Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ

Featured Replies

ம்.......... என்ன மாதிரிப் போகப் போகுது இக் கதை பொறுத்திருப்போம். 

Edited by அலைமகள்

  • Replies 72
  • Views 5.3k
  • Created
  • Last Reply

என்னை உமக்கு உண்மையிலேயே  பிடிச்சிருக்கா என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எழில் தலையைத் திருப்பி இவனைப் பார்த்துவிட்டு உந்தக் கேள்வியை நான் வந்ததுக்கு  எத்தினை தரம் கேட்டுட்டீங்கள் என அலுத்தபடி மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தாள்.

 

வில்லண்டம்......... :o  :o   பாவம் பெடி :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

உதுவும் சரிவராதுபோலை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு.............கதையின் போக்கை சொன்னேன். :D

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பெடி வீணா பொல்லைக்கொடுக்குது  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
எழிலுக்கு வேற போய் பிரண்ட் இருக்கும் :D
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வீடுகளில் இப்படித்தான் 'ஏண்டா பிறந்தோம்? 'என்று எண்ண வைக்கும் அளவுக்கு தலைக்கு மேல் பொறுப்பைக் கட்டி விடுவார்கள்.

 

இது 'கதையல்ல...நிஜம் தான்.



உதுவும் சரிவராதுபோலை.. :D

 

ஏன்?!! ...ஏன் ஏன்?இப்படி வாய் வைக்கிறியள்!!

 

பாவம்..:)

மெசு, உங்கட கதையில வாறதெல்லாம் அம்மித்தலை வாயில்லாப் பிள்ளைகளாத்தான் கிடக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ கூட்டிட்டு வந்தவர் தான் எழில கொண்டு போக போறார் flight குள்ள வந்த நேரம் loves வந்திருக்கும் இப்போலாம் கல்யாணம் ஆனா பசங்க தான் இப்பிடி பண்ணுறாங்களாம் :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ இந்த கதையிலும் யாராவது Gay என்று முடிச்சீங்கள் விசர் தான் வரும். :lol:  :lol:

சுமோ இந்த கதையிலும் யாராவது Gay என்று முடிச்சீங்கள் விசர் தான் வரும். :lol:  :lol:

 

  :D சுமோ செய்தாலும் செய்வா

  • கருத்துக்கள உறவுகள்

'எழில்', செல்வனுக்கு அழிக்கும் பதில்களில், ஒரு  விதமான 'அலட்சியம்' தெரிகின்றது போல உள்ளது!

 

நானும் 'தமிழன்' என்ற படியால், கதையின் முடிவை ஊகித்து விட்டேன்!  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் அனைவர்க்கும் நன்றி. இதில் பலர் பலவிதமான முடிவுகளை ஊகித்திருந்தாலும் ஒருவர் சரியாக ஊகித்து விட்டார். கெட்டிக்காரன்தான். ஆனால் யார் என்று கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளுங்கள். :D :D

கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் அனைவர்க்கும் நன்றி. இதில் பலர் பலவிதமான முடிவுகளை ஊகித்திருந்தாலும் ஒருவர் சரியாக ஊகித்து விட்டார். கெட்டிக்காரன்தான். ஆனால் யார் என்று கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளுங்கள். :D :D

 

 நுணா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

செல்வனின் அன்பை அலட்சியம் செய்யும்... எழிலை, காரியம் கெட முதல் ஊருக்கு அனுப்பி வைத்தால் தான்... செல்வனுக்கு நிம்மதி கிடைக்கும். நல்ல ஒரு தொடர் கதைக்கு நன்றி சுமோ.

