணு என்றுவிட்டு அம்மா வைத்துவிட்டார்.

காலை பதினோரு மணிக்குத்தான் விமானம் வருகிறது. ஆனாலும் இவன் பத்து மணிக்கே போய்க் காவலிருந்தான். என்னத்துக்கு நான் இப்பிடி வேலைக்கு வந்தனான் என தன்னைத் தானே கேட்டவனுக்கு சிரிப்பு எட்டிப் பாத்தது. சரி வீதியில் ஏதாவது விபத்து நடந்து வரப் பிந்தினாலும் எண்டுதான் வேளைக்கே வந்தனான் என தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு எழிலினி எப்பிடி இருப்பாள் என தன் மனச் சிறகை விரித்துப் பார்த்தான். ஒன்றுமே அகப்படவில்லை. சரி இன்னும் ஒரு மணி நேரத்தில் பார்க்கத்தானே போறன் என்று மனதை அடக்கிக் கொண்டு விமானங்கள் வந்து இறங்குவதையும் ஏறுவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

இவனின் தொலைபேசி அடிக்கத்தான் சுய நினைவு பெற்றவன், காதில் அதை வைக்க நீங்கள் தான் செல்வனோ என ஒரு ஆண்  குரல் கேட்டது. ஓம் நீங்கள் என்று இவ இழுக்க, எழில் எண்ட பிள்ளை என்னுடன் வந்தவா என்று அவர் கூறு முன்னரே வந்திட்டீங்களோ எங்க நிக்கிறியள் என இவன் கேட்டபடி வெளியே வரும் பாதை நோக்கி விரைந்தான். தம்பி நாங்கள் வெளியில டாக்ஸி நிக்கிற இடத்தில நிக்கிறம் வாங்கோ என்று அவர் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

வெளியே விரைந்து வந்து பார்த்தவனுக்கு ஒரு இமைப்பொழுது தலை சுற்றியது. வாகனத் தரிப்பிடத்தின் அருகே இரு சோடிகள் நின்றன.  இருபத்தெட்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருபத்திநாலு இருபத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் நின்றனர். இருவரும் அழகாய் இருந்தாலும் சிறிய வயதுக்காறியிலேயே இவன் பார்வை நின்றது. பிறகும் இது வயது குறைவாய் இருக்கு என் வயதுக்கு மற்றதுதான் போல என்று எண்ணியவன், அடுத்த கணமே என்னிடம் தான் தொலைபேசி இருக்கே வந்த இலக்கத்துக்கு போன் அடிச்சால் தெரிஞ்சு போகுது என எண்ணியபடி போனை அழுத்த சிறிய வயதுப் பெண்ணின் பக்கத்தில் நின்றவர் தொலை பேசியை எடுக்க இவன் மட்டிலா மகிழ்ச்சியுடன் அவர்களுக்குக் கிட்டப் போய்  வணக்கம் என்றான்.

எழில் வந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன. வந்த அன்றே தங்கையும் கணவரும் வந்து எப்ப திருமணத்தை வைக்கலாம் எனக் கதைத்துவிட்டுச் சென்றனர். மண்டபம் மற்றைய அலுவல் எல்லாம் பார்க்க ஒரு மாதமாவது வேணும் என்று தங்கை கூற இவனும் சம்மதிக்க, இவன் செய்ய வேண்டிய வேலைகளையும் அவர்கள்  செய்ய வேண்டியதையும் பேசிக் கதைத்துவிட்டு நாளையே நல்ல நாள் பார்ப்பதாகக் கூறிச் சென்றபின் இவன் எழிலைக் காதலோடு பார்த்தான். இன்னும் ஒரு மாதத்தில் இவள் என் மனைவி. நீண்ட அடர்ந்த கூந்தலும் எடுப்பான மூக்கும் பெரிய கண்களும் அவளைப் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை அவனுக்கு. மனதில் இவளுக்கு நான் ஏற்றவன் தானோ என்னும் எண்ணமும் கூடவே எட்டிப் பார்க்க அவளருகில் சென்று என்னை உமக்கு உண்மையிலேயே  பிடிச்சிருக்கா என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எழில் தலையைத் திருப்பி இவனைப் பார்த்துவிட்டு உந்தக் கேள்வியை நான் வந்ததுக்கு  எத்தினை தரம் கேட்டுட்டீங்கள் என அலுத்தபடி மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தாள்.

 

 

தொடரும்........

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.