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ கூட்டிட்டு வந்தவர் தான் எழில கொண்டு போக போறார் flight குள்ள வந்த நேரம் loves வந்திருக்கும் இப்போலாம் கல்யாணம் ஆனா பசங்க தான் இப்பிடி பண்ணுறாங்களாம் :D

அதுதான் "நீங்கள் கடிச்சிடுத்தாங்கோ" என்ற தலைப்பு போட்டிருக்கோ?:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் "நீங்கள் கடிச்சிடுத்தாங்கோ" என்ற தலைப்பு போட்டிருக்கோ? :D

 

ஓ.. அப்பிடிப் போகுதா கதை? :unsure:

 

நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி. தம்பியவை அவசரப்படாதைங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் இப்பெல்லாம் கடிச்சது குதரினது தானே இருக்கு :(:D

எக்கோய் கதைய சீக்கிரமா எழுதுங்க

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் நீங்கள் கதையை சீக்கிரமாக எழுதி முடிக்காவிட்டால்..... என்ன நடக்கும் என்று விமர்சனங்களை வைத்தே அறிந்து கொள்ளுங்கோ :lol:

கருத்தைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி. தம்பியவை அவசரப்படாதைங்கோ. :)

 

இப்பிடி அலட்டுறதில் தானே நேரம் போகுது. எழுதுங்கோ கெதியாய்

  • கருத்துக்கள உறவுகள்
சுமேரியர் நீங்கள் கதையை சீக்கிரமாக எழுதி முடிக்காவிட்டால்..... என்ன நடக்கும் என்று விமர்சனங்களை வைத்தே அறிந்து கொள்ளுங்கோ :lol:

 

சகாராவின் கருத்தே எனதும் சுமேயக்கா கெதியிலை. :lol:

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் அவசரப்படுத்துகினம் எண்டு நீங்கள் அவசரப்படாதையுங்கோ . ஆறுதலாய் யோசிச்சு வடிவாய் எழுதுங்கோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் வாழ்வில் வருவது எவ்வளவு வசந்தம் என்று செல்வன் நினைத்து நினைத்து சந்தோசப்பட்டான். நாங்கள் ஆண்கள் என்னதான் விதவிதமா உடுத்தாலும், எதை வாங்கிச் சமைச்சாலும் ஒரு பெண் வீட்டில் இருப்பதுபோல் வராது. அதுக்கும் எழில் போல் அழகிய பெண் சுறுசுறுப்பான பெண் இதுவரை அவன் காணவில்லை. தன்  சகோதரிகளுடன்  ஒப்பிட்டுப் பார்த்தான்.

எல்லாம் அழுமூஞ்சியள். நான் என்னவெல்லாம் அவர்களுக்குச் செய்திருப்பன். யாராவது என்னில அக்கறை காட்டினவையே. ஒரு நாளாவது ஒரு உடுப்புக் கூட எடுத்துத் தந்ததில்லை. அண்ணா உனக்கு என்ன விருப்பம் என்று கேட்டுச் சமைச்சும் தந்ததில்லை. எழில் நல்லாச் சமைக்கிறா. வந்து ரண்டு நாள்தான் நான் சமைச்சது. அதுக்குப் பிறகு விடுங்கோ நான் சமைக்கிறன் என்றுவிட்டு அவளே சமைக்கிறாள். அம்மாவின் சாப்பாட்டுக்குப் பிறகு இப்பதான் ஒரு ரண்டு நாள் நல்ல சாப்பாடு சாப்பிடுறன். இப்படி செல்வன் எண்ணும்போதே ஏன் நீ உன் சகோதரிகளிடம் போகும் வேளையில் அவர்கள் உனக்கு நல்ல உணவே தரவில்லையா? அவர்கள் உன்னிடம் அன்பாக நடக்கவில்லையா என மனச்சாட்சி இடித்தது.

என்ன இருந்தாலும் எழில் போல் வராது என மனம் பிடிவாதமாய் எண்ணிக்கொண்டு இருக்கும் போதே எழில் படுக்கை அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். ஓ நீங்கள் எழும்பிவிட்டியளே  என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே. கன நேரம் படுத்திட்டன் என்றவளை இடைமறித்து ராத்திரி நீர் படுக்க லேற் அதுதான் பாவம் எண்டு எழுப்பவில்லை என்றான். சரி நான் அரை மணித்தியாலத்தில குளிச்சு வெளிக்கிட்டு வாறன். நேற்றுக் கதைச்ச மாதிரி முதல் கடைக்குப் போவம் என்றுவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள். நேற்று அவனது ஆடைகளைப் பார்த்து என்ன நீங்கள் இவ்வளவு பட்டிக்காடா உடுப்புப் போடுறீங்கள். நாளைக்கு கடைக்குப் போய் முதல் வேலையா உங்களுக்கு கொஞ்சம் மொடேனான உடுப்புக் வாங்கவேணும். விடியக் கடைக்குப் போட்டு வந்துதான் மற்ற வேலை என்றுவிட்டாள். இவனும் எழுந்து ஆடை மாற்றி அவளுக்காகக் காத்திருந்தான்.

அவள் இவனுக்காக தெரிவு செய்த ஆடைகளைப் பார்த்த செல்வனுக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. பெடியள் போடுமாப்போல இருக்கு என இழுத்தவனை சும்மா இருங்கோ ஒழுங்கா உடுப்புப் போட்ட நீங்கள் எவ்வளவு சிமாட்டாத் தெரிவீங்கள் தெரியுமே. இவளவு நாளும் விடுங்கோ இனி நான் வந்திட்டன் வடிவா உடுப்புப் போட்டுக்கொண்டு திரியுங்கோ எண்டு நாலைந்து சோடி உடுப்புகளைத தெரிவு செய்தாள் எழில்.  மற்றப் பெண்கள் எண்டால் தங்களுக்குத்தான் வாங்கிக் குவிப்பினம். இவள் தனக்கென்று ஒன்றையும் எடுக்கவில்லை. நீரும் உமக்கு உடுப்பு எடுமன் எண்டதுக்கு நான் கொழும்பில வாங்கினது கிடக்குக் காணும். பிறகு பாப்பம் எண்டாள். செல்வனுக்கு மகிழ்வாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

இவளுக்கு நான் இன்று ஒரு சப்ரைஸ் குடுக்க வேணும் என எண்ணியபடி பணத்தைச் செலுத்திவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு நகைக் கடை ஒன்றுக்குச் சென்றான். நகைகள் மேல் பெண்களுக்கு உள்ள ஈடுபாட்டை அவள் முகத்தில் தெரிந்த மென்னகை  காட்டியது. உமக்கு விருப்பமான எதுவெண்டாலும் நீர் எடுக்கலாம் என்றான் அவளைப் பார்த்து. மற்றப் பெண்கள் போல் அவள் நகையைத் தெரிவு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவு செய்யவில்லை. ஒரு சோடி காப்பை எடுத்து வடிவாயிருக்கோ என்று இவனுக்குக் காட்டிக் கேட்டாள். வடிவாயிருக்கு உமக்குப் பிடிச்சால் சரி என்று முறுவல் காட்டிவிட்டு இன்னும் இரண்டு சோடி எடும் என்றான். இன்னும் இரண்டு சோடியா என்று அவளின் ஆச்சரியத்தை அடக்க மாட்டாமல் இவனைக் கேட்டவள் இவன் சிரித்துக்கொண்டு ஓம் எனத் தலை ஆட்டியதும் இன்னும் இரண்டு சோடி தாங்கோ என்று கடைப் பெண்ணிடம் கூறிவிட்டு இவனுக்குக் கிட்ட வந்து தாங்க்ஸ் செல்வா என்று ஒரு கிறங்கும் பார்வை பார்த்தாள். இவனுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எதோ செய்தது.

வீட்டுக்கு வந்தவுடன் காப்புகளைக் கைகளில் போட்டு அழகு பார்த்தவள் இவனருகில் வந்து உண்மையில் எனக்குப் பிடிச்சிருக்கு என்றாள்.
அப்ப எனக்கு ஒண்டும் கிடையாதோ என்று அவளை நெருங்கியவனை இடை மறிப்பதுபோல், நேற்று உங்களுக்கு என்ன சொன்னனான். வெளிநாட்டுக்கு வந்தாலும் எங்கட கலாச்சாரத்தை நாங்கள் மறக்கக் கூடாது. நீங்கள் முறைப்படி எனக்கு தாலி கட்டின பிறகுதான் என்னைத் தொடலாம். அதுவரை இப்பிடி ஆளை ஆள் பாத்துக்கொண்டிருக்கிறதே எவ்வளவு சந்தோசம். இன்னும் மூண்டு கிழமைதானே என கெஞ்சுவதுபோல் கேட்பவளை ஒன்றும் சொல்ல மனமில்லாமல் சரி உம்மடை விருப்பம் என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

இன்னும் இரண்டு கிழமைதான் இருந்தது திருமணத்துக்கு. மண்டப ஒழுங்கு சரி அழைப்பிதழும் எல்லாருக்கும் குடுத்தாச்சு. உணவுகள் எல்லாத்துக்கும் கூட ஒழுங்கு செய்தாகிவிட்டது. நேற்றுத்தான் மாற்றுச் சேலையும் தங்கையைக் கூட்டிக்கொண்டு போய் எடுத்துக் கொண்டுவந்து சட்டையும் தைக்கக் குடுத்தாச்சு. கூறைச் சேலை வேட்டி எல்லாம் அம்மா கொழும்பிலை இருந்து அனுப்பியிருக்கிறா. நேற்று மாலை வந்த தங்கை அண்ணி என்ன நகை வச்சிருக்கிறியள் எண்டு காட்டுங்கோ எனக் கேட்க இவனுக்கே கொஞ்சம் எரிச்சல் தான். இவளுக்குத்தானே எல்லா நகையும் நான் வாங்கிக் குடுத்தனான் என மனதுள் எண்ணியவன் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.

எழில் உள்ளே சென்று தன்னிடம் இருந்த நான்கு சோடி காப்புகளையும் ஒரு அட்டியலையும் பழைய டிசயினில ஒரு பதக்கத்தையும் கொண்டுவந்து காட்டினாள். என்ன அண்ணி பதக்கம் உங்கட அம்மாவின்ர போல என்று கேட்க எழிலும் ஓம் எனத் தலை ஆட்ட, இவன் ஏன் அம்மாவின்ரை எண்டால் போடக் கூடாதோ என அவிக் என்று கேட்டான். இவன் கேட்ட விதம் தங்கைக்கே ஒருமாதிரியாகிவிட்டதை அவள் முகம் காட்டியது. அண்ணா நான் நக்கலுக்குக் கேட்கேல்லை. இப்ப இங்க உள்ளவை விதவிதமா நகை போடுவினம். என்னட்டையே எவ்வளவு கிடக்கு. அண்ணி கலியாணப் பொம்பிளை அண்ணியைக் கூட்டிக்கொண்டு போய் நல்ல ஒரு பதக்கம்..... வேண்டாம் நாளைக்கு நானும் வாறன். போய் நல்ல ஒரு நகை எடுப்பம் என்றதும் தன் அவசர புத்தியை எண்ணி செல்வனுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

அடுத்தநாள் நகைக்கடையில் பத்துப் பவுனில் அழகிய நகை ஒன்றைத் தங்கை தெரிவு செய்தபோது செல்வனுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு விலை உயர்ந்த நகையைத் தெரிவு செய்வதை அவனால் நம்பமுடியாமல் இருந்தது. எழில் கூட கூச்சமடைந்தவளாய் எனக்கு ஏன் இது என மறுக்கவும் கேட்காமல் அவள் கழுத்தில் போட்டு அழகு பார்த்தாள் தங்கை. நகையால் அவள் அழகு கூடியதா அவளுக்குப் போட்டதால் நகை அழகாகத் தெரிந்ததா என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. எத்தனை தரம் அவளைப் பார்த்தாலும் அவனுக்குத் திகட்டவில்லை.

இன்னும் ஒருவாரம் தான். கல்யாண வேலைகளில் ஓடியோடிக்  களைத்துவிட்டான். தங்கையும் கணவனும் முன்னின்று செய்தாலும் எத்தனையோ அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஊரில் சுற்றம் கூடி எல்லாம் செய்வதால் சுமைகள் தெரிவதில்லை. இங்கு இவனுக்கு நண்பர்களும் பெரிதாக இல்லாதபடியால் இவனே மற்ற எல்லாவற்றுக்கும் ஓடவேண்டியதாகிவிட்டது. வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தியவன் வாங்கிய பொருட்களை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு மணியை அழுத்தினான். கதவு திறக்கவில்லை. எழில் பகல் தூங்கும் வழக்கமுடையவள். தூங்கிவிட்டாள் போல. சரி அவளை எழுப்பவேண்டாம் என எண்ணியவனாக கதவைத் தன்னிடமுள்ள திறப்பால் திறந்துகொண்டு மூன்றாம் மாடிவரை பொருட்களை இழுத்துக்கொண்டு தன் வீடுவரை கொண்டுபோய் சேர்த்தான்.

பள்ளியால் பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்த தங்கை வீட்டு மணியை தொடர்ந்து அழுத்த சுய நினைவு வரப்பெற்றவனாக எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டு தங்கையை வா என்றும் கூறாமல் சென்று கதிரையில் அமரும் தமயனை வியப்புடன் நோக்கினாள் தங்கை. 
ஏனண்ணா  உடன வரச்சொன்னனி. அண்ணி எங்க. அண்ணிக்கு ஏதும் வருத்தமே என்று விடாமல் கேள்விகேட்ட தங்கையிடம் நான் ஆருக்கு என்ன செய்தனான். ஏனடி எனக்கு மட்டும் இப்பிடி நடக்கவேணும். ஐயோ ஐயோ என்று தமையன் தலையில் அடித்து அழ தமையன் இதுவரை அழுதே பார்த்திராத தங்கைக்கும் அழுகை வந்தது.

அண்ணா என்னெண்டு சொல்லிப்போட்டு அழுங்கோ என இவள் கேட்க நேற்றுக் கூட நான் மாம்பழம் வாங்கிக் கொண்டு வந்தனானடி. வெட்டிக் கொண்டுவந்து வச்சிட்டு நீரும் சாப்பிடும் எண்டதுக்கு நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ எண்டாளே. இன்டைக்கு இப்பிடிச் செய்து போட்டுப் போட்டாளடி. நான் என்னெண்டு ஆக்களிண்ட கண்ணில முழிக்கிறது என்று விட்டு அழும் தமயனை எப்படித் தேற்றுவது என்ன நடந்தது என்று தெரியாமல் என எண்ணியபடி அண்ணா விசயத்தை சொன்னால் தானேயண்ணா எனக்குத் தெரியும் என்ற தங்கையை  கண்களில் நீருடன் செல்வன் பார்த்தான். நான் கடைக்குப் போட்டு வர அவள் வீட்டில் இல்லை. நான் எல்லா இடமும் தேடிப்போட்டு நீ வந்து கூட்டிக் கொண்டு போனாயோ என்று உனக்கு போன் பண்ண வெளிக்கிட எனக்கு ஒரு போன் வந்திது. எடுத்தால் ஒருத்தன் கதைக்கிறான். நானும் எழிலும் போறம் எங்களைத் தேட வேண்டாம் என்று சொல்லிப் போட்டு போனை வச்சிட்டான். நான் பதட்டத்தில யாரோ அவளுக்கு ஏதும் செய்திட்டாங்களோ எண்டு ஒரு நிமிஷம் நினைச்சிட்டு போய் அறைக்குள்ள பாத்தால் அவளின் சூட்கேஸ் ஒண்டும் இல்லை. பிறகுதான் வடிவாப் பாத்தன் நான் வாங்கிக் குடுத்த நகையள் கூட ஒண்டும் இல்லை என்று கூறிவிட்டு அழும் தமயனை என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியாமல் இரக்கத்தோடு பார்த்தபடி நின்றாள் தங்கை.

முடிந்தது 


 

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி ..................இப்பிடியும் ஒரு உலகம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.